ராக் விளம்பித் அபிராமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2019
பார்வையிட்டோர்: 6,841 
 

தினமும் படுக்கப் போகுமுன், ஒரு வெகுநாளைய பழக்கம், வானத்தைப் பார்த்துக் கொள்வேன்.

ஜன்னலண்டை கட்டில்: அல்லது கட்டிலண்டை ஜன்னல், இப்படி ஒரு காரணம் சொல்லிக் கொள்ளலாம்.

அல்லது!

ஜன்மேதி ஜன்மமாய் ஆனால் ஜன்மாவுக்கே புரியாமல், அதன் அடி உணர்வில், அதன் அடிப்படை பயம். அடுத்த முறை எட்டிப் பார்க்க வானம் இருக்குமோ?

யோசித்துப் பார்க்கையில், இது ஒன்றும் அவ்வளவு பயித்தியக்கார பயம் அல்ல. பரஸ்பர ஆகர்ஷணத்தில் தானே ஒன்றையொன்று இழுத்துப் பிடித்துக்கொண்டிருக் கின்றன. கிரகங்கள்! இந்த ஈர்ப்பு என்றேன்னும் எள்ளுப் பிசகட்டும்)?????

வானமாவது, பூமியாவது-அப்புறம் அவனுடைய ஊழிச் சிரிப்புத்தான் மிச்சம். ஆனால் அதையும் கேட்க யார் இருப்பார்?

நான் இருப்பேன். ஏனெனில், அவன் ஒன்று உண்டென வகுத்து, வரித்து, வஹிப்பவனே கான். கானில்லாது அவனேது; ஆகையால் இருக்கிறேன். இருப்பேன் என் பதற்கு என்னிலும் சான்று என்ன வேண்டும்?

ஆனால் அந்தச் சிரிப்பு நேரும் போது, எனக்குக் கேட்காது. அவனில் ஆகையால், அந்தச் சிரிப்பில் நானாக இருப்பேனன்றி எனக்குச் சொந்தமான நான், என்னைக் காண இராது.

சிரிப்பு ஒன்று உண்டு, தெரிகிறது.

அதைக் காணவோ, கேட்கவோ, கான் இருந்தும் இரேன்.

இந்த ஏமாற்றமே ஒரு துக்கம் இல்லையா?

மீனாட்சி கல்யாணத்தின் போது, அகத்தியனை பொதிகை மலைக்கு விரட்டினாற் போல்.

‘கல்யாணம் இங்கு கடப்பதை, கடக்கிறது கடக்கிற படியே அங்கு பார்ப்பாய்.”

டி.வி. அப்பவே வந்தாச்சு.

ஆனால் அது அசல் ஆகுமோ?

பிம்பம்.

இன்று படுக்கப் போகுமுன், வழக்கப்படி, வானத்தை உறுதிப் படுத்திக் கொள்ள ஏன் மறந்தேன்? .

வேலையிலிருந்து வந்த அலுப்பு, ஆடையைக் கூடப் பூராக்களையாமல், ரா உணவுக்கும் அலுப்பாகி பொத் தென்று விழுந்தவன் தான்.

இது இன்று மாத்திரம் இல்லை.

அடிக்கடி வர வர வானம் பார்க்கும் கோம்காட்டிலும் பாராத நேரங்களே…

லகதியங்களின் கதியே இப்படித்தான். என் அனாவசிய நேரங்களில் சிந்திக்கையில், எல்லாமே வாணாளின் வீணாள். நாய் வைராக்கியம்.

குப்பை மேடில் இலை விழும் சத்தம் எப்போ? வைராக்கியம் மட்டும் இருந்தால் தருமபுத்திரனுக்குத் துணையாகப் போவேனே! தொண்டை அடைக்கிறது; சிரிப்பு கேட்கிறது?-ஆம். தொண்டைக்குள் அவன் தான். அசல் நேரும்போது இருக்க மாட்டாய். ஆகையால் இப்பவே, சிரிப்பைக் கேள்.’

அசல் நேரும் முன்னரே அதன் பிம்பம்.

மாதிரி (Sample).

அவன் மனசு வைத்தால் என்னதான் முடியாது?

ஆனால் இப்போது, அப்போது, எப்போதும் மனம் வைப்பவன் அவனா?

நானா?

மனஸ்(ஆண்)

மனஸா(பெண்?)

மானஸா(பெண்?)

மானஸி (பெண்?)

சேவலைச் சுற்றிப் பெட்டைகள்.

ஒன்றைச் சுற்றி ஒன்பது

“கொக்கரக்கோ”

என்ன வெண்மை, என்ன சுத்தம்!! என்ன வெற்றி!!!

கொண்டையும் கழுத்தைச் சுற்றி செதில்களும்.

என்ன சிலிர்ப்பு!

என்கூவலே என் கொடி.

உடல் ஆணாய் இருக்கலாம். ஆனால் மனம் பெண்ணாய் இருக்கலாம் அல்லவா?

உடல் பெண்ணாய் இருக்கலாம். ஆனால் மனம் ஆணாய் இருக்கலாம் அல்லவா?

இல்லை. மனம் அவ்வப்போது மாறி மாறி அந்தக்க சமயத்திற்கேற்ப ஆண்-பெண் அர்த்தநாரீசம். நீயே நான். நானே நீ.

நித்திரை நிலையில் நான் ஆணா? பெண்ணா?

வெறும் நான். ஒரே நான்.

இன்று படுக்கப் போகுமுன் வானத்தை உறுதிப் படுத்திக் கொள்ள, வானம் பார்க்க மறந்ததால், வயிறும் வெறும் வயிறு ஆனதால், ஜன்மேதி ஜன்மமாய், ஆனால் ஜன்மாவுக்கே புரியாமல், அதன் அடி உணர்வின் அடிப் பயத்தில், திடுக் விழித்துக்கொண்டேன்.

நீர்வீழ்ச்சியின் இரைச்சல். எங்கிருந்து இது? எழுப்பியது அதுதானோ?

நடு நிசி —

ரேடியோவை அணைக்க மறந்து அதன் கடபுடா கடபுடாவா?’’

கட்டிலருகே குட்டி மேசை மேல் எட்டித் தொட்டுப் பார்க்கிறேன். அணைக்க மறக்கவில்லையே!

விழித்துக் கொண்டதில் சந்தேகமில்லை. ஆகையால் இந்த ஓசை கனவல்ல. அதனாலேயே மனமெனும் திகைப்பு, திக்குத் தெரியாமல் திரிந்து, இங்கு வந்து விட்ட புரியாத ஏதோ ஒரு வேளையின் பெரு மூச்சு. அதில் மனத்தின் மயக்கு, மனமெனும் மயக்கு பக்கத்துத் தலையணையிலிருந்து கம்மென்று மல்லி. உடல் பரபரக் கிறது. இருளில் கைத்துழாவலுக்குப் பக்கத்துத் தலையணை காலி. சில நாட்களாகவே காலி. பிறந்தகம். அவள் கூந்தலின்று உதிர்ந்து அவளுடைய வழக்கமான அசிரத்தையில் விட்டுச் சென்றவையென்று சொல்ல வாடிய உதிரிகள் கூட இல்லை. இது ஜாதி ஜாது. மனத்தின் ஜவ்வாது. விளக்கைப் போட துணிவு இல்லை. தருணம் நலுங்கிவிட்டால்?

தூரத்தில், தூர், தூர் பஹூதூர் எட்டிப் போய் விட்ட நீர்வீழ்ச்சி. ஒசை நரம்புகள் பிரிந்து, நரம்புகள் தனித்தனி விதிர் உதிர்ந்து, இசை காட்டி, கரககிதம்; பரஸ்பர ஆகர்ஷணத்தில், கிரகங்கள் ஒன்றையொன்று வலிக்கும் பிகித்தனில் ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம். இதுவே நீர்வீழ்ச்சி. இதுவே நரம்பிசை. இதுவே அந்தர் கானம், இதய மீட்டல், சோகஸூகா ராக்விளம்பித் இசைப் பாகுகள் கெஞ்சில் கொக்கி மாட்டி இழுக்கின்றன. நெஞ்சு கேவுகிறேன்.

இசைப்பாகுகள், இசைப்பாடுகள், இசைக்காடுகள், இசையேடுகள், பட பட ஸ்ரி ஸ்ம மத கிந்து பம கம.

சித்தம் ஒரு பித்தம்.

சித்தரங்கத்தில் படுதா அசைகிறது. எழுகிறது. மெல்ல அதுவே ஒரு சொகுசு, ஆனால், மேடையினின்றும் இருள்தான். இருளின் பின்னணியில் இழையும் ராக்விளம் பித் ஸர்ப்பம். அதன் வழுவழுப்பில் அதன் அக்யோன்யத் தில், அதன் ரகஸியத்தில், அது என்னிடம் தேடும் உறவில், அதை அறிகிறேன்.

நாத ஸர்ப்பம் இருளினின்று இழிந்து என்மேல் வழிந்து, தவழ்ந்து, குழைந்து, விளையாடுகிறது. கன்னங் களில் மாறி மாறி முத்தமிடுகிறது. பிளந்த காக்கு முகத்தை கக்குகிறது. என்னிடம் எதையோ தேடுகிறது. அந்த ஏக்கம் என்னால் பொறுக்க முடியவில்லை. விக்கி விக்கி அழுகிறேன். என் கண்ணிரில் மனதின் சருகுகள் கனை கின்றன.

பக்கத்துத் தலையணையிலிருந்து மோதும் மணம் ராக்மல்லி.

நாகாநந்தம், நாகாநந்தி, காகஸ்வராளி, நாகவராளி, நாக கந்தாரி, நாக விளம்பித்.

ஸ்மரணை பயத்துடன், பரவசத்துடன், இன்பத் துடன், முரடுகிறது.

மூர்ச்சையின் சிறகுகள் கம்பீரமாய் விரிந்து ஸ்மரணை மேல் கவிகின்றன.

மனம் ஒரு கல்லறை. அதனுள் ஸ்மரணை-ஸ்மரணை என்று என்ன தனி? நான்தான்.

மூர்ச்சையிலிருக்கிறது.

மூர்ச்சத்திலிருக்கிறது,

நித்திரையிலிருக்கிறது.

சிறையிலிருக்கிறது,

நிஷ்டையிலிருக்கிறது.

சின்ன வயதில் அப்பா சொன்ன கதை இப்போ கினை வுக்கு வருகிறது.

மானொன்று உண்டாம். யார் கண்ணிலும் படாதாம். அதன் அழகு அத்தனை கற்பாம். அப்படியும் தப்பித் தவறி, வழி தப்பி, எவனேனும் அடவியில் அதனிடம் வந்து விட்டால், அவனைச் சுற்றிச் சுற்றி வந்து ஆசை காட்டு மாம். உறவாடுமாம். முகத்தை மேல் உராய்ந்து முனகி கையை கக்குமாம். என்ன சுகம்! என்ன சுகம்!! நக்க நக்க, ரத்தம் பீறிட, அந்த வலியையும் மீறிய சுகத்தில் எலும் பின் வெள்ளை தெரிவது தெரிந்தும் தாபம் அடங்காமல், கக்கலுக்கு உடம்பைத் திருப்பித் திருப்பிக் காட்டி, படிப் படியாக மான் உடல் பூரா கக்கி, ஆள் மாமிசப் பிண்ட மாகி, கீழே விழுந்து விக்கல் சுகம் இன்னும் தணியாமல், பிண்டம் புரண்டு புரண்டு கக்கலுக்குத் தன்னை இன்னும் காட்டிக்கொண்டு………

ராக் விளம்பித்தின் ராக கக்கலில் ஸ்மரணை நெளி கிறது. துவள்கிறது. துடிக்கிறது. ஸ்மரணையின் இந்த அதிர்வுகள்தாம் ஸ்வரங்கள்.

அவஸ்தை ஸ்வரம் ஸ்வரமாக அடங்குகிறது. அடுத்து அமைதியின் வியாபகம் அற்புதமான அமைதி,

நாதாந்த மோனத்தினின்று ஒரு புஷ்பம் என் மேல் உதிர்கிறது. அத்தனை மெத்தர்ன அமைதி.

ஸ்மரணைக்கு நாதாஞ்சலி.

நாதத்துக்கு ஸ்மரணாஞ்சலி.

உயிரின் பின்னணி ஓசை ராக்விளம்பித்.’

உனக்கு நான் எனக்கு நீ.

நெஞ்சில், கண்ணிரில் நனைந்த சருகுகள் சலசலக் கின்றன. அவைகள் மேல் யாரோ கடக்கிறார்கள்.

அபிராமி (!)?(!)(?)(!)(!)(!)

முன்பின் காரணம் தெரியாது. மோனத்தின் உச்சரிப் பில் உதிர்ந்த காமம். உடனே அதன் உருவை, அதன் கும் விலையுடன் எடுக்கின்றது. சித்தரங்கத்தில் அபிராமியின் பிம்பம் புலுபுலு புலர்கின்றாள்.

சொந்தமாயும், கடன் வாங்கியும், பூட்டிய நகை களுடன், முழங்காலுக்கும் கீழிறங்கிய திண்டுமாலை அசைய ஸர்வாபரண் பூவிதையாய் கர்பக்ரஹத்தினின்று மூலவிக்ரஹம் உயிர்த்துப் புறப்பட்டாற் போன்று, கல்யாண கோலத்தில் காrயளிக்கிறாள். ராக் விளம்பித்தி லிருந்து அவதாரம் எடுத்திருக்கிறாள். அவதாரச் சூட்டில் வேர்வை அவள் நெற்றியில் முத்திட்டிருக்கிறது. மார்பு லேசாக மிதப்பாடுகிறது.

ஆனால் ராக் விளம்பித் இன்னும் வாய் பிளந்தேயிருக் கிறது.

ராகங்கள் எப்படி பிறக்கின்றன?

உயிர்மேல் விரிந்த சிறகிருளில், ஸ்மரணை தன்னைத் தேடி அலைகையில் அந்தத் தேடல் அலைகளின் உச்சங்கள் வெவ்வேறாய், தனித்தனியாய்த் தவிக்கையில் அவைகளின் மறுபெயர் ஸ்வரங்கள், ஒன்றுக்கொன்று துணை தேடி, ஒன்றையொன்று பற்றிப் பிறக்கின்றன. அத்தனையும் பிந்து மாலைகள்.

ராக் பூபாளி
மோஹனம்
ராக்கலாவதி
மலயமாருதம்
ராக் அபிராமி

வெள்ளித் தாம்பாளத்தில் திருமாங்கல்யமும், கூரைப் புடவையும் ஆசிக்காக சபையோரைச் சுற்றி வருகின்றன. கலியாணக் கூடத்தில் ஒரமாக ஜமக்காளம் விரித்து, அதில் பெஸல் நாயனமும், தவிலும் வெளுத்து வாங்குகின்றன. வாசல் திண்ணையில் பாண்டு. அதைச் சுற்றித்தான் கூட்டம். கிராமத்தில் பின் என்ன ஸங்கீதமா கேட்கப் போகிறார்கள்? இந்தமாதிரி சமயங்களில் சங்கீதம் ஏது? அதுதான் முதல் பலி. யார் கோஷ்டம் கூட? போட்டியும் குஷியும் அதில்தான். காயுடுவை குற்றம் சொல்லாதீர்கள். பக்கத்தாரிலே இந்த ஸெட்டைத்தான் வெச்சாங்க. நானும் வெச்சேன். அவருக்கு சங்கீதத்தைப் பற்றியோ, வேறு எந்த விஷயத்தில் ஆகட்டும், அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான் வாழ்க்கையில் முன் ஏறுவதற்கு அவ்வளவு தெரிந்தால் போதும்.

இந்தக் கலியாணத்தில் செல்வத்தோடு செல்வம் மணம் புரிந்து கொள்கிறது.

இங்கு ஒரே பெண் அங்கும் ஒரே பிள்ளை.

நாயுடு அரிசி மொத்த வியாபாரம்.

சம்பந்தி தோல் வியாபாரம்.

லஷ்மி விலாசம் பொருளையும், இடத்தையும் தேர்ந்தா எடுக்கிறது? அதற்கு எதுவுமே அவசியமில்லை. அதற்கு கிறுக்குப் பிடித்தால் உங்கள் கொல்லைப்புறத்தில் மண்கட்டி திடீரெனத் தங்கக்கட்டி.

எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு காயுடு. அப்பா போஸ்ட் மாஸ்டர், அவள் தகப்பனுக்கு வந்திருக்கும் தபாலை வாங்க எப்போதேனும் வருவாள். வேலைக்காரன் வேறு ஜோலியாகப் போயிருந்தால். நாயுடுவே எப்போதேனும் வருவார். தபாலை வாங்குவதோடு சரி. படித்துக் காட்டச் சம்பளத்துக்குக் கணக்குப்புள்ளே இருக்கிறார். காசோலையில் கையெழுத்துப் போடமட்டும் நாயுடு எப்படியோ கற்றுக்கொண்டு விட்டார்.

அபிராமி, நாயுடு இவர்களின் இப்படியான அபூர்வ மான வருகையில் எங்கள் வீடு பெருமை கொண்டது.

வேர்த்துக் கொட்டுகிறது. அப்பா என்ன நெரிசல், என்ன நெரிசல் மூச்சே திணறுகிறது. வெளியே இருப் பவர் உள்ளேவர முடியவில்லை. நான் உள்ளே மாட்டிக் கொண்டு விட்டேன்.

நாயுடு தலையில் முண்டாசு. காத்தவராயன் மீசை யுடன், ஆறடி உயரத்தில், தொந்தியும் தொப்பையுமாக, ஆட்களை இரைச்சலாக கார்வார் பண்ணிக்கொண்டு, கூட்டத்தில் புகுந்து வளைய வந்து கொண்டிருக்கிறார். சம்பந்தியும் அவ்விதமே. அவரும் ஆகிருதியில் நாயுடுவுக் குச் சளைத்தவரல்ல. இவர் இந்தப் பக்கம், அவர் அந்தப் பக்கமாக வந்து, இருவரும் கோயில் திருவிழாவில் பூதப் பொம்மைகள் போல, தொந்திகள் முட்டிக் கொண்டனர்.

மணப்பந்தலில் மாப்பிள்ளை இப்பவே தோசைமாவாக உடல் பொங்கி வழிகிறான். அப்பா வயசுக்கு எப்படி ஆவானோ?

விருட்டென மணமகனின் பக்கலினின்று அபிராமி எழுந்து, புன்முறுவல் மாறாமல் புழைக்கடைப் பக்கம் போகிறாள். தோழிப்பெண் ஜாடை அறிந்து பின் தொடர் கிறாள். ஆனால் அதற்குள் அபிராமி காலடி முன் போயாச்சு. யாவரும் அவளுக்கு வழிவிடுகிறோம். என்ன நெரிசல் என்ன புழுக்கம்!! மணப்பெண்ணுக்கே மூல வருக்கு எண்ணெய்க் காப்பு இட்டாற்போல் முகம் கசகசக் கிறது. அந்தப் பளபளப்பிலும் ஒரு பாந்தம் இருக்கிறது.

கூட்டத்தில் என்னைக் கண்டதும். அவள் கடை, இமைநேரம் தடைப்பட்டதோ எங்கள் கண்கள் சந்திக் கின்றன. உடனே கடந்துபோய் விட்டாள்.

அப்பா, என்ன கூட்டம் என்ன கூட்டம்!! நாயுடு கல்யாணத்துக்கு அழைக்கவில்லை. உத்தரவு போட்டு விட்டார். யார் வீட்டிலும் அடுப்பு மூட்டக்கூடாது. முதல் நாள் இரவு; இன்று பூரா. சமையல் பெருமாள் கோயில் மடப்பள்ளியில் கடக்குது. பந்தியும் கோவில்லேதான். தவசிப் பிள்ளைங்க நாற்பது பேரு பட்டணத்திலிருந்து ஜமாவா வந்து இறங்கி இருக்காங்க.

“இதென்ன முகூர்த்த வேளை நெருங்கிக்கொண்டிருக் கிற சமயத்தில் மணப்பெண்ணுக்கு ஏதோ அவசரம் வந்துட்டதே!”

வாய்விட்ட சொல்ல முடியாமல், புரோகிதர் கையைப் பிசைவதற்குப் பதிலாக அவ்வப்போது மேல்துண்டால் முகத்தைத் துடைத்துக்கொள் –

“ஐயோ! ஐயோ!! ஐயையோ!!!

கொல்லைப்புறத்திலிருந்து அலறல் வருகிறது. பயத் தில் எதிர் அலறல்; அலறிக்கொண்டு எல்லோரும் புழைக் கடைக்கு ஓடுகிறோம்.

தோழிப்பெண் வாயில் அடித்துக்கொண்டு அதோ கிணற்றைச் சுட்டிக்காட்டுகிறாள். அவளுக்கு விழிகள் பிதுங்கிவிட்டன.

“ஐயோ! ஐயோ!!’

நாக்கு வேறு சத்தத்துக்கு எழவில்லை. வாயில் அடித் துக் கொள்வதோடு சரி. கிணற்றைச் சுட்டிச் சுட்டி, காட்டு வதோடு சரி. கைவேறு செயல்படவில்லை.

முகூர்த்தம். அபிராமி அப்படித்தான் வேளை பார்த் திருக்கிறாள்.

ராக் விளம்பித்துள் மறையl

அதை அவள் ஸ்மரணை பூர்வமாக அறியாள்.

ஆனால் எப்பவும் நடப்பதென்னவோ அதுதான்.

ஒவ்வொரு பிறவியும் ஒரு ஸ்வரம் அல்லது விளம்பித் தினின்று ஜன்யராகம்.

விளம்பித் அனாதி,

பின் நேர்ந்தவைக்குத் தக்க பாஷை என்னிடம் இல்லை.

எப்படிச் சொன்னாலும் அது பாஷையை அசிங்கப் படுத்துவதாகும். அப்படியும், விகாரங்களையும் சொல்லித் தானே ஆகவேண்டி இருக்கிறது. பெற்றோர் உற்றோர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும். ஊரே கொல் ஆனது ஒரு பக்கம் இருக்கட்டும்.

மணவறையே பிணவறையாய்-சம்பிரதாயப்பாட்டு ஒப்பாரி மேற்கோள்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

சாயந்தரமே எடுத்துடறதா? இல்லே, மறுநாள் காலையா? மேல் காரியத்தை ஒட்ட வேண்டுமே! அந்தக் கேள்வி ஒரு பக்கமிருக்கட்டும். நாயுடுவுக்கு வேண்டாதவர் களும் இருக்கிறார்கள் என்பது இப்போ துப்புறத் தெரிங் தது. சுட்டித்தான் காட்ட முடியாது. லக்ஷ்மி ஒரிடத்தில் வளருகையிலேயே, கூடவே ஒரு பொறாமைக் கும்பலையும் வளர்க்கிறாள். இனம் தெரியாது. கும்பலோடு கும்பல்.

வத்தி வைத்தது யார் தெரியவில்லை. மத்யானமே, போலீஸ்-மூன்றாவது மைலில் எங்களுக்குப் போலீஸ் ஸ்டேஷன்-வந்துவிட்டது ஆம்புலன்சுடன். வியாபார ரீதி யில்-மாமூல், நாயுடுவிடமிருந்து சேரவேண்டிய இடங்களில் சரியாகச் சேரவில்லையோ? சப்-இன்பெக்டர் புதுசோ?

நாயுடுவின் செல்வாக்கு, விஷயத்தை அப்படியே குரல் வளையைப் பிடித்து அமுக்க முடியவில்லை. தனியாக அழைத்துப் போய்ப் பேசாமல் இருந்திருப்பாரா?

‘நீங்க விஷயங்களைக் குழப்பlங்க. அது வேறே. இது வேறே. கொலையா, கொக்கா? எங்கள் ஒழுங்கு முறையை முழுக்க முழுங்க முடியாதுங்க. இதுவே ஒரு FORMALITY தானுங்களே! நாளைக் காலையிலேயே டெலி வரி எடுத்துடலாம். அதுக்கு வேண்டிய ஒத்தாசைக்கு என்னை கம்புங்க கானும் புள்ளைக்குட்டிக்காரன் தானுங்க. உங்களுக்கு எப்படி இருக்கும்? எங்களுக்குத் தெரியாதுங்களா?”

சப்-இன்ஸ்பெக்டர் பயங்கொள்ளிதான் போலும்!

இல்லை, அவருக்கு விசை அப்படி முடுக்கி இருக்கிறது போலும்.

ஆனால் போஸ்ட மார்ட்டம் வெளிப்படுத்தியதற்கு யாருமே தயாராக இருந்திருக்க மாட்டார்கள். ஆம். நாயுடு வின் எதிரிகளையும் சேர்த்துத்தான். ஏதோ ஒரு விதத்தில் அது கியாயமாகக்கூட இல்லை. ஆனால் கியாயமோ இல்லையோ, இருந்ததை மறுக்கமுடியாதே!

நாயுடு குடும்பத்தின் மானக்குலைவு முழுமை அடைக்தது.

மானம் மட்டுமா குலைவு?

ஒன்று தட்டினால் அடுத்தடுத்து ஒன்றையொன்று தொட்டுத் தட்டிக்கொண்டு ஒன்பது விழுமே! அது ஒரு விளையாட்டு. NINE PINS!

லசுமி அவள் ஒரு கம்ப முடியாத குதிரை.

ஒருவாரம் பொறுத்து காயுடுவுக்கு ஒரு தபால். அப்பாவே எடுத்துச் சென்றார். நாயுடு ரேழித் திண்ணை யில் உட்கார்ந்திருந்தார். காயுடுதானா? ஒரு வாரத்துக்குள் இப்படியா? வயிறின் விண் கரைந்து தொந்தி தோலாய்த் தொங்கிற்று. முகத்தில் அந்த முழியும் கார்த்தவராயன் மீசையும்தான் அடையாளமாய்த் தெரிந்தன. அவரிடமிருந்து ஜ்வாலை உஸ் உஸ்ஸென்று மூச்சாக எகிப்புடன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

‘நாயுடுவாள், உங்களுக்குப் பிள்ளை வீட்டாரிட மிருந்து ரிஜிஸ்த்தர் வந்திருக்கிறது.’

அப்பாவுக்குப் பயத்தில் குரல் கம்மிற்று,

‘பிரியுங்க.”

‘அதெப்படி-கான்- அப்பா தயங்கினார்.

‘பரவாயில்லே, பிரியுங்க. கணக்கப்புள்ளே படிச்சுக் காட்டறத்துக்கு நீங்க மேலில்லையா? இனிமேமேல் என்ன, கீழ் என்ன? சாணித் தண்ணியிலே தெளிவு என்ன? வண் டல் என்ன?

கடிதத்தில் சுற்றி வளைத்தது போக சாராம்சம்:

நீங்க உங்க மகளின் நெலமையே மறைச்சு வெச்சு எங்க தலையில கட்டப்பார்த்த மோசடி முயற்சியில் எங்க குடும்பத்துக்கு வந்திருக்கும் மான கஷ்டத்துக்கு ஒண்ணரை லச்சம் –

பிள்ளையின் தகப்பனார் தன் கைப்பட அவருக்கு கை வந்த பாசையில் எளுதியிருக்காராம்.

பின்னால் வக்கீல் கோட்டீஸ் வருமோ என்னவோ?

கேஸ் இருக்குதா இல்லியா, திரிச்சவரைக்கும் கயிறுமுன்னால் பைலட் விட்டுப் பார்க்கிறார். எதாச்சும் தகைஞ்சால் பிஸினெஸில் போட்டுக்குவாரா? வீடு கட்டி வாடிக்கைக்கு விடுவாரா?

ஆனால் யார்?

கையில் அரிவாளுடன் நாயுடு தெரு தெருவாய்த் தேடி அலைகிறார். ஊரில் அபிராமிக்கு ஒத்த வயது காளைகள் அத்தனைபேர் தலைகளையும் சீவுவதற்குத் தாயாராக இருக்கிறார். முதலில் தண்டனை. பின்னால் விசாரணைதேவையானால் பார்த்துக்கலாம்.

ஆனால் இது புலன் அவ்வளவு சுலபமா? கடைசி வரை கிடைக்கவில்லை-கிடைக்கவே இல்லை.

ஒரு சமயம் பிற்பகல் மூன்று மணி இருக்கும். ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகும் ரோட்டில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டோம். நாயுடுவின் காங்கை அடிக்கும் கண்களின் வசியத்தில் எனக்கு கடை தடைப்பட்டு கால்கள் நின்று விட்டன.

மெளனமாக, எதிருக்கெதிர், நாங்கள் கின்ற சிலை எப்படி நேர்ந்தது? எங்கேரம் நீடித்தது? தெரியவில்லை. எனக்குக் குலை கடுங்கிற்று. ஒரு ஈ காக்கை இல்லை. வெயில் முதுகைப் பட்டை உரித்தது. அவர் கையில் கத்தி யில்லை. ஆனால் அவர் கையினாலேயே தீக்குச்சியாக ஒடித்து அங்கே பாலத்தடியில் தாக்கி எறிய அவருக்கு நான் எம்மாத்திரம்?

என்னைப் படிப்படியாகத் தன் ஆலிங்கனத்தில் இறுக்கிக் கொண்டிருக்கும் அந்தப் பார்வையின் வசியத்தி னின்று, உயிர் முயற்சியில் ஒருவாறு என்னை உதறிக் கொண்டு, காலை அதில் கட்டிய கல்லோடு இழுத்துக் கொண்டு அவரைக் கடந்தேன். நான் பத்திரமாகிவிட்ட தூரத்துக்கு வந்து விட்டேன் என்று எனக்கு கிச்சயமான தானதும் திரும்பிப் பார்த்தேன்.

நின்றவிடத்திலேயே நின்றபடி, நெற்றிப் பொட்டைத் தேய்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவளுடைய அந்தப் பார்வை –

ஆ! ஆனால் எனும் சொல் சமீபத்தில் இங்கு சிறைய நடமாடுகிறது.

ஒருவேளை அதுதான் ராக்அபிராமி’யின் ஜீவஸ் வரமோ?

அந்தப் பார்வை –

அதுவே ஒரு கருவூலம்

அது, என்னிடம் என்ன சொல்ல முயன்றது? அது இன்னும் என்னுடைய ப்ரத்யேக அதிசயம். எத்தனை வருடங்களாகி விட்டன. எத்தனை ஆனால் என்ன?

பல காரணங்களால், வீட்டுக்குத் திரும்ப விருப்பம் இல்லாமல், சில கோடை இரவுகளில், கடற்கரையில் தனியாக உட்கார்ந்திருக்கையில், வானத்தில் நட்சத்திரங் கள் கூடைகூடையாகக் கொட்டி வாரியிறைக்கின்றன. எனக்கு ஒரு சித்தாந்தம். உலகத்தின் அத்தனை உயிர் களுக்கும் கூடுகளாம். நrத்திரங்கள் இங்கு பிறவி நீத்தவுடன் ஒவ்வொரு ஆவியும் வானில் அதனதன் கrத்திரக் கூட்டை அடைகிறது. அங்கு தான் அதற்கு ஒய்வு. மறுபலத்தின் ஊறல். மறுபடியும் அதன் வேளை யில், புட்கள் இரை தேடக் கிளம்புவது போல் பிறவி யெடுக்கப் புறப்படுகிறது.

இங்கு இந்த நகடித்திரக் கொள்ளையில் அபிராமி எங்கே?

ஜன்மாவின் இன்பத் திகைப்பு இதுதான்.

அவரவர்க்கு அவரவர் அபிராமி, வெவ்வேறு பெயர் களில். அதைப்போல் ஒவ்வொரு அபிராமிக்கும் அவளுடைய அபிராமன்.

ஒருவருக்கு மற்றவர் கrத்திரவாசம். -எட்டாப் பழமடியோ தெவிட்டாத தேனடியோ’

விளம்பித் வீறிடுகிறது.

‘-கட்டுக் குழி படர்ந்த கருமுகில் காட்டுக்குள்ளே’ மறுபடியும் கிட்டப்பா.

இந்த நகrத்திரக்காடும் அப்படித்தான்.

அபிராமியை இங்கே எங்கென்று தேடுவேன்?

யார்?

முடிவற்ற கேள்வி, தொடர்பற்ற பதில்.

பக்கத்துத் தலையணையில் மல்லி மணம் பின் வாங்கி விட்டது.

நீர் வீழ்ச்சி தூர தூர தூர ஓய்ந்து போய்விட்டது.

எழுந்து ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க் கிறென்.

நக்ஷத்திரங்களைக் கூடை கூடையாய் கொட்டி வாரி இறைத்துக் கிடக்கிறது.

எனக்கு இடம் தெரியாது. தெரியவும் போவதில்லை என்று தெரிகிறது.

தேடுகிறேன்.

– புற்று சிறுகதைகள் – ஐந்திணைப் பதிப்பகம் – மார்ச் 1989

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *