கதையாசிரியர் தொகுப்பு: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

8 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணம்மா!

 

 “ஏண்டி,ஏட்டக்கீழ வச்சுப்போட்டு ஊட்டக்கூட்ட மாட்டியாக்கும்?”என்று அதட்டிய அம்மாவை மிரட்சியுடன் பார்த்து விட்டு,துடைப்பத்தைக்கையிலெடுத்தாள் நான்காம் வகுப்பில் படிக்கும் ஒன்பது வயது நிரம்பிய ஏழைப்பெண் கண்ணம்மா. “ஏண்டி கண்ணு,அடி உன்னத்தான்,அடுப்புல இருக்கிற சோத்தக்கிளறி உடு.பத்தாமயே பத்துன வாசமடிக்கும் கூப்பன் அரிசி சோறு.வேற பத்திப்போச்சுன்னா வாயில வைக்க முடியாது.இந்தக்கிரகம் வேற அழுது தொலைக்குது.இரு பாலைக்கொடுத்துட்டு வாரேன்” என்று சலித்துக்கொண்ட படி குழந்தைக்கு பாலூட்டினாள் கண்ணம்மாவின் தாய் செல்லாள். தாயின் பேச்சைத்தட்ட முடியவில்லை கண்ணம்மாவுக்கு. கண்ணம்மா பிறந்த பின் தன் கணவனுடன் ஆறு


பரதநாடு!

 

 ஆற்றுப்படுகையிலிருந்த குடிசையிலிருந்து வெளிவந்த பேரழகி சகுந்தலைக்கு இளஞ்சிவப்பு நிற சூரியனிலிருந்து வெளிவந்த ஒளிக்கதிர்கள் வதனத்தில் பட்டதால் மேலும் அழகு கூடியிருந்தது! வீரச்சக்கரவர்த்தி விஸ்வாமித்திரருக்கும், தேவலோக அப்ஸரஸ் மேனகைக்கும் பிறந்த தேவலோக இளவரசி என்பதை சற்றும் அறியாதவளாய் ,வெகுளியாய் புள்ளிமான் போல் துள்ளி விளையாட வனத்துக்குள் பிரவேசித்தவளை பறவை ஒன்று வந்து தடுத்தது.கிளியைப்போன்ற வளைந்த அலகுடைய ,அதே சமயம் கருடனைப்போன்ற பெரிய இறகுடைய அபூர்வப்பறவை அது.பறவைகளின் மொழி தெரிந்தவளாதலால் புதியவர் யாரோ வரப்போகிறார் என்பதை அறிந்து ஓடிச்சென்று குடிசைக்குள்


கதாசிரியர்

 

 ரங்கசாமிக்கு தூக்கம் வர மறுத்தது.தந்தை சிறுவயதிலேயே இறந்து போனதால் தோட்டத்தை கவனிக்க வேண்டிய நிலையில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட வேண்டிய பரிதாபம்.ஆனால் படிப்பின் மேல் கொள்ளைப்பிரியம்.பகல் பொழுதில் ஏரோட்டுவது,பாத்தி கட்டுவது,நீர் பாய்ச்சுவது,குப்பை இறைப்பது,மாடு மேய்ப்பது,பால் கறப்பது என வேலை நெம்பெடுக்கும்.இடுப்பு சில சமயம் புண்ணாக வலிக்கும்.உறவுகள் வீடுகளுக்கு கூட போய் ஒரு நாள் தங்க முடியாது.’மாட்டுக்கு யார் தண்ணி காட்டுவது?தீண் யார் போடுவது?’என அம்மா சொல்லா விட்டாலும் அவனே தனக்குள் கேள்விகளைக்கேட்டு சமாதானமாகி விடுவான். சனிக்கிழமை தோட்டத்தில்


பணவெறி

 

 தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க வழியின்றி திணறினான் பகின்.பகினுக்கு திருமண வயது வந்தும் படிப்பும்,அழகும் இருந்தும் தொழில் அமையாததால் யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை.வேலையும் அமையவில்லை என்பதை விட வேலைக்கு செல்ல மனமில்லை.விரக்தியில் நண்பர்களுடன் குடிக்கும் அடிமையாகி விட்டான். ஒரு நாள் திடீரென யோசனை வந்தவனாக உள்ளூரில் ஏலத்துக்கு வந்த மில் ஒன்றை இருக்கும் ஒரே வீட்டை அடமானம் வைத்து பாக்கி கடனுடன் வாங்கியவன் அடுத்தநாளே காரும் வாங்கிவிட்டான்.இவனுடைய திடீர் உயர்வு சிலருக்கு திகைப்பை


கொரோனா பயம்!

 

 முரளிக்கு மூக்கில் சளி அடைத்துக்கொள்ள மூச்சு விடுவதில் சிரமமாக இருந்தது.தலையில் பாறாங்கல்லை வைத்து அமுக்குவது போல் வலி ஏற்பட்டது.எச்சில் சுவையும் மறத்துப்போன நாக்கில் மறுப்பு சொன்னது.உடல் வெப்பம் கூடியிருந்தது.உடன் படுத்திருக்கும் மனைவி மலரின் நெற்றியில் கை வைத்து பார்த்தான்.நார்மலாக காட்டியது. இரவு அதிக நேரம் கண்விழித்து செல்போனில் வீடியோ பார்த்ததால் காலை மணி ஏழைக்கடந்தும் குறட்டை சத்தத்துடன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவளை எழுப்ப மனமில்லாமல் கழிவறை வேலைகளை முடித்து விட்டு, பல்துலக்கி சரிந்த லுங்கியை ஏற்றி கட்டி, அதன்


வெள்ளச்சோளம்!

 

 கிராமங்களில் ஏதுமறியாமல் வெகுளித்தனமாக இருப்பவர்களை வெள்ளச்சோளம் என்பார்கள்.அவ்வாறு பதிமூன்று வயதிலும் மூன்று வயது சிறுவன் போல் மனதில் தோன்றுவதை தோன்றியபடியே பேசிக்கொண்டு,தன்னை விட வயது குறைந்த குழந்தைகளுடன் விளையாட விருப்பத்தோடு இருப்பவன் தான் குணத்துக்கேற்ற பெயர் கொண்ட குழந்தைசாமி! ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்தவன், அவ்வப்போது கைசூப்புவதை கைவிடாமல் இருப்பதைப்பார்க்கும் பள்ளியில் உடன் படிக்கும் சம வயதினர் “டேய் கைசூப்பி வந்திட்டான் பாரு”என கேலி செய்வர்.அதற்கும் பற்கள் தெரிய சூதுவாதின்றி சிரித்து வைப்பான்.தாயின் சேலையில் கட்டிய


பள்ளிப்பாடம்!

 

 நிகாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.பள்ளியில் சக மாணவர்கள் முன் ஆசிரியை திட்டியதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.ஓடிச்சென்று கழிவறையில் புகுந்து தாழிட்டுக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.பின் தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு முகத்தை கழுவி கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு வெளியே வந்தவளை பள்ளித்தோழி மேகா கட்டியணைத்து ஆறுதல் சொன்னாள். “நான் என்ன படிக்காம பசங்களோட ஊர் சுத்தனம்னா நினைக்கிறேன்?எப்போதும் புத்தகமும் கையுமாத்தானே இருக்கேன்.எனக்கு பிடிக்காத,புரியாத மண்டைக்குள்ளே ஏறாத பாடத்தை படிக்கச்சொன்னா எப்படிடீ படிக்க முடியும்?என்னோட அம்மாவுக்கு சின்ன வயசிலிருந்து டாக்டர் ஆகனம்னு ஆசையாம். அதனால


சொத்தக்கத்திரி!

 

 “ஏனுங்கம்மிச்சி கத்திரிக்காய நீங்கதான் விளைவிக்கறீங்க.இத்தன கத்திரிக்காய் மலையாட்ட கொட்டிக்கெடக்கறப்ப உங்க சாப்பாட்டுக்கு எதுக்கு சொத்தக்கத்திரிக்காய அறிஞ்சு போடறீங்க?” என தன் தாயின் தாயான தவசியம்மாளைப்பார்த்து வெகுளியாக அதே சமயம் அறிவார்ந்த வார்த்தையால் கேள்வியாகக்கேட்டாள் பத்து வயது சிறுமி காம்யா! “சொத்தக்கத்திரிக்காய் விலைக்கு போகாது சாமி.ஆனா சொத்தை இருக்கற பக்கத்தை அருவாமனைல அறிஞ்சு போட்டு,நல்ல பக்கத்த பொறியல் பண்ணிக்கலாம்.எங்கம்மாவும்,எங்கம்மாவோட அம்மாவும் இப்படித்தான் பண்ணுவாங்க.நல்ல காய்களை சனிக்கிழமை சந்தைக்கு அனுப்புனம்னாத்தான் நாலு காசு சுருக்குப்பைக்கு வந்து சேரும்.அத வச்சு அரைப்பவுனுங்காப்பவுனும்