கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 2,167 
 

(1956ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வியாசர் விருந்து என்ற பெயரில் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியால் கல்கி இதழில் எழுதப்பட்டது. பின்னர் பாரதி பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டு அதன்பின் மகாபாரதம் என்று வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது!

முன்னுரை 

“வியாசர் விருந்து’ புஸ்தகத்தைத் தமிழ் மக்கள் எளிதில் வாங்கிப் படிப்பதற்காகக் குறைந்த விலையில் இந்தப் பதிப்பை ராமனாத கோயன்கா அவர்களுடைய ‘தினமணி’ காரியால் யத்தார் அச்சிட்டிருக்கிறார்கள். மிகவும் போற்றத்தக்க இந்த முயற்சிக்குக் காரணபூதர்கள் இருவர். திரு. கே. எஸ். ராமானுஜம், திரு. எஸ். வி. சுவாமி இவர்கள். இவர் களுடைய பக்தி சாமர்த்திய ஊக்கத்தினால் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. நூலில் எந்த பாகத்தையும் விட்டுவிடாமல் முழுதும் அடங்க அச்சிடப்பட்டு, ஒரு ரூபாய்க்கு இந்தப் புஸ்தகம் வெளியானது ஒரு அற்புதம் என்றே சொல்லலாம். இதைப் பின்பற்றி இன்னு ம் பயன்தரும் நூல்கள் நல்ல முறையில் குறைந்த விலையில் பிரசுரிக்கப்பட்டால் தமிழ் மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்துவார்கள். புஸ்தகங்கள் படிப்பதற்குத் தமிழ் மக்கள் பெரிதும் ஆசை கொண்டிருக்கிறார்கள். தற்சமயம் புஸ்தகங்களுக்குப் போட்டு வரும் விலை அதிகம். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆயினும் அந்த விலை கொடுத்து வாங்க மக்களுக்கு இயலாமல் ஆசை பூர்த்தியாகாமல் வருந்து கிறார்கள். இந்த மலிவுப் பதிப்பு வியாசர் விருந்து ஒரு வழி காட்டியாகலாம். 

அச்சுக் குற்றங்கள் இல்லாமல் சோதனை யேடுகளை எனக்காக நன்றாய்ப் பார்த்து உதவிய திரு.சோமு – அவர்களுக்கு என் நன்றியைச் செலுத்துகிறேன். 

கல்கியில் பிரசுரமான ‘வியாசர் விருந்தை’த் தொகுத்து முதன் முதல் மிக அழகாகவும் திருத்தமாகவும் அச்சிட்டது தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை, பக்தியே உருக்கொண்டாற்போல ஊக்கம் செலுத்தி சின்ன அண்ணாமலையும் பிறகு அவருடைய சகோதரர் சிதம்பரம் அவர்களும் தொடர்ச்சியாகப் பல பதிப்புகள் பிரசுரித்து ‘வியாசர் விருந்தை’ ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் வாசிக்கும்படி செய்திருக்கிறார்கள். புஸ்தகம் அச்சிட்டு வெளியிடும் தொழிலில் உள்ள கஷ்டங்களை அறிவேன்; இவர்களுடைய பணியைப் பெரிதும் பாராட்டுகிறேன். 

மகாபாரதத்தைப் பற்றி முதல் பதிப்புக்காக நான் எழுதிய முன்னுரையில் சொல்லியிருப்பதற்கு மேல் இப்போது புதிதாக ஒன்றும் நான் சொல்ல வேண்டியதில்லை. கானார் இமயமும் கங்கையும் காவிரியும் கடலும் நானா நகரமும் நாகமும் கூடிய தன்னில் மான நம்முடைய பாரத நாட்டில் தோன்றிய முனிவர் களும் ஞானிகளு ம் பக்த கவிஞர்களும் வாயிலில் காத்திருக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். அவர்களை வாயிலில் காக்கச் செய்துவிட்டு நாம், உத்தியோகஸ் தர்களையும் பணக்காரர்களையும் இன்னும் அற்பர்களையும் காண வேண்டி அவர்களுடைய வாயில்களில் காத்துக்கொண்டு நிற்கிறோம். இது என்ன மடமை! நான் புதிதாகச் சொல்ல வில்லை. ஒரு பெரிய ஆங்கில மேதாவி இப்படி ஆங்கில மக்களுக்கு ஒரு சமயம் சொன்னார். அதையே நானும் எடுத்து சொல்லுகிறேன். நமக்கென்று பாரதநாட்டில் மிகப் பெரிய முனி வர்களும் ஞானிகளும் தோன்றித் தங்களுடைய இதயங்களைச் கடைந்தெடுத்து அமுதத்தைத் தர நிற்கிறார்கள். அதை விட்டு விட்டுப் பயனற்ற பொருள்களை நாடி அலைந்து காலம் கழிக்கிறோம். தெய்வப் பிரசாதமாகிய முனிவர்களுடைய அறிவும் அருளும் பெற்றுக்கொண்டு பயனடைவோமாக. 

நம்முடைய இதயத்துக்குள் தினமும் குருக்ஷேத்திரம் நடை பெறுகிறது. நல்ல எண்ணங்கள் ஒருபுறம் நிற்க, பாப எண்ணங்கள் மற்றொரு பக்கம் நம்மை இழுத்துச் செல்கின்றன பாரத யுத்தமே இந்தப் போராட்டத்துக்கு உருவகமாக வைத்துக் கவி பாடினார் என்று நம்முடைய இதிகாசங்களை வெறும் பஞ்ச தந்திரக் கதைகளாகச் சிலர் வியாக்கியானம் செய்து சமா தானம் சொல்லி வருகிறார்கள். நம்முடைய புனித புராணங்களை யெல்லாம் வெறும் உருவகங்களாகவும் ஈசாப் கதைகளாகவும் செய்து விடுவது எனக்குச் சம்மதம் இல்லை. உருவகங்களைக் கொண்டு நாம் பிழைக்க முடியுமா? கண்ணனும் பார்த்தனும் சீதையும் அனுமனும் பரதனும் பூஜைக்கு உரிய உயிர்கொண்ட உண்மை மூர்த்திகள். வெறும் கதா பாத்திரங்களல்ல. பெரி யோர்களையும் பெற்றோர்களையும் வீர புருஷர்களையும் பார்த்து அவர்களைப் பின்பற்றுவது ஒரு விதம். கதைகளைப் படித்துப் பின்பற்றுவது மற்றொரு விதம். பரதனையும் சீதையையும் பீமனையும் பின்பற்றுவது உயிர்கொண்ட முன்னோர்களைப் பின் பற்றுவதுபோல்! கங்கையினின்றும் காவேரியினின்றும் தாகத் துக்குத் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த ஆறுகள் குடி தண்ணீர் சாதனங்கள் மட்டும் அல்ல. ஜீவ நதிகள், வணங்க வேண்டிய தெய்வங்கள். 

தருமம் நியாயம் இவற்றைக் காண்பது எளிது. கடைப் பிடித்தல்தான் அரிது. கண்டதைக் கடைப் பிடிப்பதற்கு வேண்டிய ஆற்றல் சிலருக்கு உண்டு; சிலருக்கு இல்லை. திருத ராஷ்டிரன் அந்த ஆற்றல் – இல்லாமல் துன்பத்தில் மூழ்கினான். திருதராஷ்டிரன் பட்ட துயரத்தைப் படித்து அறிவோடு ஆற்ற லும் நமக்குக் கொடுக்க வேண்டும் என்று நாம் கடவுளை இறைஞ்ச வேண்டும். 

தரும சங்கடங்களில் சிக்கி எந்தக் கடமையைச் செய்வது. எதை விடுவது என்று தீர்மானிக்க முடியாமல் பலர் பலவி தமாக நடந்து கொள்வார்கள். நாம் அவர்களைக் குறைகூறல் ஆகாது இதற்கு எடுத்துக் காட்டு; கும்பகர்ணன் செய்தது ஒரு விதம், விபீஷணன் செய்தது மற்றொரு விதம். தருமம் பெரிதென்று ஒருவன் நினைத்தான், அண்ணனுக்குச் செய்யவேண்டிய கடமையே பெரிதென்று ஒருவன் நினைத்தான். பீஷ்மரும் கும்ப கர்ணனும் தங்கள் பிழைக்குப் பிராயச்சித்தமாக உயிரைத் தந் தார்கள். அப்படிச் செய்வதற்குத் துணிந்தவர்களே தருமத்தைப் புறக்கணிக்கக் கூடும். இப்படி யெல்லாம் நாம் அறிவு பெறுவதற்காகவும், உள்ளத்தின் அழுக்கைப் போக்கிக் கொள் வதற்காகவும் புராணங்களும் நம்முடைய புனித நதிகளும்- உயிர் கொண்டு ஓடுகின்றன. அவற்றில் குளிப்போமாக! 

சென்னை 
18-12-56, 
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி. 

பொருளடக்கம் 

  • கணபதி ராயசம் 
  • தேவவிரதன் 
  • பீஷ்ம சபதம் 
  • அம்பையும் பீஷ்மரும் 
  • தேவயானியும் கசனும் 
  • தேவயானி மணந்தது 
  • யயாதி 
  • விதுரன் 
  • குந்திதேவி 
  • பாண்டுவின் முடிவு 
  • பீமன் 
  • கர்ணன்
  • துரோணர் 
  • அரக்கு மாளிகை 
  • பாண்டவர்கள் தப்பியது 
  • பகாசுரன் வதம் 
  • ரௌபதி சுயம்வரம் 
  • இந்திரப்பிரஸ்தம் 
  • சாரங்கக் குஞ்சுகள்
  • ஜராசந்தன் 
  • ஜராசந்தன் வதம்
  • முதல் தாம்பூலம் 
  • சகுனியின் யோசனை 
  • ஆட்டத்திற்கு அழைப்பு 
  • பந்தயம் 
  • துரௌபதியின் துயரம் 
  • திருதராஷ்டிரன் கவலை
  • கிருஷ்ணன் பிரதிக்ஞை
  • பாசுபதம்
  • துயரம் புதிதல்ல
  • அகஸ்தியர் 
  • ரிஷியசிருங்கர் 
  • பயனற்ற தவம்! – யவக்ரீதன் கதை 
  • யவக்ரீதன் மாண்ட கதை
  • படிப்புமட்டும் போதாது 
  • அஷ்டாவக்கிரன் 
  • பீமனும் ஹனுமானும் 
  • நான் கொக்கல்ல 
  • துஷ்டர்களுக்குத் திருப்தி ஏது? 
  • துரியோதனன் அவமானப்பட்டது 
  • கண்ணன் பசி 
  • நச்சுப் பொய்கை 
  • அடிமைத் தொழில் 
  • மானம் காத்தல் 
  • விராடனைக் காத்தது 
  • உத்தரன் 
  • பிரதிக்ஞை முடிந்தது 
  • விராடனுடைய பிரமை 
  • மந்திராலோசனை 
  • பார்த்தசாரதி 
  • மாமன் எதிர்க்கட்சி 
  • விருத்திரன். 
  • நஹுஷன் 
  • சஞ்சயன் தூது 
  • ஊசிமுனை நிலமுமில்லை 
  • கண்ணன் தூது 
  • பாசமும் தருமமும் 
  • பாண்டவ சேனாதிப் 
  • கௌரவ சேனாதிபதி
  • பலராமன்
  • ருக்மிணி
  • ஒத்துழையாமை
  • கீதையின் தோற்றம்
  • ஆசி பெறுதல்
  • முதல் நாள் யுத்தம்
  • இரண்டாம் நாள்
  • மூன்றாவது நாள் யுத்தம்
  • நான்காவது நாள்
  • ஐந்தாம் நாள்
  • ஆறாம் நாள் யுத்தம்
  • ஏழாவது நாள் யுத்தம்
  • எட்டாம் நாள் யுத்தம்
  • ஒன்பதாம் நாள் யுத்தம்
  • பீஷ்மர் வீழ்ந்தார்
  • பிதாமகரும் கர்ணனும்
  • துரோணர் தலைமை
  • உயிருடன் பிடிக்க
  • பன்னிரண்டாவது நாள்
  • சூரன் பகதத்தன்
  • அபிமன்யு
  • அபிமன்யு வதம்
  • புத்திர சோகம்
  • சிந்து ராஜன்
  • தான் பயிலாத கவச தாரணம்
  • தருமன் கவலை
  • யுதிஷ்டிரன் ஆசை
  • கர்ணனும் பீமனும்
  • குந்திக்குக் கொடுத்த வாக்கு
  • சௌமதத்தன் வதம்
  • ஜயத்ரதன் வதம்
  • அதருமம்
  • கர்ணனும் மாண்டான்
  • துரியோதனன் முடிவு
  • பாண்டவர்களின் வெட்கம்
  • அசுவத்தாமன்
  • புலம்பி என்ன பயன்
  • எவன் தேற்றப் போகிறான்
  • அண்ணனைக் கொன்றேன்
  • சோகமும் சாந்தியும்
  • பொறாமை
  • உதங்கர்
  • படிமாவு
  • ராஜ்யபாரம்
  • திருதராஷ்டிரன்
  • மூவர்களின் முடிவு
  • கண்ணன் மறைந்தான்
  • தருமபுத்திரன்

பாகம்-1 | பாகம்-2

பெயர் அகராதி 

அபிமன்பு: அருச்சுனனுக்கும் சுபத்திரைக்கும் மகன்: 

அருச்சுனன்: பஞ்சபாண்டவர்களில் மூன்றாவது சகோதான். வேறு பெயர்கள்: பார்த்தன், பல்குனன், சவ்வியசாச, கௌந்தேயன், தனஞ்செயன், மற்றும் பல. 

இந்திரன்: தேவ்ராஜன்; 

உத்தரன்: விராடனுடைய மகன் 

உத்திரை: விராடனுடைய மகள். அருச்சுனனுடைய குமாரன் அபிமன்யுவின் மனைவி. உத்தரையின் மகன் பரீக்ஷித்து. 

கணபதி: பரமசிவனுடைய மகன். வேறு பெயர்கள்: விநாயகன், கணநாதன், விக்னேசுவரர், மற்றும் பல. 

கர்ணன்: சூரியனுக்கும் குந்திக்கும் குமாரன். வேறு பெயர்கள் ராதேயன், சூரியகுமாரன், தேரோட்டி மகன். 

கிருஷ்ணன்: விஷ்ணு அவதாரம், துவாரகை மன்னன். மற்றப் பெயர்கள்: கண்ணன், வாசுதேவன்,கோவிந்தன், கோபாலன். கேசவன். பார்த்தசாரதி, ஜனார்த்தனன், ரிஷிகேசன், புண்டரீகா க்ஷன், மதுசூதனன், மாதவன், நாராயணன், அச்சுதன் மற்றும் பலவு சகாதேவன், நகுலன்: பஞ்ச பாண்டவர்களில் இளையவர்கள், மாத்ரீயின் இரு புத்திரர்கள். 

சசி தேவி: இந்திரன் மனைவி. 

சல்லியன் : நகுல சகாதேவர்களின் மாமன். 

சாத்யகி: கிருஷ்ணன் பங்காளி. வேறு பெயர் யுயுதாசனன்; பாண்டவர்கள் பட்சத்தில் யுத்தம் செய்தவன். 

சுசர்மன்: திரிகர்த்த தேசத்து ராஜா. கௌரவர்கள் கட்சியி லிருந்தவன். 

சுபத்திரை: கிருஷ்ணன் தங்கை. அருச்சுனனுடைய மனைவி இவள் மகன் அபிமன்யு. 

திருதராஷ்டிரன்: சந்தனு ராஜனின் மகன் விசித்திரவீரி யன்; விசித்திர வீரியனுடைய குமாரர் இருவர். திருதராஷ்டிரன், பாண்டு. திருதராஷ்டிரன் மக்கள் துரியோதனன் முதலியவர்கள்; பாண்டுவின் மக்கள் பஞ்சபாண்டவர்கள். 

திருஷ்டத்யும்னன்: பாஞ்சால ராஜன் துருபதனுடைய குமா ரன்: திரௌபதியின் சகோதரன். 

திரௌபதி: பாண்டவர்களுடைய மனைவி, மற்றப் பெயர் கள்: கிருஷ்ணை, பாஞ்சாலி, 

பலராமன்: கிருஷ்ணனுடைய சகோதரன் 

பரசுராமன்: விஷ்ணு அவதாரம். க்ஷத்திரிய அரசர்களை வீழ்த்தியவன். ஜமதக்கினி முனிவருடைய மகன். 

யுதிஷ்டிரன்: பாண்டவர்களில் மூத்தவன். மற்றப் பெயர்கள்: தருமன், தருமபுத்திரன், தருமராஜன், அஜாதசத்துரு. 

பீமன்: பஞ்சபாண்டவர்களில் யுதிஷ்டிரனுக்கு அடுத்த சகோ தரன்: வேறு பெயர் விருகோதரன் 

பீஷ்மர்: பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பாட்டனான விசித்திரவீரியனுக்குத் தமையனார்க சந்தனு மகாராஜா வின் குமாரர், 

பூரிசிரவஸ்: பாரதப் போரில் கௌரவர் கட்சியில் துணையாக நின்ற ஒருவன். சாத்யகியின் பங்காளி. 

விதுரன்: திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் தம்பி முறை. 

வியாசர்: பாரதம் இயற்றிய முனிவர்: பராசர மகரிஷிக்கும் சத்தியவதிக்கும் குமாரர். பிறகு சத்தியவதியை சந்தனு ராஜா மனைவியாகக் கொண்டான். ஆனபடியால் வியாசர் பாண்டவர்க ளுக்கும் கௌரவர்களுக்கும் பாட்டனார் முறை. வேறு பெயர், கிருஷ்ணத்வைபாயனர். 

ஜயத்ரதன்: சிந்து தேசத்து அரசன்: கௌரவர் பக்கம் யுத்தம் செய்தவன். 

கணபதி ராயசம் 

பராசர மகரிஷியின் புத்திரர் புகழ்பெற்ற வியாச பகவான்? வியாசர் வேதத்தைத் தொகுத்துக் கொடுத்தவர். இவரே மகா பாரதம் என்னும் புண்ணியக் கதையையும் உலகத்துக்குத் தந்த வர். 

பாரதத்தைத் தன் மனத்தில் யாத்தபின் இதை எவ்வாறு உலகத்துக்குத் தருவது என்று வியாசர் சிந்தித்தார். பிரம்மனைத் தியானித்தார். பிரம்மதேவன் பிரத்தியட்சமானதும் வியாசர் கை கூப்பித் தலைவணங்கி, 

“பகவானே! சிலாக்கியமான நூல் ஒன்று என்னாலே மனதில் செய்யப்பட்டிருக்கிறது. இதை எழுதுகிறவர்கள் யாரும் பூமியில் இல்லையே!” என்றார். 

பிரம்மதேவன் வியாசரை மிகப் புகழ்ந்து ரிஷியே! உம்மு டைய நூலை எழுதுவதற்காகக் கணபதியைத் தியானம் செய்யும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார். வியாச மகரிஷி விநாயக ரைத் தியானிக்க அவரும் எழுந்தருளினார். அவரை வியாசர் முறைப்படி பூஜை செய்து, 

“கணநாதரே! பாரதத்தை நான் சொல்லச் சொல்ல நீர் எழுத வேண்டும்” என்று பிரார்த்தித்தார். 

விக்நேசுவரர் “சரி அப்படியே செய்கிறேன். ஆனால் எழு தும்போது என்னுடைய எழுதுகோல் நிற்காது. நிறுத்தாமல் சொல்லிக்கொண்டே போக வேண்டும். அப்படியானால்தான் நான் உமக்காக எழுதமுடியும் என்றார். 

இந்தக் கடுமையான நிபந்தனையை வியாசர் ஒப்புக்கொண்டு, பொருளை அறிந்து கொண்டே நீர் எழுதிக்கொண்டு போக வேண்டும் என்று எதிர் நிபந்தனை ஒன்று கேட்டார். 

கணபதி நகைத்துவிட்டு இதற்குச் சம்மதித்தார். அதன் மேல் மகரிஷி பாரதம் பாட ஆரம்பித்தார். ஆங்காங்கு பொருள் விளங்காத முடிச்சுகளை அமைத்துச் சற்றுநேரம் விக்னேசுவரர் தயங்கி நின்ற காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு வியாசர் அநேக சுலோகங்களை மனத்தில் கவனம் செய்து முடித்துக் கொள்வார். இவ்வாறு பாரதம் வியாசரால் பாடப்பட்டுக் கண் நாயகரால் எழுதப்பட்டது. 

அந்தக் காலத்தில் அச்சு கிடையாது. கல்வி கற்றவர்களுடைய ஞாபக சக்தியே நூல்களுக்கு ஆலயமாக இருந்தது. வியாசர் தாம் செய்து எழுதுவித்த பாரதத்தை உடனே முதலில் தம்முடைய புத்திரரான சுகமுனிவருக்குச் சொல்லி வைத்தார். பிறகு தம் சிஷ்யர்கள் பலருக்கும் சொல்லி வைத்தார். இல்லா விடில் நூல் கெட்டுப்போய்விடலாம் அல்லவா? 

தேவர்களுக்குப் பாரதம் சொன்னவர் நாரதர் என்றும் கந்தர்வர்களுக்கும் ராக்ஷசர்களுக்கும் யக்ஷர்களுக்கும் சுகர் சொன்னார் என்றும் கதை. மனித லோகத்திற்காகப் பாரதத்தைச் சொன்னவர் வியாசருடைய முக்கிய சிஷ்யரும் தருமசீலரும் வித்துவானுமான வைசம்பாயனர் என்பது பிரசித்தம். பரீ க்ஷித்து மகாராஜாவின் மகன் ஜனமேஜய ராஜா நடத்திய ஒரு பெரிய யாகத்தில் அவனால் ஏவப்பட்டு வைசம்பாயனர் பாரதத் தை விஸ்தாரமாகச் சொன்னார். வைசம்பாயனர் சொன்ன இந்த பாரதத்தைப் பிறகு பௌரா ணிகரான சூதர் நைமிசாரணியத் தில் சௌனக ரிஷியின் தலைமையில் ரிஷிகளை யெல்லாம் சபை யாகக் கூட்டி அவர்களுக்குச் சொன்னார். 

“தர்மார்த்தங்களை உபதேசிப்பதற்காக வியாச பகவான் பாடிய பாரதக் கதையை நான் கேட்டிருக்கிறேன். அதை உங்க ளுக்குச் சொல்ல விரும்புகிறேன்’ என்று சூதர் சொன்னவுடன் தபோதனர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். 

“ஜனமேஜய ராஜாவின் யாகத்தில் வியாசர் உத்தரவின்படி வைசம்பாயனர் சொன்ன மகாபாரதக் கதையையும் உபகதை களையும் நான் கேட்டு, பிறகு பல தீர்த்தங்களுக்கு யாத்திரை போய், பாரத யுத்தம் நட ந்த போர்க்களத்தையும் பார்த்து விட்டு உங்களைத் தரிசிக்க இங்கே வந்தேன்” என்று ஆரம்பித்து மகா பாரதம் முழுவதையும் சொன்னார். 


சந்தனு மகாராஜாவுக்குப் பின் சித்திராங்கதனும் அவனுக்குப் பின் விசித்திரவீரியனும் ம் ஹஸ்தினாபுரத்தில் அரசாண் டார்கள். விசித்திர வீரியனுக்குத் திருதராஷ்டிரன், பாண்டு என்ற இரண்டு குமாரர்கள். மூத்தவன் பிறவிக் குருடனானபடி யால் பாண்டுவுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. ராஜ்ய பாலனம் செய்துவந்த பாண்டு தான் செய்த ஒரு தவற் றுக்காக மனைவிகளுடன் வனத்துக்குத் தவம் செய்யப்போய் அங் கேயே பல நாட்கள் வசித்து வந்தான். 

வனத்திலிருக்கும்போது குந்தியும் மாத்ரியும் பஞ்ச பாண்ட வர்களைப் பெற்றார்கள்.பாண்டு காட்டிலேயே இறந்துவிட்டான். ரிஷிகள் பஞ்சபாண்டவர்களைப் பால்ய பருவம் முடியும் வரையில் பார்த்துவந்து, யுதிஷ்டிரனுக்குப் பதினாறு வயது ஆனதும் எல்லா ரையும் ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய் கிழவர் பீஷ்மரிடம் ஒப்புவித்தார்கள். 

பாண்டவர்கள் வேத வேதாங்கங்களையும் க்ஷத்திரியர்களுக்கு வேண்டிய கலைகளையும் வெகு சீக்கிரத்தில் கற்றுக் கொண்டு எல்லாரும் பாராட்டும் வகையில் நட ந்து கொண் டார்கள். திருதராஷ்டிரன் மக்களான கௌரவர்களுக்கு இவர் களை கண்டு பொறாமை உண்டாயிற்று. அவர்களுக்குப் பல வகைத் தீங்குகளைச் செய்யத் தொடங்கினர். 

கடைசியாக குலத்துக்குத் தலைவரான பீஷ்மர் எல்லா ருக்கு ம் சமாதானம் சொல்லி, கௌரவர்களுக்கும் பாண்டவர் களுக்கும் ஒப்பந்தம் செய்து வைத்தார். அதன் பின் பாண்ட வர்கள் இந்திரப் பிரஸ்தத்திலும் கௌரவர் ஹஸ்தினாபுரத்திலு மாகத் தனித் தனியாக இராஜ்ய பரிபாலனம் செய்துவந்தார்கள். 

இப்படியிருந்துவந்தபோது அந்தக் காலத்து க்ஷத்திரிய வழக்கத்தின்படி கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு சூதாட்ட விழா நடந்தது. அதில் கௌரவர்களுக்காக ஆடின சகுனி, யுதிஷ்டிரரைத் தோல்வியடையச் செய்து அதன் பயனாகப் பதின் மூன்று வருஷம் பாண்டவர்கள் வனவாசம் செய்யும்படி நேர்ந்தது. அப்படியே அவர்கள் ராஜ்யத்தை விட்டு, திரெள பதியையும் அழைத்துக்கொண்டு வனம் சென்றார்கள். 

பன்னிரண்டு வருஷங்கள் அரணியத்திலும் பதின் மூன்றா வது வருஷம் மறைவாகவும், சூதாட்ட நிபந்தனைப்படி கழித்து விட்டுத் திரும்பி வந்தார்கள். அப்போதும் அவர்கள் சொத்தை அபகரித்துக்கொண்டிருந்த துரியோதனன் அதைத் திருப்பிக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை. அதன்பேரில் யுத்தம் நடந்தது. துரியோதனாதிகளைக் கொன்று சாம்ராஜ்யத்தை அடைந்தார்கள்.

இதற்குமேல் பாண்டவர்கள் 36 வருஷம் ராஜ்ய பரிபாலனம் செய்தார்கள். பிறகு, பேரன் பரீக்ஷித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்களும் திரௌபதியும் மரவுரி தரித்து வனம் சென்றார்கள். 

இதுவே பாரதக் கதையின் சுருக்கம். நம்முடைய நாட்டின் பழம்பெருங் காப்பியமாகிய இந்த அற்புத நூலில் பாண்டவர்கள் சரித்திரமல்லாமல் எத்தனையோ உபகதைகளும் இருக்கின்றன. எண்ணற்ற முத்துக்களும் ரத்தினங்களும் க்கும் மகா சமுத் திரத்தைப் போன்றது மகாபாரதம். இதுவும் ராமாயணமும் நம்முடைய நாட்டின் தருமத்துக்கும் பண்பாட்டுக்கும் வற்றாத ஊற்றுகள். அவற்றை மக்கள் படித்தும் கேட்டும் வரும் வரை யில் நம்முடைய நாட்டின் பணபாட்டுக்குச் சேதமில்லை. 

தேவ விரதன் 

“நீ யாராயிருந்தாலும் எனக்குப் பாரியையாகக் கடவாய்!”  

குமரி யுடல் தரித்து, மானிட லோகத்தில் நின்ற சுங்கா நதியின் அழகைக் கண்டு மோகித்த சந்தனு மகாராஜா இவ்வாறு சொன்னான். 

“என்னுடைய ராஜ்யமும் என க் கு ள்ள தனமும், என் உயிரும் எல்லாம் உன்னைச் சேர்ந்தவை. உன்னை யாசிக்கிறேன் என்று வற்புறுத்தினான். 

“பூபதியே, நான் உன் மகிஷியாவேன்! ஆனால் நீயாவது வேறு யாராவது என்னைப் பற்றி, நீ என்ன குலம் என்று எந்தச் சமயத்திலும் கேட்கக் கூடாது. நல்லதோ கெட்டதோ நான் எதைச் செய்தாலும் தடுக்கக்கூடாது. என்மேல் எந்தக் காரணத் தைக் கொண்டும் கோபிக்கக்கூடாது. பிரியமற்ற மொழி களையும் சொல்லக்கூடாது. அவ்வாறு நடந்தால் உடனே உன்னை விட்டுவிட்டுப் போய்விட வேண்டியவளாவேன். து உனக்குச் சம்மதமா?” என்று கேட்டாள் கங்கை. 

“அப்படியே!’ என்று காதலின் வேகத்தால் அரசன் சத்தியம் செய்து ஒப்புக் கொண்டான். 


கங்காதேவியினுடைய வினயமும், ஒழுக்கமும், உபசார மும், கூட இருக்கும்போதும் இல்லாதபோதும் ஒரேமாதிரியாகத் தன்னிடம் அவள் காட்டிய அன்பும், அரசனுடைய தயத்தைக் கவர்ந்தன. காலத்தின் ஓட்டம் அறியாமல் சந்தனு ராஜாவும் கங்கையும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி வாழ்ந்தார்கள். 

கங்காதேவி பல குழந்தைகளைப் பெற்றாள். ஆனால் சூரிய தேஜஸ் கொண்ட அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றையும். பிறந்ததும் கொண்டு போய்ப் பிரவாகத்தில் போட்டுவிட்டுச் சிரித்துக்கொண்டு கங்காதேவி அரசனிடம் திரும்பி வருவாள். 

இந்த அருவருப்பான நடவடிக்கையைப் பார்த்துச் சந்தனு வுக்கு வியப்பும் துக்கமும் மேலிட்டுப் பொங்கும். ஆயினும் தான் கொடுத்த வாக்குறுதியை எண்ணி ஒன்றும் சொல்லாமல் பொறுத் துக்கொண்டிருந்தான். இவள் யார், எங்கிருந்து வந்தவள்,பேய் பிசாசுகளைப்போல் நடந்துகொள்ளுகிறாளே என்று அடிக்கடி தனக்குள் எண்ணுவான். ஆனால் வாய் திறக்கவில்லை. 


ஏழு குழந்தைகளை இவ்வாறு கொன்றாள். எட்டாவது குழந்தை பிறந்தது. அதையும் அவள் கங்கையில் கொண்டு போய்ப் போடப்போனபோது சந்தனுவின் மனம் பொ று க்கூ வில்லை. 

“நில், நில்! ஏன் இந்தப் பாப கர்மத்தைச் செய்கிறாய்? பெற்ற பிள்ளைகளை ஏன் இவ்வாறு காரண மின்றிக் கொல்கிறாய்? மிகவும் இழிவான இந்தக் காரியம் உனக்குத் தகாது” என்று தடுத்தான். 

உடனே அவள், “மகாராஜாவே! பிரதிக்ஞையை மறந்து விட்டாய். புத்திரனிடம் விருப்பம் கொண்டவனே! இனி உனக்கு நான் வேண்டியதில்லை, போகிறேன். இந்த மகனைக் கொல்ல வில்லை. நான் யார் என்பதை இப்போது அறிந்துகொள். ரிஷி களும் முனிவர்களும் போற்றிவரும் கங்காநதியின் தேவதையாவேன். வசிஷ்டர் சாபத்தால் அஷ்டவசுக்கள் மானிட உலகத்தில் பிறக்க வேண்டியதாயிற்று. ஆதலால் அவர்களைப் பெற்றேன். மனித உலகத்தில் அவதரிக்க நேரிட்ட அவர்களுக்கு நான் தாயா ராக இரு க்கவேண்டும் என்று அவர்கள் வேண்டிக் கொண்டபடி நான் அவர்களை உன்னிடம் பெற்றேன். மானிட உலகத்தில் சிறப்பு வாய்ந்த உன்னைத் தகப்பனாக அவர்கள் பெற்றதும் நல் லதே. அஷ்ட வசுக்களை மக்களாகப் பெற்ற நீயும் உயர்ந்த லோ கங்களை அடைவாய். இந்தக் கடைசிக் குழந்தையை நான் கொஞ்ச காலம் வளர்த்து உன்னிடம் ஒப்புவிப்பேன். என்னால் கொடுக்கப் பட்ட தனமாக நீ இந்தப் புத்திரனைப் பெறுவாய்” என்று அரச னுக்குச் சொல்லிவிட்டு மறைந்தாள். அந்தக் குழந்தையே பீஷ் மர். பாண்டவ கௌரவ குலங்களுக்குப் பிதாமகர். 


ஒருநாள் அஷ்ட வசுக்கள் தம் மனைவிமார்களுடன் வசிஷ்டர் ஆசிரமமிருந்த மலைச்சாரலுக்கு வந்து, அங்கே குன்றுகளிலும் வனங்களிலு ம் சஞ்சரித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவன் வசிஷ்டருடைய பசு, நந்தினி, அங்கே மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதன் அழகையும் திவ்விய மங்களாகாரத்தையும் கண்டு அதிசயித்து, தன்னுட னிருந்த வசுக்களின் தேவிமார்களுக்குக் காட்டினான். அவர்கள் எல்லாரும் ஒருவருக்குமேல் ஒருவராக வசிஷ்டருடைய பசுவின் அழகைக் கண்டு வியந்து பேசிக்கொண்டிருக்க, அவர்களில் ஒருத்தி, இந்தப் பசு தனக்கு வேண்டும் என்று தன் புருஷனைக் கேட்டுக்கொண்டாள். 

“தேவர்களாகிய நமக்குப் பசுவின் பால் என்னத்திற்கு?” என்றான் வசு. “இது வசிஷ்ட முனிவருடையது. இந்தத் தபோ வனத்திற்கு அவர் உடையவர். இதன் பாலைக் குடித்த மனிதர்கள் பாக்கியம் பெறுவார்கள். தேவர்களாகிய நா ம் அதனா ல் அடைய வேண்டிய நன்மை ஒன்றுமில்லை. வசிஷ்ட ரிஷியின் கோபத்துக்கு ஆளாவோம்” என்று அந்த வசு, தன் மனைவியின் கோரிக்கையை மறுக்கப் பார்த்தான். 

“மனுஷ்ய லோகத்தில் எனக்கு ஒரு பிரியமான் தோழி இருக்கிறாள். அவளுக்காக நான் இதைக் கேட்கிறேன். வசிஷ்டர் வனத்துக்குத் திரும்பி வ பரு வதற்குள் பசுவைக் கொண்டு போ வோம். நீ எனக்காக இதைச் செய்தே தீரவேண்டும். எனக்கு தைவிட மேலான பிரியம் ஏது மில்லை’ என்று அவள் தன் புருஷனை வற்புறுத்தினாள். முடிவில் அவனும் இசைந்தான். எல் லா வசுக்களும் சேர்ந்து பசுவையும் கன்றையும் கொண்டுபோய் விட்டார்கள். 

வசிஷ்டர் ஆசிரமம் திரும்பி வந்து தம் நித்திய கருமங் களுக்கு இன்றியமையாத பசுவும் கன்றும் இல்லாததைக் கண்டு நடந்ததைத் தெரிந்துகொண்டார். அதன்மேல் கோபங்கொண்டு வசுக்களைச் சமித்தார். அவர்கள் மனித உலகத்தில் பிறக்கவேண் டும் என்று தபோதனர் எண்ணினார். எண்ணியதும் அந்தச் சாபம் வசுக்களை எட்டியது. 

உடனே அவர்கள் வசிஷ்டருடைய ஆசிரமத்துக்கு ஓடி வந்து ரிஷியைக் கெஞ்சினார்கள். 

சாபத்தை நிறுத்த முடியாது. பசுவைக் கொண்டுபோன வனான பிரபாஸன் நீண்ட காலம் பூவுலகில் புகழ் பெற்று வசிப் பான். மற்றவர்கள் பூமியில் பிறந்தவுடன் விடுதலை அடைந்து விடுவார்கள். நான் சொன்ன சொல்லைப் பொய்யாக்க முடியாது. இவ்வளவுதான் செய்ய முடியும்” என்று வசிஷ்டர் சொல்லிவிட்டார். அதன்பிறகு, கோபத்தால் ஓரளவு அழிந்து போன தவத்தில் மறுபடி வசிஷ்டர் மனம் செலுத்தினார். தவம் செய்த ரிஷிகள் தங்கள் சக்திகளைக் கொண்டு சாபம் கொடுக்க முடியும். ஆனால் அவ்வாறு தங்கள் சக்தியை உபயோகித்தால் தவம் நஷ்டமாகும். 

வசுக்கள் இவ்வளவாவது நல்ல கதி பெற்றோமே என்று திரும்பினார்கள். அதன்மேல் கங்கையிடம் சென்று “நீ தான் எங்களுக்குத் தாயாகவேண்டும். எங்களுக்காக நீ பூவுலகம் போய், ஒரு நல்ல புருஷனையும் அடைந்து எங்களுக்குச் சீக்கி ரத்தில் விடுதலை தரவேண்டும். பிறக்கப் பிறக்க எங்களை உடனே ஜலத்தில் போட்டுவிடு” என்று கேட்டுக் கொண்டார்கள். கங்கையும் அவ்வாறே ஒப்புக் கொண்டு மானிட உலகத்தில் அதற் காகச் சந்தனுவைப் புருஷனாக அடைந்தாள். 


கங்காதேவி எட்டாவது குழந்தையை எடுத்துக் கொண்டு சந்தனுவை விட்டு நீங்கியபின், பெண்களிடம் சுகம் பெறும் எண்ணத்தை நீக்கிக் கொண்டு அரசன் வைராக்கியமாக ராஜ்ய பரிபாலனம் செய்துவந்தான். 

ஒருநாள் கங்கா தீரத்தண்டை போனபோது தேவேந்திர னைப் போன்ற அழகும் உடல் கட்டும் பெற்ற ஒரு வாலிபன் அஸ் திரப் பிரயோகம் செய் து கங்காப் பிரவாகத்தைத் தடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டு அங்கேயே நின்றான். பிறகு தன் குழந் தைக்கு இவ்வாறு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த கங்கா தேவியே பிரத்தியட்சமானாள். குமாரனை அரசனிடம் ஒப்புவித்தாள். 

“அரசனே! என்னிடத்தில் நீ அடைந்த எட்டாவது புத்திர னும், இதுவரையில் என்னா ல் வளர்க்கப்பட்டவனுமான தேவ விரதன் இவன்; எல்லா அஸ்திரங்களும் படித்து விட்டான். வசிஷ்டரிடம் வேதமும் வேதாங்கங்களும் ஓதியிருக்கிறான். சுக் கிராச்சாரியர் அறிந்த சாஸ்திரங்கள் எல்லாம் இவன் கற்றிருக் கிறான். யுத்தத்தில் பரசுராமருக்குச் சமானமானவன். வில்லாளி யும் வீரனும் ராஜநீதிகளை அறிந்தவனுமான உன் மகனை அழைத் துப் போ! என்று அரசனுக்குச் சொல்லி மகனையும் ஆசீர்வதித் துத் தகப்பனிடம் ஒப்புவித்துவிட்டு, கங்கை மறைந்தாள். 

பீஷ்ம சபதம் 

தேவவிரதனுக்கு வயது வந்ததும் இவ்வாறு கங்காதேவி அவனைச் சந்தனுவிடம் ஒப்படைத்தாள். ராஜகுமாரனைப் பிரிய மாகப் பெற்றுக்கொண்டு சந்தனு ராஜா தன் நகரத்திற்குச் சென்றான். சில நாட்கள் கழித்து அவனுக்கு யுவராஜ பட்டாபி ஷேகமும் செய்வித்தான். 

நான்கு வருஷங்கள் சென்றன. ஒரு நாள் ராஜா யமுனை யாற்றங் கரைக்குப் போயிருந்தபோது அங்கே உயிரைக் கவரும் படியான திவ்விய வாசனை ஒன்று கமழ்ந்தது. இதற்குக் காரணம் என்னவென்று தேடித்திரிய, தேவ கன்னியைப் போன்ற அழகிய வடிவம் கொண்ட ஒரு பெண்ணைக் கண்டான். முனிவர் ஒருவ ரிடம் பெற்ற வரத்தின் பயனாக அவளிடமிருந்து இந்தத் திவ்விய வாசனை வீசி வனம் முழுவதும் நிரம்பிற்று. 


கங்கையை விட்டுப் பிரிந்தது முதல் அதுவரைக் காத்து வந்த வைராக்யம் இந்த வாசனை வீசியதும் கரைந்துபோயிற்று. அந்தக் கன்னிகையை மனைவியாக அடைய வேண்டுமென்று சந் தனு தாங்க முடியாத விருப்பம் கொண்டான். 

“நான் செம்படவப்பெண். என் அப்பன் செம்படவத் லைவன். அவனைக் கண்டு சம்மதம் பெறுவாயாக! உனக்கு க்ஷேமம் உண்டாகுக” என்றாள் அந்தக் கன்னி. 

அவள் பேசின பேச்சின் இனிமை அவள் வடிவத்துக்கு ஏற்றதாயிருந்தது. 

பெண்ணின் தகப்பனான செம்படவத் தலைவன் மிக்க சாமர்த்தியசாலி. 

மகாராஜாவே! பெண்ணாகப் பிறந்த இவளை யாரேனும் ஒருவனுக்குக் கொடுத்துத்தான் தீரவேண்டும். இவளுக்குத் தகுந்த புருஷனும் நீ ஆவாய். சந்தேகமில்லை. ஆனால் எனக்கு ஒரு சத்தியம் செய்து தரவேண்டும்” என்றான். 

“நீ கேட்பது கொடுக்கக் கூடியதாக இருந்தால் நான் ஒப் புக்கொள்வேன்” என்றான் சந்தனு. 

“இவளிடத்தில் உனக்குப் பிறக்கும் குமாரனை உனக்குப் பின் ராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும்” என்றான் செம்படவத் தலைவன். 

மன்மத தாபத்தினால் அதிகமாகத் தகிக்கப்பட்டவனானா லும், செம்படவன் கேட்ட இந்த நிபந்தனையை ஒப்புக்கொள்ள அரசனுக்கு மனம் வரவில்லை. கங்கா புத்திரனான தேவவிரதனை விட்டு விட்டு எவ்வாறு வேறு குமாரனுக்குப் பட்டம் அளிக்க முடியும்? காரியம் நிறைவேறாமல் துக்கத்துடன் நன் நகரமான ஹஸ்தினாபுரத்துக்குத் திரும்பினான். விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மனத்துக்குள்ளேயே வியாகுலப்பட்டு இளைத்துப் போனான், 

ஒரு நாள் தேவவிரதன் தகப்பனைப் பார்த்து, “அரசனே உமக்கு எல்லாவித சுகமும் இருக்க ஏன் துக்கத்தில் மூழ்கியிருக் கிறீர்? என்ன காரணத்தினால் கவலைப்பட்டு இளைத்துப் போய்க் கொண்டு வருகிறீர்?” என்று கேட்டு விஷயத்தை ஓரளவு வெளியிடச் செய்தான். 

“பிள்ளாய்! நீ சொன்னபடி நான் கவலையுற்றிருப்பது உண்மை.  கவலை யாதெனில், குலத்தில் நீ ஒருவன் தான் புத்திரனாக இருக்கிறாய். நீயோ யுத்தத்துக்கு வேண்டிய. பயிற்சியில் எப் போதும் ஈடுபட்டிருக்கிறாய். உலக வாழ்க்கை நிலையில்லை. யுத்தம் நிச்சயமாகக் கிட்டும். உனக்கு ஏதாவது அபாயம் வந்தால் நமது குலம் அழிந்துவிடுமல்லவா? நீ ஒருவனே நூறு புத்திரர்களுக் ச் சமமாக இரு க்கிறாய். ஆனாலு ம் சாஸ்திரம் படித்தவர்கள் நிலையில்லா இவ்வுலகத்தில் ஒரு புத்திரன் இருப்பதும் இல்லா மையும் ஒன்றே என்கிறார்கள். நம்முடைய குலத்தின் பாரம் பரிய க்ஷேமம் ஒரு புத்திரன் உயிரிலேயே தங்கி நிற்பது உசித மில்லை. சந்ததி கெடாமலிருப்பதற்காக ஆசைப்படுகிறேன். இதுதான் என் துக்கத்திற்குக் காரணம்” என்று அரசன், மகனிடம் – சொன்னான். முழுக் கதையையும் சொல்லத் தகப்பன் வெட்கப்பட்டான். 

அறிவாளியான தேவவிரதனுக்குத் தகப்பனாரின் மனநிலை தெரிந்துவிட்டது. பிறகு ராஜாவின் சாரதியை அந்தரங்கமாக விசாரித்து யமுனா நதிக் கரையில் நடந்ததைத் தெரிந்து கொண் டான். அதன்மேல் செம்படவ ராஜனிடம் தானே சென்று அவன் மகள் சத்தியவதியைத் தகப்பனாருக்காகக் கேட்டான். 

செம்படவன் தேவவிரதனுக்குச் சொன்னான்: “என் மகள் ராஜ மகிஷியாவதற்குத் தகுந்தவள். இவளுக்குப் பிறக்கும் குமாரன் ராஜாவாக இருக்கவேண்டுமல்லவா? சந்தனுவுக்குப் பிறகு ராஜ்ய பாலனம் செய்ய நீர் பட்டாபிஷேகம் செய்யப்பட் டிருக்கிறீர். து துவே தடையாக நிற்கிறது. என்னை மன்னிப்பீராக. 

இதைக் கேட்ட தேவவிரதன், “இவளுக்குப் பிறக்கும் மகன் ராஜாவாக இருப்பான். என் பட்டாபிஷேகத்தை நான் தியாகம் செய்துவிட்டேன்” என்று சத்தியம் செய்து கொடுத்தான். 

“பரத சிரேஷ்ட டரே! ராஜ வம்சங்களில் இது வரை யாரு செய்யாததை நீர் செய்து விட்டீர். நீர் வீரர். இந்தக் கன்னி கைக்கு நீரே பிரபு. இவளைப் பெற்ற தகப்பனைப்போல் நீரே அழைத்துப்போய் அரசனுக்குக் கொடுக்கும் அதிகாரியாவீர். பெண் ணின் தகப்பனாகிய நான் சொல்லுவதைப் பொறுமை யுடன் கேட்க வேண்டும். உம்முடைய வாக்கில் எனக்குச் சந்தே கம் இல்லை. ஆயினும் உமக்கு உண்டாகும் சந்ததியைப் பற்றி எனக்கு எவ்வாறு நிச்சயம் உண்டாகும்? மகா வீரராகிய உமக் குப் பிறக்கும் மகனும் வீரனாகத்தான் இருப்பான். அவன் ராஜ் த்தை அபகரிக்கப் பார்ப்பான் அல்லவா? இதுவே பெண்ணைப் பெற்றவனுடைய சந்தேகம்” என்றான் செம்படவன். 

இந்தச் சிக்கலான கேள்வியைக் கேட்டதும், தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதே கருத்தாகக்கொண்ட தேவவிரதன் உடனே எதிர்பாராத ஒரு சத்தியம் செய்து தந்தான். ஆயுள் முழுவதும் நான் பிரமசரிய விரதம் பூண்டு நிற்பேன். என் உயிர் இந்தத் தேகத்துடன் ஒட்டியிருக்கும் வரையில் நான் புத்ரோற்பத்தி செய்யவில்லை” என்று செம்படவத் தலைவனுக்கு தேவவிரதன் பிரதிக்ஞை செய்து உறுதிமொழி தந்தான். 

தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். “பீஷ்மன்!” “பீஷ் மன்!” என்று அசரீரி கோஷம் உண்டாயிற்று. “பீஷ்மன்” என் றால் அற்புதமான செயலைச் செய்தவன் என்று பொருள். அதுவே அன்று முதல் தேவவிரதனுடைய பெயராயிற்று. அதன்மேல் கங்கா புத்திரன் சத்தியவதியை அழைத்துச் சென்று தகப்ப னிடம் ஒப்புவித்துத் தகப்பனை மகிழ்வித்தான். 

சத்தியவதியும் சந்தனுவும் பெற்ற மக்கள் சித்திராங்கதனும் விசித்திரவீரியனும் ஒருவன்பின் ஒருவனாக அரசு புரிந் தார்கள். விசித்திரவீரியனுடைய மனைவிகள் அம்பிகை, அம்பா லிகை. 

இவர்களின் மக்கள் முறையே திருதராஷ்டிரனும் பாண் டுவும்: திருதராஷ்டிரனுடைய மக்கள் நூறு கௌரவர்கள், பாண்டுவின் மக்கள் பஞ்சபாண்டவர்கள். 

பீஷ்மாச்சாரியர் குலத்துக்குத் தலைவராசு எல்லோராலும் பூஜிக்கப்பட்டு பாரத யுத்தம் முடியும்வரையில் வாழ்ந்திருந்தார். 

கங்கை + சந்தனு + சத்தியவதி 

கங்கை -> பீஷ்மர் 

சத்தியவதி 
-> சித்திராங்கதன் 
-> விசித்திரவீரியன் 
->->அம்பிகை + 
->->->திருதராஷ்டிரன்
->->->->கெளரவர்கள் 
->->அம்பாலிகை 
->->->பாண்டு 
->->->பாண்டவர்கள் 

அம்பையும் பீஷ்மரும் 

சத்தியவதியின் குமாரன் சித்திராங்கதன் ஒரு கந்தர்வ னோடு சண்டை செய்து அவனால் கொல்லப்பட்டான். அவனுக் குப் பிள்ளைகள் இல்லாதபடியால் முறைப்படி அவன் தம்பி விசித் திரவீரியனுக்குப் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது. விசித் திரவீரியனுக்கு வயது வரும் வரையில் பீஷ்மரே ராஜ்யத்தைப் பரிபாலித்து வந்தார். 

விசித்திரவீரியன் விவாகத்துக்குத் தகுந்த வயது அடைந் ததும், காசி ராஜாவின் கன்னிகைகளுக்குச் சுயம்வரம் என்று கேள்விப்பட்டு பீஷ்மர் தேர் ஏறிச் சுயம்வர சபைக்குச் சென்றார். ஒருவர்மேல் ஒருவர் போட்டியாகக் கோசலம், வங்கம், புண் டரம், கலிங்கம் முதலிய பல தேசத்து ராஜகுமாரர்கள் சபையில் கூடியிருந்தார்கள். கன்னிகைகள் அழகும் குணமும் உலகப் பிர சித்தியாயிருந்தபடியால் போட்டி மும்முரமாக இருந்தது. 

பீஷ்மருடைய புகழ் க்ஷத்திரிய குலத்தில் நிகரற்றிருந்தது. இவர் சுயம்வரத் திருவிழாவைப் பார்த்துப் போக வந்தார் என்றே எல்லோரும் முதலில் எண்ணினார்கள். பெயர்களைக் கொடுத்தபோது இவரும் கொடுத்தார். யெவன ராஜ குமா ரர்கள் எல்லோரும் ஏமாற்றமடைந்தார்கள். அவர் சென்றது தன் தம்பி விசித்திரவீரியனுக்காக. ஆனால் இது ஒருவருக்கும் தெரியாது. 

“பாரத சிரேஷ்டருடைய அறிவும் படிப்பும் அதிகம். ஆனால் வயதும் ரொம்ப அதிகமாகவே இருக்கிறது. கிழவரான இவருக்கு இந்தச் சுயம்வரத்தில் என்னவேலை? இவருடைய பிர திக்ஞை என்னவாயிற்று? ஆயுள் முழுவதும் பிரமசாரியாயிருப் பேன் என்று இவர் பொய்ப்புகழா பெற்றார்!” என்றிவ்வாறெல் லாம் ஏளனமாகப் பேசினார்கள். விவாகத்துக்கு இருந்த இரண்டு கன்னிகைகளும் கிழ வீரரைப் பார்த்துவிட்டு நிற்காமல் விலகிப் போனார்கள். 

பீஷ்மருக்கு மகா கோபம் பொங்கிற்று. அந்தக் காலத்து மன்னர் குலங்களை ஓட்டிய பண்பாட்டின்படி வாருங்கள் யுத் தத்துக்கு!” என்று சபையிலிருந்த ராஜாக்கள் அனைவரையும் அறைகூவி யழைத்து, ஒருவராகவே எல்லாரையும் எதிர்த்து விரட்டி, மூன்று கன்னிகைகளையும் தன் தேர்மேல் ஏற்றிக் கொண்டு ஹஸ்தினாபுரம் போகப் புறப்பட்டார். சௌபல தேசத் தரசன் சால்வன் மட்டும் விடாமல் துரத்திச் சென்று தடுத்தான். அவனை மூத்த ராஜகுமாரி அம்பையானவள் தன் மனத்தில் வரித் திருந்தாள், சால்வனுக்கும் பீஷ்மருக்கும் கடும்போர் நடந்தது. பீஷ்மர் தனுர்வேதத்தில் கரைகண்ட நிபுணர் சால்வன் தோல்வியுற்றான். ஆனால் கன்னிகைகளின் வேண்டுகோளுக்கிணங்கி அவனைப் பீஷ்மர் உயிருடன் தப்பிப் போகவிட்டார். 

பீஷ்மர் ராஜகுமாரிகளுடன் ஹஸ்தினாபுரம் போய்ச் சேர்ந் தார். விசித்திரவீரியனுக்கு மூன்று பெண்களையும் விவாகம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. கலியாணப் பந்தலில் எல்லாரும் கூடியிருக்கும் சமயத்தில் அம்பை பீஷ்மரை நோக்கி மெள்ள நகைத்தவாறாக, “கங்கா புத்திரரே! தர்மம் அறிந்தவரே! நான் சௌபல தேசத்து ராஜாவான சால்வனை என் மனத்தில் புருஷ னாகக் கொண்டுவிட்டேன். நீர் பலாத்காரமாக என்னைக் கொண்டு வந்தீர். சாஸ்திரம் உணர்ந்த நீர் எவ்வண்ணம் செய்யவேண்டு மோ அவ்வாறு செய்யும்” என்றாள். 

இவ்வாறு விவாக மண்டபத்தில் அம்பை சொன்னதும் பீஷ்மர் ஆட்சேபனையை ஒப்புக்கொண்டு தகுந்த துணை நியமித்து அவளைச் சால்வ ராஜனிடம் அனுப்பி வைத்தார். அம்பையின் தங்கைகளான அம்பிகை, அம்பாலிகை இருவரையும் விசித்திர வீரியனுக்கு விவாகம் செய்வித்தார். 


அம்பை சால்வனிடம் சென்றாள். ”நீ என்னால் முன்னேயே வரிக்கப்பட்டாய். பீஷ்மர் என்னை உன்னிடம் அனுப்பி யிருக் கிறார். சாஸ்திரப்படி விவாகம் செய்துகொள்” என்றாள். 

சால்வராஜன், அரசர்களின் மத்தியில் பீஷ்மர் என்னை ஜயித்து உன்னை வசப்படுத்திச் சென்றார். நான் அங்கீகரிக்க முடி யாது. நீ அவரிடமே திரும்பிப் போய், அவர் ஆணைப்படி செய்’ என்று சொல்லி அவளைத் திருப்பி அனுப்பி விட்டான். 

ஹஸ்தினாபுரம் திரும்பி வந்து பீஷ்மரிடம் அம்பை விஷயத் தைச் சொன்னாள். சால்வராஜன் அம்பையை வரிக்கவில்லை. நீ இவளை விவாகம் செய்துகொள்ள இப்போது தடையொன்று மில்லையே” என்று விசித்திரவீரியனைக் கேட்க,அவன் “வேறு ஒரு புருஷன்மேல் மனம் செலுத்தின ஒரு கன்னிகையை நான் விவாகம்  செய்துகொள்ளமாட்டேன்’ என்று க்ஷத்திரியப் பண்பாட்டின்படி மறுத்துவிட்டான். 

“எனக்கு வேறு கதி இல்லை. நீரே என்னை விவாகம் செய்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறீர்” என்று அம்பை – பீஷ்மரை வற்புறுத்தினாள். 

“என்னுடைய பிரதிக்ஞையை எப்படிப் பொய்யாக்கு வேன்? முடியாது” என்று சொல்லி விசித்திர வீரியனை ஒப்புக் கொள்ளு ம்படி மறுபடியும் பீஷ்மர் வற்புறுத்திப் பார்த்தார். ஆனால் அது முடியவில்லை. அதன்மேல் நீ சால்வனையே கேட்டுக் கொள்ள வேண்டும்” என்று அம்பையை மறுபடியும் சால்வராஜனிடம் போகச் சொன்னார். ஆனால் அம்பை அந்த அரசனிடம் போக வெட்கப்பட்டு பீஷ்மரையே பல வண்ணம் வற்புறுத்தினாள்.  ‘நான் போகமாட்டேன் என்று பீஷ்மர் மனையிலேயே பல ஆண்டுகள் கழித்தாள். ஆனால் பீஷ்மர் ஒப்புக்கொள்ள வில்லை. 

பிறகு அம்பை சால்வனிடம் போனாள். 

“மற்றொருவன் ஜயித்த கன்னியை நான் விவாகம் செய்து கொள்ள முடியாது” என்று அவன் மறுபடியும் கண்டிப்பாய் முன்போலவே சொல்லிவிட்டான். 


தாமரைப் புஷ்பம் போன்று விசாலமான கண்களையுடைய சால்வனிடமும்,  அம்பை இவ்வாறு ஹஸ்தினாபுரத்திலிருந்து சால்வனிடமிருந்து ஹஸ்தினாபுரமும் பல தடவைகள் அலைந்து அலைந்து கண்ணீர் சொரிந்தாள். ஆறு வருஷங்கள் சென்றன. அம்பை இதயம் துடித்துத் துடித்து ஒரு வித கதியும் காணாமல் வாடினாள். அவளுக்குப் பீஷ்மர்மேல் தாங்கமுடியாத கோபம் மேலிட்டது. பல ராஜாக்களிடம் போய் முறையிட்டாள். 

தனக்கு நேர்ந்த அவமானத்திற்காகப் பீஷ்மரை எதிர்த்துக் கொல்லும்படி ஒவ்வொரு அரசனையும் வேண்டிக் கொண்ட பீஷ்மர் என்றால் எல்லாருக்கும் பயம். யாரும் கேட்கவில்லை பிறகு ஷண்முகப் பெருமானைக் குறித்துக் கடும் தவம் செய்தாள். முருகன் பிரசன்னமாகி அம்பைக்கு ஒரு மாலை தந்தான். இந்த மாலையை எவன் தரித்துக் கொள்ளுகிறானோ அவன் பீஷ்மனுக்குச் சத்துரு ஆவான் என்று ஆறுமுகன் அம்பைக்கு ஒரு வாடர்த தாமரைப் புஷ்ப மாலையைக் கொடுத்தான். 


அம்பை அந்த மாலையைப் பெற்றுக்கொண்டு தன் எண்ணத்தைப் பூர்த்தி செய்துகொள்ள ஒவ்வொரு க்ஷத்திரியனிடமும் சென்றாள். ஆறுமுகக் கட வுள் தந்த இந்த மாலையைப் பெற்றுக் கொண் டு பீஷ்மனைக் கொல்’ என்று பலரைக் கேட்டுப் பார் தாள். பீஷ்மருடைய விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ள யாருக்கும் தைரியம் வரவில்லை கடைசியாகத் துருபதராஜனி டம் போய் அவனும் மறுத்துவிட்டபின் அவனுடைய அரண்மனை வாயிலில் மாலையைத் தொங்க விட்டு வனம் சென்றாள். 

பிறகு சில தபோதனர்களிடம் போய்த் தனக்கு நேர்ந்த. அவமானத்தைச் சொல்லி முறையிட்டாள். 

“நீ பரசுராமரிடம் போய்க் கேட்டுக்கொள்: அவர் உனக்கு வேண்டியதைச் செய்வார்” என்று அவர்கள் யோசனை சொன் னார்கள். அப்படியே செய்தாள். 

பரசுராமர் அம்பையின் கதையைக் கேட்டுக் கருணை கொண்டு “குழந்தாய் உன்க்கு என்ன வேண்டும்? சால்வனுக்குச் சொல்லி உன்னை விவாகம் பண்ணிக் கொள்ளச் சொல்ல வேண் டுமா? அது என்னால் முடியும்” என்றார். 

அம்பை, “வேண்டாம். பீஷ்மனுடன் நீர் யுத்தம் செய்து அவனைக் கொல்ல வேண்டும். எனக்கு விவாகம் வேண்டாம். பீஷ்மனுடைய மரணமே நான் கோரும் வரம்” என்றாள். 

க்ஷத்திரிய சத்துருவான பரசுராமர் பீஷ்மருடன் போருக் குச் சென்றார். யுத்தம் நடந்தது. பீஷ்மரும் பரசுராமரும் சமமான வீரர்கள். சமமான ஜிதேந்திரியர்கள். யுத்தம் பல நாட்கள் நடந்தது. முடிவில் பரசுராமர் தே தா ல்வி யடைந்தேன் என்று ஒப்புக் கொண்டு, அம்பையைப் பார்த்து. அம்மணி! என்னாலானதை நான் செய்தேன். நீ பீஷ்மரைச் சரண் அடைய வேண்டியது தான் என்றார். 


அம்பைக்குக் கோபமும் துயரமும் தாங்கமுடியவில்லை. இமய மலைக்குச் சென்று பரமேசுவரனைக் குறித்துக் கடும் தவம் புரிந் தாள். பரமசிவன் அவளுக்குப் பிரசன்னமாகி நீ இன்டு னாரு பிறப்பு அடைவாய், உன்னால் பீஷ்மர் மரணமடைவார்’ என்று வரம் தந்தான். 

காலதாமதமின்றி உடனே மறு பிறப்பு அடைந்து தன் எண் ணம் நிறைவேற வேண்டும் என்பது அம்பையின் ஆசை. சிதையை அடுக்கி அதற்கு நெருப்பு மூட்டி, தீயுடன் தீ கலப்பது போல் கோபத்தினால் ஜொலித்த அம்பை அதில் குதித்து மாண்டாள். 

பரமசிவனார் வரத்தின்படி அம்பை துருபத ராஜனுக்கு மகளாகப் பிறந்தாள். பிறந்த சில ஆண்டுகளுக்குப் பின் அரண் மனை வாயிலில் யாரும் தீண்டுவதற்குப் பயந்து இன்னும் தொங் கிக் கொண்டிருந்த புஷ்பமாலையைப் பார்த்து அதைக் கழுத் தில் தானே போட்டுக் கொண்டாள். தகப்பனான துருபத ராஜா, ‘ஐயோ கெட்டேனே! பீஷ்மருடைய விரோதத்தைப் பெற்றோமே’” என்று பயந்து, மகளைத் தன் வீட்டிலிருந்து அப் புறப்படுத்தி வனத்துக்கு அனுப்பி விட்டான். தன்னைக் காப் பாற்றிக் கொள்ள இவ்வாறு செய்தான். 

அம்பை வனம் சென்று தவம் செய்து ஆண் தன்மை அடை ந்து சிகண்டி என்கிற வீரனாக மாறி விட்டாள். அருச்சுனன் சிகண்டியைத் தன் தேர்ப்பாகனாகக் கொண்டு பாரதயுத்தத்தில் பீஷ்மரை எதிர்த்தான். குருக்ஷேத்திர களத்தில் பீஷ்மர் வீழ்த் தப்பட்டு அம்பையின் அடங்கா த கோபம் தீர்ந்தது. சிகண்டியின் பிறப்பு ஆதியில் பெண்மை என்று பீஷ்மருக்குத் தெரிந்தபடி யால் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் மேல் அம்பு பிரயோகிக்க மறுத்துவிட்டார். சிகண்டியை முன்னிட்டுக்கொண்டு அருச்சுனன் பீஷ்மரைத் தாக்கி ஜெயித்தான். மரணம் கிட்டிய தறு வாயிலும் தன்னைத் துன்புறுத்திய அம்புகளை ஒவ்வொன்றாக இழு த்து எடுத்து இது அருச்சுனனுடைய அம்பு! சிகண்டியினுடைய தல்ல!’ என்று சொல்லிக் கொண்டு பீஷ்மர் பூமியில் சாய்ந்தார்.  

இந்த விஷயம் பின்னால் யுத்த காண்டத்தில் வரும். 

வியாசர் விருந்து
தேவயானியும் கசனும் 

முன்னொரு காலத்தில் மூன்று உலகங்களையும் ஆள வேண்டு மென்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரிய போட்டி நடந் து. தேவர்களுக்குப் புரோகிதர் பிரகஸ்பதி; அவர் வேத மந் திரங்களில் தேர்ச்சி பெற்றவர். அசுரர்களுக்குப் புரோகிதர் அறிவுக்கடலான சுக்கிராசாரியர். இந்த இரண்டு பிராம்மணர் களின் பக்க பலத்தைக் கொண்டு தேவாசுர யுத்தம் நடந்து வந்தது. 

யுத்தத்தில் வீழ்த்தப்பட்ட அசுரர்களையெல்லாம் சுக்ரா சாரியர் தம் சஞ்சீவினி வித்தையைக் கொண்டு மறுபடியும் பிழைப்பித்து வந்தார். இறந்த அசுரர்கள் திரும்பவும் திரும்பவும் எழுந்து வந்து தேவர்களுடன் போர் செய்வார்கள். இந்த யுத்த வைத்திய ஏற்பாடு தேவர்கள் கட்சியில் இல்லை. சுக்ராசாரியர் பிரயோகித்த சஞ்சீவினி வைத்தியம் பிரகஸ்பதிக்குத் தெரியாது. இது தேவர்களுக்குப் பெரும் துயரத்தை உண்டாக்கிற்று. 

தேவர்கள் ஒன்றுகூடி பிரகஸ்பதியின் குமாரன் கசன் என் பவனிடம் சென்று, நீ எங்களுக்கு ஒரு உபகாரம் செய்ய வேண் டும். நீ இளம் பிராயமுள்ளவனாகவும் கண் ணக் கவரும்படியான அழகு பெற்றவனாகவும் இருக்கிறாய். நீ சுக்ராசாரியரிடம் பிரம்ம சாரியாகச் சேர்ந்து அவருக்குப் பணிவிடை செய்து அவருடைய நம்பிக்கையையும் அவர் மகளின் அன்பையும் பெற்று அவருடைய சஞ்சீவினி வித்தையை எப்படியாவது கற்றுக்கொண்டு வர வேண் டும். என்று வேண்டிக் கொண்டார்கள். 


கசன் இதற்கு ஒப்புக் கொண்டு சுக்ராசாரியரிடம் போனான். அசுர ராஜாவான விருஷபர்வனுடைய நகரத்தில் சுக்ராசாரியர் வசித்து வந்தார். அவருடைய வீட்டுக்குப்போய் கசன், அவரை வணங்கி அங்கிரஸ் ரிஷியின் பேரன் நான். பிரகஸ்பதியின் புத் திரன். கசன் என்பது என் பெயர். என்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்வீராக. நான் தங்கள்கீழ் பூரண பிரம்மசரியத்தைச் செய்வேன்’ என்று வேண்டிக் கொண்டான். தகுந்த சீடன் ஆசார்யனிடம் பிரமசாரியாக எடுத்துக் கொள்ளக் கேட்டால் அறிவு பெற்ற ஆசாரியன் மறுக்கக் கூடாது. கசனே! நீ நல்ல குலத்தவன். உன்னை நான் அங்கீகரிப்பேன். இதனால் பிரகஸ்பதி யும் கெளரவிக்கப்பட்டவர் ஆவார்” என்று று சுக்ராசாரியர் கச னைத் தம் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார். 

கசனும் அநேக வருஷங்கள் சுக்ராசாரியருக்கும் அவர் மகள் தேவயானிக்கும் ஒரு குறைவும் குற்றமுமின்றிப் பணிவிடை செய்துவந்தான். சுக்ராசாரியருக்குத் தன் மகள் தேவயானியிடம் மிகப் பிரியம். கசன் பாடியும் ஆடியும் வாத்தியம் வாசித்தும் அவள் சொன்ன ஏவல் செய்தும் தேவயானியைச் சந்தோஷப் படுத்தி வந்தான். தேவயானியும் கசனிடம் பிரியம் காட்டி வந் தாள். ஆனால் பிரம்மசரிய விரதத்தைத் தவறாமல் கசன் காத்து வந்தான். 

தேவயானியும் கசனும் 

அசுரர் களுக்குக் கசன் சுக் ராசாரியாரிடம் சீடனாக அமைந் திருப்பது தெரிந்தது. பிரகஸ்பதியின் மகன் எப்படியாவது சுக் ராசாரியரிட ம் சஞ்சீவினி வித்தையை அபகரித்துக் கொண்டு போய்விடுவான் என்பது அவர்களுடைய கவலை. ஒரு நாள் வன த்தில் குருவின் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த போது அவ னைப் பிடித்துக் கொன்று துண்டு துண்டாகச் செய்து நாய்களுக்கு இரையாகப் போட்டு விட்டார்கள். பசுக்கள் தாமாகக் கொட்டி லுக்குத் திரும்பி வந்தன. கசன் வரவில்லை. இதைப் பார்த்து தேவயானி சந்தேகப்பட்டாள். 

“பிரபுவே சூர்யன் அஸ்தமித்தான். உம்முடைய அக்கினி ஹோத்திரமும் முடிந்தது. இன்னும் கசன் வீடு வந்துசேரவில்லை. பசுக்கள் தாமாகத் திரும்பி வந்துவிட்டன. அவனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்க வேண்டும். அவனில்லாமல் நான் பிழைத் திருக்க முடியாது” என்று தகப்பனாரிடம் தேவயானி அழுதாள். 

மகளிடத்தில் மிகுந்த அன்பு கொண்ட சுக்ராசாரியர் சஞ் சீவினி வித்தையைப் பிரயோகித்து இறந்து போனவனை “வா!” என்று அழைத்தார். இவ்வாறு அழைக்கப்பட்ட கசன் நாய்களுடைய உடல்களைப் பிளந்து கொண்டு வெளிப்பட்டுச் சந்தோஷ முகத்துடன்எதிரே வந்து நின் றா ன்! என்ன நடந்தது? ஏன் தாம் தம் செய்தாய்?’ என்று தேவயானி கேட்க கசன் “காட்டில் பசு மேய்த்துவிட்டு விறகுச்சுமையை எடுத்துக்கொண்டு வரும் போது களைப்புற்று ஓர் ஆலமரத்தடியில் உட்கார்ந்தேன். பசுக்களும் ஒன்று கூடி மரத்து நிழலில் நின்றன. அசுரர்கள் வந்து என்னை நீ யார் என்று கேட்டார்கள். நான் பிரகஸ்பதியின் புத்திரன் என்றேன். உடனே அவர்கள் என்னை வெட்டிக்கொன்று விட்டார் கள். எப்படியோ மறுபடி உயிருள்ளவனாகி நாய்களின் உடலி னின்று வந்து உன் சமீபம் நிற்கிறேன்” என்றான். 

மற்றொரு நாள் கசன் தேவயானிக்காகப் பூப்பறிக்க வனம் சென்றான். அசுரர்கள் அவனை அங்கே பிடித்துக் கொன்று அவன் தேகத்தை அரைத்துச் சமுத்திரஜலத்தில் கரைத்து விட்டார் கள். அவன் போய் வெகு நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பி வராததைக் கண்டு தேவயானி தகப்பனிடம் சொன்னாள். 

முன் போலவே சஞ்சீவினியைப் பிரயோகித்தார். கசன் கடலினின்று உயிருடன் வெளிப்பட்டு வந்து நடந்த செய்தியைச் சொன்னான். 


அசுரர்கள் கசனை விட்ட பாடில்லை. மூன்றாவது தடவையும் இவ்வாறே மறுபடியும் கொல்லப் பட்டான். அசுரர்கள் இந்தச் சமயம் அவன் உடலைச் சுட்டுச் சாம்பலாக்கி, சாம்பலை மதுபானத் தில் சேர்த்துச் சுக்ராசாரியருக்கே கொடுத்தார்கள். அவர் கச னுடைய உடலைச் சுட்டுக்கரைக்கப் பட்டிருந்த பானத்தைக் குடி த்து விட்டார். பசுக்கள் மேய்ப்பவனில்லாமல் தாமாக வீட்டுக் குத் திரும்பி வந்தன. தேவயானி தகப்பனாரிடம் கசன் வர வில்லை; அவன் கொல்லப் பட்டவன்தான். அவனின்றி நான் ஜீவித்திருக்க முடியாது” என்றாள். 

”நான் எத்தனை தடவை பிழைப்பு மூட்டினாலும் அவனை அசுரர்கள் கொல்வதாகவே தீர்மானித்திருக்கிறார்கள். அறிவு படைத்த நீ எந்தக் காரணத்தினால் ஒருவன் மரணமடைந்தாலும் அதைப்பற்றித் துக்கப் படுவது சரியல்ல. நீ ஏன் வருத்தப்படுகி றாய்? உலகமே உன்னை வணங்குகிறது. நீ விசனப் படவேண் டாம்!” என்று சுக்ராசாரியர் பெண்ணுக்குச் சமாதானம் சொன்னார். 

கசனிடம் மிகுந்த அன்பைக் கொண்ட தேவயானி சமாதா னம் அடையவில்லை. ”இவன் அங்கிரஸ் ரிஷியின் பேரன், பிரகஸ் பதியின் புத்திரன், பிரம்மசாரி. தவமே தனமாக உடையவன். முயற்சியுள்ளவன். வேலைகளில் நிபுணன். அவன் கொல்லப்பட் டான். அவனின்றி நான். பிழைக்க முடியாது. அவன் போன வழி யை நானும் அடைவேன்’ என்று சொல்லி உபவாசம் பூண்டாள். 

சுக்ராசாரியர் அசுரர்கள் மீது கோபம் கொண்டார். வ் வாறு பிரம்மஹத்தி செய்யும் இந்த அசுரர்களுக்கு நன்மை உண் டாகாது என்று முடிவுக்கு வந்தார். சஞ்சீவி மந்திரத்தைச் சொல்லி கசனை வா என்று அழைத்தார். மந்திரத்தின் பலத்தால் பிரக் ஞையை அடைந்த கசன், பகவானே என்னை அனுகிரகிப்பீராக! என்று குருவின் வயிற்றுக்குள்ளிருந்து சொன்னான். இதைக் கேட்ட சுக்ராச்சாரியர் வியப்படைந்து, ‘பிரம்மசாரியே! எப்படி என் வயிற்றுக்குள் நீ வந்திருக்கிறாய்? இது அசுரர்களின் காரியமா? இந்த நிமிஷத்தில் அசுரர்களை அழித்து விட்டு நான் தேவர்களி டம் போவேன்: சொல்! என்று சு க் ராச்சாரியர் கோபமாகக் கேட்டார். கசன். வயிற்றுக்குள்ளிருந்து கொண்டே நடந்த விஷயத்தைச் சொன்னான். 

வைசம்பாயனர் சொல்லுகிறார்: மகானுபாவரும் தவப் புதையலும் அளவிறந்த மகிமையுள்ளவருமான சுக்ராசாரியர் மதுபானத்தினால் தாம் இவ்வாறு அடைந்த ஏமாற்ற த்தை என்ணிக் கோபத்துடன் எழுந்து அடியில் கண்ட வாக்கிய த்தை மக்கள் நன்மைக்காக வெளியிட்டார்: 

எவன் அறிவின்மையால் மத்யபானம் செய்கிறானோ அவனைத் தருமம் உடனே விட்டு விலகும்; எல்லோராலும் இகழப் படுவான். இது என்னுடைய முடிவு. இதை இன்று முதல் ஜனங் கள் சாஸ்திரமாக வைத்துக் கொண்டு நடக்க வேண்டும். 

பிறகு சுக்ராச்சாரியர் தேவயானியைப் பார்த்து பெண் ணே! இப்போது நீ எதைப் பிரியப் படுகிறாய்? கசன் உயிருடன் வரவேண்டுமானால் என் வயிற்றைப் பிளந்து கொண்டு தான் அவன் வெளியே வரவேண்டும். நான் இறந்தால்தான் கசனுக்கு உயிருண்டாகும்” என்றார். 

“ஐயோ! கசன் இல்லாவிட்டால் என்னைத் துக்கம் நெருப் பாக எரித்து விடும். நீர் இறந்து போனாலோ நான் பிழைத்திருக் கவே முடியாது. இரண்டு விதத்திலும் நான் இறந்து போவேன் என்று தேவயானி அழுதாள். 

இப்பொழுது சுக்கிரருக்கு விஷயம் புரிந்து விட்டது. “பிர கஸ்பதி புத்திரனே! நீ காரிய சித்தி அடைந்தாய். தேவயானிக் காக நான் உன்னை உயிருடன் வெளி வரச் செய்ய வேண்டும். நானும் இறந்து போகாமலிருக்க வேண்டும். இதற்கு ஒரே வழி தான். சஞ்சீவினி வித்தையை உனக்கு நான் உபதேசம் செய்கிறேன். நீ என் வயிற்றிலிருந்து கொண்டே உபதேசம் பெற்று அதைத்தெரிந்துக்கொண்ட பின் என் வயிற்றைப் பிளந்து வெளி யே வா! நான் இறந்து போவேன். பிறகு நீ கற்ற வித்தை யைக் கொண்டு என்னைப் பிழைப்பித்துத் தேவயானியின் த்தை தீர்த்து விடுவாயாக எ ன் று சொல்லிக் கசனுக்குச் வினி வித்தையை உபதேசித்தார். அதன்மேல் கசன் பூரண திரனைப் போல் சுக்ராசாரியருடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளி வந்தான். அறிவே உருவங் கொண்ட சுக்கிரர் வயிறு கிழிந்து இறந்து கீழே விழுந்தார். 

கசன் உடனே தான் கற்ற சஞ்சீவினி வித்தையைக் கொண்டு சுக்கிராச்சாரியருக்கு மறுபடி உயிர் தந்து தேவயானியை மகிழ் ச்சிபெறச் செய்தான். வித்தையில்லாதவனுக்கு வித்தையைத் தந்த ஆசாரியர் தந்தை ஆவார். அதுவேயின்றி நான் உம்முடைய வயிற்றிலிருந்து சிசுவாகவே பிறந்திருக்கிறேன். நீர் எனக்குத் தாயும் ஆவீர் என் று சொல்லிச் சுக்கிராச்சாரியைக் கசன் நமஸ்கரித்தான். 

பிறகு பல வருஷம் கசன் சுக்ராச்சாரியரிடம் படித்து வந் தான். விரதம் முடிந்து ஸ்நானம் செய்த பிறகு குருவினால் விடை கொடுக்கப்பட்டு தேவலோகம் போகப் புறப்படும் போது தேவ யானி கசனை பார்த்து, “அங்கிரஸ பௌத்திரனே! நீ ஒழுக்கத் தினாலும் குலத்தினாலும் கல்வியினாலும் இந்திரியங்களை அடக்கிய தவத்தினாலும் ஒளி பெற்று விளங்குகிறாய்! நீ பிரம்மசரிய நியமம் தவறாதிருந்த காலத்தில் நான் எப்படி உன்னுடன் அன்புடன் நடந்து கொண்டேனோ அப்படியே இப்போது என்னிடம் நீ நீ அன்பு காட்ட வேண்டும். பிரகஸ்பதி என்னால் பூஜிக்கத் தக்கவர். அவ்வாறே நீயும். என்னை நீ சாஸ்திரப்படி பாணிக்கிரகணம் செய்து கொள்வாயாக’ என்று சொல்லி வணங்கி நின்றாள். 

அந்தக் காலத்தில் அறிவும் சிட்சையும் பெற்ற பிராமண ஸ்திரீகள் தைரியமாகத்தான் பேசுவார்கள். இதற்கு அநேக உதாரணங்கள் உண்டு. தேவயானி சொன்னதைக் கேட்ட கசன். 

‘குற்றமற்றவளே! குரு புத்திரியாகிய நீ தருமத்தின்படி எப்போதும் என்னால் பூஜிக்கத் தக்கவள்.நான் உன் தகப்ப னார் சுக்ரர் வயிற்றிலிருந்து பிறந்து உயிர் பெற்றவன். அதனால் நான் உனக்குச் சகோதரன் ஆகிவிட்டேன். சகோதரியாகிய நீ என்னை இவ்வாறு வேண்டலாகாது” என்றான். 

“நீ பிரகஸ்பதியின் புத்திரன். என் பிதாவின் புத்திரன் அல்ல. சிநேகத்தினாலும் காதலினாலும் பல தடவை உயிரிழந்த உன்னை நான் பிழைக்கச் செய்தேன். ஆதி தொடங்கி உன்னி டம் நான் அன்பை வைத்தேன். பற்றுள்ளவளும் குற்றமில்லாத வளுமான என்னை நீ விடலாகாது என்று தவயானி பலமுறை வேண்டிக் கொண்டாள். 

“ஏவத்தகாத காரியத்தில் நீ என்னை ஏவ வேண்டாம். அழகிய புருவங்களைக்கொண்டவளே! விசாலாட்சி! கோபமுள்ள ளே! உனக்கு நான் சகோதரன். எனக்குச்சுபம் சொல்லி அனுப் பிக் கொடுப்பாயாக. தவறுதலின்றி என் ஆசார்யர் சுக்ரருக்கு எப்போதும் பணிவிடை செய்யக் கடவாய்’ என்று கசன் தேவ யானியின் வேண்டுகோளை மறுத்து விட்டு இந்திரலோகம் சென்றான். 

சுக்ராச்சாரியர் மகளைச் சமாதானப்படுத்தினார். 

தேவயானி மணந்தது 

சுக்ராச்சாரியருடைய மகள் தேவயானியும் அசுர ராஜ கன் னிகைளும் ஒரு நாள் வனத்தில் விளையாடிவிட்டுக் குளத்தில் நீராடிக்கொண்டிருந்தார்கள். அப்போது குளக்கரையில் வைத் திருந்த ஆடைகள் காற்றடித்து எல்லாருடையதும் ஒன்றாகக் கலந்து போயின குளித்தபின் கன்னிகைகள் கரைக்கு வந்து ஆடைகளை எடுத்து உடுத்திக் கொள்ளும்போது, விருஷபர்வ ராஜாவின் குமாரத்தி சர்மிஷ்டை தெரியாமல் தேவயானியின் புடவையை உடுத்திக் கொண்டாள். இதைப்பார்த்த தேவயானி அசுரப் பெண்ணே! மரியாதை தெரியாதவளாக இருக்கிறாயே! சிஷ்யன் – மகள் குரு குமாரத்தியின் வஸ்திரத்தை எப்படி உடுத்திக் கொள்ளலாம்?” என்றாள். 

பாதி உண்மையாகவும் பாதி வேடிக்கையாகவும் சொல்லப் பட்டதாயினும் து, ராஜகுமாரி சர்மிஷ்டைக்கு மிகுந்த கோபம் உண்டாக்கிவிட்டது. என் தகப்பனார் முன் உன் தந்தை தினமும் குனிந்து வணங்குவது உனக்குத் தெரியாதா? என் தகப்பன் கொ டுத்ததை வாங்கிக் கொள்ளும் யாசகனுடைய பெண் அல்லவா நீ? பிராமணப் பெண்ணே! ஸ்துதிக்கப்படுகிற ராஜவம்சப் டெண் நான். பொருளைக் கொடுக்கும் ஜாதி நான். நீயோ பிச்சை எடுக் கும் குலம். ஆயுதம் எடுக்கமுடியாத ஏழை ஜாதிப் பெண் ணாகிய நீ என்னையா பேசுகிறாய்? என்று பலவாறாக சர்மிஷ்டை மிகக் கடுஞ் சொற்களைப் பிரயோகம் செய்தாள். வர வரச் சண்டை வலுத்துப் போயிற்று. கோபம் அதிகரித்துச் சர்மிஷ்டை தேவ யானியைக் கன்னத்தில் அறைந்து தண்ணீர் இல்லாத ஒரு கிணற் றில் தள்ளி விட்டாள். அவள் இறந்தே விட்டாள் என்று எண்ணி அசுரப் பெண்கள் திரும்பிப் பாராமல் அரண்மனைக்குப்  போய்விட்டார்கள். 

கிணற்றில் தள்ளப்பட்ட தேவயானி மேலே ஏற முடியாமல் அங்கேயே தவித்துக் கொண்டிருந்தாள். தற்செயலாக பரத குலத்தைச் சேர்ந்த யயாதி சக்ரவர்த்தி வனத்தில் வேட்டை யாடிக் களைத்துப்போய் தாகத்துக்குத் தண்ணீர் இருக்கும் இட த்தைத் தேடிக்கொண்டு அந்தக் கிணற்றண்டை தனியாக வந்து சேர்ந்தான். கிணற்றுக்குள் எட்டிப் பார்க்க அதில் எதோ பிர காசமாகத் தெரிந்தது. நன்றாகப் பார்த்ததில் நெருப்பை போல் ஒளி வீசிக்கொண்டிருந்த அழகியகன்னிகை ஒருத்தி அதிலிருக்கக் கண்டு வியந்தான். 

“நீ யார்? குண்டலங்களையும் சிவந்த நகங்களையும் உடைய யுவதியே! நீ யாருடைய மகள்? எந்தக் குலம்? கிணற்றில் எப்படி விழுந்தாய்?” என்று கேட்டான். 

“நான் சுக்ராச்சாரியருடைய மகள். என்னைத்தூக்கி விடும் என்று தன் வலக்கையை நீட்டினாள். யயாதி கிணற்றில் இறங்கிக் கையைப் பிடித்து அவளைத் தூக்கி விட்டான். 

மேலே தூக்கி விடப்பட்ட தேவயானிக்கு அசுரராஜனு டைய நகரத்துக்குத் திரும்பிப்போக இஷ்டமில்லை. சர்மிஷ்டையின் நடத்தையை நினைத்து நினைத்து, தகப்பனிடம் போகாமல் வேறு எங்கேயாவது போய்விடுவதே நலம் என்று எண்ணினாள். யயாதியைப் பார்த்து, பிராமணப் பெண்ணினுடைய வலது கையைப் பிடித்தீர். நீர் சாந்தியும் சக்தியும் கீர்த்தியும் பெற்றவராகத் தெரிகிறது. யாராக இருந்தாலும் நீர் தான் எனக்குப் புருஷன் ஆவீர்!” என்று தேவயானி பிரார்த்தித்தாள். 

“அன்புள்ளவளே! நான் க்ஷத்திரியன். நீயோ பிராமணப் பெண். என்னுடன் உனக்கு எப்படி விவாகம் தகும்? உலகத்துக்கே ஆசாரியராகத் தகுந்த சுக்கிராச்சாரியருடைய பெண் க்ஷத்திரியனாகிய எனக்கு எவ்வாறு உரியவள் ஆவாள்? அம்மணி! நீ உன் வீடு செல்வாய்” என்று சொல்லிவிட்டு யயாதி தன் நகரம் சென்றான். 

பழைய நாள் வழக்கப்படி, க்ஷத்திரியப் பெண்ணானவள் பிரா மணனை விவாகம் செய்துக்கொள்ளலாம். பிராமணப்பெண் க்ஷத் திரிய புருஷனை விவாகம் செய் து கொள்வது தவறு என்று கரு தப்பட்டது. எல்லா ஜாதிகளிலும் பெண்களுடைய குலத்தைக் காப்பாற்றுவதே முக்கியமாகக் கருதப்பட்டு வந்தது. ‘அனுலோமம்’ செல்லும்: ‘பிரதி லோமம்’ சாஸ்திரத்துக்கு விரோதம். 

தேவயானி வீடு செல்ல மனமில்லாமல் வனத்தில் ஒரு மரத்தடியில் துக்கப்பட்டு நின்று கொண்டிருந்தாள். 

சுக்ராச்சாரியருக்கு தேவயானி என்றால் உயிரைப் போல் அன்பு. வெகு நேரமாகியும் விளையாடப் போன மகள் திரும்பி வராததைக் கண்டு ஒரு ஸ்திரீயை அனுப்பி, பார்த்து வரச் சொன்னார். தோழிகளுடன் தேவயானி சென்ற இடமெல்லாம் தேடிப்பார்த்துக் கடைசியாக தேவயானி இருந்த மரத்தண்டை வந்தாள். துக்கமும் கோபமும் மேலிட்டுக் கண்கள் சிவந்து துய ரத்தில் மூழ்கியிருந்த தேவயானியைப் பார்த்து என்ன நடந்தது என்று கேட்டாள். 

“அம்மணி விரைவாகப் போய் தகப்பனாரிடம் சொல், விரு ஷபர்வனுடைய நகரத்துக்குள் இனி நான் கால் வைக்க மாட்டேன்’ என்று தேவயானி அவளைச் சுக்ராச்சாரியரிடம் அனுப்பினாள். 

சுக்ராச்சாரியர் தன் குமாரியின் நிலையை அறிந்து மிக வும் துக்கப்பட்டு அவளிருந்த இடம் வந்து சேர்ந்தார். அவளை இரண்டு கைகளாலும் தழுவிக்கொண்டு” துக்கமும் சந்தோஷ மும் வெளி நிகழ்ச்சிகளில் இல்லை. நீ யார் பேரிலும் கோபிக் காதே. பிறருடைய குணதோஷம் நமக்கு ஒரு தீங்கும் இழைக்க முடியாது, என்று வேதாந்தத்தை எடுத்து சொல்லிப் பார்த்தார். 

”தந்தையே! என் குற்றங்களும் குணங்களும் இருந்தவாறு இருக்கலாம். அதற்கு நான் அதிகாரி. உன் அப்பன் அரசர்களி டம் ஸ்தோத்திரம் பாடுகிறவன்’ என்று விருஷபர்வனுடைய மகள் சர்மிஷ்டை சொன்ன பேச்சு உண்மையா? ஸ்தோத்திரம் பாடி யாசித்துக் கையேந்திப் பிழைப்பவனான ஒருவனுடைய பெண் என்று என்னை அவள் சொன்னாளே; நான் எவ்வளவு பொறு மையாக இருந்தும் சர்மிஷ்டை பலமுறை இந்த அகங்காரப் பேச்சைச் சொன்னாள். என்னை அடித்துக் குழியிலும் தள்ளி விட்டுப் போய்விட்டாள். அவளுடைய தகப்பன் அதிகாரம் நடத்தும் ஊரில் நான் வாசம் செய்ய முடியாது என்று தேவ யானி கோபமும் துக்கமும் மேலிட்டு அழுதாள். 

சுக்ராச்சாரியர் ‘தேவயானி ! ஸ்தோத்திரம் செய்ப வனுடைய பெண் அல்ல நீ. யாசித்துப் பிழைப்பவன் அல்ல உன் தகப்பன். உலகமெல்லாம் துதிக்கும் ஒருவனுடைய பெண்ணாவாய் நீ. தேவேந்திரனுக்கே இது தெரியும். விருஷபர்வனுக்கும் இது தெரியும். யோக்கியனானவன் தன் குணங்களைப் பற்றித்தானே புகழ்வதில் வருத்தம் அடைகிறான். ஆகையால் என்னைப் பற்றி அதிகம் சொல்ல முடியாது. எழுந்திரு, குலத்துக்குச் சிறப்புக் காண்டு வரும் பெண் ரத்தினமே! பொ று மையை அடைவா யாக. வீடு செல்வோம் வா என்று தேவயானியைச் சுக்கிரர் தேற்றினார். 

இவ்விடத்தில் வியாச பகவான் – சுக்கிராச்சாரியர் தன் பெண் ணுக்கு உபதேசம் செய்வதாக வைத்து உலகத்துக்கு உபதேசிக்கிறார். 

“அயலார் சொல்லும் நிந்தனைச் சொற்களை எவன் பொறுத் துக் கொள்கிறானோ அவன் உலகத்தை எல்லாம் ஜயிப்பான். கடிவாளத்தைப் பிடிப்பவன் அல்ல சாரதி. குதிரையை அடக்கு வது போல் கோபத்தை எவன் அடக்குகிறானோ அவன்தான் உண் மையான சாரதியாவான். பாம்பு சட்டையை உரிப்பது போல் வந்த கோபத்தை எவன் நீக்கி விடுகிறானோ அவன் தான் ஆண்மை படைத்தவன். பிறர் எவ்வளவு வருத்தினாலும் எவன் வருந்தாமலிருக்கிறானோ அவனே காரிய சித்தி அடைவான். மாதம் தவறாமல் யாகம் செய்து கொண்டு நூறுவருஷ காலம் கழித்தவனைக் காட்டிலும் கோபிக்காதவன் மேலான தீக்ஷித்னா வான். கோபிக்கிற சுபாவமுள்ளவனை வேலைக்காரனும், சிநேகி தனும், சகோதரனும், பாரியையும், பெற்ற புத்திரனும் விட்டு விலகிப் போவார்கள். தருமமும் சத்தியமும் எல்லாமே வி விலகிப் போகும். சிறுவர்களும் சிறுமிகளும் பேசிய பேச்சை அறிவுள்ளவர்கள் பொருட்படுத்தவே மாட்டார்கள். 

“பிதாவே! நான் சிறு பெண். ஆயினும் தாங்கள் சொல்லும் தரும சூக்ஷ்மத்தை அறிவேன். எப்படியாயினும் ஒழுக்கமும் மரி யாதையும் தவறினவர்களிடம் தாங்கள் வசிப்பது சரியாகாது. குலத்தை நிந்திப்பவர்களுடன் அறிஞர்கள். சகவாசம் செய்ய மாட்டார்கள். ஒழுக்கம் கெட்டவர்கள் எவ்வளவு தனவான்களா யிருந்தாலும் சண்டாளர்களே ஆவார்கள். அவர்களிடம் சாதுக் கள் வசிக்கலாகாது. விருஷபர்வனுடைய மகள் சொன்ன சொல் லால் கடையப்படும் அரணிக் கட்டையைப் போல் என் மனம் தீப்பற்றி எரிகிறது. ஆயுதங்களினால் உண்டான காயம் ஆறும். தீயினால் உண்டான் புண்ணும் ஆறும். சொல்லினால் உண்டான புண் தேகம் உள்ள வரையிலும் ஆறாது என்று தேவயானி தகப்பனை வணங்கிச் சொன்னாள். 

சுக்கிராசாரியர் விருஷபர்வனிடம் போனார். அரசன் சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். 

“அரசனே! செய்யும் பாவம் உடனே பலனைத் தராமலிருக்கலாம். ஆனாலும் முடிவில் குலத்தின் வேரையே அறுத்துவிடும். இந்திரியங்களை ஜயித்து ஏதொரு பாபமும் அறியாமல் தருமத்தைக் காத்து என் வீட்டில் அன்புடன் பணிவிடை செய்து பிரம்ம சரியம் நடத்திவந்த பிருகஸ்பதி குமாரன் கசனை நீ உன் ஆட்களால் முந்திக் கொல்வித்தாய், அதையும் பொறுத்தேன். மானமே பெரிதாக உணர்ந்த என் மகள் தேவயானி உன் மகளிடம் அவமானப் பேச்சைக் கேட்டாள். கி ணற்றிலும் தள்ளப் பட்டாள். அவள் இன நகரத்தில் வசிக்கமுடியாதவளா யிருக் கிறாள். அவளில்லாமல் நானு ம் ங்கே வசிக்க முடியாது. ஆதலால் மகாராஜனே உன் தேசத்தை விட்டு நான் வெளியேறு வேன்: நீ விசனப்படவேண்டாம். என்றார். 

இதைக் கேட்டு அசுரராஜன் திடுக்கிட்டு “தாங்கள் சொன்ன விஷயங்களில் நான் ஒரு பாவமும் அறியாதவன். தாங்கள் என்னை விட்டுப் போனால், நான் அக்கினியில் தான் பிரவேசிக்க வேண்டும்’ என்றான். 

“நீயும் உன் அரக்கர்களும் அக்கினியில் விழுந்தாலும் சரி, கடலில் விழுந்து பிராணனை விட்டாலும் சரி, என் மகளுடைய துக்கத்தை நான் தாங்க முடியாது. அவள் எனக்கு உயிரைக் காட்டிலும் பிரியமானவள். அவளை நீ சமாதானப்படுத்தினால் சரி. இல்லாவிட்டால் நான் உன்னை விட்டுப் பிரியவேண்டியது அவசியம்’ என்றார் சுக்கிராசாரியர். 

விருஷபர்வன் தன் சுற்றத்தாரைக் கூட்டிக் கொண்டு தேவ யானி இருந்த மரத்தடிக்குப் போய் அவள் காலில் விழுந்தான். 

யாசிப்பவன் மகள் என்று என்னைச் சொன்ன சர்மிஷ்டை எனக்கு வேலைக்காரியாக அமையவேண்டும். 

என் பிதா என்னை எந்த இடத்தில் கொடுக்கிறாரோ அங்கே அவளும் என் பின்னே தாசியாகச் செல்லவேண்டும்’ என்று பிடிவாதமாகச் சொன்னாள் தேவயானி. 

வேறு வழியில்லாமல் விருஷபர்வன் “அப்படியே” என்று நாதிகளுக்குச் சொல்லிச் சர்மிஷ்டையை அழைத்து வர உத்தர விட்டான். 

சர்மிஷ்டையும் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு பணிந்தாள். “தோழி தேவயானி எப்படி விரும்புகிறாளோ அவ் வாறே நடக்கட்டும். என் பிழையினால் என் தகப்பனார் ஆசாரி யரை இழக்க வேண்டாம். அவளுக்கு நான் தாசியாகவே இருப்பேன்”  ன்று சர்மிஷ்டை ஒப்புக்கொண்டாள்.தேவயானி சமாதானமடைந்து தகப்பனாருடன் ஊருக்குள் பிரவேசித்து வீடு சென்றாள். 


பிறகு ஒரு நாள் தேவயானி யயாதியை மறுபடியும் வனத் தில் கண்டாள். என் வலது கையைப்பிடித்த நீர்என்னை மனைவி யாகக் கொள்ளவேண்டும்’ என்று தேவயானி மறுபடியும் யயாதி யைக் கேட்டுக் கொண்டாள். க்ஷத்திரியன் பிராமணப் பெண்ண எவ்வாறு விவாகம் செய்து கொள்ள முடியும்?; என்று அவன் மறுபடியும் ஆட்சேபிக்க, இருவரும் சுக்ராசாரியரிடம் சென்று அவரைக் கேட்டு விவாகத்திற்கு அவருடைய அனுமதியைப் பெற்றார்கள். சிலசமயம் பிரதிலோம விவாகங்களும் நடை பெற் றன என்பதற்கு இது உதாரணம். இது முறையாகும், இது முறை யாகாது என்று சாஸ்திரம் சொல்லுமே யொழிய, எந்தவிதமான விவாகமும் நடந்து விட்டபின் புறக்கணிக்கப்படமாட்டாது. பழைய தருமசாஸ்திரம். 

யயாதியும் தேவயானியும் வெகு நாட்கள் சுகமாகக் காலம் கழித்தார்கள்; சர்மிஷ்டை தாசியாக இருந்து வந்தாள். ஒரு நாள் சர்மிஷ்டை யயாதியைத் தனியாகக்கண்டு தன்னையும் விவா கம் செய்துகொள்ள அவனை மிகவும் வேண்டிக்கொண்டாள். அரசனும் அவளுடைய பேச்சுக்கு ணங்கி தேவயானிக்குத் தெரியாமல் அவளை இரகசியமாக விவாகம் செய்து கொண்டான். 

தேவயானிக்கு இது தெரிந்தது. கோபத்தினால் பரவச மடைந்தாள். தனக்கு யயாதி தந்த வாக்கையும் சத்திய பிரதிக்ஞையையும் பொய்யாக்கிவிட்டான் என்று அவள் தகப் பனாரிடம் முறையிட்டாள். சுக்ராச்சாரியர் கோபங் கொண்டு உடனே மூப்பு அடைவாயாக!” என்று யயாதிக்குச் சாபம் இட்டார். 

நடு யௌவன பருவத்தில் இவ்வாறு திடீர் என்று கிழவ னாய்விட்ட யயாதி சுக்கிராசாரியரியரைப் பலவாறு வேண்டிக் கொண்டான். ‘பிழை செய்தவனைப் பொறுத்தருள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். மகளுடைய உயிரைக் காப்பாற் றினவன் என்று அவரும் மனமுருகி, 

”அரசனே! நீ மூப்பை அடைந்தாய். அதை என்னால் மாற்ற இயலாது. ஆனால் உன் மூப்பை வேறொருவனுடைய சம்மதம் பெற்று – நீயே மாற்றிக்கொள்ளலாம். அவன் இளமையை நீ அடைந்து உன் மூப்பை அவனுக்குத் தரலாம்” என்று சொல்லி, ஆறுதல் தந்து யயாதியை ஆசீர்வதித்து அனுப்பினார்.

யயாதி 

பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவன் யயாதி சக்ர வர்த்தி.தோல்வி என்பதையே அறியாத பராக்கிரமசாலி. எப் போதும் நியமம் காத்துப் பிதிருக்களையும் தேவர்களையும் மிகுந்த பக்தியுடன் பூஜை செய்து வந்தான். பிரஜைகளுக்கெல்லாம் நன்மை செய்து மிக்க கீர்த்தி பெற்றான். 

தருமம் தவறாமல் இவ்விதமாக ராஜ்யத்தைப் பரிபாலித்து வந்த யயாதி தன் மனைவி தேவயானிக்குச் செய்த தவற்றின் பய னாக மாமனார் சுக்ராசாரியர் இட்ட சாபத்தினால் திடீர் என்று மூப்பை அடைந்தான். ரூபத்தை அழிப்பதும் துன்பத் தைத் தருவதுமாகிய மூப்பை அடைந்தான்'” என்றார் பாரதம் பாடிய கவி. விருத்தாப்பியம் அடைந்த அனைவரும் அதிலுள்ள துக்கத்தை அறிவார்கள். அதிலும் நடுயௌவனத்திலிருக்கும் ஒருவன் திடீர் என்று மூப்பை அடைந்து விட்டால் சொல்ல வேண்டுமா? 

இவ்வாறு இயற்கைக்கு மாறாகத் திடீர் என்று கிழத்தனத்தை அடைந்த யயாதிக்கு ஐந்து அழகிய குமாரர்கள் இருந்தனர். அவர்கள் எல்லாரும் க்ஷத்திரியக் கலைகளில் பயிற்சி பெற்ற நல்ல குணவான்கள். அவர்களை அழைத்து யயாதி உங்கள் பாட்ட னார் சுக்ராசாரியருடைய சாபத்தினால் இந்த மூப்பை நான் எதிர் பாராத வண்ணம் அடைந்து விட்டேன். புத்திரர்களே! இது வரையில் நான் நியமங்களிலேயே என் காலமெல்லாம் கழித்துவிட் டேன். நான் போகங்களைத் திருப்திப்பட அனுபவிக்கவில்லை. என் மூப்பைப் பெற்றுக்கொண்டு உங்களில் ஒருவன் தன் இளமைப் பருவத்தை எனக்குக் கொடுக்கவேண்டும். அவ்வாறு எவன் கிழத் தனமடைந்த என் சரீரத்தை எனக்காக ஒப்புக் கொள்ளுகிறானோ அவன் என் ராஜ்யத்தை ஆளக்கடவன். அவனுடைய இளம் சரீ ரத்துடன் காமசுகங்களை அடைய நான் விரும்புகிறேன்” என்றான். 

முதலில் மூத்த குமாரனைக் கேட்டான். அவன், மகா ராஜாவே! உம்முடைய கிழத்தனத்தை நான் பெற்றுக் கொண் டேனானால் ராஜ்யாதிகாரத்தில் என்ன சுகம் காண்பேன்? பெண் களும் வேலைக்காரர்களும் என்னைப் பார்த்துச் சிரிப்பார்களே! என்னால் முடியாது; என்னைக் காட்டிலும் உமக்குப் பிரியமான என் தம்பிகளைக் கேளும்” என்றான். 

இரண்டாம் மகனைக் கேட்டதற்கு அவனும், “தந்தையே! பலத்தையும் ரூபத்தையும் மட்டுமல்லாமல் அறிவையும் அழிப்ப தான மூப்பைப் பெற்றுக்கொள்ளச் சொல்கிறீர். இதற்கு இசைய எனக்குப் போதிய தைரியம் இல்லை” என்று மரியாதையாக மறுத்து விட்டான். 

மூன்றாம் மகனும், “கிழவனுக்கு யானை ஏற் முடியாது? குதிரை ஓட்டமுடியாது. பேச்சும் தடுமாறும். அந்த நிலையில் நான் என்ன செய்யமுடியும்? அவ்வாறு ஒன்றும் செய்யமுடியாத நிலைமையில் உயிருடன் இருந்து என்ன பயன்? என்னால் ஒப்புக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டான். 

இவ்வாறு மூவரும் மறுத்துவிட அரசனுக்குக் கோபம் பொங் கிற்று. நான்காது குமாரனைப் பார்த்து, நீ சில காலத்துக்கு- என் மூப்பைப் பெற்றுக்கொள்ளக் கடவாய். சில காலத்திற்கு ன் இளமையை எனக்குத் தந்தாயானால் பிறகு உனக்குத் திருப்பி கொடுத்துவிட்டு, எனக்குச் சாபமாக வந்த மூப்பை நானே எடுத்துக் கொண்டு விடுவேன்” என்றான். 

இவ்வாறு பரிதபித்துக் கெஞ்சின அரசனைப் பார்த்து “அரசனே! மன்னிக்கவேண்டும். கிழவன் தட்டுத் தடுமாறி உடல் அசுத்தம் நீங்கிக் கொள்வதற்குக் கூடப் பிறர் உதவியை நாட வேண்டியதாகும். நீர் சொல்லுவதை ஒப்புக்கொண்டால் நான் எல்லாக் காரியங்களிலும் சுதந்திரத்தை இழந்து வாழ்க்கையைத் துக்கத்துடன் நடத்த வேண்டியவனாவேன். இது எனக்குப் பிடிக்க வில்லை என்று நான்காவது மகனும் சொல்லி விட்டான். 

இவ்வாறு நான்கு புதல்வர்களாலும் நிராகரிக்கப்பட்ட யயாதி துயரத்தில் மூழ்கினான். கொஞ்ச நேரங் கழித்துத் தன் சொல்லை எப்போதும் தவறாத கடைசிக் குமாரனைப் பார்த்து, நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். இந்த மூப்பும் கோர மான தோல்மடிப்புகளும் தள்ளாமையும் நரையும் சுக்ராசாரிய ருடைய சாபத்தினால் பெற்றேன். இதை நான் பொறுக்க முடிய வில்லை.இந்தத் துன்பத்தை நீ என்னிடமிருந்து பெற்றுக் கொண் டால் நான் சில காலம் போகங்களை அனுபவித்துவிட்டுப் பிறகு உன் இளமையை உனக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டு மூப்பை யும் துக்கத்தையும் வாங்கிக் கொள்வேன். உன் அண்ணன்மார் களைப்போல் நீயும் மறுத்துவிட வேண்டாம்!” என்று இறைஞ்சினான். 

கடைசி ராஜகுமாரனான புரு என்பவன் அன்பு மேலிட்டு அப்பனே! உன் கட்டளையின்படி நான் சந்தோஷமாகச் செய் கிறேன். மூப்பையும் ராஜ்ய பாரத்தையும் எடுத்துக்கொள்கி றேன் என்று சொன்னவுடன் யயாதி அவனைக் கட்டி அணைத் துக் கொண்டான். 

மகனை இவ்வாறு தீண்டின டன் குமாரனுடைய இள மையை யயாதி அடைந்தான். மூப்பைப் பெற்றுக் கொண்டு கடைசி மகனான புரு என்பவன் ராஜ்ய பாலனம் செய்து பெரும் கீர்த்தி பெற்றான். 

யயாதி தன் இரண்டு பத்தினிகளுடன் நீண்ட காலம் காம சுகம் அனுபவித்தான். அதன் பின் குபேரனுடைய உத்யான வனத்தில் ஒரு அப்ஸரஸுடன் அநேக ஆண்டுகள் ரமித்தான். இவ்வாறு பல வருஷங்கள் கடந்தன. ஆயினும் யயாதி திருப்தி அடையவில்லை! பிறகு மகனிடம் திரும்பி வந்து அவனுக்கு யயாதி சொன்னதாவது? 

“என் பிரியமுள்ள மகனே! காமத் தீயானது விரும்பின வற்றை அனுபவிப்பதனால் ஒரு பொழுதுதும் ஆறாது. நெய்யினால் அக்கினி ஆறாமல் மேலும் மேலும் ஜொலிப்பதுபோல் விஷய அனுபவத்தினால் ஆசைகள் விருத்தி ஆகுமே தவிரத் தணிவது டையாது என்பதைப் படித்தேனே ஒழிய உண்மையை உணர வில்லை. இப்போது அறிந்தேன். நெல்லும் பொன்னும் பசுவும் பெண்களும் மனிதன் ஆசையை ஒரு நாளும் தீர்க்கமுடியாது. விருப்பும் வெறுப்பும் இல்லாத சாந்த நிலையை அடைய வேண் டும். அதுவே பிரம்மநிலை. உன் இளமையை நீ பெற்றுக் கொண்டு ராஜ்யத்தைக் கீர்த்தியுடன் பரிபாலிப்பாயாக!” 

இப்படிச் சொல்லி யயாதி தன் மூப்பைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். இளமையை மறுபடி அடைந்த புருவை ராஜ்ய பரிபாலனம் செய்ய அமைத்து விட்டு யயாதி வனம் சென் றா றன். அங்கே பல்லாண்டுகள் தவம் செய்து சுவர்க்கம் அடைந்தான். 

விதுரன் 

மன உறுதியும் சாஸ்திர அறிவும் பெற்றுச் சத்தியத்திலும் தவத்திலும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த மாண்டவ் யர், ஊருக்கு வெளியே ஒரு வனத்தில் ஆசிரமம் கட்டிக்கொண்டு வசித்து வந்தார். ஒரு நாள் அவர் ஆசிரமத்துக்கு வெளியே ஒரு மரத்தடியில் மௌனத்தில் ஆழ்ந்திருந்தபோது சில கொள்ளைக் காரர்கள் அந்தப் பக்கம் வந்தார்கள். அரசனுடைய சேவகர்கள் அவர்களைத் துரத்தி வந்தபடியால் அகப்படாமல் பதுங்கி இருப் பதற்கு அந்த இடம் வசதியாக இருக்கும் என்று எண் னி ஆசிர மத்தில் பிரவேசித்தார்கள்.கொள்ளை யடித்துக் கொண்டு வந்த சொத்துக்களை அங்கே ஒரு மூலையில் வைத்து விட்டு மற்றொரு புறம் அவர்களும் ஒளிந்து கொண்டார்கள். அரசனுடைய சேவ கப் படையாட்கள் திருடர்கள் சென்ற வழியைத் தொடர்ந்து கொண்டு ஆசிரமத்தண்டை வந்து சேர்ந்தார்கள். 

மெளனமாக உட்கார்ந்து யோகத்தில் அமர்ந்திருந்த மாண் டவ்யரைப் பார்த்துப்படைத் தலைவன் திருடர்கள் இந்தப் பக் கம் வந்தார்களே, அவர்கள் எந்த வழியாகச் சென்றார்கள்? சீக் கிரம் சொல்லுங்கள்” என்று கேட்டான். யோகத்தில் ஆழ்ந்திருந்த முனிவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை. படைத் தலைவன் மறு படியும் அதட்டிக் கேட்டான். 

முனிவர் காதில் ஒன்றும் படவில்லை. இதற்குள் சேவ்கர் களில் சிலர் ஆசிரமத்துக்குள் பிரவேசித்துக் களவு போன சொத் துக்கள் அங்கே இருப்பதைக் கண்டு படைத் தலைவனைக் கூப்பிட் டார்கள். எல்லாரும் உள்ளே போய்ப் பார்த்ததில் களவுபோன எல்லாச் சொத்துக்களும் சிக்கின. ஒளிந்திருந்த திருடர்களை யும் கண்டார்கள். 

”ஓகோ! பிராமணர் ஒன்றும் பேசாமல் மௌன வேஷம் போட்டதனுடைய காரணம் இப்போது தெரிந்து விட்டது. இவரே திருடர்களுக்குத் தலைவர். வருடைய ஏவுதலினாலே தான் இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது” என்று தீர்மானித்து ஆட்களை அங்கேயே காவல் வைத்து விட்டுப் படைத் தலைவன் மட்டும் அரசனிடம் சென்று கையுங் களவுமாக மாண்டவ்ய ரிஷி யைப் பிடித்து விட்டதாகச் சொன்னான். 

பிராமணன் திருட்டுக் கூட்டத்திற்குத் தலைவனாக இருந்து கொண்டு ரிஷிவேஷம் போட்டு உலகத்தை ஏமாற்றி வந்திருக் கிறான் என்று அரசன் மிகுந்த கோபங் கொண்டு “மோசக்காரப் பாதகனை உடனே சூலத்தில் ஏற்றுங்கள்’” என்று விவரம் விசா ரிக்காமல் தண்டனை கொடுத்து விட்டான். 

படைத் தலைவன் திரும்பிச் சென்று, மாண்டவ்யரை அங்கேயே சூலத்தில் ஏற்றி விட்டுக் கைப்பற்றின களவுச் சொத்துக் களை அரசனிடம் ஒப்பித்து விட்டான். 

சூலத்தில் குத்தியேற்றப்பட்ட தர்மாத்மாவான முனிவரோ வெகு காலம் வரையில் மரணம் அடையவில்லை. யோகத்திலிருந்த காலத்தில் குத்தப்பட்டபடியால் அந்த யோக சக்தியால் அப் படியே உயிருடன் இருந்து வந்தார். வனத்தில் அங்கங்கே இருந்த ரிஷிகள் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள். ஓ மாண்டவ்யரே இந்தப்பயங்கரமான துயரத்தைத் தாங்கள் ஏன் அடைந்தீர்கள்?” என்று தபோதனர்கள் கேட்டனர். 

“நான் யாரிடத்தில் குற்றம் சொல்லுவேன்? உலகத்தைக் காக்கும் அரசனுடைய சேவகர்கள் இவ்வாறு எனக்குச் சிக்ஷை கொடுத்திருக்கிறார்கள்” என்று மாண்டவ்யர் சொன்னார். 

சூலத்தில் ஏற்றப்பட்ட ரிஷி அன்ன ஆகாரமின்றி உயிரு டனே இருக்கிறார் என்றும், அவரைக் சுற்றி வனத்திலிருக்கும் மற்ற ரிஷிகள். வந்து கூடியிருக்கிறார்கள் என்றும் அரசனுக்குச் சமாசாரம் ‘எட்டியது. அரசன் வியப்பும் திகிலும் அடைந்து உடனே பரிவாரத்துடன் வனத்துக்குப் போனான். அரசன் ரிஷி யினுடைய நிலையைப் பார்த்துப் பிரமித்துப் போய் உடனே லத்திலிருந்து அவரை இறக்கிவிட உத்திர விட்டு அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து அறியாமையால் நான் இந்த அபராதம் சய்து விட்டேன். என்னை மன்னிக்க வேண்டும். என்று கெஞ்சினான். 

மாண்டவ்யர் அரசன் மேல் கோபிக்கவில்லை. நேராக தரும தேவதையிடம் சென்றார். ஆசனத்தில் வீற்றிருந்த தருமதேவதை யைக் கண்டு ”இந்த உபத்திரவத்தை அனுபவிக்கும்படியான கருமம் நான் என்ன செய்தேன்? சொல்லக் கோருகிறேன்” என்று கேட்டார். 

ரிஷியின் தவவலிமையை அறிந்த தருமதேவன் பயந்து பணிந்து ‘சுவாமி, நீர் பக்ஷிகளையும் வண்டுகளையும் இம்சித்தீர்; சொற்பமா யிருந்தாலும் தானமும் பாவமும் மிகுந்த அளவில் நற் பயனையும் தீய பயனையும் தரும் என்பது உமக்குத் தெரியுமல் லவா?’ என்று பதில் சொன்னான். 

தருமன் சொன்னதைக் கேட்ட மாண்டவ்யர் வியப்புற்று “இந்த இம்சையை நான் எப்போது செய்தேன்?” என்று கேட்டார். 

“நீர் குழந்தையாக இருந்த காலத்தில் செய்தீர்” என்றார்; “சிறு பையன் அறியாமையால் செய்த குற்றத்திற்குப் பெரிய தண்டனை உன்னால் விதிக்கப்பட்டது. இதற்காக நீ பூலோகத்தில் மனுஷ்யனாகப் பிறப்பாய்'” என்று தருமதேவதையை மாண் டவ்ய ரிஷி சபித்தார். 

இவ்வாறு மாண்டவ்ய ரிஷியின் சாபத்தைப் பெற்ற தரும தேவதை விசித்திரவீரியனின் மனைவி அம்பாலிகையிலுடைய வேலைக்காரியின் வயிற்றில் விதுரனாக அவதரித்தான். 

தர்ம தேவதையின் அவதாரமே விதுரன் என்பதற்கு இந் தக் கதை. விதுரன் தர்ம சாஸ்திரத்திலும் ராஜ நீதியிலும் ஒப் பற்ற தேர்ச்சியடைந்து ஆசையும் கோபமுமற்ற மகாத்மா வென்று உலத்தில் பெரியோரெல்லாராலும் கருதப்பட்டான். பால்ய பருவத்திலேயே திருதராஷ்டிர ராஜாவுக்குப் பிரதான மந்திரியாக விதுரனைப் பீஷ்மர் அமைத்தார். 

விதுரனுக்கு ஒப்பான தர்ம நிஷ்டனும் அவனைப்போல் சிறந்த அறிவு பெற்றவனும் மூவுலகங்களிலும் யாரும் இல்லை என்று வியாசர் சொல்லுகிறார். திருதராஷ்டிரன் சூதாட்டத்துக்கு அனுமதி கொடுத்த காலத்தில் விதுரன் அவன் காலில் விழுந்து, “அரசனே! பிரபுவே! இந்தக் காரியத்தை நான் ஒப்பவில்லை. இந்தச் சூதாட்டத்தின் காரணமாக உமது புத்திரர்களுக்குள் விரோதம் வரும். வேண்டாம்” என்று மிகவும் வற்புறுத்தித் தடுத்தான். 

திருதராஷ்டிரனும், சூதாட்டம் வேண்டாம். விதுரன் அங் கீகரிக்கவில்லை. மிகவும் சிறந்த புத்தியுள்ள விதுரன் நமக்கு எப் போதும் நன்மையையே சொல்லுபவன் அவன் என்ன சொல்லும் கிறானோ அதுவேதான் நமக்கு நன்மை தரும். நிகழ்ந்ததும் நிக ழப் போவதும் அறிந்தவரான பிரகஸ்பதி எழுதிய சாஸ்திரமெல் லாம் விதுரன் அறிந்திருக்கிறான். வயதில் என்னைவிடச் சிறியவனாவினும் சிறந்த புத்திசாலியான விதுரனே நம்முடைய குலத்திற் குத்தலைவனாகக்கருதப்படுகிறான். மகனே! சூதாட்டம் வேண்டாம்! சூதாட்டத்தில் பெரிய விரோதம் வரும் என்று விதுரன் சொல் கிறான். நம்முடைய ராஜ்யத்தின் நாசத்தை அவன் தில் காண் கிறான். இந்தச் சூதாட்ட யோசனையை விட்டுவிடு” என்று வாறாகத் துஷ்ட புத்தி கொண்ட தன் மகனுக்குத் திருதராஷ் டிரன் சொல்லிப் பார்த்தான். ஆனால் அவன் கேட்கவில்லை.மக னிடத்தில் வைத்த அன்பினால் அவன் கோரியபடியே யுதிஷ்டி ரனுக்குச் சூதாட்ட அழைப்பு அனுப்பிவிட்டான். இந்த நிகழ்ச் சியைப் பற்றிப் பின்னால் வேறு அதிகாரத்தில் படிப்பீர்கள்.

குந்தி தேவி 

கண்ணனுடைய பாட்டனும் யாதவகுல சிரேஷ்டனுமான சூரன் என்பவனுக்குப் பிருதை என்ற ஒரு மகள் இருந்தாள். இவள் அழகிலும் குண விசேஷங்களிலும் உலகப் பிரசித்தமா யிருந்தாள். த ன் அத்தை மகனான குந்திபோஜனுக்குச் சந்தா னம் இல்லாதிருந்தபடியால் சூரன் தன் முதல் குழந்தையாகிய பிருதையை அவனுக்குச் சுவீகார மகளாகக் கொடுத்தான். அதன் பின் அவள் குந்திபோஜன் மகளாகவே குந்தி என்று அழைக்கப் பட்டு வந்தாள். 

குந்தி சிறு பெண்ணாக இருந்த காலத்தில் தகப்பனார் கிருகத் துக்கு அதிதியாக வந்த துருவாச மகரிஷிக்கு மிகவும் பொறுமை யுடனும் கவனத்துடனும் ஒரு வருஷ காலம் பணிவிடை செய்து பூஜித்து வந்தாள். அவர் மிக்க மகிழ்ச்சி யடைந்து ஒரு திவ்ய மந் திரத்தை அவளுக்கு உபதேசித்தார். “இந்த மந்திரத்தைச் சொ ல்லி நீ! எந்த தேவதையை எண்ணி அழைக்கிறாயோ அந்த தேவதை வந்து தன்னுடைய மகிமையைக் கொண்ட ஒரு புத்திரனை உனக் குத் தருவான்” என்று வரம் தந்தார். பின்னால் இவருடைய புரு ஷனுக்கு நேரிடப் போகிற ஆபத்தை ஞானக் கண்ணால் அறிந்து துருவாசர் இந்த வரத்தைத் தந்தார். 

சிறு பெண்ணானபடியால் தான் பெற்ற மந்திரத்தை உடனே பரீஷை செய்ய வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. ஆகாயத் தில் பிரகாசித்துக் கொண்டிருந்த சூரிய பகவானை எண்ணி மந்தி ரத்தைச் சொன்னாள். உடனே வானம் மேகங்களால் மறைந் தது. அழகிய உருவத்துடன் பகவான் சூரியன் ஒளி வீசிக்கொண்டு விசாலாட்சியழகி குந்தியிடம் வந்தான். தடுக்க முடியாத பிரி யமும் ஆகர்ஷண வேகமும் கொண்டு நின்றான். இந்த அற்புதத்தைக் கண்ட குந்தி திகைத்துப் போய், பகவானே! நீர் யார்? என்றாள். 

“பிரியமானவளே! நான் இவ்வுலகுக்குப் பிரகாசம் தரும் ஆதி த்தன். புத்திரலாபம் கொடுக்கும் மந்திரத்தைக்கொண்டு நீ ஏவி யபடியால் வந்தேன்” என்றான் சூரிய பகவான். 

குந்திதேவி நடுங்கி “நான் பிதாவுக்கு உட்பட்ட கன்னிகை. துருவாச ரிஷி கொடுத்த வித்தையைப் பரீக்ஷை செய்யத்தான் நினைத்தேன். சிறுமியுடைய குற்றத்தை மன்னிக்கவேண்டும்’ என்றாள். மந்திரத்தின் வசீகர சக்தியின் பயனாக சூரிய பகவா னுக்குத் திரும்பிப் போக முடியவில்லை. பழியை அஞ்சி நின்ற வளுக்குப் பலவகையாக அன்பு பாராட்டி, தைரியம் சொல்லி வற்புறுத்தினான். 

“ராஜகுமாரியே பயப்பட வேண்டாம். என் அனு க்கிரகத்தி ல் உனக்கு ஒரு குற்றமும் வராது. என்னைவிட்டுப் பிரிந்ததும் நீ மறுபடியும் முன்போல் பூரணகன்னியாகி விடுவாய்” என்று சொன்னான். 

உலகத்திற்கே ஒளியும் உயிரும் தருபவனான ஆதித்தன் குந் திக்குக் கருப்பத்தைத் தந்துவிட்டான். அதன் பயனாக ஆயுதம் தரித்தவர்களில் சிறந்த வீரனும், சூரியனைப் போன்ற ஒளியும் அழகும் பொருந்தியவனும், உடலோடு உடன் பிறந்த கவசமும் குண்டலங்களும் தரித்தவனுமான கர்ணனைக் குந்தி பெற்றாள். பெற்ற பின் சூரிய பகவானின் வரத்தின்படி மறுபடியும் கன்னி நிலை அடைந்து விட்டாள். 

*பாண்டுவுக்குக் குழந்தை உண்டாகாத சாபம் ஒரு ரிஷி டார். இது அடுத்த கதையில் சொல்லப்படும். 

குழந்தையைப் பெற்ற குந்தி திகைத்த நிலையில் என்ன செய் வது என்று தெரியாமல் பிறகு யோசித்து,தன் குற்றத்தை மறை ப்பதற்காக ஒரு பெட்டியில் சிசுவை வைத்துப் பத்திரமாக மூடி ஜலத்தில் விட்டு விட்டாள். தண் னீரில் மிதந்து கொண்டிருந்த அந்தப் பெட்டியைத் தேரோட்டி ஒருவன் எடுத்து அதிலிருந்த குழந்தையைப் பார்த்து மகிழ்ந்து தன் பாரியையிடம் கொடுத் தான். சூரிய குமாரனான கர்ணன் இவ்வாறு தேரோட்டியின் குழந்தையாக வளர்ந்தான். 

கர்ணனைப் பெற்றுவிட்டு மறுபடியும் கன்னியாகிய குந்தி விவா கத்துக்குத் தகுந்த வயது அடைந்தாள். குந்திபோஜன் ராஜ குமாரர்களை வரவழைத்து அவளைக் கொடுக்கச் சுயம்வர சபை கூட்டினான். நிகரற்ற அழகும் குணமும் கொண்ட ராஜ குமாரியை மனைவியாக அடையப் பல அரச குமாரர்கள் வந்து சேர்ந்தார்கள். அந்தச் சபையிலிருந்த எல்லாருடைய ஒளி யையும் மங்கச் செய்து சிம்மத்தைப்போல் வீற்றிருந்த குல சிரே ஷ்டனான பாண்டு ராஜனுடைய கழுத்தில் குந்திதேவி மாலையைப் போட்டாள். விவாகம் பூர்த்தி பெற்றுக் குந்திதேவி பாண்டு மகாராஜனுடன் ஹஸ்தினாபுரம் சென்றாள்.. 

இராஜ வம்ச வழக்கத்தின்படியும் பீஷ்மருடைய யோசனை யின்படியும் பாண்டு ராஜன் சில நாள் கழித்து மத்ர ராஜனுடைய சகோதரி மாத்ரியையும் இரண்டாவது மனைவியாகக் கொண்டான். புத்ரோத்பத்தியைப் பற்றிய கவலைக்காக அக்காலத்தில் இவ்வாறு அரசர்கள் இரண்டு மூன்று மனைவிகளைக் கொள்வது வழக்கம்; சிற்றின்பத்திற்காக அல்ல. 

தர்ம புத்திரன் 

யாதவர்களின் முடிவைப் பற்றியும் மாதவன் மறைந்து போனதைப் பற்றியும் அஸ்தினாபுரத்துக்குச் செய்தி வந்தது. 

அதைக் கேட்டதும் பாண்டவர்களுக்கு உலக வாழ்க்கையில் இருந்த பற்று முற்றிலும் போய் விட்டது. அபிமன்யுவின் குமாரனான பரீக்ஷித்துக்கு முடி சூட்டி விட்டு ஐவரும் திரளெபதியுடன் நகரத்தை விட்டுப் புறப்பட்டு யாத்திரை சென்றார்கள். பல இடங்களுக்குப் போய் முடிவில் இமய மலையை அடைந்தார்கள். அப்போது அவர்களுடன் ஒரு நாயும் சேர்ந்து சென்று கொண்டி ருந்தது. மலை ஏறிச் செல்லும்போது ஒருவர் பின் ஒருவராகத் திரௌபதியும் தம்பிகளும் விழுந்து உயிர் நீத்து உடல் பாரத் தினின்று விடுபட்டு மறைந்து போனார்கள். தம்பிகளும் மனைவி யும் வீழ்ந்து மரித்ததைப் பார்த்து மெய்ப் பொருளைக் கண்ட தரும புத்திரன் மனம் தளராமல் சென்றான். யுதிஷ்டிரனுக்கு நாய் மட் டும் துணையாகச் சென்றது. மனிதனுக்குத் துணை தருமம் ஒன்றே என்பதற்கு இந்தக் கதை வியாசரால் அமைக்கப்பட்டிருக்கிறது. நாய் உருவத்தில் தருமம் யுதிஷ்டிரன் கூடச் சென்றது. வெகு தூரம் போன பின் இந்திரன் ரதத்துடன் வந்து யுதிஷ்டிரன் முன் நின்றான். 

“உன் தம்பிகளும் திரௌபதியும் சுவர்க்கம் வந்து சேர் ந்து விட்டார்கள். நீ மட்டும் எஞ்சி நிற்கிறாய். தேகத்துடன் ரதத் தில் ஏறு. உன்னை அழைத்துப் போகவே வந்தேன் என்றான். 

யுதிஷ்டிரன் தேரில் ஏறப் போகும் போது நாயும் ஏறப் போயிற்று. “சுவர்க்கத்தில் நாய்க்கு இடமேது?’ என்று இந்திரன் நாயைத் தடுத்தான். 

யுதிஷ்டிரன் ‘அப்படியாயின் எனக்கும் இடமில்லை’ என்றுகூட வந்த நாயை விட்டுச் செல்ல மறுத்து விட்டான். யுதிஷ்டி ரனைச் சோதிக்கவே நாயாக வந்த தருமதேவதை தன் புத்திர னுடைய உறுதியைக் கண்டு மகிழ்ந்து மை மறைந்தது. 

யுதிஷ்டிரன் சுவர்க்கம் அடைந்தான். சுவர்க்கத்தில் தரும புத்திரன் முதலில் துரியோதனனைக் கண்டான். அந்தக் கெளர வன் சூரிய தேஜஸுடன் பிரகாசித்துக்கொண்டு அழகிய ஆசனத்தில் வீற்றிருப்பதையும் அவனைச் சூழ்ந்து வீர லட்சுமியும் தேவர் களும் நிற்பதையும் கண்டான். யுதிஷ்டிரன் அங்குள்ளவர்களை நோக்கி ‘பேராசையுள்ளவனும் குறுகிய திருஷ்டியுள்ளவனுமான ரியோதனனிருக்கும் இடத்தில் நான் இருந்து காலம் ழிக்க விரும்பவில்லை. எங்களைப் படாதபாடுபடுத்திய இவன் செய்த காரி யங்களின் பயனாக சிநேகிதர்களையும் பந்துக்களையும் கொன்றோம்; தருமத்தை அனுஷ்டித்த எங்கள் பத்தினி பாஞ்சாலி இவன் உத் திரவினால் சபை நடுவில் இழுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட் டாள். இந்தத் துரியோதனனைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. என்னுடைய தம்பிகள் எங்கே? அவர்களிருக்குமிடத்துக்குச் செல்ல நான் விரும்புகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து திரும்பினான். 

எல்லாம் அறிந்த தேவ ரிஷியான நாரதர் யுதிஷ்டிரனைப் பார்த்துச் சிரித்து, போகிறது. கஷ்டமான காலத்தை நீ உன் கண்ணால் பார்க்க வேண்டாம். நகரத்தை விட்டு விலகிப்போய்த் தபோவனத்தில் வாசஞ் செய்வதே மேலானது. இவ்வாறு வியாசர் சொன்ன தைச் சத்தியவதி அங்கீகரித்து அம்பிகை அம்பாலிகை இருவரை யும் கூட அழைத்துக் கொண்டு வனம் சென்றாள். அங்கே தபஸ் விகளாகக் கொஞ்ச காலம் கழித்து விட்டுக் குலத்தில் நடக்கப் போகும் அநியாயங்களைப் பாராமல் இந்த மூன்று மூதாட்டிகளும் மேலுகம் சென்றார்கள். 

பீமன் 

ஹஸ்தினாபுரத்தில் பாண்டு புத்திரர்களும் திருதராஷ்டிர நூறு குழந்தைகளும் உ ற்சாகமாக விளையாடிக்கொண்டு வளர்ந்தனர். அவர்கள் எல்லாரையும்விடப் பீமசேனன் தேகவன் மையில் மிஞ்சி யிருந்தான்.விளையாட்டுகளிலெல்லாம் அவன் துரி யோ தனாதியரைத் தலைமயிரைப் பிடித்து இழுத்தும் அடித்தும் தொந்தரவு செய்வான். அவர்களில் பத்துப் பேர்களைப்பிடித்துக் கொண்டுகுளத்தில் முழுகுவான். அவர்கள் மூச்சு திக்குமுக்காடித் ணறும் வரையில் அவர்களுடன் தண்ணீருக்குள் மூழ்கியிருந்து பிறகு மேலே வருவான். மரத்தின மேலேறி அவர்கள் பழம் பறித்துக் கொண்டிருக்கையில் இவன் கீழே இருந்து கொண்டு காலால் மரத்தை உதைப்பான். உதையின் வேகத்தினால் மேலிரு ந்த பையன்கள் பழங்களைப் போல் மரத்திலிருந்து கீழே விழுவார் கள். பீமசேனனுடைய விளையாட்டினால் திருதராஷ்டிரனுடைய குழந்தைகளுக்கு உடல் முழுதும் எப்போதும் காயமாக இருக்கும். இத்தகைய பால்ய சேஷ்டையினால் குழந்தைப் பருவம் முதற்கொண்டு திருதராஷ்டிர புத்திரர்களுக்குப் பீமன் பேரில் அதிக விரோதம் ஏற்பட்டு வந்தது. 

போதிய வயது வந்ததும் எல்லாரும் கிருபாச்சாரியிடம் ஆயுதப் பயிற்சியும் வித்தியாப்பியாசமும் பெற்று வந்தார்கள். பீமசேனன் பேரில் துரியோதனன் கொண்ட பொறாமை அவனுடைய மதியைக் கெடுத்துச் செய்யக்கூடாத செயல்களில் அவனை ஏவிற்று. 

துரியோதனனுக்குப் பெரிய கவலை. தன் தகப்பனார் பிறவிக் குருடனாகையால் ராஜ்யம் பாண்டுவின் வசம் போய் விட்டது. ஆகையால் யுதிஷ்டிரனே யுவராஜ பட்டாபிஷேகம் பெறுவான். பிறகு அவனே அரசனாவான். கண் னில்லாத திருதராஷ்டிரன் தனக்கு ஒன்றும் செய்ய முடியாதவனாக இருக்கிறான். இவ்வா றெல்லாம் எண் னிப் பீமனைக் கொன்றுவிட வேண்டும் என்றே நிச் சயித்தான். அவனைக் கொன்றால் பாண்டவர்களுடைய கொட்டம் முழுதும் அடங்கும் என்று எண்ணி அதற்கு வேண்டிய ஏற்பாடு கள் செய்தான். அவனைக் கங்கையில் தள்ளி விட்டுப் பிறகு அரு சுனனையும், யுதிஷ்டிரனையும் பிடித்துச் சிறையில் போட்டு, பூமி யை யாள்வோம் என்று துரியோதனனும் அவன் தம்பிகளும் தீர்மானித்தார்கள். 

ஒரு நாள் துரியோதனன் ஜலக்கிரீடைக்கு வெகு விமரிசை யாக ஏற்பாடு செய்தான். எல்லாரும் கங்கைக் கரையில் விளை யாடிவிட்டுப்போஜன பண்டங்கள் புசித்துக் களைப்புற்றுக் கூடாரங் களில் தூங்கினார்கள்பீமசேனன் எல்லாரையும்விட அதிகமாக் விளை யாடியவனா ன்படியா LO அவன் தின்ற பண்டங்களில் விஷம் கலந்திருந்தபடியாலும் மயக்கம் மேலிட்டு ஜலக்கரையிலேயே தரையில் படுத்துத் தூங்கினான். அந் நிலையில் து. ரியோதனன அவ னைக்காட்டுக்கொடிகளினால் மெள்ளக் கட்டிப்போட்டுக் கங்கையில் தள்ளிவிட்டான். அந்த இடத்தில் துரியோதனன் முந்தியே உத் தரவிட்டிருந்தபடி ஜலுத்தில் கூரிய சூலங்கள் நடப்பட்டிருந்தன. அவற்றின் மேல் விழுந்து உடனே உயிர் போய்விடுவதற்காக இந்த ஏற்பாடு! தற்செயலாக பீமன்விழுந்த இடத்தில் சூலங்கள் இருக்க வில்லை. ஜலத்தில் இருந்த கொடிய விஷப் பாம்புகள் பீமனைக் கடித்தன. அவன் உணவில் சேர்க்கப்பட்டு அவன் உட்கொண்டிருந்த விஷம் இந்தப் பாம்புகளின் விஷத்துடன் கலந்து ஒன்றை ஒன்று கண்டித்து விட்டது. பீமசேனன் விஷத்தால் துன்பம் ஏதும் நேராமல் விழித்துக் கொண்டான். 

விஷப் பாம்புகள் நிறைந்ததும் சூலங்கள் நட்டிருந்தது மான நீர் மடுவில் த ள்ள ப்பட்ட பீமன் செத்தே போனான் என்று எண்ணி மற்றவர்களை யெல்லாம் அழைத்துக் கொண்டு துரியோதனன் ஊருக்குத் திரும்பினான். 

பீமசேனன் எங்கே என்று, யுதிஷ்டிரன் கேட்டதற்கு அவன் நமக்கு முன்னேயே நகரத்துக்குப் போய்விட்டான் என்று துரியோதனன் சொன்னதை யுதிஷ்டிரன நம்பினான். வீட்டுக்குப் போனதும் தாயார் குந்தியைப் பார்த்து. அம்மா! பீமன் எங்கே? அவன் எங்களுக்கு முன்னேயே வந்தானாமே? அவன் இங்கே வந்து விட்டு வேறு எங்கேயாவது போனானா?” எ ன் று மனக் கலக்கமடைந்து விசாரித்தான். பீமன் திரும்பிவரவில்லை என்று தெரிந்ததும் எதோ மோசம் நடந்திருப்பதாகச் சந்தேகப்பட்டு யுதிஷ்டிரனும் தம்பிகளும் வனத்துக்குத் திரும்பிப் போய் எல்லா இடமும் தேடிப் பார்த்தார்கள். ஆனால் பீமன் சிக்கவில்லை. மிக்க விசனத்துடன் வீடு திரும்பினார்கள். 

பிறகு ஜலத்தில் விழித்துக்கொண்ட பீமன் நீந்திக் கரை யேறி எங்கெங்கேயோ அலைந்து தனியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். குந்தியும் யுதிஷ்டிரனும் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள். விஷங்கள் உடம்பில் கலந்து முன்னைவிட அதிக தேகபலம் கொண்டவனாய் விட்டான்! 

குந்தி விதுரனைக் கூப்பிட்டு அவனிடம் ரகசியமாக, 

“துரியோதனன் கொடியவன்; கெட்ட எண்ணம் கொண்டவன். ராஜ்ஜியத்தில் ஆசை வைத்து, பீமனைக் கொல்லப் பார்க் கிறான். என் மனம் கலங்குகிறது” என்றாள். 

இதைக்கேட்ட விதுரன் நீ சொல்வது உண்மை. ஆனால் இந்த விஷயத்தை வெளியே சொல்லாதே. துஷ்ட சுபாவமுள்ள துரியோதனனை நிந்தித்தால், அவனுக்கு இன்னும் அதிகத் துவே ஷம் உண்டாகும். உன்னுடைய புத்திரர்கள் பூரண ஆயுள் படை த்திருக்கிறார்கள். ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்” என்றான். 

யுதிஷ்டிரன் பீமனைப்பார்த்து ” நீ பேசாமலிருக்கவேண்டும். நாம் எல்லோரும் இனி ஒருவரை யொருவர் ஜாக்கிரதையுடன் காப்பாற்றிக் கொண்டு உயிருடன் இருக்க வேண்டும்” என்று எச்சரித்தான். 

பீமன் திரும்பி வந்துவிட்டதைப் பார்த்த துரியோதனன் வியப்படைந்தான். பொறமையும் துவேஷமும் அதிகரித்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டு. தாபமடைந்து இளைத்துப்போனான். 

கர்ணன் 

பாண்டவர்களும் திருதராஷ்டிர புத்திரர்களும் முதலில் கிருபாச்சாரியரிடமும் பிறகு துரோணரிடமும் ஆயுதப் பயிற்சி பெற்றார்கள். ஒரு நாள் நகர ஜனங்களை யெல்லாம் அழைத்து ஆயுதப் பயிற்சிப் பரீட்சையும் போட்டியும் ஏற்பாடு செய்தார்கள். விழாவில் பெருங் கூட்டம் கூடிவிட்டது; எல்லாரைக் காட்டிலும் அதிக அற்புதமாக அருச்சுனன் தன் திறமையைக் காட்டி, திரண்டுகூடி இருந்த மக்களைப் பிரமிக்கச்செய்து கொண்டிருந்தான். துரியோதன னனுக்குத் தாங்க முடியாத பொறாமை பொங்கிற்று. 

அச்சமயத்தில் திடீரென்று யாரோ தோள் தட்டிக் கொண்டு வரும் சத்தம் வாயிற் பக்கத்திலிருந்து வந்தது. எல்லாரும் சத்தம் வந்த திக்கை நோக்கினார்கள். ஜனக் கூட்டம் வழி விட்டு விலக தேஜஸ் வீசும் தோற்றம் கொண்ட வாலிபன் ஒருவன் சபையில் நுழைந்தான். அவனே கர்ணன். 

சகோதரன் என்பதை அறியாமல் அருச்சுனனைப் பார்த்து அர்ச்சுனா! நீ என்னவெல்லாம் செய்து காட்டினாயோ அதற்கு மேற்பட்டதாக நான் செய்கிறேன்” என்றான். 

இதைக் கேட்டதும் ஜனக் கூட்டம் உடனே எழுந்து ஆர வாரித்தது. துரியோதனனுடைய பொறாமை நிறைந்த மனத்தில் சந்தோஷம் தோன்றிற்று. கர்ணனைக் கட் டித் தழுவிக் கொண்டு என்னையும் என் ராஜ்ஜியத்தையும் நீ இஷ்டப்படி உபயோகித்துக் கொள்ளலாம்” என்று மெதுவாகச் சொன்னான்.) “பிரபுவே! நான் அருச்சுனனுடன் யுத்தம் கோரி வந்தேன். நீ காட்டிய பிரியத்துக்கு என்றென்றைக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்றான் கர்ணன். 

கர்ணன் அறை கூவியதைக்கேட்டு அருச்சுனனுக்குக்கோபம் பொங்கி, கர்ணா! சபைக்கு அழைக்கப்படாமல் வந்தவர்களும் கேட்கப்படாமல் பேசுகிறவர்களும் இகழப்படுவார்கள்!” என்று கொடுமையாகப் பேசினான். 

“பல்குனா! இந்தச் சபை எல்லாருக்கும் பொது. உனக்கே உரிமையானதல்ல. ராஜதருமமும், பலத்தைப் பின் தொடர்ந்து செல்லுகிறது. வெறும் பேச்சில் என்ன பயன்? பாணங்களைக் கொண்டு பேசு” என்றான் கர்ணன். 

இவ்வாறு கர்ணன் அருச்சுனனை யுத்தத்திற்கு அழைத்ததும் ஜனக்கூட டம் குதூகலங் கொண்டு இரண்டு கட்சியாகப் பிரிந்தது. ஸ்திரீகளிலும்கூட இரண்டு பிரிவுகள் உண்டாயிற்று என்று வியாசர் சொல்லுகிறார். உலகம் எப்போதுமே இம்மாதிரித்தான் என்பதைக் காணலாம். 

கர்ணனைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்ட குந்தி மூர்ச்சை அடைந்தாள்.விதுரன் அவளை வேலைகாரிகளைக் கொண்டு உபசரித்துத் தேற்றினான். அவள் ஒன்றும் செய்யத் தோன்றாமல் திகைத்தாள். 

பிறகு கிருபாச்சாரியர் கர்ணனைப் பார்த்து, பாண்டு புத் திரனும் குருவமசத்தைச் சேர்ந்தவனுமான அருச்சுனன் தொந்த யுத்தத்திற்குத் தயாராக இருக்கிறான்.வீரனே! நீயும் உன் தாய் தந்தையர் யார், நீ எந்த ராஜ குலத்தை அலங்கரிக்கிறாய் என் பதை எடுத்துச் சொல்வாயாக. குலமும் குலாசாரமும் தெரிந்து காள்ளாமல் ராஜகுமாரர்கள் சமயுத்தம் செய்ய மாட்டார்கள் என்று சொன்னார். 

இந்தச் சொல்லைக் கேட்ட கர்ணன் மழையில் நனைந்து வணங்கிய தாமரை மலரைப் போல் தலை குனிந்தான். வெட்ககத்தினால் முகம் வாடிற்று. 

துரியோதனன் உடனே எழுந்து, நான் கர்ணனை அங்க தேச தின் ராஜாவாக இந்த க்ஷணமே அபிஷேகம் செய்வேன் என்று சொல்லி, பீஷ்மரையும் திருதராஷ்டிரனையும் அனுமதி கேட்டுச் சாமக் கிரியைகளை அங்கேயே வரவழைத்து க்கிரீ ம் ஹாரம், சிங்காசனம் முதலியவை எல்லாம் அமைத்துக் கர்ணனை அங்கதேச ராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்வித்தான். அந்தச் சமயத்தில் அவ்விடத்திலேயே கர்ணனை வளர்த்த தேரோட்டிக் கிழவன் பயத்தினால் நடுங்கிக் கொண்டும் தடி ஊன்றிக் கொண் டும் சபையில் பிரவேசித்தான். 

அவனைப் பார்த்ததும் அங்க தேசாதிபதியாக அபிஷேகம் செய்யப்பட்ட கர்ணன் பிதாவிடமுள்ள மரியாதைக்குக் கட்டுப் பட்டு வில்லைக் கீழே வைத்து விட்டுத் தலை வணங்கி நமஸ்கரித் தான். அவனு ம் புத்திரனே!’ என்று சொல்லிக் கர்ணனைக் கட்டிக்கொண்டு அபிஷேக ஜலத்தினால் ஈரமாயிருந்த அவன் தலையில் ஆனந்தக் கண் ணீர் சொரிந்து இன்னும் ஈரமாக்கினான். 

பீமசேனன் இதைக் கண்டு கொல்லென்று சிரித்து, “தேரோ ட்டியின் மகனே! உன் குலத்துக்குத் தகுந்த குதிரைச் சவுக்கை எடுத்துக் கொள். நீ அருச்சுனனுடன் சமயுத்தம் செய்யத் தகுந் தவனல்ல என்றான். 

சபையில் பெரிய குழப்பம் உண்டாயிற்று. சூரியனும் அஸ்த மனமானான்.விளக்கு வெளிச்சத்தில் எல்லோரும் கூச்சல்போட்டுக் கொண்டு கலைந்தனர். சிலர் அருச்சுனன் பெயரையும் சிலர். கர்ணன் பெயரையும் சிலர் துரியோதனன் பெயரையும் அவரவர் களுடைய பட்சபாதத்தின் படி சொல்லிக் கொண்டு போனார்கள், என்கிறார் வியாசர்.  

வெகு காலத்திற்குப் பிறகு தன் மகன் அரு ச்சுனனுக்குக் கர்ணனால் ஆபத்து வ ரு ம் என்று கண்ட இந்திரன், பிராமண வேஷம் தரித்துக் கொண்டு கொடையாளியாகிய கர்ணனிடம் ஒருநாள் வந்து அவனுடைய குண்டலங்களையும் கவசத்தையும் தானமாகக் கேட்டான். உன்னை மோசம் செய்யவே ந்திரன் வ்வாறு வந்து கேட்பான்’ என்று சூரிய பகவான் கனவில் வந்து கர்ணனை எச்சரிக்கை செய்திருந்த போதிலும், யாசகனாக வந்த ஒருவன் என்ன கேட்டாலும் மறுக்க இயலாத குணத்தைப் பெற்ற கர்ணன், கத்தியைக்கொண்டு தன் காதுகளையும் விலாப் புறங்களையும் அறுத்து உடன் பிறந்த குண்டலங்களையும் கவ சத்தையும் எடுத்துப் பிராமணனுக்குக் கொடுத்து விட்டான். 

வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த தேவராஜன் இவற்றைப் பெற்றுக் கொண்டு யாரும் செய்யக் கூடாத அரிய செயலைச் செய்தாய்!” என்று புகழ்ந்து, ”நீ விரும்புகிற வரத்தைக் கேள்” என்றான். 

”சத்துருக்களை சம்ஹரிக்கக் கூடிய உன்னுடைய சக்தி ஆயுதத்தைப் பெற விரும்புகிறேன்” என்று கர்ணன் சொல்ல இந்திரன் அவ்வாறே கொடுத்தான். 

“நீ யுத்தத்தில் இதைப் பிரயோகித்தால் அவன் யாராயினும் இதனால் நாசமடைவான்; ஆனால் ஒரு சத்துருவைக் கொன்ற தும் இந்த ஆயுதம் என்னிடம் வந்து விடும் என்று சொல்லி விட்டு இந்திரன் மறைந்தான். 

கர்ணன் பரசுராமரிடம் சென்று தான் பிராமணன் என்று சொல்லி அவரிடம் சீடனாக அமர்ந்து பிரம்மாஸ்திரமந்திரத்தைக் கற்றான். ஒரு நாள் கர்ணனுடைய மடியில் தலை வைத்துப் பரசு ராமர் தூங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம் ஒரு கொடிய புழுவானது கர்ணன் துடையைக் கடித்துக் குடைந்தது; ரத்தம் பெருகிற்று. தூங்கிக் கொண்டிருந்த குரு எழுந்து விடுவார் என்று அந்த உபத்திரவத்தை லட்சியம் செய்யாமல், கர்ணன் அசையாதிருந்தான். பரசுராமர் விழித்தெழுந்து ரத்த வெள் ளத்தைப் பார்த்து, பிரிய சிஷ்யனே நீ பிராமணனல்ல. க்ஷத்திரியன் தான் இம்மாதிரி உடலுபத்திரவத்தைப் பொறுத்துக் கொண்டு அசையாமலிருக்க முடியும். உண்மையைச் சொல்” என்றார். 

தான் பிராமண குலம் என்று சொன்னது பொய் என்றும் தேரோட்டியின் மகன் என்றும் ஒப்புக் கொண்டான். 

“நீ குருவை ஏமாற்றியபடியால் நீ கற்ற பிரம்மாஸ்திரம் மரணத் தறுவாயில் உனக்குப் பயன் படாமல் உன்னை ஏமாற்றும்: அந்தச் சமயத்தில் மந்திரத்தை மறந்து போவாய்!” என்று சபித்து விட்டார். பரசுராமருக்கு க்ஷத்திரியர்கள் மேல் ஆறாத துவேஷம். தன் ஜாதியை மறைத்துப் பொய் சொல்லி பிரம் மாஸ்திரத்தை பெற்று விட்டானே என்று கோபித்து இவ்வாறு சபித்தார். 

இந்தச் சாபத்தின்படியே கர்ணன் கற்ற அந்த வித்தை உயிருள்ள வரையில் நினைவிலிருந்தும் யுத்தத்தில் அருச்சுனன் தாக்கும் சமயத்தில் மறந்து போயிற்று. 

துரியோதனனுக்கு ஆப்த சினேகிதனாகக் கர்ணன் கடைசி வரையில் கெளரவர்களுடைய கட்சியிலேயே இருந்தான். பீஷ் மரும் துரோணரும் நீங்கிய பின் கர்ணன் கௌரவ சேனைக்குத் தலைவனாக இருந்து யுத்தத்தை இரண்டு நாள் அற்புதமாக நடத்தினான். முடிவில் தேர்ச் சக்கரம் மண்ணில் புதைந்து ரதம் ஓட்ட முடியாத சமயத்தில் அருச்சுனன் கர்ணனைக்கொன்றான். குந்தி தேவி துக்க சாகரத்தில் மூழ்கினாள். இது யுத்த காண்டத்தில் வரும். 

துரோணர் 

பரத்வாஜர் என்கிற பிராமணருடைய புத்திரரான துரோ ணர் வேத வேதாங்கங்கள் பூரணமாக ஓதிய பிறகு, அஸ்திரப் பயிற்சியும் பெற்றார். பரத்வாஜருக்குச் சிநேகிதனான பாஞ்சால தேசத்து அரசனுடைய குமாரன் துருபதனும் ஆசிரமத்தில் துரோணருடன் படித்துக் கொண்டிருந்தான். துரோணருக்கும் துருபதனுக்கும் நெருங்கிய சிநேகம் உண்டாயிற்று. தான் பட் டத்துக்கு வரும்போது துரோணருக்குப்பாதி இராஜ்யம் கொடுப் பதாகக்கூட பால்ய உற்சாகத்தில் துருபதன் துரோணரிடம் சொன்னதுண்டு. 

ஆசிரம வாசம் முடிந்ததும் துரோணர் கிருபருடைய சகோ தரியை விவாகம் செய்துகொண்டு அசுவத்தாமன் என்கிற குமா ரனையும் பெற்றார். துரோணருக்கு மனைவியிடத்திலும் புத்திரனி டத்திலும் மிகுந்த பற்று. இதனால் எப்படியாவது. தனம் சம்பா திக்க வேண்டும் என்கிற ஆசை துரோணரைப் பிடித்து, பரசு ராமர் தம்முடைய பொருளையெல்லாம் பிராமணர்களுக்குக் கொடுத்துவிடப் போவதாகக் கேள்விப்பட்டு அவரிடம் போனா துரோணர் போய்ச் சேருவதற்கு முன் பரசுராமர் தானங்கள் செய்து விட்டு வனம் போகும் தறுவாயிலிருந்தார். 

துரோணர் கேட்டதற்கு, “பிராமண சிரேஷ்டனே! உனக்கு நல்வரவு. எனக்கிருந்த பொருளனைத்தும் நான் கொடுத்தாய் விட்டது. இப்போது இந்தச் சரீரமும், என் அஸ்திர சஸ்திரங்களுந்தான் மிச்சமாயுள்ளன என்றார். 

துரோணர், ”முனிவரே! அஸ்திரங்களையாவது எனக்குப் பூரணமாக உபதேசிக்கவேண்டும்’ என்று பரசுராமரைக்கேட்டு, அவ்வாறே பெற்றுக் கொண்டு திரும்பினார். 

பிறகு பாஞ்சால தேசத்து ராஜா இறந்து போய், துருபத க்குப் பட்டாபிஷேகமாயிற்று. இதை அறிந்து துருபதன் பாதி இராஜ்யத்தைக் கொடுப்பதாகச் சொல்லி யிருந்தானே,பெருஞ் செல்வமாவது துருபதனிடமிருந்து அடையலாம் என்று துரோ ணர் பாஞ்சால தேசம் சென்றார். போனதும் பழைய சினேகிதன் என்று தன்னை அறிவித்துக்கொண்டார். துருபது ராஜனுக்குத் துரோணர் வந்தது பிடிக்கவில்லை. ஐசுவரிய கர்வம் நிரம்பினவ னை அவன் கோபங் கொண்டு ‘பிராமணரே! இந்த நடத்தை உமக்குத் தகுந்த தல்ல. சினேகிதன் என்று என்னை எவ்வாறு நீர் துனிந்து பேசுவீர்! சிம்மாசனத்திலிருக்கும் அரசனுக்கும், அதிர்ஷ்டமும் செல்வமும் இல்லாத ஒரு சாதாரண மனித னுக்கும் எவ்வாறு சினேகம் என்று சால்லிக் கொள்ளக்கூடும்? மந்த புத்தி உள்ளவரே! ஏதோ ஒரு காரணத்தைப்பற்றி உண்டான பால்யப் பழக்கத்தை நீர் ஆதாரமாக வைத்துக் கொண்டு ராஜ்ய பாரத்தை வகிக்கும் ஓர் அரசனிடம் சிநேகம் பாராட்டாதீர். தரித்திரன் தனவானுக்கும் மூர்க்கன் வித்வா னுக்கும், பயந்தவன் சூரனுக்கும் எப்படி நண்பனாவான்? ஐசுவரியம் சமமாக இருந்தால் தான் சிநேகிதம். இராஜ்ய மில்லாதவன் ராஜாவுக்கு சிநேகிதன் ஆகமாட்டான்’ என்று இவ்வாறு அகங்காரம் நிறைந்து பொறுக்க முடியாத மொழி களைச் சொல்லித் துரோணரை இகழ்ந்தான். 

துரோணர் கோபமும் வெட்கமும் மேலிட்டு ஒரு பேச்சும் பேச மல் உள்ளத்தில் ஒரு நிச்சயம் செய்து கொண்டு ஹஸ்தினா புரம் சென்றார். ஹஸ்தினாபுரத்தில் தம் மைத்துனர் கிருபர் வீட் டில் யாருக்கும் தெரிவிக்காமல் மறைவாக இருந்தார். 

ஒரு நாள் ராஜகுமாரர்கள் நகரத்துக்கு வெளியே பந்து விளையாடிக்கொண்டு திரிந்தார்கள். அப்போது விளையாடிக் கொண்டிருந்த பந்தும் யுதிஷ்டிரனுடைய மோதிரமும் அங் கிருந்த ஒரு கிணற்றில் விழுந்துவிட்டன. எல்லாரும் கிணற்றைச் சுற்றிக்கொண்டு நிர்மலமான தண்ணீரில் மோதிரம் பளிச்சென்று தெரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் கறுத்த ஒரு பிராமணர் அவ்விடம் வந்து நின்றார். 

“ராஜகுமாரர்களே! நீங்கள் பாரத வம்சத்தில் பிறந்த க்ஷத்திரியர்கள். பந்தை ஏன் எடுக்க முடியவில்லை? நான் அஸ் திரத்தைக் கொண்டு எடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று பிராமணர் கேட்டார். 

“பிராமணரே! பந்தை நீர் எடுத்தால், கிருபர் வீட்டில் போஜனத்தை அடைவீர்” என்று யுதிஷ்டிரன் சிரித்துக் கொண்டு சொன்னதும், துரோணராகிய அந்தப் பிராமணர் ஒரு குச்சியை எடுத்து அஸ்திரத்துக்கு வேண்டிய மந்திரம் சொல்லித் தண்ணீ ரில் வீசி எறிந்தார். அது பந்தைத் தேடிச்சென்று அதில் பற்றிக் கொண்டது. பிறகு வேறு குச்சிகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அவ்வாறே தண்ணீரில் போட, ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நீண்டு நின்றன. மேல் குச்சியைப் பிடித்துப் பந்தை எடுத்துக் கொடுத் தார் துரோணர். 

மிக்க ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொண்ட ராஜகுமாரர்கள் மோதிரத்தையும் எடுக்கச் சொன்னார்கள். துரோணர் ஓர் அம்பை எடுத்து வில்லில் தொடுத்துக் கிணற்றில் எய்தார். அது மோதிரத்தைக் குத்தி மேலே கிளப்ப, பிராமணர் மோதி ரத்தை எடுத்துக் கொடுத்தார். 

இந்தச் செயலைப் பார்த்து வியந்து, “பிராமணரே! நமஸ் காரம். நீர் யார்? உமக்கு எங்களால் ஆகக் கூடியது ஏதேனும் உண்டா?* என்று ராஜகுமாரர்கள் அவரை வணங்கினார்கள்.

“ராஜகுமாரர்களே! பீஷ்மரிடம் சென்று நான் யார் என்று தெரிந்து கொள் ளு ங்கள்” என்று சொல்லி அனுப்பினார். 

ராஜகுமாரர்கள் சொன்ன குறிகளினின்று பீஷ்மர் அவர்கள் கண்ட பிராமணர் புகழ் பெற்ற துரோணர் என்று தெரிந்து கொண்டு, பாண்டவ கெளரவர்களுக்கு இனிக் கொடுக்கவேண்டிய பயிற்சியைத் தரக் கூடிய ஆசாரியர் அவரே என்று தீர்மானித் தார். துரோணரை விசேஷ மரியாதையுடன் அழைத்து ராஜகுமா ரர்களை அவரிடம் ஆயுதப் பயிற்சியைப் பூர்த்தி செய்துகொள்ள அமைத்தார். 

கௌரவ பாண்டவர்களுக்கு ஆயுதப் பயிற்சி தந்து முடிந்த தும் துரோணர், குரு தட்சணையாக துருபதனை உயிரோடு பிடித்து ரவேண்டும் என்று கர்ணனையும் துரியோதனனையும் அனுப்பி ர்.அவர்களும் சென்றார்கள். ஆனால் அது அவர்களால் முடிய வில்லை. அதன்பின் அருச்சுனனுக்குக் கட்டளை இட்டார். அவன் போய் யுத்தம் செய்து துருபதனை மந்திரியுடன் பிடித்து வந்து துரோணரிடம் சமர்ப்பித்தான். 

அப்போது துரோணர் புன்னகையுடன் துருபதனைப் பார்த் துச்சொன்னார்: வீரனே! உன் உயிருக்கு அபாயம் வந்தது என்று பயப்படாதே. பால்யத்தில் என்னோடு விளையாடி சினேகமாக இருந்து பிறகு என்னை மோசமும் அவமானமும் செய்தாய். ராஜா வுடன் சினேகம் செய்ய வேண்டுமானால் ராஜாவாக இருக்கவேண் டும் என்றாய். அதற்காக இந்த யுத்தம் உன் மேல் நான் செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் நான் மறுபடியும் உன்னுடன் சிநேகிதத்தையே விரும்புகிறேன். பாதி ராஜ்யத்தை உனக்கே கொடுக்கிறேன். என்னுடன் நீ சினேகிதனாக இருப்பதற்கு உனக்கும் சம ராஜ்யம் வேண்டுமல்லவா? ஆகையால் கொடுக்கிறேன், வைத்துக் கொள்.” 

துருபதன் தம்மை அவமதித்துச் சொன்ன சொல்லைத் துரோணர் இவ்வாறு ஞாபகப் படுத்தினார். துருபதன் வெட்கம் மேலி ட்டுத் தலை வணங்கி நின்றான். அவமானப் படுத்தினது போதும் என்று துரோணரும் அவனுக்கு எல்லா மரியாதைகளும் செய்து அனுப்பினார். 


துருபதனுடைய கர்வம் இவ்வாறு அடங்கிற்று. கோபமும் க்ஷத்திரமும் பழிக்குப்பழி வாங்கி முடிவடைவதில்லை. வளர்ந்து கொண்டே போகும். அதனாலேயே அவனுடைய க்ஷத்திரம் அதிகமாயிற்று. துரோணரைக் கொல்லக் கூடிய ஒரு மகனு அருச்சுனனை மணம் புரியக் கூடிய ஒரு மகளும் தனக்கு உண் டாக வேண்டும் என்று அநேக விரதங்களிருந்து அவ்வாறே திருஷ்டத்யும்னனையும் திரெளபதியையும் பெற்றான். திருஷ்டத் யும்னனே பின்னால் பாரத யுத்தத்தில் எவராலும் எதிர்க்க முடி யாத துரோணரை எதிர்த்துக் கொன்றது. இது யுத்த காண்டத்தில் வரும். 

– தொடரும்…

– வியாசர் விருந்து (மகாபாரதம்), முதல் பதிப்பு: ஜனவரி 1956, பாரதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *