கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2020

80 கதைகள் கிடைத்துள்ளன.

செந்தூரனின் செவ்வாய்ப் பயணம்

 

 முகவுரை “செவ்வாயுக்கு ஒரு பயணம்” என்ற நூலை எழுதிய மைக்கேல் கொலின்ஸ் என்பவர் வான்வெளியில் பயணித்தவர் , நாசா (NASA) ஒரு செவ்வாய் கிரகத்துக்கு ஒரு மனிதரை பயணிக்க வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நூலில் வாதிடுகிறார், அக்கிரகத்தில் நிரந்தர காலனியை நிறுவுவதற்கான நீண்ட தூர நோக்குடன், மற்றும் உடல், தொழில்நுட்ப மற்றும் உளவியல் கோரிக்கைகளை நூலில் விவரிக்கிறார் . அந்த நூலை ஆர்வத்தோடு வாங்கி வாசிக்க ஆரம்பித்த செந்தூரன் அறிவியலில் பட்டம் பெற்றவன் வின்வெளி


அத்தி வரதா! வரம் தா!

 

 அப்போ வருடம் 2019ன்னு நினைக்கின்றேன், இப்போ இருக்கிறது போல ஊரு அமைதியாக இல்லே, பட்டித் தொட்டியெல்லாம் இதே பேச்சு, பட்டித்தொட்டினா? ஊரெல்லாம் இதே பேச்சுதான். அப்போ நான் எங்கே இருந்தேன்? நீ சாமிகிட்டே இருந்து இருப்பாய். என தன் பத்து வயது பெயரன் பரத்திடம் கூறிக்கொண்டு இருந்தார் எழுபது வயது பாட்டி அஞ்சலையம்மாள். நீங்கள் போய் பார்த்திங்களா? என கேட்டான். நான் போயிருந்தேன், ஆனா பார்க்க முடியலை. ஏன் பாட்டி? என்றான் ஆர்வமாக. அந்த சமயத்தில் நானும்


இணையமில்லா இரண்டு நாள்

 

 அன்று சனிக்கிழமை விடிந்தும் விடியாததுமாக சதீஷ் ராமுவைப் போய் எழுப்பினான். ஏன்டா இவ்வளோ சீக்கிரம் எழுப்புறனு திட்டிக்கிட்டே ராமு எழுந்தான்.உனக்கு விசயம் தெரியாத? இன்னும் ரெண்டு நாளைக்கு இன்டெர்நெட் வேலை செய்யாதாம். அடக்கடவுளே என்னடா சொல்ற? ஏன்டா? ஏதோ கிரகங்கள் எல்லாம் ஒரே கோட்டுல பயணிக்கப் போகுதாம், இது பல நூற்றாண்டுக்கு ஒருமுறை நடக்குறதுதானாம். ஆனா இப்போ இருக்க டவர், நெட்வொர்க் கனெக்சன்னு நம்ப செஞ்சு வச்ச எல்லாம் அந்த கிரகங்களோட சக்தியால பாதிக்கப்படகூடிய வாய்ப்பு இருக்காம்.


வெற்றி

 

 அமீர் மஹால் கரவொலியல் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தர்க்கும் அவன் மனைவி காவ்யாவுக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதார கடவுளுக்கு நன்றி செலுத்தினர். அதைக் கண்ட அவன் நண்பன் தீபக், “மகிழ்ச்சியா இருக்க வேண்டிய நேரத்தில் உங்களுக்கு ஏன் இந்தக் கண்ணீர்?” என்றான். “இந்த வெற்றி சாதரணமானது இல்லை. என் மகன் வினோத்தின் உணர்வுகளும் திறமைகளும் மிதிக்கப்பட்டப்ப அவன் திறமையை வெளியில் கொண்டுவர அவனும் அவன் நண்பர்களும் எடுத்த முயற்சியின் வெற்றி.” என்றான் சுரேந்தர் “ஒண்ணும்


அன்பு மகளே!

 

 அன்புள்ள மகளே ! எனக்கு கம்யூட்டர் பற்றி ஒன்றும் தெரியாது.. அதனால் உனக்கு இன்லெண்ட் கடிதத்திலேயே இந்த கடிதம் எழுதுகிறேன். நான் வேலை செய்துகொண்டிருக்கும் சமையல் காண்ட்ராகடர் வீட்டில் உள்ள அவர் பேரன் உங்க மகளுக்கு இ.மெயில் கடிதம் எழுதுங்க, உடனே போயிடும் அப்படீன்னு சொன்னான். எனக்கு அதை பற்றி எல்லாம் தெரியாது. நீ சிரமம் பாராமல் இந்த கடிதத்தை படிப்பாய் என்று நம்புகிறேன். உனக்கு ஞாபகம் இருக்கிறதா உன் அப்பாவை பற்றி ? இருக்கும் என்றுதான்


எனக்கு என்ன தருவே?

 

 மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம். ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட மழை, வெள்ளம். இதனால் எல்லாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். மறுநாள் காலை, எப்படியோ ஒரு நனையாத தீப்பெட்டி மூஷிகாவுக்குக் கிடைத்தது, அதை இழுத்துக்கொண்டு தெருவில் நடந்து வந்தது. அந்தத் தெரிவில் ஒருவர் பட்டறை வைத்திருந்தார். அவருடைய அடுப்புமுழுவதும் மழையில் நனைந்து அணைந்துபோயிருந்தது. அதை மறுபடி பற்றவைப்பதற்குத் தீப்பெட்டியும் தீக்குச்சிகளும் தேவைப்பட்டது. இதைக் கவனித்த மூஷிகா அவரிடம் கேட்டது,


நந்துவின் தம்பி

 

 ரமணி, ஜகந்நாதன் எல்லோருக்கும் தம்பி தங்கைகள் உண்டு. நந்துவிற்கு வெகு நாட்கள் வரையில் தம்பி இல்லை. தம்பி வரப் போகிறதும் அவனுக்குத் தெரியாது. தம்பி வேண்டாம் என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான். ஒரு சமயம் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டிருந்தாள். நந்துவைக் கவனிக்கவே மாட்டாள். அக்காதான் நந்துவை விரட்டுவாள். ”இன்னும் குளிக்கலையா! இன்னுமா சாப்பிடலே! பின்னே எப்போ பள்ளிக்கூடம் போறது!” என்று சும்மா சும்மாக் கேட்பாள். ஒரு நாள் அம்மா, அந்தப் பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டு


இதைத்தான் இழப்பேன்..!

 

 ” அப்பா. .! இங்கே கொஞ்சம் வர்றீங்களா. ..? ” தன் அறையில் சோகத்தின் பிடியில் அமர்ந்திருந்த சௌமியா தந்தை சந்திரசேகரனை அழைத்தாள். ‘ எதற்காகத் தன்னை அழைக்கிறாள். ..? ஏதாவது கொட்டப்போகிறாளா. .? அழப்போகின்றாளா . .? கடவுளே. .! இதென்ன சோதனை. .? ! என் மகளைக் காலம் முழுக்க கண்ணீர் வடிக்க வச்சுட்டீயே ! என்னைத் சுமைத் தாங்கியாய் ஆக்கிட்டீயே. .? ! இவளுக்கு இவ்வளவு பெரிய துக்கம் கூடாது. அதுவும் இத்தனை


எனக்குக் கல்யாணமே வேணாம்… நான்…

 

 செல்வம் எண்ணூர் ‘பவுண்டரியில்’ ஒரு ‘மெக்கானிக்கா’க வேலை செய்து வந்தான். பல்லாவரத்தில் இருந்து காலை ஆறு மணிக்கெல்லாம் நாஷ்டா பண்ணி விட்டு,கையில் பகலுக்கு சாப்பாடும் எடுத்துக் கொண்டு போய் வந்தான்.செல்வம் வேலை முடித்து வீட்டுக்கு வந்து சேரும் போது மணி ஏழு அடித்து விடும். பிரவசத்திற்காக மணைவி ராஜாத்தியை அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ஹாலில் காத்துக் கொண்டு இருந்தான் செல்வம்.‘கடவுளே ராஜாத்திக்கு சுகப் பிரசவம் ஆக வேணுமே’ என்று தங்கள் குல தெய்வமான மைலம் முருகக்


தாதாக்கள்

 

 கோபாலன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் நினைத்ததற்கு நேர்மாறாக நடந்தது. தன்னைக் கண்டு, தன் வரவைக்கண்டு அச்சப்படும் வேதவல்லி, இன்று இத்தனை சாமர்த்தியமாய் காரியம் நிறைவேற்றி விட்டாளே என்று நினைத்தபோது அவன் கோபம் இரு மடங்காய் பெருகியது. கோபாலன் ஒரு ஐடி இஞ்சினியர். தனக்கு என்ன நேருமோ, தன்னைப் போலீஸார் கைது செய்வார்களோ, யாரைப் பிடித்து எப்படி இந்தப் பிரச்னையில் இருந்து வெளியே வருவது என்று யோசனையாய் எஸ்ஐக்கு எதிர்புறம் போடப்பட்டிருந்த நீள பெஞ்சில் உட்கார்ந்து லாக்-அப்