குருஷேத்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 20, 2023
பார்வையிட்டோர்: 3,588 
 
 

அங்கம் 4 | அங்கம் 5

பார்த்தீபனோடு ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குவதற்காக மனம் நிறைந்த எதிர்காலக் கனவுகளோடு, பவானி அவர்களையெல்லாம் விட்டுப் பிரிந்து கொழும்புக்குப் போனபின் சாரதா அப்பிரிவின் துயரத்தினால் மிகவும் வாடிப் போயிருந்தாள். பவானியை விட எட்டு வயது இளையவன் அவள். அக்கா இருக்கும் வரை ஒரு குறையும் தெரியவில்லை அவளையும் சுபாவையும் சாப்பிட வைத்துப் பால் குடிக்க வைப்பதற்காக இரவில் அக்கா எவ்வளவு கதைகளெல்லாம் சொல்லியிருப்பாள். இனி அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்தபின் அவர்களின் உடல்சார்ந்த நலன்கள் பற்றி, அவன் ஏன் கவலைப்படப் போகிறாள்?

அவளுக்கென்று குழந்தைகள் பிறக்கும் குடும்பம் வேறு களத்திலே விரியும். அந்தக் குறுகிய வட்டத்தினுள்ளே அவள் சங்கமமாகிப் போவாள். பார்த்திபன் குணவிசேஷங்கள் கொண்ட ஒரு அன்பு நிறைவான நல்ல மனிதனாதலால் அக்காவைப் பொறுத்தவரை எந்த நெருடல்களுமில்லாத சிறந்த வாழ்க்கை யோகம் அவளுக்கு. சுபாவக்காவுக்கும் இதே வழியில் ஒரு நல்ல புருஷன் அமையவேண்டுமென்று, சாரதா விரும்பினான். அவளுடைய கனவுகள் அத்தகையது. வருங்காலத்தில் கணவனுடன் கைகோர்த்து ஜோடி சேர்ந்து உலாவுவதும் பூட்டிய அறைக்குள் கிடந்து சல்லாபித்து மகிழ்வதுமே வாழ்க்கையென்று நம்பிக் கொண்டிருக்கிற மகா பேதை அவள். உணர்வுபூர்வமாக அறிவு வெளிச்சம் கொண்டு வாழ்க்கை பற்றிச் சிந்திக்கத் தெரியதவள். ஓன்பதாம் வகுப்புடனேயே அவளின் கல்லூரி வாழ்வும் முடிந்து போனது. எல்லையற்ற கனவு மிதப்பில் அந்த மேலோட்டமான அழகு பரவசத்தில் வாழ்க்கையின் எதிர்மறையான நினைவுகள் அவளுக்கு வருவதேயில்லை.

அம்மாவுக்கு உதவி செய்கிற நேரங்கள் தவிர்ந்த மிகுதி நேரங்களில் அவளின் பொழுது அழகு பார்ப்பதிலேயே கழிந்தது. அழகை மட்டுமே

ஆராதிக்கின்ற அவளின் உள்ளம். அதை நல்லபடி உயிர் கொடுத்து வாழ்விக்க ஒரு தேவபுருஷன் வானத்திலிருந்து இறங்கி வருவானென்று அவள் நிறைய நம்பிக்கையோடு காத்திருக்கிறாள். சாரதாவிடம் அத்தகைய கனவுகள் இருக்கவி;ல்லை. எனினும் வாழ்க்கையின் நலன்களைப்பாடுகின்ற கவிதை ஊற்றான மனம் அவளுக்கு. அந்த மனத்துடனேயே அவளின் கல்லூரிப் பயணமும் முடிவுற்றது. அப்பாவின் தோள் சுமக்க முடியாத இரு சுமைகள் இப்போது அவருக்கு. அவளையும் சுபாவையும் கரைசேர்க்க வேண்டுமே என்ற கவலை அவருக்கு.

அது கரையென்று நம்பினாலும் நடுக்கடலிலே மூச்சுத்திணறிச் சாக வேண்டிய நிலைமையே பெண்களுக்குண்டான தலைவிதி என்று யாரோ சாரதாவின் நெஞ்சில் ஓங்கி அறைந்தார்கள். அது வேறொன்றுமில்லை. அவளுக்கு பரிச்சயப்பட்ட கொடூர வாழ்க்கையின் அவலங்களையே கேட்டுப் பழகிப் போன அவளின் உள்ளுரச்சிதையாத புனித ஆத்மாவின் குரல் தான் அது.

அவள் எண்ணியவாறே நடந்தது. சுபாவின் உயிர் புரையோடிச் செத்து விடுவதற்குப் பொய்யின் கறை குடித்த ஒரு திருமண உறவு. அவளுடைய கல்யாணம் ஒரு விபத்துப் போல் சடுதியில் நடந்தேறியது. மணமகன் பாபுவிற்கும் அவளுக்கும் சமவயது. அவன் நாலைந்து புடைவைக் கடைகளுக்கு முதலாளியாக இருக்கிற பெரும் புள்ளி. பணக்கார வர்க்கத்தின் மேல் போக்கான நடத்தைக் கோளாறுகள் கொண்டவன். சுபாவை அவன் பெண்ணாகவே மதிப்பதில்லை. தன் உடற்தேவைகளுக்கு மட்டுமே அவள் என்பது அவன் கணிப்பு. இரவில் மட்டுமே சுபாவின் உறவை நாடி வீட்டிற்கு வந்து போகின்றான். தனியாகக் குடித்தனம் வைத்தபோதும் அவனின் போக்கு சுபாவைப் பலி கொள்வதாகவே இருந்தது.

அந்நிலையில் அடுத்தடுத்து நான்கு பிள்ளைகள் வேறு. அதிலும் பொறுப்புள்ளவனாக அவன் நடந்து கொள்ளவில்லை. அவனால் புண்பட்டுப்போன இந்த வாழ்வின் ரணங்கள் காலப்போக்கில் மாறிவிடுமென்று சாரதா நம்பினாள். அதை மாற்றுவதற்குச் சுபாவினால் அப்பா அம்மாபட்ட காயம் போகத் தனக்கு ஒரு தேவபுருஷன் வருவானென்று அவள் அந்த நம்பிக்கையோடு காத்திருக்கிறாள். ஒருவேளை மாறாகத் தனது விதியின் ஒரு குரூரபாவக்கணக்காக அது முடிந்துவிட்டால் என்ன செய்வது என்று கவலை வேறு வந்தது. சீ! அப்படி ஒன்றும் நடக்காதென்று தன்னையே தேற்றிக் கொண்டாள்.

இந்தக்கற்பனைத் தேர் ஓட்டத்தின் நடுவே வாழ்க்கை நதி, ஏதோ விடுபட்டுப் போன காரணங்களுக்காகத் தேங்கிகிடப்பதாக உணர்வு தட்டிற்று. செந்தூரண்ணாவும் இன்னும் கல்யாண வேள்வி காணவில்லை. அவளின் கல்யாண வேள்வி முடியட்டுமென்றே அவனுடைய இந்தக் காத்திருப்பு யுகம். அவன் கண்ணுக்கு முன்னால் தணலில் எரிந்து போகின்ற சுபாவின்

வாழ்க்கை நிழல். உயிர்வற்றிப்போன வெறும் நடைப்பிணமாய் இப்போது அவள். எனினும் வேதசாரமான வாழ்க்கையை விட முடியாமல் அவள் காலில் பூட்டிய அடிமை விலங்கு. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நடைமுறைச் சித்தாந்தத்தின் துருப்பிடித்துப் புதையுண்டு போன அவளின் வாழ்க்கைச் சந்தோஷங்களுக்கு எதிர்மறையாக மாறியே தீருவேன் என்ற பிடிவாதத்தோடு துருவத்தில் நிலைகொண்டு பறக்கத்துடிக்கின்ற சாரதாவின் கால்கள். இந்தக் கால்கள் நிலத்திலல்ல வானத்திலேயே சிறகு முறைத்துப் பறந்தால் அப்பா அம்மா மனதில் இப்போதிருக்கிற வடுப்பட்ட காயங்கள் ஆறிவிடுமென்றல்லவா அவள் நம்பினாள். சுபாவுக்குப்பதிலாக இருட்டில் ஊனமுற்றுப் போகாமல் வாழ்க்கை வேள்வி கண்திறப்பதற்கான அந்த ஆயத்தநாள் விரைவில் வந்தது. அவள்அக்கரையில் காத்துக் கொண்டிருந்தாள். அன்பு நிறைவான ஒரு வாழ்க்கை வருமென்று நம்பினாள்.

ஒரு சமூகப் பிரகடனமாக உறவுகள் சூழ்ந்திருக்கப் பெரியதொரு சத்திய வேள்வி போல் சாரதாவினுடைய கல்யாணம் ஜாம் ஜாமென்று மிக விமரிசையாக நடந்தேறியது. புரோக்கர் மூலமாக வந்த கல்யாணம்தான் அது. வுந்தேறு குடிகளான ஒரு குடும்பத்திலிருந்து அவளைப் பெண்கேட்டு வந்தார்கள். மணமகன் நடேசன். கொழும்புக் கச்சேரியில் கிளார்க்காக இருக்கிறான். அவன் தகப்பன் கந்தசாமிக்குப் பூர்வீகம், வேலணை. தாய் காரைநகரென்றும் ,அவர்களுக்குப் எட்டுப் பிள்ளைகளென்றும் பேசிக்கொண்டார்கள். கந்தசாமி சுருட்டுத் தொழில் செய்பவர். அதுவும் ஒழுங்கில்லை. குடித்துவிட்டுத் தினமும் வீட்டிலே சண்டை போடுவார். வீட்டின் தலைமகன் நடேசன். அப்பெரிய குடும்பத்தைக் கட்டிக்காக்க்pன்ற பெரும் பொறுப்பை உறுதியான கடமை உணர்வோடு சுமப்பவன்.

வாழ்க்கையின் வறுமைச் சுவடுகளைப் போக்கவே அவனுடைய இந்தக்கல்யாணம் சாரதா வீட்டார் கொடுக்கின்ற சீதனத்துக்காக ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் நடந்தேறியது.

இதொன்;றும் அறியாத சாரதா தனக்கு வந்து வாய்த்தவன் சகல நற்குணங்களும் நிரம்பிய ஒரு யோக புருஷனே என்று கருதிச் சுபாவக்காவின் திருமண உறவினால் கறைபட்டுக் கருகிப்போன உயிர்த்துவம் இழந்து, வரண்டு கிடக்கும் பாலைவனமாகி விட்ட தங்களின் வாழ்க்கை அவனின் புனிதமான காலடிபட்டு உயி;ர்பெறுமென்று அவள் மிக ஆவலோடு காத்திருந்த வேளை. என்ன காரணத்திகாலோ நடேசன் திடீரென்று மாற்றாலாகித் தங்கள் குடும்பத்தில் ஒருவனாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த சமயம், அவர்களுக்குக் கல்யாணமான புதிது. விதி வசத்தால் அங்கு அவர்கள் வீட்டில் வந்து வாழ வேண்டிய சூழ்நிலை அவளுக்கு.

தாய், தகப்பன், சகோதர உறவுகளின் ஒரு நேர்கோடு உயர்சித்திரம் தான் நடேசனென்றாலும் சாரதாவைப் பொறுத்தவரை அவன் உறவு பற்றிய சங்கதிகள் நிழலாகத்திரிந்து போன வெறும் ஜடக்கூட்டிலேயே

சஞ்சரிப்பதாய் அவள் அவனோடு பழகிய சில நாட்களிலேயே ஒரு கானல் செய்தியாய் மனதை வந்து குழப்பிற்று. அதை ஜீரணிக்கவே அவளுக்கு வெகுநாட்கள் பிடித்தன. உயிரைப் பங்கமுற வைக்கும்,அன்பு மேலிடாத அல்லது அடியோடு அகன்று விட்ட அவனின் எதி;ர்மறையனான நடத்தைக் கோளாறுகள் குறித்துப் பின்வாங்கலான ஒரு சலிப்போடு தனக்குள்ளே வெந்து மாய்ந்தாள்.அவளைச் சரி பாதியாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போன மன ஊனம் அவனுடையது. எந்த நேரமும் அக்குடும்பத்தில் ஒருவனாகவே தன்னைக் கொள்ள நேர்ந்த அந்தச் சந்தர்ப்பங்கள் மிகவும் கொடூரமானவை. அவளின் உள்ளார்ந்த நெருக்கத்துடன் கூடிய உறவு,அவனுள் கிளர்ச்சியை ஏற்படுத்த முடியாமல் போன வெறும் கசப்புச் சங்கதியாகவே இருந்தது.

அன்பு வழியில் அவளை நெருங்கி வர முடியாமல் போன உண்மை இருப்புக்கு பாதகம் செய்ய நேர்ந்த. அவனது இந்த மாறுபட்ட நடத்தை கோளாறுகள் நடுவே சிக்கி அவள் துரும்பாக வேறு இளைத்துவிட்டிந்தாள்.ஒவ்வொரு கணமும் அவளை வஞ்சம் தீர்த்துப் பழிவாங்கவே அவனுடைய திசைமாறிய மூர்க்க குணங்கள், காத்துக் கிடப்பதாய் அவளுக்கு உணர்வு தட்டும். சுபாவக்காவின் திருமண உறவினால் ஏற்பட்ட பாவக்கறை போக்க வந்த யோகபுருஷனென்று, அவனை நம்பி ஏமாந்து போன தனது விதியின் பாவக்கணக்கை எண்ணி அவள் மிகவும் கவலையுடன் தனக்குள் அழுது தீர்ப்பாள் அந்தக் கண்ணீர் நதி வற்றாத கண்ளுடன் அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும்.

எனினும் அக்குடும்பத்தில் ஒருத்தியாக, அவ் வீட்டில் அவளை யாருமே கண்டு கொள்வதில்லை. முன்பென்றால் அவளுடைய இருப்பு வேறு, உணர்வுகளால் பங்கமுற்றுப் போகாத மாசற்ற குணநலங்களைக் கொண்ட ஒரு நற்குடும்பத்தின் உயிர் மங்காத ஒளிவிளக்காய் இருந்தவள் அவள். வாழ்க்கையின் உயிர்க் கோட்பாடான சத்தியம் ஒன்றைத் தவிர வேறு எதையுமே அறியாத அவளுக்கு ஊனஇருட்டினிடையே உயிர் போன மாதிரி இப்படியொரு இடறல்.

உயிராலே, உணர்வுகளாலே பங்கமுற்று வேறொரு கதியில் இயங்கிக் கொண்டிந்த அவனுக்கு உடற்பசி எடுக்கும் போது மட்டுமே அவளின் உடல் தேவையாக இருந்தது. அதற்கு வளைந்து போக நேர்ந்த,இல்லற சாஸ்திர உண்மைகள் கவசம் போட்டுத் தன்னைக் காப்பாற்றி வருவதை, அவள் உணரத்தவறவில்லை. படுக்கையில் புரளும் போது அவனைக் கேட்டாள்; ஒரு சமயம். ‘குடும்ப உறவின் ஸ்திரத்தன்மை குறையாமல் இருக்க இது மட்டும் போதுமா?’

அவன் அப்போது களிப்பின் உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். உச்சக்கட்டத் தொடுகையில், அதிலும் கூட அவன் தனிமையாக நிற்பது போன்ற ஒரு பிரமை. வெறும் பிரமை தான். மாயச்சுழற்சியின்

அணுப்பிரமன் அவன். எப்படியாவது அவன் இருந்துவிட்டுப் போகட்டும்’.உடலளவு அனுபவத்தில் மூழ்கினாலே பரவசமென்று படுகிறது எனக்கு. அது போதும். இவள் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன.?’

அவன் இறுமாப்போடு காரியம் முடிந்த கையோடு வைராக்கியம் குலையாமல் அவளைப் புறத்தள்ளிவிட்டுப் போகக் கிளம்பிய போது அவளுக்கு எரிச்சல் மூண்டது. குரல் சினந்து கேட்டாள் அவள்

‘இது மட்டும் போதுமென்று நினைக்கிறியளே’

அவன் சீறினான்

‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. பிடிக்குதோ இல்லையே.என் இஷ்டம் இப்படித்தான் இருப்பன்’

அவள் கேட்டாள்

‘என்னைப் பிடிக்கேலை என்றால் எதுக்காக என்னைக் கல்யாணம் செய்தனீங்கள்?’

‘எல்லாம் என்ரை தலைவிதி. நான் இப்படித்தான் இருப்பன். இரவிலே கூடிக்களிக்கத்தான் நீ. எனக்கென்ன வந்தது இஷ்டமென்றால் இரு. இல்லாவிட்டால் போ’

இதைக்கூறிவிட்டு அறையை விட்டு அவன் துரிதமாக வெளியேறிய பின் அவள் தனக்கே உரித்தான துருவமறை பொருள் உண்மைகளுடன் உயிர் மரத்துப்போய் நிழலில் ஒடுங்கிக்கிடந்தாள். சுபாவக்காவுக்கு விழுந்த அடிகளை விட இது மோசமென்று நம்பினாள். அவனுக்கென்ன சொல்லி விட்டுப் பேய் விட்டான். அன்பின் சாரம் விட்டுப் போன அவனின் தொனி காற்றில் இன்னும் அலைகிறது. ஏன்இந்த வாழ்க்கை என்று கேள்வி எழுந்தது.தாலியும், கூறையும் பார்த்து, என்னைத் தேரில் ஏற்றிப் போக ஒரு தேவ புருஷன் வருவானென்று எவ்வளவு நம்பியிருந்தேன். மாறாக என்னைச் சிலுவையில் அறைய ஒரு யூதன் போல் அவனின் வெளிப்பாடுகள். குற்றம் இழைக்காமலே தண்டிக்கப்பட்டு வரும் நான். இவரது உடல் மட்டுமே சார்ந்த விபரீத ஆசைகளின் பலனாய், மேலும் நான் கழுவாய் சுமக்க நேரிடும். எனக்குக் குழந்தைகள் பிறக்கும். ஒரு பொறுப்பற்ற தகப்பனுக்குப் பிறக்க நேர்ந்த பாவம்,இவர்களுக்கு ‘இந்த உறவைத் துண்டித்துவிட்டு இதையெல்லாம் மீறி ஓடமுடியாமல் விட்டு விலகவும் முடியாமல், நான் ஏன் இவ்வாறு சிறைப்பட்டிருக்கிறேன்?’.

அவளின் தெய்வாம்சமான உயரிய குணநலன்களை உள்ளபடி கண்டுகொள்ளத்தவறிய அவர்களுடைய குணநலன்கள் திரிபுபட்ட மாறான நடத்தைக் கோளாறுகளை எதிர்கொண்டு சமாளிப்பதே அவளைப் புறம்தள்ளி இருளில் வேகவைத்தது. அந்த இருளின் ஊனத்தை சுமக்க நேர்ந்த

நிலையில்தான் முதன்முறையாக அவளின் கருவறை கண் திறந்து கொண்டது. அவள் விரும்பாமலே அவளுக்கு அது நேர்ந்திருக்கிறது. அவளோடு மனப்பூர்வமக ஒன்றுபடமுடியாமல் துருவத்தின் மறைபொருளாக நிற்கும் அவள் கணவனுடனான அந்த உறவின் வெளிப்பாடு. அவன் விந்துவைச் சுமக்க நேர்ந்த பாவத்தையே எண்ணி, மனம் கலங்கியவாறு அவள் உறைந்து போயிருந்த நேரத்தில்தான் அண்ணன் செந்தூரன் அவளின் சுகம் கண்டறிய ஒருமுறை வீட்டிற்கு வந்திருந்தான். இதற்கு முன் அவன் முகத்தைப் பார்த்து ஒரு யுகமாகின்றது.

செல்லரித்துப் போன ஒரு காலக் கணக்கு அது. கந்தசாமியின் படுமோசமான அடாவடித்தனத்தால் கல்யாணத்திற்குப் பிறகு அவளுக்குப் பிறந்த வீட்டுத் தொடர்பே அடியோடு விட்டுப் போனது. அப்பா அம்மா வருவது கூட அபூர்வமாகத் தான் நிகழும். அதுவும் அம்மாவைக் கண்டால் சுத்தமாக இவர்களுக்குப் பிடிக்காது. கண்டவுடன் வேண்டாத விருந்தாளியைக் கண்டமாதிரி கரி அடுக்களைக்குப் பின்னால் கோடியில் மறைந்து நின்று ஏதோ இரகசியம் குசுகுசுப்பதை அவள் தீராத மனவருத்தத்துடனேயே எதிர்கொள்ள நே;ந்திருக்கிறது. ஏன் இப்படி ஓட்டாமல் போனதென்று புரியவில்லை.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *