யெல்லோ கார்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 24, 2012
பார்வையிட்டோர்: 17,137 
 

திருப்பரங்குன்றம் வந்து சேர்ந்தபோது மணி 10:10 ஆகியிருந்தது. கல்யாணம் எந்த மண்டபத்தில்? தெரியவில்லை. பத்திரிக்கையில் போட்டிருந்தது இப்போது நினைவில்யில்லை. பத்திரிக்கையை எடுத்து வந்திருக்கலாம்… சை.. இந்த பத்திரிக்கையால் இன்னொரு தொல்லை.

ஒரு வாரத்திற்கு முன். மீண்டும் மீன்டும் மொக்கையாகும் அரியர் ரிசல்ட் பார்த்துவிட்டு அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் வீட்டுக்குள் நுழைந்தபோது, “யார்டா அந்த நந்தினி?” என்று அம்மா கேட்டபோது தூக்கிவாரிப்போட்டது. பக்கத்தில் அனிதா சிரித்துக் கொண்டிருந்தாள். அடிப்பாவி! என்னோட ஏ.ஜி-ய எடுத்து படிச்சுட்டு, அதுல எவனாவது எதையாவது எழுதுனத அம்மாட்ட போட்டுக் கொடுத்துட்டியாடி? ஐயையோ! அதுல ‘அஞ்சரகுள்ளவண்டி’ ரேஞ்சுக்குள்ள எழுதி இருப்பானுக. சற்றுமுன் அரியர் ரிசல்ட் கொடுத்த அப்நார்மல் கண்டிசனில் இருந்து வெளிவராத நிலையில், இந்தக் கேள்வி வெந்த புண்ணிற்கு மேல் வெட்டருவாள் வீசியதுபோல் இருந்தது. சுதாரித்து,

“ஏங்கூட படிச்ச பிள்ள. ஏங் கேக்குற?” என்று கண்ணை வேறு திசையில் வைத்துகொண்டு கேட்டேன்.

“அதுக்கு கல்யாணமாம்லடா. பத்திரிக்க அனுப்சிருக்கு.” அப்பாடா பெரிய மேட்டர் ஒன்னுமில்லை. தப்பிச்சோம். சகஜ நிலைக்கு வந்த பிறகுதான் ‘நந்தினிக்கா கல்யாணம்?’ என்கிற ஆச்சர்யம் எழ டேபிளில் இருந்த கவரில் இருந்து பத்திரிக்கையை எடுத்துப் பார்த்தேன். யெல்லோ கார்ட் என்பதை தப்பாக புரிந்திருப்பாள் போல, நாலு பக்கமும் மஞ்சள் அப்பியிருந்தது. பிரித்தேன். அடி வெளங்காப் பய மவளே! ஃப்ரண்ட்ஸ்க்குன்னு தனியா ஒரு பத்திரிக்கை அடிக்கிறத விட்டுபுட்டு ‘தூக்குவாளி காளி அம்மன் துனை’-னு தொடங்கி பாட்டன், பூட்டன், அவங்களோட ஒரு ஜோடி பொண்டாட்டி, அப்பன், ஆத்தா, மாமன், மச்சான், சித்தப்பா பெரியப்பா மார்கள், நண்டு நசுக்குகள்-னு ஒரு எலெக்சன் நேம் லிஸ்டையே அனுப்பியிருக்கயேடி…

“ஆமா, நந்தினி பிள்ள கோனார் வீடா?.. இல்ல, பத்திரிகேல போட்டிருந்துச்சு.” அம்மா கேட்டாள்.

“ரெம்ப முக்கியம். போய் சோத்த போடுமா.”

படிப்பு, அழகு, மண்டகருவம் மூன்றிலும் நந்தினிக்கு இனை யாருமில்லை. அதுவும் கிளியோபேட்ரா என்ற பட்ட பெயருக்கு சொந்தகாரியான அட்டுபீஸ் ஆரோக்கிய மேரியுடன் அவள் நடந்து வரும்போது இன்னும் அழகாக தோன்றுவாள். நாங்கலெல்லாம் நந்தினிக்கு மானசீகமாய் ஒரு நற்பனி மன்றம் எழுப்பி கூட்டு பிரார்த்தனை போல் கூட்டு சைட்டு அடித்துக் கொண்டிருந்தோம். எங்கள் மந்தையில் இருந்து கழன்று கொண்ட ஆடாய் கும்கி சுரேஷ் மட்டும் உயிருக்கு உயிராய், தயிருக்கு தயிராய், ம.. வேண்டாம். இப்படியெல்லாம் அவளை லவ்விக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில், காதலை சொல்ல பல வழிகள் இருந்தும் பழாய் போன பாடாவதி வழியான லெட்டர் கொடுத்து வராண்டாவில் அவளிடம் திட்டு வாங்கிய அதிசிறந்த அந்தத் தருணத்தின் உச்ச கட்டத்தில் வெகுண்டெழுந்த கும்கி சுரேஷ், “போடி போ.. இப்டி கொணட்டிகிட்டு அலையுற உனக்கு எங்களைலாம் பாத்தா மனுசனா தெரியாது. நீ ஒரு எரும மாட்டுக்குதான் வாக்கபட போர பாரு..” என்று ஒரு முனிவரை போல் சாபமிட்டு, அவன் நிலமதிர நடந்து சென்றது இன்னும் நினைவில் உள்ளது..

பாலாஜி செல்லில் அழைத்தான்.

“சொல்லு மாப்ல..”

“என்ன உனக்கு பத்திரிக்கை வந்துச்சா?” ஆர்வத்தோடு கேட்டான்.

“வந்துச்சு. உனக்கும் வந்துருச்சா. சரிதான். கொக்காமக்க… எல்லாத்துக்கும் குரூப்ட் மெசேஜ் மாதிரி அனுப்பியிருக்கா.”

“வந்துருவீல்ல?”

“என்ன வந்துருவீல்ல?. காலேஜ்ல நம்கிட்ட ஒருதடவையாவது அவ பேசியிருக்காளா? அப்புறம் எப்படி டா அவ கல்யாணதுக்கு போகக் கூப்பிடுற?”

“நாம மட்டும் எல்லார்டையும் பேசிட்டமாக்கும். வாடா, ஃப்ரண்ட்ஸ் எல்லாத்தையும் பாக்கலாம்ல. அதுக்கான்டியாச்சும் வாடா.”

“என்னடா..?” சலித்துக் கொண்டேன்.

“நீ வர்ற மச்சி..” என்று கட் செய்தான்.

இந்த பாலாஜி எப்பவும் இப்படிதான். கல்யாணத்தில் சோறு போட்டால் போதும் இப்படி கிளம்பிவிடுவான். இதுல ஃப்ரண்ட்சிப் அது இதுன்னு காரணத்தை சொல்வான், பண்ணாடை.

பத்திரிக்கையை புரட்டி பார்த்தேன். மாப்பிள்ளை M.E., படித்திருந்தான். பெயர் சூர்யா. அடுத்த வெள்ளி கல்யாணம்.

வெயில் உரைக்க ஆரம்பித்திருந்தது. பாலாஜிக்கு போன போட்டு கேட்டு மண்டபத்தை அடைந்தபோது, ஸ்பீக்கரில் பாட்டு தெறித்துக் கொண்டிருந்தது.

‘கண்ணன் வந்தான், அங்கே கண்ணன் வந்தான், ஏழைக் கண்ணீரை கண்டதும் கண்டதும் கண்ணன் வந்தான். கண்ணாஆஆஆஆஆஆ, கண்ணாஆஆஆஆஆ’

சரிதான். இந்த மண்டபமாத்தான் இருக்கனும். உள்ளே நுழைந்த போது ஒரு ஒரமாய் அரவிந்த் ஆரோக்கி மேரியுடன் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். நம்ம குரூப் எங்கே என்று தேடியபோது, ஒரு மூளையில் ஸ்னோ ஸ்ப்ரே, கிஃப்ட்டுகள் சகிதம் குத்த வைத்து கும்மியடித்து கொண்டிருந்தனர். என்ன ஆச்சரியம். கும்மி குரூப்புக்கு நடுவே கும்கியும் இருந்தான். கும்மியில் ஐக்கியமாகிய போதுதான் கும்மிக்கு காரணம், கும்கி என்று தெரியவந்தது.

“ஏன்டா கும்கி, லவ் பன்னுனவ கல்யாணதுக்கு பிரசன்ட் கொடுக்கவந்திருகைனா ஓன் மனதைரியத்த பாராட்டனுன்டா.” ராஜீவ் ஓட்டிக் கொண்டிருந்தான்.

“இப்ப சொல்லு மாப்ள. பொன்னத் தூக்கிருவோம். வெளிய சித்தப்பு வண்டி நிக்கிது. சம்போ சிவசம்போ சிவ சிவ சம்போ.” ரவி சாவியை சுழற்றினான்.

பதறிய கும்கி, “டேய்! சும்மா இருங்கடா. கல்யாணகாரனுக காதுல கீதுல விழுந்து ஒரண்டை ஆகிறப்போது. நான் அத அப்பயே மறந்தாச்சு.” என்றான்.

“இல்ல மாப்ள, மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது…” என்று சொல்ல வந்த ராஜீவை, “நீ செத்த மூடுறியா” என்று முரைப்பாய் பார்த்தான், கும்கி.

கூட்டத்தில் சிறு சல சலப்பு ஏற்பட்டது. பொண்னும் மாப்பிள்ளையும் மேடைக்கு வந்து கொண்டிருந்தார்கள். நந்தினி எப்பொழுதும்போல் ஃபுல் மேக்கப்பில் இருந்தால். நான் மாப்பிளையை பார்த்தேன். அதிர்ச்சி.

“என்னடா மாப்பிள்ளை டொங்ஞான் மாதிரி இருக்கான். அதுவும் எரும்மாட்டுக் கலர்ல.” என்று ஆச்சரியப்பட்டேன். இதற்காகவா காலேஜில் இவ்வளவு சீன் போட்டாள். நந்தினியை பார்த்தேன் வெட்கபட்டு கொண்டிருந்தாள். எப்படி இப்படி. ஒன்னுமே புரியவில்லை.

“கும்கி, ஒஞ் சாபம் பழிச்சு போச்சுடா “ என்று ரவி சிரித்தான். “இவரு பேருதான்டா சூர்யா.” என்று அதிர சிரித்தபோது, பக்கத்தில் இருந்த பெருசு முரைக்க, முகத்தை திருப்பிக் கொண்டு சிரித்தான்.

இந்த காமெடிக்கு நடுவே என்னை யாரோ கவனித்துக் கொண்டிருப்பதை போல் உணர்ந்தேன். பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தேன். காயத்திரி. நான் பார்த்ததை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டால். சிறிது நேரம் கழித்து மறுபடியும் திரும்பி பார்த்தாள். நான் சிரித்தேன் திரும்பிக் கொண்டாள். காலேஜில் இருந்து பார்த்து வருகிறேன். காயத்திரி மிக அமைதியாய் இருப்பாள். அழகானவள். கல்யாணம் பன்னினாள் இவளை போல் ஒரு பென்ணைத்தான் கல்யாணம் பன்ன வேண்டும் என்றெல்லாம் எண்ணியிருக்கிறேன். நான் மறுபடியும் பார்த்தபோது இப்போது சிரித்தாள். செட்டாயிருச்சா?

கல்யாணம் முடிந்து, சாப்பிட செல்லும் இடைவெளியில் காயத்திரியிடம் அவளை விசாரித்தேன். அவளும் விசாரித்தாள். என்னை, வீட்டை, வைத்திருக்கும் ஐந்து அரியரை எல்லாவற்றையும் விசாரித்தாள். ஆனால் எதையோ கேட்க நினைத்து கேட்க கூச்சப்பட்டு தவிர்த்துக் கொண்டிருந்தாள். விடைபெரும்போது ஒருவருக்கொருவர் செல் நம்பர் வாங்கிக் கொண்டோம்.

நன்பர்களிடம் விடைபெற்று பஸ்சில் வரும்போது மனதில் என்னென்னமோ ஓடியது. ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்தது, இந்த தடவை எல்லா அரியரையும் தூக்கிவிடுவேன். அது உறுதி…

***இந்த கதை தமிழ்மன்றம் இணையதளத்தில் ஏற்கவே பிரசுரிக்கப்பட்டது..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *