கதையாசிரியர் தொகுப்பு: க.நா.சுப்ரமண்யம்

22 கதைகள் கிடைத்துள்ளன.

சிட்டுக்குருவி

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டுக் கொல்லையில் அவரைப் பந்தலில் கீழே சிட்டுக் குருவி கூடு கட்டியிருந்தது. அதை முதல் முதலில் கண்டுபிடித்தவள் சரோஜாதான். “ராஜி, ராஜி! பாரேன், வந்து பாரேன்!” என்று கத்திக் கொண்டே அவள் சமையலறைக்குள் ஓடிவந்தாள். சாதம் வடிக்க உட்கார்ந்த ராஜி, எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டுக் கொல்லைப்பக்கம் ஓடிவிட்டாள். விஷயத்தைப் கேட்டு, ராஜியினுடைய அவசரத்தையும் கண்ட நான், “சரிதான்! இன்று குழைந்துபோன சாதந்தான் கிடைக்கும்


பெண் மனம்

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சுந்தாப் பாட்டி சொன்னாள்: “படிக்கப் படிக்க ஆண்களுக்கு அறிவு அதிகமாகிறது. படிக்கப் படிக்கப் பெண்களுக்கு அன்பு அதிகமாகிறது.” “அதெப்படி?” என்று நான் கேட்டேன். “அதெப்படி என்று கேட்பதில் லாபமில்லை . அது அப்படித் தான்; ஈசுவர சிருஷ்டியே அப்படித்தான். தவிரவும் ஆண்களுக்கு அறிவு அதிகரிக்க அதிகரிக்க, மனம் கல்லாகிவிடுகிறது. அவர்கள் சாதாரண வாழ்க்கையிலிருந்து விலகி நிற்க ஆரம் பித்து விடுகிறார்கள். மனது முற்றித்


படித்த பெண்

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) டெல்லியிலிருந்து சுந்தாப்பாட்டியினுடைய மூத்த பிள்ளையின் பெண் வயிற்றுப் பேத்தி வந்திருந்தாள். வரும்போதே பேத்திக்கும் பாட்டிக்கும் சம்வாதம் ஆரம்பமாகிவிட்டது. பேத்தியின் பெயர் பத்மாஸனி. வயசு இருபத்திரண்டாகிறது. கல்யாணம் இன்னும் ஆகவில்லை. மெடிகல் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் இரண்டு மூன்று வருஷங்களில் ‘டாக்டர்’ என்று போர்டு போட்டு விடுவாள். கையில் அழகான சிறு பையும், உதட்டில் அவ்வளவு அழகில்லாத செயற்கைச் சிவப்பும், முகத்தில் பட்டை


மகாத் தியாகம்

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “தான் ஆடாவிட்டாலும் சதை ஆடத்தானேடா செய்கிறது …என்ன செய்ய?” என்றார் கிழவர். “இதோ பார் அப்பா! இந்த வயசில் நீ இன்னமும் என்னால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது சரியல்ல; நியாயமல்ல. நீ உன் பாட்டைப் பார்த்துக்கொள். ஏதோ சர்க்கார் தயவு பண்ணித் தருகிற பென்ஷன் வருகிறது, உனக்குப் போதும்…” என்றான் ராஜாமணி. “பிரமாதப் பென்ஷன்தான்…இருபத்தெட்டு ரூபாய்” என்றார் கிழவர். “பிரமாதமோ பிரமாதமில்லையோ, அது போதும்


கொலைபாதகன்

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று நான் ஒரு சத்தியாக்கிரகி நண்பரைப் பார்ப்பதற்காக ஜெயிலுக்குப் போயிருந்தேன். எனக்கும் ஒரு சத்தியாக்கிரகி நண்பர் இருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கையில் எனக்கே ஆரம்பத்தில் ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் அரசியலிலோ அரசியல் விஷயங்களைப் பத்திரிகைகளில் படித்து விவரித்து ஆனந்திப்பதிலோ ஈடுபட்டவன் அல்ல. அரசியல்வாதிகளைக் கண்டாலே மொத்தத்தில் எனக்கு வெறுப்புத்தான். ஆனால் யாரோ ஓர் ஐரிஷ்காரன் சொல்லியிருக்கிறானாம்; அதுபோல, அடிமை நாட்டில் பிறந்தவர்கள் எல்லோருமே


நாரீ திலகம்

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாரத வருஷம் என்றுமே அன்னியர்களுக்கு ஆசை காட்டி அழைக்கும் நாடாக இருந்திருக்கிறது. சுமார் ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன் அராபிய சாம்ராஜ்யமொன்று தலையெடுத்து ஹிந்துஸ்தானத்தைப் பாக்தாதுக்கு அடிமையாக்கிவிடும்போல் இருந்தது. அப்படி நேர்ந்துவிடாமல், ஹிந்துஸ்தானத்தில் அரபிப் பூண்டே இல்லாமல் செய்தவள் நாரீ திலகம். பாக்தாதில் காலிப் உலாத் அரசு செலுத்திக் கொண்டிருந்தான். அதைச் செங்கோல் என்று சொல்ல முடியாது. ஆனால் அவன் சாம்ராஜ்யக் கனவுகள்


ஒரு கடிதம்

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அன்று வேறு ஒரு கடிதமும் வரவில்லை . எவ்வளவோ மணியார்டர்களும், ரிஜிஸ்தர்களும், கல்யாணக் கடிதங்களும், போட்டிப் பந்தய முடிவுகளும் அந்தத் தபாலில் வந்திருக்கலாம்; வந்தும் இருக்கும். ஆனால் தபால்காரன் ஒரு சின்ன நீல உறையை எடுத்து ஜகந்நாதனிடம் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டான்; அடுத்த வீட்டுக்குள் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய காக்கிச் சட்டையின் பின்பக்கத்தில், எங்கேயோ அவன் சுவரில் சாய்ந்ததனால்


இலக்கியாசிரியரின் மனைவி

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இதோ பார், காமு , தபாலில் என்ன வந்திருக்கிறது பார்.” “என்னத்தை வரும்? வழக்கமாக வரதெல்லாந்தான் வந்திருக்கும், வேறு என்ன? உங்கள் கதை ரொம்ப அற்புதமாக இருக்கிறது என்று தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோரும் ஒரே மனசாக அபிப்பிராயப்படுகிறார்கள் என்றும், அந்த அற்புதக் கதைக்குச் சம்மானமாக நாலு ரூபாயில் மணியார்டர் கமிஷன் கழித்து மூணே முக்காலே அரைக்கால் ரூபாய்க்கு மணியார்டரும் வந்திருக்கும்.


பிரம்மாவுக்கு உதவி

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) லக்ஷ்மணன் காலையில் எழுந்தவுடன் ஆறிக்கொண்டிருந்த காபியை அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு வாசல் அறைக்குப் போனான். ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் நடக்கும் சண்டை என்ன ஆயிற்று என்று அதிக ஆவலுடன் அவன் தகப்பனார் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன், “முதல் ஷீட்டை மத்திரம் கொடப்பா!” என்று கேட்டு வாங்கிக் கொண்டு விளம்பரப் பத்திகளை, அவன் தகப்பனார் யுத்தச் செய்திகளை ஆழ்ந்து படித்தது போலப்


நீங்க தூங்கறச்சே தான்

 

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) என்னவோ பட்டணத்திலே காபி சாப்பிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு எல்லோரும் தினம் சாப்பிடுகிறார்கள். ‘காபி என்றால் உசிரு ஸார் எனக்கு’ என்கிறார்கள். ‘காபி இல்லாவிட்டால் என்னால் உயிர் வாழவே முடியாது ஸார்’ என்கிறார்கள். இவர்கள் சாப்பிடுவதெல்லாம் காபிதான் என்கிற ஞாபகம் போலும் இவர்களுக்கு, பாவம்! பட்டணத்தார் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! நல்ல காபி என்றால் என்ன? அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குத்