கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2020

80 கதைகள் கிடைத்துள்ளன.

கிராமத்து சகோதரி

 

 கிராமத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் கலந்துகொள்ள குடும்பத்தோடு சென்று வரலாம் என அப்பா கோவிந்தசாமி முடிவு செய்து அம்மாவிடம் கேட்டார். அம்மாவும், ஆமாம் கிராமத்துக்கு திருவிழாவுக்கு போயி ரொம்ப வருஷம் ஆச்சு,இந்த வருஷம் போய் வரலாம் என்றாள். கவிதாவுக்கு கோயில்திருவிழாவிற்கு கிராமத்துக்கு செல்வதில் விருப்பம் இல்லை. அவள்,இந்த விடுமுறையில் பள்ளி தோழியருடன் சென்னையை சுற்றி வர வேண்டும் என நினைத்து இருந்தாள். ஆனால்,அம்மா சரோஜா,”நீ அடுத்து வருஷம் கல்லூரியில் சேந்துட்டா, அடுத்து நாலு வருஷத்துக்கு நாம கிராமத்துக்கு


வைரஸ்

 

 மனசு வலித்தது. ஓரே நாளில் எப்படி இந்த நடைமுறை மாற்றம்? அப்படி என்னதான் நான் தப்பு பண்ணினேன்? வாட்ச்மேன், கேட்டு அடைத்த வாக்கில் சொன்னது காதில் விழுந்தது. இனிமே வீட்டுக்குள்ளே விட வேண்டாம் என்று ஐயாவின் உத்திரவு. அப்போ அவளை, என் உமாவை எப்படிப் பார்ப்பேன்? மாப்பிள்ளை முறுக்கி விட என் அப்பாவின் சின்ன திட்டமோ! திருமணம் இன்னும் ஒரு மாதத்தில். எனக்கு இல்லாத உரிமையா? எந்த அடக்குமுறைக்கும் நான் மசிய மாட்டேன். இது கண்டிப்பாய் அந்தக்கிழவியின்


செல்லக் கிளியே கொஞ்சிப்பேசு

 

 இன்ஸ்பெக்டெர் சோமையா சொல்லிச் சென்ற வார்த்தைகள் பரமேஸ்வரனுக்கு வருத்தத்தையே கொடுத்தது. “உங்கள் மனைவியின் சாவில் எந்த துப்பும் இதுவரைக்கும், எந்த துப்புமே கிடைக்கவில்லை. ஆனாலும் கொலைகாரனை கூடிய சீக்கிரமே கண்டுபிடித்துவிடுவோம்.” இதையே இரண்டு நாட்களாக சொல்லிக்கொண்டிருந்தார். “மகன் ரகுவும் மகள் ராதையும் இன்னும் துயரத்திலிருந்து மீண்டபாடில்லை .என் கண்மணியோடு அவள் வளர்த்து வந்த டாமியும் அல்லவா கொலையுண்டிருக்கிறது? டாமிக்குதான் எவ்வளவு விஸ்வாசம்! அவளைக் காப்பாற்ற போராடியிருக்கும். அந்த சமையத்தில் நான் இல்லாமல் போனேனே”. என அவர் துக்கித்தார்.


ஒரு வாய்ச் சோறு

 

 மகேந்திரன் அப்போதுதான் அந்த நாயை கவனித்தான். கடந்த நான்கு மாதங்களாக வீட்டில்தான் இருக்கிறான். அந்த நாயும் இரண்டு மாதங்களாக அவன் வீட்டையே சுற்றி வந்து கொண்டிருந்தது. அந்த நாய் அந்த ஏரியாவில் அவன் வீட்டை மட்டும் சுற்றி வரவும் காரணம் இருந்தது. அந்தப் பகுதியில் பெரும்பாலான வீடுகள் காலி செய்யப் பட்டிருந்தன. கொரோனா வந்ததில் இருந்து வேலை இழந்த பல குடும்பங்கள் ஏற்கனவே காலி செய்து சொந்த ஊரை நோக்கி சென்று விட்டிருந்தன. மகேந்திரன் மட்டும் தினமும்


புதுச்செருப்பு

 

 சீதாராமன் ஒன்றும் பயந்த சுபாவம் உடையவர் என்று சொல்ல முடியாது. ‘வலுச்சண்டைக்கு போகமாட்டார். வந்த சண்டையை விடமாட்டார் ‘ரகம்’. ஆனாலும் அவர் பயப்படுவது இரண்டே விஷயத்துக்குத்தான். ஒன்று dentist visit. இன்னொன்று செருப்பு வாங்கப் போவது.. இரண்டுக்கும் சம்பந்தம் இல்லைதான். பல் மருத்துவர் அவரை சுழல் நாற்காலியில் உட்காரவைத்து , முகத்துக்கு நேரே light ஐ காட்டி , வாய்க்குள் நீளமாய் எதையோ வைத்து அழுத்தும்போதே பாதி உயிர் போய் விடும். Car Mechanic Shop ல்


இறுதி வாக்கு சித்தர்

 

 மாடு மேய்க்கப் போன சின்னான்தான் அவரை முதலில் பார்த்தான்.ஊருக்கு வெளியே இருந்த அய்யனார் கோயிலிலிருந்து இருநூறு அடி தள்ளி ஒரு பெரிய மரம் இருந்தது. கீழே அந்தக் காலத்தில் யாரோ கட்டிய ஒரு சிறிய கல் மேடை. அதன் மேல்தான் அந்த சித்தர் அமர்ந்திருந்தார். தலையில் சடா முடி. நீளமான தாடி. நெற்றியில் விபூதி. உடம்பு குறுகலாக இருந்தது. வயிறு உள் வாங்கியிருந்தது.யாருடனும் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு இருந்தவர் திடீரென சின்னானைக் கூப்பிட்டார். “இங்கே வா…” பயந்துகொண்டே


செக்ரட்டரி மாமா..!

 

 நான் சிவக்குமார்..மனைவி சித்ரா.. ஒரே மகன் கணேஷ்.. ஏழு வயது! எங்க வீடு இருந்தது அந்த அப்பார்மெண்டுல.. ! சொந்த ஊர் ராஜ பாளையம் பக்கத்துல .. செட்டில் ஆனது கோயமுத்தூர்..! அப்பா அம்மா தம்பிலாம் ஊர்ல இருக்காங்க. தோட்டம் இருக்கு.. எங்க அப்பார்ட்மெண்ட்ல மொத்தம் அறுபத்து நாலு வீடு..! எல்லாருமே மிடில் க்ளாஸ்.. அதற்கும் சிறிது மேற்பட்ட குடும்பங்கள்தான்..! எனக்கு நிறைய தெரிந்த முகங்கள் இருக்கிற குடியிருப்புதான்.. என்னடா தெரிஞ்ச முகம்னு சொல்ரானேன்னு யோசிக்காதீங்க… காலைல


முடிவு..!

 

 வாசலில் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த ராஜசேகரன் அதிக நேர யோசனைக்குப் பின் மெல்ல எழுந்து வீட்டிற்குள் நுழைந்தார். வீடு நிசப்தமாக இருந்தது. மெல்ல நடந்து அறையை எட்டிப்பார்த்தார். இவருடைய தம்பியின் மனைவி பாலாமணி குழந்தையை மடியில் கிடைத்தி சுவரை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். “ப…. பாலாமணி…! ”அதிக தயக்கத்துடன் அழைத்தார். துணுக்குற்றுத் திரும்பியவள்… “என்ன மாமா..?”என்றாள். “ஒ…. ஒரு விஷயம்மா ….” “சொல்லுங்க…?….” “உன் முடிவை மாத்திக்கனும்….” “மன்னிச்சுக்கோங்க.. மாமா..” “நீ முரண்டு பிடிக்கிறது சரி இல்லே பாலா.


ஆடிய ஆட்டம் என்ன, தேடிய செல்வம் என்ன…

 

 அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 திவான் பஹதூர் சுந்தரம் ஐயர் தஞ்சாவூரில் 200 ஏக்கர் நஞ்சை நிலத்தோடும்,100 ஏக்கர் புஞ்சை நிலத்தோடும் பணக்கார தோரனையில் வாழக்கை நடத்தி வந்தார்.அந்த வட்டாரத்திலேயே அவர் போல இரண்டு பணக்காரார்கள் தான் இருந்து வந்தார்கள்.இவ்வளவு பணம், நிலம்,திவான் பட்டம்,அப்போது தஞ்சாவூரில் இருந்த வெள்ளைக்காரர்கள் சினேகம்,செழுமை எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்.அவருக்கு குழந்தைகளே இல்லை. தினமும் சுவாமியை ‘பகவானே எனக்கு பட்டம்,பணம்,நல்ல மணைவி, நிலம் புலன் எல்லாம் நீ குடுத்து இருக்கே. ஆனா எங்களுக்குப்


பழமும் கொட்டையும்

 

 நம்மிடையே பெரிய அனுபவ சாலிகளை “அவரா, அந்த ஆளு பழமும் தின்னு கொட்டையும் போட்டவன் ஆச்சே” என்று அடிக்கடி புகழ்வோம். அதையே சில சமயங்களில் எல்லார் பணத்தையும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்ட ஆளையும் இதே சொற்றொடரால் இகழ்வதும் உண்டு. இவைகள் எப்படி வந்தது என்பது ஒரு பெரிய கதை. ஆம். புத்த மதத்தின் விநய பிடகத்தில் ‘சுள்ள வக்கத்தில்’ உள்ள சுவாரசியமான கதைகள் அதிகம். அதில் ஒரு கதைதான் இது: வெகு காலத்திற்கு முன்பு, குற்றால