ஒரு ஈயின் ஆசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 23, 2022
பார்வையிட்டோர்: 3,908 
 

வானுலகத்தில் பிரமதேவன் படைப்புத் தொழி லில் ஈடுபட்டிருந்தார். அதாவது புதிய உயிர்களைப் படைத்துக் கொண்டிருந்தார்.

தங்கநிறமான களிமண்ணில் அமுத நீரை ஊற்றிப் பிசைந்தார். களிக் களியாய் வந்தவுடன் சின்னச் சின்ன உருவங்களாக கையினால் உருட்டி னார். கண், காது, மூக்கு, தலை, வாய், கை, கால் எல்லாம் செய்தவுடன் அந்த உருவத்தை உள்ளங் கையில் வைத்துக் கொண்டு, படைப்பு மந்திரத்தைச் சொல்லி வாயினால் ஊதினார்.

உடனே அந்த உருவம், காற்று மண்டலத்தின் வழியாகப் பூவுலகத்துக்கு வந்து, யாராவது ஒரு பெண் வயிற்றில் கருவாக உட்கார்ந்துவிடும்.

இப்படி ஒவ் வொரு விநாடியும் ஓராயிரம் களிமண் பொம்மையைச் செய்து கொண்டேயிருந்தார்.

அப்போது அவர் மூக்கின் மேல் ஒரு ஈ பறந்து வந்து உட்கார்ந்தது. இடது கையால் அதை விரட்டி னார். அது பறந்து போய் அவர் தோளிலே போய் உட்கார்ந்தது.

களிமண் பிடித்த வலது கையால் தோளிலே தட்டினார். அது தொடைக்குப் பறந்தது. மிகக் கவனமாக கையால் பிடித்து முகத்துக்கு நேரே கொண்டு வந்து, ‘ஏ சின்ன ஈ யே, ஏன் என்னை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறாய்?’ என்று கேட்டார் .

“கடவுளே, எனக்கு ஒரு வரம் வேண்டும்” என்று கேட்டது ஈ. என்ன வேண்டும்? சொல் எனக்கு நிறைய வேலை யிருக்கிறது. இன்று பொழுது சாய்வதற்குள் இரண்டு கோடி உயிர்களைப் படைத் தாக வேண்டும் என்று பரபரப்பாய்ப் பேசினார் பிரம்மா .

“தேவா, பல உயிர்களுக்கு நீங்கள் வால் வைத்துப்படைத் திருக்கிறீர்கள். ஈக்களாகிய எங்க ளுக்கு மட்டும் வால் இல்லை. எங்களுக்கு ஓர் அழகான வால் மட்டும் கொடுத்து விடுங்கள். நான் போய் விடுகிறேன்” என்றது ஈ.

“சின்னஞ் சிறிய கால்களை வைத்துக் கொண்டே, உலகில் பெரிய பெரிய நோய்களைப் பரப்புகின்றாய் நீ. வாலும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம். நான் படைக்கிற உயிர்கள் எல்லாம் வேக வேகமாக மறைந்து போய்விடும்.” என்று வருத்தப்பட்டார் பிரம்மா.

‘கடவுளே நீங்கள் கொடுக்கும் வாலை நான் பத்திரமாக மேற்புறம் தூக்கி வைத்துக் கொள்கிறேன். தயவு செய்து எனக்கு வால் கொடுங்கள்” என்று கேட்டது ஈ.

“எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் உன் இனத்தைப் படைக்கத் தொடங்கும் பொழுதே உன் பாட்டாதி பாட்டன் கேட்டிருக்க வேண்டும். இப்போது இடைக்காலத்தில் நீ கேட்டால் எப்படிச் சேர்க்க முடியும். என்னால் முடியாது போ” என்று விரட்டி னார் பிரம்மா .

கடவுளே, என் பாட்டாதி பாட்டனுக்கு அறி வில்லை. வால் உள்ள விலங்குகள் எல்லாம் என்ன அழகாய் இருக்கின்றன! அதுபோல் ஈக்களாகிய நாங்களும் அழகாக இருக்க விரும்புகிறோம். தயவு செய்யுங்கள் கடவுளே.

எங்களுக்கு வால் கொடுங்கள் என்று ரீங்காரம் இட்டுக் கொண்டே பிரமதேவவனச் சுற்றி வந்து மீண்டும் அவரது உள்ளங்கையில் வந்து உட்கார்ந்தது.

ஈயே தொந்தரவு செய்யாமல் போய் விடு . இடை நடுவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஒரு முறை படைத்தது படைத்தது தான் என்றார் பிரம்மா.

“கடவுளே! நீங்களே பொய் சொல்லலாமா? கோடி ஆண்டுகளுக்கு முன்னால், குரங்குகளைப் படைக்கும் போது, வால் இல்லாமல் தான் படைத்தீர்கள். இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தான் குரங்கு களுக்கு வால் கொடுத்தீர்கள். அதுபோல் ஈக்களுக்கும் கொடுத்தால் குறைந்தா போய் விடுவீர்கள்? என்று கேட்டது ஈ. இந்தச் செய்தி உனக்கு எப்படித் தெரியும். நீ பிறந்து ஐந்து நாள் கூட ஆகவில்லை .

உனக்கு எப்படி இந்தப்பழைய செய்தி எல்லாம் தெரிய வந்தது? என்று வியப்புடன் கேட்டார் பிரம்மா.

நேற்று எங்கள் ஈக்காட்டுக்கு நாரத முனிவர் வந்தார். நாங்கள் நல்ல வரவேற்புக் கொடுத்தோம். மணம் உள்ள மலர் மாலைகளால் அவருடைய தோள் களை அலங்கரித்தோம். எங்கள் குறையையும் சொன்னோம். அவர்தான் தங்களிடம். எங்களின் வேண்டு கோளைச் சொல்லும்படி கூறினார். உடனே ஈக்களின் அரசனாகிய நான் புறப்பட்டு வந்தேன். ஒஓ! இது நாரதன் குறும்பா? இதோ பார் ! ஈயே இலட்சம் ஆண்டுகளுக்கு முன் குரங்குகளுக்கு புதிதாக வால் கொடுத்தது உண்மைதான்.

எப்படித் தெரியுமா? குரங்குகளின் அரசன் என்னை வந்து வால் கொடுக்கும்படி கேட்டான். வால் உள்ள உயிர் வகைகளில் யாராவது, தங்களுக்கு வால் வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் வாலை நறுக்கி உனக்கு ஒட்ட வைக்கிறேன் என்று சொன்னேன். உடனே குரங்கரசன் ஓடிச் சென்று அப்போது பூவுலகை ஆண்டு கொண்டிருந்த மா மன்னன் மனுவை அழைத்து வந்தான். மனு தனக்கு வால் இருப்பது தொல்லையாக இருக்கிறது என்றும், அதைக் குரங்குகளுக்குக் கொடுப்பதற்கு மகிழ்ச்சியாக ஒப்புக் கொள்வதாகவும் கூறினான். மனுவின் ஒப்பு தலின் பேரில் மனிதர்களின் வால்களை வெட்டிக் குரங்குகளுக்கு வைத்தது உண்மை

அதுபோல் நீயும் ஏதாவது வால் உள்ள விலங்கு களைக் கூட்டிக் கொண்டு வந்து, அவை தம் வாலை உனக்குக் கொடுக்க ஒப்புக் கொண்டால், நான் அந்த வாலை எடுத்து உன் இனத்திற்கு ஒட்டிவைக்கிறேன். போ , ஏதாவது வால் உள்ள உயிர் இனத்தின் தலை வனைக் கூட்டிக் கொண்டுவாம் என்றார் பிரம்மா. ஈ பறந் தோடியது, பிரம்மா அமைதிப் பெரு மூச்சு விட்டார்.

போன ஈ திரும்ப வரவே வராது என்று அவருக் குத் தெரியும். அதனால் அமைதியாகத் தம் படைப் புத் தொழிலில் மீண்டும் ஈடுபட்டார்.

ஆனால் பூவுலகுக்கு வந்த ஈ சும்மா இருக்க வில்லை. உலகத்தைச் சுற்றத் தொடங்கியது. காடு மலை ஆறு வயல் கடல் என்று எல்லா இடங்களுக்கும் சென்றது. ஆங்காங்கே உள்ள, வால் உள்ள உயிர் களைப் பார்த்துப் பேசியது.

முதலில் அது ஓர் ஆற்றுக்குச் சென்றது. அங்கே தன் அரசியுடன் மகிழ்ச்சியாக நீந்திக் கொண்டிருந்த மீன் அரசனைச் சந்தித்தது.

“மீனே , உன் அழகான வாலை எனக்குத் தருகிறாயா? எனக்கு வால் வேண்டும் என்று ஆசை யாக இருக்கிறது. கடவுள் உன் ஒப்புதலைக் கேட்டு வரச் சென்னார் என்றது.

“ஈயே, நீ நினைப்பது போல் என் வால் அழகுக் காக இல்லை. வால் இருந்தால் தான் என்னால் அந்தப்பக்கம் இந்தப் பக்கம் திரும்ப முடியும். இல்லா விட்டால் பெரிய அவதியாகி விடும். ஆகையால் என் வாலைக் கேட்காதே. வேறு யாரையாவது போய்ப் பார் என்றது மீன் அரசன்.

ஈ சோர்வடையவில்லை. நேராக ஒரு காட்டை நோக்கிப் பறந்தது.

காட்டில் ஒரு மரத்தில் இருந்த மரங்கொத்தியைப் பார்த்த து ஈ.

“மரங்கொத்தி, மரங்கொத்தி! உன் அழகான வாலை எனக்குத் தருவாயா? நீ ஒப்புக் கொண்டால் உன் அழகான வாலை எனக்கு ஒட்டி வைப்பதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார்’ என்றது.

அந்த மரங்கொத்தி ஈயைப் பார்த்தது. என் வாலை நான் என்ன அழகுக்காகவா வைத்திருக் கிறேன். நீ இப்போது பார்’ என்று கூறி மரத்தைக் கொத்தத் தொடங்கியது.

அது தன் வாலை மரத்தின் மீது சாய்ந்துக் கொண்டு தன் முழு உடலையும் வளைத்துக் கொண்டு தன் மூக்கால் மரத்தில் வலிமையாகக் கொத்தியது. ஒவ்வொரு முறை மரத்தைக் கொத்தும் போதும், வாலை நன்றாக ஊன்றிக் கொண்டு, உடலை வளைத்து முழுசக்தியையும் பயன் படுத்தியது. ஓவ்வொரு கொத்துக் கொத்தும் போதும் மரத்தூள்கள் சிதறிவிழுந்தன. மரத்தில் துளை உண்டாக்கியது.

மரங்கொத்திக்கு வால் எவ்வளவு பயன்படுகிறது என்பதை ஈ நேரில் பார்த்தது. “மரங்கொத்தி மரங் கொத்தி என்னை மன்னித்துக்கொள். நான் வேறு யாரிடமாவது போய் வால் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து பறந்தது.

போகும் வழியில் ஒரு புதர் மறைவில் மான் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் சிறிய வாலைப் பார்த்ததும் ஈ அந்த மானை நோக்கிச் சென்றது.

மானே மானே உன் அழகான சின்ன வாலை எனக்குத் தருவாயா? நீ தா ஒப்புக்கொண்டால் கடவுள் அதைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். என்ன சொல்கிறாய்? என்று அன்போடு கேட்டது.

என் வாலைக் கொடுத்து விட்டு நான் என்ன செய்வேன்? வால் இல்லாவிட்டால் என் குட்டியைப் பறி கொடுக்க நேரிடுமே” என்று கூறியது மான்.

“உன் வாலுக்கும் குட்டிக்கும் என்ன தொடர்பு?” என்று ஈ வியப்புடன் கேட்டது.

“ஓநாய்கள் எங்களுக்குப் பகை. அவற்றின் வாயில் அகப்பட்டால் நாங்கள் தப்ப முடியாது. ஆகையால், விரட்டி வரும் ஓநாயிடமிருந்து தப்ப நாங்கள் தலை தெறிக்க ஓடுவோம். ஓடும்போது ஒநாயின் கண்ணில் படாமல் ஏதாவது புதருக்குள் நான் பதுங்கிக் கொள்வேன். வெளியிலிருந்து பார்த் தால் என்னைக் கண்டு பிடிக்க முடியாது.

ஆனால் நான் எங்கேயிருக்கிறேன் என்பது என் குட்டிக்கு மட்டும் தெரிய வேண்டும். புதருக்குள் மறைந்திருக்கும் நான் என் வாலை ஆட்டுவேன். அதைக் கண்டு என் குட்டி நான் எங்கே இருக்கிறேன் என்று புரிந்து கொள்ளும். உடனே அதுவும் ஒளிந்து மறைந்து ஓடி வந்து என்னோடு சேர்ந்து கொள்ளும்’ என்று விளக்கமாகக் கூறியது மான்.

வால் இல்லா விட்டால் மான் எவ்வளவு துன்பப் படும் என்று ஈ புரிந்து கொண்டது. மேலும் அதை வற் புறுத்திக் கேட்கக் கூடாது என்று அங்கிருந்து கிளம்பியது.

காட்டு வழியில் ஒரு நரி போய்க் கொண்டிருந் தது. அந்த வால் மாதிரி ஒரு சின்ன வால் இருந்தால், எவ்வளவு அழகாக இருக்கும் என்று எண்ணியது ஈ. உடனே அது நரியை நோக்கிப் பறந்தது.

“நரி யண்ணா , நரியண்ணா . கடவுளிடம் நான் ஒரு வால் கேட்டேன். நீங்கள் ஒப்புக் கொண்டால், உங்கள் வாலை எடுத்துச் சின்ன வால் ஆக்கி எனக் குத் தருவதாகக் கடவுள் சொன்னார். உங்கள் வா லைத் தந்து உதவுங்கள் அண்ணா . வால் இல்லாமலே நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உங்கள் அழகான வாலை எனக்குத் தந்து உதவி செய்யுங்கள் அண்ணா என்று கேட்டது.

நரி அதை உற்று நேக்கியது. நான் வாலை அழகுக்காக வைத்துக் கொள்ள வில்லை. வால் இல்லாவிட்டால் எனக்குச் சாவு தான் மிஞ்சும். போ போ பேசாமல் போ’ என்று விரட்டியது நரி.

‘அது எப்படி அண்ணா ? வால் எப்படி உங்கள் உயிரைக் காப்பற்றுகிறது?’ என்று கேட்டது ஈ.

‘வேட்டை நாய்கள் எங்களைத் துரத்துகிற போது ‘ நாங்கள் வேகமாக ஓடுவோம்.

நாங்கள் எந்தப்பக்கமாக ஒடுகிறோமோ அதற்கு வேறு பக்கமாக எங்கள் வாலைத் திருப்பி வைத்துக் கொள்ளுவோம். வால் திரும்பியுள்ள பக்கத்தைப் பார்த்து நாய்கள் எங்களைப் பின்பற்றி வருவதாக எண்ணிக் கொண்டு வேறு திசையில் விரட்டிக் கொண்டு ஓடும். நாங்கள் தப்பித்து கொள்வோம்.

வால் இல்லாவிட்டால் வேட்டை நாய்கள் நேராக வந்து எங்களைக் கவ்விப்பிடித்துத் தின்று விடும்.’

நரியிடம் வால் கிடைக்காது என்று தெரிந்து கொண்டது ஈ.

அதற்குக் கோபம் கோபமாக வந்தது. பிரம்மா வேண்டும் என்றே தன்னை அலைய வைத்திருக் கிறார் என்று தோன்றியது.

யாரும் வாலைத் தர ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தே தன்னை விரட்டியடித் திருக்கிறார். அவரைச் சும்மா விடக்கூடாது என்று நினைத்தது ஈ.

நேராகப் பறந்து சென்று பிரம்மாவின் முக்கின் மேல் உட்கார்ந்தது. மூக்கைத் தட்டியவுடன் பறத்து சென்று நெற்றியில் உட்கார்ந்தது. அவர் நெற்றியில் கைவைத்த போது அது பறந்து போய் முதுகில் உட்கார்ந்தது. முதுகுப்பக்கம் கையைக் கொண்டு சென்ற போது தலையில் உட்கார்ந்தது.

விரட்டி விரட்டி அலுத்துப்போன பிரம்மா, என்ன இது தொல்லையாக இருக்கிறது. இந்த இடத்தை விட்டுப் போகிறாயா இல்லையா?’ என்று கேட்டார்.

எனக்கு வால் வேண்டும். வால் தருகிறவரையில் சும்மா இருக்க மாட்டேன். கடவுளே என்னை எங்கெங்கோ சுற்ற வைத்தீர்கள். யார் யாரையோ கெஞ்ச வைத்தீர்கள், நானும் சுற்றாத இடமில்லை. பார்க்காத உயிர் இனங்கள் இல்லை. எல்லா விலங்கு களுக்கும் வால் தேவையாம். யாரும் தங்கள் வாலை இழக்க விரும்ப வில்லை. அப்படிப் பயனுள்ள வாலை எனக்கும் தரவேண்டும். வால் தருகிற வரையில் உங்களைச் சுற்றிச்சுற்றி வருவேன்.

வால் இல்லாமல் உலகத்திற்குத் திரும்ப மாட் டேன் என்று சாதித்தது ஈ.

பிரம்மா மலைத்துப் போனார். இந்த ஈயிட மிருந்து எப்படித் தப்புவது என்று சிந்தித்தார்.

அப்போது அவர் பார்வை கீழ் நோக்கித் திரும்கீழே பூவுலகில் ஒரு மலையடிவாரத்தில் ஒரு பசுமாடு புல்மேய்ந்து கொண்டிருந்தது.

உடனே பிரம்மாவுக்கு ஓர் எண்ணம் பளிச் சிட்டது.

ஏ ஈயே! எல்லாரிடமும் கேட்டாய். பசுவிடம் கேட்டாயா?’ என்று கேட்டார்.

‘இல்லை ‘ என்றது ஈ . ‘பார்த்தாயார்? யார் கொடுக்கக் கூடியவர்களோ, அவர்களை விட்டுவிட்டு யார் யாரிடமோ கேட்டுக் கொண்டு வந்திருக்கிறாய்,

இப்போது நீ நேரே பசுவிடம் போ . அதன் வாலைக் கொடுக்க முடியுமா என்று கேட்டுக் கொண்டு

வா’ என்றார் பிரம்மா.

ஈ சொன்னது : கடவுளே, இப்போதே நேரே போகிறேன். பசுவிடம் கேட்கிறேன். அது கொடுக்க ஒப்புக் கொண்டால் சரி. இல்லாவிட்டாலும் நான் திரும்பி வருவேன். எனக்கு வால் கொடுக்கும் வரையில் உங்களை வேலை பார்க்க விடமாட்டேன்.

இப்படிச் சொல்லிவிட்டு நேரே பூவுலகிற்குத் தாவிப் பறந்து வந்தது.

இங்கே மலையடிவாரத்தில், பச்சைப்பசேல் என்று வளர்ந்திருந்த புல்லை ஒரு பசு அமைதியாகக் மேய்ந்து கொண்டிருந்தது.

அதன் முதுகில் வந்து ஈ உட்கார்ந்தது.

‘பசுவே, பசுவே! உன் வாலை எனக்குத் தருவாயா?’ என்று கேட்டது.

பசு காதில் விழாதது போல் புல்லைக் கடித்துக் கொண்டிருந்தது.

பசுவே, பசுவே! என்னைக் கடவுள் அனுப்பி னார். நீ ஒப்புக் கொண்டால், உன் வாலை எனக்கு ஒட்டித் தருவதாகக் கூறியிருக்கிறார் . தயவு செய்து உன் வாலை எனக்குத் தா – நானும் என் பரம்பரையும் உனக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்..’

பசு பதில் கூறவில்லை . தன் வாலைத் தூக்கி முதுகில் உட்கார்ந்திருந்த ஈயின் மேல் ஒரு போடுப் போட்டது.

அவ்வளவுதான். அடிபட்ட ஈ பொத்தென்று சுருண்டு தரையில் விழுந்தது. வலி தாங்க முடியாமல் துடித்தது.

பிரம்மா கீழே குனிந்து பார்த்தார்.

உனக்கு வேண்டியது இப்போது கிடைத்து விட்டது. இனிமேல் நீ வாலைப்பற்றிப் பேசமாட்டாய்” என்று தன் மனத்துக்குள் கூறிக் கொண்டார்.

அவர் கை தங்க நிறமான களி மண்ணைப் பிசைந்து கொண்டிருந்தது.

– ஒரு ஈயின் ஆசை, சிறுவர்களுக்கான எட்டுக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அன்னை நாகம்மை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *