கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2019

99 கதைகள் கிடைத்துள்ளன.

குறைகளையே பெரிதுப்படுத்தினால்…

 

 ”எனக்கு ஒரு பிரச்சனை” என்று வந்து நின்ற இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு. “சொல்லுப்பா, என்ன ஆச்சு?” “என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. நான் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருக்கிறேனாம். குறையிருந்தால் அதை சுட்டிக் காட்டுவதில் என்ன தப்பு?” என்று கோபமாய் கேட்டான் இளைஞன். அவன் பிரச்சனையை அவனுக்கு உணர்த்த ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார் குரு. “ஒரு வீட்டுல காலை நேரம். அப்பா வேலைக்கு கிளம்பிக்கிட்டு இருந்தார். பையன் காலேஜுக்கு கிளம்பிக்கிட்டு இருந்தான்.ரெண்டு பேரும் டிபனை


வினாக்களைத் தேடும் விடைகள்

 

 இன்னா….புள்ள எம்மேல கோவமாடூ, ரெண்டு நாளைக்கு முன்னே நல்லாதானே பேசினு இருந்தே, இப்ப என்ன ஆச்சினு முஞ்ச து]க்கி வெச்சினு பேசாம ரொம்ப பிகு பன்றே…..ஏதாவது பேசு புள்ள… பொய்க் கோபத்துடன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள். இன்னா…. புள்ள இதோ பாரு நாம் பாட்டுக்கு கேட்டுனே இருக்கேன் ஒன்னும் சொல்லாம போனா எப்படி…டூ எதுவா இருந்தாலும் நேருக்கு நேரா பேசிட்டுப் போ நீ இப்பிடி பேசாம இருந்தா எனக்கு மனசு என்னமோ பன்னுதுமே. ஒருவர் கெஞ்ச,


அவிழும் நறுமுகை

 

 “ஏய்ய்யா பத்திரமா போயிட்டு வந்துருவல உன்ன தனியா விட மனசு கேக்க மாட்டேங்குது ய்யா நானும் வேனா உன் கூட வரவா” “ஆத்தோவ்! என்ன பேசிட்டு இருக்க அவன் போயிட்டு நல்லபடியா வந்துருவான் த்தா நீ பேயாம இரு ஏன் போட்டு விசும்பிட்டு கிடக்கவ” “போ டா பொசகெட்டவனே… உனக்கென்ன தெரியும் என் ஈர குலையலாம் நடுங்கிட்டு கெடக்கு” வீரணனுக்கும் பொன்னிக்கும் நிகழ்ந்த அந்த உரையாடலை கூட கண்டு கொள்ளாமல் சுவற்றில் தொங்கி கொண்டிருந்த தன் தந்தையை


எது காதல்?

 

 ஏய்…. வாடி வாடி க்யூட் பொண்டாட்டி நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி அடி….வாடி வாடி வாடி வாடி ஹாட் பொண்டாட்டி எனும் சினிமா பாடல் ஒடிக் கொண்டிருந்தது அந்த பாடலை வாயசைத்தபடியே கார்ரை ஒட்டி வந்தான் மகேஷ் கொஞ்சம் இந்த பாட்டோட வாலியூமா கம்மி பண்ணு இல்ல ஆஃப் பண்ணு என்ன ரொம்ப எரிச்சலாக்கற மகேஷ் உஷ்ப்பா….!! இந்த பாட்டு என்ன எவ்வளவு சூப்பரா பொண்டாட்டிய பத்தி பாடியிருக்கான் அதை போய் நிறுத்த


சூரியன், காற்று, மழை

 

 இந்த உலகத்தில் நடைபெறும் காலச்சூழ்நிலைக்கு நானேதான் சூத்திரதாரி ! பெருமையுடன் நினைத்துக்கொண்டான் சூரியன். இவன் இப்படி நினைத்துக்கொண்டிருக்க, நானில்லாவிட்டால் இந்த உயிரனங்கள் வாழ்வே முடியாது என்ற நினைப்பில் மழை. இவர்கள் இருவரின் பெருமைகளை பார்த்து முகம் சுழித்து நான் மட்டும் இல்லையென்றால், இவர்கள் இருவர் ஏது? பெருமையுடன் தன்னை பார்த்துக்கொண்டது காற்று. சூரியன் அன்று மழையை யதேச்சையாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை, எங்கு வேகமாக சென்று கொண்டிருக்கிறாய்? மழை அசுவாரசியமாய் சூரியனை பார்த்து, போகும்போது அபசகுனமாய் எங்கே


கண் திறந்தது

 

 பெரியசாமியின் வீட்டில் அமைதி நிலவியது. வீட்டுக்கு முன்னால் இருந்த புளிய மரத்தடியில் எப்போதுமே பாறைகள் குவிந்து கிடக்கும். ஏன், இன்னும்தான் ஏதோ இரண்டொரு பாறைகள் கிடக்கின்றன. அவற்றின்மேல் புளியமரத்துப் பழுத்த இலையும், புளியும் ஓடும் உதிர்ந்து கிடக்கின்றன. கல்லைச் செதுக்கும் மங்கள ஒலி மறைந்து விட்டது. கல்லை உளி துளைக்கும் பொழுது பறக்கும் நெருப்புப் பொறிகள் அணைந்து விட்டன. ஆட்கள் பாறைகளைச் சுமக்க முடியாமல் சுமந்து பாடிக்கொண்டே போவார்களே, அந்த ஒலி எங்கேயோ கேட்கிறது. பெரியசாமியின் வீட்டுக்கு


முதல் கடிதம்

 

 1 நாகஸ்வரக்காரனும் ஓய்ந்து போன மாதிரியிருந்தது. அவன் ஆடி வழிந்து கொண்டு மத்தியமாவதி ராகம் வாசித்து வந்த மாதிரியிருந்தது! ஆயிற்று, தம்பதிகள் பாலிகையைக் குளத்தில் விட்டதும் அவனும் மங்களம் பாடிவிட்டுத் தாம்பூலமும் சம்மானமும் பெற்றுக்கொண்டு போவதற்குத் தயாராக இருந்தான். கல்யாண வீட்டில் எல்லோரும் ஓய்ந்து போயிருந்தார்கள். ”எங்களால் முடியாது அம்மா. சின்னப் பெண்களாக நாலுபேர் கூடப் போயிட்டு வாருங்கள்” என்று கூறிவிட்டுப் பெரியவர்கள் கல்யாணத்தில் பட்ட சிரமத்துக்குப் பரிகாரம் தேட முயன்று கொண்டிருந்தார்கள். ஜயலஷ்மிக்கும் சீனிவாசனுக்கும் –


அவள்..! அவள்..! அவள்..!

 

 அறிவழகன் என்னை நோக்கி நேராக வந்தான். இவன் என் நண்பன். பக்கத்து ஊர். ஆறு மாதங்களுக்கு முன் இப்படித்தான் வந்தான். முகம் ரொம்ப வாட்டமாக இருந்தது. ” என்னடா. .? ” என்றேன். ” எ. ..என் ம. .. மனைவி. .. எ. ..மனைவி. ..” சொல்லி அடுத்து சொல்ல முடியாமல் விசும்பினான். ” என்னாச்சி. ..? ” எனக்குள் என்னையும் மீறி பதற்றம் தொற்றியது. ” ஓ. … ஓடிட்டா. ..” அழுதான். எனக்கு


தீர்ப்பு உங்கள் கையில்…

 

 அத்தியாயம்-27 | அத்தியாயம்-28 | அத்தியாயம்-29 ரமேஷ் தனக்கும் காயத்திரிக்கும் ‘கான்டீனில்’ இருந்து சாப்பாடு ஆர்டர் பண்ணினான்.அந்த சாப்பாடு வந்ததும் ரெண்டு பேரும் ஏதோ முன் பசிக்கு கொஞ்சமாக சாப்பீட்டார்கள்.ரெண்டு பேருக் கும் சாப்பிடவே பிடிக்கவில்லை.லதா மெல்ல கண்ணை திறந்ததும் அங்கு இருந்த ‘நர்ஸ்’ லதாவுக்கு கொஞ்சம் ‘ஆரஞ்ச் ஜூஸை’ கொடுத்தாள்.லதா அந்த ‘ஜூசை’ மெல்ல குடித்தாள். ரமேஷ் ஆனந்த்,சந்தோஷ் ரெண்டு பேருக்கும் போன் பண்ணி லதாவின் உடம்பைப் பத்தி சொன்னான்.ஒரு மணி நேரத்திற்குள் ஆனந்த்,வசந்தி,சந்தோஷ்,ரமா தங்கள்


காதம்பரி

 

 சரயு நதி ஏராளமான தண்ணீருடன் சுழித்துக்கொண்டு ஓடியது. சரயு கங்கை ஆற்றின் ஒரு கிளை நதி. இந்தியாவின் உத்தரகாண்டம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஊடாகப் பாயும் ஒரு பிரம்மாண்ட நதி, சரயு நதி. இந்த பிரம்மாண்ட நதியைப் பற்றி பண்டைய வேதம் மற்றும் ராமாயணம் போன்ற இதிகாசங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த நதி ககாரா மற்றும் சாரதா ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உருவாகி பிரவாகமெடுக்கிறது. சாரதா நதி இந்திய நேப்பாள எல்லையை உருவாக்குகிறது. தற்போதைய