கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: December 25, 2023
பார்வையிட்டோர்: 5,522 
 

(1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

4.படுகொலையுண்ட பாவை

“என் கார் வழியில் சிறிது மக்கர் செய்ததினால் என்னால் உடனே அங்கு போக முடியவில்லை. ஐந்து நிமிஷம் கழித்து நான் அங்கே போனபோது, அங¢கு யாரையும் நான் பார்க்கவில்லை” என்றான் ராஜூ. “பரவாயில்லை” என்று கூறிய பரஞ்சோதி, “நாம் வேறு ஏதாவது வழியில்தான் முயற்சி செய்ய வேண்டும்“ என்றார்.

“அகல்யாவின் அடையளத்தை வைத்துக் கொண்டு அவள் எங்கே காரை வாடகைக்குப் பிடித்தாள் என்று கண்டுபிடித்தால் நமக்கு ஏதாவது உபயோகமான தகவல் கிடைக்கக் கூடும்“ என்றாள் சுசிலா. “ஆமாம்“ என்று ஒப்புக்கொண்ட பரஞ்சோதி, ராஜூவின் பக்கம் திரும்பி, “நீ கார் வாடகைக்குத் தரும் கம்பெனிகளின் பெயர்களையும், அவற்றின் டெலிபோன் நம்பர்களையும் குறித்துக் கொண்டு வா” என்றார்.

அங்கிருந்து கிளம்பிய ராஜூவின் மனதில் வேறொரு திட்டம் உருவாகி இருந்தது. அதன்படி ஒவ்வொரு ஓட்டலாகச் சென்று அகல்யாவைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். ஆனால் பல ஒட்டல்களில் விசாரித்தும் அவ க்கு எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை.

மிகவும் சோர்ந்து போன ராஜூ, ஒரு ஒட்டலில் நுழைந்து ஒரு கோப்பை காபி அருந்தி விட்டு, சிறிதும் நம்பிக்கையில்லாமல் அந்த ஒட்டல் முதலாளியையும் விசாரித்தான்.

“நீங்கள் கூறும் அடையாளமுள்ள பெண் இரண்டு நாட்களுக்கு முன் இங்கு வந்து தங்கினாள். தன் பெயர் அகல்யா என்று கூறினாள். அவளுக்கு ‘மனோகர் அன்ட் கோ’ விலிருந்து டெலிபோன் வந்தது. அவர்கள்தான் அவளுக்கு சிகப்பு நிற அம்பாசிடர் கார் ஒன்றை வாடகைக்குக் கொடுத்திருந்தனர்” என்றார் ஓட்டல் முதலாளி.

“அவளோடு வேறு யாரும் டெலிபோன் பேசவில்லையா?” என்று கேட்டான் ராஜூ. சிறிது நேரம் யோசனையோடு அமர்ந்திருந்த அந்த ஓட்டல் முதலாளி, “வேறு டெலிபோன்கள் எதுவும் அவளுக்கு வரவில¢லை. ஒரு வாரம் இங்கே தங்குவதாகக் கூறிய அகல்யா, திடீரென வந்த அன்று மாலையே அறையைக் காலி செய்துவிட்டு சென்று விட்டாள்” என்றார். சில நிமிஷங்களில் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கு இருந்து கிளம்பிய ராஜூ, நேராக பரஞ்சோதியின் ஜாகைக்குச் சென்றான்.

அந்தச் சமயத்தில் பரஞ்சோதி, அன்றையத் தபால்களுக்குப் பதில்களை சுசீலாவிடம் கூறிக்கொண்டிருந்தார். “அகல்யா தங்கியிருந்த விலாசத்தைக் கண்டு பிடித்து விட்டேன் சார்” என்று கூறியபடி உள்ளே நுழைந்த ராஜூ தான் ஓட்டல் முதலாளியிடம் கேட்டறிந்தவைகளை அவரிடம் கூறினான்.

“நீங்கள் உடனே ‘மனோகர் அன் கோ’ விற்குச் சென்றால் ஏதாவது பய ள்ள தகவல்கள் கிடைக்கும். சார்” என்றாள் சுசீலா. சில வினாடிகளில் ராஜூவும் துப்பறியும் பரஞ்சோதியும் தங¢கள் காரில் கிளம்பினார்கள். ஆனால் அவர்கள் அந்தச் கம்பெனியை அடைந்தபொழுது மனோகர் அங்கே இல்லை. அங்கே ஒரு சிறுவன் தான் இருந்தான். அவனை விசாரித்தபோது, மனோகரின் மனைவி பவானி மட்டும் வீட்டில் இருப்பதாகச் கூறினான். பவானியைப் பார்பபது நல்லதென்று பரஞ்சோதிக்குத் தோன்றியதால் ராஜூவுடன், மனோகரின் வீட்டை நோக்கி நடந்தார். அந்தச் சிறுவன் அவர்கள் இருவரையும் சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

பரஞ்சோதி கதவைத் தட்டிய சில வினாடிகளுக்கெல்லாம் பவானி கதவைத் திறந்தாள். அவர்கள் இருவரையும் சந்தேகத்தோடு பார்த்தவளாய்,”நீங்கள் யார்?” என்று கேட்டாள்.

‘‘நாங்கள் இருவரும் உன் டன் சில நிமிஷங்கள் பேச வேண்டி இருக்கிறது, பவானி’’ என்று கூறியபடி உள்ளே நுழைந்தார் பரஞ் சோதி. அவரோடு ராஜுவும் தொடர்ந்து உள்ளே நுழைந்தான். ‘‘மனோகர் வீட்டில் இல்லை?’’ என்றாள் பவானி.

‘‘நாங்கள் உன்னைப் பார்ப்பதற்க்குத்தான் வந்தோம்’’ என்று கூறிய பரஞ்சோதி, ‘‘உன் கணவர் பல விதத்திலும் உன்னை துன்புறுத்துவதாகக் கேள்விப்பட்டோமே’’ என்று அவள் முகத்தைப் பார்த்தபடி கூறினார். அவர் திட்டம் நன்றாகவே வேலை செய்தது. சில வினாடிகள் மௌனமாக அமர்ந்திருந்த பவானி, ‘‘எனக்கு அவர் பணம் கூட கொடுப்பதில்லை’’ என்று குமுறினாள்.

‘‘நீ எங்களுக்கு சில விஷயங்களைப் பற்றி தகவல் கொடுத்தால் உனக்கு நாங்கள் பணம் கொடுக்கிறோம்’’ என்றார் பரஞ் சோதி. ‘‘சுந்தர் கடத்தல் பற்றித்தானே?’’ என்று கேட்ட பவானி, ‘‘எனக்கு அந்த விஷயத்தைப் பற்றி பல விவரங்கள் தெரியும். எனக்கு ஒன்றும் தெரியாதென்று என் கணவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பலரைத் தூக்கு மேடைக்கு அ ப்பும் அளவுக்கு எனக்கு விஷயங்கள் தெரியும்’’என்று நிறுத்தினாள். ‘‘நீ எங்களுக்கு அந்த விஷயங்களைக் கூறு’’ என்றான் ராஜு.

‘‘உங்களுக்கு அந்த விஷயங்களைக் கூறிய அடுத்த வினாடியே என் கணவர் என்னைக் கொன்று விடுவார். அதனால்தான் இந்த ஊரை விட்டே ஓடி விட வேண்டும். அதற்கு எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் நீங்கள் தருவதாக இருந்தால் நான் அந்தச் செய்திகளைக் கூறுகிறேன்.’’

‘‘நீ அந்த விஷயங்களை எங்களுக்குக் கூறு. நான் உனக்கு பணம் கொண்டு வந்து தருகிறேன்’’ என்றார் பரஞ்சோதி.

‘‘முடியாது! நீங்கள் முதலில் என்னிடம் பணத்தைக் கொடுத்தால்தான் நான் பேச ஆரம்பிப்பேன்’’ என்று பவானி தீர்க்கமாகக் கூறினாள்.

அதற்கு மேல் அவளிடம் பேசிப் பயனில்லை என்று தீர்மானித்தார் பரஞ்சோதி. ராஜுவோடு கிளம்பினார். கடைச் சிறுவர் அவர்கள் இருவரையும் முறைத்துப் பார்த்தான். அவனைக் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளாமல் இருவரும் காரில் ஏறிக் கொண்டு விரைந்தார்கள்.

அவர்கள் கார் கண் பார்வையை விட்டு மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன், வேகமாக டெலிபோன் அருகே சென்று ஏதோ ஒரு நம்பருக்கு டெலிபோன் செய்தான்.

பரஞ்சோதி தனது பாங்க் கணக்கிலிருந்து அவசர அவசரமாக ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு ராஜுவையும் அழைத்துக் கொண்டு மனோகரின் ஜாகையை நோக்கி விரைந்தார். ‘‘எனக்கென்னவோ அவளை உயிருடன் பார்ப்போமோ என்று சந்தேகமாக இருக்கிறது’’ என்றார் பரஞ்சோதி.

‘‘ஏன்?’’ என்று கேட்டான் ராஜு.

‘‘நாம் அவளைப் பார்த்து விட்டுச் சென்றதை எப்படியும் மனோகர் அறிந்திருப்பான். உடனே தன் ரகசியங்களை அவன் வெட்ட வெளிச்சமாக்கி விடுவானென்று பயந்து போய் அவனைக் கொலை செய்து விடலாம்’’ என்றார் பரஞ்சோதி.

அதன் பிறகு மனோகரின் ஜாகையை அடையும் வரை இருவரும் பேசவில்லை. பவானி உயிரோடு இருக்க வேண்டுமென்று தவித்தான் ராஜு. அவர்கள் மனோகரின் ஜாகையை அடைந்திருந்த போது அந்தச் சிறுவனைக் காணவில்லை. ஜாகைக் கதவு விரியத் திறந்திருந்தது.

‘‘பவானி… பாவனி…’’ என்று அழைத்தபடி இருவரும் ஒவ்வொரு அறையாக நுழைந்து தேடினார்கள். ஆனால் அவளைக் காணவில்லை. இருவரும் வாசலில் நின்று கொண்டு யோசனையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எதேச்சையாக ஜன்னல் வழியாக வெளியே பார்த்த ராஜு, ‘‘வெளியே ஒரு கார் ஷெட் திறந்திருக்கிறது. அதற்குள் அவள் இருக்கலாம்’’ என்றான்.

உடனே இருவரும் கார் ஷெட்டுக்கு ஓடினர். அங்கு ஒரே நிசப்தமாக இருந்தது. ‘‘பவானி’’ என்று பரஞ்சோதி அழைத்த குரலுக்கும் பதிலில்லை. ஒரு பழைய காரின் பின்னே ரத்த வெள்ளத்தில் கிடந்தாள் பவானி. அவள் மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது.

5.டெலிபோனில் ஒலித்த மர்மக் குரல்

தன்னைப் பார்ப்பதற்கு ஒரு அழகிய பெண் வந்து காத்துக் கொண்டிருப்பதாக ராஜு கூறியதும், அவள் யாராக இருக்கக் கூடுமென்று எண்ணி வியந்தபடி தனது ஆபீஸ் அறைக்குச் சென்றார் பரஞ்சோதி. அப்பொழுது பிற்பகல் மூன்று மணி. அந்தப் பெண் பரஞ்சோதியைக் கண்டதும் எழுந்து நின்றாள். அவள் பேரழகியாகவே இருந்தாள். அவளை இதற்கு முன்பு பரஞ் சோதி பார்த்ததில்லை. அவள் அழுததற்கடையாளமாக அவள் கண்கள் சிவந்திருந்தன.

‘‘நீங்கள் துப்பறியும் பரஞ்சோதி தானே?’’ என்று கேட்ட அந்தப் பெண், ‘‘என் பெயர் லீலா. நான் இன் ம் சில நாட்களில் சங்கரை – உங்களை பாஸ்கரிடமிருந்து காப்பாற்றியவரை… மணந்து கொள்ளப் போகிறேன். ஆனால் அரை மணி நேரத்திற்கு முன்னால் சுந்தர் கடத்தல் சம்பந்தமாக அவரைப் போலீசார் கைது செய்து அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள். போலீஸ் லாரியில் மாற்றப்படுவதற்கு முன் உங்கள் விலாசத்தைக் கூறி, உங்களைப் பற்றியும் கூறி என்னை, இந்த விஷயத்தை உங்களிடம் தெரியப்படுத்தும்படி கூறினார்.’’ என்றாள்.

‘‘அவன் நிரபராதி என்று உனக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார் பரஞ்சோதி. ‘‘நிச்சயமாகத் தெரியும்’’என்றாள் லீலா. அவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்திருந்தது. அதைத் தன் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்.

‘‘நான் இதைப் பற்றி விசாரிக்கிறேன் லீலா! நீ கவலைப்படாமல் போ’’ என்று ஆதரவோடு கூறினார் பரஞ்சோதி. ஆறுதல் அடைந்தவளாய் அங்கிருந்து கிளம்பினாள் லீலா.

அவள் சென்று வெகு நேரம் வரை சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் பரஞ்சோதி. சங்கர் உண்மையில் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று அவருக்குத் தெரியாது. அவன் அக்குற்றத்தைச் செய்தும் இருக்கலாம், செய்யாமலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் தன் உயிரைக் காப்பாற்றியவ க்காக அந்த விசாரணையில் இறங்குவதென்று தீர்மானித்தார். உடனே அவன் குடியிருந்த கட்டிடத்திற்குத் கிளம்பினார்.

அவர் அந்த இடைந்த அடைந்த பொழுது மணி ஐந்தாகி விட்டது. அந்தக் கட்டிடத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்த பரஞ்சோதி, தெரு வாயிற்கதவைத் தவிர வேறு எந்த வழியாலும் அதற்குள் நுழைய முடியாதென்று புரிந்து கொண்டார்.

அவர் வாசலுக்கு வந்தபொழுது காவல்காரனான வேணு மாலை செய்தித்தாள் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான். முதலில் பரஞ்சோதியை அவன் கவனிக்கவில்லை. ஆனால் அவனை அழைத்த பிறகுதான் அவன் அவரைத் திரும்பிப் பார்த்தான்.

‘‘இந்த சங்கர் எவ்வளவு உத்தமனாக நடித்துக் கொண்டிருந்தான்! இப்பொழுதுதான் அவன் எப்படிப்பட்டவனென்று தெரிகிறது’’ என்ற வேணு, ‘‘பணத்தை தமயந்தி அம்மா கூரை மீது வைத்த போது, ஒரு தூண்டிலைக் கொண்டுதான் அந்தக் கடத்தல்காரன் பணத்தை எடுத்துக் கொண்டானாம். அதோடு, ஒரு பாலிதீன் பையில் ஐம்பதாயிர ரூபாய் பணம் போட்டு சங்கரின் தலையணைக்கடியில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு சாட்சியங்கள் இல்லை எனில் அவனைக் கைது செய்திருக்க முடியாது’’ என்றான்.

‘‘சங்கர்தான் இந்தக் காரியத்தைச் செய்திருப்பான் என்று நினைக்கிறாயா?’’ என்று கேட்டார் பரஞ்சோதி.

“இல்லை, ஏனென்றால் அவ்வளவு தைரியம் அவ க¢கு இருந்ததில்லை. அவ க்கு, லீலா என்ற பெண்ணுடன் திருமணமாக நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. ஒருக்கால் தங்களுக்குத் திருமணமானதும் இருவரும் வெளியூர் செல்லத் தீர்மானித்து அதற்காக சங்கர் இந்தக் காரியத்தைச் செய்து பணம் சம்பாதிக்க முயன்று இருக்கலாம்.”

“அவன் அந்தத் தூண்டிலை தன் அறைக்கு துக்கிச் செல்வதை நீ பார்த்தாயா?”

“இல்லை”

“எப்படி நீ பார்க்காமல் போனாய்? எப்பொழுதும் தான் நீ இங்கேயே உட்கார்ந்திருக்கிறாயே?”

“நேற்று மாலை எனக்கு லீவு. எனக்குப் பதிலாக இங்கு சந்தியா என்ற ஒரு பெண் இருந்தாள். ஒருக்கால் அவள் பார்த்திருக்கலாம்” என்றான் வேணு.

“அவள் விலாசத்தை எனக்குக் கொடு.” ஆனால் வேணு வாயைத் திறக¢கவில்லை. தனது சட்டைப் பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை உருவி அவன் கையில் திணித்தார் பரஞ்சோதி.

அதன்பிறகு மனம் மாறிய வேணு அந்த விலாசத்தை எழுதிக் கொடுத்தான். அவனிடம் வேறொன்றும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார் பரஞ்சோதி.

மறுநாள் காலை அவர் சந்தியாவின் ஜாகையை அடைந்த பொழுது, அது ஒரு பெரிய விடுதியாக இருப்பதைக் கண்டார். அங்கு பல பெண்கள் குடி இருந்தனர். சந்தியாவின் அறை மாடியில் இருந்தது.

பரஞ்சோதி மாடிப் படிகளில் ஏறிச்செல்லும்பொழுது, ஒரு ஒல்லியான மனிதன் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான். பரஞ்சோதியை யோசனையோடு சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதன், பிறகு கீழே இறங்கிச் சென்றான். அவன் யாராக இருக்குமென்று எண்ணியபடி சென்றார் பரஞ்சோதி.

அவர் சந்தியாவின் அறையை அடைந்தபொழுது, அது திறந்திருப்பதைப் பார்த்தார். அவர் உள்ளே நுழைந்து சுற்றும்முற்றும் பார்த்தார். அங்கே, ஒரு ஆண் இருந்ததற்கடையாளமாக சிகரெட் துண்டுகள் கிடந்தன. அந்த ஜாகை, ஒரு அறையையும், ஒரு குளியலறையையும் கொண்டதாக இருந்தது. சந்தியா குளித்துக் கொண்டிருப்பாளென்று நினைத்த பரஞ்சோதி, அவள் வருவதற்குள் அந்த இடத்தை நன்றாகச் சோதனை செய்துவிட வேண்டுமென்று எண்ணியவராய் சோதனையிட ஆரம்பித்தார்.

மேஜை ஒன்றின் அருகே இருந்த ஒரு குப்பைக் கூடையில் யாரோ அப்பொழுதுதான் அருந்திய காப்பிக் கோப்பை இருந்தது. அது நன்றாகச் சுட்டுக் கொண்டிருந்தது. காப்பிக் கோப்பையை எதற்காக குப்பைக் கூடையில் வைக்க வேண்டும் என்று நினைத்தார் பரஞ்சோதி. ஆனால் அதை அப்படியே விட்டு விட்டார். அதுவரை சந்தியா வரவில்லை. குளியலறையிலிருந்து எந்த விதமான சத்தமும் வரவில்லை. எனவே, அவள் எங்காவது வெளியே சென்றிருக்கக் கூடுமென்று நினைத்தவராய், குளியலறை கதவைத் தள்ளித் திறந்தார்.

அங்கே, விட்டத்திலிருந்து தொங்கிய ஒரு கயிற்றில் தொங்கிக¢ கொண்டிருந்தாள் சந்தியா. அவளைச் சோதித்து பார்த்த பரஞ் சோதி, அவள் முதல் நாளிரவே இறந்திருக்க வேண்டுமென்று புரிந்து கொண்டார்.

அப்படியானால் சற்றுமுன் இங்கிருந்து இறங்கிச் சென்ற மனிதன்தான் அவளைக் கொலை செய்திருக¢க வேண்டும்.

ஏனெனில் சந்தியாவின் கழுத்தில் நகக் கீறல்கள் இருந்தன. கொலையை செய்துவிட்டு அதைத் தற்கொலையாக்கிக் காட்ட அவன் முயன்று இருக்கிறான். இரவே கொலையைச் செய்துவிட்டு, காலைவரை பிணத்துடன் அதே ஜாகையில் இருந்த அவ க்கு ரொம்ப நெஞ்சழுத்தம் இருக்க வேண்டுமென்று நினைத்த பரஞ்சோதி பக்கத்து டெலிபோன் பூத்திலிருந்து இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்கு, செய்தியைத் தன் குரலை மாற்றியபடி கூறிவிட்டு, அவர்கள் உடனே அங்கே கிளம்பி வந்தால் குப்பைக் கூடையில் ஒரு தடயம் கிடைக்கும் என்று கூறி வைத்து விட்டார்.

6.பரஞ்சோதி கைது

தனது ஜாகையை பரஞ்சோதி அடைந்த பொழுது அவரை பார்ப்பதற்காக தமயந்தி வந்திருந்தாள். தனது மேஜை அருகே சென்ற பரஞ்சோதி, அங்கிருந்த ஒரு ஸ்விட்சைப் போட்டார். பிறகு, தமயந்திக்கு எதிரே இருந்த ஒரு நாற்காலியில் வந்து அமர்ந்தார். “நீங்கள் இந்திக கேஸிலிருந்து விலகி விடுங்கள் பரஞ்சோதி! என் கணவர் எனக்குக் கிடைப்பாரென்ற நம்பிக்கையே எனக்கு போய்விட்டது. இனி நீங்கள் இதில் வேலை செய்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்” என்றாள் தமயந்தி.

பரஞ்சோதி மௌனமாக அமர்ந்திருந்தார். எதற்காக அவள் தன்னைக் கேஸிலிருந்து விலகி விடும்படி அவ்வளவு தீவிரமாகக் கூறுகிறாள்-? அதில் ஏதோ மர்மம் இருக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது.

“சங்கர்தான் அவரைக் கடத்திச் சென்றான் என்று போலீசார் கூறினர். அவரை இந்நேரம் அவன் கொலை செய்திருக்க கூடும். இந்த நம்பிக்கையற்ற நேரத்தில் உங்களை விலகச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. நான்தான் உங¢களை இந்த விவகாரத்தில் இழுத்து விட்டேன். எனவே நானே வந்து உங்களை விலகிக் கொள்ளச் சொல்கிறேன்” என்ற கூறிய தமயந்தி, “உஙகளுக்கு எவ்வளவு பணம் நான் தரவேண்டும்?” என்று கேட்டாள்.

“நான் இந்த விவசாரத்திலிருந்து விலகுவதில்லை என்று முடிவு கட்டி விட்டேன்” என்று நிதானமாகக் கூறினார் பரஞ்சோதி.

“உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தருகிறேன். நீங்கள் இந்த விவகாரத்திலிருது விலகி விடுங்கள்” என்றாள் தமயந்தி.

“என்னை, பணத்தைக் கொடுத்து விலைக¢கு வாங்க முடியாது, அம்மா, நான், என் உயிரைக் காத்த சங்கரின் சார்பில், பணம் எதுவும் வாங்காமல் இந்தக் கேஸில் வேலை செய்யப் போகிறேன். உன் பணம் எனக்குத் தேவையில்லை” என்று தீர்க்கமான குரலில் கூறினார் பரஞ்சோதி.

“நீங்கள் இதற்குச் சம்மதிக்காவிட்டால், நான் உங்களை சில வருஷங்கள் ஜெயிலில் தள்ளி விடுவேன்” என்று மிரட்டினாள் தமயந்தி.

“நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்” என்று அமைதியாகக் கூறினார் பரஞ்சோதி.

“உங்கள் பிடிவாதத்தை விட்டு விடுங்கள், பரஞ்சோதி. நான் பெரும் பணக்காரி என்னால் சாதிக்க முடியாததொன்றுமில்லை. அதிலும் நான் பெண்! எனவே உலகம் நான் சொல்வதைத்தான் நம்பும். என்னைப் பகைத்துக்கொண்டு நீங்கள் சோலைப்பாக்கத்தில் தொழில் நடத்த முடியாது. எனவே கடைசியாக கேட்கிறேன். உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்? இருபதாயிர ரூபாய் வேண்டுமா? முப்பதாயிர ரூபாய் வேண்டுமா? அந்த பணத்தை வைத்துக் கொண்டு நீங்கள் வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே சாப்பிடலாம். சீக¢கிரம் ஒரு முடிவுக்கு வாருங்கள்” என்று நிறுத்தினாள் தமயந்தி.

“நான் என் முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.”

“கடைசியாகக் கேட்கிறேன், பரஞ்சோதி, உங்கள் முடிவை மாற்றிக் கொள்ள முடியுமா, முடியாதா?”

“முடியாது.” சில வினாடிகள் அவரையே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தமயந்தி, தனது ஆசனத்தை விட்டு எழுந்து நேராக டெலிபோன் இருந்த இடத்திற்குச் சென்று இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்கு டெலிபோன் செய்தாள்.

“இன்ஸ்பெக்டரா?”… நான் இங்கே தமயந்தி பேசுகிறேன். இங்கே பரஞ்சோதியின் ஜாகையில் இருக்கிறேன். என்னை இங்கு கொண்டு வந்து அடைத்து வைத்திருக்கிறார். நீங்கள் உடனே புறப்பட்டு இங்கே வாருங்கள்” என்று பரபரப்போடு கூறிவிட்டு டெலிபோனை வைத்து விட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தவளாய், சில வினாடிகள் யோசனையில் ஆழ்ந்தாள். பிறகு திடீரென தனது சட்டையையும், புடவையையும் கிழித்து விட்டுக் கொண்டாள். பிறகு தனது கை நகங்களால் தனது கையிலும் முகத்திலும் கீறிக் கொண்டாள். தனது தலைப் பின்னலை அவிழ்த்து அலங்கோலமாகக் கலைத்து விட்டு கொண்டாள்.

அவள் என்ன நோக்கத்தோடு இம்மாதிரி செய்து கொள்கிறாள் என்று பரஞ்சோதிக்குத் தெரிந்து விட்டது. இருந்தபோதிலும் அவர் மௌனமாகவே அமர்ந்திருந்தார்.

“இப்பொழுது இங்கு வரும் போலீசாரிடம், நீங்கள் என்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக நான் கூறினால் அவர்கள் நிச்சயம் என் கூற்றை நம்பி உங்களைக் கைது செய்வார்கள். நீங்கள் எவ்வளவு மறுத்தாலும் உங்கள் பேச்சை அவர்கள் நம்ப மாட்டார்கள். ஒரு பெண் என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதை இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள்” என்று இகழச்சியாகக் கூறினாள் தமயந்தி.

இவள், தன் பணத்திமரினால், தான் ஒரு பெண் என்பதையும் மறந்துவிட்டு இம்மாதிரி நடந்து கொள்கிறாளென்று புரிந¢து கொண்ட பரஞ்சோதி, தனக்குள் சிரித்துக் கொண்டார். பிறகு தமயந்தியின் பக்கம் திரும்பி, “நான் என் காரியதரிசிக்கு டெலிபோன் செய்வதையாவது அ மதிப்பாயா?” என்று கேட்டார். ஒரு கணம் அவரைச் சந்தேகத்தோடு பார்த்த தமயந்தி, சரி என்ற பாவனையில் தலையை அசைத்தாள். தனது ஆசனத்தை விட்டு எழுந்த பரஞ்சோதி டெலிபோன் அருகே நடந்து சென்று சுசீலாவின் நம்பருக்கு டெலிபோன் செய்தார். சில வினாடிகளில் சுசீலாவின் குரல் லைனில் ஒலித்தது.

“சுசீலா பேசுகிறேன்.”

“பரஞ்சோதி பேசுகிறேன்” என்று கூறியவர், “என்னை இன் ம் சில நிமிஷங்களில் போலீசார் கைது செய்து கொண்டு போய் விடுவார்கள். நீ ஆபீசுக்கு வந்து கறுப்புப் பெட்டி எடுத்துக கொண்டு நேராக போலீஸ் ஸ்டேஷ க்கு வந்து விடு’’ என்றார்.

“என்ன தகராறு?” என்று பதறினாள் சுசீலா.

“அங்கே வந்ததும் தெரிந்து கொள்வாய்” என்று கூறிவிட்டு டெலிபானை வைத்துவிட்டார் பரஞ்சோதி, பிறகு தனது ஆசனத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.

ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் ஒரு போலீஸ்ஜீப் வந்து சேர்ந்தது. அந்த சத்தத்தைக் கேட்டதும் தனது ஆசனத்தை விட்டுத் துள்ளி எழுந்த தமயந்தி, வீரிட்டலறியபடி வெளியே ஒடினாள். அவளது சூழ்ச்சி நன்றாகப் பலித்தது. ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் கதிர்வேல் அவசரமாக அவளருகே ஒடி வந்தார். அவள் இருந்த கோலத்தைக¢ கண்டதும் பதறியவராய், “என்ன நடந்தது?” என்று கேட்டார்.

“அந்த படுபாவி பரஞ்சோதி என்னைப் பலாத்காரம் செய்ய முயன்றான்” என்று கதறினாள் தமயந்தி. உடனே இரண்டு போலீஸ் வீரர்களை விட்டு உள்ளே சென்று பரஞ்சோதியைக் கைது செய்யும்படி உத்தரவிட்ட கதிர்வேல், தமயந்தியின் பக்கம் திரும்பி, “நீங்கள் என் டன் போலீஸ் ஸ்டேஷ க்கு வந்து ஒரு புகார் எழுதிக் கொடுத்து விட்டால் சுலபமாக இருக்கும்” என்றார்.

தமயந்தி அவரோடு சென்று ஜீப்பில் ஏறிக்கொண்டாள். இதற்குள் பரஞ்சோதியைக் கைது செய்து அழைத்துக¢ கொண்டு வந்தனர். பரஞ்சோதி ரொம்ப அமைதியாகக் காட்சியளித்ததைக் கண்டதும் இன்ஸ்பெக¢டர் கதிர்வேலுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இருந்தபோதிலும் அதைக காட்டிக் கொள்ளாமல் மௌனமாக இருந்தார்.

போலீஸ் ஜீப் அந்தத் தெருவின் திருப்பத்தில் திரும்பிய பொழுது, சுசீலா ஓடி வருவதை பரஞ்சோதி பார்த்தார்.

– தொடரும்…

– 1977

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *