புதிய சுவடுகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 1,827 
 

21 – 30 | 31 – 40

31

முத்தையன் கட்டிலிருந்து வந்த நாள் முதல் மாணிக்கத்தின் நிiவாவே இருந்தாள் பார்வதி. இரத்த வெள்ளத்தில் மாணிக்கம் விழுந்து கிடந்த போதுதன்னைத் தந்தை தூக்கி வந்து காரிலே ஏற்றியதும் காருக்குள். இருந்தவன் மாணிக்கத்தின் உயிர் பிரிந்துயிருக்குமெனக் கூறியதும் அவளது நினைவில் அடிக்கடி வந்து அவளைப் பெரிதும் வேதனைப்படுத்திக்கொண்டிருந்தது அவள் எந்த நேரமும் அழுத வண்ணம் ,இருந்தாள். அவளால் ஒழுங்காக உணவருந்த முடியவில்லை. மாணிக்கத்தின் உயிரக்கு எவ்வித தீங்கும் நேரிடக்கூடாதென அவளத மனம் பிராத்தித்துக் கொணடிருந்தது. மாணிக்கத்தின் உயிருக்கு ஏதும் தன்னை மீண்டும் அழைத்துச்செல்வானென்றும் தன்னைப்பரிந்துத மாணிக்கத்தால் இனி ஒரு கணமேணும் இருக்கமுடியாதெனவும் பார்வதி நம்பினாள்.

செல்லப்பர் இப்போது பார்வதியுடன் கதைப்பதில்லை. வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பினால் சின்னத்தங்கத்துடன் மட்டும் ஒரு சில வார்த்தைகள் பேசுவார்; சின்னத்தஙகம் கூட முன்பு போல் பார்வதியுடன் அதிகம் கதைப்பதில்லை . அன்னம்மா அடிககடி வந்து பார்வதியுடன் அன்பாக அளவளாவி விட்டுச் செல்வாள் அவளை உணவருந்தும்படி வற்புறுத்துவாள். நடேசும் அடிக்கடி அங்கே வருவான் அவன் வரும் போதேல்லாம் வழமைபோல் பார்வதியுடன் சிறிது நேரம் கதைத்து விட்டுத் தான் செல்வான்.

காலையில் நடேசு அங்கு வந்திருந்த போது”ஏன் பார்வதி நீ இப்ப எனக்குப் பலகாரங்கள் சுட்டுத் தாறேல்லை முந்தி நான் வரேக்கை நிறையத தாறனியெலலோ , என அவளிடம் கேட்டான்.

அவன் அப்படிக் கேட்டபோது, பார்வதிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

இந்த நடேசு மச்சானைப் போலை வஞசகம் சூதில்லாமல் எல்லோருமே இருந்துவிட்டால். எவ்வளவு நன்றாக இருக்குமென பார்வதி மனதில் எண்ணிக்கொண்டாள்.

”நாளைக்கு வா மச்சான் உனக்கு கட்டாயம் பலகாரம் சுட்டுத்தாறன்

”நீ சும்மாசொல்லி என்னை ஏமாத்ததிறாய் பார்வதி“

”இல்லை மச்சான். உன்னை ஒருநாளும் நான் ஏமாத்தமாட்டான்“

”உன்னை நம்பேலாது பார்வதி, என்னைக் கலியாணம் செய்யிறதெண்டு சொல்லிப்போட்டு ஏமாத்திப்போட்டாய் தானே “எனக் கூறிவிட்டுச் சிரித்தான் நடேசு.

பார்வதி தன்னையும் மீறிக்கொண்டு சிரித்துவிட்டாள்.

”இலலை மச்சான் இனி உன்னை ஒரு நாளும் ஏமாத்தமாட்டன்…. பலகாரம் சுட்டுத்தாறன்.“

”நாளைக்குக்கட்டாயம் வருவன் “ எனக் கூறிவிட்டு நடேசு புறப்பட்டான்.

தான் முன்பு விளையாட்டுத் தனமாக நடேசு மச்சானுக்னுடன் கேலி பேசி அவரது மனதிலே ஆசைகளை வளர்த்து விட்டதற்காகப் பாhவதி இப்போது மிகவும் மனம்வருந்தினாள்.

மறுநாள் காலையில் எழுந்தபோது பார்வதிக்கு நடேசு வருவானென்ற ஞாபகம் வந்தது. அவனுக்காக ஏதாவது. பலகாரம் செய்யலாம் என்ற எண்ணத்துடன் குசினிப்பக்கம் சென்றாள்.

பார்வதிக்கு தலை சுற்றியது அடிவயிற்றுகடகுள் ஏதோ குடைந்து குமட்டியது. விழுந்து விடாமல் இருப்பதற்காகத் திண்ணையிலே உடகார்ந்து கொண்டாள், மீண்டும் மீண்டும் வயிற்றை க் குமட்டியது, நெ;ஞ்சுக்கள் ஏதோ செய்தது அவள் வெளியே ஓடிவந்து பலத்த சத்தத்துடன் ”ஓங்காளித்து“ வாந்நி எடுத்தாள், அவள் வாந்தியெடுக்கும் சத்தங்கேட்டுசின்னத்தங்கம் பதட்டத்துடன் வெளியே வந்தாள்.

முற்றத்தில் வேலியோரமாக எப்போதோ மாணிக்கம் கொண்டு வந்த நட்டு வைத்த மொந்தன் வாழமைரம் இப்போது தழதழவென வளர்ந்து பொத்திதள்ளியிருந்தது, அந்தக் பொத்தியிலீருந்து விரிந்த செம்மடல்களினுடாக நான்கைந்து காய்கள் வெளியே தலை நீட்டியிருந்தன, அடிமரத்திலிருந்து ஒரு சில குட்டிகள் முளைத்து வெளிக்கிளம்பியிருந்தன . பொத்தி விரிந்த பொலிவோடு அந்தவாழைமரம் ஒரு புறம் சாய்ந்திருந்தது.

அந்த வாழைமரத்தை ஒரு கைகையால் பிடித்தபடி குனிந்து வாந்தியெடுத்துக் கொண்டிருந்த பார்வதியைப் பார்த்தும் சின்னத்தங்ஙகம் துனுக்குற்றாள்.

”என்னடி பிள்ளை, ஏன் சக்தியெடுக்கிறாய் ,ஏதேன் குடிச்சுப்போட்டியோ? பார்வதி ஏதாவது நஞ்சைக்குடித்திருப்பாளோ என்ற சந்தேகம் சின்னத்தங்கத்துக்கு ஏற்பட்டது.

”நான் ஒண்டும் குடிக்கேல்லை அம்மா, தேதண்ணிதான் குடிச்சனான் தேத்தண்ணிக்கு சாயம் கூடிப்போச்சுப் போலை அதுதான் வயித்தைக் குமட்டுது“பார்வதிமெது வாக வந்து திண்ணையில் உட்காhந்து கொண்டான்.

சிறிது நேரத்தின் பின்பு எழுந்து குசினிக்கு சென்ற போது மீண்டும் அவளுக்கு தலையைச் சுற்றி வாந்தி வந்தது பார்வதியால் எதுவுமே செய்யமுடியவில்லை.

ஏன் இப்படித் தலையை சுற்றகிறது.?

ஏன் இப்படிக் களைப்பாக இருக்கிறது?

ஏன் வாந்தி எடுக்க வருகிறது?

பார்வதி யோசித்தப் பார்த்தாள்

ஒரு வேளை…ஒருவேளை…. அப்படியும் இருக்குமோ ? பார்வதிக்கு நெஞ்சுக்குள் ஏதோ செய்தது. மயக்கம் வருவது போல் இருந்தது. அவள் அப்படியே திண்ணையில் சாய்ந்து விட்டாள்.

இவ்வளவு நேரமும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த சின்னத்தங்கத்துக்கு பலவிதமான சந்தேகங்கள் எழுந்தன . என்றும் இல்லாதவாறு பார்வதிஏன் வாந்தி எடுக்கவேண்டும் ? ஒரு வேளை… கடவுளே எங்கடை குடும்பத்துக்கு எந்தவித அவமானமும் ஏற்படக்கூடாது. சின்னத்தங்கம் கையைவைத்தபடி யோசனையில் ஆழ்ந்துவிட்டாள்.

அப்போது அங்கு வந்த அன்னம்மா, ”என்ன சின்னத்தங்கம் தலையில் தலையில் கைவைச்சு யோசித்துக்கொண்டிருக்கிறாய்?“ எனக்கேட்டாள்.

”ஒண்டமில்லை மச்சாள் , உவள் பிள்ளையைப் பற்றித்தான் எனக்குக் கவலையாய்க் கிடக்கு சாப்பிடாமல் கிடக்கிறாள். உப்பிடிச் சாப்பிடாமல் கிடந்தால் உடம்பு என்னத்தக்கு உதவும்.“

பார்வதி வாந்தி எடுத்ததை ஏனோ அன்னம்மாவிடம் கூறாமல் மறைந்து விட்டாள் சின்னத்தங்கம்.

”நான் பார்வதியைச் சாப்பிட வைக்கிறவன், நீ வைக்கிறவன் .நீ ஒண்டுக்கும் கவலைப்படாதை “ எனக் கூறிய அன்னம்மா பார்வதியின் அமர்ந்து அவளின் முதுகை ஆதரவாக தடவினாள்,

32

காலத்துக்குத் தான் எத்தனை மகத்தான சக்திஎத்தனையோ சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய சரித்திரங்களைப்படைத்திருக்கிறது. புது யுகங்களை உருவாக்கியிருக்கிறது, ஏன் பிரளயங்களையே ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குப் பார்வதியின் இதயத்திலே ஏற்பட்டிருக்கும் புண்களை ஆற்றுவதிலா சிரமம் இருக்கப்போகிறது.?

பார்வதிக்கு அடிக்கடி தலைசுற்றுவதும் வாந்தியெடுப்பதும் கேத்தில் ஏற்பட்ட வேறும் பல மாற்றங்களும் அவளின் மனதில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்பட்த்தியிருநதன,
மாணிக்கத்துடன் சேர்ந்து வாழ்ந்த குடும்ப வாழ்க்கையின் பயனான அவனால் அவளுக்கு அளிக்கப்பட்ட சின்னமொன்று வயிற்றக்குள் வளர்ந்து கொண்டிருப்பவை அவள் உணரத்தொடங்கினாள்.

வயிற்றிவ் வளரும் அந்தக் கர உண்மையிலேயே அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. மாணிக்கம் கொடுத்த அந்தப் பரிசை ஏற்று அதனை நல்ல முறையில் வளர்ப்பது தான் மாணிக்கத்துக்கு தான் செய்யும் கைமாறாக இரக்குமென அவள் எண்ணினாள், மாணிக்கத்திடமிருந்து தன்னைப் பிரித்தெடுத்த மூடத்தனமான சமுதாய அமைப்புக்கு தனது வயிற்றிலே வளரும் சிசுவைப் பற்றி யாருக்குத் தெரிந்தால் அதனால் பலதொல்லைகள் ஏற்படும் என்பதைப் பார்வதி உணர்ந்தாள். இதைப் பற்றி யாரிடமும் கூறாமல் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளவேண்டும் என்ற முடிவுடன் அவள் எதையும் ஏற்றுக்கொள்ளத் தயாரானாள்.

செல்லப்பர் அன்று வேலை ஆஸ்பத்திரியிலை செத்துப்போனானாம்“ தேநீர் அருந்தும் போது இதனைச் செல்லப்பர் சின்னத்தங்கத்திடம். கூறினார்.

குசினியிலிருந்த பார்வதி ,”ஐயோ“ என ஒரு கணம் தன்னியறிளாமல் அலறினாள் பின்பு சேலைத் தலைப்பை வாயில் வைத்து அமுக்கியபடி தன்னை மறந்து விம்மிம்மி அழுதாள்.

”என்ன தான் இருந்தாலும் அவனைச்சாகக் கூடியதாக அடிச்சிருக்கப்படாது“ சின்னத்தங்கம் கலக்கத்துடன் கூறினாள்.

”நீ விசர்க்கதை பேசிறாய். நானோ அவனை அடிச்சனான்? துரைசிங்கம் கூட்டி வந்த ஆக்கள் எல்லோரும் அவனை முறட்டுதனமாக அடிச்சவை“

”இதாலை ஏதேன் உங்களுக்கும் கரச்சல் வருமோ? எனப் பயத்துடன் கேட்டாள் சின்னத்தங்கம்.

”அதைப் பற்றித்தான் எனக்குப் பயமாய்க் கிடக்கு. போகப் போகத்தான் எல்லாம் தெரியும். உவளை கூட்டியரப்பிடாதெண்டு நீ கூட்டியரவேணுமெண்டு பிடிவாதம் பிடிச்சாய். அதனாலைதானே உவ்வளவு கரச்சல்“ செல்லப்பர் சின்னத்தங்கத்தைக் கடிந்துகொண்டார்.

”உங்களுக்கு எப்படி மாணிககன் செத்த சங்கதி தெரியும்?“ சின்னத்தங்கம் யோசனையுடன் கேட்டாள்.

”துரைசிங்கந்தான் சொன்னவர். அண்டைக்கு முத்தையன்கட்டுக்கு எங்களோடை வந்த ஆள்தான் வந்து சொல்லிப் போட்டுப் போனவனாம்.“

”உது ஆரோ சும்மா கதை கட்டியிருக்கினம.; அவனை அடிச்சும் இப்ப ஒரு மாசத்துக்கு மேலையாய்ப்போச்சு.. இப்ப உந்தக் கதை வாறதெண்டால் நம்பேலாது“

”அவனை அடிச்சவன் பயத்திலை வந்து துரைசிங்கத்திட்டைச் சொல்லிப்போட்டு போயிருக்கிறான். நீ விசர்க்கதை பேசிறாய்… உனக்கு எதைச் சொன்னாலும் சந்தேகந்தான்.“

”கோவிந்தனுக்கும் பொன்னிக்கும் இது தெரியுமோ?“

”அடிப்பட்ட மறுநாளே கோவிநதனும் ,பொன்னியும் குட்டியனோடை முத்தையன்கட்டுக்குப் போனவையெல்லோ… குட்டியன் மட்டும் அடுத்த நாள் வந்திட்டானாம். கோவிந்தனும் பொன்னியும் இன்னும் திரும்பிவரேல்லை.“
இதுவரை நேரமும் அவர்களது சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டிருந்த பார்வதி தனது மனதைக் கல்லாக்கிக் கொண்டாள். ”எல்லோருமாகச் சேர்ந்து எனது மாணிக்கத்தைக் கொலை செய்துவிட்டார்கள். இனிநான் யாருக்காக வாழவேண்டும் ? என் உயிரைப் போக்கிவிட வேண்டியது தான்.“

”சீ……….. அப்படி நான் கோழையாக மாறக்கூடாது, எனது மாணிக்கம் துணிச்சல் மிக்கவர். நான் கிணற்றுக்குள் விழுந்தபொழுது எல்லோருக்கும் முன்னிலையில் எனது உயிரைக் காப்பாற்றியவர். இந்த உயிர் அவருக்குத்தான் சொந்தம். நானாக இந்த உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடாது. மாணிக்கம் அளித்த அவரது குழந்தைக்காகவாவது நான் வாழவேண்டும் . எனக்குப் பிறக்கப் போகும் குழந்தை மாணிக்கத்தின் வாரிசென எல்லோருக்கும் தெரியவேண்டும.; மாணிக்கம் அழிந்தாலும் அவர் விட்டுச் சென்ற அவரது சொத்து இந்த சமூகத்தில் இருந்து எல்லோரையும் பழிவாங்கவேண்டும்.

பார்வதியின் மனம் கல்லாகியது, எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவள் அதைத் தாங்குவதற்குத் தயாரானாள்.

33

மறுநாட் காலையில் கட்டிலில் படு;த்திருந்தபடி சின்னத்தங்கம் ஏதோ கடுமையான யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அப்போது அங்கு வந்த அன்னம்மாவைக்கூட அவள் கவனிக்கவில்லை.

”என்ன சின்னத்தங்கம் தனிய இருந்து யோசிச்சுக்கொண்டிருக்கிறாய்?“

சின்னத்தங்கம் திடுக்குற்றபடி எழுந்திருந்தாள். விஷயம் கேட்டவன் . அதைப்பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தனான்,“ எனக் கூறிவிட்டு அன்னம்மாவைப் பார்த்துச் சிரித்தாள் சின்னத்தங்கம்.

”நீ உப்பிடி யோசிக்கக் கூடிதாய் அவன் என்ன கேட்டவன்.?“

சின்னத்தங்கம் பதில் பேசாது வெளியே வந்து பார்வதி எங்கிருக்கிறாள் என்பதைக் கவனித்தாள.; அப்போது பார்வதி பின்வளவில் ஆட்டுக்குக் குழையொடித்துக்கொண்டிருந்தாள்.

இருவரும் வெளித் திண்ணையில் அமர்ந்து கொண்டார்கள்.

”மச்சாள் ,பார்வதியைத் தனக்கு கலியாணஞ்செய்து தரச் சொல்லி நடேசு என்னை அடிக்கடி வந்து கேக்கிறான் …… “ அன்னம்மாவின் முகத்தைப் பார்த்தவண்ணம் கூறினாள் சின்னத்தங்கம்.

”நீ அவனுக்கு என்ன பதில் சொன்னனி ?“ எனச் சிரித்த வண்ணம் வினாவினாள் அன்னம்மா.

”உன்ரை கொம்மா இதைக் கேள்விப்பட்டால் என்னோடை சண்டைக்கு வந்திடுவா எண்டு சொன்னான்“

”அதுக்க நடேசு என்ன சொன்னவன்.?”

”அம்மா சண்டைக்கு வரமாட்டா, அவவுக்குப் பார்வதியிலை நல்ல விருப்பம் எண்டு சொன்னான்.“

”சின்னத்தங்கம் , அவன்ரை குணம் உனக்குத் தெரியாதோ அவன் உப்பிடித்தான் ஏதேன் தேவையில்லாத கதையள் அலட்டிறவன் “ எனக் கூறிவிட்டுச் சிரித்தாள் அன்னம்மா.

”அதுக்கென்ன மச்சாள் அவன் வேறையாரோவே….? அவன் கேட்டதிலை ஒரு பிழையும் இல்லை. ஏதோ பார்வதி தெரியாத்தனமாய் நடந்து போட்டாள் … என்ன செய்யிறது நீதான் மச்சாள் அவளக்கு ஒரு நல்ல வழிகாட்டவேணும.; நீமட்டும் ஒரு தடையும் சொல்லாமல் இருந்தால் நான் பார்வதியை நடேசுவின்ரை கையிலை பிடிச்சுக் குடுத்திடுவன்“ எனக் கூறிய சின்னத்தங்கம் ஆவலோடு அன்னம்மாவின் முகத்தைப் பார்த்தாள்.

அன்னம்மாவுக்கு உள@ரச் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும்; அதனை அவள் வெளிகாட்டவில்லை.

நடேசுவுக்கு யாருமே பெண் கொடுக்க மாட்டார்கள். அவன் வாழ்க்கை முழுவதும் பிரமச்சாரியாகவே இருக்க வேண்டும் என இதுவரை காலமும் எண்ணியிருந்தாள் அன்னம்மா. இப்போது நடேசுக்குத் திருமணம் செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது அவளுக்கு அவளுக்குப் பெரும் மகிழச்சியைக் கொடுத்தது. பார்வதியின் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி அன்னம்மா சிறிதுகூடக் கவலைப்படவில்லை. மகனுக்குத் திருமணஞ் செய்து வைக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்திருப்பதை எண்ணி அவள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தாள்.

”பார்வதியிட்டை இதைப்பற்றி நீ கேட்டனியோ சின்னத்தங்கம் ?“ எனக் கேட்டாள் அன்னம்மா.

அவளை நான் எப்பிடியும் சம்மதிக்க வைச்சுப் போடுவன். அவள் செய்த காரியத்தாலை என்ரை மனிசன் நடைப்பிணமாய்த் திரியிறார். எனக்கும் இரவு பகலாய் ஒரே கவலையாய்க் கிடக்கு. நாங்கள் எல்லாம் பழையபடி சந்தோஷமாய் இருக்கிறதெண்டால், நீதான் மச்சாள் உதவி கூடப்பிறந்த சகோதரத்தின்ரை சந்தோஷத்துக் காகவாவது நடேசுவைப் பார்வதிக்குக் கட்டி வைக்கவேணும்“ சின்னத்தங்கம் அன்னம்மாவின் இரு கைகளையும் பிடித்தபடி கண்களில் நீர் மல்கக் கூறினாள்.

”சின்னத்தங்கம் நீ உவ்வளவு தூரம் கேக்கேக்கை நான் எப்பிடி மறுப்புச் சொல்லிறது… ஏதோ கடவுள் நல்லதைத்தான் செய்வார். நீ எதுக்கும் ஒருக்கா என்ரை தம்பியிட்டை இந்த விஷயமாய்க் கதைச்சுப்பார்“

”மச்சாள, அவர் ஒரு நாளும் உதுக்கு மறுப்புத் தெரிவிக்க மாட்டார் “ சின்னத்தங்கம் உறுதியுடன் கூறினாள்.

”சரி சின்னத்தங்கம் போட்டுப் பின்னேரமாய் வாறன. எல்லாம் விபரமாய் கதைப்பம் “ எனக் கூறிவிட்டு மனநிறைவுடன் புறப்பட்டாள அன்னம்மா.

உண்மையில் நடேசு ஒரு போதும் தனக்குப் பார்வதியைக் கலியாணஞ் செய்து தரும்படி சின்னத்தங்கத்திடம் கேட்டதில்லை. இப்போதுள்ள நிலைமையில் பார்வதியை நடேசுவுககுத் திருமணம் செய்து வைத்தால் பலபிரச்சினைகள் தீர்ந்துவிடுமென சின்னத்தங்கம் எண்ணினாள். தனது எண்ணத்தை அன்னம்மாவிடம் நேரிடையாகத் தெரிவிப்பதற்கு அவளுக்குத் தயக்கமாக இருந்தது. அதனால் நடேசுவே பார்வதியைத் தனக்குக் கலியாணம் செய்து தரும்படி கேட்டதாகப் பொய் சொல்லி, சாதுரிமாக அன்னம்மாவின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டாள் சின்னத்தங்கம்.

அன்னம்மா சென்றதும் சிறிது நேரங்கழித்துப் பார்வதியை அழைத்தாள் சின்னத்தங்கம்.

”பிள்ளை நான் உன்னட்டை ஒண்டு கேக்கிறன் நீ அதுக்கு மறுப்புச் சொல்லக் கூடாது.“

”என்னணை அம்மா, என்ன விசயம் சொல்லுங்கோவன்“ எனக் கேட்டாள் பார்வதி.

”உன்ரை மாமி ஒரு சங்கதி சொல்லிப்போட்டுப் போறா… அதைப்பற்றித்தான் …. “ என இழுத்தாள் சின்னத்தங்கம்.

”என்ன மாமி சொன்னவ?“

”உன்னை நடேசுவுக்குக் கலியாணம் செய்து வைக்கவேணுமெண்டு கேட்டா“

”எனக்கு இனிமேல் கலியாணம் தேவையில்லை“

”அப்பிடிச் சொல்லாதை பிள்ளை, ஏதோ உன்ரை கெட்ட காலம் நடக்ககூடாதது நடந்து போச்சு… மாமி அதுகள் எல்லாத்தையும் மனசிலை வைச்சிருக்காமல் உன்னை மருமகளாக எடுக்கிறதெண்டு சொல்லுறா, நீ அதுக்கு மறுக்கப்படாது.

”உந்த விசயத்தை மட்டும் என்னட்டை கேக்காதையுங்கோ நான் இனிமேல் கலியாணம் செய்யமாட்டன்.“

”எடியேய் , உனக்கு அவ்வளவு பிடிவாதமோடி ? எங்கடை மானம் மரியாதை யெல்லாத்தையும் அழிச்சு ஊரவை எங்களை ஒதுக்கி வைக்கச் செய்து போட்டாய.; இவ்வளவு நடந்தபிறகும ;உனக்குப் பிடிவாதம் போகேல்லை … நீ நடேசுவைக் கலியாணம் செய்யத்தான் வேணும்.“ சின்னத்தங்கத்தின் கண்களில் கோபம் தெறித்தது.

”அம்மா என்னைக் கரச்சல் படுத்தாதையுங்கோ உப்பிடிக் கரச்சல் படுத்தினால் என்னை உயிரோடை பாக்கமாடடியள்.“

”எடியோய் நீ இந்தக் கலியாணத்துக்குச் சம்மதிக்காட்டில் என்னை உயிரோடை பாக்கமாட்டாய்; எண்டதை நினைச்சுக்கொள் “ என்றாள் சின்னத்தங்கம்.

”…………………….“

பார்வதி மௌனமானாள்.

”பிள்ளை கொஞ்சம் நீ யோசித்துப்பார் . நீ இப்ப இருக்கிற நிலைமை எனக்குத் தெரியாதெண்டு நினைக்காதை ….. எல்லாம் எனக்குத் தெரியும். உன்ரை அப்பு இதை அறிஞ்சால் உடனே உன்னையும் என்னையும் வெட்டித் துண்டாடிப் போட்டுத் தானும் உயிரை விட்டிடுவர். நான் நல்லதுக்குதான் சொல்லுறன், இந்த விசயத்திலை என்ரை பேச்சைத் தட்டாதை பிள்ளை….“ எனக்கூறிய சின்னத்தங்கம் பார்வதியின் கைகளைப் பிடித்தபடி கண்ணீர் வடித்தாள்.

பார்வதியால் எவ்வித பதிலும் கூற முடியவில்லை, அவளது கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது.

34

அன்றொருநாள் தோழியால் அனுப்பட்ட திருமணஅழைப்பிதழை வாசித்பின் கூரைத் தாழ்வாரத்திலே செருகியிருந்தாள். பார்வதி இப்போது அந்தத் திருமண அழைப்பிதழ் அவளது கண்களிலே பட்டது. அதனை அவள் கையில் எடுத்தாள்.

மேரி -டேவிட்

சந்திரனைக் காதலித்த மேரி , இன்று டேவிட்டைத் திருமணஞ் செய்திருக்கிறாள். அவளால் எப்படிச் சந்திரனை மறக்க முடிந்தது?

பார்வதி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். சிந்தித்து சிந்தித்து அவளது மூளை குழம்பிப் போயிருந்தது. தலை “விண் விண்’ னென்று தெறித்தது. “மாணிக்கத்துக்குத் துரோகம் செய்வதா? சில காலமானாலும் அவரோடு கூடி வாழந்த குடும்பவாழக்கையை மறந்து இப்போது வேறோரு வரைத் திருமணம் செய்வதா? இந்தப் பாவிகள் அவரை என்னிடமிருந்து பிரித்து கொலையும் செய்துவிட்டார்கள். அவரது என் வயிற்றிலே வளரும்போது அதனை மறைத்து வேறெருவரைத் திருமணம் செய்வது எவ்வளவு பாவமான காரியம். இதையெல்லாம் அறிந்து எனது அம்மாவே பாதகமான செயலைச் செய்யும்படி என்னை வேண்டுகிறாள். நான் ஒருபோதும் இதற்குச் சம்மதிக்கக் கூடாது…….“

”நான்; இந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்காவிட்டால் என்ன நடக்கும்? எனது வயிற்றிலே மாணிக்கத்தின் சிசு வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அதனை ஊரார் அறியும்போது காறி உமிழ்வார்கள். உமிழ்ந்துவிட்டுப்; போகட்டுமே…“

சாதி வெறி பிடித்த இந்தச் சமூகத்தின் மத்தியில் எனக்கு மாணிக்கம் கொடுத்த அன்புப் பரிசு நான் மற்றவர்களும் அறியுமபடி செய்தால்தான் அவரது ஆத்மா சாந்தி அடையும.; ஒரவேளை அம்மா கூறியதும் போன்று எனது தந்தை கோபங்கொண்டு என்னையே ஒழித்துக்கட்டி விடவும் கூடும் . அப்படி எதுவும் நிகழந்துவிட்டால் எப்படி இந்தச் சமூகத்தைப் பழிவாங்க் முடியும் எப்படி மாணிக்கத்தின் அன்புப் பரிசை இந்தச் சமூகத்தின் கைகளில் கொடுக்க முடியும்? நான் வாழத்தான் வேண்டும்…

மாணிக்கம் எனக்குக் கொடுத்த கரு உருவாகி இந்த உலகத்துத்துக்கு வரும்வரையாவது நான் எப்படியும் வாழவேண்டும.

எனது உள்ளம் மாணிக்கத்துக்குச் சொந்தம் அதை நான் வேறொருவருக்குக் கொடுக்மாட்டேன். எனது உடல் மாணிக்கத்தின் சொத்து அதனையும் நான் மனப்பூர்வமாக யாருக்கும் கொடுக்கமாட்டேன். ஆனாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் மாணிக்கம் எனக்கு அளித்த அன்புப்பரிசை நான் காப்பாற்ற வேண்டுமானால் அதற்கு ஒரே வழி நடேசு அத்தானைத் திருமணம் செய்யச் சம்மதிப்பதுதான்.

சமூகத்தின் கண்களுக்கு நான் செய்வது தவறாகத் தெரியலாம்;. எனது வாழ்வைச் சிதைத்த இந்தச் சமூகத்துக்கு நான் ஏன் பயப்பிடவேண்டும.; மனதார நான் என் மாணிக்கதுக்குத் துரோகம் செய்யப்போவதில்லை. அவர் எனககுத் கொடுத்த அன்புப் பரிசைக் காப்பாற்றுவதற்காகவே நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இப்போதுள்ள சூழ்நிலையில் வேறு எந்த முடிவும் நல்ல முடிவாக அமையாது. நான் எடுத்திருக்கும் இந்த முடிவினால் மாணிக்கத்தின் ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும்.

காலையில் சின்னத்தங்கத்திடம் பார்வதியாகவே தனது முடிவைத் தெரிவித்தாள்.

”அம்மா நீங்கள் உங்கடை விருப்பம்போலை செய்யுங்கோ, நான் கலியாணத்துக்குச் சம்மதிக்கிறன்.“ எவ்வித உணர்ச்சியுமின்றி இவ்வாறு பார்வதி கூறினாள்.

சின்னத்தங்கத்தின் நெஞ்சிலிருந்து நிம்மதியுடன் பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
பார்வதியை நடேசுவுக்குத் திருமணம் செய்து வைப்பது பற்றி முதன்நாள் இரவே சின்னத்தங்கம் செல்லப்பரோடு கதைத்திருந்தாள். செல்லப்பருக்கும் அது ஒரு நல்ல முடிவாகத்தான் தோன்றியது.

பார்வதி தனது முடிவைக் கூறியதும் செல்லப்பரிடம் அதனைக் கூறி விரைவிலேயே திருமணத்தை முடித்துவிட வேண்டுமென சின்னத்தங்கம் தீர்மானித்துக்கொண்டாள்.

35

செல்லப்பர் அன்று மாலை வேலை முடிந்ததும் துரைசிங்கம் முதலாளியின் வீட்டில் லொறியை நிறுத்திவிட்டு அதன் சாவியை எடுத்துச் சென்று துரைசிங்கம் முதலாளியிடம் கொடுக்கும் போது பார்வதியின் கலியாண விஷயமாக அவரோடு கதைத்தார்.

”அண்ணை, பார்வதியை நான் என்ரை அக்காவின்ரை மகனுக்குக்குக் கலியாணம் செய்து வைக்கத் ; தீர்மானிசிருக்கிறன்.“

அதைக் கேட்டபோது துரைசிங்கம் முதலாளிக்கு ஆச்சரிமாக இருந்தது. பார்வதியை மீட்டுவந்து கிட்டதட்ட ஒரு மாதகாலந்தான் ஆகிறது. அதற்குள் அவளுக்கு மீண்டும் கலியாணத்துக்கு ஏற்படாகியிருப்பது வியப்புக்குரிய விஷயந்தான்.

”செல்லப்பர் நீ எடுத்த முடிவு சரிதான். பார்வதிக்கு இப்படியொரு கலியாணம் செய்துவைச்சால் காலப்போக்கில் எல்லாம் சரியாய்ப்போம்.

”கலியாணத்தைச் சுருக்கமாகத்தான் செய்யப்போறமண்ணை… செல்வச் சந்நிதியிலை கொண்டுபோய்த் தாலி கட்டலாமெண்டு தீர்மானிச்சிருக்கிறம்.“

”ஓம் செல்லப்பர், அதுவும் சரிதான். இந்த விஷயத்தை நாலு பேருக்குத் தெரியிறமாதிரி செய்யப்பிடாதுதான்“

”அண்ணை நாங்கள் கலியாணத்தை ஒருதருக்கும் சொல்லாமல்தான் செய்யிறம். ஆனால் நீ மட்டும் கட்டாயம் கலியாணத்துக்கு வந்திடவேணும்.“

”எப்ப செல்லப்பர் கலியாணம் வைக்க யோசிச்சிருக்கிறாய் … நாள் பாத்தாச்சோ?“

”வாற வெள்ளிக்கிழமை காலைமை ஒரு நல்ல நேரம் இருக்காம்;. அந்த நேரத்திலை கலியாணத்தை முடிக்கலா மெண்டு யோசிக்கிறம்.“

”எனக்கும் இங்கை பலவேளையள் இருக்கு. நான்தானே எல்லாத்தையும் ஓடியாடி பாக்கவேணும. எப்படியும் நான் வரத்தெண்டிக்கிறன்“ என்றார் துரைசிங்கம் முதலாளி.

”என்ன இருந்தாலும், தாலிகட்டுற நேரத்துக்கெண்டாலும் அதிலை ஒருக்கா தலையைக் காட்டிப்போட்டு போவேணும்.“

”சரி செல்லப்பர் நான் கட்டாயம் வாறன் “

”நாளையிலிருந்து பிள்ளையின்ரை கலியாணம் முடியும் வரைக்கம் எனக்கு லீவு வேணும். கலியாணந்தானே முக்கியம. அதை முதலில் கவனி “ எனக் கூறினார் துரைசிங்கம் முதலாளி.

”சரியண்ணை நான் வரப்போறன் வெள்ளிக்கிழமை கட்டாயம் வந்திடுங்கோ “ எனக் கூறிவிட்டுச் செல்லப்பர் புறப்பட்டார்.

ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் இப்போது செல்லபப்ரை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். எந்த நன்மை தீமைகளுக்கும் அவரை எவருமே அழைப்பதில்லை. அவர் சமூக்திலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார். பார்வதியை மீட்டுவந்திலிருந்து துரைசிங்கம் முதலாளிகூட முன்பு போல செல்லப்பரின் வீட்டுக்குச் செல்வதில்லை.
நடேசு என்றுமில்லாதவாறு குதூகலத்துடன் இருந்தான். தான் வழக்கமாகச் செல்லும் இடங்களுக்குகெல்லாம் சென்று தனக்கு நடக்கபபோகும் திருமணத்தைப் பற்றி எல்லோருக்கும் கூறினான். அவன் வாசிகசாலையை அடைந்த போது அங்கு சின்னத்தம்பரும் , அம்பலவாணரும் மட்டுமே இருந்தார்கள்.

”வாணரண்ணை எனக்கு வெள்ளிக்கிழமை கலியாணம் “ எனக் கூறிவிட்டுச் சிரித்தான் நடேசு.

”என்ன நடேசு உனக்கு கலியாணமோ… ஆர் மச்சான் பெம்பிளை?“ என ஆச்சரியத்துடன் கேட்டார் அம்பலவாணர்.

”வேறையார்….. என்ரை பார்வதி மச்சாள்தான்.“

அம்பலவாணருக்கும், சின்னத்தம்பருக்கும் நடேசு கூறியதை நம்புவது சிரமாக இருந்தது.

”என்ன நடேசு நீயும் ஆள் ஒரு புழுகனாய்கிடக்கு. உன்னை ஒரு நாளும் பார்வதி கல்யாணம் செய்யிறதுக்குச் சம்மதிக்க மாட்டான்“ சின்னத்தம்பர் தான் இப்படிக் கூறினார்.

”ஏன் அண்ணையவை …என்னை நம்பமாட்டியளோ? நான் எப்பவெண்டாலும் உங்களுக்குப் பொய் சொல்லியிருக்கிறேனா?

அம்பலவாணரும் , சின்னத்தம்பரும் ஒருவரையொருவர் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டனர்.

சந்நதிக் கோயிலிலைதான் கலியாணம் அண்ணையவை நீங்கள் கட்டாயம் கலியாணத்துககு வரவேணும். எனக்கு நிக்க நேரமில்லை. வேறையும் ஆக்களுக்குக் கலியாணத்துக்குச் சொல்ல வேணும்.“ எனக் கூறிப் புறப்பட்ட நடேசு கலியாணத்துக்கு மட்டும் வராமல் நிண்டிடாதையுங்கோ“ என மீண்டும் சொல்லிவிட்டுச் சென்றான்.

”என்ன ஐஸே, நடேசு சொல்லிப்போட்டுப் போறன் பெரிய புதினமாய்க் கிடக்கு “ என்றார் சின்னத்தம்பர் அம்பலவாணரைப் பார்த்து.

”பார்வதியைக் கூட்டியந்து வீட்டிலை வைச்சிருக்கிறது மில்லாமல் செல்லப்பர் அவளுக்கு கலியாணம் செய்து வைக்கப்பபோறார். என்றார் அம்பலவாணர்.

பார்வதியைக் கூட்டியந்த ஒரு மாசத்திலை ஏன் அவசரப்பட்டுக் கலியாணம் செய்யினம் உதிலை ஏதோ விசயம் இருக்கு எனச் சந்தேகமான முறையில் கூறினார் சின்னத்தம்பர்.

”அதுதான் சின்னத்தம்பர் எனக்கும் விளங்கேல்லை நடேசு ஒரு விசரன் தானே அதுதான் அவனைப் பிடிச்சுக் கலியாணம் செய்து வைக்கினம் என்றார் அம்பலவாணர்.

ஊரிலை ஒருத்தருக்கும் நன்மை தீமைக்குக் கூட செல்லப்பரைக் கூப்பிடுகிறதில்லலை அப்படியிருக்க அன்னம்மா எப்பிடித் தன்ரை மகனுக்குப் பார்வதியைக் கட்டிவைக்க ஒப்புக்கொண்டாவோ தெரியேல்லை.

”பார்வதிக்கு கலியாணம் செய்து வைச்சால் நடந்த சங்கதியை ஊரிலை யாரும் மறந்து விடுவினமோ அவையளைச் சபைசந்திக்குத்தான் இனி எடுக்கப்போயினமோ பாவம் ..நடேசு ஒரு பேயன் எண்டாப்போலை இப்பிடி ஒருநாளும் ஏமாத்திக் கலியாணஞ் செய்யப்பிடாது,“

”ஐஸே, நடேசு கலியாணத்துககு வரச் சொல்லிப் போட்டுப் போறான் ..நீர் போறீரோ?“ என்றார் சின்னத்தம்பர் கேலியாக.

”போகத்தான் வேணும் சின்னத்தம்பர் நீயும் வாவன் இரண்டு பேருமாய்க் கூடிப் போவம்
”நான் ஒருநாளும் அந்த வீட்டை போக மாட்டன் ஐஸே ‰ நீர்தான் கட்டாயம் போவேணும். பெம்பிளை உம்முடைய கூட்டாளியெல்லோ”

”என்ன சின்னத்தம்பர் என்னை எப்பிடி யெண்டு நினைச்சிருக்கிறீர், செல்லப்பர் வீட்டுக்கு இனி நான்போனனெண்டால் ஊரிலை என்னை யாரும் மதிப்பினமோ “ என அம்பலவாணர் கூறியபோது பொன்னம்பல வாத்தியார் பேப்பர் வாசிப்பதற்காக அஙகு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் இருவரும் தமது பேச்சை நிறுத்திக்கொண்டனர்.

36

நடேசுவுக்கும் பார்வதிக்கும் சுருக்கமான முறையில் திருமணம் நடந்தேறியது. செல்லப்பர் , சின்னத்தங்கம் அன்னம்மா, பார்வதி, நடேசு -இவர்கள் மட்டும் ஒருகாரில் கோவிலுக்குச் சென்று திருமணத்தை முடித்துவிட்டுத் திரும்பினார்கள்.வேறு எவருமே திருமணத்துக்கச் சமூகம் அளிக்கவில்லை,

நடேசு பட்டு வேட்டி பட்டி புதிய சேட் அணிந்து தலைப்பாகையுடன் மாப்பிள்ளை மாப்பிள்ளையாகக் காட்சியளித்தான் அவனுக்குப் பக்காத்தில் பார்வதி கூறைச் சீலை உடுத்து மணப்பெண்ணாக அமர்ந்நதிருந்தாள். அவளது கழுத்தில் நடேசு கட்டிய தாலி கனத்து கொண்டிருந்தது.

நடேசு அடிக்கடி தனது புதிய பட்டு வேட்டியைத் தடவிபார்த்துமகிழ்ந்தான். பார்வதி பேசாமல் இருப்பதை பார்த்து ஏன் மச்சாள் என்னோடை பேசாமல் இருக்கிறாய்? என அடிக்கடி அவளிடம் கேட்டாள் ஆப்படிக் கேட்டும் போதெல்லாம் அவள் பதிலொன்றும் சொல்லாது மெல்லிதாகப் புன்னகை செய்தாள்.

செல்லப்பர் வீட்டை நோக்கிக் கார் விரைந்தது, அதன் வேகத்தையும் மீறிக்கொண்டு செல்லப்பரின் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது, அவர் திட்டமிட்படியே எல்லாம் நடந்துகொண்டிருந்தன.

பார்வதி, மாணிக்கத்தை மறந்தவிடவேண்டும் என்பதற்காகவே . அவர் அவனை இறந்துவிட்டதாக அவளது காதில் விழும்படி கூறியிருந்தார். அப்படி ஒரு பொய்யைச் சொன்னாலேதான் பார்வதி இந்தக் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறதெனவும், அவர் இப்போது திருப்தியடைந்தார்.

பார்வதிக்கும் நமேசு;கும் திருமணம் நடந்து ஒரு கிழமை கழிந்துவிட்டது நடேசுவின் போக்கில் எவ்வித மாறுதல்களும் ஏற்படவில்லை. பார்வதியுடன் அவன் முன்போலவே இப்போதும் பழகினான். அடிக்கடி அவளோடு கதைப்பதும் அவளிடம் தனக்குப் பலகாரங்கள் செய்து தரும்படிவேண்டுவதும் , குதூகலமாக ஏதாவது பாட்டைப் பலமாக பாடுவதும் சின்னத்தங்கத்துடனும் தாயுடனும் அளவளாவுவதுமாக அவனது காலம் கழிந்தது.

திருமண நாளன்று பார்வதி மிகவும் பயந்து போயிருந்தாள் நடேசு தன்னை நெருங்கும்போது அவனிடமிருந்து எப்படியாவது தன்னைக் காப்பாற்றிவிட வேண்டுமென எண்ணியிருந்தாள். முதலிரவன்று அவளுடன் அவன் தனியாக இருந்த வேளையில் ”மச்சாள் எண்ணிலை உனக்க விருப்பமோ? எனத் திடீரெனக் கேட்டான் நடேசு.

”ஓ…….. உங்களைலை எனக்க நல்ல விருப்பம் அது தானே நான் உங்களைக் கலியாணஞ் செய்தனான் எனப் பதிலளித்தால் பார்வதி.

என்னிலை கூட விருப்பமோ , மாணிக்கனைகூட விருபப்மோ……

பார்வதிக்குச் சுரீரென ஏதோ இதயத்தில் தைப்பது போல் இருந்தது. என்ன சொல்வதுதென்றேதெரியவில்லை,

ஏன் அத்தான் அப்பிடிக் கேக்கிறியள்…… ? எனச் சமாளித்தபடி கேட்டால் பார்வதி
மடத்தடியிலை கதைச்சவை உனக்கு மாணிக்கனில்தான் கூட விருப்பமாம்.

”ஆர் அப்பிடிச் சொன்னது?

”வாணரண்ணை அவற்றை கூட்டாளிமாருந்தான் சொன்னவை.“

”இப்ப ஏன் உந்தக் கதையெல்லாம் கதைக்கிறியள்? உப்பிடியெல்லாம் நீங்கள் கதைத்தக்க கூடாது.“

”சரி மச்சாள் நான் இனிமேல் உப்பிடியொண்டும் கதைக்க மாட்டன் எனக் கூறிவிட்டு கைகளைநீட்டி முடக்கிப் பெரிதாகக் கொட்டாவி விட்டான் நடேசு.

”அத்தான் உங்களுக்கு நித்திரை வருகுது போலை கிடக்க படுங்கோவன்.“

”ஓம் பார்வதி நான் படுக்க போறன் “ எனக் கூறிய நடேசு மேலும் பார்வதியுடன் பேசாது கட்டிலில் புரண்டு படுத்தான்.

பார்வதி நிலத்திலே பாயை விரித்துப் படுத்துக்கொண்டாள் அவளுக்கு நித்திரை வரவில்லை.

இந்த நடேசு மச்சானின் உலகம் ஒரு புதுமையான உலகம் பரந்த ஒரு உலகம் இவருக்கு எற்றத்தாழ்வுகள் இல்லை இவரைப்போல் எல்லோருமே இருந்துவிட்hல் எவ்வளவு நன்றாக இருக்கும் , நான் இருக்கும் நிலையில் இவரைத் தவிர யார்தான் என்னைத் திருமணம் செய்திருப்பார்கள் இவரிடமிருந்து என்னைப் காதுகாக்க எவ்விதமான சிரமங்களும் இருக்காது.

நடேசுவின் குறட்டைச் சத்தம் அந்த அறையில் பெரிதாக ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் எவ்வித சலனமுமின்றி தூங்கிக்கொண்டிருந்தான் பார்வதிக்கு இப்போது ஓரளவு மனதில் நிம்மதி ஏற்பட்டிருந்தது.

37

மாலை மயங்கிய நேரம் யாருமே எதிர்பார்க்காத வகையில் அம்பலவாணர் அன்று செல்லப்பர் வீட்டுக்கு வந்தார். வழக்கம் போல டாம்பீகமாக உடையணிந்து “சென்ற்’றின் மனம் தமழக் கையில் ஒரு பெரிய பாhடசலுடன் அவர் அங்கு வந்திருந்தார். வேலைக்குச் சென்ற செல்லப்பர் இன்னமும் வீட்டுக்குத் திரும்பவில்லை விறாந்தையில் கிடந்த சார்மனைக் கதிரையில் நடேசு படுத்திருந்தான். திண்ணையில் அரிக்கன் அருகே பார்வதி அமர்ந்திருந்து ஏதோபுத்தகம் ஒன்றை வாசித்துக்கொண்டிரந்தாள். அம்பலவாணரைக் கண்டதும் வீமன் வாலாட்டியபடி அவரைச் சுற்றிச் சுற்றி வந்த . அவருக்குத் தனது அன’பைத’; தெரிவித்தது.

”வாணரண்ணை வா……வா…… கையிலை பார்சலோடை வந்திருக்கிறாய் நடேச குதூகலத்துடன் அவரை வரவேற்றான்.

பார்வதி மெதுவாக எழுந்து உள்ளே சென்று சின்னத்தங்க்திடம் அம்பலவாணரின் வரவைத் தெரிவித்தாள் சின்னத்தங்கம் பெரு மகிழ்ச்சியுடன் வெளியே வந்தாள்.

”வா தம்பி ….வா…. இப்ப எங்களையெல்லாம் மறந்திட்டாய் ….“ எனக் குறைப்பட்டு கொண்டே அவள் அம்பலவாணரை வரவேற்றாள். அம்பலவாணர் வெளியே இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார்.

”நான் உங்களை ஒரு நாளம் மறக்கமாட்டேன் மாமி … மறந்திருந்தால் இப்ப இங்கை வருவனே?

”ஏன் வாணரண்ணை நீ என்ரை கலியாணத்துக்கு வரேல்லை? வாறனெண்டு சொல்லிப்போட்டு ஏமாத்திப் போட்டாய் ..“ நடேசு அம்பலவாண்ரைப் பார்த்துக் கேட்டான்.

”கலியாணத்துக்கு அம்மா நிறையப் பலகாரங்கள் சுட்டவை எல்லாம் முடிஞ்சு போச்சுது. வாரண்ணை …நீ பிந்திப் போனாய் “ இப்படிக் கூறியபோது அம்பலவாணருக்குச் சிரிப்புத்தான் வந்தது.

”பலகாரம் இல்லாட்டிப் பராவாயில்லை….. மச்சான் நான் இப்ப உங்களைப் பாக்கிறதுக்குத்தான் வந்தனான்.

”வாரண்ணை நீ நாளைக்கு வந்தியெண்டால் பார்வதி யிட்டைச் சொல்லிப் பலகாரம் சுடுவிச்சுத் தாறன் அம்பலவாணருக்குப் பலகாரம் கொடுக்க முடியவில்லையே என்பது நடேசுவுக்குப் பெருங்கலையாக இருந்தது.

”என்ன மாமி ..நல்லாய் மெலிஞ்சு போனியள்? என சின்னத்தங்கத்தைப் பார்த்துக் கேட்டார் அம்பலவாணர்.

”என்ன செய்யிறது தமபி எல்லாம் உனக்குத் தெரியுந்தானே‰ஏதோ எங.கடை குடும்பத்துக்கு ஒரு கெட்டகாலம்… இந்தக் கவலையிலை எனக்கும் வருத்தம் கூடிக்கொண்டுது.”

நடந்து முடிஞ்சதுகளைப் பற்றி யோசிங்காதையுங்கோ மாமி… இனி உங்களுக்கு ஒரு கவயும் இருக்காது……… நடேசு ஒரு வஞ்சகம் சூதில்லாத பிறவி…….. அவரை மருமகனாய் எடுத்திடடியள், .இனியேன் யோசிப்பான்.“

”அண்ணை இப்ப பெம்பிளை மாப்பிளையை பார்க்கவெல்லோ வந்திருக்கிறன். அதுதான் பிரசென்ட்கொண்டு வந்தனான். எங்கை பார்வதியைக் காணேல்லை“ எனக் கேட்டுக்கொண்டே அம்பலவாணர் அறையின் வாசலை நோக்கினார்.

”ஏனடி பிள்ளை உள்ளுக்கு நிக்கிறாய் …. என்ன வெக்கம் வெயிலை வாவன் .உன்னை பாக்கிறதுக்குத்தானே கொண்ணை வந்திருக்கிறார்“எனப் பார்வதியைக் அழைத்தாள் சின்னத்தங்கம்

பார்வதி குனிந்து தலை நிமிராமல்வெளியே வந்தாள் .

”மச்சான் நீ பார்வதிக்குப் பக்கத்திலை போய் நில்லு நான் கொண்டு வந்திருக்கிற பரிசை இரண்டு பேரிட்டைடைடயந்கான் தரவேணும்.“

நடேசு எழுந்து பார்வதியின் அருகில் போய் நின்றான். அம்பலவாணர் தான் கொண்டு வந்த பார்சலை இருவரது கைகளிலும் கொடுத்து விட்டுச் சிரித்த்ப்படி மீண்டும் கதிரையில் போய் உட்கார்ந்துகொண்டார்.

”என்ன வாணரண்ணை பெரிய பிரசென்டாய்க் கிடக்கு “ எனக் கதூகலித்தபடி நடேசு அந்தப் பார்சலை அவிழ்த்துப் பார்த்தான், உள்ளே நடேசுவுக்கு ஒரு வேட்டி, சேட் முதலியனவும்,பார்வதிக்கு ஒரு சேலையம் இருந்தது.

”வாணரண்ணைதான் எங்களுக்குப் “பிரசென்ட்’

ஒரு வேளை அவளுக்கு தான் செய்த காரிய்ங்களினால் ஏற்பட்ட வெட்கமாக இருக்கலாம் என நினைத்துத் தனது மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டார் அம்பலவாணர்.

38

முல்லைத்தீவு ஆஸபத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணிக்கத்தின் உடல் நிலை சீரடைந்து வந்தது. அவன் இப்போது சிறிது தூரம் உலாவக் கூடிய நிலையில் இருந்தான்.

”ஏன் மாணிக்கம் உன்னை அடிச்ச ஆட்களை ஆரெண்டு உனக்குத் தெரியாதோ? கந்தசாமி மாணிக்க்திடம் கேட்டான்.

”செல்லப்பரும், துரைசிங்கமும் ஆரோ இரண்டு பேரைக் கூட்டியந்தவை என்னை அடிச்சவை,“

”அப்ப நீ ஏன் துரைசிங்கத்தைப் பற்றியும் செல்லப்பரைப் பற்றியும் வாக்குமூலத்திலை எதுவும் சொல்லேல்லை ?“

”அவையளைப் பற்றிச் சொல்லப்போனால் பார்வதியைப் பற்றியும் சொல்ல வேண்டிவரும் . அதைத்தான் நான் விரும்பேல்லை“ என்றான் மாணிக்கம்.

”நீ ஒரு மடையனடா . அக்கிரமம் செய்யிறவங்களைக் காட்டிக் குடுக்காமல் விட்டிட்டாய்“ எனப் படபடத்தான் கந்தசாமி.

”மச்சான் நீ ஆத்திரத்hதிலை உப்பிடிச் சொல்லுறாய் நாங்கள் ஆத்திரத்திலை செய்யிர காரியம் பார்வதிக்குத் தான் கஷ்டத்தைகொடுக்கும் எண்டது உனக்கு விளங்கேல்லை . பார்வதிஎண்டைக்கோ ஒரு நாளைக்க என்னட்டைத் திரம்பி வருவாள் . அதுக்கு பிறகு நான் கட்டாயம் என்னை அடிச்சவையைப் பழிவாங்கத்தான் போறன்?“ என்றான் மாணிக்கம் உறுதியான குரலில்.

மாணிக்கம் வாக்குமூலத்தில் எதுவுமே விபரமாகக் கூறாததன் காரணம் இப்பொதுதான் கந்தசாமிக்குப் புரிந்தது.

கோவிந்தனும், பொன்னியும் பார்வதியைப் பற்றிய விபரங்களை மன்பே கந்தசாமியிடம் கூறியிருந்தார்கள். பார்வதியை அழைத்துச் சென்றவர்கள் செல்லப்பரும், துரைசிங்கமும்தான் என்பது அவர்கள் மூலந்தான் அவனுக்கு ஊர்ஜிதமானது. அப்போதும் கந்தசாமி ஆத்திரதடைந்தான் உடனேயே பொலிஸில் புகார் செய்யவேண்டுமெனக் கூறினான். கோவிந்தன் அதற்குப் பிடிவாதமாக மறுத்துவிட்டான்.

கமக்காறர்களைப் பகைக்க வேண்டுமே என்பதற்காக அவன் பயப்படவில்லை. ஆண்டாண்டு காலமாக அவர்களது காணியில் தோட்டம் செய்து வாழக்கை நடத்திய நன்றிக் கடனுக்காகவாவது துரைசிங்கம் முதலானியைப் பற்றி எவ்விதமான புகாரும் செய்யக்கூடாதெனக் கோவிந்தன் விரும்பினான்.

கமக்காறரவைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும் துரைசிங்கம் கமக்காறரைப் பற்றி பொலிஸில் புகார் செய்தால் , சிலவேளை எல்லாக் கமக்காறர்களும் சேர்ந்து தனது இனத் தவர்கள் எல்லோரையும் ஓடியெழுப்பி விடவும் கூடுமென அவன் எண்ணினான். துரைசிங்கம் கமக்காறனோடு பகைத்து அவரோடும் போராடுவது ஓர் ஆண்மைமிக்க செயலாக அவன் கருதவில்லை கஷடமும் ஏற்படலாம் காப்பதுதான் ஓர் ஆண்மையுள்ள செயலாகக் கோவிந்தன். கருதினான.

அத்தோடு மாணிக்கம் பார்வதியைக்கூட்டி வந்ததை அவன் பெரிதும் வெறுத்தான். அதனாலே தான் இப்போது எல்லாப் பிரச்சனைகளும் உருவாகியிருக்கிறது என்றும். மாணிக்கத்தில் பிழையிருக்கும் போது கமக்காறர்களை ஏன் பகைக்கவேண்டும் எனவும் அவனது மனம் எண்ணியது இதனாலேதான் துரைசிங்கம் முதலாளிக்கு எதிரான காரியங்களில் கந்தசாமியை ஈடுபடாமல் தடுத்துவிட்டான். கோவிந்தன்.
கொவிந்தனையும் பொன்னியும் , மாணிக்கம் ஓரளவு குணமாகும் வரையாவது முத்தையன்கட்டிலேயே தங்கும்படி கந்தசாமி வேண்டிக்கொண்டான். குட்டியன் மட்டும் அங்கு வந்த மறுநாளே ஊருக்குத் திரும்பி சென்று விட்டான்.

மாணிக்கம் முற்றாக குணமடைவதற்கு இன்;னும் இரண்டு மாதமாவது செல்லும் என வைத்தியர்கள் கூறினார்கள். அவன் குணடைந்தபின்பும் முத்தையன்கட்டிலேயே தங்கி இருப்பது தான் நல்லதென கோவிந்தனும் பொன்னியும் தீர்மாணித்தார்கள். அவன் ஊருக்குத் திரும்பி வந்தால் பின்பும் ஏதாவது விபரீதங்கள் நிகழ்ந்து விடலாமெனக் கோவிந்தன் பயந்தான். கந்தசாமிக்கும் கோவிந்தன் கூறுவது சரியாகவே பட்டது. சில “நாட்கள் கழிந்த பின்பு கோவிந்தனும் பொன்னியும் ஊருக்குத் திரும்பினார்கள்.

39

நடேசும் பார்வதிக்கும் திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ககழிந்துவிட்டன, திருமணமான புதிதில் நடேசு எங்கும் செல்லாது பார்வதியுடனேயே இருந்தான். ஆனால் நாட் செல்லச்செல்ல பழையபடி அவன் ஊர் சுற்றத் தொட்ங்கிவிட்டான். அன்னமா அவனிடம் எவ்வளவோ எடுத்துச் கூறியும் அவன் கேட்கவில்லை, சில் நாட்களில் அவன் வீட்டில் தங்குவான் சில நாட்களில் அவன் அன்னமா வீட்டில் வந்து படுத்து விடுவான். ஒரு நாள் அன்னம்மா நடேசுவிடம் அதனைப் பற்றிக் கேட்டாள்.

”ஏனடாமேனை பார்வதியை விட்டிட்டு இங்கை வந்து படுத்திருக்கிறாய் ?“

”ஏனம்மா அங்கை நெடுகப் படுப்பான் . நான் இண்டைக்கு இங்கை படுக்கப் போறன்“ எனக் கூறினான் நடேசு

”அப்ப ஏனடா கலியாணம் முடிச்சனி ? பெம்பியைத்தனிய விட்டிட்டுத் திரியிறதுக்கோ

”இல்லை, அம்மா அங்கை செல்லப்பரம்மானும் மாமியும் இரக்கினம்தானே
அன்னம்மாவுக்க அதற்குமேல் அவனோடு கதைக்க முடியாமல் போய்விட்டது.
சில நாட்களில் அவன் தன்னந்தனியனாக வாசிகசாலையில் படுத்த நித்திரை கொள்வான். நடேசு வீட்டில் தங்காதைப் பற்றி பார்வதி ஒரு போதும் கவலையடைவதேயில்லை. வீட்டுக்கு வந்தால் மட்டும் அவள் அவனை உபசிரிப்பாள். அவனுக்கு வேண்டியவற்றைக் கவனிப்பாள், நடேசு வராத நாட்களில் ஏன் வரவில்லை. எங்கேஎங்கே போயிருந்தீர்கள்,? என அவள் ஒருபோதும் அவனைக் கேட்பதில்லை. சின்னத்தங்கம் மட்டும் அவன் வீட்டுக்கு வராவிட்டால் சிறிது கண்டிப்புடன் , ஊர்சுற்றித் திரிவதை நிறுத்த வேண்டுமெனக் கூறுவாள். சின்னத்தங்கத்தின் கண்டிப்பை அவன் சட்டை செய்வதே இல்லை.

இப்போதெல்லாம் அவன் கூடுதலான நாட்களில் வெளியே எங்கையாவது தங்கிவிடுவான்.

பார்வதியின் சொல்லை நடேசு ஒருபோதும் தட்டுவதில்லை , அவள் நினைத்திருந்தால் அவனை எந்கம் சுற்றித் திhயாமல் வீட்டிலே தங்கும்படி கூறியிருக்காலாம் ஆனால் , ஏனோ பார்வதி அதனை விரும்பவில்லை.

ஒரநாள் இரவு நடேச பார்வதியின் வீட்டில் தங்கியிலிருந்த போது , நடுச்சாமத்தில் விழித்தெழுந்த பார்வதியின் பாயிலே வந்து அமர்ந்து கொண்டான். அப்போது பார்வதி நல்ல நித்திரையில் ஆழ்நத்திருந்தாள்.. நடேசு பார்வதி கூங்தலை மெதுவாக வருடிவிட்டான். அவளது கன்னங்களைத் ஆசையோடு தடவினான்.பார்வதி திடீரென விழித்துக் கொண.டாள். நடேசு தடவி விடுவதைப் பார்த்ததும் .அவளது உடல் நடுங்கியது. அவள் கைகளை வில்க்கியப்படி பாயிலே எழுந்து உட்கார்ந்தாள். அப்போது அவள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அவளைக் கட்டியணைத்து அவளது கன்னத்திலே முத்தமிட்டான் நடேசு.

”சும்மா இருங்கோ , உதென்ன வேலை “ எனக் கூறியபடி அவனை விலக்கித் தள்ளினாள் பார்வதி.

நடேசு வெறி கொண்டவன் போல் பார்வதியை இறுகக் கட்டியனைத்து முத்தமிட்டான். பார்வதி பலம் கொண்ட மட்டும் அவனை விலக்கித் தள்ள முயன்றாள். அவளால் அவனை விலக்க முடியவில்லை. அவள் அவனுடன் போராடிச் சோர்ந்து போனால். நடேசுவின் வெறி அதிகமாகிக் கொண்டே வந்தது. பார்வதிக்குத் தலை சுற்றியது. மயங்கிக் கீழே சாய்ந்தாள்.

அவளது பெண்மை அவனிடம் தோல்வியடைந்தது.

அவள் மயக்கம் நீங்கிவழித்து போது நடேசு அவள்ருகே சோர்ந்து போய்ப் படுத்திருந்தான். அப்போதுதான் பார்வதி தனது இழப்பை உணர்ந்துகொண்டாள். அவளது உடல் முழுவதும் தழலாகத் தகித்துது. அவளது நெஞ்சில் வேதனை பொங்கி வடிந்தது. அவள் விம்மி வம்மி அழுதாள் அவள் அழுவதைப் பார்ர்தபோது நடேசுவின் மனம் பதட்டமடைந்தது.

”ஏன் பார்வதி அழுகிறாய் , நான் இனிமேல் உப்பிடி நடக்கமாட்டன் “ கெஞ்சும் குரலில் கூறினான் நடேசு.

அவன் அப்படிக் கூறியதும் பார்வதியின் கவலைமேலம் அதிகமாகியது அவள் விடியும் வரை அழுதுகொண்டே இருந்தாள். அந்த நிகழச்சியின் பின்பு நடேசு முன்பு போல் பார்வதியுடன் நெருங்கிப் பழகுவதற்குத் தயக்கமடைந்தான்.

40

அன்னம்மா அன்று காலை செல்லப்பரின் வீட்டுக்கு வந்தபோது பார்வதி சோர்வடைந்த நிலையில் திண்ணையில் படுத்திருந்தாள்.

அன்னம்மாவைக்கண்டதும் அவள் எழுந்திருக்க முய்சித்தாள். அவளால் முடியவில்லை, அதிகமாகத் தலைசுற்றியது மீண்டும் தலையைத் திண்ணையில் சாயத்துக்கொண்டாள்,

”என்ன பார்வதி என்ன ..ஏதேன் சுகமில்லையோ?“ எனப் பதட்டத்துடன் கேட்டாள் அன்னம்மா.

அப்போது அங்கு வந்த சின்னத்தங்கம் , இப்ப கொஞ்சம் நாளாய்க் உப்பிடித்தான் தலைசுத்தும் பிரட்டுந்தான் சோந்த படுக்கிறாள். சாப்பாட்டுக்கும் மனமில்லை“ எனக் கூறினாள்.

”ஏன் சின்னத்தங்கம் பிள்ளைக்கு தேகத்திலை ஏதேன் வித்தியாசமோ?“

”ஓம் மச்சாள் … இரண்டு மாசமாய்ப் பிள்ளை குளிர்கேல்லை ,,, நடேசு உங்களிட்டைச் சொல்லேல்லையோ?“

”அதைக் கேட்ட போது அன்னம்மாவுக்க பெரும் மகிழச்சியாக இருந்தது.

”அவனுக்கு பெண்டிலைப் பற்றி கவலையில் ஊர் சுத்துறதுதான் அவன்ர வேலை, கலியாணம் முடிஞ்சாப் பிறகெண்டாலும் திருந்துவான் எண்டு பாத்தால் இப்ப தான் வரவர மோசமாய்க்கிடக்கு “ என நடேசுவின் மேல்குறைபட்டுக் கொண்டே அன்னம்மா , பார்வதியின் அருகிலிருந்து தலையை மெதுவாக வருடிவிட்டாய்.

”பிள்ளை உப்பிடிச் சாப்பி;டால் இருக்கக்கூடாது. மகன் இல்லாமல் இருந்தாலும் தெண்டிச்சு ஒரு பிடிதன்னும் சாப்பிட வேணும்“ என வாஞ்சையுடன் கூறினாள்.

”என்ன சாப்பிட்டாலும் வயித்தைப் பிரட்டது மாமி

”பிள்ளையை நாங்கள் அனுப்ப ஏலாது மச்சாள். அவள் இங்கை தான் இருக்கவேணும் நான் என்னாலை முடிஞச்சதை அவளுக்குச் செய்து குடுக்கிறேன் என்ன இருந்தாலும் இந்த நேரத்திலை எங்களோடை இருக்கிறது தான் நல்லது “ என முடிவாக கூறிவிட்டாள் சின்னத்தங்கம்.

”பிள்ளை உனக்க விருப்பமான சாப்பாட்டைச் சொல்ல .நான் செய்து கொண்டுவாறன் “ பார்வதியை வற்புருத்தி;க் கேட்டாள். அன்னம்மா.

”மாமி உங்களுக்கு என்னத்துக்கு கரச்சல் எனக்கொண்டும் வேண்டாம்“ பார்வதி அன்னம்மாவிடம் கூறினாள்.

”எனக்கென்ன கரச’சல் பிள்ளை வீட்டிலை சரசு இருக்கிறாள் தானே .நான் என்னாலை முடிஞ்சதைச் செய்து கொண்டு வாறன் உடம்பு பெலயீனப்பட்டுக் போனால் மாசம் ஏற ஏற உனக்குத்தான் கரச்சல் எனக் கூறி அன்னம்மா சின்னத்தங்கத்திடம் ”மச்சாள் பிள்ளையைக் கவனமாய்ப பாhததுக் கொள்ளுங்கோ அங்கையிங்கை திரியவிடாதையுங்கோ தலைசுத்தி பார்வதி எங்கையேன் விழுந்துபோவள் “ எனக் கூறிவிட்டுத் தனது வீட்டுக்குச் சென்று வருவதற்காகப் புறப்பட்டாள்.

பேரக்குழந்தை பிறக்கப்போவதை அறிந்ததிலிருந்து அன்னம்மாவின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. நடேசுவை நினைத்துபோதுதான் அவளுக்கு கோபங்கோபமாக வந்தது. பிள்ளைத்தாச்சியைத் தனிய விட்டிட்டு ஊரளந்து கொண்டு திரியிறான். இண்டைக்கு வரட்டும் நல்ல பேச்சுக் கொடுக்க வேணும் என எண்ணிக் கொண்டாள்.

அன்று மாலை பார்வதிக்கென பயித்தம் பணியாரமும் பால் ரொட்டியும் சுட்டு பனையோலைப் பெட்டியில் வைத்துக் மூடிக் கட்டிக்கொண்டு பார்வதியிடம் வந்தாள் அன்னம்மா. அவள் அங்கு வந்த நேரத்தில் நடேசும் அம்பலவாணரும் முன் விறாந்தையிலிருந்து கதைத்துக் கொண்டார்கள்.

அன்னம்மாவைக் கண்டதும் நடேசு , ”எண்ணணை அம்மா . குஞ்சுப் பெட்டிக்கை கொண்டு வாறாய் ? எனக் கேட்டபடி எழுந்திருந்தான்

”சும்மா இரடா ..நான் பார்வதிக்கெண்டு பலகாரம் சுட்டுக் கொண்டு வந்தனான்.“

”என்ன அன்னம்மா மாமி விசேஷம்பகாரத்தோடை வாறியள் ? “ எனக்கேட்டார். அம்பலவாணர்.

”பார்வதிக்கு இப்ப சாப்பாட்டிலை மனமில்லைத் தம்பி சுகமில்லாமல் இருக்கிறாள். அதுதான் அவளுக்கெண்டு இரண்டு பால் ரொட்டியும் பயித்தம் பணிகாரமும் சுட்டுக்கொண்டு வந்தனான்.“

”என்ன மாமி பர்வதிக்கு சுகமில்லையோ…? என ஆச்சரியத்துடன் கேட்டார் அம்பலவாணர்.

”பார்வதிக்கு சுகமில்லைத்தான் தம்பி“ எனக் கூறிய அன்னம்மா, ”கிட்டடியில் எனக்கு ஒரு பேத்தியோரபேரனோடு வரப்போகுது“ எனச் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

”அப்படியே சங்கதி . ஏன் மச்சான் எனக்கு நீ இந்த விஷயத்தை சொல்லேல்லை. என்னட்டை மறைச்சுப்போட்டடாய்“ எனப் பொய்க கோபத்துடன் நடேசுவின் முதுகிலே தட்டினார் அம்பலவாணர்.

நடேசுவிவுக்க ஒன்றுமெ புரியவில்லை, ”என்ன வாரண்ணை சொல்லுறாய், உனக்கு நான் என்ன சொல்லாமல் மறைச்சனான்? “எனககேட்டான்.

”உனக்கு மகனோ, மகளோ பிறக்கப் போகுதெண்டு கொம்மா சொல்லுறா…“

நடேசு தனது உடம்பை நாணிக கோனிக் கொண்டு Ï”அப்பிடியே வாரண்ணை எனக்குச் சத்தியமாய்த் தெரியாது“ எனக் கூறி விகற்பமின்றிச் சிரித்தான்.

”எனக்கே இண்டைக்குத்தான் ஒரே வியப்பாக இருந்தது. இப்போதெல்லாம் அவர் அடிக்கடி அந்கு வருவத வழக்கம், அவர் வரும் வேளைகளில் நடேசு அங்கு இருக்காவிட்டால் அவர் சின்னத்தங்கத்தோடு சிறிது நேரம் கதைத்துவிட்டால் அவர் சின்னத்தங்கத்தோடு சிறிது நேரம் கதைத்துவிட்டுச் செல்வார் ஆரம்பத்தில் அவருடன் கதைக்கத் தயங்கிய பார்வதியும் நாட் செல்லச்செல்ல சிறிதுசிறதாக அவருடன் கதைக்கத் தொடங்கியிருந்தாள்.

சின்னத்தங்கமோ பார்வதியோ இந்த விஷயத்தைத் தன்னிடம் கூறாதது அம்பலவாணருக்கு மனதிலே பெருங் குறையாத இரந்தது. அவருக்குப் பலவிதமான சந்தெகங்கள் இப்போமு துளிர்த்தெழுந்தன.

அன்னமமா தான் கொண்டு வந்த பலகாரத்தில் கொஞ்சத்தை ஒரு தட்டில் எடுத்து வந்த நடேசுவும், அம்பலவாணரும் சாப்பிடுவதற்காக அவர்களின் முன்னே வைத்தாள்.

”வாரண்ணணை , அம்மாவைப் போலை ஒருத்தரும் பயித்தம் பணிகாரம் சுடுலாது, சாப்பிட்டுப் பார் சோக்காய் இருக்கும் “ எனக் 4pறக் கொண்டு பலகாரத்ததைச் சாப்பிடத் தொடங்கினான் நடேசு,

யோசனையில் ஆழ்ந்திருந்த அம்பலவாணரும் பயித்தம் பணிகாரம் ஒன்றை எடுத்துச் கடித்து விட்டு ”மச்சான் எனக்கு அவசரமாய்க் கnhஞ்சம் வேலையிருக்கு, நான் போட்டுவாறன் “ எனக் கூறிக்கொண்டு எழுந்திருந்தார்.

”ஏன் தம்பி அவசரப்படுகிறாய். வைச்ச பலகாரத்தை யெண்டாலும் சாப்பிட்டுப் போவன்“ என அவரிடம் கூறினாள் அன்னம்மா,

”இல்லை மாமி …எனக்கு போதும் . நான் இனிப்புப் பலகாரங்கள் சாப்பிடுகிறது குறைவு… மச்சான் சாப்பிடட்டும்“ எனக் கூறிவிட்டுப் புறப்பட்டார் அம்பலவாணர்.

– தொடரும்…

– புதிய சுவடுகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *