கதைத்தொகுப்பு: குடும்பம்

6274 கதைகள் கிடைத்துள்ளன.

வெளியில் எல்லாம் பேசலாம்

 

 நாட்டு நிலைமை காரணமாக சோபை இழந்து காணப்பட்ட இலக்கிய விழாக்களும், நூல் வெளியீடுகளும் மீண்டும் களைகட்டத் தொடங்கியிருந்தன. இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்த சிறுகதை ஒன்றில் மூழ்கியிருந்த என்னை மனைவியின் குரல் உலுக்கியது. ‘என்னப்பா இருக்குறீங்க. நூல் வெளியீட்டுக்கு போகவேணும் என்டனீங்கள்….. என்ன வெளிக்கிட இல்லையோ?’ ‘மறந்தே போயிட்டனப்பா. நல்ல காலம் ஞாபகப்படுத்தினீர்’ என்றபடி சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். ‘இன்னும் அரை மணித்தியாலம்தான் இருக்கு……’ என்னுள் நினைவுகள் ஓட அவசரமானேன். ‘சரி நான் போயிற்றுவாரன் சுதா’ என்று


சோதிடம் பொய்யாகுமா?

 

 (1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருவிடைமருதூர்ச் சாமிநாதையர் தொண்டை மண்டலம் உயர்தரப் பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டு வருஷங்களாகத் தலைமை உபாத்தியாயர் . அவர் மனைவி அகிலாண்டம்மாளும் அவரும் மிகவும் சந்தோஷமாகக் குடும்ப வாழ்வு நடத்தி வந்தார்கள். ஆனால் மனைவிக்கு ஒரு பெருங்குறை. குழந்தையில்லாதது! “அதனாலென்ன, அகிலம் ! (இப்படித்தான் சாமி நாதையர் தன் மனைவியை அழைப்பது) பள்ளிக்கூடத் தில் இருநூறு குழந்தைகள் இருக்கிறார்கள். அத்தனைப் பேரும் எனக்குக் குழந்தைகள் தான்”


அண்ணனும் தம்பியும்

 

 (1946 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மஜும்தார் வம்சம் பழமையானது. கிராமத்தில் அதற்கு மிகுந்த மதிப்பு உண்டு. மூத்தவரான குருசரணர் தான் வீட்டில் சகல காரியங்களுக்கும் அதிகாரி. வீட்டுக்கு மாத்திரமல்ல, கிராமம் பூராவுக்குமே அவர் தான் அதிகாரி என்றால் இதில் மிகை ஒன்றும் இல்லை. ஸ்ரீகுஞ்சபுரத்தில் பெரிய மனிதர் இன்னும் பலர் இருந்தனர். ஆயினும், இவரிடம் ஜனங்களுக்கு இருந்த பக்தி சிரத்தை மற்ற வரிடம் கிடையாது. வாழ்நாளில் இவர் பெரிய


மதி நுட்பம் – ஒரு பக்க கதை

 

 “மகேஷ்… தாத்தா உன்கிட்டே பேசணுமாம்…” – செல் போனை ஊஞ்சலில் வைத்துவிட்டு மீண்டும் சுந்தரகாண்டம் பாராயணத்தைத் தொடர்ந்தாள் பாட்டி. “சொல்லுங்க தாத்தா…” என்றான் மகேஷ். அடுத்த நொடி “ சரி தாத்தா…” என்றான். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஜெனரல் மெர்ச்சன்ட்டில் தாத்தாவுக்கு ‘அதை’யும், கடை வாசலில் இருந்த பூக்காரியிடம் பூஜைக்காக பாட்டி வாங்கும் பூவையும் வாங்கி வந்தான் மகேஷ். “பாட்டி…பூ…” பூவை ஊஞ்சலில் வைத்துவிட்டு வேகமாக மாடிக்கு ஓடினான் மகேஷ். மாடியில் இருந்த தாத்தா ரூமைத் திறந்தான்.


சஜினி

 

 அர்த்தமுள்ளவை எல்லாம் அர்த்தமுள்ளவை தானா என்ன. தலைவன் கிம் கி டுக் – க்கு சமர்ப்பணம். *** கிம் கி டுக் சொன்னது போலவே… இந்த உலகம் என்பது நிஜமா கற்பனையா என்ற புள்ளியில் தான் சஜினிக்கு இந்த மலை உச்சியில்…. பனி தேசத்தில் திருமணம். நீண்ட நெடிய போராட்டத்துக்கு பின் அவள் ஒப்புக் கொண்ட திருமணம் இது. அவளை அடிக்கவும் முடியாது. அடக்கவும் முடியாது. அவள் போக்கில் சில மேகங்கள் மழை தூவி விடும். அவள்


கலியாணம்..!

 

 “அந்த சின்னப் பையன் கடிதம் கொண்டு வரும்போது வீட்டுல அண்ணா, அண்ணி, சந்துரு இருந்தான். பொடியன் எசகுபிசகா யார்கிட்டேயாவது கொடுத்துடப் போறானோன்னு எனக்கு உள்ளுக்குள் திக் திக் பயம். இப்படியாப் பண்றது…?” அனுஷா சொல்ல…. கேட்ட கலியுகனுக்குள் ,முகத்தில் கலவரம் படர்ந்தது. பயத்துடன் சொன்னவளை நோக்க… பயத்துடன் சொன்னவளை நோக்க… “பையன் சமத்து!. யாருக்கும் தெரியாம நைசா என் கையில கொண்டு வந்து சேர்த்துட்டு நல்ல புள்ள மாதிரி வெளியே போயிட்டான்.” ‘அப்பாடா !!…’ பயம் விலகி


மலரத்துடிக்கும் மொட்டு

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருக்கோணமலை பிரதேச செயலக (பட்டணமும் சூழலும்) சாகித்ய விழா 2002 மற்றும் திருக்கோணமலை மாவட்ட இலக்கிய விழா 2002 ஆகியவற்றிற்கான திறந்த சிறுகதைப் போட்டிகள் இரண்டிலும் முதலாவது பரிசு பெற்ற சிறுகதை வானத்தை ஓவிய சுவராகக் கொண்டு செங்குத் தாக வரையப்பட்ட நெடுங்கோடுகள் என நெடிதுயர்ந்த பனைமரங்கள் செறிந்து நிற்கின்றன.காலைக் கதிரவனின் செம்மஞ்சள் நிற ஒளிக்கற்றைகள், தலை சிலுப்பி நிற்கும் பனை மரங்களின்


பனிப்போர்

 

 அன்று இரவு, எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. காரணம், என்னவென்றும் சொல்லத் தெரியவில்லை. இப்போது தூக்கத்திற்கே என்னைப் பிடிக்கிறது. ஆனால் எனக்குத்தான் இந்தத் தூக்கத்தைக் கண்டாலே பிடிக்கவில்லை. தூங்கக்கூடாது என்று ஒரு எண்ணம் தூக்கத்தின் மீது ஒரு எரிச்சல், என்ன வந்தது எனக்கு? இந்தப் பூமியில் விழுந்த அந்த நாளிலிருந்து, இதோ இப்போது எழுந்து நிற்கும் இந்த நாள் வரை நானும் தூக்கமும் கடும் சினேகிதர்கள். கடும் சிநேகிதம் கண்ணைக் கெடுக்கும் என்பது போல் ஆகிவிட்டதா? தூங்குகிற ஒரு


வாழ்விற்கே ஒரு நாள்

 

 “கா, கா” என்று கரையும் சப்தம் கேட்டது. விடிந்துவிட்டதோ என்று சுப்பையா முதலியார் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார். வெளியிலோ, ஷவரிலுள்ளிருந்து விழும் நீர்க்கம்பிகளைப் போல, சுக்லபக்ஷத்து நிலவு ‘பொருபொரு’வெனச் சொரிந்து கொண்டிருந்தது. ஏதோ சொர்க்க சொப்பனம் போல், உலகம் அந்த அமைதியினூடே படுத்துக்கிடந்தது. நில வொளியைப் பார்த்து விடிந்துவிட்டது என்று ஏமாந்த அந்தக் காக்கை, அந்த நிர்மலமான வானவெளியில் பீதியுடன் சிறகடித்துச் சென்றது. “சே! நிலவு இன்னும் இறங்கக்கூட இல்லியே. அதற்குள் எப்படி விடிஞ்சிரும்?” என்று மனதை


அப்பக்கடை நடக்கிறது

 

 ஹாய்… ஹாய். கோழியளும் விடாதுகளாம். இந்த அப்பத்தைச் சுெட்டு ஒப்பேற்றிப்போட்டு ஒருக்கால் கோயிலடிக்கும் போட்டு வரலாமெண்டால்… வாணை செல்லாச்சி. என்ன அப்பம் வாங்கவோ? கொஞ்சம் இரணை, சுட்டுத்தாறன். இண்டைக்கு எழும்பவும் பிந்திப்போச்சு; கடைசி வென்ளிக்கிழமையாகவும் கிடக் குது; ஒருக்கால் சன்னதி கோயிலுக்கும் போட்டு வர வேணும், பிறகு செல்லாச்சி எப்பிடி உங்கட பாடுகள். ஓ நீ சொன்னது மெய்தான். அப்பம் சுட்டு விக்கிறதிலை இப்ப ஒண்டும் அவ்வளவு ஆதாயமில்லை. எனக்கென்ன வீடுகட்ட, கார் வாங்கவே காசு? அண்டாடம்