கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2020

93 கதைகள் கிடைத்துள்ளன.

போர்முகம்

 

 அடிக்கடி வேரோடு பிடுங்கப்பட்டு மீண்டும் மீண்டும் வெவ்வேறு இடங்களில் நடப்படும் பயிர்கள் எல்லம் பிழைத்துக் கொள்வதில்லை. சில செத்துமடிந்துவிடுகின்றன. சில உயிருக்காய் ஊசலாடுகின்றன. ஒரு சில மட்டுமே மீண்டும் தளிர்த்துத் துளிர்விடுகின்றன.இப்படித்தான் யாழ்ப்பணத்து மக்களும் அடிக்கடி வேரோடு பிடுங்கப்படுகிறார்கள்.அவர்களது ஆணிவேர்கள் அறுந்துபோகின்றன. எனது சிந்தனையை பஸ்சின் இரைச்சல் துண்டிக்கிறது. ஆர்வமாய்த் தெருவை நோக்குகிறேன். மூளாய் வீதியிலிருந்து நெல்லியான் சந்தி முடக்கில் திரும்பி, சுழிபுர வீதியால் இராணுவ வாகனம் ஒன்று மிகவேகமாகச் செல்கிறது. ஏமாற்றத்துடனும் சலிப்புடனும் நேரத்தைப் பார்க்கிறேன்.


அதிகாலை மூன்று மணிக்கு

 

 என் பேரு மணி .நம்ம கூட இன்னைக்கு பேச போறது இன்ஸ்பெக்டர் ஜெகன்.ஒரு மருத்துவர் கொலை வழக்கில் நீங்க செம்மையா குற்றவாளிய கண்டுபிடிச்சிங்க சார்.அதை பத்தி மக்கள் கிட்ட கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார் என்றார் பத்திரிகையாளர் மணி. உடனே ஜெகனும், எங்களுக்கு ஒரு போன் கால் வந்திச்சு ஒரு பிணம் பழைய குடோனுல இருக்குனு.நாங்க எங்க டீம்வோட போனோம். விசாராணை பண்ணதுல தான் தெரிய வந்தது அவர் ஒரு மருத்துவர்னு அவர கிட்டத்தட்ட ஒரு வாரமா


மர்மத்தின் மறு பக்கம்

 

 இந்த விளம்பரத்தைப் பார்த்தாயா மீனா? அன்றைய செய்தித் தாளில் வந்திருந்த விளம்பரத்தை என் மனைவியைக் கூப்பிட்டுக் காண்பித்தேன். அதில் வந்திருந்த செய்தி இதுதான். “நன்றி.மிகவும் நன்றி. இந்த போட்டோவில் இருப்பவர், எங்கள் உறவினர் ஆவார்கள். எழும்பூர் ரயில் நிலயத்தில் அவர், மாரடைப்பினால் கீழே விழும் தருவாயில்; அவரைத் தாங்கி, தன் மடியில் கிடத்தி முதலுதவி செய்த நபருக்கு எங்கள் குடும்பம் கடமைப் பட்டிருக்கிறது. நன்றி விசுவாசத்துடன் நாங்கள் அந்நபரைப் பார்க்கவும், அவருக்கு எங்கள் காணிக்கைகளைச் செலுத்தவும் விரும்புகிறோம்.


நேர்மைக்கு விலையில்லை

 

 பள்ளி விட்டு வந்ததும் புத்தகப்பையை ஒருபுறமும் ஷு-சாக்ஸ் ஒருபுறமும் என தூக்கி எறிந்து விட்டு முகத்தை “உர்” என்று தூக்கிவைத்தபடி கோபமாக பெட்ரூமினுள் நுழைந்தாள் சஞ்சனா… வாசற்கதவை லாக் செய்து விட்டு கிச்சனின் உள்ளே வந்து பாலை காய்ச்சி ஒரு டம்ளரில் ஊற்றி சஞ்சனாவிடம் நீட்டினாள் சவீதா..கோபம் குறையாதவளாக முகத்தை வேறுபுறம் திருப்பி கொண்டாள் சஞ்சு… சரி அவளே அடங்கட்டுமென பாலை மேஜை மீது வைத்து விட்டு கூடவே திண்பண்டங்கள் சிலதையும் வைத்து விட்டு வெளியேறி தன்


பொறாமை

 

 கடந்த இரண்டு மூன்று நாட்களாக காரணமில்லாமல் அலுவலகத்தில் எனக்கு எதிரில் உட்கார்ந்திருக்கும் ராமசாமியின் மீது எரிச்சல்வந்தது. எதற்கு என்று காரணம் புரியவில்லை. நானும் யோசித்து யோசித்து அதனாலேயே எரிச்சல் அதிகமானதுதான் மிச்சம். இதற்கும் அவர் என்னிடம் எந்த விசயத்திற்கும் வந்ததில்லை. தானுண்டு தன் வேலை உண்டு என்று வந்து போய்க் கொண்டிருப்பவர். இது என்ன இப்படி காரணம் இல்லாமல் எரிச்சல்படுவது என்று நானே என்னை கடிந்து கொண்டேன். அவர் மீது பொறாமைபடுகிறேனோ? இதற்கும் அவர் என்னை கண்டால்


சொல்வதெல்லாம் உண்மை!!

 

 எம்பேரு தேவி! நா படிக்காதவ! பள்ளிக்கூடம்ன்னா‌ என்னன்னே தெரியாது! ஆனா கைநாட்டுன்னு நினச்சிடாதீங்க! எங்க குமார் பையன்தான் எங்கையைப்பிடிச்சு கத்துக் குடுத்தாப்பல! தேவிக்கு ஒத்தக்கொம்பா , இரட்டக் கொம்பா? எனக்கு என்ன வயசிருக்கும்னு நினைக்கிறீங்க! இன்னக்கெல்லாம் இருந்தா ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு??? பெரியவன் குமார்! போன வருஷம் பள்ளிக்கூடம் முடிச்சான்! கருத்தா படிப்பான்! ஆனா ஒத்தக்கால்ல நின்னு என்னமோ சேல்சாமில்ல! ஒரு வீடு வித்துக்குடுத்தா இவ்வளவுன்னு கமிஷனாம்! தொலையுதுன்னு விட்டுப்புட்டேன்! அடுத்தது ராஜிப்பொண்ணு! பார்க்க நல்லாருக்கும்! நல்லாவும்


கல்யாண மாலை

 

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வதுண்டு. கணவனை போற்றி பேசுகிற போதும், திட்டி தீர்க்கின்ற போதும் இந்த முதுமொழி அவ்வப்போது புது மொழியாக பேச்சு வழக்கில் இருந்து வருகிறது. கணவனின் நிலை (?) குறித்து இப்படி சொல்லி நேர்மறையாக சந்தோஷம் கொள்வதும், எதிர்மறையாக சமாதானம் அடைவதும் வாழ்க்கையில் இரண்டறக் கலந்த ஒரு விஷயம். அதுவே ஒரு மனைவிக்கு, ‘கணவன் வாய்த்ததெல்லாம் இறைவியின் வரம்’, என்று யாரும் சொல்வதில்லை. ‘பிடித்து வைத்தால் பிள்ளையார் வழித்தெறிந்தால் சாணி’


கொள்ளையடித்தால்..?

 

 அக்பருக்குக் கை துறுதுறுத்தது. பத்து நாட்களுக்கொருமுறை கை அரிக்கும். தீனி போட வேண்டும். ‘கையில் மடியில் ஒன்றுமில்லை. ஆக… இன்றைக்குக் காரியம் நடத்தியே ஆகவேண்டும். ! ‘- மனசுக்குள் முடிவெடுத்துக்கொண்டு நகர சாலையில் ஆட்டோவை நிதானமாகச் செலுத்தினான். சிறிது நேரத்தில்…. “ஆட்டோ…! “- குரல் கேட்டது. வண்டியை ஓரம் கட்டி நிறுத்தித் திரும்பிப் பார்த்தான். பிரம்மாண்டமான துணிக்கடை வாசலில் ஏகப்பட்ட பை மூட்டைகளுடன் வயதான தம்பதிகள். ஐம்பது வயது மதிக்கத் தக்கப் பெரியவர்தான் கையை ஆட்டினார். வட்டமடித்து


உறவு சொல்ல ஒரு கடிதம்!

 

 ‘என் இனிய தோழருக்கு, நான் உங்களை பலமுறை பார்த்தும், பேசியும் இருக்கிறேன்… ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தது என் வாழ்க்கையில் மிகப்பெரியதொரு திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நான் பல குழப்பங்களும், பிரச்சனைகளும் சந்தித்திருந்த தருணம் அது. மேலும் ஒரு வாரமாக உங்களிடம் நான் பேசாததால் நீங்கள் என்னிடம் கோபமாக இருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு பதிலாக உங்களிடம் இருந்து நான் எதிர்ப்பார்க்காத பதில் வந்தது. நீ வருவாய் என்று எனக்கு முன்னாடியே தெரியும்


நாடி ஜோஸ்யம்

 

 சுமார் முப்பது வருடங்களுக்கு முன், நான் அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் மானேஜ்மென்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் வேலை செய்யும் என் நெருங்கிய நண்பன் அருணாச்சலம் என் வீட்டிற்கு வருகை தந்தான். பேச்சினிடையே வைத்தீஸ்வரன் கோயில் நாடி ஜோஸ்யம் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசினான். பின்பு திடீரென “நம் நண்பர்கள் ஐந்து பேராகச் சேர்ந்து வரும் சனிக்கிழமை நவஜீவன் எக்ஸ்பிரஸில் மெட்ராஸ் வரை சென்று அங்கிருந்து இன்னொரு ரயிலில் வைத்தீஸ்வரன் கோயில் சென்று ஸ்வாமி தரிசனம்