வானமெல்லாம் ஆசைக் காற்றாடி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 2,564 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம்-13

காரை நிறுத்திலிட்டு இறங்கிய தேவகி, “கம் ஆன் பாரதி” என்றாள். புதிதான இன்னொரு கிராமத்தில், மொட்டைத் திண்ணையுடன் காட்சி அளிக்கும் புராதனமான வீட்டில் யார் இருக்கிறார்கள்? யாரை தேவகி. அவளுக்கு அறிமுகம் வைக்கப் போகிறாள்? 

சாயம் இழந்து வெளிறிப் போன ஐந்து அடி உயரமும் மூன்று அடி அகலமும் கொண்ட ஒற்றைக் கதவு சாத்தப்பட்டிருந்தது. தேவகி கையால் தட்டி விட்டுக் காத்திருந்தாள்.

“இந்த ஊருக்கு வேட்டக்கரங்காவுன்னு சொல்லுலாங்க. சரியான பெயர், வேட்டைக்கு ஒரு மகன் காவு. காவுன்னா கோயில்னு அர்த்தம். இந்தப் பாலக்காட்டுக் கிராமங்களில் தமிழ்நாட்டுப் பாணியில் கோயில்கள் இருந்தாலும், பகவதிக்கான கோயில்களையும் மற்ற சில அய்யப்பன் போன்ற மூர்த்திகளுக்கும் உள்ள கோயில்களையும் காவுன்னு சொல்லுவாங்க. அய்யப்பங்காவு, வடக்கந்தரைக்காவு, ஹேரி பசுவதிக்காவு, மீன் கொளத்திக் காவு, கோதான் குளத்தின் காவுன்று நிறைய காவுகள் உண்டு. மடப்பள்ளிக்காவு, ரொம்பப் பெரிசு விசேஷமும்கூட”. 

இவன் இன்னொரு சகஸ்ரம் என்று தன்னுள் நினைத்துக்கொண்ட பாரதி மௌனமாக நின்றாள். 

கதவு இன்னும் திறக்கப்படவில்வை. மீண்டும் தட்டினாள் தேவகி. 

“ஹேமூரி பகவதிக் காவில பாவதியின் உருவம் ஏன்ன தெரியுமா பாரதி? கை, அதைப் பார்த்தப்பறம்தான் இந்திரா காந்தி தன் கட்சியோட சின்னமாக் கையை வைச்சுக்கிட்டா”

கதவு திடீரெனத் திறந்தது. 

“நமஸ்காரம் சார்”

“அட்டா, தேவகியா! என்ன ஆச்சரியம்! வா, வா… வாங்கோ மேடம்… மேடம்… தலையைக் குனிஞ்சு வாங்கோ….·அகஸ்தியர் மட்டும்தான். தலை இடிச்சுக்காம வர முடியும்” 

நாற்பது அல்லது நாற்பத்திரண்டு வயது மதிக்கத் தகுந்த ஒருவர் இளமைத் துடுக்குடன் முன் நடக்க ரேழியின் இருட்டைக் கடந்து, மங்கலான வெளிச்சத்தில் உறைந்து கிடந்த முன் தாழ்வாரத்தை பாரதி அடைந்தாள். 

”இதோ வரேன் தேவகி” சொன்னவர் உடனே போனார் 

“டேக் யுவர் டைம் சார்” 

வீட்டின் நிசப்தமே பாரதிக்குப் பயங்கரமாக இருந்தது. 

இருவரும் சிதிலமாகி விட்ட தரைமேல் தரையின் மேல் உட்கார்ந்து கொண்டார்கள். தரை முன்னொரு காலத்தில் வழவழப்பாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அங்கங்கே உடைந்து சிதைந்து காட்சி அளித்தது. ஓரிரு இடங்கள் பள்ளமாகி காரை வெட்கமில்லாமல் தலை நீட்டியது. சுவர்களும் இதே லட்சணம் தான். ஆணி அடித்தால் சுவரே விழுந்து விடுமோ என்ற பயத்தில்தான் ஒரு காலண்டர் அல்லது ஒரு படம்கூட இல்லையோ? முற்றம் மிகவும் சிறிதாக மூன்று அடிக்கு இரண்டடி என்ற கணக்கில் ஒடுங்க, சரிந்து வந்து முற்றத்திற்கு ஓடுகளின் இணைப்புக்காக கம்பி அழிகள் போட்டிருந்தார்கள். இங்கே வெட்ட வெளியாக இருந்தது. யார் வேண்டுமானாலும் எளிதாக ஓட்டுக்கூரை வழியாக இறங்கிவிடலாம். 

முன் தாழ்வாரத்தில் ஊஞ்சல் இல்லை, ஒரு காலத்தில் இருந்தது என்பதை உணர்த்த உளுத்துப்போன விட்டத்தில் இரண்டு இரும்புக் கொக்கிகள் தொங்கின. 

“இவ உள்ளே காரியமா இருந்தா. சீக்கிரத்தில் முடிக்க ஹெல்ப் பண்ணிட்டு கையோட கூட்டிண்டு வந்தேன்….” என்றார் அவர். 

“எப்படி இருக்கேம்மா தேவகி?”

“சௌக்கியமா இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் நேத்துக் காலையிலே வந்தது எனக்குத் தெரியும்…” 

“எப்படி?”

”நீங்க பஸ்லேந்து எறங்கி ஆட்டோவிலே ஏறினீங்க ஓர் அரை நிமிஷம் முன்னாடிப் பார்த்திருந்தா நான் கார்லே ஏத்திண்டு வந்திருப்பேன்…” என்ற தேவகி, பாரதியைக் காட்டி, “அடடா, என் கூட வந்திருக்கிறவ இவ யாருன்னு இன்னும் உங்களுக்குச் சொல்லலே, நீங்க யாருன்னு இவளுக்கும் தெரியாது.” என்றாள். 

“பாலக்காட்டுக்குப் புதுசு போலிருக்கு” என்ற அவர் “என் பேரு கைலாசம், இவ என் மனைவி மீனாட்சி” என்றார். 

“பெயர்ப் பொருத்தம் மட்டுந்தான் இருக்குன்னு நினைக்காதே. பாரதி, என்னென்ன பொருத்தங்கள் உண்டோ அவ்வளவும் இவங்களுக்கு இருக்கு… சார் இவ பேர் தான் பாரதின்னு சொல்லிட்டேன். டில்லி யூனிவர்சிட்டிலே இங்கிலீஷ் லிட்ரேச்சர்லே எம்.ஃபில். இப்ப பள்ளிப்புரம் நாணுப்பட்டர் வீட்டு மாட்டுப் பொண்… அதாவது ஈசுவரனுடைய டாட்டர்-இன்-லா” 

”அப்படியா? கேட்கவே அமிர்தமா இருக்கு, மாசத்துக்கு ஒரு தடவை ஒரே தடவை, வர்றேன். நாராயணனைப் பார்க்கணும்னு நினைப்பேன். ஆனா அது இதுன்னு ஏதாவது வேலை வந்துடும்…ஆமாம் நாராயணனுக்கு இப்பத்தானே சுலியாணமாச்சு? எனக்கு இன்விடேஷன் அனுப்பியிருந்தான். என்னாலே வாழ்த்துகள் கூட அனுப்ப முடியவே… தேவகி அப்ப நான் ரொம்ப தூரம் காட்டுக்குள்ளே போயிருந்தேன். அஞ்சாறு பாம்பு கெடைச்சுது. எல்லாம் குட்டிப் பாம்பு. வாரிப் பையிவே போட்டுண்டேன்.” 

“பாரதி, கைலாசம் சாருக்குச் சொந்த ஊரு மதுரை,”

“கரெக்டா சொல்லு தேவகி, வத்தலகுண்டு.” 

“காட்டிலாகாவிலே ஆபீசர். அவரோட மனைவிக்கு…” 

“கல்பாத்தி. பழைய கல்பாத்தி. இங்கேயிருந்து ஒரு கிலோ மீட்டர்” என்ற கைலாசம் தொடர்த்து “நான் ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட்லே இருந்தப்ப வர்ஷத்துக்கு ஒரு தடவை டேராடூன் போவேன். அங்குதான் ஃபாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இருக்கு” 

“ஹி இஸ் எ டாக்டரேட் இன் ஃபாரஸ்ட்ரி” என்றாள் தேவகி. 

பாரதி சற்றே வியந்து சற்றே வியந்து போனாலும் வியப்பைக் காட்டிக் கொள்ளவில்லை. வசதி இருந்தால் யார் வேண்டுமானாலும் டாக்டரேட் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டாள்.

“நான் இந்த டிபார்ட்மென்ட்லே இருந்தேன்னு இறந்த காலத்திலே தேவகி சொன்னா… இப்ப…” 

“அதையும் நானே சொல்லிடறேன் சார்… இப்ப இவர் வாளையார் காட்லே ஒரு ஸ்கூல் நடத்திட்டு வர்றார். ஸ்பெஷல் ஸ்கூல்”. 

“ஸ்கூல்லே என்ன ஸ்பெஷல், தேவகி?. ஹாண்டி காப்ட் சில்ட்ரனுக்கா, இல்லே மென்ட்டலி ரிட்டார்டட்…” பாரதி இழுத்தாள். 

கைலாசம் சிரித்தார் 

“நீ சொல்றதெல்லாம் இப்ப ஸ்பெஷல் இல்லேம்மா. ரொம்பக் காமனாப் போயிட்டுது. வாளையார் காட்லே மலை ஜாதிக்காரா ரொம்பப் பேர் இருக்கா. நரித்தோல் புலிநகம் மான் தோல் கொம்புத் தேன் இதையெல்லாம் கள்ளத்தனமா எடுத்து வந்து பிழைப்பு நடத்தற குடும்பங்கள் அநேகம் இருக்கு” 

தேவகி இடை மறித்தாள் 

“நான் ரெண்டு மூணு தடவை வாளையார் போயிருக்கேன். வாளையார்னா ரெயில்வே ஸ்டேஷன் இல்லே, காடு. அந்தக் காலத்து அடர்த்தியும் பயங்கரமும் இப்ப இல்லேன்னாலும் காடு காடாத்தான் இருக்கு. பகல் வேளைகளிலே கூட இருட்டா இருக்கும் பாரதி, இந்தக் காட்டுக்கு மத்தியிலேதான் இவரோட ஸ்கூல் இருக்கு” என்றாள் அவள். 

“ஸ்கூல்லே என்ன பாடம் சொல்லித் தரோம்னு சொல்லேன் தேவகி, அப்பதானே பாரதிக்குப் புரியும்?” 

“குழந்தைகளுக்குத் தமிழும், இங்கிலீஷும் பெரியவங்களுக்கு கொஞ்சம் ஆரம்பப் படிப்பு. நிறைய, பலவிதமான கைத்தொழில்கள். பெண்களுக்கு எழுதப் படிக்கக் கத்துக் கொடுத்துட்டு தையல் வேலை, ஸ்வெட்டர் பின்னற வேலை, கண்ணாடி வளையல் செய்யற விதம் இப்படி என்னென்னவெல்லாமோ சொல்லிக் கொடுக்கறார், மிஸஸ் கைலாசம்” 

“சொல்லப்போனா நான் ஆரம்பிச்சேன், இவ உக்கிரமா நடத்தறா!” 

“உங்க குழந்தைகள்?” என்றாள் பாரதி. 

கைலாசம் சிரித்தார். “காட்டுவாசிகள் அண்ணன் தம்பி, அக்கா, தங்கைகள்னா அவங்க குழந்தைகளும் எங்க குழந்தைகள் தானே…” என்றார் அவர். 

“எத்தனை நாளா இந்த ஸ்கூல் நடக்கிறது?” பாரதி. 

“எத்தனை வருஷ்மான்னு கேட்டிருக்கலாம் சரி. நாள் சுணக்கிலேயே சொல்றேன் மூவாயிரத்து இருநூத்து எண்பத்தஞ்சு நாளா. முன்னூத்து அறுபத்தஞ்சால் வகுத்துக்கோ”. 

“ஏன் அவளைத் திண்டாட வைக்கறீங்க? ஒன்பது வருஷமா பாரதி.” 

“அப்ப நீங்க சர்வீஸை விட்டு ஒன்பது வருஷமாச்சா”

“சர்வீஸ்லே இருக்கறப்பவே ஆரம்பிச்சேன் பாரதி, அதிலேந்துதான் தலைவலி ஆரம்பிச்சுது”. 

“ஸ்கூல் மூலமா காட்டு வாசிகளோட ஆதரவு கிடைச்சது. அது மூலமா இவர் காட்டு மரங்களை வெட்டிப் பணம் பண்றார்னு ஒரு குத்தத்தைச் சுமத்தினாங்க. நிரூபிச்சுக் காட்டுங்கனனு இவர் பதில் எழுதினார். அதுக்கு நடவடிக்கை எடுக்காம் இவரை நீலம்பூர் காட்டுக்கு மாத்தினாங்க. நீயும் வேண்டாம். உன் வேலையும் வேண்டாம்னு அரை நிஜாரையும் பேண்ட்டை டையும் சட்டையும் போட ஆரம்பிச்சார்” என்றவாறே தேவகி எழுந்தாள். கூடவே பாரதியும் எழுந்தாள். 

“இரும்மா தேவகி! ரெண்டு பேருக்கும் குடிக்க மோர் கொண்டு வரேன்…” என்று சொல்லி மீனாட்சி உள்ளே சென்றாள். 

“அப்படியே ஆளுக்கு ஒரு பாட்டில் தேனும் கொண்டா மீனாட்சி. காட்டுத் தேன், உன் மாமனார் ஈசுவரன் எங்கிட்டே அடிக்கடி சொல்லிவைப்பார், ஒரு பாட்டிலுக்கு ஐந்தூறு ரூபா கொடுப்பார். இந்த தேவகியோட அப்பா மாசாமாசம் ரெண்டாயிரம் ரூபா அனுப்பறார்.” 

“தேன் அவ்வளவு காஸ்ட்லியா?”

“இவங்களை மாதிரி இன்னும் சில பேர் இருக்காங்க. ஹாஜி மொய்தீன் வருஷத்துக்கு பத்தாயிரம் தர்றார். கேளுண்ணி அஞ்சாயிரம். இப்ப ஸ்கூல்க்கு கட்டடமே இருக்கு. இருபது தையல் மெஷின். நாங்க இருபது பைசாவுக்குப் பண்ற பம்பரத்தை கோயமுத்தூர்லே ஒரு ரூபாய்க்கு விக்கறாங்க…”

மோர் வந்தது. 

“நாங்க காப்பி, டீ சாப்பிடறதில்லே. அதான் மோர்” என்றார் கைலாசம். “எப்ப காடு திரும்பறீங்க?” என்று தேவகி கேட்டாள். 

“நாளைக்கு ஃபஸ்ட் பஸ்லே.”

“அப்ப நாங்க வர்றோம். இந்தாங்க தேனுக்குக் காசு” என்ற தேவகி கைப்பையிலிருந்து மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினாள். 

“மீனாட்சி. வாங்கிக் குறிச்சுக்க. ரசீதை அப்றமா அனுப்பலாம்” என்றார். கைலாசம். 

பாரதியும், தேவகியும் வாசலை நோக்கி நடக்க, தம்பதியர் பின் தொடர்ந்தார்கள். 

“போய்ட்டு வரேன் சார்.போய்ட்டு வரேன் மிஸஸ் மீனாட்சி!” என்று என்று தேவகி மீண்டும் விடைபெற்றுக் கொண்டு கார் அருகே செல்ல – 

கைலாசம் “ஒரு தடவை பாரதியையும் அழைச்சுட்டு ஸ்கூலுக்கு வாயேன்!” என்றார். 

”நான் வரேன். ஆனா பாரதியைப்பற்றி எனக்குத் தெரியாது. அவ பி.எச்.டி படிக்க மெட்ராஸ் போகக் காத்துட்டிருக்கா” 

கைலாசம் சிரித்தார் 

“நான் காடுகள் சம்பந்தமா படிச்சு லண்டனுக்குப் போய் தீஸிஸ் எழுதி டாக்டரேட் வாங்கினேன். இப்ப என்ன செய்துட்ருக்கேன் பாரு… ஹங் இன்னொரு விஷயம் கேட்க மறந்துட்டேன். கடைசியா வந்த நேஷனன் ஜியாகரபிக்கல் மேசஸினை எடுத்து வை. அடுத்த வாட்டி வர்றப்ப வந்து வாங்கிக்கறேன்”. 

“அமேஸான் ஃபாரஸ்ட் பத்தி பெரிய ஆர்ட்டிகிள் வந்திருக்கு, எடுத்து வைச்சிருக்கேன்” என்று சொல்லி விட்டுத் தேவகி காரில் ஏறிக்கொண்டாள். 

கார் சிறிது தூரம் சென்றதும், “கைலாசந்தையும், மீனாட்சியையும் பத்தி என்ன நினைக்கறே பாரதி” என்று தேவகி கேட்டாள். 

“நல்ல தம்பதியர்” 

“மீனாட்சி ஹோம் சயன்ஸ்லே பிஎஸ்.சி. கைலாசம் ஒரு பிஎச்.டி.” 

“அதான் சொன்னாரே.” 

“ஆனா அவர் சொல்லாக ஒன்றை நான் சொல்றேன்.”

“என்ன?” 

“அவருடைய ஆசையின் விளைவு பிஎச்.டி. ஆனா உள்ளூற முடங்கிக் கிடந்து திடீர்னு வெடிச்சுப் பீரிட்டு வந்தது. காட்டுவாசிகளும் முன்னேறணுங்கற லட்சியம்”.

பாரதி மெளனமாகச் சாலையை பார்த்தவாறு உட்கார்நதிருந்தாள். 

ஆசைக்கும், லட்சியத்துக்கும் இடையிலுள்ள நெடுந்தூரத்தை தேவகி அவளுக்கு உணர்த்துகிறாளா? இந்த தம்பதி மூலமாக. அவள் கீதோபதேசம் செய்கிறாளா?

கார் பள்ளிப்புரத்தை அடைந்து, அவளுடைய வீட்டின் முன் நின்றது. கடிகாரத்தைப் பார்த்தாள், நான்கு. வாசற்படியில் நாராயணன் நின்று கொண்டிருந்தான். 

காரில் இருந்தபடியே “குட் ஈவினிங் மிஸ்டர் நாராயணன் ஹௌ ஆர் யூ” என்றாள் தேவகி. 

“சௌக்கியமா இருக்கேன். ஏன் கார்லேயே உட்கார்ந்திருக்கே, இறங்கி வா, தேவகி! காபியோ, டீயோ குடிச்சுட்டுப் போகலாம்.” 

“இன்னொரு நாள் நாராயணன்..! நீங்க பாரதியை அழைச்சுட்டு ஷாப்பிங் போக வேண்டாமா? டாட்டா…” கார் நகர்ந்தது. 

ஒரு தேன் பாட்டிலுடன் பாரதி இறங்குவதைக்கண்ட நாராயணன் “கைலாசம் வீட்டுக்குப் போயிருந்தியா பாரதி?” என்றான். 

“ஆமாம். தேவகி வர்ற வழியில் அவர் வீட்டுக்குப் போனா”. 

“என்னிக்குத் திரும்பிப் போறார். தெரியுமா?”

“நாளைக்குக் கார்த்தால…ஃபர்ஸ்ட் பஸ்லேன்னு சொன்னார்” 

“அடடா! இந்த வாட்டியும் மிஸ் பண்ணிட்டேனே? பாரதி, ஒரு முக்கிய காரியமா நான் அவரைப் பார்த்தாகணும். ஷாப்பிங்கை முடிச்சுட்டு திரும்பறப்ப அவர் வீட்லே எறங்கலாம். அங்கே அரை மணிநேர வேலை இருக்கு”. 

“சரி.” 

“வேகத்திலே உள்ளே போய்ப் புடைவை கட்டிக்கோ… தொழுத்துப் பெரையிலிருந்து அம்மா உன்னைப் பார்க்கண்டாம்” 

‘பார்த்தால் பார்க்கட்டுமே, தலையையா எடுப்பா?’ என்று பதில் சொல்ல நா துடித்தது, அடக்கிக் கொண்டாள். “ஏன் சல்வார் கமீஸ் அணிந்து கொண்டாய்?” என்று நாராயணன் கேட்கவில்லை என்ற நினைப்பும் அதே கணம் எழுந்தது. 

மாடியை அடைந்தபோது இன்னோர் எண்ணமும் உதித்தது. 

நாராயணனைப் பொறுத்தவரை அவளுக்கு, அவள் எம் மாதிரியான உடை உடுத்தினாலும் ஆட்சேபனை இல்லை. தன் அம்மாவை முன்னிட்டுத்தான் புடைவை வாங்கிக் கொடுக்க அவன் துடிக்கிறான். 

அம்மா என்றால் பயமா? 

அன்பு இருக்க வேண்டும். பாசம் பரிவு இருக்க வேண்டும். மரியாதையும் அபிமானமும் இருக்கலாம். ஆனால் அம்மாளிடம் பயம் ஏன்? ‘என்மனைவி அலங்கோலமாக ஆபாசமாக நிக்காத வரையில், அவள் என்ன உடுத்தி கொண்டால் உனக்கு என்ன?’ என்று கேட்கக் கூடிய அளவுக்குத் திராணியும், தைரியமும் இருக்க வேண்டாமா ஒரு கணவனுக்கு? 

இருவரும் சரியாக ஐந்து மணிக்குப் புறப்பட்டார்கள்.

முதன் முறையாக கணவன் காரை ஓட்ட அவன் அருகே உட்கார்ந்து செல்லும் அனுபவம் பாரதியின் உள்ளத்தில் சிறியதோர் மாற்றத்தை உண்டு பண்ணுவதாகத் தோன்றியது. 

மனத்தில் இப்போது என்ன உணர்ச்சி கொப்பளிக்கிறது? 

திருப்தியா? 

மகிழ்ச்சியா? 

இனம் தெரியாத ஆனந்தமா? 

ஓரிரு தடவை ஏற்பட்ட ஸ்பரிசத்தால் புல்லரிப்பா? இல்லை எல்லாமே ஒன்று சேர்ந்த கலவையா?

பாரதிக்குப் புரியவில்லை, 

ஆனால் பாதிப்புகள் ஆரம்பித்துவிட்டன என்பதைத் தீர்மானமாக உணர்ந்தாள் 

தேவகியின் வீட்டில் இருவகையான பாதிப்பு. கைலாசத்தின் வீட்டில் முற்றிலும் வேறுவிதமான பாதிப்பு. இப்போது முதல் அனுபவத்தின் பாதிப்பு. 

இந்தப் பாதிப்புகளெல்லாம் அவளுடைய ஆசை வெள்ளத்துக்கு அணைகளாக அமைந்து விடுமோ?

ஒரு கணம் பாரதி பயந்து போனாள். 

ஆசைக்கும், லட்சியத்துக்கும் உள்ள தூரத்தைத்தான் தேவகியால் உணர வைக்க முடிந்ததே தவிர, அவள் மனத்திலும் ஏதேனும் ஒரு லட்சியம் முடங்கி ஒளிந்து கிடக்கக் கூடும் என்று சொல்ல முடியவில்லை. 

ஒளிந்து கொண்டிருக்கக் கூடிய லட்சியம்தான் என்ன என்று தன் மனத்தையே ஊடுருவிப் பார்த்தாள்.

என்ன தேடியும் அது அகப்படவில்லை. 

அத்தியாயம்-14

‘பாலெஸ் ஹவுஸ்’ என்கிற பெயரில் கொடி கட்டிப் பறக்கும் ஜவுளிக்கடையின் முதலாளி, நாராயணன் பிரவேசிப்பதைக் கண்டதும் இருக்கையை விட்டு எழுந்து முன் சென்று வரவேற்றார். 

“வாங்க நாராயணன் சாரே வாங்க. கதர்க் கடையை விட்டுட்டு எங்க கடைக்கு வந்திருப்பது சந்தோஷமா இருக்கு” 

“அவசரப்படாதீங்க, முதலியார்! அங்கே பாருங்க…”

“உங்க ஒய்ஃப்தானே? பத்திரிகை வந்தது. வாழ்த்துத் தந்திகூட அனுப்பினேன். நேர்லே நான் வந்து விசாரிக்க முடியலே..”

“பரவாயில்லே… அவளுக்குப் புடைவை வேணும்…” 

“ஒரு நிமிஷம்…கோபாலா, மொதல்ல இவங்களைக் சுவனி” என்றார் முதலியார். 

”பாரதி”

“உம்”

“உனக்குப் பிடிச்சதை எடுத்துக்கோ. புடைவை வேணும்னாலும் கூச்சப்படாம எடுத்துக்கோ. இங்கே செலக்ட் பண்ணினது போக, இன்னும் வேணும்னு இருந்தா பக்கத்திலேயே மைசூர் சில்க் ஹவுஸ் இருக்கு. அப்றம் லேடீஸ் கார்மென்ட்ஸ் ஷாப்லே ரெடிமேட் இருக்கு. உனக்குத் தேவையானதையெல்லாம் வாங்கிக்கலாம்”.

“சரி” என்ற அவள் “நீங்க வெளியே போணமா இப்ப?” என்றாள். 

“நம்ப மெடிகல் ஷாப் எதிர்த்தாப்ல இருக்கு. நான் அங்கே போய் ஒக்கார்ந்துக்கறேன்.” 

“எனக்குப் புடிச்ச புடைவை உங்களுக்குப் பிடிக்கலைன்னா?” 

நாராயணன் சிரித்தான், 

“உனக்குப் பிடிச்சிருந்தா அது எனக்கும் பிடிச்சிருக்குன்னுதான் அர்த்தம்.” 

சொல்லிவிட்டு அவன் முதலியாரிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியேறினான். 

“மேடம்! புதுப்புது டிஸைன்லே நிறைய இருக்கு. கோட்டா, கல்கத்தா, ஹைதராபாத் எல்லாம் இருக்கு!” என்றார் அவள் அருகே வந்த முதலியார். 

“பார்க்கறேன்”. 

“ஏன் மேடம் இந்தத் தடவையாவது எம்.எல்.ஏ. டிக்கட் வாங்கிக்க நாராயணன் சம்மதிச்சாரா? அடுத்த மாதக் கடைசியில் பை எலக்ஷன் வர்றதே?” 

”தெரியாது”. 

“போன எலக்ஷன்லே எல்லோரும் கையைப் பிடிச்சு இழுத்தா. இவர் மாட்டேன்னுட்டார். அவனவன் டிக்கட்டுக்காக அலையறான் இவர் என்னடான்னா…”

“நான் புடவையை செலக்ட் பண்றேன், சார்…”

“ஸாரி…ஸாரி. செலக்ட் பண்ணுங்க.நான் கூல் ட்ரிங்க் வரவழைக்கறேன்” 

“தாங்க்ஸ் எதுவும் வேண்டாம்”. 

“முதல் முதலா நம்ப கடைக்கு வர்றீங்க. நான் கூல் ட்ரிங்க் வரவழைக்கிறேன். நீங்க சாப்பீடறீங்க…டேய், சாத்துக்குட்டி. இங்க வா…” 

முதலியார் உற்சாகத் திமிர்ப்பில் காட்சி அளித்தார்.

இன்னொரு கடைக்குச் செல்ல பாரதி விரும்பளில்லை. ஆறு நிறங்களில் புடைவைகளை எடுத்த அவள் இணையான சோளித் துணிகளையும் வாங்கிக்கொண்டு கடை வாயிலுக்கு வந்தாள். 

எதிர்த் திசையில் மருந்துக்கடை. “ஈசுவரன் அண்ட் பிரதர்ஸ்” என்ற பெயர்ப் பலகை பெரிதாகக் கடையை விளம்பரப்படுத்தியது. இதை நாராயணனுடைய மூத்த சித்தப்பா சிவராமனும் அவருடைய மகன் நாராயணனும் (தாத்தாவின் பெயர்தான்) நடத்தி வருகிறார்கள் என்பதை அவள் அறிவாள்.

நாராயணன் அவளைக்கண்டதும் விரைந்து வந்தான்.

“ஆறு புடைவை எடுத்துண்டேன்” 

“ஏன் ஆறு? இன்னும் ரெண்டு மூணு எடுத்துண்டிருக்கலாமே..” 

“இதுவே ஆயிரத்து ஐந்நூறுக்கு மேலே ஆயிடுத்து.” 

“இப்பப் பணமாப் பிரதானம்? சரி வா, ரெடிமேட் ஷாப்புக்குப் போவோம்.” 

“பில் போட்டிட்டிருக்கா…” 

“கணக்கிலே ஏத்திப்பார் முதலியார்.” 

“நீங்க மருந்துக் கடையில் இருங்க. நான் மட்டும் ரெடிமேட் எடுக்கப் போய்ச் கொள்கிறேன். எங்கே இருக்கு?” 

“இதே வரிசையில் நாலாமத்துக்கடை இந்தா ஆயிரம் இருக்கு.”

“எதுக்கு இவ்வளவு?” 

“கையிலே வைச்சுக்கோ” 

சொல்லிவிட்டு அவன் மீண்டும் மருந்துக்கடையை நோக்கி நடந்தான். பாரதி மருந்துக்கடைக்கு வந்தபோது மணி ஆறேமுக்கால். 

“உச்சிக்கு என்ன சாப்பிட்டாய்?” 

சொன்னாள். 

“எல்லாம் நார்த் இண்டியன் டிஷஸ்.. சாயங்காலம் ஆத்தில் டிபன் இருக்கலை அல்லவா?” 

“தெரியாது”. 

“அப்ப நீ டிபன் சாப்பிடலை”

“இல்லை.” 

“வா! ஹரிஹரபுத்ராவுக்குப் போவோம். டிபன் நந்நா இருக்கும். இலை அடையும், சேவையும் திங்கலாம்.”

“மணி ஏழு அடிக்கப் போறது”. 

“அதனால் என்ன, வா போலாம்.”

“கைலாசம் வீட்டுக்குப் போகணும்னு சொன்னேளே?”

“ஒன்னை ஆத்ல கொண்டு விட்டுட்டு போய்க்கறேன்”. 
 
இருவரும் காரில் ஏறினார்கள். 

“உனக்கு இலை அடை பிடிக்கலே இல்லே?”

“பலாப்பழ வாசனையா இருக்கு” 

“வெல்லம், தேங்காய், சக்கைப்பழம் இது முணும்தான் பிரதானம். அஸ்திவாரத்துக்கு இலையில் வடாம் எழுதற மாதிரி அரிசிக் கூழை இட்டு அது மேல் பூர்ணத்தைப் போட்டு ஆவியில் வேகவைச்சா அது இலை அடையாயிடும்.” 

“நான் டில்லியிலே பலாப்பழம் சாப்பிட்டதே இல்லே. ஒரே ஒரு வாட்டி நங்கவரத்திலே சாப்பிட்டிருக்கேன் அதுவும் சமீபத்திலே கலியாணத்துக்கு முன்னால்” 

“எறியறத நாள் தின்னுக்கறேன்.” 

“எச்சப் பண்ணிட்டேனே?” 

”அதனால் என்ன பரவாயிலலே. ஒய்ஃப்போட எச்சில் தானே?” தான் தின்று விட்டு மீதி வைச்சதை அவன் பால் தள்ள பாரதி தயங்கினாள். 

நாராயணன் சிரித்துக்கொண்டே கை நீட்டித் தட்டை இழுத்துக் கொண்டான். 

“பி.எச்டி.ஃயைப் பத்தி ரொம்ப மும்முரமா இருக்கே போலிருக்கு”. 

“ஒரே குழப்பமா இருக்கு” 

“நேத்தைக்கு அப்பாகிட்ட டிஸ்கஸ் பண்ணினாய், எப்ப சகஸ்ரத்துகிட்டப் பேசினாலும் இதைப் பத்திச் சொல்றாய்”. 

“எல்லா பக்கங்களிலிருந்தும் எதிர்ப்பு”. 

“முதல் வில்லன் நான்தான் இல்ல்லியா?”

அவள் மௌனமாக அவனைப் பார்த்தாள். 

“தேவகி வேறு ஸ்க்ரு கொடுத்திருப்பாளோ?”

“இல்லை”. 

“ஆச்சரியமா இருக்கு!”

“அவ ஒரு கேரக்டர்”. 

“அவளோட அப்பா வாசுதேவன் நாயரை நீ பார்த்திட்டில்லை. அபூர்வமான மனுஷன்.” 

“தேவகி சொன்னதை வைச்சுக்கிட்டுப் புரிஞ்சுண்டேன்,” 

“காப்பியா, டீயா?” 

“ரெண்டுமே வேண்டாம்.”

”வடை, போண்டா, பஜ்ஜி?”

“ஹும்” 

“நான் காப்பி குடிக்சுறேன்”

“டீதானே பழக்கம்?” 

“நாயர் கடை காப்பியும் நந்தா இருக்காது. அய்யர் கடையிலே டீயும் நந்நா இருக்காது. நல்ல டீ வேணும்னா அப்பப்ப டிகாக்ஷன் போட்டு பாலை விடணும். இங்கே எப்பவோ டிகாக்ஷனைப் போட்டு வைச்சிருப்பா”. 

“எல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க,” 

“சாந்தினிசௌக்ல அன்னபூர்ணா இருக்கே. அங்கே டீ ஒருக்கா டீ குடிச்சேன். இப்ப நெனைச்சுப் பார்த்தாலும் வாய் மணக்கறது”. 

“அன்னபூர்ணா பெங்காலி ஸ்வீட்ஸுக்கு ஃபேமஸ். சந்தேஷ், ரஸ்குல்லா, மில்க் பர்பி எல்லாம் நன்னா இருக்கும்” 

காபி வந்தது. 

மடக்மடக்கென்று குடித்தான். 

”அப்ப நீ இன்னும் பி.எச்டியைப் பத்தி முடிவு எடுக்கலை.” 

“நான் மட்டும் எடுத்தாப் போதாதே!” 

“நாளை ஒருநாள் விட்டுடு. மத்த நாளைக்கு நீயும் நானும் நம்ப களத்துக்குப் போவோம்”. 

“யூ மீன் எஸ்டேட்”

“ரெண்டும் வெவ்வேறேதான். ஆனா நம்ப களம் எஸ்டேட் மாதிரி இருக்கும். முப்பது ஏக்கர்ல நெல்லு. இருபது ஏக்கர்ல தேக்கு. தேக்குத் தண்டில வளர்ற மிளகுக் கொடி. அப்றம்: ஒரு நாப்பது ஏக்கர்லே ரப்பர், ரப்பர்: போட்டு ரெண்டு வர்ஷம்தான் ஆறது. அதெல்லாம் தவிர தென்னை, மா, புளின்னு எல்லா மரங்களும் உண்டு. ஹங்…சொல்ல மறந்துட்டேனே ஏழெட்டு ஏக்கர்ல மரச் சீனியும் உண்டு. மரச்சீனின்னா டாபியோக்கா– ஏழை களோட ஆகாரம்”. 

“இதுக்கெல்லாம் நடுவிலே நாம இருக்கணுமா?” 

“வீடும் இருக்கே, டெரஸ்வீடு, அப்பாவும், அம்மாவும் எப்பவாவது போய்த் தங்குவா அவா சௌகரியத்துக்காக ஒரு ருமை ஏஸி பண்ணியிருக்கேன்”. 

ஒரு சில நாள்களுக்கு கிராமத்திலிருந்தும், முக்கியமாக மாமியாரிடமிருந்தும் விடுதலை கிடைக்கும் என்று  உள்ளுற திருப்தி அடைந்த பாரதி, “நாமும் போவோம். நம்ப ஹனிமூன் அங்கே நடக்கட்டும்” என்றாள். 

“எனக்கு ஹனிமூன்லே நம்பிக்கை இல்லை”. 

“இப்ப நேரம் ஏழரை” என்ற பாரதி, கைப்பையைத் திறந்து, “இந்தாங்க” என்று சொல்லி கரன்ஸி நோட்டுகளை நீட்டினாள். 

“ஆயிரத்தில் பாக்கியா?”

“ஆமாம்”. 

“உங்கிட்டேயே இருக்கட்டும். சரி, வா, போகலாம்”

மௌனமாக இருவரும் காரை நோக்கி நடந்தார்கள்.

நாராயணனை அவளால் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுடைய உண்மை சொருபம். தான் என்ன? ஏன் அவனாக பிஎச்டி.பற்றி விசாரிக்கிறான். அவளுடைய உள்ளத்தை சீண்டி பார்க்கவா? 

இரவு ஒன்பதரை மணிக்குத் தங்கம்மாவைப் பாம்பு தீண்டியது. 

அவளுடைய அலறல் வீட்டையே அதிர வைத்தது. நல்ல வேளையாக அதற்குச் சில நிமிடங்கள் முன்புதான் ஈசுவரன் வீடு திரும்பினார். 

“என்னடீ தங்கம்? என்னாச்சு?” 

“பாம்பு… பாம்பு… கடிச்சுட்டது”. 

“பதறிப்போகாதே,தங்கம், ஒனக்கு ஒன்னும் சம்பவிக்காது. பாரதி! பாரதி, வேகத்திலே இங்கே வா,” 

தங்கம்மாவின் அலறல் கேட்டு ஏற்கனவே முன் தாழ்வாரத்தை அடைந்துவிட்ட பாரதி நாலே எட்டில் பாய்ந்து பின் கட்டை அடைந்தாள். 

“எங்கே கடிச்சுது?” 

“வலக் கால்லே-சுட்டை விரலுக்கு மேலே. புறங்கால்லே கயத்தைக் கொண்டு வந்து கட்டுங்கோ”. 

“இரு இரு…” ஈசுவரன் ஓடினார். 

“பார்த்துண்டு நிக்கறயேடி…” என்று பீதிக் கிடையிலும் தங்கம் இரைந்தாள். 

ஈசுவரன் கயிறுடன் வருவதற்குள் பாரதி தன் புடைவைத் தலைப்பைக் கிழித்துச் சுருட்டியாகிவிட்டது.
“கணுக்காலுக்கு மேலே இறுக்கிக் கட்டுடீ…” 

கட்டினாள். 

“பொண்ணே இதை முழங்கால்லே கட்டு நந்நா இறுக்கிக்கட்டு. அத்தையை வேகத்தில் காருக்கு கூட்டிண்டு வா. நான் சகஸ்ரத்து கிட்டப் போய் சங்குண்ணிட்ட விபரம் சொல்லச் சொல்றேன். நாம போறதுக்குள்ளே கோழிகளை ரெடி பண்ணுவன்” 

பின் ஸீட்டில் தங்கம்மா ஏறிக்கொள்ள அருகே அவளை அணைத்தவாறு பாரதி உட்கார்ந்தாள், கார் சீற்றத்துடன் புறப்பட்டது. 

செய்தி ஒரே நிமிடத்தில் ஊர் முழுதும் பரவ பெரிவர்களும், வாலிபர்களும் ஈசுவரன் வீட்டுமுன் குழுமினார்கள். 

“எங்கே சதாசிவம்? அவனைக்கூப்பிடுங்கோடா!” என்றார் ஒருவர். 

“இங்கேதான் இருக்கேன். அண்ணா” 

“போடா.. போய் பாம்பு இருக்கான்னு பாரு. கையில் தடியும் கயிறும் இருக்கா?”

“கொண்டு வந்திருக்கேன் அண்ணா!” என்று சொன்ன சதாசிவம் ஐந்து அடி நீளமுள்ள கழியின் முனையிலுள்ள இரு துவாரங்களில் மணிக் கயிறைச் செருகிக் கொண்டே வீட்டினுள் பிரவேசித்தான். அவன் பின்னால் ஐந்தாறு பேர் சென்றார்கள். 

“தங்கம்மா அங்கதான் படுத்துண்டிருந்தா” என்றாள் பாட்டி. 

சதாசிவன் போனான். ஐந்து அடி அகலமுள்ள நீளமான தாழ்வாரத்தின் ஒரு முலையில் காலிப் பெட்டிகளும் டின்களும் கிடந்தன. நான்கைந்து கோணிப் பைகள். சுவரின்மீது சாய்த்து வைக்கப்பட்ட சில முறங்கள். 

“இங்கே இருந்தாத்தான் உண்டு அராவது வெள்ளத்தில் பெருங்காயத்தை நந்நாக் கரைச்சுக்கொண்டு வாங்கோடா” என்று சதாசிவம் கட்டளையிட ஒருவன் “அடுக்களையில் பெருங்காயம் எங்கே வைச்சிருக்கு?” என்று கேட்க “சின்ன ஷெல்பிலே தாழத்துப்படியில் உப்பு பரணி கிட்ட இருக்கு” என்று பாட்டி பதிலளிக்க இரண்டு பேர் ஓடினார்கள். 

“சாரையா இருக்குமோ?” என்றான் ஒருவன்.

“சாரையா, சர்ப்பமா எதானா என்னடா இப்ப அதுவா காரியம்? எதாயிருந்தாலும் சங்குண்ணி பார்த்துப்பன்” என்றான் இன்னொருவன். 

“இந்தச் சமயம் பார்த்து கோந்தை ஆத்ல இல்லையே” என்றான் இன்னொருவன். 

“அவன் இருந்திருந்தா என்னடா சேதிருப்பான்? சங்குண்ணிட்டதானே அம்மையைக் கூட்டிண்டு போய் இருப்பன்”. 

பெருங்காயம் கரைத்த நீர் வந்தது. ஒருவன் கையால் அள்ளி அள்ளி சுவர் மீதும், காலிப் பெட்டிகள் மீதும் தெளிக்க இன்னொருவன் கம்பால் அவற்றைக் கிளறிவிட பாம்பின் வால் தெரிந்தது. 

“சர்ப்பம்டா” 

கம்பை மேலும் கிளற, பாம்பின் உடல் தெரிந்தது. அது மெதுவாக நகர்ந்து திடீரென்று படம் எடுத்தது. 

“பெரிய தப்ளையா ஒரு தப்னையை முழுங்கிட்டு ஓட்டம் பிடிச்சுக் கழியாதைக்குப் படம் எடுக்கறது பார்” என்றான் நீரைத் தெளித்தவன் 

மறுகணம் மின்வேசுத்தில் சதாசிவம் தன் கைக்கழியால் பாம்பின் படத்தை அழுத்த, பாம்பு நழுவ முடியாமல் முகத்தைச் சுருக்கிக்கொண்டது. சில விநாடிகளில் கழியின் துவாரங்களின் வழியே சென்ற மணிக்கயிறு வளையம் பாம்பைச் சுற்றிக்கொள்ள சதாசிவம் கயிற்றின் இன்னொரு முனையை இழுத்தான். தலைக்குக் கீழே சுருக்கு! பாம்பு அநாதையாய்த் தவித்தது. 

“குடமோ, சட்டியோ, பானையோ கொண்டு வாங்கோடா” என்ற சதாசிவம் இப்போது வலக் கை விரல்களால் பாம்பின் வாய்க்குக் கீழே அழுத்திக் கொண்டிருந்தான். 

ஒரு குடத்தினுள் பாம்பைச் சிறை வைத்து குடத்தின் வாயையும் கோணித் துண்டால் மூடிக் கட்டிய பிறகு, “ஆராவது சைக்கின்னே கொண்டு பொழையைத் தாண்டி விட்டுட்டு வாங்கோடா?” என்றான் சதாசிவம். 

மயக்கமுற்ற நிலையில் இருக்கையை விட்டும் எழ முடியாமல் கிடந்த தங்கம்மாவை ஈசுவரனும், பாரதியும் மெல்லத் தூக்கிக் கொண்டு சங்குண்ணியின் தோட்டததினுள் பிரவேசித்தார்கள். 

“எந்த சங்குண்ணி போன் கிட்டியோ?” 

“கிட்டி சாமி…இது எப்னா நடந்தது?”

“ஒம்பதரை மணிக்கு, கோழிகள் இண்டு அல்லே “

“எழுபது எழுபத்தஞ்சு. இண்டு அது மதி”

”கழிஞ்ச மாசம் நம்மட ராமசாமிக்கு எத்தற கோழி வைச்சு!”. 

“நல்லோணம் ஓறமை இல்லா. அறுபத்தஞ்சு எண்ணம் இருக்கும்”. 

“பாம்புக்கடிக்கும், கோழிகளுக்கும் என்ன சம்பந்தம்? பெரிய டாக்டரிடம் செல்லாமல் யாரோ ஓர் ஆளிடம் அத்தையைக் கொண்டு வந்திருக்கிறார்களே!” 

திடீரென்று சகஸ்ரம் வந்தான், பாரதி அவனைப் பார்க்க சகஸ்ரம், 

“பாரதி, கோந்தை எங்கே?”என்று கேட்டான்.

சொன்னாள். 

“கைலாசம் கிட்டத்தான் இருக்கான் நான் போய்க் கூட்டிண்டு வரேன்…மன்னி…மன்னி…” 

“அவ மயங்கிக் கிடக்கறாள்டா, சகஸ்ரம்” 

சங்குண்ணி ஒரு லைஃபாய் சோப்புடன் வந்து தங்கம்மாவின் பாதத்தை ஒரு தடவைக்கு இரு தடவையாகத் தேய்த்துக் கழுவினாள். துடைத்தான். டார்ச் லைட் அடித்து உற்றுப் பார்த்தான். 

பிறகு இடுப்பில் செருகியிருந்த கத்தியை எடுத்தான். கத்தி சிறிதே என்றாலும் கூர்மையாக இருந்தது.

பயத்தில் பாரதி சிலிர்த்துப் போனாள். 

அத்தியாயம்-15

கூர்மையானதோர் சிறிய கத்தியை எடுத்த சங்குண்ணி டார்ச் விளக்கின் ஒளியில் கடிவாயைத் தேடினான். இரு சிறு குண்டூசி முனை அளவு – புள்ளிகள் கண்ணில்பட அடுத்த வினாடி கடிவாயைச் சுற்றிக் கீறினான். அரை மயக்கத்தில் இருந்த தங்கம்மா ‘ஐயோ’ என்று வீரிட்டாள். 

“ஒண்ணும் இல்லை தங்கம் பயப்படாதே… சோரை (சோரி) நெறய வந்தாத்தானே கோழியை வைக்க முடியும். எல்லாம் சரியாயிடும். குருவாயூரப்பன் இருக்கான்” என்றார் ஈசுவரன். 

உடம்பெல்லாம் நடுங்க, பாரதி வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள். கோழிகளைக் கொண்டு இந்த ஆள் என்ன செய்யப் போகிறான்? 

சங்குண்ணியின் மகன் ஒவ்வொரு கோழியாகக் கொடுக்க அவன் கோழியின் சிறகுகளை விலக்கி, அதன் அடிப்பாகத்தைக் கடிவாயின் மேல் வைத்தான். அவனுடைய இடக்கை பறவையின் கழுத்தை நெரிப்பது போல இறுகி இருந்தது. ஓரிரு வினாடிகளில் கோழி பதை பதைத்துச் சிறகு அடிக்க முயன்றுதோல்வியுற்று உடலெல்லாம் நீலம் பாரிக்க, இறந்து போயிற்று. 

இரண்டாவது, முதற்கோழியைப் மூன்றாவது, நான்காவது என்று சங்குண்ணியின் கையில் இருந்து விழுந்து கொண்டே வந்தன. தங்கம்மாவைச்சுற்றி நிறை கூட்டம் சற்றே விலகி நின்றது. 

“அப்பா! எப்ப நடந்தது?” 

நாராயணனுடைய குரலைக் கேட்டு பாரதி நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய பார்வை ஒரு சாய்வு நாற்காலியில் அரைக்கண் மூடிக்கிடக்கும் தங்கம்மா மீது நிலைத்திருந்தது. 

ஒரு மணி நேரத்துக்குள் இருபத்திரண்டு கோழிகள் அங்குமிங்குமாய்க் கிடந்து மற்ற கோழிகளுக்காகக் காத்துக் கொண்டிருந்தன. 

பாரதி சகஸ்ரத்தைப் பார்த்தாள். அவனும் அவளைப் பார்க்கவே, மெல்ல அவன் அருகே சென்றாள்.

“என்ன வைத்தியம் இது சித்தப்பா?”

“கோழி வைத்தியம்,”

“இப்பவுமா தமாஷ்”. 

“பாம்பு கடிச்சா. கண் கண்ட வைத்தியம் இந்தப் பாலக்காட்ல இப்ப இதுதான்,” 

“இவன் என்ன செய்யறான்? ஏன் கோழி ஒவ்வொண்ணா செத்து விழறது?” 

“கோழி சாகனைல்னா உன் அத்தை செத்துப் போவள். ஆரோட உசிரு பெரிசு? கோழியை வெட்டித் திங்கலாம்னா, ஓர் உசிரை மீட்டுச்சு அதை உபயோகப்படுத்திக்கப் படாதா?” 

“அதாவது அத்தை ரத்தத்திலுள்ள விஷம் கோழிக்கு வர்றது!” என்றாள் பாரதி. 

“கரெக்ட். இந்தக் கோழியோட – ஏனஸ் அதான் – ஆசனவாய் ஸ்பாஞ் மாதிரி ரொம்ப மிருதுவா இருக்கும். ரத்தம் பட்டவுடன் ஆஸ்மாஸிஸ் – அதான் – ஈர்ப்புத் தன்மை முறையில் கோழி சோரையை வாங்கிக்கறது. வெறும் பிளட் மாதரமா? கூடலே விஷமும் போறது! அப்றம்? கோழி க்ளோஸ், அங்க பார் பாரதி! இப்ப இருபத்தாறு கோழி மடிஞ்சு விழுந்தாச்சு” 

“இப்படிப்பட்ட வைத்தியத்தைப் பத்தி நான் கேள்வி பட்டதே இல்லை”. 

“இப்பத்தான நேர்லேயே பார்க்கூறாயே?”

“அததை உசிருக்கு ஆபத்து ஓண்ணுமில்லையே?”

”நிறையக் கோழிக் கைவசம் இருக்கிற வரைக்கும் ஆபத்து இல்லை. அங்க பாரு. உன் அத்தை என்ன செய்யறாள்னு”. 

பாரதி பார்த்தாள். 

அவள் மெல்ல வாயைத் திறக்க நாராயணன் கொஞ்சம் கொஞ்சமாக டீ கொடுத்துக் கொண்டிருந்தான்.

“எங்காத்துக்கு மூணாவது ஆத்ல ராமசாமின்னு ஒருத்தர் இருக்கார்…. கொஞ்சம் குள்ளமா கொழு கொழுன்னு செக்கச் செவேல்னு அவர் உன் கலியாணத்துக்கு வந்திருந்தார் அவரைப் போன மாசம் பாம்பு கடிச்சுது. நான் கார்ல போட்டுண்டு இங்கே பறந்து வந்தேன். அவர் இப்ப இன்னும் இன்னும் கொழு கொழுன்னு இருக்கார்” 

“பாவம் அத்தை சுத்தியாலக் குத்திக் கிளறினப்ப துடி துடிச்சுப் போயிட்டா.” 

“அனிஸ்தஷியா கொடுத்திருக்கலாம்னு சொல்றியா? இந்த வைத்தியத்துக்கு ஆபரேஷன் இப்படித்தான்…பாரு அங்கே பாரதி! முப்பத்திரண்டு தாண்டியாச்சு, மன்னி நன்னாக் கண்ணைத் திறக்கறா. ஆர் கண்டா ஒன்னைக் கூப்பிட்டாலும் கூப்பிடுவா” 

பாரதி பதில் பேசாமல் கை சோராமல் செயல்படும் சங்குண்ணியையும், தளராது கோழிகளை விரைந்து கொடுக்கும் அவனுடைய பிள்ளையையும் மாறி மாறிப் பார்த்தாள். கவிழ்த்துப் போட்டிருந்த இரு பெரிய அண்டா போன்ற கூடைகளில் கோழிகள் தூக்கு மேடைக்குத் தயாராகிக் கொண்டிருப்பதையும், கூடைகளின் சதுர ஒட்டைகள் மூலம் கண்டாள். 

குறிப்பு : (பாம்பின் விஷத்தை இறக்கி உயிர் கொடுக்க இப்படிப்பட்ட வைத்திய முறை பாலக்காட்டில் உண்டு. இதை இந்தக் கதையின் ஆசிரியர் நேரில் பார்த்து அறிந்திருக்கிறார்.) 

நாற்பது, நாற்பத்து நாலு, ஐம்பது என்று ஒரு நாள். கிரிக்கட்டில் ரன்கள் ஏறுவது போலக் கோழிகள் இறங்கி வந்து சங்குண்ணியின் கை வண்ணத்தால் உயிர் நீத்தன.

அறுபத்திரண்டாவது கோழி முரண்டு பிடித்தது. எத்தனை தடவை சங்குண்ணி முயன்றும், தான் சாகத் தயாரில்லை என்று கூறுவதுபோல் வீரிட முயன்றது. இன்னொரு கோழியை எடுத்து பரீட்சை நடத்த, அதுவும் தனக்கு நீண்ட ஆயுள் இருப்பதை உணர்த்தியது. 

பாரதி பார்த்தாள். வியப்பில் அவள் தன் கண்களையே நம்ப முடியாதவளானாள். 

சாய்வு நாடற்காவியில் தங்கம்மா உட்கார்ந்திருந்தாள், முகம் சோர்வில் வாடிப் போயிருந்தாலும் உடலின் தெம்பு குறையவில்லை. 

“எந்தா சங்குண்ணி, தீர்ந்நோ?” என்று கேட்டார் ஈசுவரன். 

“தீர்ந்து சாமி,” 

“கதை முடிஞ்சாச்சு, பாரதி. இனிமே சங்குண்ணிக்கு சம்பாவனை கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. அத்தை ப்ளட்ல இப்ப ஸ்நேக் பாய்சன் இல்லை. வேற பாய்சன் இருந்தா அதை இங்கே எடுக்கக் கழியாது. இனிமே ஊர் திரும்பண்டதுதான் பாக்கி.” 

“எப்படி பாம்பு விஷம் அததை ஓடம்பில இல்லேங்கறீங்க?”

“ரெண்டு கோழிகளை சங்குண்ணி அஞ்சாறு பிராவசியம் கடிவாயிலே வைச்சு வைச்சுப் பார்த்தான். விஷம் இருந்திருந்தா கோழி உயிர் மூச்சை நிறுத்தியிருக்கும். அங்கே பாரு. அத்தையோட கால் கட்டுகளை யெல்லாம் அவிழ்த்தாச்சு உன் அத்தை எழுந்து நிக்கறா”

“சிவராமா?” 

“அண்ணா!” 

“நான் தங்கத்தைக் கூட்டிண்டு ஆத்துக்குப் போறேன். நீ சங்குண்ணிக்குக் கொடுக்கண்டதைக் குடுத்துட்டு வந்து சேரு. அறுபத்தொண்ணு கோழி நஷ்டமாயிருக்கு. சங்குண்ணி நம்ப கிட்ட எத்தற கேக்கறதுன்னு தெரியாம் முழிப்பன். அவன் கேட்டத்துக்கு மேலே ஓர் ஆயிரம் கொடு”. 

“சரி அண்ணா”. 

“வா தங்கம்… மொள்ள வா… ஒரு கண்டத்தைத் தாண்டியூட்டாய், ஒன்னை ஆரு அந்த இடுக்கான தாழ்வாரத்திலே படுத்துக்கச் சொன்னா? கோந்தே. எங்கே பாரதி?” 

“குஞ்சப்பாவோட பேசிண்டு நிக்கறார்” எனறாள் பாரதி. 

“டேய் இவளும் என் கார் வரட்டும்!” 

“சரிப்பா “ 

“நாங்க மூணு பேருமாத்தான் இங்கே வந்தோம். மூணு பேருமாலே மடங்கிப் போறோம்.”

“சரிப்பா” 

“அவ புடைவைத் தலைப்பைக் கிழிச்சுச் சுருட்டி இறுக்கக் கட்டினா, நாளைக்கு அவளைக் கூட்டிண்டு பாலெஸ் ஹவுஸுக்குப் போ… வேணங்கற புடைவையை வாங்கிக் கொடு”. 

நாராயணன் பதில் சொல்லாமல் பாரதியைப் பார்த்து முறுவலித்து சமிக்ஞையால் ரும்படிக் கூறினான். 

“கோந்தை கூப்பிடறான்.நீ போ பாரதி, நாளைக்குப் பார்ப்போம்.” 

“இப்ப என்ன டயமாறது?” 

“ரெண்டு அடிக்கப் போறது.” 

“ரெண்டா!” 

“தியேட்டர்லே நைட்ஷோ எப்பவோ முடிஞ்சிருக்கும், இந்நிக்கு ராத்திரி சிவராத்திரிதான்”. 

பாரதி நகர்ந்து நாராயணனை அடைந்தாள்.

“நல்ல காரியத்தைச் சமயத்திலே செய்தே, பாரதி.”

“கோந்தே!” 

“அப்பா கூப்பிடறாள். நீ அவரோட போ…ம் வேகம்” என்ற நீ தங்கம்மா, “பாரதி நீ முன்ஸீட்ல உட்கார்ந்துக்கோ” என்றாள். 

“இப்ப எல்லாருக்கும் தீண்டல் தான். ஒன்னை நானும் தொட்டேன். அவளும் தொட்டா, அப்ப ஆபத்துக்குத் தோஷமில்லைன்னு நீ பேசாதைக்கு இருந்தாய் இப்பவும் பேசாதைக்கு வா… பாரதி, நீ அத்தை கிட்டக்கவே ஓவ்லார்ந்துக்கோ. நான் கயத்தை எடுத்து வர்றதுக்கு தாமசமாச்சு. ஆனா அவசரத்தை மனசிலாக்கிண்டு, புடைவைத் தலைப்பைக் இழிச்சு கயறாக்கிக் கட்டினியே, அது கிளாஸ். ஒன் அத்தை, என் ஒய்ஃப் பொழைக்க நீதான் காரணம் பொண்ணே”. 

ஈசுவானுடைய தெரிழ்ச்சியை உணர்ந்த போது பாரதிக்கு அவளையும் மீறிக்கண்ணில் நீர் துளித்தது. அதன் பிறகு காரில் மூவரின் ஒருவர்கூட இன்னொருவரிடம் பேசவில்லை. 

வீட்டை அடைந்தபோது பிரவு மணி இரண்டரை,

“ஈச்சா எல்லாம் சரியாச்சா?” 

“ஆச்சுப்பா” 

“எத்தறை கோழி” 

சொன்னார். 

“இப்ப கோழியோட விவை விஷமாட்டமா ஏறியிருக்கு. போன மாசம் அம்பது ரூபாய்னு ராமசாமிட்ட வாங்கியருக்கால் சங்குண்ணி”

“எத்துறையானா என்னப்பா? லிலை விஷமாட்டமா ஏறினாலும் தங்கத்தோட விஷம் எறங்கித்தே”. 

“ஒன் அப்பா விஷ்ணு சகஸ்ரநாமத்தை அப்பத் தொடங்கினதுதான். கார் சத்தம் கேட்டப்பறம்தான் நிறுத்தினார்” என்றாள் ஈசுவரனுடைய தாயார். பிறகு “நீ ரேழியிலே பாயில் படுத்துக்கோ ஈச்சா! பாரதி இந்தத் தாழ்வாரத்திலே ஓர் ஓரமாப் படுத்துக்கட்டும். தங்கம் ஆத்ல இல்லாத சமயத்தில் பாம்பு கடிச்சிருக்கு. ரெண்டு பேரும் அவளைத தொட்டிருக்கேள். மத்த துணிகளையும் தீண்டவாக் கண்டாம்” என்றாள். 

“நான் இப்ப நேராக் குளிக்கப் போறேன். அதுவும் கொளத்திலே” என்றார் ஈசுவரன். 

“அச்சமயத்தில் எதுக்குடா குளத்திலே முங்கணும்?’

“நீ பேசாதைக்கு இரும்மா பொண்ணே பாரதி… நீ என்ன சேயப் போறாய்? தரை மேல் தரையிலே பாயும் தலகாணியும் இருக்கு பாட்டிம்மா எடுத்துத் தருவன்.” 

“நான் பாத்ரூம்லே குளிக்கப் போறேன் அத்திம்பேர்…” 

“அப்ப கீஸரைப் போட்டுக்கோ.” 

“சரி அவர் வரட்டும்”

“கோந்தையும் குளிக்கணும். அவனும் தங்கத்தைத் தொட்டு சாயை கொடுத்திருக்கான். இன்னும் சகஸ்ரத்து ஆத்திலே ஆரும் தூங்கப் போகலே. ராஜியை வரச் சொல்லேன். ஒனக்கு என்ன வேணும்?” 

“ராஜிட்ட சொல்லிக்கறேன் அத்திம்பேர்.”

“சரி  அவளை இப்பவே அனுப்பறேன்!” சொல்லி விட்டு ஈசுவரன் வெளியேறினார். 

ஒரு சில நிமிடங்களில் ராஜி வந்தாள்.

”சித்தி ஒரு சின்ன ஹெல்ப்”. 

“சொல்லு”. 

“மாடியில் அலமாரியிலிருந்து புடைவை, சோளி, உள்பாவாடை, பிரேசியர் எடுத்துத் தாறீங்களா?” 

“டவல் வேண்டாமா?” 

“மறந்துட்டேன்.”

“இரு. கொண்டு வரேன்” 

கொண்டு வந்தாள் 

“தலைக்கும் குளிச்சாத்தான் உங்க ஊர் பாஷையிலே மடி பாரதி” 

“தெரியும் சித்தி. இதெல்லாம் கொண்டு வந்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ்”. 

“நீ ரொம்ப ஃபார்மலா இருக்கே பாரதி.”

“ஸாரி, சித்தி,” 

“இதுவும் ரொம்ப ஃபார்மல்தான். ஆமாம் மன்னி எங்கே?” 

“படுத்துண்டாச்சு!” 

“எங்கே, காணோமே?”

“அதே இடத்திலே.” 

“பாம்பு வந்த எடத்திலேயா?”

“ஆமாம் சித்தி,” 

”உன் அத்தைக்குக் கொஞ்சம் பிடிவாதம் அதிகம் தான்” 

”கார்லேந்து எறங்கினா. ஆர்ட்டேயும் எதுவும் பேசலே… நேராப் போனா, படுத்துண்டா.” 

“அண்ணா வர்ற வழியிலே ஏதானும் சொன்னாரா?”

“அப்படி ஒண்ணும் கடிஞ்சு பேசலை, சித்தி”. 

“விதி இருந்தாத்தான் பாம்பு கடிக்கும். நீ பார்த்துப் போ. போற வழியிலே ஒன் சத்தம் கேட்டு மன்னி எழுந்திருக்கண்டாம்”. 

“சரி, சித்தி” 

“நாளைக்குக் கார்த்தாவே ஆத்துக்கு வா”. 

“நான் எல்லார்க்கும் அங்கே காப்பி போட்டுக்கறேன்.” 

“வேண்டாம். சித்தி, நான் போடறதா தீர்மானம் பண்ணிட்டேன்.” 

 “நீ எப்பத் தூங்கி, எப்ப எழுந்து, எப்ப காபி போடுவாய்?” 

“தூங்கினாத்தூனே அந்தப் பிரச்சனை?உங்க பாஷையிலே சொல்றதானா, ப்ரோப்ளம்”, 

”என்னடி ராஜி! இன்னுமா குசுகுசுன்னு பேசிண்டு நிக்கறாய்? ஆத்துக்குப் போகலியா?” என்றாள் பாட்டி. ராஜி வெளியேறினாள். 

குளித்துவிட்டு வெளிவந்த பாரதி, வெட்டிவிட்டு இருந்தது போக எஞ்சியுள்ள கேசத்தை டலலில் பொதிந்து கொண்டாள். கூடத்தினுள் சென்று, சுவாமி படங்களுக்கு முன்னால் இருந்த குங்குமச் சிமிழை எடுத்தாள். 

நெற்றியில் பொட்டு வைக்கும்போது பொறி தட்டினாற போன்ற ஒரு கேள்வி எங்கிருந்தோ பறந்து வந்து அவளைத் தாக்கியது. 

எங்கே யார் என்ன ஆராய்ச்சி செய்து, பட்டம் பெற்று இந்த வைத்திய முறையை ஸ்தாபித்தார்கள்? 

சங்குண்ணி ஒரு சாதாரண ஆள். அவனிடம் உன்னதமான வைத்திய முறை இருக்கிறது. இவனே டெல்லியில் இருந்திருந்தால்? பல நாட்டுத் தூதர்கள் சங்கமிக்கும் இடத்தில் அவனை அமெரிக்காவுக்கு அள்ளி வாரித்  தூக்கிப் பிளேனில் ஏற்றி இருப்பார்களே.

திடீரென்று இரு குரல்கள் கேட்டன.

அப்பாவும், பிள்ளையும். 

மாமனாரும் கணவரும். 

ஒருவர் குளத்தில் மூழ்கி விட்டு வருகிறார். இன்னொருவர் இப்போதுதான் வீடு திரும்பியிருக்கிறார்.

கூடத்தில் இருக்கும் கடிகாரத்தைப் பார்த்தாள்.

மூன்றரை. 

பாட்டிக்கும், தாத்தாவுக்கும் இன்னும் அரைமணி நேரத்தில் விடிந்துவிடும். 

அன்று நிச்சயமாக அவள் ஒன்பது மணிவரை தூங்க மாட்டாள். 

சமையலறைக்குள் பிரவேசித்தாள். விளக்கைப் போட்டாள். காப்பிப்பொடி எந்த டப்பாவில் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியும். 

ஃபில்டர்கள் மூன்று இருந்தன. 

பெரிய பித்தளை ஃபில்டரை எடுத்தாள். கழுவினாள்…

காஸ் அடுப்பில் தண்ணீரை வால் பாத்திரத்தில் ஊற்றி வைத்து விட்டு ஸ்பூன் ஸ்பூனாகக் காப்பிப்பொடியை எண்ணாமல் போட்டாள் ஃபில்டரில் பாதிக்கு மேல் வந்தபோது ஒரு சிறு தம்ளரின் அடி பாகத்தால் சற்றே அழுத்தினாள். 

ஃப்ரிஜ்ஜில் முந்தைய நாள் கறந்த பால் இன்னும் காய்ச்சப்படாமல் இருந்தது. எடுத்தாள். 

‘ஜில்’ குறையட்டும் என்று காத்திருந்து விட்டு, அடுப்பில் வைத்தாள். 

“பொண்னே!”

ஈசுவரனுடைய குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள்.

ஓர் அஞ்சு நிமிஷம், அத்திம்பேர் ஸ்ட்ராங்கா சர்க்கரை- ஸாரி பஞ்சாரை குறைச்சலா காப்பி கலந்து தரேன்!” 

ஈசுவரன் அயர்ந்து போய் நின்றார். பிறகு மெதுவாக உள்ளே வந்து. “நீயும் தூங்கலையா?” என்றார். 

“இல்லே.” 

“ஏன்?” 

காரணத்தைச் சொன்னாள்.

ஈசுவரன் கலசுல்லென்று சிரித்தார். 

“என்ன சத்தம் அங்கே?” 

தங்கம்மாவின் குரல் அடிப்பதுபோலக் கேட்டது. 

– தொடரும்…

– வானமெல்லாம் ஆசைக் காற்றாடி (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1995, கங்கை புத்தகநிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *