கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2020

80 கதைகள் கிடைத்துள்ளன.

நிலா சோறு…

 

 அதுஒரு அடுக்கு மாடி குடியிருப்பு.. அங்கே வசிக்கும் பொரும்பாலானோர் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள். இங்கே தான் நம்ம நாயகன் ஸ்ரவன் இருக்கிறான். அவனின் அம்மா அப்பா இருவரும் வேலைக்கு போய்விடுவார்கள்.. பள்ளி முடிந்துவந்தால்.. வீட்டின் வெறுமையே அவனை வரவேற்கும்.. மூன்றாம் வகுப்பு படிக்கிறான். காலை அவசரமாக எழுப்பி அவனை குளியலறையில் தள்ளிவிடுவார்கள் பெற்றவர்கள்.. அவனும் குளிக்கிறேன் என்ற பெயரில் இரண்டு வாளி தண்ணீரை மேலே தெளித்து கொண்டு வந்துவிடுவான்.. பிறகு.. யூனிப்பார் மாட்டிகொண்டு.. டைனிங் டேபிலில் இருக்கும்


யாருக்கு இண்டெர்வியூ?

 

 சமையற்கட்டில் தேநீர் ஆற்றிக்கொண்டிருந்தான் பிரகாஷ். குடித்துவிட்டு நாளை இன்டெர்வியுவிற்கு நன்றாக தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆற்றிய தேநீரை ஒரு குவளையில் எடுத்துக்கொண்டு தன் அறை நோக்கிச்சென்று கொண்டிருந்தான், எதிர்பாராத விதமாக எதிரில் நண்பன் சினேகன் வரவைப்பார்த்து “வாடா இப்பதான் வறியா ?” “ஆமா… “சற்று நிதானித்துத் தொடர்ந்தான், “சொல்லவே இல்ல …” என்றான் சினேகன். “என்னடா..” “நாளைக்கு இன்டெர்வியூவாம்…” “யாரு சொன்னா…”, கேட்டான் பிரகாஷ். “அம்மாதான்… நேற்று வீட்டிற்கு வந்திருந்தாங்க… அப்ப… சொன்னாங்க…” “முதல்ல


காலம் மாறவில்லை! – ஒரு பக்க கதை

 

 சதாசிவம் தன் பேத்தியின் எதிர்காலத்தைப் பற்றி பேச மகளிடம் எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார். இருபதை நெருங்கிக் கொண்டிருக்கும் பேத்தி தீபிகா தன்னோடு மியூசிக் கிளாஸ் படிக்கும் பரத்தைக் காதலிக்கிறாள்.அது சதாசிவத்தின் மகள் காயத்ரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.அதனால் மியூசிக் கிளாஸீக்கும் தீபிகாவை தற்போது அனுப்புவதில்லை. அதனால்தான் தாத்தாவிடம் சொல்லி தங்கள் காதலை அம்மாவிற்கு புரிய வைக்க தூது விடுகிறாள் தீபிகா! காயத்ரி ஆபிஸிலிருந்து வந்தவுடன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் சதாசிவம் “காயத்ரி! தீபிகா ஒரு பையனை


வேம்பு

 

 “எங்க அப்பாவுக்கு ஒரு பையன் வேணும்னு ஆசையா இருந்துச்சா…. வேணி அம்மு துர்கான்னு வரிசையா பொட்டையா போச்சா அப்பரம் நான் வேர பொண்ணா போய்ட்டனா… ரொம்ப கசந்துட்டனா……அதா வேம்புன்னு பேர் வெச்சுட்டாங்க.. அப்படி வெச்சா அடுத்து பையனா பொறக்கும்னு எவனோ சொன்னானா.. அதே மாதிரி என் தம்பி பொறந்தான்.. அதனால எங்கப்பாக்கு என்ன புடிக்காமயே போயிருச்சு.. நீயே சொல்லு……..அது ஏந்தப்பா…?” “ஏந்தப்ப்பா” எனும் போது அவள் கண்கள் சொருகும். நறுக்கிய தேன்மிட்டாய் வாசம் அப்போது எழும்பும். கனவுக்குள்


நம்ம ஊர், நம்ம நாடு

 

 பரசுராமருக்கு, வெளி நாட்டு வாழ்க்கை மீது மோகம் அதிகம்.அதுவும் இப்பொழுதெல்லாம் நம்மூரில் இருப்பதற்கே பிடிப்பதில்லை. எங்கு பார்த்தாலும், அழுக்கு, மக்கள் கூட்டம், வாகன நெரிசல், இது போக நட்பு, உறவு அப்படீன்னு யாராவது ஒருத்தர் வீட்டுக்கு வந்து தங்குவது.அதுவும் உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னால் அடிக்கடி இந்த எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டது. பேசாமல் வெளி நாடு போய் செட்டிலாயிடணும், இப்படி அடிக்கடி பொண்டாட்டி மங்களத்திடமும், அருகில் இருப்பவர்களிடமும் புலம்புவார். மேலும் இதற்கு ஒரு காரணம்


தாயம்

 

 உமா: இன்று பிற்பகல் மயிலாப்பூர் போயிருந்தேன். உள்ளே நுழைஞ்சதும் நுழையாததுமா அம்மா, ‘மாப்பிள்ளை இப் பத்தான் போனார். அவர் இந்தப் பக்கம் எட்டிப் பார்த்தே வருஷம் மூனுக்குமேல் ஆறது. என்ன விசேஷம்: ஒரு கேலரி கிளறி, பஜ்ஜி போட்டுத் தரலாம்ன்னு பார்த்தால் இன்னிக்கு ரவையும் கடலைமாவும் கடையிலே இல்லே. தெரிஞ்சுண்டே மனுஷன் வந்தாரோன்னு எனக்கு அவர் மேலே ஆத்திரம் வந்தது. கடையிலே வாங்கினால் கடலைமாவா அது வெறும் பட்டாணி மாவு. தோச்சுப் போட்டால் எண்ணெய் பொங்கி வழியும்.


வண்ணத்துப் பூச்சி!

 

 வண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். ரோபோட்களால் நிர்வகிக்கப்படும் உலகின் சிறப்பு பிரஜை அவள். கி.பி. 2108ல் மனிதர்கள் என்ற பெயரில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே சிறப்புப் பிரஜைகளாக சிறப்புச் சலுகைகளோடு வாழ்ந்து வந்தார்கள். 2050ஆம் ஆண்டு வாக்கில் உயிர்கொல்லி ஆயுதங்களால் நாடுகள் தங்களுக்குள் போரிட்டு உலகை பாலைவனமாக்கியிருந்தனர். மனிதர்கள் வேதியியல் ரசாயன ஆயுதங்களை ஒருவர் மீது ஒருவராக பிரயோகித்து மடிந்ததால் நீமா என்ற கணினி உலகை காக்க தன்னை உலகதிபராக அறிவித்துக் கொண்டது. ஐந்தேகால் கோடி ரோபோட் வீரர்கள்


நேர்மை..!

 

 என் பேரு குப்பணங்க. ஒரு ரிக்ஸா தொழிலாளி. இந்த தொயில்ல எல்லார்கிட்டயும் இருக்கும் குடி , குட்டி , தம்மு…. என்கிற எல்லா கெட்ட பயக்கங்களும் என்கிட்டேயும் இருக்குங்க . ஆனா நான் ஒரு நேர்மையானவங்க. என்ன ஆச்சரியப்படுறீங்களா…? சத்தியமா சொல்றேன் நான் நேர்மையானவங்க. நேத்திற்குக் காலையிலிருந்தே சரியா சவாரி அமையலைங்க. ஒன்னு ரெண்டு கிடைச்சுது. சரியான சாவு கிராக்கிங்க. கிடைச்ச துட்டுகளை ஊட்டுக்குக் குடுத்து அனுப்பிச்சிட்டேன். மத்தியானம் நல்ல பசி கியிஞ்சி போன என் மேல்


சீ.. இந்த வயசிலே…இந்த ஆசையா…

 

 சுந்தரம் தம்பதிகள் தங்கள் பெண் ரமாவை அமொ¢க்காவில் ஓரு பொ¢ய I.T.கம்பனியில் நல்ல உத்தியோகத்தில் வேலை செய்து வரும் கண்ணன் என்னும் பையனுக்கு நிச்சியம் பண்ணினார்கள். தங்கள் சேமிப்பை எல்லம் போட்டு ரொம்ப தடபுடலாக ‘எத்திராஜ் கல்யாண மண்டபத்தில்’ ரமா கண்ணன் கல்யாணத்தை செய்து முடித்தார்கள். சுந்தரம் ‘கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில்’ ஒரு பெரிய ப்லாஸ்டிக் சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து பிஸினஸை நல்ல லாபத்தில் நடத்தி வந்தார். தன் தொழிற்சாலைக்கு பக்கத் திலேயே ரெண்டு ‘கோடவுன்’


பேய் பேய்தான்

 

 கல்பனாவுக்கு வயது இருபத்தி நான்கு. பி.ஈ முடித்துவிட்டு சென்னையில் ஒரு பிரபல ஐடி கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தாள். கழுவிச் சீவிய பப்பாளி நிறத்தில் தளதளவென்று இருந்தாள். சொந்த ஊர் மதுரை. பெண்களுக்கான ஹாஸ்டல் டி.நகர் மார்க்கபந்து மேன்ஷனில் அவளுடைய தோழி நீரஜாவுடன் கல்பனா தங்கியிருக்கிறாள். நீரஜா மத்திய அரசின் ஆர்க்கியாலாஜி டிபார்மென்டில் வேலை செய்கிறாள். வாழைக்காய் கெச்சல் போல இருந்தாள். சொந்தஊர் காரைக்குடி. இருவருக்கும் கடந்த மூன்று வருடங்களாக நட்புடன் கூடிய நல்ல புரிதல்.