ரகுவின் மனைவி போன் வந்தால் எதிரில் பேசாமல் தனியாக எங்காவது போகிறாள் … பேசியது யார் என்றும் சொல்லுவது இல்லை … இதனால் சமிபகாலமாக ரகுக்கு தன் மனைவி மஞ்சு மேல் சந்தேகம் … அதனால் அலுவலகத்திலிருந்து .. அடிக்கடி வந்து, மஞ்சுவுக்கு தெரியாமல் அவள் நடவடிக்கையை … கண்காணிக்க ஆரம்பித்தான் …..
இதனால் ஏகப்பட்ட கேள்வி கேட்டாள் மஞ்சு …சட்டை ஏன் எவ்ளோ வேர்வை ஆபீஸ் ac தானே …பைக் ஏன் இத்தனை கிலோமீட்டர் ஓடி இருக்கு என்று…இப்படி இவள் கேட்கும் கேள்விகளை தட்டு தடுமாறி சமாளித்து வைத்தான் ….இதனால் இவன் நிம்மதி கேட்டது தான் மிச்சம் … இப்படி எல்லாம் முயற்சித்தும் அவளை பற்றி எதுவும் அறிய முடியலை ..எனவே தனியார் துப்பறியும் நிறுவனத்தை நாடினான் ….
ஒரு வாரம் கழித்து துப்பறியும் நிறுவன அதிகரி அவனை அழைத்தார் ….
sir நீங்க சந்தேகப்பட்டது உண்மைதான் ..உங்க மனைவி மஞ்சு , நாங்க ஆபீஸ் போன உடனே கிளம்பி ஒருத்தரை தேடி போறாங்க …அவர் பின்னாடியே சுத்துறாங்க ….
அவங்க யார் பின்னாடி சுத்துறாங்கனு தெரிஞ்ச ஷாக் ஆய்டுவிங்க…..
ஆர்வத்தையும் கோபத்தையும் அடக்க முடியாமல்….. சொல்லுங்க, அவன் யாரு என்றான் ரகு …..
உங்க பின்னாடி தான் ! சமீபமா உங்க மனைவிகிட்ட உண்மை பேசாம .. நிறைய போய் சொல்லிருகிங்க … அவங்க உங்க மேல் சந்தேகப்பட்டு உங்களை fallow பண்ணிருக்காங்க!…
ரகுக்கு தன் தவறு உரைத்தது.
– 09 Apr 2012