கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2020
மலரும் வாசம்
‘அப்பா போன்… அப்பா போன்…’ மகளின் குரலிலேயே அலைபேசியின் அழைப்பொலியை பதிவு செய்து வைத்திருந்தான் அவன். “ஹலோ… ஹலோ… வணக்கம், நான் பிரேம் குமார்.” “எப்படியிருக்கிங்க?” பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டபின் சற்று தயங்கித் தயங்கி, “எனக்கு ஒரு உதவி செய்யனும்” என்று கேட்டார். பிரேம் குமார் பேங்க் ஆஃப் இந்தியாவின் மும்பை சாக்கிநாக்கா கிளையில் சில வருடங்களுக்கு முன் மேலாளராக பணிபுரிந்தபோது அவனுக்கு அறிமுகமானவர்; நல்ல மனிதர். இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு
சங்கு
சாரதா, குழந்தை அரவிந்தைத் தூக்கிக்கொண்டு மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தாள். அவனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டுமே அவளது எண்ணமாக இருந்தது. பின்னால் அடிக்கடித் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடியவள்; ஒருவரும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சிறிதே நிதானித்தாள். அருகில் தென்பட்ட ஒரு வீட்டின் திண்ணையில், தூண் மறைவில் சென்று உட்கார்ந்துகொண்டாள். தூக்கிக் கொண்டு ஓடி வருகையில், அது ஒரு விளையாட்டு என்று எண்ணி, சிரித்துக்கொண்டே வந்த அரவிந்த், இப்பொழுது, விரல் சப்பிக் கொண்டிருந்தான். கையை
காலம் மறைத்த மக்கள்
அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 சாய்ந்த வேலியின் சுவர்களில் ஏறித் தாவிக் குதித்துத் தப்பிப்பது என்பது மிகவும் சுலபமான காரியமே என்னைப் பொறுத்தளவில். ஆனால் நாப்ஸை நான் மேலே ஏறிய பின் கயிறைத் தூக்கிப் போட்டு அதனை மேலே இழுத்தேன். பின் அதனை மறு பக்கம் இறக்கி விட்டேன். இங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்று அஜோரை இந்தப் புதிய உலகில் கண்டுபிடிப்பது என்பது முடியாத காரியமே. இருந்தாலும் முயற்சி செய்வது தவிர வேறெதுவும்
மழை நாளில் மூன்று பேர்
மயிலாப்பூர் செல்லும் பஸ்ஸில் ஏறினேன். கடைசி சீட்டில் இடமிருக்க. அமர்ந்தேன். உடன் மழை சடசடவென பெய்ய ஆரம்பித்தது. மழை சத்தத்தையும் மீறி எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர்கள் பேசும் சத்தம் கேட்க, இடப்புறம் திரும்பி பார்த்தேன். இரண்டு இளைஞர்கள். எனக்கு அடுத்து ஒருவன். அவனுக்கு அடுத்து ஜன்னல் பக்கம் மற்றொருவன். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பது அவர்களது உடல் புஷ்டியிலும் உடைகளிலும் தெரிந்தது. அவர்களை நேரிடையாக கவனிப்பதை தவிர்த்தேன். ஆயினும், அவர்களது உரையாடல் என் காதில் விழுந்தது. அவர்கள்
மனசாட்சி
பத்து வருடங்களுக்கு முன்பு நிரஞ்சன் குமார் ஒரு வளர்ந்து வரும் முன்னணி நடிகர். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம். காசு பணத்திற்கு குறைவில்லை. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, பத்து வருடங்களில் அவரது மௌசு குறைந்து விட்டது. ரசிகர்கள் அவரது படங்களை ஒதுக்கினார்கள். தயாரிப்பாளர்கள் அவரை தவிர்த்தார்கள். அது குமாரை , ( நிரஞ்சன் குமாரின் உண்மைப் பெயர் குமார்), பெரிதும் பாதித்து விட்டது. அவர் தனிமையை விரும்ப ஆரம்பித்தார். , நாளாக நாளாக, தன்னை யாரோ
அவளுக்கென்று ஒரு கனவு !!!
“Hello ! Evening ஏழு மணிக்கு மேல free யா??” மறுமுனையிலிருந்து வந்த பதில் அவளுக்கு மகிழ்ச்சியான ஒன்றாய் இருந்ததை அவளது முகம் காட்டியது. “Thank you! வழக்கமான இடம் ! Ok.. Bye..” “Ms.ANITA..MBA…VICE PRESIDENT..” இந்த பெயர் பலகைக்குப் பின்னால் உட்கார பட்ட பாடு அனிதாவை ஒரு ஆணவக்காரியாக மாற்றியிருந்தால் தப்பேயில்லை. “யார் எப்படி விமர்சித்தாலும் எனக்கு கவலையில்லை “என்ற முகம்தான் அனிதாவின் அடையாளம். அதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள தயாராக இல்லை நவீன்
சித்தவைத்தியர் சாம்புகன்
கூட்டம் அதிகமாக இல்லை! அப்படி இப்படின்னு ஒரு பத்து பதினைந்து சொச்சம் ஆட்கள் இருப்பாங்க ! சாம்புகன் வீட்டின் முன்பு நின்னுருந்த போலீஸ் வண்டியின் பக்கத்தில் எல்லோரும் நின்னுருந்தனர். ‘யோவ் ! பெருசு… பாக்க எழுவது வயசுக்கு மேல இருப்பபோல பேசாம தின்னுட்டு வீட்டுல இருக்காம உனக்கு இதெல்லாம் தேவைதானா” சாம்புகனை கைத்தாங்களாக போலீஸ் வண்டிக்கு கூட்டிகிட்டு வந்த ஏட்டு பொன்னுசாமி சொன்னார். உருகிப்போகாத உடம்புடன் கட்டு மஸ்தாக தெரிந்தாலும் நடந்துவர ஒரு ஆள் துணை தேவைப்பட்டது
ஆசை..!
தேன்மொழியைப் பார்க்க மனசு துடித்தாலும்……நான்கைந்து நாட்களாக கணவன் குமாரின் முகத்தில் வாட்டம், நடையில் துவளல்.! – குழப்பத்தை ஏற்படுத்தியது அம்மணிக்கு. தேன்மொழி கொள்ளை அழகு குழந்தை. வயது இரண்டு. குமாரின் தம்பி குமணனின் சுட்டிக் குழந்தை. பின்னாளில் பிரச்சனை வந்து உறவு முறிந்து விடக்கூடா து என்கிற முன்னெச்சரிகை காரணத்தால் மூன்று கிலோமீட்டர் தள்ளி தனிக்குடித்தனம் வந்தாலும் குழந்தையின் மேல் குமாருக்குக் கொள்ளை ஆசை. அலுவலகம் விட்டால் போதும் தம்பி வீட்டிற்குப் போய் அவன் தேன்மொழியைக் கொஞ்சிவிட்டுத்தான்
துன்பங்கள் நம்மை புடம் போடுகின்றன
விமலாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தலையை பிய்ச்சுக்க வேண்டும் போல் தோன்றியது. அவளுக்கு இரண்டு குழந்தைகள். ஒன்றுக்கு ஐந்து வயது. மற்றதுக்கு மூன்று வயது. எதற்கெடுத்தாலும் கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவு. வீட்டைக் கொண்டு நடத்தும் அளவுக்கு கணவனின் வருமானம் போதவில்லை. அவளும் ஏதாவது வேலைக்குப் போகலாம் என்று பார்த்தால் இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு எப்படி வேலைக்குப் போவது என்ற கேள்வி பெரிதாக எழுந்தது. எல்லாவற்றையும் யோசித்துப்பார்க்கும் போது மனது மேலும் குழம்பிப்போக இரண்டு நாள் நிம்மதியாக
விவாகரத்து
நேற்றைய இரவு மிகவும் கொடுமையாக இருந்தது. இன்னமும் அது கடந்து போகாதது போலவே இருக்கு. என்னால அழுகையை நிறுத்த முடியல. இன்னிக்கி காலைல நான் கண்கள் எரிச்சலுடன் முழிச்சப்போ, என் கணவர் முந்தைய இரவு என்கிட்ட கேட்ட கேள்வியோட என் படுக்கை பக்கத்துல வந்து நின்னாரு. “நீ என்ன முடிவு பண்ணியிருக்க? சரின்னு சொல்லப்போறியா அல்லது இல்லைன்னு மறுக்கப் போறியா?” எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு “நீங்க இப்ப ஆபீஸ் போங்க,