ஆந்தை விழிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 2,965 
 

(1973ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 21-25 | அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35

அத்தியாயம்-26 

சங்கர்லால் சிறிதும் அச்சம் கொள்ளாமல் அமைதியுடன் தேநீரைப் பருகினார். அவர் மனம், மெய்நம்பியை எந்தக் கோணத்தில் மடக்கி வழிக்குக் கொண்டு வருவது என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தது. தேநீரைப் பருகிவிட்டுக் காலிக் கோப்பையை வைக்கும்போதே அவர் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவரைப்போல் இருந்தார். 

“என்னைப்பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் சங்கர்லால்!” என்றுகேட்டார் மெய்நம்பி. இப்படி நேரிடையாகச் சங்கர்வாளிடம் அவர் கேட்பது சங்கர்லாலுக்கு வியப்பாய் இருந்தது. 

“நீங்கள் மிகவும் திறமைசாலி என்பது என் கருத்து” என்றார் சங்கர்லால். ஆனால், எந்த வகையில் அவர் திறமைசாலி என்பதைச் சங்காலால் சொல்லவில்லை? 

மெய்நம்பி பேச்சை மாற்றவில்லை. “நான் திறமைசாலி என்பதை எப்படி நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். 

சங்கர்லால் மிக அமைதியுடன் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு சொன்னார்;”அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அவைகளில் ஒன்றை மட்டும் சொன்னால் போதும் அல்லவா? இந்த நகரில் போலீஸ் கமிஷன உங்களைக் கவனிக்க இரண்டு பேர்களைப் போட்டார். அந்த இரண்டு பேர்களும் கான்ஸ்டபிள்கள். அவர்களை ஏமாற்றி விட்டு நீங்கள் தப்பி இந்த பங்களாவுக்கு வந்து விட்டீர்களே! இது ஒன்றே போதுமே!” 

மெய்நம்பி சிரித்தார். சங்கர்வாலிடமிருந்து இப்படி ஒரு பாராட்டுத் தணக்குக் கிடைக்கும் என்று அவர் எதிர் பார்க்கவே இல்லை! சங்கர்லால் மிகக் கொடியவர் என்று எண்ணிக் கொண்டிருந்த அவர், இப்போது, தன் கருத்தைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டார். 

“நீங்கள் எப்படித் தப்பி வந்தீர்கள்?” என்றார் சங்கர்வால்.

இந்தக் கேள்வியைக் கேட்டதும் மெய்நம்பி வாய்விட்டு பிரித்தார். “இப்போது அதைப்பற்றிச் சொல்லுவதால் குற்றமில்லை என்று நான் நினைக்கிறேன். என்னைக் காண ஒரு மனிதர் நீண்ட கோட்டும். கருத்த கண்ணாடியும் அணிந்து வந்தார். அவர் தாடி வைத்திருந்தார். தேயிலை தொடர்பாக என்னிடம் பேச வந்தார். அவரைக் கண்டதும் எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அந்த மனிதரைப் பங்களாவில் கட்டிப் போட்டுவிட்டு, அவருடைய கோட்டு கண்ணாடியுடன் நான் தப்பிவிட்டேவ்! அவருடைய தாடியையும் வெட்டி என் முகத்தில் ஒட்ட வைத்துக் கொண்டேன்! நான் வெளியேறிய பிறகு, நீண்ட நேரம் வரையில் காத்திருந்த கான்ஸ்டபிள்கள் இருவரும் உள்ளே ஏதோ ஓசை கேட்டு ஓடியிருக்கிறார்கள்! அந்தத் தாடி வைத்த மனிதர் தாடியில்லாமல் கட்டுண்டு கிடந்தார்!” 

இதைக் கேட்டதும் சங்கர்லால் சிரித்தார். அவர் சிரித்ததைப் பார்த்து, “ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார் மெய்நம்பி.

சங்கர்லால் சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னார். “நீங்கள் திறமைசாலிதான்! ஆனால் உங்களுக்கு எந்த அளவுக்குத் திறமை இருக்கிறதோ, அந்த அளவுக்குச் சிந்திக்கத் தெரியவில்லை.” 

“நீங்கள் என்ன சொல்லுகிறீர்கன்?’ என்று புரியாமல் கேட்டார் மெய்நம்பி. 

“மிகத் தெளிவாகச் சொல்லுகிறேன். உங்கள் திறமையை எப்படிப் பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை?” 

“அப்படியானால் நீங்கள் என்னை முட்டாள் என்கிறீர்களா?” 

“அப்படிச் சொல்லவில்லை வகை தெரியாதவர் நீங்கள் என்பது என் கருத்து!’ 

“இன்னும் எனக்குப் புரியவில்லை!” என்றார்: மெய் நம்பி சற்றுச் சினத்துடன், 

“மெல்ல மெல்லப் புரியும்படிச் சொல்லுகிறேன். ஏனென்றால், உங்களால் எதையும் உடனே புரிந்துகொள்ள முடியாது!” 

மெய்நம்பிக்கு எவரோ தன்மண்டையில் ஓங்கி அடித்து விட்டதைப் போலிருந்தது. ‘இந்தச் சங்கர்லால் நல்ல மனிதர் அல்லர். இவர் பாம்பை விடக் கொடியவர் என்று எண்ணியது இப்போது அவர் மனம்; ஒரு பாம்பு வந்து என் அறைக்குல புகுந்து விட்டது! பாம்பை அடிக்காமல் விடுவதா? கூடாது! பாம்பு நம்மைக் கடிக்குமுன் அதை அடித்துக் கொல்ல வேண்டும்!’ என்று தன் மனத்திற்குள் எண்ணிக் கொண்டார் மெய்நம்பி 

சங்கர்லால், மெய்நம்பியின் மனத்தில் ஓடிய உணர்ச்சிகளை உணர்ந்து கொண்டவரைப்போல் அவரைச் சற்று இரக்கத்துடன் பார்த்தார். பிறகு அவர் சொன்னார்: “உங்களை இரவு பகலாக உங்களுக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படி நான் தான் சம்பியிலிருந்து கல்கத்தாவின் போலீஸ் கமிஷனருக்குச் செய்தி அனுப்பினேன்! ஆனால், நீங்கள் அந்தப் போலீஸ் கான்ஸ்டபிள்களை ஏமாற்றிவிட்டு இங்கே வந்து விட்டீர்கள்! நீங்கள் அவர்கள் பார்வையிலிருந்து தப்பி வந்தது முதல், ஒவ்வோரு விநாடியும் உங்கள் உயிருக்கு ஆபத்தை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்!”

மெய்நம்பி சிரித்தார், “என் உயிருக்கு ஆபத்தா? இந்தக் கோட்டைக்கு என்னைக் காண ஓர் ஈ எறும்புக் கூட வர முடியாது!” என்று சொன்னார்! 

”தவறு. உங்களைச் சுற்றி உள்ளவர்களிலேயே ஒருவர் உங்களைக் கொல்லப் போகிறார்! உங்களுக்கு எந்த நேரத்திலும் உயிர் பிரியும் ஆபத்து இருந்து கொண்டே இருக்கிறது!” 

“உங்கள் முன் அறிவிப்புக்கு மிக்க நன்றி. யாரால் எனக்கு ஆபத்து என்பதை உங்களால் சொல்ல முடியுமா?”

“அதைப்பற்றிப் பேசத்தான் உங்களைக் காண நான் இங்கே வந்தேன்? ஆனால், நான் உண்மையைச் சொல்லு முன் என்னுடைய ஊகம் மிகச் சரியானதுதானா என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்! அதற்கு, நீங்கள் எனக்கு உதவி செய்யவேண்டும்”. 

“எப்படி, சங்கர்லால்?”

“நான் கேட்கும் சில கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டும் ஒளிவு மறைவு இல்லாமல் உங்கள் மனத்தில் உள்ளதை அப்படியே நீங்கள் சொல்லலேண்டும்” 

“கேளுங்கள். ஆனால் ஒன்று, அடிக்கடி கேள்வி கேட்பவர்களையும், நீண்ட நேரம் என்னிடம் கேள்வி கேட்பவர்களையும் எனக்குச் சிறிதும் பிடிக்காது!” 

சங்கர்லால் கேட்டார்; “உங்கள் எஸ்டேட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் நல்லநாயகத்துக்கும் உங்களுக்கு ஏதாவது மன வேறுபாடு உண்டா?” 

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நல்லநாயகம் அவருடைய எஸ்டேட்டை அவரால் நடத்த முடியாமல் விற்று விடுவதாகக் கேள்விப்பட்டு, அவர் எஸ்டேட்டை நான் விலைக்குக் கேட்டேன். அன்றிலிருந்து அவரை அச்சுறுத்தி வருவதாக அவர் எல்லாரிடமும் இப்போது சொல்லி வருகிறார்! அவ்வளவுதான்!”

“நல்லநாயகத்தின் எஸ்டேட்டுக்கு வந்திருந்த தமிழ்ச் செல்வத்தை உங்களுக்குத் தெரியுமா?” 

“தமிழ்ச்செல்வத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நேரில் எனக்கு அவரைத் தெரியாது”

“தமிழ்ச்செல்லும் இறந்துவிட்டதைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுறீர்கள்?” 

மெய்நம்பி இந்த இடத்தில் சிறிது தயங்கினார். பிரது அவர் மெல்லச் மெல்லச் சொன்னார் “தமிழ்ச்செல்வம் இறக்கவில்லை என்பது என் கருத்து!”

“என்ன இது! இப்படிச் சொல்லுகிறீர்கள்” 

“தமிழ்ச்செல்வத்தின் உடல்தான் மறைந்ததே தவிர, அவருடைய உயிரும் குரலும் மறையவில்லை! தமிழ்ச்செல்வத்தின் குரல், இசைத்தட்டுகளிலிருந்து மூலைக்கு மூலை கேட்டுக் கொண்டிருக்கிறது!” 

இந்தப் பதில் சங்கர்லாலை நிமிர்ந்து உட்காரச் செய்தது! 

சங்கர்லாவ் இப்போது வேறு வேறு கோணத்திலிருந்து கேள்வியைத் தொடங்கினார்! “உங்கள் எஸ்டேட்டின் பொறுப்பாளர் வேலப்பனை நீங்கள் எந்த அளவுக்கு நம்புகிறீர்கள்?” 

“இது என்ன கேள்வி? வேலப்பனை நான் நம்பும் அளவுக்கு வேறு யாரையும் நம்புவதில்லை?” 

“உங்கள் மனைவியைக்கூடவா?” 

இதைக் கேட்டதும் மெய்நம்பி சினத்துடன் அந்த அறைக்குள் இப்படியும் அப்படியும் உலாவினார். பிறகு அவர் சங்கர்லாலைப் பார்த்து, “என்னுடைய மனைவியை நீங்கள் பார்த்தீர்களா?” 

“ஆமாம். உங்கள் மருமப் பங்களாவில் இருக்கும் பூவழகு உங்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சொல்லவில்லையா?” என்றார் சங்கர்வால். 

*சொன்னான். நீங்கள் பங்களாவுக்கு வந்து போனதைச் சொன்னானே தவிர, என் மனைவியைக் கண்டதைச் சொல்லவில்லைர் என் பங்களாவுக்கு எவரும் வருவதை நான் விரும்பனில்லை! என் மனைவியை அந்த நிலையில் எவரும் காணுவதையும் நான் சிறிதும் விரும்பவில்லை” 

“உங்கள் மனைவிக்கு ஏன் அப்படி வெறிபிடித்திருக்கிறது?'” என்று கேட்டார் சங்கர்வால். 

“தெரியாது”. 

”தெரியாதா?” 

“நினைவு இல்லை.” 

“எதுவுமே நினைவு இல்லையா? ஏதோ ஒரு நிகழ்ச்சி தான் அவனை வெறிபிடிக்கும்படி செய்திருக்கவேண்டும். மெல்ல நினைவுபடுத்திப் பாருங்கள்”. 

மெய்நம்பி இப்படியும் அப்படியும் சிறையுண்ட புலியைப் போல் துடித்தார். அவர் தன் தலையை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்தபடி ஏதோ துன்பம் கொண்டவரைப் போல் நடந்துகொண்டார். 

“இப்போது என்ன வந்துவிட்டது உங்களுக்கு?” என்று கேட்டார் சங்கர்லால், 

“உங்களை இங்கே அழைத்து வந்தது தவறு என்பதை இப்போதுதான் நான் உணருகிறேன்! நீங்கும் கேட்கும் கேள்விகள் எனக்குத் துன்பத்தையும் குழப்பத்தையும் தருகின்றன!” 

“அதற்குள்ளாகவா?” 

“ஏன்? இன்னும் எத்தனை கேள்விகள் கேட்சு வேண்டும்?” என்று மெய்நம்பி நின்று சங்கர்லாலை உற்றுப் பார்த்துக் கேட்டார். 

“ஒருசில கேள்விகள்தாம்! அந்த ஒருசில கேள்விகள் உண்மையிலேயே உங்களுக்கு மேலும் சினத்தை உண்டாக்கும்!” 

“உங்களை வேலப்பன் அழைத்துப் போகக் கல்கந்தாவுக்கு விமானத்தில் ஏன் வரவில்லை என்று தெரியுமா?”

“விமானம் எங்கேயாவது விழுந்து நொறுங்கி விட்டதா?” 

“ஆமாம்! ஆனால், வேலப்பனும் விமானியும் தப்பி விட்டார்கள்! விழுந்து கிடந்த விமானத்தில் மற்றொரு மனிதன் இறந்து கிடந்தான்!” 

“யார் அவன்?”

“செல்லையா” 

”செல்லையா? யார் அந்தச் செல்வையா?”

“கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருப்பவன் இவன்! உங்களுக்காகப் பர்மாவிலிருந்து அடிக்கடி வைரங்களைக் கடத்தி வருபவன்.” 

“சங்காலால், நீங்கள் அளவுக்குமேல் போய்க்கொண்டிருக்கிறீர்கள் கடத்தலுக்கும் எனக்கும் என்ன தொடர்பு?” 

“இந்தச் செல்லையாவே உங்களுக்காகக் கடத்தல் செய்வதாக என்னிடம் கூறினான். பிறகு காட்டின் ஒரு பகுதியில் உங்கள் விமானத்துக்காகக் காத்திருந்தான்! விமானம் வந்ததும், அவன் அதில் ஏறிச் சென்றுவிட்டான்! சிறிது நேரத்தில் விமானம் விழுந்து நொறுங்கிவிட்டது. வேலப்பனும், விமானியும் தப்பிவிட்டார்கள்! செல்லையா இறந்துவிட்டான்” 

“நான் இதை நம்பவில்லை” எனறார் மெய்தம்பி. “வேலப்பன் உங்களுடன் தொடர்பு கொண்டாரா?”

“இல்லை” என்றார் மெய்நம்பி. 

“வேலப்பன் உங்களுடன் தொடர்பு கொண்டு நேரில் பேசவந்தால், அத்துடன் உங்கள் ஆயுள் முடிந்துவிடும்” 

“என்ன. ஊறுகிறீர்கள் சங்கர்வால்?” என்றார் மெய்நம்பி. 

”நான் சொல்வதை நீங்கள் நம்பலேண்டும். இதனால் தான் உங்களுக்குச் சிறிதும் திறன் இல்லை என்கிறேன!” என்றார் சங்கர்லால். 

சங்கர்லால் இப்படிச் சொன்னதும் மெய்நம்பி சற்று விழிப்புடன் சன்னல் பக்கமாக நின்றார். அவர், வேலப்பன் எதற்காகத் தன்னைக் கொல்லவேண்டும் என்று சிந்தித்துச் சிந்தித்துப் பார்த்தார். 

அவருக்குப் புரியவில்லை. 

உடனே அவர் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவரைப்போல் சுவரின் ஓரமாக இருந்த ஒரு பொத்தானை அமுக்கினார். பிறகு கதவின் தாழ்ப்பாளைத் திறந்தார். அறையின் கதவு சிறிது நேரத்தில் திறந்தது. உள்ளே பால்துரையும் நஞ்சப்பனும் புயலைப்போல் நுழைந்தார்கள்! சங்சர்லாலால் மெய்நம்பிக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று எண்ணி அவர்கள் ஓடிவந்ததைப் போலிருந்தது. அவர்கள் அறைக்குள்ளே நுழைந்தது. 

அவர்கள் இருவரும் சங்கர்லால் அமைதியுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அப்படியே நின்றார்கள். 

மெய்நம்பி சொன்னார்! “நமது எஸ்டேட் பொறுப்பாளர் வேலப்பனை எங்கேயிருந்தாலும் கண்டுபிடித்துக் கொண்டுவர நீங்கள் இருவரும் ஏற்பாடு செய்யவேண்டும். வேலப்பன் எஸ்டேட் பங்களாவுக்கும் திரும்பி வரவில்லை என்று பூழகு சொன்னான். நம்முடைய ஆட்கள் அனைவருக்கும் செய்தியை அனுப்பி வேலப்பனை வேட்டையாடிக்கொண்டு வரவேண்டும் ” 

“இவ்வளவுதானே?” என்றான் நஞ்சப்பள் 

“வேலப்பனை உயிருடன் கொண்டுவர வேண்டும்”

“ஆகட்டும் ஐயா” என்றான் பால்துரை. 

மெய்நம்பி அந்த இருவரையும் பார்த்து அடுத்தபடி வாகச் சொன்னார்: “இந்தப் பங்களாவிலேயே பாதுகாப் புடன் சங்கர்லால் அந்த இரண்டு நாட்களும் தங்கியிருக்க ஏற்பாடு செய்யுங்கள். வேலப்பன் வரும்வரையில் அவர் இந்தப் பங்களாவை விட்டுப் போகக்கூடாது. போலீசாரும் இவர் இங்கே வந்து தங்கியிருப்பதைக் கண்டுபிடிக்கக் 

”ஆகட்டும் ஐயா’ என்றால் நஞ்சப்பன். 

கதவைச் சாத்துங்கள். இன்னும் நான் சங்கர்லாலுடன் பேசி முடிக்கவில்லை” என்றார் மெய்நம்பி 

பால்துரையும், நஞ்சப்பனும் மெல்லச் சிரித்தபடி கதவைச் சாத்தித் தாழிட்டார்கள். 

சங்கர்லால், கூரையைப் பார்த்தபடி சிந்தனையுடன் உட்கார்ந்தார். “இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்தப் பங்களாவில் சிறைபட்டுக் கிடப்பதா? இரண்டு நாட்களுக்குள் வேலப்பன் கிடைத்துவிடுவானா? நான் நம்பலில்லை வேலப்பனை யாராலும் இனிக் கண்டுபிடிக்கலே முடியாது” என்று எண்ணிச் சிரித்தது அவர் மனம். 

மெய்தம்பியின் அந்தப் பங்களாவில் இருந்து தப்பிப் போவது மிகக் கடினமான செயல்தான் என்றாலும் சங்கர்லால் அதைப்பற்றியே எண்ணித் துன்பம் கொள்ளவில்லை. 

அவருடைய கருத்து முழுவதும், கவனம் முழுவதும் உண்மையை கண்டு பிடிப்பதிலேயே பதிந்திருந்தன. 

சங்கர்லால் மெல்லப் பேச்சுக் கொடுத்தார் “மெய்நம்பி உங்களுக்கு எப்போது திருமணம் ஆயிற்று?” என்று கேட்டார். 

“நினைவு இல்லை”

“என்ன? உங்களுக்கு எப்போது திருமணம் ஆயிற்று என்பது நினைவில்லையா?” 

“ஆமாம் சங்கர்லால், இப்போது அதை ஏன் கேட்கிறீர்கள்?* 

“பொதுவாக, ஒருவர் தனக்கு எப்போது மணமாயிற்று என்பதை மறப்பதில்லை. அதிலும் உங்களைப்போல் பொறுப்புள்ளவர்கள் மறக்கலாமா? உங்களுக்கு இன்னும் வாரிசு இல்லையே!” என்று கேட்டேன். 

இதைக் கேட்டதும் மெய்நம்பி அசைவற்று உட்கார்ந்திருந்தார். அவர் கண்கள் இரண்டும் சங்கர்லாலை உற்றுப்பார்த்தன. 

“ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் எஸ்டேட்டுக்கும். உங்கள் சொத்துக்களுக்கும் வாரிசு இல்லையே!” என்றார் சங்கர்லால்.

“அதைப்பற்றி நான் நினைக்கவே இல்லை சங்கர்லால்” 

“ஏன் நினைக்கவில்லை?”

”என் முளை சில வேலைகளில் சில உண்மைகளைச் சிந்தித்துப் பார்க்க மறுத்துவிடுகிறது! அது சிந்திக்க மறுக்கும் உண்மைகளில் இந்த வாரிசுப் பிரச்சினையும் ஒன்று.” 

“எத்தனை நாட்களுக்கு நீங்கள் இப்படியே இருக்கப் போகிறீர்கள்? வாரிசு இல்லாமல் நீங்கன் ஏன் இப்படிப் பணத்தைச் சேர்க்கிறீர்கள்?” 

“வாரிசு இருந்தாலும், இல்லை என்றாலும் பண ஆசை என்பது எல்லாருக்கும் உண்டு! பாடுபட்டுப் பணத்தைச் சேமிக்காவிட்டால், அவனால் இந்த உலகத்துக்கு எந்தவிதப் பயனும் இல்லை!” 

“பணத்தைச் சேர்த்துவைத்தால் அது ஒருவருக்கு இல்லாவிட்டால் மற்றொருவருக்கு உதவும்! பணத்தைச் சேமிக்கவேண்டும் என்று பாடுபடும்போதுதான் எதாவது ஒரு தொழில் உருவாகி அது வளருகிறது. இதை நான் ஒப் புக் கொண்டாலும் சட்டத்தை மீறிப் பணம் சேர்ப்பவர்களை அரசாங்கம் சும்மா விடுவதில்லை! நீங்கள் குறுக்கு வழியில் பணம் சேர்த்திருக்கிறீர்கள்!” 

இதைக் கேட்டதும் மெய்நம்பி சிரித்தீரர், “சங்கர்லால். பணத்தை எப்படிச் சேமிப்பது என்று இதுவரையில் எனக்கு எவரும் அறிவுரை கூறியதில்லை. நீங்கள் சொல்லுவதைப் போல் குறுக்கு வழியில் பணம் சேர்த்திருந்தால், அதை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டாமா?” என்றார். 

“உங்களிடம் இருக்கும் சொத்துக்களுக்குச் சரியான கணக்கு இருக்கிறதா இல்லையா என்பதை இப்போது நாம் பேசவேண்டியதில்லை. உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தைப்பற்றி இப்போது பேசுவோம்!” என்றார் சங்கர்லால்.

சங்கர்லால் இப்படி ஆபத்து என்று குறிப்பிட்டுச் பேசியதும், “எனக்கு ஆபத்து விளைவிக்க எவராலும் முடியாது சங்கர்லால்!” என்றார் மெய்நம்பி. ஆனால், அவர் மனத்திற்குள் ஏதோ ஒரு புது அச்சம் அறியாமல் புகுந்து கொண்டது 

“உங்களுக்கு மணமாகிக் குறைந்தது இருபத்தைந்து ஆண்டுகளாவது ஆகியிருக்கவேண்டும் என்பது என் கருத்து. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் சங்கர்லால். 

“எனக்கு நினைவில்லை” என்று. சற்று உரக்கக் கத்தினார் மெய்நம்பி. 

“உங்களுக்கு மணமான பின்பு குழந்தை ஏதாவது பிறந்ததா, நினைவுபடுத்திப் பாருங்கள்” 

“இல்லை!” 

“மிகத் தெளிவாகத் தெரியுமா?”

”இல்லை சங்கர்லால், இல்லை! அப்படி எனக்குப் பிள்ளை ஏதாவது பிறந்திருந்தால் இப்போது அந்தப் பிள்ளை என்னிடம் இல்லாமல் வேறு யாரிடம் இருக்கும்?”

“பிள்ளை பிறந்து காணாமல் போய்விட்டதா? நன்றாகச் சிந்தனை செய்து பாருங்கள்!” 

“அதெல்லாம் ஒன்றுமில்லை!” 

“மிகத் தெளிவாக நினைவுபடுத்திப் பாருங்கள்!” 

மெய்நம்பி சினம் கொண்டவரைப்போல் மேசைமீது. ஓங்கிக் குத்திவிட்டு சங்கர்லாலைப் பார்த்தார். “நீங்கள் பேசுவது மிகப் புதிதாக இருக்கிறது! இப்படிப்பட்ட ஐயம் உங்களுக்கு ஏன் வந்தது?” என்றார். 

”வேண்மகளைக் கண்டதும் இந்த எண்ணம் உங்களுக்கும் வரும்!” 

“யார் இந்த வேண்மகள்?” என்று கத்தினார் மெய்நம்பி.

“நல்லநாயகத்தின் எஸ்டேட்டில் பணிப்பெண்ணாக இருப்பவள். ஆனால் நல்லநாயகம் இவளைத் தன் மகளைப் போல வளர்க்கிறார் இந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு, உங்கள் மனைவியைப் பார்த்தால், உங்கள் மனைவியின் வயிற்றில்தான் அந்தப் பெண் பிறந்திருக்க வேண்டும். என்று எண்ணத் தோன்றும்!” 

மெய்நம்பி தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்த்து விட்டார்! அவர் பேசவில்லை?. 

“ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?” என்று கேட்டார் சங்கர்லால், 

“எனக்கு ஒரு மகள் இருந்தால், எனக்குத் தெரியாமல் வளருவாளா! மிக வேடிக்கையாக இருக்கிறது”. 

“உங்கள் மகள் சிறிய வயதில் காணாமல் போயிருக்கலாம்!* 

”ஒருபெண் காணாமல்போனால் அவளைக்கண்டுபிடிப்பது என்பது முடியாத ஒரு செயலா? நீங்கள் பேசுவது மிக வேடிக்கையாக இருக்கிறது சங்கர்லால்!'” என்றார் மெய்நம்பி. 

“உங்கள் பெண் இறந்துவிட்டதாக நீங்கள் எண்ணி விட்டிருக்கலாம்!” 

“நீங்கள் செல்லுவது அனைத்தும் கற்பனை!” 

“கற்பனையல்ல! நன்றாக நினைவுபடுத்திப்பாருங்கள். உங்கள் மகள், ஒரே மகள் காணாமல்போனாதால் உங்கள் மளைவிக்கு வெறி பிடித்துவிட்டது! நீங்கள் மட்டும் எப்படியோ அவளை மறந்து விடுகிறீர்கள்!” 

“அது எப்படி மறக்கமுடியும்?” என்றார் மெய்நம்பி. சங்கர்லால் மெல்லச் சிரித்தார். ஆனால் அவர் அதற்குப் பதில் சொல்லவில்லை. 

மெய்நம்பி சொன்னார்: “நீங்கள் சொல்வதைப் போலவே வேண்மகள் என்னுடைய மகளாக இருக்கட்டும். அவள் என் மகள் என்பதை எப்படி நான் உறுதிப்படுத்த முடியும்?” 

”அதற்கு நீங்கள் நான் சொல்லுகிறபடி கேட்க வேண்டும். முதலில் இந்த இடத்திலிருந்து நான் போக நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்:” 

“அது முடியாது சங்கர்லால்!அது முடியவே முடியாது!” 

“நான் இங்கே உங்களிடம் சிறைப்பட்டிருப்பதால் உங்களுக்கு என்ன பயன்?” 

”உங்களால் எனக்கு வரும் ஆபத்துக்களிலிருந்து நான் அப்போதுதான் தப்பமுடியும்!” என்று சொல்லிவிட்டு, மெய்நம்பி கேட்டார். “என்னுடைய எஸ்டேட் பொறுப்பாளர் வேலப்பன் என்னைக் கொன்றுவிடுவார் என்று சொன்னீர்களே, அது ஏன்?” 

“உங்களுக்குப்பின் உங்கள் எஸ்டேட்டை அடைய!”

“அது எப்படி முடியும்? என் உயிலில் என்னுடையா எஸ்டேட் எவருக்கு என்பதை இன்னும் நான் எழுதவில்லையே?”

”வேலப்பன் உங்களைக் கொன்றுவிட்டு, பிறகு வேண்மகளை மணந்துகொண்டால், முறைப்படி உங்கள் எஸ்டேட் முழுவதும் வேண்மகளுக்குப் போயலிடும்! பிறகு வேண்மகளின் கணவனாக வேலப்பன் எஸ்டேட் பணத்தைக் கையாள முடியுமா, முடியாதா?” 

“மீண்டும் நீங்கள் ஏதோ ஒரு கற்பனையைச் செய்து கொண்டு பேசுகிறீர்கள் சங்கர்வால்! இந்த வேலப்பன் எப்படியும் இரண்டு நாட்களில் இங்கே வந்துவிடுவார்! அதுவரை நீங்கள் இங்கேயே இருங்கள்!” என்றார் மெய்நம்பி. 

பிறகு மணியடித்து பணியாட்களை வரவழைத்து, சங்கர்லாலை அவருக்கு என்று ஒதுக்கியிருக்கும் தனி அறைக்குக் கொண்டு போகும்படி செய்தார். 

சங்கர்லால் சிறைக்குப் போவதைப்போல், அவருக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு, சிறைக்குச்சென்றார். 

பங்களாவின் பின்புறமாடியில் இருந்த அந்த அறைக்குச் சன்னல்கள் இருந்தபோதிலும் அவைகள் அனைத்தும் வெளிப்புறத்தில் நன்கு மூடித் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தன. 

ஏர்கண்டிஷன் செய்யப்பட்டிருந்த அந்த அறையில் பச்சை விளக்கு ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிருந்தது. பணியாட்கள் கதலைச் சாத்திப் பூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். 

சங்கர்லால் இருந்த அறைக்கு ஒட்டினாற்போல் ஒரு குளிக்கும் அறை இருந்தது. குளிக்கும் அறையில் கண்ணாடி சன்னல் ஒன்று இருந்தது. பேனாக்கத்தியின் உதவியால் அந்தக் கண்ணாடியை அகற்றிவிடமுடியும் என்று எண்ணிய சங்கர்வால், அன்றிரவே அங்கிருந்து தப்ப எண்ணினார். ஆனால், இரவு வந்ததும், தோட்டத்தில் வேட்டைநாய்கள் உலவிக் கொண்டு இருந்ததாலும், அந்த நாய்கள் அடிக்கடி. சுத்திக் கொண்டிருந்ததாலும், அவர் சன்னல் வழியாகக் குதித்து அன்றிரவு போவதைக் கைவிட்டு விட்டார். 

சங்கர்லாலை வென்றுவிட்டதைப்போல் அச்சம் தரும் இரவு சென்று கொண்டிருந்தது! 

அத்தியாயம்-27 

இரவு முழுவதும் வேட்டை நாய்கள் தாங்காது என்று எண்ணிய சங்கர்லால், இரவை வீணாக்க முயற்சி செய்யாமல் பேசாமல் படுத்துத் தூங்கிவிட்டார். 

பின்னிரவில், சரியாக மூன்று மணிக்கு அவர் கைக்கடிகாரத்தில் இருந்த அவாரம் மெல்லஓசை போட்டு அவரை எழுப்பியது. சுவிட்சர்லாந்துக்குச் சங்கர்லால் போய் இருந்த போது அவருக்கு அந்த நாட்டு அரசினர். இந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள். அந்தக் கைக்கடிகாரத்தில் இனிய ஓசை எழுப்பக் கூடிய அலாரம் பொருத்தப்பட்டிருந்தது. அது அவாரம் அடித்தால், கடிகாரத்தைக் கட்டியிருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கும். 

சங்கர்லால் எழுந்தார். குளிக்கும் அறைக்குச் சென்று விளக்கைப் போடாமல் கண்ணாடியின் வழியாகச் சன்னல் ஓரமாக நின்று பார்த்தார். 

பங்களாவில் எல்லாரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம் அது. முன்னிரவில் மிக விழிப்புடன் இருப்பவர்கள் கூட, பின்னிரவில் எப்படியும் களைப்புடன் கண்களை மூடிவிடுவார்கள் என்பது சங்கர்லாலுக்குத் தெரியும். ஆனாலும், மெய்நம்பியின் வேட்டை நாய்களைச் சங்கர்லால் நம்பவில்லை. 

சிறிது நேரம் அவர் பார்த்துக் கொண்டிருந்தார், அந்தக் கண்ணாடியின் வழியாக இரண்டு வேட்டை நாய்கள் தோட்டத்தில் சுற்றிக்கொண்டிருந்தன. விடியற்காலையில் அவைகளைப் பணியாட்கள் கட்டிப்போட்டு விடுவார்கள். அல்லது கூண்டில் அடைத்து விடுவார்கள் என்று எண்ணிய சங்கர்லால், விடியற்காலையில் தப்பிவிட முடிவு செய்தார். ஆனால் அதற்கான ஏற்பாடுகளை அப்போதே அவர் செய்யத் தொடங்கினார். 

இரவு அவருக்கு ஒரு பணியாள் உணவு கொண்டுவந்து வைத்தபோது கொஞ்சம் மிளகுப் பொடி வேண்டும் என்று. அவர் கேட்டிருந்தார். உணவை வைத்து விட்டுச் சென்ற பணியாள் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் மிளகுத் தூளை கொண்டுவந்து வைத்து விட்டுச் சென்றான். அந்த மிளகுத் தூள் மேஜைமேல் அப்படியே இருந்தது. அந்தப்பிளாஸ்டிக் டப்பாவைத்திறந்து, அதிலிருந்த மிளகுத் தூளை அப்படியே ஒரு பொட்டலமாசுக் கட்டி எடுத்துக் கொண்டார் சங்கர்லால், மிளகுத்தூள் பொட்டலம் அவருடைய கால் சட்டைப் பைக்குள் இப்போது இருந்தது. 

அடுத்தபடியாக, அவர் தனது சட்டைப் பையிலிருந்து சாவிக் கொத்தை எடுத்தார். அதில் மெல்லிய பேனாக்கத்தி ஒன்று தொங்கியது. பேனாக்கத்தியின் நாக்கை வெளியே இழுத்து, அதன் உதவியால் ஐந்தே நிமிஷங்களில் குளிக்கும் அறையின் சன்னல் கதவில் இருந்த சுண்ணாடியைப் பெயர்த்து வைத்துவிட்டார்! 

இருள் நழுவிக்கொண்டிருந்தது. 

சங்கர்லால் பேசாமல் வந்து அறையில் விளக்கைப் போடாமல் உட்கார்ந்துகொண்டு ஏதாவது ஓசை கேட்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

சரியாக நான்கு மணிக்குப் பாவ்காரன் வந்து பணியாட்களை வங்காள மொழியில் சுத்தி அழைக்கும் ஓசை கேட்டது. அப்போது வேட்டை நாய்கள் சுத்தின. பணியாட்கள் வேட்டைநாய்களை இழுத்துக் கட்டிப் போட்டுவிட்டு, பால் கறப்பதைப் பங்களா வாயிலில் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தார்கள். சிறிதுநேரத்தில் பால்காரன் பாலைக் கொடுத்துவிட்டு. அவன் ஓட்டிவந்த இருபசுக்களையும் இழுத்துக்கொண்டு சென்றான். 

பத்து நிமிஷங்கள் கழிந்தன. 

சங்கர்லால் மெல்லச் சன்னல் வழியாகக் குதித்தார். அவர் குதித்த இடம். மேல் மாடியின் விளிம்பு, அங்கேயிருந்து அவர் சுவர் ஓரமாசு நடத்து, வாய்ப்பான ஓர் இடத்தில், பங்களாவின் பின்புறத்தில் தண்ணீர்க் குழாய் ஒன்றைப் பிடித்துக் கீழே இறங்கினார். பங்களாவின் பின் புறம் இருந்த மதில் சுவர் சற்று உயரமாக இருந்தது. மதில் சுவர் மீது நின்றார். பிறகு, அங்கிருந்து, மதில் சுவருக்கு அப்பால் குதித்தார். 

அந்தப் பங்களாவுக்குப் பக்கத்தில் வேறு பங்களாக்களோ, வீடுகளோ எதுவுமே இல்லை. மெய்நம்பியின் பங்களா மட்டும் தனித்து நின்ற அந்த இடத்துக்குப் பால்காரன் எப்படி வந்தான் என்று சிந்தித்துப் பார்த்தார் சங்கர்லால், பங்களாவுக்கு வேறு பக்கத்தில், சற்றுத் தொலைவில் சில குடிசைகள் இருந்ததைச் சங்கர்லால் பார்த்தது அவர் நினைவுக்கு வந்தது. அந்தக் குடிசைகளில் ஒன்றிலிருந்துதான் பால்காரன் வந்திருப்பான் என்று எண்ணினார் அவர், ஆகையால், அந்தக் குடிசைகள் இருந்த திக்கில் செல்லாமல், வேறு திக்கில் நடந்தார் அவர். 

‘விடியும் நேரத்தில் தமக்குப் பணியாள் ஒருவன் தேநீர் கொண்டு வருவான். அப்போது அவனுக்கு உண்மை தெரித்து விடும். நான் நகரத்தை அடைவதற்குள் நாய்களின் உதவியுடன் என்னைப்பிடிக்க ஆட்களை அனுப்புவார் மெய்நம்பி’ என்று எண்ணிய சங்கர்லால் ஓர் இடத்தில் நின்றார். கால் சட்டைப் பையிலிருந்த மிளகுந்தூள் பொட்டலத்தை எடுத் தார், கால் சட்டையின் மடிப்புகளில், இரண்டு கால்களி லும் அந்த மிளகுத் தூளைக் கொட்டினார். பிறகு, அவர் பாட்டிற்கு விரைவாக நடக்கத் தொடங்கினார். 

மிகத் தொலையில், கல்கத்தா நகரத்து விளக்குகள் பளிச்சென்று எரிந்துகொண்டிருந்தன. கல்கத்தாவை அடைய எப்படியும் குறைந்தது ஒரு மணி நேரமாவது பிடிக்கும் என்று எண்ணியது அவர் மனம், அவ்வளவு தொலைவு இருந்தது. 

கரடுமாடான வழியில் அவர் விரைந்து சென்றார். சாலையில் சென்றால் மெய்நம்பியின் பணியாட்கள் பிடித்து விடுவார்கள் என்று எண்ணிக் குறுக்கு வழியில், முட்செடிகளும், கற்களும் நிறைந்த வழியில் நடந்தார், அவர் நடந்த போது அவருடைய கால்சட்டையின் மடிப்புகளிலிருந்து விழுந்த மிளகுத்தூன் அவர் நடந்த வழியெல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் தெறியது. ‘வேட்டை நாய்கள் நம்மைப் பிடிக்க வந்தாலும், இந்த மிளகுத்தூள் நான் சென்ற வழியை நாய்கள் மோப்பம் பிடிக்க முடியாதபடி தடுக்கும்!’ என்று எண்ணியது அவர் மனம். 

அவர் நீண்ட தொலைவு வந்துவிட்டார். ஆனாலும் பொழுது விடியவில்லை. அவர் திரும்பிப் பார்த்தபோது. மெய்நம்பியின் பங்களாவில் விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தன. ஒரு சில விநாடிகளில், வேட்டை நாய்கள் குரைக்கும் ஓசை கேட்டது! 

வேட்டை நாய்கள் சங்கர்லால் சென்ற வழியே ஓடி வந்தன. அவைகளுக்குப் பின்னால் இரண்டு பணியாட்கள் ஓடி வந்தார்கள்! 

சங்காலால் சுற்று விரைந்து ஓடினார். மீண்டும் அவர் மெய்நம்பியிடம் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. சற்றுத் தொலைவு நடந்ததும் ஒரு சிறிய ஆறு குறுக்கிட்டது. அந்த ஆற்றின் ஓரமாக இருந்த ஒரு புதரில் சட்டென்று ஒளிந்து கொண்டார் சங்கர்லால்.

அப்போதுதான் மெல்ல விடியத் தொடங்கியது. சங்கர்லால் புதரின் மறைவில் உட்கார்ந்தபடியே பார்த்தார். நாய்கள் அவர் வந்த வழியே சிறிது தொலைவு வந்தன. பிறகு மிளகுத் தூளின் வாசனை பட்ட இடத்திலிருந்து அவை மோப்பத்தை விட்டுவிட்டுச் சுற்றி சுற்றி வந்தனர். 

சங்கர்லால் சென்ற வழியை நாய்கள் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டதால், பணியாட்கள் நாய்களை விரட்டியபடி ஆற்றோரத்தை நோகின் நடந்தார்கள். வேட்டை நாய்கள் இரண்டும் இங்கும் அங்கும் முகர்ந்து பார்த்தபடி ஆற்றோரத்து நோக்கிப் பாய்ந்து வந்தன ஆனால் சங்கர்லாவ் ஒளிந்திருந்த இடத்தைக் கண்டு பிடிக்கவில்லை. 

மெய்நம்பியின் பணியாட்களும் நாய்களும் ஆற்றோரமாகவே தேடிக்கொண்டு வேறு திக்கில் சென்றார்கள். சிறிது நேரத்தில் பொழுது விடிந்துவிட்டது. 

அவர்கள் மறைந்ததும் சங்கர்லால் மெல்ல எழுத்து நடந்தார். ஆற்றோரமாக வந்த சிறிய படகு ஒன்றை நிறுத்தி, அதில் ஏறி மறு கரையை அடைந்தார். பிறகு அவர் கல்கத்தா நகரை அடைந்ததும், வாடகைக் கார் ஒன்றைப் பிடித்துக் கமிஷனரின் அலுவலகத்துக்குச் சென்றார். 

கமிஷனரின் அலுவவகத்தில் அவருக்கு உடனடியாகல் சில வேலைகள் இருந்தன. 

அத்தியாயம்-28 

சங்கர்வாலைச் கண்டதுமே அவரை அடையாளம் கண்டு கொண்ட கான்ஸ்டபிள் ஒருவன் சல்யூட் அடித்து நின்றான். அவன்தான் கமிஷனரின் அலுவலகத்துக்கு முன் காவலுக்கு நின்றவன். 

“சங்கர்லால் உள்ளே நுழைந்தபோது சற்றும் எதிர் பாராதவிதமாகக் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தார்! காலை ஆறு மணிக்குக் கமிஷனர் அலுவலகத்தில் இருப்பார் என்று சங்கர்லால் எண்ணவே இல்லை. 

இரவு முழுவதும் தூங்காதவரைப்போல் காணப்பட்டார் கமிஷனர். அவர் சங்கர்லாலைக் கண்டதும் தன்னுடைய கண்களை நம்பமுடியாமல், “சங்கர்லால்! நீங்களா எங்கே போயிருந்தீர்கள்?” என்று கேட்டு விட்டு, சங்கர்லாலைக் கை குலுக்கி வரவேற்றார். 

“மெய்நம்பியைக் கண்டு பேசிவிட்டு அவரிடமிருந்து தப்பி ஓடி வருகிறேன்!” என்றார்.சங்கர்லால், 

“நீங்கள் விமானத்தில் வந்து இறங்குவீர்கள் என்று எண்ணி, டம்டம் விமான நிலையத்துக்கு வந்து நானே காத்திருத்தேன் நீங்கள் என்னை ஏமாற்றிலிட்டு விமானப் படைக்கு உரிமையுடைய இராணுவ விமான நிலையத்தில் வந்து இறங்கி மறைந்து விட்டீர்கள்? உங்களைத் தேட நான் எவ்வளவு பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் தெரியுமா?” என்றார் கமிஷனர். 

“என்னைப் பற்றிய செய்தி தெரிகிறதா என்று கண்டு பிடிக்கவா அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் இந்த நேரத்தில்!” என்றார் சங்கர்லால். 

”இல்லை! நேற்றிரவு ஒரு புதுக்கொலை வழக்கு வந்தது. இந்தப் புதுக்கொலை வழக்கு என் தூக்கத்தையோ கெடுத்து விட்டது!” என்றார் கமிஷனர், 

“அந்தக் கொலை வழக்கைப்பற்றி இப்போது துன்பம் கொள்ளாதீர்கள். உடனே நீங்கள் இந்த மெய்நம்பியின் பங்களாவுக்குக் காவல் போடவேண்டும். உண்மையைச் சொன்னால், மெய்நம்பியைப் பங்களாவிலேயே காவலில் வைக்கவேண்டும்.” என்றார் சங்கர்லால். 

“எங்கே இருக்கிறார் மெய்நம்பி?” என்று கேட்டார் கமிஷனர். 

உடனே சங்கர்லால், கமிஷனரின் அறையில், கமிஷனரின் நாற்காலிக்குப் பின்னால் சுவரில் மாட்டியிருந்த கல்கத்தா நகரின் படத்தைப் பார்த்தார். அவர் அதன் பக்கத்தில் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டி, “இங்கேதான் மெய்நம்பியின் பங்களா இருக்கிறது. இதில்தான் இவர் மறைந்து வாழ்கிறார்” என்றார். 

கமிஷனர் வியப்புடன் பார்த்தார். “அந்தப் பங்களா மெய்நம்பியினுடையதா? நம்பவே முடியவில்லையே. அவர் பெயரில் அது இருப்பதாகத் தெரியவில்லை.” என்றார், 

“அதைப்பற்றிப் பிறகு ஆராய்ந்து கொள்ளலாம். கொஞ்சநேரம் கிடைத்தாலும் இந்த மெய்நம்பி வேறொரு இடத்துக்கு நழுவி விடுவார்!” என்றார் சங்கர்லால், 

கமிஷனர் உடனே தொலைபேசியில் இரண்டு மூன்று பேர்களுடன் சிறிதுநேரம் பேசினார். பிறகு, ”இன்னும் பத்து நிமிஷங்களில் மெய்நம்பியின் பங்களாவைக் காவலில் வைத்துவிட ஏற்பாடு செய்து விட்டேன்!” என்றார். 

சங்கர்லால் மெல்லச் சிரித்தார்: “முதலில் நான் குளிக்க வேண்டும். வேறு உடைகள் வேண்டும். என்னுடைய பெட்டி மெய்நம்பியிடம் இருக்கிறது. அதைக் கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். 

கமிஷனர் மீண்டும் தொலைபேசியை எடுத்தார். வங்காள மொழியில் சிறிது நேரம் பேசிவிட்டுத் தொலைபேசியை வைத்தார். “உங்களுக்காக ஓட்டலில் தங்க ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். நீங்கள் ஓட்டலுக்குச் சென்று குளிப்பதற்குள் உங்கள் பெட்டி உங்களிடம் வந்து சேர்ந்துவிடும்!” என்றார். 

“நன்றி”. 

தமிஷனர், கான்ஸ்டபிள் ஒருவனை அழைத்துத் தேநீர் கொண்டு வரும்படி பொன்னார். சிறிது நேரத்தில் தேநீர் வந்தது. இருவரும் அதைப் பருகியபடி பேசினார்சுன். 

கமிஷனர் சொன்னார்: “இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் இல்லை. இரவு பத்து மணிக்குக் கல்கத்தாவுக்கு வந்து சேர்ந்த புகைவண்டி ஒன்றில் ஒரு கொலை நடந்து விட்டது. அதைப் பற்றிக் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.” 

“புகைவண்டியில் கொலை செய்வது இப்போது எளிதாகி விட்டது” என்றார் சங்காவால் 

“இந்தக் கொலை வழக்கு மிக வேடிக்கையாக இருக்கிறது. முதல் வகுப்பில் இரண்டு பேர்கள் வந்திருக்கிறார்.கள், இந்த இரண்டு பேர்களைத் தவிர அதில் வேறு எவரும் இல்லை. கல்கத்தாவுக்குச் சிறிது தொலைவில் கதவைத் திறந்து கொண்டு ஒருவன் விழுந்தான். இதைப் பார்த்த ஒருவர் புகைவண்டியை நிறுத்தினார். புகைவண்டியை நிறுத்தியவர் பக்கத்துப் பெட்டியில் இருந்தார், புகைவண்டி நின்றது. கீழே விழுந்த மனிதன் இறந்து கிடத்தான். முதல் வகுப்புப் பெட்டியில் இறந்தவனுடன் வந்த மற்றொரு மனிதனைச் காணவில்லை”. 

“இறந்தவர் யார்?” 

“அவர் ஒரு விமானி. விமானியின் லைசென்ஸ் ஒன்று அவருடைய சட்டைப் பையில் இருந்தது. புகை வண்டியில் அந்த முதல் வகுப்புப் பெட்டியில் பெட்டி படுக்கை ஒன்றும் இல்லை. எல்லாம் எப்படி மறைத்துவிட்டன என்பது புரியவில்லை”. 

இதைக் கேட்டதும் சங்கர்லால் நிமிர்ந்து உட்கார்ந்தார், 

விமானி என்றதும் சங்கர்லாலுக்கு ஒரே ஒரு விமானியின் நினைவுதான் வந்தது அவர் மனத்தின் தோன்றிய விமானி. வேலப்பனுடன் தப்பிச் சென்றுவிட்ட விமானி! இறந்து கிடப்பது இந்த விமானியாக இருப்பாரோ என்ற ஐயம் சங்கர்லாலுக்கு எழுந்தது. 

“இறந்து கிடக்கும் இந்த விமானிவீன் பிணம் இப்போது எங்கே இருக்கிறது?” என்று கேட்டார் சங்கர்லால்.

கமிஷனர் கூறினார்: “விமானியின் பிணம் மருத்துவ விடுதியில் இருக்கிறது. பிணச் சோதனைக்காக மருத்துவ விடுதிக்கு அனுப்பியிருக்கிறேன்” 

“இறந்த விமானியை நான் பார்க்க வேண்டும்” என்றார் சங்கர்வால். 

“எப்போது வேண்டுமானாலும் புறப்படலாம்” என்றார் கமிஷனர் மிக ஆவலுடன். அவருக்கு எப்படியாவது இந்த வழக்கை சங்கர்லாலிடம் தள்ளிவிட்டால் போதும் என்றிருந்தது! 

“இப்போது நான் ஓட்டலுக்குப் போகிறேன். ஓட்டலில் குளித்து விட்டு, உடையை மாற்றிக்கொண்டு சரியாகப் பதினொரு மணிக்குப் புறப்பட முன்னேற்பாட்டுடன் இருக்கிறேன்” என்றார் சங்கர்லால்.

“ஆகட்டும் சங்கர்லால், நான் ஐந்து நிமிஷங்கள் முன்னதாகவே வருகிறேன்” என்றார் சுமிஷனர். 

”எதைப்பற்றியோ நீங்கள் மிக ஆழமாகச் சிந்திக்கிறீர்கள்போல் இருக்கிறது” என்றார் கமிஷனர். 

“ஆமாம். இந்த மெய்நம்பியைப்பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.” 

“மெய்நம்பியைப்பற்றித் துன்பம் கொள்ளாதீர்கள். அவர் இனிச் சிறையில் இருப்பவரைப்போலத்தான்! நமது போலீசாரை ஒரு தடவை ஏமாற்றலாம். இரண்டு தடவை ஏமாற்றமுடியாது!” 

”அதற்காகச் சொல்லவில்லை. நாம் மருத்துவ விடுதிக்குப் போகும்போது, அதே நேரத்தில் இந்த மெய்நம்பியையும் மருத்துவ விடுதிக்கு வரும்படி செய்ய வேண்டும்!”. 

”எதற்காகச் சங்கர்லால்?” 

“இறந்து கிடக்கும் விமானியை அடையாளம் கண்டு பிடிக்க!” 

“விமானியை மெய்நம்பிக்குத் தெரியும் என்கிறீர்களா?” என்றார் சுமிஷனர். 

“தெரிந்திருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் மெய்நம்பி மருத்துவ விடுதிக்கு வருவது நல்லது”. 

*”அப்படியானால் அவரை அழைத்துவர நான் ஏற்பாடு செய்கிறேன்” என்றார் கமிஷனர். பிறகு, மீண்டும் அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வங்காள மொழியில் சிறிதுநேரம் பேசினார். பேசி முடித்து விட்டுத் தொலை பேசியை வைத்தார் அவர். 

சங்கர்லால் மெல்லச் சிரித்தபடி ஓட்டலுக்குப் போகப் புறப்பட்டார். 

கமிஷனர் வெளியில் வந்து, அவருடைய காரில் சங்கர்லாலை ஏற்றி வழியனுப்பி வைத்தார். சங்கர்லாலுடன் எளிய உடையில் இருந்த கான்ஸ்டபிள்களில் இரண்டு பேர்சுள் போனார்கள். 

கார் கல்கத்தாவின் சிறந்த ஓட்டல் ஒன்றை நோக்கிப் பறந்தது. 

அத்தியாயம்-29 

கல்கத்தாவிலேயே மிகச் சிறந்த ஓட்டலாகிய வீனஷ் ஓட்டலின் தோட்டத்தின் உள்ளே சென்ற அழகிய பாதையில் வளைந்து வளைந்து சென்றது கார். 

சங்கர்லாலுக்கு ஓட்டலின் பக்கவாட்டில் இருந்த தனி வீட்டைப்போன்ற காட்டேஜ் ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த இடம் சங்கர்லாலுக்கு மிகப் பிடித்திருந்தது. அதைப்போன்ற தனி வீடுகள் தோட்டத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிறையக் கட்டிவிடப்பட்டிருந்தன. 

சங்கர்லால் உள்ளே சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த போதே வெளியில் மற்றொரு கார் வந்து நின்றது. அதிலிருந்து சங்கர்லாலின் பெட்டி வந்து இறங்கியது. மெய்நம்பியின் பங்களாவிலிருந்து கொண்டு வரப்பட்ட அந்தப் பெட்டியைக் கான்ஸ்டபின் ஒருவன் கொண்டு வந்து மேசை மீது வைத்து விட்டு விடைபெற்றுச் சென்றான். 

சங்கர்லால், கமிஷனர் அனுப்பிய காரை அனுப்பி வீட்டு பெட்டியைத் திறந்தார். 

பெட்டிக்குள் இருந்த அவருடைய உடைகள் கலைக்கப் பட்டிருந்தன! மெய்நம்பியோ, அவரைச் சேர்ந்தவர்களோ அவர் பெட்டியைத் திறந்து சோதனை போட்டுப் பார்த்திருக்கிறார்கள் என்பதை அறிந்ததும். அவர் முகத்தில் சினம் படர்ந்தது. ஆனால், சில விநாடிகளில் அவருக்கு ஏற்பட்ட அந்த சினம் சிரிப்பாக மாறியது! 

பெட்டியில் எதுவும் காணாமல் போய்விடவில்லை. சங்கர்லால், எல்லாம் அப்படியே இருந்தன. மெல்லப் புரட்டிப் பெட்டியில் இருந்தவைகளையெல்லாம் ஒரு தடவை பார்த்து விட்டுப் பெட்டியை மூடினார். பிறகு குளிக்கப் போனார்.

அவர் குளித்துவிட்டு வருவதற்குள் அவர் அறைச்கே பலகாரங்கள் வந்தன. சங்கர்லால் கமிஷனரின் ஏற்பாடுகளை எண்ணிப் பாராட்டியபடி, உடைகளை அணிந்து கொண்டு பலகாரங்களைச் சாப்பிட்டார். பிறகு, அந்த அறையில் இருந்த தினசரிப் பத்திரிகைகளைப் புரட்டினார். மணி பத்துத்தான் ஆகியிருந்தது! 

சங்கரிலால், பத்திரிகைகளைப் போட்டுவிட்டு, சன்னல் பக்கமாகப் பார்த்தார். அவர் இருந்த அந்தக் காட்டேஜின் வெளியே சற்றுத் தொலைவில், அவருடன் காரில் வந்த கான்ஸ்டபிள் ஒருவன் அங்கு உலவிக்கொண்டிருந்தான். அவர் மனத்திற்குள் சிரித்துக்கொண்டார். பிறகு, பின்பக்கம மெல்ல எட்டிப் பார்த்தார். காட்டேஜின் பின்புறம் மற்றொருவன் இப்படியும் அப்படியும் உலவிக் கொண்டிருந்தான். சங்கர்லாலுக்கு இன்னும் சிரிப்பு மிகுதியாயிற்று. 

சங்கர்லால் உள்ளே போய் உட்கார்ந்து, சிறிது நேரம் சிந்திக்கத் தொடங்கினார். “இந்த விமானி உண்மையில் வேலப்பனுடன் தப்பிச் சென்றவராக இருந்தாலும் அவரை எனக்குத் தெரியாது! உண்மையில் இந்த விமானியையும் நான் சரியாகப் பார்க்கவில்லை; வேலப்பனையும் பார்க்கவில்லை. செல்லையா இருட்டில் நடந்து போய். விமானத்தில் வந்து இறங்கிய இந்த வேலப்பனிடமும் விமானியிடமும் பேசியபோது மூன்று உருவங்கள்தான் தெரிந்தன! அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நான் வெளிச்சத்தில் பார்க்கவில்லை! இறந்து கிடக்கும் விமானியைக் கண்டதும் மெய்நம்பி என்ன சொல்கிறார் பார்க்கலாம்” என்று எண்ணியது அவர் மனம். 

கடிகாரம் நேரத்தைத் தள்ளிக்கொண்டிருந்தது. சரியாக 10-55-க்குக் கமிஷனரின் கார், சங்கர்லால் இருந்த இடத்துக்கு எதிரே வந்து நின்றது. அதிலிருந்து சுமிஷனர் இறங்கி உள்ளே வந்தார், சங்கர்லால் அவரை உட்காரும். படி சாடை காட்டினார். 

கமிஷனர் உட்கார்ந்தார்: “இந்த இடம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா சங்கர்லால்?” என்று கேட்டார் அவர். 

”மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் எனக்குக் காவலாக இரண்டு பேர்களை இங்கே போட்டிருக்கிறீர்களே? என் காவலுக்கு ஒருவர் இருந்தால் போதாதா?” என்று கேட்டார் சங்கர்ஜால், 

“இந்த ஊரில் சற்றுப் பாதுகாப்பு மிகுதியாக இருப்பது நல்லது – அதனால்தான் இரண்டு பேர்களைப் போட்டேன்!” என்றார் கமிஷனர். 

“இப்போது நாம் புறப்படுவோமா?” என்றார் கமிஷனர். 

சங்கர்லால் கழுத்துப் பட்டையைத் தளர்த்தி விட்டுக் கொண்டு, ஓசை இல்லாத கிரேப் ஷூக்களுடன் மெல்ல நடந்தார். 

காரில் அவர்கள் இருவரும் ஏறியதும், அது மருத்துவ விடுதியை நோக்கி விரைந்தது. 

கல்கத்தாவில் மிகப் பெரிய அரசாங்க மருத்துவ விடுதியை அடைந்தபோது அவர்கள் இருவருக்கும் முன் மெய்நம்பி அங்கே வந்து உட்கார்ந்திருந்தார். அவர் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு, அவருக்கு இருந்த சினத்தைச் சிகரெட்டின் மீது காண்பித்துப் புகையை ஊதித் தள்ளிக்கொண்டிருந்தார். 

சங்கர்லால் அவன்முன் சென்று நின்று கேலியாகச் சிரிந்தார். 

”சங்கர்லால், உங்களை தான் சும்மா விடப்போவதில்லை! உங்கள் மீது நான் வழக்குப் போடப் போகிறேன்” என்று கத்தினார் மெய்நம்பி!. 

“ஏன் மெய்நம்பி?” என்றார் சங்கர்லால்! 

“என்னைக் கைதியைப்போல் நடத்துவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? நான் ஒன்றும் தவறு செய்யவில்லை ஆனாலும் நீங்கள் பங்களாவில் காவலில் வைத்திருக்கிறீர்கள்,” 

“நீங்கள் என்னை நேற்றுக் கடத்திச்சென்று காவலில் வைத்ததற்காக உங்களைப் பத்து ஆண்டுகள் என்னால் சிறையில் தள்ளமுடியும்! ஆனாலும் நான் அதை மறந்து லிட்டேன்!”

”நீங்கள் சொல்லுவதை நீதிமன்றம் ஒப்பவேண்டாமா? நீங்களே எங்கள் பங்களாவுக்கு விருந்தினராக வந்து தங்கியதை எடுத்துச் சொல்லி, என்னை விடுவிக்க ஏகப்பட்ட பேர்கள் காத்திருக்கிறார்கள்!” 

“இப்போது அதைப்பற்றிப் பேச நான் உங்களை அழழக்கவில்லை! என்னுடன் வாருங்கள்!” என்று அவர் கையைப் பிடித்து இழுத்தார் சங்கர்வால், 

மெய்நம்பி அவர் பிடியை உதறிக்கொண்டு, சங்கர்லாலுடன் நடந்தார் சினத்துடன். 

மருந்துவ விடுதியில், இரும்பால் செய்யப்பட்ட நிலைப் பேழை ஒன்று மிகப் பெரியதாக இருந்தது அதில், மேசை அறைகளைப்போல் மிகப்பெரிய அறைகள் பத்து இருந்தன. அதில் ஒன்றை மருத்துவ விடுதியில் இருந்த வெள்ளை உடை அணிந்த டாக்டர் ஒருவர் இழுத்துவிட்டார். அந்த அறையில், பிணம் ஒன்று இருந்தது. அதன்மீது வெள்ளைத் துணி ஒன்று போர்த்தி இருந்தது. டாக்டர் அதன் முகத்தை மூடியிருந்த துணியை விலக்கினார். 

அந்த முகத்தைப் பார்த்ததும், மெய்நம்பியின் வாயில் இருந்த சிகரெட் கீழே விழுந்தது. அவர் மிகவும் அயர்ந்து நின்றார். 

சங்கர்லாலும், கமிஷனரும், மெய்நம்பியையும் அந்த முகத்தையும் மாறிமாறிப் பார்த்தார்கள். 

“என்ன மெய்நம்பி? யார் இவர்?” என்று கேட்டார் சங்கர்லால், 

”இவர்தான் என்னுடைய விமானி. இவர் பெயர். பூவேந்தன்!” என்றார் மெய் நம்பி 

“இவரும் வேலப்பனும்தானே விமானத்தில் வந்து உங்களைக் கல்கத்தாவிலிருந்து அழைத்துப் போவதாக இருந்தது?” என்று கேட்டார் சங்கர்லால். 

“ஆமாம்'” என்றார் மெய்நம்பி. பிறகு அவர், “இவர் எப்படி இறந்தார்?” என்று கேட்டார். 

சங்கர்லால் மெல்ல டாக்டரைப் பார்த்தார். 

டாக்டர் சொன்னார்: “இவர் கழுத்தில் யாரோ துணியாலோ. கழுத்துப் பட்டையாலோ இறுக்கிக் கட்டிக் கொன்றிருக்கிறார்கள்; பிணச்சோதனையின் முடிவில் தெளிவாக இதை நான் எழுதியிருக்கிறேன்.” 

இப்படி அவர் சொல்லிவிட்டு, சட்டைப் பையிலிருந்த பிணச் சோதனையின் முடிவை எழுதியிருந்த காகிதத்தை எடுத்துக் கொடுத்தார். சங்கர்லால் அதைப் பார்த்துவிட்டு, கமிஷனரிடம் கொடுத்துவிட்டார். 

“யார் இவரைக் கொன்றது?” என்று கேட்டார் மெய்நம்பி. 

”இவருடன் தப்பி வந்தவர் வேலப்பன்தான்! வேலப்பன்தான் இவரைக் கொன்றிருக்கிறார். இந்த வேலப்பனை இனிக்கண்டுபிடிப்பது எளிய செயல் அல்ல? அடுத்தபடியாக அவர் யாரைக் கொல்லப் போகிறார் என்று பார்த்துத்தான் அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முடியும்!” என்றார் சங்காலால். 

சங்கர்லால் சொன்னதைக் கேட்டதும் மெய்தம்பியின் உடல் சற்று நடுங்கியது. அது கொதிப்பு ஏற்பட்டதால் நடுங்கியதா, அச்சம் ஏற்பட்டதால் நடுங்கியதா என்பதைச் சங்கர்லால் சிந்தித்துக் கொண்டிருந்தார். 

அப்போது கமிஷனர்மெய்நம்பியைப் பார்த்துச் சொன்னார்: “வேலப்பனை நாங்கள் பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். இந்த வேலப்பனால் இனி ஆபத்துக்கள் மிகுதி என்பதை நீங்களும் உணருகிறீர்கள் அல்லவா? ஆகையால், வேலப்பன் எங்கே மறைந்திருப்பார் என்று உங்களால் ஊகம் செய்ய முடிந்தால், எங்களிடம் சொல்லுங்கள்!”

மெய்ரும்பி சொன்னார்: ”வேலப்பனைக் கண்டுபிடித்து வர என்னுடைய ஆட்களில் இருவரை அனுப்பியிருக்கிறேன், அது சங்கர்வாலுக்கு தெரியும். வேலப்பனைப் பிடித்துவிட்டால், நானே உங்களுடன் தொடர்பு கொள்ளுகிறேன்”.

சங்கர்லால் மெல்ல சிரித்தார். மெய்நம்பி சொன்னதை அவர் நம்பாததைப் போலிருந்தது. 

மெய்நம்பி சங்கர்வாலைப் பார்த்து, “நான் புறப்படுகிறேன், என்னிடம் நீங்கள் கேட்க வேண்டியது இனி ஒன்றும் இல்லை என்று நம்புகிறேன்” என்றார். 

“நீங்கள் போகலாம்” என்றார் சங்கர்லால். 

மெய்தம்பி போகப் புறப்பட்டபோது, சங்கர்லால் சொன்னார்: “உங்கள் மனத்தில் உள்ள எல்லா உண்மைகளை எப்போதாவது என்னிடம் சொல்லவேண்டும் என்று தோன்றினால், தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.வீனஸ் ஓட்டலில் நான் தங்கியிருக்கிறேன்”

மெய்தம்பி ஒன்றும் பேசாமல் போய்விட்டார்.

மெய்நம்பியுடன் வந்த கான்ஸ்டபிள்கள் அவரைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றார்கள். மெய்நம்பி மறைந்ததும், கமிஷனர் சங்கர்லாலைப் பார்த்து, “வேலப்பன் இருக்குமிடம் உண்மையில் மெய்நம்பிக்குத் தெரியாது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?” என்றார். 

“ஆமாம்”. 

“மெய்நம்பியின் ஆட்கள் வேலப்பனைக் கண்டுபிடிப்பார்களா?” 

”அவர்கள் வேலப்பனைக் கண்டுபிடிப்பார்களா இல்லையா என்று இப்போது நாம் ஊகம் செய்வது தவறு. பால்துரையும் நஞ்சப்பனும் மெய்நம்பிக்குக் கைகளைப் போன்றவர்கள். இந்த இருவரும் லேலப்பனைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வேலப்பனைக் கண்டுபிடித்தால், வேலப்பனை உயிருடன் விட்டுவைக்கமாட்டார்கள் என்பது என் கருத்து!” என்றார் சங்கர்லால். 

“அப்படியானால், வேலப்பனைக் கொன்றுவிடும்படி மெய்நம்பி கட்டளையிட்டிருப்பார் என்கிறீர்களா?” 

“இருக்கலாம்” என்றார் சங்கர்லால், பிறகு அவர். சொன்னார்: “வேலப்பனை மெய்நம்பியின் ஆட்கள் கண்டு பிடிப்பதற்கு முன் நாம் வேலப்பனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.” 

கமிஷனர் உடனே சொன்னார்; “கொலை நடந்த இடத்திலிருந்து சுற்றுப்புறத்தில் நான்கைந்து ஊர்கள் உள்ளன. அந்த ஊர்களுக்கெல்லாம் கொலையைப்பற்றிச் செய்தி அனுப்பிவிட்டு, புதிய மனிதன் எவனாவது வந்தால் கவனிக்கும்படி ரேடியோவின் உதவியுடன் செய்தி அனுப்பியிருக்கிறேன்! எல்லா போலீஸ் ஸ்டேஷன்களும் விழிப்புடன் வேலை செய்யும். ஒவ்வொரு ஊரிலும், புதிய மனிதர்கள் யாராவது வந்தால் அவர்களைப்பற்றிய உண்மைகளை அறிய போலீன் இலாகாவில் உள்ளவர்கள் முயற்சி செய்வார்கள்!” 

சங்கர்லால் கமிஷனரைப் பார்த்து, “வீனஸ் ஓட்டலுக்கு உடனே போவோம். அங்கே உட்கார்ந்து சிறிது நேரம் பேசுவோம்” என்றார். 

“ஆகட்டும் சங்கர்லால்” என்றார் கமிஷனர். 

கமிஷனரும் சங்கர்லாலும் ஓட்டலுக்கு வந்தார்கள். சங்கர்லால் ஒரு மேசையின்முன் உட்கார்ந்து, கமிஷனரையும் உட்காரும்படி சொன்னார். மேசையின் மறுபக்கம் கமிஷனர் உட்கார்ந்தார். 

சங்கர்லால் ஒரு காகிதத்தில் கொலை நடந்த இடத்தையும், அங்கிருந்து கல்கத்தா எவ்வளவு தொலைவு, மற்ற ஊர்கள் எவ்வளவு தொலைவு. எங்கெங்கே எந்தெந்த ஊர்கள் உள்ளன என்பதையும் படம் போட்டுக் கொடுக்கும்படி சொன்னார். 

கமிஷனர் மிக அமைதியுடன் நீண்டநேரம் சிந்தித்துப் படம் வரைந்தார். கல்கத்தாவிற்கு வரும் புகைவண்டிப் பாதையையும் வரைந்து, விமானி பூவேந்தனின் பிணம் புகைவண்டியிலிருந்து விழுந்த இடத்தையும் குறிப்பிட்டு. சுற்றியுள்ள ஊர்களின் பெயர்களையும் இடங்களையும் வரைந்தார். புகைவண்டிப் பானதயிலிருந்து ஒவ்வொரு ஊரும் எவ்வளவு தொலைவு என்பதையும் அதில் குறிப்பிட்டார். 

நீண்டநேரம் அந்தப் படத்தை உற்றுப்பார்த்த சங்கர்லால், “சுற்றிலும் உள்ள இந்த ஊர்கள் எல்லாம் மிகச் சிறிய ஊர்கள் அல்லவா?” என்றார். 

“ஆமாம் இந்த ஊர்களில் எங்கே வேலப்பன் ஒளிந்திருந்தாலும் போலீஸார் மிக எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்!” என்றார் கமிஷனர். 

“வேலப்பன் மிகச் சிந்திப்பவர், மூளையுள்ளவர்! அவ்வளவு எளிதில் அவர் போலீசாரிடம் சிக்கிவிடமாட்டார். அவர் மீண்டும் புகைவண்டியைப் பயன்படுத்தமாட்டார். லாரியிலோ, அல்லது மற்றவர்களுடைய காரிலோ சாலையின் வழியாகக் கல்கத்தாவுக்கு வந்துவிட்டிருப்பார் என்று நம்புகிறேன்! ஆகையால், கல்கத்தாவில் உள்ள ஒவ்வொரு ஓட்டலையும் வலைபோட்டு அரித்துவிடவேண் டும்! அதற்கு ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!” 

“ஆகட்டும்” என்றார் கமிஷனர். 

“நீங்கள் இன்னொரு உதவி செய்யவேண்டும்” என்றார் சங்கர்லால். 

கமிஷனர் சிரித்தார். “நீங்கள் அல்லவா இப்போது எனக்கு உதவி செய்துவருகிறீர்கள்” என்று சொன்னார் கமிஷனர். 

சங்கர்வால் சிரித்துக்கொண்டே, “கல்கத்தாவில் உள்ள மூளை நிபுணர்களின் பட்டியல் ஒன்று வேண்டும்” என்றார். 

கமிஷனர் உடனே மேசைமீது இருந்த காகிதத்தை எடுத்து அதன் பின்னாலேயே வரிசையாக நான்கு பெயர்களை எழுதினார், “மூளை விஷயத்தில் இந்த நான்கு பேர்கள்தான் மிகப் பெரிய டாக்டர்கள், இவர்களைத் தவிரக் கல்கத்தாவில் வேறு யாரும் இல்லை! அதிலும், இந்நான்கு பேர்களை வரிசைப்படி எழுதியிருக்கிறேன”. 

“நன்றி, எனக்கு ஒரு கார் வேண்டும்” என்றார் சங்கர்லால்.  

“ஐந்தே நிமிடங்களில் ஏற்பாடு செய்து தருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கமிஷனர் தொலைபேசியை எடுத்தார், சங்கர்வாலின் அறையில் இருந்தே அவர் கமிஷனர் அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டு, சங்கர்லாலுக்கு ஒரு காரை அனுப்பி வைக்கும்படி கட்டளையிட்டார்.

கமிஷனர் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார். 

அத்தியாயம்-30 

கமிஷனர் புறப்பட்டுப் போய்விட்டார். அவர் போன சிறிது நேரத்திற்கெல்லாம் பியட் கார் ஒன்றுவந்து நின்றது. அதை ஓட்டிவந்த கான்ஸ்டபிள் எளிய உடையில் காணப்பட்டான். அவன் சங்கர்காலின் அறைக்குள் வந்து கார் வந்திருப்பதைச் சொன்னான். 

சங்கர்வால் உடனே புறப்பட்டார். அலர் விரைந்து சென்று கரரில் உட்கார்த்தகொண்டு, “பிரபல மூளை நிபுணர் டாக்டர் குப்தாவின் வீட்டுக்குப் போ” என்றார், 

இருபது நிமிடங்களுக்குப்பின் சங்கர்லால் சென்ற கார் டாக்டர் குப்தானின் சொந்த மருந்துவ விடுதியின்முன் நின்றது. டாக்டரின் இருப்பிடமும், மருத்துவ விடுதியும் ஒரே இடத்தில் அமைந்திருப்பதை உணர்ந்துகொண்ட சங்கர்லால், காரிலிருந்து இறங்காமல், காரோட்டியிடம் டாக்டர் குப்தாவிடம் தான் வந்திருப்பதைப் பற்றிச் சொல்லும்படி சொல்லியனுப்பினார். 

காரோட்டியாக வந்த கான்ஸ்டபிள் உள்ளே விரைந்து சென்றான். சிறிது நேரத்தில் அவன் திரும்பி வந்து “உங்களை உள்ளே வரும்படி சொன்னார்” என்றான்.

சங்கர்லால் கான்ஸ்டபிள் காட்டிய வழியில் சென்றார். மருத்துவ விடுதிக்குப்பின்னால் இருந்த ஓர் அழகியபங்களாவின் வெளியே பெரிய கண்ணாடி அணிந்து நின்றிருந்தார் டாக்டர் குப்தா. அவருக்கு அறுபது வயது இருக்கும். அவர் முகத்தில் அறிவும் பண்பும் ஒளிவிட்டன. 

சங்கர்லாலைக் கண்டதும் டாக்டர் குப்தா சிரித்தபடி, “வாருங்கள் சங்கர்லால்! உள்ளே வாருங்கள்! என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை!” என்று சொல்லி மாடி மீதிருந்த தமது அறைக்கு அழைத்துச் சென்றார். சங்கர்லாலைக் கண்டதும் அவரால் மகிழ்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை. 

சங்கர்லால் உள்ளே சென்று உட்கார்ந்தார். டாக்டர் குப்தா அவரைப் பேசவிடவில்லை. மணியடித்துப் பணியாளை வரவழைத்து முதலில் தேநீர் கொண்டுவரும்படி சொன்னார். பிறகு தேநீர் வரும்வரையில் சங்கர்லாலைப் பற்றி அவர் கேட்டதையும் படித்ததையும் பற்றியே சொல்லிக்கொண்டிருந்தார். பிறகு, “இப்போது நீங்கள் எந்த வழக்கைத் துப்பறிகிறீர்கள்?” என்று கேட்டார். 

“மெய்நம்பியின் வழக்கை” என்றார் சங்கர்லால். 

“மெய்நம்பியின் வழக்கா? யார் இந்த மெய்தம்பி? இவர் என்ன குற்றம் செய்தார்?” என்று கேட்டார் அவர். 

“அஸ்ஸாமில் தேயிலை எஸ்டேட்  வத்திருக்கும் மெய்நம்பியை உங்களுக்குத் தெரியும் அல்லவா?” என்றார் சங்கர்லால். 

“தெரியுமே” என்றார் டாக்டர் குப்தா, பிறகு, “இந்த மெய்நம்பி என்ன குற்றம் செய்தார்?” என்றார். 

“மெய்நம்பி வழக்கு என்றுதான் உங்களிடம் சொன்னேனே தவிர, மெய்நம்பி குற்றம் செய்ததாக உங்களிடம் சொல்லவில்லையே!” 

“அப்படியானால் யார் என்ன குற்றம் செய்துவிட்டார்கள்?” என்று கேட்டார் டாக்டர். 

“இதுவரையில் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன!கொலையை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அதற்குத் தான் உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்!” 

“கொலையாளியைக் கண்டுபிடிக்க என்னுடைய உதவியா?’ என்று விழிப்புடன் கேட்டார் டாக்டர் குப்தா!. 

“மெய்நம்பியைப் பற்றிய சில உண்மைகளை அறிய நீங்கள் உதவமுடியும் என்பதுதான் என் கருத்து. நீங்கள் சொல்லும் மெய்நம்பியைப் பற்றிய உண்மைகள், இந்த வழக்கில் மிகவும் தேவைப்படுகின்றன” 

“எனக்கு எல்லாம் புதிராக இருக்கிறது! நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்” என்றார் டாக்டர் குப்தா.

இந்த நேரத்தில் தேநீர் வந்தது. சங்கர்லாலும் டாக்டர் குப்தாவும் தேநீரைப் பருகிக்கொண்டே ஏதோ சிந்தனை செய்தார்கள். 

சங்கர்லால் கேட்டார்: “மெய்நம்பிக்கு நீங்கள் எப்போதாவது மூளை ஆப்பரேஷன் செய்திருக்கிறீர்களா?” 

இதைக் கேட்டதும் டாக்டர் குப்தாவின் முகம் மாறியது. சிறிது நேரம் பொறுத்து அவர், “ஆமாம்” என்றார். 

”எதற்காகச் சிகிச்சை செய்தீர்கள்?” என்று கேட்டார் சங்கர்லால்.

”மெய்நம்பியின் வாழ்க்கையில் ஒரு துன்பம் ஏற்பட்டு விட்டது அந்தத் துன்பத்தை அவரால் மறக்க முடியவில்லை! ஆகையால், நடந்து போனவைகளை மறக்க, அவர் மூளையில் நான் ஆப்பரேஷன் செய்தேன்!” 

“இந்த ஆப்பரேஷனுக்கு ஏற்பாடு செய்தவர் யார்?”

“மெய்நம்பியுடன் அவருடைய எஸ்டேட் பொறுப்பாளர் ஒருவர் வந்தார். அவர் பெயர் நினைவில்லை!” 

“வேலப்பனா?” என்று கேட்டார் சங்கர்லால்: 

“சற்றுப் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு, இரும்பு நிலைப்பேழை ஒன்றைத் திறந்தார் டாக்டர் குப்தா. அதிலிருந்த பைல்களில் ஒன்றைத் தேடி எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு, “ஆமாம்! ஏனென்றால், எனக்குக் கடிதம் எழுதி அதனுடன் செக்கை அனுப்பியிருக்கிறார் அவர்!” என்றார். 

சங்கர்லால் எழுந்து அந்தப் பைலை வாங்கிப் புரட்டிப் பார்த்தார். அவர் ஆர்வமுடன் பைலை புரட்டிப் பார்ப்பதை டாக்டர் குப்தா பார்த்துக்கொண்டிருந்தார்.

– தொடரும்…

– சங்கர்லால் துப்பறியும் ஆந்தை விழிகள் (நாவல்), ஐந்தாம் பதிப்பு: 1973, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *