புதிய சுவடுகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 1,735 
 

31 – 40 | 41 – 49

41

மாணிக்கம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான். ஆஸ்பத்திரியிலிருந்து வந்த நேரம் தொடக்கம் அவனது எண்ணம் முழுவதும் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதிலேயே லயித்திருந்தது.

”மச்சான் நான் இனி ஒரு நிமிஷம் கூட இங்கை இருக்க ஏலாது, ஊருக்குப் போவேணும் “ மாணிக்கத்தின் குரலில் உறுதி தொனித்தது.

”இப்பதான் ஆஸ்பத்திரியிலை இருந்து குணடடைஞ்சு வந்திருக்கிறாய் மாணிக்கம் , இன்னும் கொஞ்சநாளைக்கெண்டாலும் நீ முத்தையன் கட்டிலை தங்கி இருக்கிறதுதான் நல்லது.“

கந்தசாமிக்கு , மாணிக்கத்தை ஊருக்கு அனுப்புவது புத்திசாலித்தனமான காரியமாகத் தெரியவில்லை.

”மச்சான் நான் உடனை போய்பார்வதியைச் சந்திக்கவேணும் . இலலாட்டில் எனக்குப் பயித்தியம் பிடிச்சிடும் .“

”அவசரப்படாதை மாணிக்கம் நிதானமாகய் யோசிச்சுப் பார், நீ ஊருக்கு போறது உன்னுடைய உயிருக்கே ஆபத்தாய முடியலாம்.“

”மச்சான் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை நான் உடனே போகத்தான் வேணும்
முட்டாள்தனமாக அவசரப்படாதை மாணிக்கம் ..நான் திட்டம் போட்டு கமக்காறவை உன்னைக் கொலை செய்து போடுவினம் “

பார்வதியைப் பிரிஞ்ச என்னாலை உயிரோடை இருக்க முடியாது மச்சான் இநடத உயிரைப்பற்றி நான் கவலைப்படேல்லை எப்பிடியாவது நான் பார்வதியைச் சந்திக்க வேணும்.

மாணிக்கத்தின் பிடிவாதத’தைக’ கண்ட கந்தசாமி இனி அவனுடக் கதைப’பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டான்.

சரிமாணிக்கம் இனி நீ உன்ரை விரப்பம்போலை செய் இங்கை திரும்பி வந்தாலும் உனக்கு பாதுகாப்பு அளிக்கிறதுக்கு நான் தயாராக இருக்கிறேன் ஆனால் நீ எதிலுமே நிதானமாய் இருக்கிறதுதான் நல்லது. நீஊருக்கு போறதாலை ஏதாவது பிரச்சினைக்ள் ஏற்பட்டால் அது உன்னுடைய சொந்தப் பிரச்சனையாய் இருக்கமாட்டாது ..இரண்டு சமூகங்களிடையே ஏற்படும் பிரச்சனையாய்த்தான் இருககும் அதுக்கு நாங்கள் எல்லோரும் முதலை எங்களைத் தாயாராக்கிக் கொள்ளவேணும்.

கந்தசாமி கூறுவது மாணிக்கத்துக்குச் சரியாய்த்தான் பட்டது. ஆனாலும் பார்வதியை மட்டும் பார்க்காமல் இருப்பது அவனுக்கு முடியாத காரியமாய் இருந்தது, அன்று மாலையே மாணிக்கம் புறப்பட்டான்.

மாணிக்கத்தைக் கண்டபோது கோவிந்தனுக்கும் பொன்னிக்கும் அளவுகடந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவன் ஊருக்குத் திரும்பி வந்ததால் கமக்காறர்கள் அவனுக்கு ஏதாவது தீங்கு இழைக்கவும் கூடுமென அவர்களது மனதிலே பயமும் தோன்றியது. மாணிக்கம் குணமடைந்து வந்ததில் கோவிந்தனுக்கும்ட மகிழ்ச்சி ஏற்பட்டபோதிலும் பார்வதியைக் கூட்டிச் சென்றாதால் ஏற்பட்டிருந்த கோபம் அவனுக்கு தீரவேயில்லை . அதனால் அவன் மாணிகத்தோடு முகங்கொடுத்துப் பேசவில்லை. மாணிக்கத்துக்குத் தந்தையைப் பார்பதற்கே பயமாக இருந்தது. அதனால் அவனும் கோவிந்தனோடு கதைப்பதற்கு முயலவில்லை.

மாணிக்கம் வந்த சிறிது நேரத்தில் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டு, குட்டியன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான் கோவிந்தன்.

”ஏனடா மேனை இங்கை வந்தனீ ? ஒரு கடதாசி போட்டால் நாங்கள் உன்னை வந்து பாத்திருப்பந்தானே …“ மாணிக்கத்துக்கு உணவு பரிமாறிக் கொண்N;ட கேட்டாள் பொன்னி.

”ஆச்சி …ஏன் நான் இங்கை வந்தது உங்களுக்குப் பிடிக்கேல்லையோ?“ கோபத்துடன் கேட்டான் மாணிக்கம்.

”ஏனடா மேனை கோவிக்கிறாய் …இங்கை கொஞச்நாளாய்த்தான் எல்லாக் கரச்சலும் அமந்துபோய்கிடக்கு.. உன்னைக் கண்டதும் கமக்காறவை என்ன செய்வினமோ எண்டுதான் பயமாய்க் கிடக்கு”

”அவையளுக்கு பயந்து கொண்டு எந்த நாளும் நான் ஒளிஞ்சிருக்க ஏலாது “ என்றான் மாணிக்கம்.

”இல்லையடா மேனை கொஞ்ச நாளைக்கெண்டாலும் நீ முத்தையன் னட்டிலை நீ முத்தையன் கட்டிலை இருக்கிறதுதான் நல்லது…. உனக்கு நாங்கள் குட்டியன்ரை மேனைக் கலியாணம் செய்து வைக்கிறதுக்கு ஒழுங்கு செய்திருக்கிறம். சுறுக்காய் கலியாணத்தை முடிச்சுப் போட வேணுமெண்டு கொம்மான் விரும்புறார். உனக்கு ஒரு மனமாற்றமாய் இருக்கும் நாங்களும் கொஞ்சக்காலத்திலை உன்னோடை முத்தையன்கட்டிலை வந்திருக்கலாம்.“ பொன்னி தனது மனதிலே இருந்த திட்டத்தை மாணிக்கத்திடம் கூறினாள்.

”ஆச்சி இனிமேல் எனக்குக் கலியாணம் தேவையில்லை அம்மானிட்டைச் சொல்லி அவற்றை மேளுக்கு வேறை இடத்திலை கலியாணம் செய்து வைக்ச் சொல்லுங்கோ“
மாணிக்கம் இப்படிக் கூறியபோது பொன்னி திகைத்துபக்போனால்.

”ஏன் மேன் அப்பிடிச் சொல்லகிறாய்? கொம்மான் உனக்கெண்டுதானே மேளை ஒரு இடமும் கட்டிக் குர்க்காமல் வைச்சிருக்கார்.“

”ஆச்சி என்னைக் கரச்சல் பண்ணாதையுங்கோ……. இனிமேல் என்கு கலியாணம் வேண்டாம்.“

”ஏனடா உனக்கு கலியாணம் வேண்டாம்? நீ நினைச்சு பாட்டுக்கு செல்லப்பர் கமக்காறன்ரை மேளைக் கூட்டிக்கொண்டுபோய்ப் பட்ட கஷ்டம் போதும் … இனிமேல் எண்டாலும் எங்கடை சொல்லைத் கேட்டுநட…“

”ஆச்சி இப்ப ஏனணை தேவையில்லாத கதையெல்லாம் கதைக்கிறாய்.?“

”நீ தானடா தேவயில்லாதை நினைச்சுக்கொண்டு கொம்மான்ரை மேனைக் கட்டுறதுக்கு மாட்டன் எண்டு சொல்லுகிறாய்., செல்லப்பர் கமக்காறன்ரை மேள் இப்ப வேறை கலியாணம் முடிச்சு சந்தோஷமாயம் இரக்கிறா…. நீதான் அவளைப் பெரிசா நினைச:சக் கொண்டு அழியிறாய்….

திடீரெனப் பெரிய பாறங்கல் ஒன்ற தலையிலெ விழுந்தது போன்று இருந்தது மாணிக்கத்து என்ன ..பார்வதி வேற கலியாணம் செய்து விட்டாளோ? நெஞ்சுக்கள் ஏதோ அழுத்தியது. அவனது கண்கல் கலங்கிவிட்டன.

”என்னணை சொல்லுறாய் ஆச்சி? “ மாணிக்கம் தடுமாறிபடி கேட்டான்.

”செல்லப்பர் கமக்காறன்ரை மேளுக்கும் அன்னம்மாக் கமக்காறிச்சியின்ரை மேன் நடேசுக்கும் கலியாணம் நடந்து மூண்டு மாதமாச்சு.“

”ஆச்சி உண்மையாய்த்தான் சொல்லறியோ…?”

”ஏனடா உனக்கு நான் பொய் சொல்ல வேணும் . நீ தான் கமக்காறன்ழர மேளை நம்பி மோசம் போனாய் … கமக்காறன்ரை மேள் ஊருக்கு வந்து ஒருமாசத்திலையே கலியாணம் முடிச்சிட்டா, நீ இப்பவும் அவவை நினைச்சுக் கொண்டு இரக்கிறாய், நீயும் கலியாணம் செய்து சந்தோஷமாய் இரன்,“ என்றாள் பொன்னி ஏக்கத்துடன்.
மாணிக்கத்துக்கு அதற்கு மேல் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை உணவு அருந்தாமல் அரைவாசியில் எழுந்து கைகழுவிக் கொண்டான்.

அவனது தலை இலேசாக வலித்தது, அவனுக்கு அப்போது தனிமையாக இருக்க வேண்டும் போல்தோன்றியது.

”ஆச்சி எல்லாம் நதளைக்குக் கதைக்லாம் . இப்ப நான் படுக்கப்போறன் “ எனக் கூறிக்கொண்டே திண்ணையில் பாளை விரித்துக் கொண்டான் மாணிக்கம்.

”பார்வதி என்னை ஏமாற்றி விட்டாளா…?

”ஒரு வேளை ஆச்சிதான் எனக்கு கலியாணம் செய்து வைப்பதற்காக பொய் சொல்லுகிறாளோ?“

”ஆச்சி எனக்கு ஒழு நாளும் பொய் சொல்லமாட்டாள் பார்வதி நடேசுவைத் திருமணம் செய்து இருக்கத் தான் வேண்டும்.“

”உயிர் உள்ள வரைக்கும் என்னை மறக்கமாட்டேன் என்றவள் இன்று வேறொருவனுக்கு மனைவியாகி விட்டாளோ? என்மேல் உண்மையான அன்பிருந்தால் அவள் ஒருபோதும் வேறெருவனைத் திருமணம் செய்யச் சம்மதித்து இருக்க மாட்டாள்.“

”துரோகி அவளால் எனது வாழ்க்கையே அநியாயமாகி விட்டது எனது குடும்பத்தவர்களுக்கும் என் குலத்தவர்களுக்கும் கஷ்டம் ஏற்பட்டுவிட்டது.“

”அவள் என்னுடன் முத்தையன்கட்டுக்கு ஓடிவந்தும் கூடிக்குலாவியும் கொஞ்யதும்… எல்லாமே நடிப்புத் தானா?“

”ஏன் அவள் இப்பிடி எனது வாழக்கையைச் சிதைக்க வேண்டும் ? அவளை ஒரு போதும் நான் வாழவிடமாட்டேன் , அவளையும் அவளது குடும்பத்தவர்களையும் பூண்டோடு ஒழித்துவிட்டு நானம் அழிந்து போக வேணும் என்னால் அவளது நினைவுகளை அகற்ற முடியவில்லை.

எனது இதயத்தில் வேறொருவளுக்கு இடம் கொடுக்க முடியவில்லை . அவளால் சுலபமாக என்னைக் மற்க்க முடிந்தது? ஒரு வேளை ஏதும் சூழ்ச்சி செய்திரப்பார்களோ?“

”இனி ஒருபோதும் பார்வதி எனக்குரியவளாமாட்டாள், என்னோடு குலாவியள் இன்று வேறொருவனோடுகூடிக் குலாவுகிறாள். மீண்டும் அவளை நான் அடைவதற்கு முயற்சி செய்யவே கூடாது.“

மாணிக்கத்தை அவனது சிந்தனைகள் சித்திரவதை செய்து கொண்டிருந்தன.

42

பார்வதி உடலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின். அவளது வயிற்றினுள்ளே வளர்ந்து வரும் சிசு துடித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவளது உள்ளத்தில் மாணிக்கத்தைப் பற்றிய நினைவுகள் அலைமோதின, முன்பு போல் அவளால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை, உடலில் சோர்வு அதிகமாகி வயிறும் சற்றுப் பருத்திருந்தது. தனிமையில் இருக்கம் வேளையில் அவள் ஆசையோடு தனது வயிற்றைத் தடவிப்பார்ப்பாள்.

”குழந்தை பிறந்ததும் எப்படி அதன் தோற்றமிருக்கும் ? மாணிக்கத்தைப் போன்றுதான் அழகாக இருக்குமோ? அந்தக் குழந்தையைப் பார்ப்பவர்கள் அது மாணிக்கத்தின் குழந்தையைப் என இனங்கண்டு கொள்வார்களா? அப்படி இனங்கண்டு கொண்டால் இந்தச் சாதித் தமிர்பிடித்தவர்கள் அந்தக் குழந்தையை என்ன செய்வார்கள்?“

”அன்னம்மா மாமிதான் முதலில் ஏமாற்றமடைவாள் எனது வயிற்றில் வளரும் குழந்தையைத் தனது பேரப்பிள்ளையென நினைத்து ஆசையோடு கொஞ்சிக்குலாவுவதற்குக் காத்திருக்கிறாள்.“

”எனது வயிற்றிலே வளரும் குழந்தை மாணிக்கத்தினுடையதுதான் என்பது அம்மாவுக்குத் தெரியும் , ஆனாலும் அவள் அதனைத் தெரிந்து கொண்டவள்போல் காண்பில்லை. ஒருவேளை அம்மா அதனை அப்புவிடம் சொல்லியிருப்பாளோ? குழந்தை பிறந்ததும் அம்மாவும் அப்புவும் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள?“

எப்போழுதாவது ஒரு நாள் பொன்னியோ கோவிந்தனோ அந்தக் குழந்தையைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் ? தங்களது பேரக் குழந்தைதான் எனப் புரிந்து கொண்டு பூரிப்படைவார்களா? அல்லது அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தக்கூடிய ஒரு கமக்காறனின் வாரிசென எண்ணிப் பயக்தியோடு மதிப்பு கொடுப்பார்களா?
சிந்தனையிலிருந்த பார்வதி படலை கிறீச்சிடும் ஓசை கேட்டு நமிர்ந்து பார்த்தாள் அம்பலவாணர் வந்து கொண்டிருந்தார்.

பார்வதி, சின்னத்தங்கம் படுத்திருக்கும் அறைக்கு எழுந்து சென்றாள். சின்னத்தங்கத்துக்கு கடந்த இரண்டு நாட்களாகத் தொய்வு நோயின் பாதிப்பு அதிகமாகி இருந்தது. மூச்சு முட்டித் திணறுவதம் ,தொடர்ந்து வரும் இருமலைத் தாங்க முடியாமல் களைத்துச் சோர்ந்து போவதும் தொண்டைக்குள் ஒட்டிக் கிடக்கும் சளியை வெளியே கொண்டு வரும் முயற்சியில் காறி உமிழ்வதுமாக இருந்தாள்.

முதல் நாள் அம்பலவாணர் அங்கு வந்திருந்த போது வழக்மாக அவர் கொண்டு வரும் மருந்தில் கொஞ்சம் வாங்கிவரும்படி சின்னத்தங்கம் அவரை வேண்டிருந்தாள்.

”அம்மா …. எழும்புங்கோ … இங்கை அண்ணை வந்திருக்கிறார்“ பார்வதி, சின்னத்தங்கத்தின் தோள்களை உலுப்பியப்படி கூறினாள்.

தலைக்கு மேல் இரகைகளையும் வைத்து கால்களை மடித்து உடலை;ச் சுருட்டி படுத்திருந்த சின்னத்தங்கம் , மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். அம்பலவாணர் அவளருகே இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டார்.

”தம்பி …. என்பாடு பெரிய உபாதையாய்க் கிடக்கு மூச்சு விட முடியேல்லை . மருந்து கொணந்தனியோ.?

”அதை நான் மறப்பனோ மாமி…அது இல்லாட்டில் நீங்கள் கஷடப்படுவியள் எண்டு தான் எனக்குத் தெரியுந்தானே “ எனக் கூறிக்கொண்டே தான் கொண்டுவந்த கடுதாசி பைக்குள் இருந்த சாராயப் போத்தலை எடுத்து சின்னத்தங்கத்திடம் கொடுத்தார் அம்பலவாணர்.

வழக்கமாகச் சின்னத்தங்கம் சாராயப் போத்தலை வாங்கியதும் கட்டிலின் அடியில் மறைத்து வைப்பாள் ஆனால் .இன்று பக்கதத்தில் இருக்கும் பேயணியை எடுத்து அதில் சாராயத்தை நிரப்பி ஒரே மூச்சில் ‘மடக் மடக்’ என குடித்துவிட்டு பேணியை அருகே வைத்தாள்.

”மாமிக்கு இண்டைக்கு வருத்தம் கூடத்தான் “ அம்பலவாணர் , சின்னத்தங்கத்தைப் பார்த்துக் கூறினார்,

”தம்பி என்னாலை கதைக்க முடியேல்லை…. நீ பிள்ளையோடை இருந்து கதைச்சிட்டுப் போ“ எனக் கூறியபடி கட்டிலில் சாய்ந்து கொண்டாள் சின்னத்தங்கம்.”மாமி வருத்தம் கூட இருந்தால் இன்னும் கொஞ்சம் குடியுங்கோவன்.“

சின்னத்தங்கத்தின் பதிலையும் எதிர்பார்க்காமல் சாராயத்தைக் மீண்டும் பேணிக்குள் நிரப்பி அவளது கையில் கொடுத்தார் அம்பலவாணர்.

”வேண்டாம் தம்பி…. கூடக் குடிச்சாலும் எனக்கு ஏதேன் செய்யும்.“

”ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ மாமி , குடியுங்கோ, இரண்டு நாளாய்க்கஷ்டப்படுகிறியள். இதைக்குடிச்சால் தான் கொஞ்ச எண்டாலும் நித்திரை கொள்ளலாம்.“

சின்னத்தங்கம் பதில் எதுவும் கூறாமல் அவர் கொடுத்த சாராயத்தைக் வாங்கிக் குடித்துக்கொண்டாள்.

சாராயத்தின் நெடி பார்வதிக்கு அருவருப்பைக’ கொடுத்தது. அவள் மூக்கை சுளித்துக் கொண்டாள்.

”எங்கே ….. பார்வதி… நடேசு மச்சானைக் காணேல்லை?“

”காலமை அன்னம்மா மாமி வந்திருந்தவ அவவோடை கூடிக்கொண்டு அவரும் போட்டார்.

சின்னத்தங்கம் தொண்டையைச் செருமிக்கொண்டு மீண்டும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள்.

”மாமி இப்ப உங்களுக்கு கொஞ்சம் சுகம் போலை “

”ஓம் தம்பி … நெஞ்சுகுள்ளை இருந்த முட்டு கொஞ்சம் சங்குறைஞ்சுக்கிடக்கு.“ சாராயம் குடித்தினால் ஏற்பட்ட போதையில் கண்கள் துஞ்ச தட்டுத் தடுமாறியபடி கூறினாள் சின்னத்தங்கம்.

”அப்பிடியெண்டால் இ;னனும் கொஞ்சம் குடியுங்கோ மாமி … நல்ல சுகம் வரும்
மீண்டும் பேணியை எடுத்து அதனுள் சாராயத்தைக் நிரப்பி , சின்னத்தங்கத்திடம் நீட்டினார் அம்பலவாணர்.

அதனைச் சின்னத்தங்கம் வாங்கும் போது அவளது கைகள் தடுமாறின.பேணியிலிருந்து சிறிது சாராயம் தழும்பி வெளியே சிந்தியது.

”மாமி கொஞ்சம் பொறுங்கோ நான் பருக்கி விடுகிறேன் எனக்கூறிக்கொண்டே அம்பலவாணர் சின்னத்தங்கத்தின் வாயில் பேணியை பொருத்தினார். சின்னத்தங்கம் அதனை ஒரு மிடறில் உறிஞ்சி குடித்துவிட்டு,”தலை சுத்துது தம்பி நான்படுக்க போறன் “ எனக் கூறிக்கொண்டே போர்வையை இழத்துத் தன்னை மூடிக்கொண்டு சாய்ந்து விட்டாள.

”அண்ணை இருங்கோ , நான் தேத்தண்ணீ போடடுக்கொண்டுவாறன்“ எனக் கூறிக்கொண்டு குசினிக்குச் சென்றாள் பார்வதி.

சிறிது நேரத்தின் பின் அம்பலவாணரும் எழுந்து குசினி பக்கம் சென்றார். அவரது நெஞ்சு ‘திக் திக்’ கென அடித்துக்கொண்டது. இதுதான் சரியான சந்தர்ப்பம். இதனை நழுவ விட்டால் வேறோரு சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது என எண்ணியபடி அவர் பார்வதியின் பின்னால் போய் முதுகில் தட்டினார்.

திடுக்கிற்றுத் திரும்பிய பார்வதி அம்பலவாணர் அங்க வந்திரப்பதைக் கண்டதும் ”ஏன் அண்ணை இங்கை வந்தனீங்கள் ?“ எனப் பயத்துடன் கேட்டாள்.

அம்பலவாணர்ஒரு பொழுதும் குசினிப் பக்கம் வந்தில்லை இன்று ஏன் வந்திருக்கிறார். பார்வதியின் மனதில் இனம் புரியாத கலக்கம் ஏற்பட்டது, அவளது நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. அம்பலவாணரின் தடுமாற்றமும் அவரது பேச்சும் அவளுக்கு அச்சத்தை ஊட்டியது குசினியிலிருந்து வெளியு வருவதற்குள் பார்வதி எத்தனித்தாள். திடீரென அம்பலவாணர் அவளது கைகளைப் பற்றிக் கொண்டார்.

”எங்கை பார்வதி போறாய் ..? என்னோடை கொஞ்சம் நேரம் இருந்திட்டுப் போவன்.“

”அண்ணை என்ரை கையை விடுங்கோ… “ அம்பலவாணாரின் பிடியை விலக்க முயன்றாள் பார்வதி,“

”பார்வதி உன்னிலை நான் எவ்வளவு ஆசை வைச்சிருக்கிறன் தெரியுமோ… கொஞ்சம் நேரம் என்னோடை என்னோடை இருந்தால் என்ன?“

அம்பலவானர் பார்வதியைத் தன் நெஞ்சோடு இறுகக் கட்டி அணைத்துகொண்டார். அவள் அவரது பிடியிலிருந்து திமிறினாள் வெறி கொண்டவள் போலபலங்கொண்ட மட்டும் அவரைப் பிடித்துத் தள்ளினாள் .தனது இருகைகளாலும் அவரது கன்னங்களில் மாறி மாறி அறைந்தாள்.

அவளது கூந்தல் கலைந்தது கோபம் நிறைந்த கண்களில் கண்ணீர் முட்டியது.

அம்பலவாணார் அவளது எதிர்பபைத் தாங்க முடியாது சோர்நது போய் பிடியைத் தளர்த்திகொண்டார். அவரது கண்கள் கண்கள் சிவந்தன பார்வதி தன்னை உதாசீனம் செய்து விட்டாள் என்ற அவமானம் ஒருபுறமும், அவள் தனது கன்னங்களில் அறைந்துவிட்டதால் ஏற்பட்ட கோபம் மறுபுறமும் அம்பலவாணருக்கு ஆத்திரத்தைப் ஊட்டியது,

”எடியே .. உன்ரை சங்கதி ஊர் முழுக்க தெரியும் கீழ்ச்சாதிக்காரகோடு கூடிக் களவாய் ஓடினனி இப்ப பத்தினி வேஷமோ போடுறாய் ….? பல்லை நெருடியபடி பார்வதியைப் பார்த்துக் கூறினார் அம்பலவாணர்.

பார்வதி மௌனமாhனாள் அவளது கண்களில் நீர்முட்டி வழிந்தது.

”நீ என்னிலையிலிருந்து ஒரு நாளும் தப்ப முடியாது உன்னை நான் கவனிச்சுக்கள”ளறன் பாரடி….“ எனக் கூறிவிட்டு விருட்டென அவ்விடத்தை விட்டகன்றார் அம்பலவாணர்.

பார்வதி அழுது கொண்டேயிருந்தாள்.

மாணிகத்தோடு கூடிச்சென்ற ஒரு காரயத்துக்காக மற்றவர்கள் தன்னைக் கேவலமாக நினைக்கிறார்களோ என நினைத்த போது கவலை மேலும் அதிகமாகியது, மணமறிந்து நான் ஒரு போதும் மாணிகத்தக்குத் துரோகம் செய்யவில்லை ,அம்பலவாணர் கூறிச் செனறது போல் நான் பத்தினி வேஷம் போடவில்லை – நான் பத்தினியேதான்.
பார்வதியின் மனம் ஆறுதலடைவதற்கு வெகுநேரம் பிடித்தது.

43

மாணிக்கம் உயிரோடு இருப்பதாகவும் இப்போது ஊருக்கு வந்து தாய் தகப்பனடன் தங்கி இருப்பதாகவும் கேளிவியுற்ற அன்னம்மா பதட்டமடைந்து சின்னத்தங்காத்திடம் வந்தாள்.

அவள் முகத்திலை தெரிந்த மாற்றத்தையும் அவளது பரபரப்பையும் கண்ட சின்னத்தங்கம் ஏதோ விபரீதம் நடந்து விட்டாதை புரிந்துகொண்டால்
”சின்னத்தங்கம் , எங்கை பார்வதியைக் காணேல்லை.?

”அவள் உங்கைத்தான் பின் வளவுக்குப் போனவள் இப்ப வந்திடுவள்“ எனப் பதிலளித்தாள் சின்னத்தங்கம் .“

”சின்னத்தங்கம் ஒரு சங்கதி கேள்விப்பட்டனியோ? அவன் மாணிக்கன் உங்கை வந்திட்டானாம்.“

”என்ன மச்சாள்… என்ன சொல்லுறாய்…. அவன் செத்துப் போனான் எண்டல்லோ அவர் சொன்னவர்..

”அப்பிடித்தான் சின்னத்தங்கம் … நானும் நினைச்சுக்ககொண்டிருந்தனான் எல்லோருமாய் சேர்ந்து அவன் செத்துப் போனான் எண்டு கதை கட்டிப் போட்டினம்.“

”ஆர் மச்சாள் உனக்கு உந்த கதை சொன்னது ?“

”இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னம் சின்னத்தங’கம் பரை ரோட்டிலை சந்திச்சனான் அவர்தான் இதைச்சொன்னவர், அந்த மனிசன் ஒருநாளும் பொய் சொல்லாது.
கோடிப் புறத்தில் நின்று இதுவரை நேரமும் அவர்களது சம்பாஷயையைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதிக்குத் தலையை சுற்றியது.

”ஆம் …எனது மாணிகக்ம் உயிருடனா இருக்கிறார் இந்த வஞ்சகர்கள் எல்ரேலாரும் அவர் இறந்துவிட்டாதாகக் கதை கட்டி என்னை நம்ப வைத்துவிட்டார்களே? அதனால் இப்போது எவ்வளவு விபரீதங்கள் நடந்துவிட்டன ? அவர் உயிருடன் இருக்கும்போடீத நான் வேறொருவரைத் திருமணம் செய்துவிட்டேனே. அவர் என்னைக் ஒரு துரோகி என்றல்லவா நினைக்கப்போகிறார் நான் எப்படியாவது அவரைச் சந்திக்க வேண்டும் நடந்தவற்றையெல்லாம் அவருக்கு எடுத்துக் கூற வேண்டும்.

பார்வதியின் கண்கள் இருண்டு கொண்டு வந்தன தடாலென நிலத்திலே சாய்ந்தாள்.

”மச்சாள், இப்ப மாணிக்கம் ஏன் ஊருக்கு வந்திருக்கிறானோ தெரியாது அதுதான் எனக்கு யோசனையாய்க் கிடக்கு இன்னும் ஏதேன் கரச்சல் வருமோ தெரியாது ,,,“ என்றாள் சின்னத்தங்கம்.

”அதுதான் சின்னததங்கம் நானும் உன்னட்டைச் சொல்ல வந்தனான் இனி ஏதேன் நடந்தாhள் எல்லோருக்குந் தான்மானக்கேடு பார்வதியை நீ கொஞ:சம் கய்காயிக்க வேணும் அவளைத் தனிமையாய் விடக்கூடாது“ என்றாள் அன்னம்மா யோசனையுடன்.

”உவள் பிள்ளை பின்வளவுக்குப் போனவள் ..இவ்வளவு நேரமாய்க் காணேல்லை “ என எழுந்த சென்றாள் சின்னத்தங்கம் . அன்னம்மாவும் அவளோடு வீட்டின் பின்புறமாகச் சென்றாள்.

கோடிப்புறத்திலே பார்வதி விழுந்து கிடந்ததைக் கண்ட சின்னத்தங்கம் அலறிப் புடைத்துக்கொண்டு ”ஐயோ… பிள்ளை நிலத்திலே விழுந்த கிடக்கிறாள்… “ என்க கூறியபடி பார்வதியின் அருகில் சென்று அவளது தலையைத் தூக்கி நிமிர்த்த முயன்றபள் அன்னம்மா வீட்டினுள் ஓடிச் சென்று செம்பில் தண்ணீர் எடுத்து வந்து பார்வதியின் முகத்திலே தெளித்தாள்.

சிறிது நேரத்தின் பின்புதான் பார்வதி கண் விழித்துப் பார்த்தாள் சின்னத்தங்கமும் அன்னம்மாவும் அவளைக் கைதாங்கலாகக் கூட்டி வந்து தண்ணையில் படுக்க வைத்தனர்.

அன்னம்மா கோப்பி தயாரிப்பதற்காக அவசர அவசரமாகக் குசினிப் பக்கம் சென்றாள்.

”பிள்ளை……. பிள்ளை…… என்ன நடந்தது? ஏன் விழுந்தனி?“ எனக் கவலையுடன் கேட்டாள் சின்னத்தங்கம்.

”அம்மா எனக்கு தலைசை; சுத்திக்கொண்டு வந்தது பிறகு என்ன நடந்ததெண்டு எனக்குத் தெரியேல்லை“ என தடுமாற்றத்முடன் கூறினாள் பார்வதி.

”பிள்ளை இனிமேல் ஒரு இடத்துக்கும் தனியப்போகப் பிடாது, தேகம் பலவீனப்படடுச் போச்சுச“ என ஆதரவுடன் கூறினாள் சின்னத்தங்கம்.

பார்வதி பதிலுதும் பேசவில்லை, அவளையும் மீறிக்கொண்டு அவளது வழிகளில் கண்ணீர் நிறைந்துகன்னங்களிலே வழிந்தது.

44.

இந்த வருடம் அன்னமார் கோயில் வேள்வி நடப்பதற்கு இனனும் ஒரு சில் மாதங்களே இருந்தன குட்டியன் காலை வேள்வி விஷயமாக க் கதைப்பதற்கு கோவிந்தனது வீட்டிற்கு வந்திருந்தான்.

”மச்சான் இந்த வரியம் வேள்வி என்ன மாதிரி , ஒரு ஆயத்தம் செய்யாமல் இருக்கிறாய்?“

”இந்த முறை சுருக்கமாய்த்தான் செய்யவேணும் குட்டியன் பெரிசாக த் துவக்கினாள் ஏதேன் கரச்சல் வரப்பாக்கும்,“

”அதெப்படி மச்சான் சுருக்கமாய் செய்யிரது… நேர்த்திக்கடனுக்கு எல்லோரும் கிடாயள் வளர்த்து வருகினம் ஒரு நூறு நூற்றம்பது கிடாயெண்டாலும் இந்த முறை விழும்போலை தெரியுது,“

”அப்பிடியில்லை குட்டியன் வழக்கமாய்த் துரைசிங்கம் கமக்காறனும் .செல்லப்பர் கமக்காறனும் தானே வந்து நிண்டு வேள்வியை நடத்திறவை உவன் பெடியன் செய்த வேலையாலை அவையாள் எல்லாம் எங்களோடை பகைச்சுக் கொண்டல்லோ திரியினம்.“

”இல்லை மச்சான் அந்தச் சங’கதியெல்லாம் இப்பபழங்கதையாய்ப் போச்சு செல்லப்பர் கமக்காறனின்ரை மேளுக்குக் கலியாணம் முடிச்சாப்பிறகு அவையின்ரை கோவமெல்லாம் கொஞ்சங் கொஞ்சமாய்க குறைஞ்சு போச்சு“

”எப்பிடிஇருந்தாலும் குட்டியன் ,முன்மாதிரி கமக்காறரவை எங்களோடை புழங்கமாட்டினம் எல்லாத்துக்ககும் எங்களோடை புழுங்கமாட்டினம். எலல்hத்துக்கம் பின்னக்குத்தான் நிப்பினம் “ என்றான் கோவிந்தன்.

”அவையள் பின்னுக்கு நிண்டால் நிக்கட்டுமென் நாங்கள் வழக்கம் போலை வேள்வியைப் பெரிசாய் நடத்துவம்“ என்றான் குட்டியன் அலட்சியத்துடன்.

”என்னதான் இருந்தாலும் எங்கடை கோயில் துரைசிங்கம் கமக்காறனின்ரை காணியலைதானே இருக்குது, நாங்கள் வேள்வியை ஆயத்தம் செய்யெக்கை அவர் வந்து வேள்வி செய்யக் கூடாதெண்டு தடுத்தால் என்ன செய்யிரது“ என்றான் சிந்தனையுடன்.

”மச்சான் இப்ப துரைசிங்கம் முதலாளியின்ரை மூச்சு வலுவாய்க் குறைச்சு போச்சு மேளின்ரை கலியாணத்துக்கு காசுக்க ஓடித்திரியிறார், அவருக்குக் கடன்தனி பெருகிப் போச்சாம் “ என்றான் குட்டியன்.

இதுவரை நேரமும் அவர்களுடைய சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டிருந்த பொன்னி, ”அவருக்கக் கடன் வராமல் என்ன செய்யும், முந்தி இரண்டு மூன்று வழக்கிலை எக்கச்சக்கமாய் காணியளை வித்துச் செலவழிச்சவரல்லோ“ எனக் கூறினாள்,

”ஓம் அக்கா, இப்ப நீங்கள் இருக்கிற இந்தக் காணியையும் மேளுக்க்குச் சீதனமாகக் குடுத்தாப்பிறகு அவரிட்டை மிச்சமாக இருக்கிறது இந்தக் கோயில் காணியும், அவர் குடியிருக்கிற வீட்டுக்காணியுந்தானே.“

”என்னதான் இருந்தாலும் துரைசிங்கம் கமக்காறனிடைப் ஒரு சொல்லுசசொல்லாமல் வேளிவியைத் துவக்கிறது புத்தியில்லை.“ என்றான் கோவிந்தன்.

”ஒ…. அதுசரிதான் அப்பிடியெண்டால் இண்டைக்கு ஒருக்கா அவரோடை பொய் கதைப்பம் “ எனக் கூறிய குட்டியன் பொன்னியின் பக்கந்திரும்பி எனக் கூறி குட்டியன் பக்கந்திரும்பி, அக்கா இந்தமுறை வேள்வியோடையெண்டாலும் என்ரை பிள்ளை கண்மணியைக் கொண்டு மாணிக்கத்துக்கு “சொறுகுடுப் பிச்சுப் போட வேணும் நாணும் எத்தனை நாளைக்கு அவளை வீட்டுக் குள்ளை வைச்சிருக்கிறது? எனக் கேட்டாள’.

”தம்பி நாங்களும் எவ்வளவோ மாணிக்கணிட்டைச் சொலலிப் பாத்தம் அவன் கேக்கிறானில்லை, தனக்குக் கலியாணம் வேண்டாமெண்டு நிக்கிறான். நாங்கள் என்னதான் செய்யிது“ எனக் கவலையுடன் கூறினாள் பொன்னி.

”அக்கா , நீங்கள் இப்பிடிசொல்லுவியளெண்டு நான் கனவிலும் நினை;ககேல்லை இவ்வளவு காலமும் அவள் பிள்ளையைக் கட்டிக் குடுக்காமல் மாணிகத்துக்கு எண்டு தானே வைச்சிருந்தனான்.

”அதுக்கென்ன தம்பி செய்யிறது .அவன் விசரன் பைத்தியபக்காரன் மாதிரி ஏதோ யோசிக்சுக் கொண்டு திரியிறான், ஒருத்தரோடையும் கதைக்கிறானம் இல்லை .நாங்கள் ஏதேன் சொன்னாலும் அவனுக்குக் கோபம் வருகுது,“

”அவன் இப்பவும் செல்லப்பர் கமக்காறன்ரை மேளின்ரை நினைவிலைதான் இருக்கிறான் போலத் தெரியுது“ என்றான் கோவிந்தன்.

”நான் நடந்ததெல்லாத்தையும் நினைச்சுப் பாராமல் ஒண்டுக்கையொண்டு ஒற்றுமையாய் இருக்குங்கள் எண்டுதாணே என்ரை பிள்ளையை மாணிக்கனுக்க கட்டிக் குடுக்கிறுதுக்க ஆசைப்படுகிறேன்.“

”குட்டியன் நீ இந்த விஷயத்திலை குறை நினைக்காதை உன்ரை மேள் கண்மணி ஒர தங்கப் பவுன் : அவளை நாங்கள் மருமேளாய் எடுக்கக் குடுத்து வைக்கேல்லை . என்ன செய்யிறது மாணிக்கனை எந்த வகையிலும் எங்களாலைத் திருப்ப ஏலாம் கிடக்கு“ என முடிவாகக் கூறினான். கோவிந்தன்.

”நீங்கள் உப்பிடிச் சொல்லோக்கை நான் என்னதான் செய்யிறது. அப்ப பிள்ளைக்கு வேறை இடத்திலேதான் பாக்கவேணும் “ எனக் கூறிக்கொண்டே எழுந்து புறப்பட்டான் குட்டியன்.“

கோவிந்தனும் பொன்னியும் குட்டியனின் மனதை நோகவைக்கவேண்டிய நிலை வந்துவிட்டதே என்ற கவலையுடன் அவனை வழியனுப்பி வைத்தார்கள.

45.

மயக்கமுற்று விழுந்திதிலிருந்து பார்வதியின் உடல் நிலை பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தது. அவாளால் எழுந்து நடமாட முடியவில்லை. எந்த நேரமும் படுத்தபடு;கககையாகவே கிடந்தாள். சில் நாட்களுக்குள் அவளது காலடகளும் முகமும் வீங்கிப் போய்விட்டன, தேமெல்லாம் வெளிறிப் போயிரந்தது. அவளது உடல்நிலை மோசமடைந்து போயிருந்தது, அவளது உடல்நிலை மேபாசமடைந்திருந்து கொண்டே வந்ததினால். செல்லப்பரும் சின்னத்தங்கமும் பெரிதும் கவலையடைந்திருந்தனர். பார்வதியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிச் சென்று காட்டியபோது அவளுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் , நோயாளி அதிகம் யோசிப்பதோ கவலையடைவதோ கூடாதெனவும் வைத்தியர்கள் கூறினார்கள் மாசங் கூடக்கூட பார்வதியின் நிலைமை மோசமடைந்துகொண்டே வந்தது. அன்னம்மா அவளைப்கவனிப்பதற்காகத் தனது மகள் சரசுவுடன்செல்லப்பர் வீட்டிலேயே தங்கிவிட்டாள்.பிரசவகாலம் நெருங்கியபடியால் பிரசவத்துக்குரிய ஆயத்தங்களையும் அவள் செய்திருந்தாள்.
மாணிக்கம் உயிருடன் இருக்கிறான் என்பதை அறிந்ததிலிருந்து பார்வதியின் மனதிலும் பெருந் தாக்கம் ஏற்பட்டிருந்தது,

ஏன் மாணிக்கம் என்னைச் சந்திப்பதற்கு முயற்சிசெய்ய வில்லை?இந்த ஊரிலேயே இருந்த கொண்டு என்னை வந்து பார்க்காமல் இருப்பாதற்க எப்படி அவருக்க மனம் வந்தது? மாணிக்கத்திக்க என்மேல் கோபமாகத்தான் இருக்கவேண்டும் . நான் அவரை மறந்து வேறு திரமணம் செய்து விட்டேன் என எண்ணி என்மெல் கோபமடைந்திருப்பார். அவரை நான் எப்படிச் சந்திப்பது? அவரை எப்படிச் சந்திப்பது? அவரை இறந்தவிட்டதாகச் சொல்லி என்னை நம்பவைத்துச் சூழ்ச்சி செய்துவிட்டார்கள் என்பதை அவருக்க எப்படிப் புரியவைப்பது, என வயிற்றிலேவளரும் குழந்தை அவருடையது தான் என்பதை தெரிவிப்பது? அவரது குழந்தையைஅவரின் நினைவாக வளர்க்க வேண்டும் என்ற காரணத்தினாலேதான் இன்னும் உயிருடன் இருக்கின்றேன் என்பதை அவருக்கு எப்படி எடுத்துக் கூறுவது.

சிந்தித்துச் சிந்தித்து பார்வதி எந்த நேரமம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள்.
அன்னம்மாவுக்கு சின்னததங்கத்தங்கத்திற்கும் பார்வதியின் நிலையைப் பார்க்கும் போது கவலையாக இருந்தது. சில் நாட்களாக அவள் படுக்கையில் இருந்தவாறு பிதற்றத் தொடங்கி இருந்தாள்.

”மாணிக்கம் நான் உங்களுளக்குத் துரோகம்; செய்யேல்லை… உங்களைச் செத்துப்போகச்செண்டு சொல்லி என்னை ஏமாத்திப் போட்டினம் மாணிக்கம்…உங்களைச் செத்துப்போகச்செ:டு சொல்லி என்னைஏமாத்திப் போட்டினம் மாணிக்கம்… நான் உங்களிட்டை வரப் போறன் மாணிக்கம்.. என்ரை வயித்திலை வளருகிறது உங்கட்டை பிள்ளைதான் மாணிக்கம்..“

என்றெல்லாம் பைத்தியக்காரிபோல் அவள் அலட்டத்திதொடங்கி விட்டாள். அதைக் கேட்டபோது அன்னம்மாவுக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது.

சின்னத்தங்கத்துக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை,”கோவிந்தன் ஆட்கள் அன்னம்மாரை ஏவிவிட்டினமோ .அல்லது பிள்ளைக்க ஏன் செய்வலினை சூனியம்.செய்திட்டினமோ தெரியேல்லை nதுதான் பிள்ளை உப்பிடிப் புலம்புகிறாள். “ எனக் கேட்டாள் கவலையுடன் கூறினாள்.

பார்வதி இப்படி மாணிக்கத்தை நினைத்து அடிக்கடி புலம்புவது ஊரிலுள்ள சில்ருக்கும் தெரிய வந்திருந்தது. நடேசு வாசிகசாலைக்கு வரும் வேளைகளில் பார்வதியைப் பற்றிய செய்திகளை எல்லாம் அம்பலவாணர் அவனிடம் கேட்டறிந்து தனது நண்பர்களுக்கும் கூறியிருந்தார்.

வாசிகசாலையில் இப்போது சில நாட்களாக மாணிக்கம் ஊருக்குத் திரும்பி வந்திருப்தைப் பற்றியும், அவனை நினைத்து பார்வதி எந்நேரம் புலம்புவது பற்றியுமெ கதையாக இருந்தது.

46.

துரைசிங்கம் முதலாளி பெரிதும் சோர்வடைந் திருந்தார்.அவரத திருமணத்தைக் கூடியவிரைவிலேயே நடத்த வேண்டிய நிலைமை அவருக்க ஏற்பட்டிருந்தது. மாப்பிள்ளை வீட்டார் தழருமணத்தை உடனே வைக்க வேண்டுமென அவரை வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். உடனே திருமணத்தை நடத்ததுவதனால் அவர் அன்னமார் கோயில் திருமணத்தை காணியை எப்படியும் விற்க வேண்டும் அலல்து தனமுது காரையோ லொறியையோ விற்கவேண்டும் தனது சொந்தப் பாவனையிலுள்ள காரை மகளின் திருமணத்துக்கு முன் விற்பதற்கு அவருக்கு மனம் வரவில்லை.
லொறியினால் அவருக்குக் கிடைத்து வந்த வருமாணம் இப்போதுத பெரிதும் குறைந்திருந்தது, செல்லப்பர்.தனது மகளுக்கு வருத்தம் வருவதாக க் கூறி அடிக்கடி லீவு எடுத்துக் கொண்டிருந்தார். அதனால் தொழிலும் பெரிதும். பாதிக்கப் பட்டிருந்தது. இந்நிலைலொறியை விற்பது தான் புத்திசாலித் தனமாகத் துரைசிங்கம் முதலாளிக்குப் பட்டது அதனைச் செல்லப்பரிடம் தெரிவித்தபோது துரைசிங்கம் முதலாளியின் நிலையை உணர்ந்த செல்லப்பரும் அதற்கு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை,

லொறியை விறபது சம்பந்தமாகத் தனக்குத் தெரிந்வர் களுடன் கதைக்கும் நோக்கத்துடன் வெளியே புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார் துரைசிங்கம் முதலாளி அப்போது கோவிந்தனும் ,குட்டியனும் அவரைத் தேடி அங்கு வந்தார்கள்.

”என்ன விஷயம் இந்த நேரத்திலை இரண்டு பேருமாய் வாறியள்?“ அவர்களைப் பார்த்துக் கேட்டார் துரைசிங்கம் முதலாளி.

”உங்களிட்டைத்தான் கமக்காறன் வந்தனாங்கள் ஒரு முக்கியமான விஷயமாய்க் கதைக்க வேணும் “ எனக் கை களை பிசைந்தபடி கூறினான் குட்டியன்.

துரைசிங்கம் முதலாளி விறாந்தையிலிருந்த வாங்கில் அமர்ந்து கொண்டார்.

குட்டியனும் கோவிந்தனும் வாசற்படியில் வந்து நின்றார்கள் .

கமக்காறன் எங்கடை அன்னமார் கோயில்வேள்விக்கு இன்னும் கொஞ்சகாலதிலந்தானே இருக்குது, அதைக் பற்றி ஒருக்கா க் கதைப்பமெண்டுதான் வந்தனாங்கள் எனப’பபிடரியைச் சொறிந்தபடி கூறினான் கோவிந்தன்.

”அதுக்கேன் என்னடடை வந்து கதைப்பான் .நீங்கள் ஏதோ செய்யிரதைச் செய்யுங்கோவன்”.

”அப்பிடிச் சொல்லக் கூடாது கமக்காறன் ..நீங்கள்தான் ஒவ்வொரு வரியமும் வந்து நிண்டு வேள்வியை நடத்தி வைக்கிறனீங்கள், இந்த வரியமும் நீங்கள்தான் நடத்தவேணும்.

கோவிந்தன் இப்படிக் கூறியது துரைசிங்கம் முதலாளியின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது , மாணிக்கத்தைக் தான் தாக்கியதையும் அவர்களுக்குத் தான் இழைத்த துன்பத்தையும் மறந்து இப்போது தன்னிடமே கோவிந்தன் வந்திருப்பதை நினைத்துபோது அவனைப் பற்றி ஓர் உயர்ந்த எண்ணம் அவரது மனதில் ஏற்பட்டது.

”ஏதோ என்னாலை இயண்டதைச் செய்யிறன் , இந்த வருஷம் நீங்கள் வேள்வியை நடத்துங்கோ அடுத்த வருஷம் என்னென்ன நடக்குமோ சொல்ல முடியாது எனக் கூறினார் துரைசிங்கம் முதலாளி.

”ஏன் கமக்காறன் அப்பிடிச் சலிப்பாய்ச் சொல்லுறியள் ?“ எனக் கேட்டான் குட்டியன்.
நான் கோயில் காணியை விறகத் தீர்மானிச்சுட்டன், எப்பிடியும் அடுத்ர வருஷம். அந்தக் காணி கைமாறி விடும் “ எனக் குட்டியனைப் பார்த்துச் கூறினார் துரைசிங்கம் முதலாளி.

”அது எங்கடை குலதெய்வம் இருக்கிற காணி கமக்hறன் அதைக் நீங்கள் விக்கப்படாது “ கோவிந்தனின், குரலில் உறுதி தொனித்தது.

எந்தக் காரணத்துக்காக அந்தக் காணியை விலை கொடுத்து வாங்குவதற்க மற்றவர்கள் தயங்குவார்களோ அதே காரணத்தக்காக கோவிந்தன் அதனை விற்பதற்காக கோவிந்தன் அதனை விற்பதற்கும் தடை சொல்லுகிறான்.

”அது என்ரை காணணணி . அதை நான் விற்கத்தான். போறன் அதைக் ஒருத்தரும் தடுக்கேலாது“ எனக் கண்டிப்பான் குரலில் கூறினாhர் துரைசிங்கம் முதலாளி.

”கமக்காறன் நீங்கள் விக்கிறதை நாங்கள் துடுக்கேல்லை அது உங’கடை பாணி …நீங்கள் இவ்வளவு காலமும் எங்களை அந்தக் காணியிலை கோயில் கட்டிக் கும்பிடவிட்ட மாதிரி இனிமேல் அந்தக் காணியை உங்களிட்டை விலைக்கு வாங்கப் போறவையும் விடுவினமென்று நாங்கள் எப்பிடிநம்பிறது? “ எனக் கேட்டான் குட்டியன் பணிவான குரலில்.

”நான் உங்களு;க்குப் பெருந்தன்மையோடை அந்தக் காணியிலை கோயில் வைச்சிருக்க விட்டமாதிரி எல்லோரும் விடமாட்னம்தான் குட்டியன் .. அதுக்காக நான் காணியை விக்காமல் விடமுடியாது அதை வித்துத்தான் என்ரை சில் பிரச்சியளைத் தீர்க்கவேண்டியிருக்கு,“

”கமக்காறன் நாங்கள் இப்பிடிச் கேக்கிறதுக்கு குறை நினைக்கப்பிடடாது. எங்கடை குலதெய்வம் இருக்கிறகாணியை நீங்கள் எங்களோடை விட்டுடுங்கோ… ஆதுக்கரியகாசை நாங்கள் எல்லோருமாய்ச் கேர்ந்து உங்களுக்குத் தாறம்.“

குட்டியன் இப்படிக் கூறியபோது துரைசிங்கம் முதலாளி ஒரு கணம் யோசித்தார்.

”இவங்களக்குகாணியை விலைக்க கொடுப்பதா…?

”ஊரிலே உள்ள எவருமெ இதுவரை காலுமும் செய்யாத காரியத்தை நான் செய்வதா?

”ஏன் செய்யக் கூடாது? எனது சமூகத்தவர் எல்லாரும் அந்தக் காணியை வாங்குவதற்குத் தயங்கும்போது.. அதனை ஏன் இவர்களுக்கு வழலைக்குக் கொடுக்க கூடாது?“

”இந்த ஊரிலே இதுவரைக்கும் அப்படி ஒரு வழமையில்லை உங்களக்கு ஒருத்தரும் காணியை விலைக்குக் கொடுக்கமாட்டினம் ஆனாலும் நீங்கள் இவ்வளவு தூரும் வற்புருத்திக் கேக்கிறபடியால் உங்களுக்கு அந்தக் காணியை விலைக்கத் தாறன்“ துரைசிங்கம் முதலாளியே பரிந்து உதவி செய்ய முன்வந்திருப்பவர் போன்ற பாவனையில் அவர்களிடம் கூறினார்.

கோவிந்தனுக்கும் குட்டியனுக்கும் உள்ளத்திலே மகிழ்ச்சி பிரவாகித்துப் பாய்ந்தது.
”கமக்காறன் ,அன்னம்மார் உங்களுக்கு ஒருகுறையும் விடமாட்டாய் “ என வாழ்த்தினாhன் கோவிந்தன்.

அப்போது கேற்றைத் திறந்து கொண்டு பரபரப்புடன் வந்தார் செல்லப்பர்

”அண்ணைபிள்ளைக்கு கொஞ்சம் வருத்தம் கடுமை தெகமெலலாம் வெட்டி வெட்டி இழுக்குது மேலும் குளிர்ந்து போச்ச உடனே பெரியாஸ்ப்த்ரிக்சுகுக் கொண்டு போக வேணும் அண்ணை ஒருக்கா உந்தக்காரைக் கொண்டு வாறியே….“

செல்லப்பர் இப்படிக் கூறியபோது அவரது முகத்தில் இருந்த கலக்கத்தைப் பார்த்து துரைசிங்கம் முதலாளி உடனே எழுந்திருந்தார்.

நிலைமையை புரிந்துக்கொண்ட கோவிந்தனும் குட்டியனும் இனிஅங்குதாமதிப்பது முறையில்லை என நினைத்து துரைசிங்கம் தலாளியிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்கள்.

செல்லப்பரை காரில் ஏற்றிக்கொண்டு அவரது வீட்டுக்கு விரைந்தார் துரைசிங்கம் முதலாளி.

47.

பகல் உணவக்காக தோட்டத்தில் இருந்து அப்போது தான் பிடுங்கி வந்த மரவள்ளி;கிழங்கை ,துண்டுதுண்டாக கத்தியால் நறுக்கி அதன் தோலை உரித்துச் சட்டியில் போட்டுக் கழுவிக் கொண்டிருந்தாள். பொன்னி துரைசிங்கம் முதலாளியின் வீட்டிலிருந்து திரும்பி வந்த கோவிந்தன் முகத்தைப் பார்த்தபோது அவள் துனுக்கிற்றாள். அவன் அதிர்ச்சி அடைந்தவன் போலக் காணப்பட்டான்.

”போன இடத்திலை ஏதேன் கரச்சலோ…? கமக்காறன் ஏதேன் சொன்னவரோ? “ எனக் கோவிந்தனிடம் பதட்டத்துடன் கேட்டாள் பொன்னி.

”அங்கையொரு கரச்சலும் இல்லை “ எனக் கூறிய கோவிந்தன் ,” எங்கை உவன் பெடியன் மாணிக்கனைக் காணேல்லை?“ என வினவினான்.

”அவன் கொஞச்சத்துக்துக்கு முன்னந்தான். கிணத்தடிப்பக்கம் போனவன் ……………. ஏன்…………. அவனைப் பற்றி ஏதோ கரச்சலோ?“

”செல்லப்பர் கமக்காறனினன்ரை மெளுக்கு வருத்தம் கடுமையாம: அவசரமாய் கொண்டு போகினம் “ என்றான் கோவிந்தன்.

”அதுக்கென்ன போகட்டுமன்: நீங்கள் ஏன் கவலைப்பர்றியள்? எனக் கேட்டாள் பொன்னி.

”அதுக்கில்லைப்பொன்னி , துரைசிங்கம் கமகாறன் வீட்டாலை வரேக்கை ஒரு விஷயம் கேள்விப்பட்டம். Nதுதான் எனக்குப் பெரிய யோசனையாய்கிடக்கு. கமக்காறனின்ரை மேள் உவன் மாணிக்கனை பார்க்க வேணுமெண்டு புலம்பிக்கொண்டு இருக்கிறவாம்.“

”அதுக்கு நாங்கள் என்ன செய்யிரது ? என்றாள் பொன்னி அலட்சியமாக .

அப்போது கிணத்தடியிலிருந்து குளித்துவிட்டுத் திரும்பியமாணிக்கம், பார்வதியைப் பற்றி ஏதோ தாயும் தந்தையும் கதைப்பதைக் கேட்டதும் தட்டிப்படலையின் அருகில் நின்று அவர்களது பேச்சை உற்றுக் கேட்டான்.

”உவன் பெடியன் செத்துப் போனானெண்டு சொல்லிஏமாத்தித்தானாம் கமக்காறன்ரை மேளுக்குக் கலியாணம் முடிச்சு வைச்சவையாம்.“

”ஆர் உந்தச் சங்கதி உங்களுக்குச் சொன்னது.?“

”நானும் குட்டியனும் துரைசிங்கம் கமக்காறன் வீட்டிரையிலிருந்து திரும்பி வரேக்கை கேள்விப்பட்டம். உங்கை மட்தடியில் உதுதான் கதையாய்க் கிடக்கு,“

”ஐயோ உதாலை எங்களுக்குமெல்லோ வீண்பழிவரப்போகுது“ எனக் கூறினாள் பொன்னி.

இதுவரைநேரமும் அவர்களது சம்பாஷனையை க் கேட்டுக் கொண்டிருந்த மாணிக்கம் அதிர்ச்சியடைந்தான் பார்வதி என்னை நினைத்துக்கலங்குகிறாளா?இந்தப் பாவிகள் எல்லோரும் சேர்ந்து என்னை இறந்துவிட்டதாகக் கூறி அவளை ஏமாற்றிவிட்டார்களா? அவளது மனதை இவ்வளவு காலமும் அணு அணுவாய்ச் சித்திரவதை செய்துவிட்டார்களே. ஒவ்வொரு நிமிஷமும் என்னைச் சந்திப்பதற்காக அவள் தவித்திருப்பாளே. நான் ஒரு பாவி : அவளைத் தவறாக எண்ணிக் கொண்டு அவளைச் சந்திப்பதற்கு எந்த முயறட்சியும் எடுக்காமல் விட்டுவிட்டேனே. எவ்வித தடையேற்பட்டாலும் அதைக் தகர்த க்கொண்டு அவளைச் சந்தித்து உண்மை நிலையை அறிய வேண்டும்.

மறுகனம் மாணிக்கம் அவசர அவசரமாக வீட்டினுள்ளே சென்று உடைய மாற்றிக் கொண்டு வெறிகொண்டவன் போல் வெளியே ஓடினான்.

48.

செல்லப்பரும் அன்னம்மாவும் பார்வதியைத் தூக்கி வந்து காரில் ஏற்றியபோது அவளைக் கவனித்த கட்டிலிருந்து அவளை துரைசிங்கம் முதலாளி திகைத்துப் போனார். முத்தையன் கட்டிலிருந்து அவளை அழைத்து வந்த போதுதான் அவர் பார்வதியைக் கடைசித் தடவையாகப் பார்த்திருந்தார். இப்போது பார்வதியின் தோற்றம் முழுமையாக மாறியிருந்தது, துரைசிங்கம் முதலாளிக்கு ஏனோ அவரை அறியாமலே அவரது மனதில் ஒருவித பயம் ஏற்பட்டது.

ஆஸ்பத்திரிக்கு இவளைக் கொண்டு போனாலும் பிழைத்துக் கொள்வாளா என்பது அவருக்குச் சந்தேகமாக இருந்தது.

என்னாலேதான் பார்வதி இந்த நிலைமையை அடைந்திருக்கிறாளா?நான் இவளை மாணிக்கத்திடமிருந்து பிரித்துக் கூட்டி வந்ததாலே தான் இவளது உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறதா?

துரைசிங்கம் முதலாளி ஆஸ்பத்திரியை நோக்கி வேகமாகக் காரை ஓட்டிச் சென்றார். பார்வதிக்கு எதுவும் நடந்துவிடக் கூடாதேயென அவரது மனம் ஏங்கிய வண்ணம் இருந்தது.

”தம்பி கொஞ்சம் சுறுக்காய்ப் போ. பார்வதியின்ரை கைகால் எல்லாம் குளிரத் தொடங்குது” அன்னம்மா துரைசிங்கம் முதலாளியைத் துரிதப்படுத்தினாள்.

செல்லப்பரும் சின்னத்தங்கமும் எதுவுமே பேசவில்லை. அவர்கள் இருவருமே அப்போது கதைக்கக் கூடிய நிலையில் இருக்கவில்லை.

ஆஸ்பத்திரியை அடைந்தபோது வாசலில் நின்ற காவலாளியிடம், “இது அவசரமான கேஸ்” எனக்கூறிய படி நேராகக் காரைப் பிரசனவிடுதியின் பக்கம் கொண்டு சென்று வாசலில் நிறுத்தினார் துரைசிங்கம் முதலாளி.

ஆஸ்பத்திரி ஊழியர்களும் தாதிமார்களும் பார்வதியை “ஸ்றெச்சரி”ல் வைத்துப் பிரசவ அறைக்குக் கொண்டு சென்றார்கள்.

பார்வதியைச் சோதித்த வைத்தியரிகள் துரிதமாக இயங்கத் தொடங்கினார்கள். பார்வதியின் இரண்டு கைகளிலும் ஊசி மூலம் மருந்தைச் செலுத்தினார்கள்.

“டொக்டர், இப்ப நாங்கள் கொண்டு வந்த நோயா ளியின் நிலைமை எப்படி இருக்கு?”- வெளியே வந்த மருத்துவரிடம் துரைசிங்கம் முதலாளி விசாரித்தார்.

“இது ஒரு சீரியஸ் கேஸ், நோயாளியின் நிலைமையை நாங்கள் திடமாக சொல்லேல்லாது. இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ளை குழந்தையைப்பிரசவிக்கச்செய்யவேணும்; இல்லாவிட்டால் நோயாளியின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்” எனக் கூறியவைத்தியர் மீண்டும் பிரசவ அறைக்குத் திரும்பினார்.

‘ஐயா, என்ரை பிள்ளையை எப்பிடியெண்டாலும் காப்பாத்திப் போடுங்கோ” என அழுதபடி அவரைக் கை கூப்பி வணங்கினாள் சின்னத்தங்கம்,

எல்லோருக்கும் ஒரே கலக்கமாக இருந்தது.

சிறிது நேரத்தில் பிரசவ அறைக்குள் இருந்துகுழந்தை வீரிட்டு அழும் சத்தம் கேட்டது.

வைத்தியரும் தலைமைத் தாதியும் ஏதோ தங்களுக்குள் பேசியபடி வெளியே வந்தார்கள்.

“ஆண் குழந்தை பிறந்திருக்கு…இப்ப நாங்கள் தாய்க்கு இரத்தம் ஏத்தியிருக்கிறம்; தாயின் நிலைமையைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது” தலைமைத் தாதி கூறினாள்.

துரைசிங்கம் முதலாளி நிலை கொள்ளாமல் அங்குமிங்கும் உலாவியபடி இருந்தார். செல்லப்பர் தலையிலே கை வைத்தபடி வெளியே போடப்பட்டிருந்த வாங்கில் உட் கார்ந்திருந்தார். அன்னம்மாவும் சின்னத்தங்கமும் அழுத வண்ணம் பிரசவ அறையின் வாசலிலேயே நின்று கொண் டிருந்தார்கள்.

ஒரு மணி நேரத்தின் பின் பார்வதியைப் பிரசவ அறையிலிருந்து பக்கத்திலுள்ள வேறொரு அறைக்கு மாற்றினார்கள். அவளது இடது கையில் ஊசிமூலம் இரத்தம் ஏற்றப் பட்டுக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் பார்வதி கண்விழித்துப் பார்த்தாள். எல்லோரும் கட்டிலின் பக்கத்தில் போய் நின்று அவளை கவலையுடன் பார்த்த வண்ணம் இருந்தார்கள். அப்போது தாதி ஒருத்தி பார்வதியின் குழந்தையை எடுத்து வந்து கட்டிலின் பக்கத்திலுள்ள தொட்டிலில் கிடத்திவிட்டுச் சென்றாள்.

பார்வதி அங்கிருந்த எல்லோரையும் மாறிமாறிப் பார்த்தாள். அவளது கண்களில் அளவிட முடியாத ஏக்கம் குடிகொண்டிருந்தது. அவளது இதயத்திலிருந்து பெருமூச் சொன்று வெளிப்பட்டது.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியே யிருந்து மாணிக்கம் அங்கு ஓடிவந்தான். அவனைக் கண்டதும் பார்வதியின் கண்கள் மலர்ச்சியடைந்தன. அவள் எழுந்து உட்கார முயன்றாள்.

மாணிக்கம் அவள் அருகில் சென்று அவளது கைகளை ஆதரவோடு பற்றினான். அங்கு நின்ற எவருமே அவனைத் தடுக்கவில்லை

“மாணிக்சும்……. மாணிக்கம்…..” பார்வதியின் உதடுகள் அசைந்தன.

அவன் அவளது வதனத்தை நோக்கிக் குனிந்தான். ”மாணிக்கம்….உங்களை செத்துப் போச்செண்டு என்னை நம்ப வைச்சிட்டினம். என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ” அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

மாணிக்கம் அவளது கன்னங்களில் வழிந்த கண்ணிரைத் தனது கைகளால் துடைத்துவிட்டான். அவனது கண்களிலும் கண்ணீர் குளமாகி நின்றது.

”பிள்ளை நீ கொஞ்ச நேரம் பேசாமல்படுத்திரு” எனச் சின்னத்தங்கம் அழுதவண்ணங் கூறினாள்.

“அம்மா என்ரை பிள்ளையின்ரை முகத்தை ஒருக்கா எனக்குக் காட்டுங்கோ” பார்வதி வார்த்தைகளைக் கூற முடியாமல் திணறினாள்.

சின்னத்தங்கம் தொட்டிலில் கிடந்த குழந்தையை எடுத்து வந்து பார்வதியின் அருகிலே கிடத்தினாள்.

பார்வதி குழந்தையை வருடியபடி மாணிக்கத்தின் முகத்தைப் பார்த்து ஏதோ கூறுவதற்கு முயன்றாள்.

“கொஞ்சம் அமைதியாய் படுத்திருங்கோ பார்வதி” மாணிக்கம் அவளை மன்றாடினான். அவனது குரல் தழதழத்தது.

“மாணிக்கம் இது….இது… உங்களுடைய சொத்து” அவனது கையைப் பிடித்துக் குழந்தையின் மேல் வைத்த படி கூறினாள் பார்வதி. மாணிக்கம் குழந்தையைத் தன் இரு கைகளாலும் தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

திடீரெனப் பார்வதியின் உடல்பதறியது . அவள் ஆவேசத்துடன் கட்டிலில் எழுந்து உட்கார முயன்றாள். கையிலே ஏற்றப்பட்டிருந்த ஊசியைப் பிடுங்கி எறிந்தாள்.

அதனைப் பார்த்த தாதி ஒருத்தி அவளருகே ஓடிவந்து அவளைக் கட்டிலில் படுக்கவைக்க முயன்றாள்.

“என்னைப் பிடிக்காதையுங்கோ… என்னைப் பிடிக்காதை யுங்கோ’ எனக் கூறிக் கொண்டு பார்வதி திமிறினாள். உடனே அந்தத் தாதி ஓடிப்போய் வைத்தியரை அழைத்து வந்தாள். அவர் அவசர அவசரமாக அவளுக்கு ஏதோ சிகிச்சைகள் செய்தார்.

“என்னை ஒண்டும் செய்யாதையுங்கோ டொக்டர்…என்னைச் சாகவிடுங்கோ…”

பார்வதி படுக்கையில் தலையை அங்குமிங்குமாக ஆட்டியபடி புரண்டாள். அவளது நாடியைச் சோதித்த வைத்தியரின் முகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பார்வதியின் கண்கள் சோர்வடைந்தன. அவள் இப்போது மாணிக்கத்தைப் பார்த்து ஏதோ கூற முயன்றாள். “மாணிக்கம்…… மாணிக்கம்..”

அவளது உதடுகள் அசைந்தன. விழிகள் இமைக்குள் செருகின. மறுகணம் அவளது தலை சாய்ந்தது.

மாணிக்கம் வெறி கொண்டவன் போல் பார்வதி படுத்திருந்த கட்டிலில் தலையை மோதி, “ஐயோ…என்ரை பார்வதியைக் கொலைசெய்து போட்டார்களே” எனக் கதறித் துடித்தான்.

சின்னத்தங்கமும், அன்னம்மாவும் ஒருவரை யொருவர் கட்டிப் பிடித்து ஓலமிட்டு அழுதார்கள்.

செல்லப்பர், பார்வதியின் கால்களை சுட்டிக்கொண்டு, “பிள்ளை எங்களை விட்டுட்டுப் போட்டியே” என விம்மினார்.

துரைசிங்கம் முதலாளியின் நெஞ்சு பதைபதைத்தது. அவரது கண்களிலும் கண்ணீர் குளமாகி நின்றது.

உலகத்துச் சோகமெல்லாம் ஒன்றுகலந்தாற்போல் மாணிக்கத்தின் கையிலிருந்த குழந்தை வீரிட்டு அழுது கொண்டிருந்தது.

49.

அன்று சனிக்கிழமை அன்னமார் கோயில் வேள்வி வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் சனக் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒலிபெருக்கியில் இசைத்துக் கொண்டிருந்த சினிமாப் பாட்டின் ஓசையையும் மீறிக்கொண்டு பறைமேளத்தின் ஒலி ஒருவித லயத்துடன் ஒலித்துக்கொண்டிருந்தது.

இந்த வருடம் மாணிக்கம்தான் முகாமைக்கு நின்று வேள்வியை நடத்தினான். அவனது நண்பன் கந்தசாமியும். அவனுக்கு ஒத்தாசையாக அங்கு நடக்கும் காரியங்களைக் சுவனித்துக் கொண்டிருந்தான். சுந்தசாமியின் மனைவி செங்கமலம் வியப்புடள் அங்கு நடப்பதையெல்லாம் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தாள்.

துரைசிங்கம் முதலாளியை வேள்விக்கு வரும்படி கோவிந்தன் அழைத்திருந்த போதும், அவர் அங்கு செல்ல வில்லை. அன்று தான் செல்வப்பர் தனது பேரக் குழந்தை யைப் பிள்ளையார் கோயிலுக்குக் கொண்டு செல்வதாக இருந்தார். அவரோடு தாலும் கூடிச் செல்ல விரும்பிய முதலாளி காலையிலேயே துரைசிங்கம் செல்லப்பரின் வீட்டுக்கு வந்திருந்தார்.

எல்லோருமாகக் கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

செல்லப்பர் குழந்தையைத் தனது இரு கைகளாலும் அணைத்துக்கொண்டு முன்னால் நடந்தார். அவருக்குப்பக்கத்தில் அர்ச்சனைத் தட்டுடன் நடேசு வந்தான் துரைசிங்கம் முதலாளியும், அன்னம்மாவும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். சின்னத்தங்கம் மட்டும் கோயிலுக்கு வராமல் வீட்டிலேயே தங்கிவிட்டாள்..

அவர்கள் வாசிகசாலையைத் தாண்டிச்செல்லும் போது சின்னத்தம்பரும், அம்பலவாணரும் அங்கிருப்பதைக் கவனித்த நடேசு,

”அண்ணையவை, நாங்கள் பிள்ளையைக் கோயிலுக்குக் கொண்டு போறம். நீங்களும் வாறியளோ?” என உற்சாகத்துடன் அவர்களைப் பார்த்துக் கேட்டான்.

“நீ போ மச்சான். நாங்கள் இப்ப வேள்விக்கு போக வேணும், பிறகு உன்னை வீட்டிலை வந்து சந்திக்கிறம்” எனச் சிரித்தபடி கூறினார் அம்பலவாணர்.

“பாவம் செல்லப்பர் அநியாயமாய்ப் பார்வதியைச் சாகக் குடுத்திட்டு இருக்கிறார். அவளை மாணிக்கனோடையே வாழ விட்டிருக்கலாம்” சின்னத்தம்பர் தான் அம்பலவாணரிடம் கூறினார்.

பறை மேளத்தின் ஒலியும், சேமக்கலத்தின் நாதமும் காற்றிலே மிதந்து வந்தது.

அன்னமார் கோயில் வேள்வி ஆரம்பமாகி விட்டது. கோவிந்தன் உருக்கொண்டு ஆடத் தொடங்கினான். பறைமேளம் அடிப்பவர்கள் அவனைச் சூழ்ந்து நின்று அவ னது ஆட்டத்துக்கேற்ப தாளத்தை மாற்றி அடிக்கத் தொடங்கினார்கள். “அன்னமாருக்கு அரோகரா…அன்னமாருக்கு அரோகரா…” எனப் பக்தர்கள் கரம் குவித்து வணங்கினார்கள்.

கோவிந்தன் கையிலே சங்கை எடுத்துக் கொண்டு இப்போது பலமாகத் துள்ளித் துள்ளி உருவாடிக்கொண்டிருந்தான்.

கோயிலில் பலிபீடத்தின் பின்னால் தனது சால்வையை விரித்து அதிலே குழந்தையைக் கிடத்தினார் செல்லப்பர்.

“பூம்……. பூம்……….”

கோவிந்தன் எழுப்பிய சங்கொலி காற்றிலே மிதந்து வந்தது.

பிள்ளையார் கோயிலில் குருக்கள் பூசையை ஆரம்பித்தார்.

செல்லப்பர் பேரப் பிள்ளையை இரு கைகளிலும் தூக்கி கோயிலை மூன்று முறை வலம் வந்து குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்வித்தார்.

குருக்கள் பூசை முடிந்ததும் குழந்தையின் நெற்றியில் திருநீறு அணிந்து சந்தனப் பொட்டும் இட்டார்.

“பூம்……பூம்……”

கோவிந்தன் மீண்டும் மீண்டும் சங்கநாதம் எழுப்பிக் கொண்டிருந்தான். போர்க்களத்திலே வெற்றிகண்ட வீரன் சங்க நாதம் ஒலிப்பது போல் அவன் ஆவேசத்துடன் சங்கை ஊதிக்கொண்டிருந்தான்.

அவன் எழுப்பிய சங்கநாதம் விண்ணில் அதிர்ந்து எங் கும் பிரவாகித்து ஒலித்துக்கொண்டிருந்தது.

(முற்றும்)

– புதிய சுவடுகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *