ஒரிஜினல் & டூப்ளிகேட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 1,484 
 

கிர்..கிர்..கிர்..காலிங் அவ்ர் பாஸ்……

தட் தட்.தட்… யெஸ் சார்..

லிசன் ஐ கிவ் சம் வொர்க் டூ யு

ஜஸ்ட் மினிட்..அந்த அறை இருளாக்கப்பட்டு, அவருக்கு எதிராக மாட்டப்பட்டிருந்த ஒரு திரையில் படம் ஒன்று காட்டப்படுகிறது.

லிசன் பாய்ஸ்..  திஸ் இஸ் அவர் ‘டார்கெட்’..இதுக்குள்ள எப்படியாவது நுழைஞ்சு வெடி வச்சு தகர்த்துடனும்.

முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அந்த ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தனர்.

விவரித்து கொண்டிருந்தவர்..

மிருது102 அசோக்202 யெஸ் ஆர் நோ..

யெஸ்..சார்..விரைப்பாய் பதில் சொன்னால் அந்த பெண்

தட்ஸ் குட்…..அசோக்202 ஹேவ் யூ ஹெல்ப் டூ மிருது102

யெஸ்..சார்..

தட் ஸ் ஆல் யூ கேன் கோ..தட்..தட்..இருவரும் விரைந்து செல்கிறார்கள்.

அந்த அறையில் வெளிச்சம் பரவ் அறையின் மூலையில் வாயில் சிகரெட்டுடன் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.விவரித்து கொண்டிருந்தவர் அவரின் அருகில் சென்று, ஓகேயா பாஸ்.

பரவாயில்லை, ஆனால் இன்னும் கொஞ்சம் விரைப்பாக காட்டவேண்டும். நான் அப்படித்தான் இருப்பேன்.

சாரி பாஸ் உங்களைப்போலவே, நடக்க முயற்சி செய்தாலும் சில நேரங்களில் தவறி விடுகிறேன்.

பரவாயில்லை. உன்னை பாதுகாக்க இதே போல் ஆட்களை தயார் செய்ய போகிறேன். வெளி உலகிற்கு “நீதான் நான்”. என்னை கொல்ல துடித்துக்கொண்டிருக்கும் எதிரிகளுக்கு உன் தோற்றம் மட்டுமே தெரியும். ஜாக்கிரதையாக இரு..

யெஸ் பாஸ்..திரும்பியவனிடம், நாளை அந்த இருவரையும் கூப்பிட்டு வழிமுறைகள் சொல்லிவிடு.

மறு நாள் அவர்கள் இருவருக்கும் வழி சொல்லப்பட்ட்து. கவனியுங்கள்..இங்கிருந்து விமானத்தில் பறக்கிறோம். நள்ளிரவு பனிரெண்டு மணியை தேர்ந்தெடுத்திருக்கிறோம். சரியாக நமது இலக்குக்கு மூன்று கிலோ மீட்டர் தள்ளி உங்களை பாராசூட் மூலம் இறக்கிவிடுவோம்.. அங்கிருந்து நீங்கள் கீழே இறங்கும்போது காற்றின் வேகம் மணிக்கு நூற்றி அறுபதுக்கு மேல் இருக்கும். பாராசூட் மெதுவாய் உங்கள் இலக்கின் அருகில் இறக்கி விடும். அதன் பின் இலக்கின் பின்புறம் நடக்க ஆரம்பிக்கிறீர்கள். காவல் சுற்றிலும் அதிகமாக இருக்கும். பொதுவாக கண்காணிப்பு கோபுர வெளிச்சம் தரை மட்ட்த்திற்கு ஒரு அடிக்கு மேல் விழும். அத்னால் நீங்கள் இலக்கின் காம்பவுண்டை அடைய சுமார் இருநூறு அடிகள் தவழ்ந்துதான் செல்ல வேண்டும்.

ஓகே..யெஸ்..சார்..அதற்கு பின்னால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் மூளையில் பதிக்கப்பட்டுள்ள “சிப்” அறிவுறுத்தும்

இரவு ‘புகை பிடித்தபடி அமர்ந்திருந்தவர்’ தன்னுடைய டூப்ளிகேட்டான மனிதரிடம்

வெல்டன் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டாயா?

யெஸ் பாஸ்.

நீ அனுப்ப போகும் இருவரும் திரும்ப வர வாய்ப்பு இருக்கிறதா?

இல்லை பாஸ், அவர்கள் உள்ளே நுழைந்த்துமே அவர்கள் மூளையில் நாம் பதித்து வைத்த “சிப்” அவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டி விடும். அவர்கள் தங்கள் உடம்பில் வைத்திருக்கிற “பாம்”எம் 200 வெடித்து அந்த இடமே தூள் தூளாகிவிடும்.

வெரி குட்..அந்த இருவருக்கும் தலையில் வைக்கப்பட்டிருக்கும் “சிப்” வேலை செய்யவில்லையென்றால்..?

கவலைப்படவேண்டியதில்லை, அவர்கள் இருவருமே இயந்திர மனிதர்கள்தான், அவர்களை இங்கிருக்கும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்து விடலாம், என்ன ஒரு பிரச்சினை, புலனாய்வு செய்பவர்கள் “நாம் எங்கிருந்து இயக்கினோம்” என்பதை கண்டு பிடித்து விடுவார்கள். அதானால்தான் முளையில் “சிப்” வைத்திருக்கிறோம்.

நாளை இரவு பிளைட்டில் பைலட்டாய் போவது? நானே போகிறேன்.

ஓகே..’கேரி ஆன்’..அவர் எழுந்து உள்ளே போய் விட்டார்.

நள்ளிரவு இலக்கின் மேல் சற்று தள்ளி பறந்து கொண்டிருந்த அந்த குட்டி விமானத்தில் அந்த ஆணும் பெண்ணும் இறுகிய முகத்துடன் உட்கார்ந்திருக்கிறார்கள். விமானம் சற்று தாழ்வாக பறக்க அப்ப்டியே “ஆட்டோமேடிக்கில்” போட்டு விட்டு அருகில் வந்த பைலட் இதுதான் நீங்கள் குதிக்க போகும் இடம். உங்கள் பாராசூட்டின் ‘பட்டன்’ மீது கை இருக்கட்டும். கமான். “ஜம்ப்” வலது புற இரகசிய கதவு திறக்க, முதலில் அந்த பெண் குதித்தாள். அடுத்து குதிக்க ஆயத்தமான ஆண் “பெஸ்ட் ஆப் லக்” பாஸ் சொல்லிவிட்டு குதித்தான்.

சரி என்று தலையசைத்த பைலட் திடீரென்று ஞாபகம் வந்தவ்னாக “அதெப்படி” அது இயந்திரமாயிற்றே? இதுவரை “யெஸ் பாஸ் “என்பதை தவிர எதுவும் பேசியதே இல்லையே, அப்படியானால்..அப்படியானால்…நினைத்துக்கொண்டிருக்கும்போதே ! பளீரென்று வெளிச்சத்தை உமிழ்ந்து, பெரும் சத்தத்துடன் கருகி விழுந்த்து.

பாராசூட்டிலிருந்து தரையில் குதித்த இருவரும் மேலே விமானம் பற்றி எரிந்து விழுவதை பார்த்து கட்டை விரலை உயர்த்தி காட்டினார்கள். நெக்ஸ்ட்..அந்த பெண் கேட்க நாம் அவர்கள் சொன்னபடி பின் வழியாக உள்ளே நுழைவோம்.. அவர்கள் தவழ்ந்து சென்று மின் வேலியை மெல்ல துண்டித்து விட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்தார்கள்.

விமானம் வெடித்து சிதறியது இவர்களை கண்கானித்து கொண்டிருந்த மானிட்டரில் காண முடியாமல் இவர்கள் இருவரை மட்டுமே “போகஸ்” செய்து கொண்டிருந்த கம்யூட்டர் முன்னால் உட்கார்ந்திருந்த அந்த சிகரெட் பிடித்த மனிதன், மற்றும் ஒரு சிலர், இவர்கள் இருவரும் அப்படியே அங்கு நிற்பதை அரை மணி நேரமாக பார்த்து விட்டு “ஓ” சொன்னப்டியே “சிப்” வேலை செய்யவில்லை, என்ன செய்து வைத்திருக்கிறான் அந்த மடையன்..அவன் அங்கே எரிந்து சாம்பலாகிவிட்ட்து தெரியாமல், கம்யூட்டர் மூலம் ரிமோட் கண்ட்ரோலில் அந்த உருவங்களுக்கு ஆணை கொடுக்க ஆரம்பித்தான். இப்பொழ்து மெல்ல நடந்து முன்னேறுகிறீர்கள். அப்படியே உங்களது இடுப்பு பெல்ட் நடுவில் இருக்கும் சுவிட்சை..சொல்லிக்கொண்டிருக்கும்போது யாரோ தோளை தொட்ட்து போல் இருக்க திரும்பி பார்க்க !

அந்த ஆணும், பெண்ணும் இடுப்பு பெல்ட் நடுவில் இருக்கும் சுவிட்சை அழுத்திக்கொண்டு!

அங்கே நுழைந்த இருவரையும் மரியாதையுடன் அழைத்து சென்றார்கள் அங்கிருந்த இராணுவ அதிகாரிகள்.

எப்படி ஒரிஜினலையும், டூப்ளிகேட்டையும் ஒரே நேரத்தில் முடித்தீர்கள்? அந்த பெண் இவர்களுக்கு மட்டும்தான் ஒரிஜினல், டூப்ளிகேட் போட முடியுமா? நாங்கள் இருவரும் அந்த மிருது102, அசோக்202 வாக மாறியிருந்தோம். ஒரிஜினல் இயந்திருங்களை அங்கேயே விட்டு விட்டு வந்தோம். எப்படியும் “சிப்” வேலை செய்து அவர்களை அங்கேயே முடித்து விட ஏற்பாடு செய்தோம். இருந்தாலும் இவனை விமானத்தில் முடித்து விட்ட்தால், அவன் எப்படியும் ரிமோட் கண்ட்ரோலை உபயோகப்படுத்துவான் என்பது தெரியும்.அதே போல் செய்தான். ஒரே நேரத்தில் ஒரிஜினல், டூப்ளிகேட் காலி, அந்த மிருது102, அசோக் 202, இயந்திரங்களும் காலியானதுதான் எங்களுக்கு வருத்தம். 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *