இளம்பிறையின் இரவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 22,729 
 

அன்று முழுமதி நாள்.இரவின் முதல் ஜாமம் முடிந்து இரண்டாவதுஜாமம் தொடங்கியிருந்தது. மேல் மாடத்தைஒட்டிய உப்பரிகையில் உட்கார்ந்திருந்த மகாராணிதேவசேனாவை, மேற்கு வானத்தில்வைரத்துண்டுகளாய் ஒளிர்ந்த சப்தரிஷி மண்டலவிண்மீன் கூட்டமோ, அருகாமையில் இருந்தஅந்தப்புர நந்தவனத்திலிருந்து வெளிப்பட்டநறுமண பூங்காற்றோ மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியாமல் தோற்றுப் போயிற்று.

காரணம், மகாராணியின் அடிவயிற்றில் ஒரு இனம் புரியாத குழப்பம். முகம் ஒரு சிலையைப் போல்இறுடிகியிருந்தது.

‘‘வணங்குகிறேன் மகாராணி!’’

தனக்குப் பின்னால் எழுந்த குரல் கேட்டு தேவசேனா திரும்பிப் பார்த்தாள். தன்னுடைய அருமை மகள்இளவரசி இளம்பிறையின் பணிப்பெண் பவளமணி கைகளைக் கூப்பியபடி நின்றிருந்தாள்.

‘‘நீ என்னிடம் தனிமையில் பேச விரும்புவதாக மாலையில் சொன்னாய். என்ன விஷயம்?’’

‘‘சொல்கிறேன் மகாராணி!’’ என்றவள், பவ்யத்தோடு குனிந்து மெலிதான குரலில் சொன்னாள்.

‘‘நம் இளவரசியார் நடவடிக்கை கள் சிறிது நாட்களாய்ச் சரியில்லை மகாராணி…’’

தேவசேனாவின் முகம் நொடியில் மாறியது.

‘‘சரியில்லையென்றால்….?’’

‘‘அதைச் சொல்வதற்கே என் நாக்கு கூசுகின்றது மகாராணி…! ஒவ்வொரு நாளும் மூன்றாவது ஜாமம்கழிந்ததும் இளவரசியாரின் அறையில் ஒரு ஆண் குரல் கேட்கிறது. அது யார் என்று தெரிந்துகொள்வதற்காகக் கதவின் சாவி துவாரத்தில் கண் வைத்துப் பார்த்தேன். உள்ளே இளவரசியாரின்படுக்கையறை கட்டிலில் ஒரு வாலிபன்…’’

தேவசேனா பதறிப் போனவளாய் எழுந்தாள். அவளுடைய கூர்விழிகளில் கோபம் கொப்பளித்தது.

‘‘யார் அந்த வாலிபன்?’’

‘‘தெரியவில்லை மகாராணி… ஆனால், அந்த வாலிபன் அரச குலத்தில் பிறந்தவன் அல்ல என்பது மட்டும்உறுதி’’

‘‘இன்றைக்கும் அந்த வாலிபன் வருவானா….?’’

‘‘உறுதியாய் வருவான் தேவி…!’’

‘‘சரி… மூன்றாவது ஜாமம் முடிந்ததும் நான் இளவரசியாரின் அந்தப்புரத்துக்கு வருகிறேன். நீ உறங்காமல் எனக்காகக் காத்திரு…!’’

‘‘உத்தரவு மகாராணி…’’

பளவமணி குனிந்து வணங்கிக் கொண்டிருந்த அந்த வேளை பின்பக்கம் அந்தக்குரல் கேட்டது.

‘‘நானும் உன்னோடு வருவதில், உனக்கு எந்த ஒரு தடங்கலும் கிடையாதே தேவி…?’’

தேவசேனா பதறிப் போனவளாய், திரும்பிப் பார்த்தாள். மன்னர் பெரும்வழுதி தன் தூண் போன்றஇடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தபடி நின்றிருந்தார்.

தேவசேனா அச்சத்தில் உறைந்துபோய் நிற்க, மன்னர் பக்கத்தில் வந்து அவளுடைய செழுமையானதோளின் மேல் கையை வைத்தார்.

‘‘பயம் கொள்ள வேண்டாம் தேவி…! பணிப்பெண் பவளமணி சொன்னதையெல்லாம் நானும் அப்படிஓரமாய் நின்று செவிமடுத்துக் கொண்டுதான் இருந்தேன். நம் மகள் இளம்பிறையின்நடவடிக்கைகளில் எனக்கும் சிறிது ஐயப்பாடு இருந்தது. அவளுடைய சயன அறைக்கு இரண்டு முறைபகல் வேளைகளில் சென்று பார்த்தபோது அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பகலில் ஒரு பெண்உறங்குகிறாள் என்றால், இரவில் சரியாக உறக்கம் இல்லையென்றுதானே பொருள்…? அந்த வாலிபன்யார் என்பதை, இன்றைய இரவின் மூன்றாவது ஜாமத்தில் கண்டுபிடித்து விடலாம்…’’

பவளமணி மன்னனைத் தாள் பணிந்தாள்.

‘‘அரசே…! இப்படிப்பட்ட ஒரு செய்தியை உங்களிடம் சொல்ல நேர்ந்தமைக்காக என்னை மன்னிக்கவேண்டுகிறேன்….’’

‘‘உனக்கொரு உத்தரவு…’’

‘‘சொல்லுங்கள் அரசே!’’

‘‘நீ ஒரு உண்மையான ராஜவிசுவாசியாக இருக்கும் பட்சத்தில் இதைப்பற்றி வெளியே யாரிடமும்பேசக்கூடாது…’’

‘‘என் உயிரே போனாலும் வாயைத் திறக்கமாட்டேன் அரசே!’’

அஅஅஅஅஅ

இரவின் மூன்றாவது ஜாமம் முடிந்து கொண்டிருக்க, இளவரசியின் சயன அறைக்கு வெளியேஇருட்டில் நிழல் உருவங்களாய் மன்னர் பெரும்வழுதியும், மகாராணி தேவசேனாவும், பணிப்பெண்பவளமணியும் லயம் மாறித் துடிக்கும் இருதயத் துடிப்புக்களோடு நின்றிருந்தார்கள்.

நான்காவது ஜாமம் தொடங்கியது. அடுத்த சில கணங்களிலேயே இளவரசி இளம்பிறையின்அறையிலிருந்து சிரிப்பொலியும், ஒரு ஆணின் குரலும் கேட்டது.

மன்னர் பெரும்வழுதி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அறைக் கதவருகே போய் குனிந்து சாவி துவாரத்தில் கண்ணை வைத்துப் பார்த்தார்.

சயன அறையில் மங்கலான வெளிச்சம் பரவியிருக்க, அன்னப்பறவை மஞ்சத்தின் மேல் இளவரசிஇளம்பிறை தெரிந்தாள். பக்கத்திலேயே அவளுடைய தோள்களைத் தொட்டபடி அந்த வாலிபன்.

ஒரு சில கணங்கள் வியப்பில் உறைந்து போய் விக்கித்துப் போன மன்னர், அதிலிருந்து மீண்டுகதவைப் படபடவென்று தட்ட ஆரம்பித்தார். குரல் கொடுத்தார். குரலில் கோபம் கொப்பளித்தது.மன்னரைப் பார்த்ததும் மருண்டாள் இளம்பிறை.

‘‘தந்தையே! இந்த அகால நேரத்தில் எதற்காகஉங்கள் வருகை…? யார்க்கேனும் உடல் நலம் பாதித்துவிட்டதா…?

‘‘எங்கே அவன்…?’’

இளம்பிறை நெற்றியைச் சுருக்கினாள்.

‘‘யாரைக் கேட்கிறீர்கள்?’’

‘‘உன் சயன மஞ்சத்தில் இடம் பிடித்து இருந்தானே ஒருவன்… அவனைத்தான் கேட்கிறேன்… அவனைஎங்கே ஒளித்து வைத்து இருக்கிறாய்?’’

இளம்பிறை தன் இடதுகை ஆட்காட்டி விரலால் நெஞ்சைக் காட்டியபடி துணிச்சலோடு சொன்னாள்.

‘‘அவரை இங்கே ஒளித்து வைத்து இருக்கிறேன்…’’

தேவசேனா மகளுக்கு முன்பாய் வந்து சினம் பொங்க நின்றாள்.

‘‘இளம்பிறை! பெற்ற தந்தையிடம்இப்படியா பேசுவது…? உன் சயன அறையில் இரவில் ஒரு வாலிபன்! எங்களுக்கு உடம்பு கூசுகிறது!’’

இளம்பிறை மெல்ல சிரித்தாள்.

‘‘உங்களுக்கு உடம்பு கூசவேண்டிய அவசியமே இல்லை. அவர் என்னைத் திருமணம் செய்யப்போகிறவர். அவர் பெயர் பராந்தகன். ஒரு சிற்றரசில் படைத்தளபதியாக உள்ளார். அவரைப் பற்றிநானே உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன். அதற்கு முன்பாக உங்களுக்கே உண்மைதெரிய வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே’’.

மன்னர் வெறியோடு கத்தினார்.

‘‘உன்னிடம் எனக்கென்ன பேச்சு. வெளியே வரச்சொல்’’.

இளம்பிறை ஒரு மந்தகாசப் புன்னகையோடு அறையின் மேல்பக்கம் இருந்த சாளரத்தைக் காட்டினாள்.

‘‘நீங்கள் கதவைத் தட்டிய விநாடியே அவர் சாளரத்தின் வழியே தப்பித்துப் போய்விட்டார். இந்நேரம்அவருடைய புரவி ஒரு காத தூரத்தைச் கடந்து போயிருக்கும்…!’’

மன்னர் பெரும்வழுதி சிவந்த விழிகளோடு சினம் மேலிட மகளை ஏறிட்டார்.

‘‘நீ அந்தப் பராந்தகனைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்?’’

‘‘ஆமாம்…’’

‘‘நாங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால்?’’

‘‘நீங்கள் ஒப்புக்கொள்ளும்வரை நான் காத்து இருப்பேன். பராந்தகனின் உயிர்க்கு உங்களால் ஏதாவதுஆபத்து ஏற்பட்டால், இந்த இளம்பிறையின் உடம்பிலும் உயிர் இருக்காது… திருமணம் என்றால் அதுபராந்தகனோடுதான்…!’’

மன்னர் தன் வலதுகையின் ஆட்காட்டி விரலை உயர்த்தினார் ‘‘என்னுடைய முடிவையும்கேட்டுக்கொள். உனக்கும் உன் மாமன் மகன் நன்மாறனுக்கும்தான் திருமணம் நடக்கும். இதில் எந்தமாற்றமும் இல்லை… இனி அந்தப்புரத்துக்குள் மட்டும் அல்ல… இந்த நாட்டின் எல்லைக்குள்ளும் நுழையமுடியாது…’’ உரத்த குரலில் சொல்லிவிட்டு மன்னர் வெளியேற தேவசேனாவும் அதே கோபத்தோடுபின்தொடர்ந்தாள்.

அமாவாசை ஒழிந்து வளர்பிறைக்காலம் துவங்கியிருக்க, அன்று பஞ்சமி நாள்.

இளம்பிறை அதிகாலையே எழுந்து நீராடி, மாற்றுடை அணிந்து, ஒரு குவளைப் பால் பருகிவிட்டு,மேல் மாடத்துக்கு வந்து இருக்கையில் சாய்ந்தாள். தலை சுழல்வது போல் இருந்தது. உடம்பைநிதானத்துக்குக் கொண்டு வந்து அமர்ந்து உட்கார்ந்து கொள்ளும் முன் துவண்டு சரிந்தாள்.

மீண்டும் அவளுக்கு நினைவு திரும்பியபோது _ இளம்பிறையின் காதுகளில் மங்கல வாத்தியஒலிகளும், வேத விற்பன்னர்களின் உச்சாடனங்களும் ஸ்பஷ்டமாய் விழுந்தன. சிரமத்தோடு எழுந்துஅமர்ந்தாள். உடம்பில் பட்டாடை. சகல அவயங்களில் ஆபரணங்கள். கைகளில் மருதாணிப்பூச்சு.

வலது காதருகே குரல் கேட்டது. மன்னரின் குரல்.

‘‘என்ன இளம்பிறை…! அப்படி பார்க்கிறாய். நீ இப்போது மணப்பெண். நாம் இப்போது இருப்பதுநஞ்சுண் டேஸ்வர கோயில். இன்னும் ஒரு நாழிகை நேரத்துக்குள் உனக்கும் நன்மாறனுக்கும்திருமணம்.’’

இளம்பிறையின் இடதுகாதருகே மகாராணியின் குரல் கேலியாய் ஒலித்தது.

‘‘உனக்கும் நன்மாறனுக்கும்நடக்கப் போகும் திருமணத்தைக் காண, ஊரே இந்தக் கோயிலுக்கு வந்துள்ளது. எந்த எதிர்ப்பையும்வெளிப்படுத்தாமல் மணவறையில் போய் அமர்ந்து விடு. பராந்தகனை இனி நீ மறந்துவிடவேண்டியதுதான்…!’’

இளம்பிறை அந்த மயக்கநிலையிலும் புன்னகைத்தாள்.

‘‘என்ன சிரிக்கிறாய்…!

பராந்தகன் என்று ஒருவன் இருந்தால்தானே அவனை மறப்பதற்கு!’’

மன்னரும் மகாராணியும் திகைத்துப்போய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘‘இளம்பிறை! நீ என்ன சொல்கிறாய்…?’’

‘‘உண்மையைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அன்று என் சயன அறையில் நீங்கள் பார்த்ததுபராந்தகனை அல்ல. பராந்தகனைப் போல் ஆண் வேடம் போட்ட என் தோழி குமுதவல்லியைத்தான்.’’

‘‘இ… இ… இதெல்லாம்…. எ… எ…. எதற்காக?’’

‘‘நான் நன்மாறனை திருமணம் செய்து கொள்ளத்தான்!’’

‘‘நீ நன்மாறனைத் திருமணம் செய்து கொள்ள நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே…?’’

‘‘என் தாய் நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது உண்மை. ஆனால் மன்னரின் நிலைமைஅப்படியில்லையே….! அவருடைய மனசில் ஒரு ஊசலாட்டம் இருந்தது. நான் விரும்பிய நன்மாறன்எனக்கு அவசியமாய்க் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் நடத்திய ஒரு போராட்டம்தான் இது’’சொன்ன இளம்பிறை கண்ணாடியில் தன்னுடைய மணமகள் அலங்காரத்தை சரிபார்த்துக் கொண்டுமணவறைக்குச் செல்லத் தயாரானாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *