மூன்று குட்டிச்சாத்தான்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 29,044 
 

மிக நீண்ட காலத்திற்கு முன்பு பூமியில் விசித்திரமான மற்றும் மந்திர உயிரினங்கள் மட்டுமே வாழ்ந்தன – மேகங்களில் பயணம் செய்து அதை நிர்வகிக்கும் அளவுக்கு உயரமாகக் குதிக்க வேண்டும் என்று கனவு கண்ட மூன்று சிறிய மேகனன் . வின்னன், மலையன் என்ற குட்டிச்சாத்தான்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் உயரம் மூன்று அடிகள் மட்டுமே. அவர்களை எல்லோரும் குள்ளர்கள் என்று கேலி செய்தனர். அவர்களுகு பெண் கொடுக்க ஒருவரும் வரவில்லை கவலையில் தற்கொலை செய்ய ஒரு காட்டுக்குப் போனார்கள் ஒரு மரத்தில் கையிற்றை கழுத்தில் கட்டி தூக்கு போட்டு இறக்கப்போகும் சமயம் அந்த மரத்தின் கீழ் ஒரு முனிவர் கண் மூடி தபம் செய்து கொண்டு இருந்தார். அவரை வணங்கி தங்களைத் தூக்கு போட்டு அவர்கள் சாகத் தயாராகும் சமயத்தில் முனிவர் கண் விழித்தார்.

“என்ன செய்யப் போகிறீர்கள்” முனிவர் அவர்களைக் கேட்டார்.

“எங்களுக்கு உலகில் வாழப் பிடிக்கவில்லை எங்களை எல்லோரும் குள்ளர்கள் என்று கேலி செய்கிறார்கள். அதனால் நாங்கள் தற்கொலை செய்யப் போகிறோம் சாமி”.

“உங்களுக்கு என்ன பைத்தியமா? உங்களுக்குள் சிந்தித்து செயல் படும் திறமை இருக்கு, உங்கள் மூவருக்கும் ஒரு வேலை தருகிறேன் அதை என் திருப்திக்கு செய்தால் என் சக்தியைப் பாவித்து உங்களை வளரந்தவர்களாக மாற்றுகிறேன் சம்மதமா?” முனிவர் சொன்னார்.

“சம்மதம் . என்ன வேலை சொல்லுங்கள சாமி ”, என்றனர் மூவரும்.

ஒவ்வொரு குட்டிச்சாத்தான்களுக்கும் அவர்கள் விரும்பிய வேலையை வழங்க முனிவர் முடிவு செய்தார்.

“வாழ்க்கையில் நீங்கள் எதை அதிகம் செய்ய விரும்புகிறீர்களா” முனிவர் கேட்டார்.

“சுவாமி எனக்கு மேகங்களில் பயணம் செய்ய வேண்டும்” மேகனன் சொன்னான்.

“சுவாமி எனக்கு விண்கல்லில பயணிக்க வேண்டும்” வின்னன் சொன்னான்.

“சுவாமி எனக்கு சுமார் 8850 மீட்டர் உயரமுள்ள இமயமலையின் உச்சியைத் தொட வேண்டும்” மலையன் சொன்னான்.

“நீங்கள் மூவரும் விரும்பிய படி நடக்கும் . ஒரு மாதத்தில் உங்கள் அனுபவம் பற்றி திரும்பி என்னிடம் வந்து எனக்கு என்ன செய்தீர்கள் என்று சொல்லவேண்டும் அதன் பின் நான் தீர்மானித்து உங்கள் உயரத்தை ஆறடியாக அதிகரிப்பேன் சம்மதமா”.

“சம்மதம் சாமி”, மூவரும் ஒருமித்துச் சொன்னார்கள்.

தன் சக்தியின் ஒரு பகுதியை அவர்களின் தலைகளில் கை வைத்து முனிவர் வழங்கினர்.

மறு நிமிடம் மேகனன் பல உருவ தோற்றமுள்ள மேகங்களில் அமர்ந்து ஓடும் “மேகங்களே ஒரு சொல் கேளீர” என்று பாடிய படியே பயணிக்கத் தொடங்கினான்,

வின்னன் பூமியை நோக்கி வெகு வேகமாக போகும் ஒரு பெரிய விண்கல்லில் அமர்ந்து, ”கல் எல்லாம் விண்கல்லாகுமோ” என்று பாடிய பயணிக்கத் தொடங்கினான்.

மலையன் எது வித சிரமமும் இன்றி இமயமலை உச்சியை அடைந்து, மலை ஓரம் வீசும் குளிர் காற்று” என்று பாடிய படியே உலகத்தை பார்த்தான் . இருவர் மலையின் உச்சியை அடைய பனி நிறைந்த பாதையில் முயற்சித்துக் கொண்டு இருந்ததை கண்டான்.

பல மேகங்களில் பயணித்த மேகனனுகுகு கீழே அவன் கண்ட காட்ச்சி அவனை அதிர்ச்சியடைய வைத்தது அந்த ஊரில் மழை வெகு காலம் இல்லாமல் மரம் செடிகள் இல்லமால் கருகி போயிருந்தனர். நிலம் வெடித்து இருந்தது குடிப்பதுக்கு தண்ணீர் இல்லாமல் பெண்கள் வெகு தூரம் குடங்களை காவிக் கொண்டு தண்ணீர் தேடி செல்வதை கண்டான்.

”என்ன இது. எதுக்கு இந்த ஊர் இந்த நிலையில் இருக்கிறது பயணித்த மேகத்திடம் மேகனன் கேட்டான்.

“இந்த ஊர் மக்கள் கொலை திருட்டு சாதி மத கலவரங்கள் செய்தார்கள் அதற்கு கடவுள் கொடுத்த தண்டனை கார்கிமுகில் அந்த ஊர் பக்கம் போக பயந்தது அதனல் அங்கு மழை பெய்யவில்லை “ என்றது மேகம்.

“இறைவன் கொடுத்த தண்டனை போதும் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து விட்டார்கள் கார்மேகம் இன நீ பயம் இல்லாமல் அந்த ஊருக்கு போய் மழையை கொடு” என்றான் மேகனன் சொன்னதை கேட்டு கார்மேகம் அந்த வரட்சியில் இருந்த ஊரருக்கு மழை பொழியத் துவங்கியது. மரம் செடிகள் துளிர் விட்டன.

சுமார் அரை கிமீ நீளமுள்ள விண்கல்ளின் மேல் அமர்ந்து பயணித்த வின்னனுக்கு விண்கல் எங்கே போகிறது என்று புரியவில்லை அவன் அதை பார்த்து கேட்டான், “இந்த வேகத்தில் எங்கே போகிறாய்?”.

“இது தெரியாத உனக்கு . பூமாதேவியை சந்திக்கப் போகிறேன்”.

“ஐயோ கடவுளே இந்த பெரிய பிரபஞ்சத்தில் வேறு இடம் இல்லையா உனக்கு போவதற்கு. நீ பூமியில் போய் மோதினால் அந்த ஊரின் பெரும் பகுதியும் மக்களும் அழிந்து விடுவார்கள்”.

“நான் அப்போ கடலில் போய் மோதுகிறேன் “.

“எதுவும் நீ செய்ய வேண்டாம் கடலில் நீ மோதினால் பேரலைகள் தோன்றி மக்களை அழித்து விடும். அதனால் நீ உன் திசையை மாற்றி செல். உனக்கு தேவையானால் ஊயிர்கள் இல்லாத வேறு ஒரு கிரகத்தோடு போய் மோது சில நேரம் நீண்ட பயணத்தின் பின் நீ எரிந்து விடுவாய். இது எனக்கு நீ செய்யும் உபகாரமாக இருகட்டும்” வின்னன் சொன்னான்.

“சரி நீ நல்லது செய்ய நினைப்பதால் நான் சென்று பூமியை தாக்காமல் பார்த்துக் கொள்கிறேன்” என்றது விண்கல்.

“நன்றி நீ சம்மதித்ததுக்கு “ என்றான் வின்னன்.

இமயமலையின் உச்சியை அடைந்த இமையன் குளிரால் நடுங்கினான் எங்கு திரும்பினாலும் பனிமலை. மலையின் ஒரு பகுதி பனி மலை உருகி சரிவு எற்றபடப போவதை இமையன் கண்டான் . அந்த சரிவு மலை ஏறுபவர்கள் திசையில் செல்லும் அபாயம் உண்டு என்பதை அறிந்தான். மலை ஏறுபவர்களை மலையன் அங்கிருந்து வெகு சீக்கிரத்தில் வேறு இடத்துக்கு நகரும் படிஅவர்களை எச்சரித்தான். அவனின் எச்சரிப்பால் அவர்கள் மூவரும் ஊயிர் தப்பினார்கள்.

மூவரும் தங்களின் ஒரு மாதப் பயணத்தை முடித்து முனிவரிடம் சென்று தாங்கள் செய்த வேலைகளின் விபரத்தை சொன்னார்கள் . முனிவர் அவர்கள் செய்த மனிதாபிமான காரியங்களை அறிந்து அவர்களை பாராட்டி அவர்கள் மூவரையும் ஆறடி மனிதர்களாக்கினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *