கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 13, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

கூத்து

 

 (1967 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘நான் என் சாய்வு நாற்தளர்ந்த காலியிற் படுத்துக்கிடக்கின்றேன். எழுபது ஆண்டுகளாக வாழ்ந்து விட்ட என் தளர்ந்த உடலுக்கு இந்தப் படுக்கையிலே ஒரு சுகம். அடுக்களையில் குரல் கேட்கின்றது. அது என் பேரன் சச்சியின் குரல்தான். அவனுடைய குரல் எப்பொழுதும் எடுப்பானதாகத்தான் இருக்கும். இரண்டு நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒரு நாடகம் இடம் பெற்ற தாம். பனியும் அதுவும்….. நான் போய்ப்


பெயரை மாற்றிக்கறேன்!

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பழனிவேல் அந்த ஊர்ப் பணக்காரர் ராஜமாணிக்கத்தின் ஒரே மகன், பணம் இருக்கிறது என்ற அகந்தையுடன் மற்றவர்களைத் துச்சமாக நடத்தும் குணம் உடையவன். படிப்பிலும் நாட்டமில்லை. அந்த ஊரில் உள்ள பள்ளியில் பத்தாவது படிக்கிறான். அவனிடம் உள்ள பணத்திற் காசு, அவன் சொல் கேட்டு நடக்கும் சில மாணவர்களே அவன் தோழர்கள். பழனிவேலின் வகுப்பாசிரியர் தான் விஜயராகவன். மிகவும் நல்லவர், அதே சமயத்தில் கண்டிப்பானவர்.


கனத்துப் போன இதயங்கள்!

 

 அன்று இஃப்தார்விருந்திற்கான இந்தியன் அசோசியேசன்சிலிருந்து வந்திருந்த அழைப்பை, கொஞ்சம் சோம்பலாக இருந்த பிறகும் வெள்ளிக்கிழமையின் விடுமுறை உல்லாசமும் விட்டு விட்டுப் போக வேண்டுமா? என்று யோசிக்க வைத்தது. இருந்தாலும் இஸ்லாமிய நண்பர் பாட்ஷா அழைப்பை மறுக்க விரும்பாமல் எமிரேட்ஸ் இங்கிலிஷ் ஸ்பீக்கிங் ஸ்கூலுக்கு நண்பர்கள் ராம், அல்போன்ஸ் ஆகியோருடன் சென்றிருந்தேன். நல்ல வேளை எந்த வித டிராப்பிக்கும் இல்லாததால் 6.20க்கு போய்ச் சேர்ந்து விட்டோம். அன்று 6.22க்கு நோன்பு திறப்பதற்கு எல்லா நண்பர்களும் பெண்களும் காத்திருந்தார்கள். எல்லோரும்


வாயில்லா ஜீவன்கள்

 

 அழகானப்பொண்ணுக்கு அசிங்கமாய் மீசைமயிர்கள் முளைத்திருப்பதுபோல,பூச்செடிகளும் பழந்தரும் மரங்களும் நெறஞ்ச தோட்டத்து நடுவுல ஊம சித்தப்பாவின் பாழடைஞ்ச பழைய ஓட்டுவீடு. வீட்டைச்சுற்றி பெரிய மதில்சுவர். உள்ளே யாருமேறி குதித்திட முடியாது.குதித்தவனை கடித்து குதறாமல் செவலையும் விட்டது கிடையாது. சித்தப்பாவுக்கு கூடப்பொறந்தவங்க மொத்தம் நாலுப்பேரு.மூணு ஆம்பள.ஒரு பொம்பள.அத்தத்தான் எல்லாத்துக்கும் மூப்பு.அவுங்க எல்லாருமே பொழைக்கப்போன பாம்பேலயே வீடுவாசக்கெட்டி, அங்கேயே செட்டிலாகிட்டாங்க.கோயில் கொடைக்கி, இல்ல ஏதாவது நல்லதுக்கெட்டது நடந்தா மட்டும் ஊருக்கு வருவாங்க.அந்த வரத்தும் போவப்போவ ரொம்ப கம்மியாடுச்சி… ஆச்சியும் தாத்தாவும்,நாம போனப்பின்ன


சகுந்தலை சரிதை

 

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1 – 9 | அத்தியாயம் 10 – 19 10. சகுந்தலை அத்தினாபுரிக்குப் புறப்பட ஆயத்தமாதல் தீர்த்த யாத்திரையினின்று திரும்பிவந்த கண்ணுவர், ஒருநாளிரவு தமது மாணாக்க னொருவனை அழைத்து, இரவு எத்தனை நாழிகைகள் கழிந்துவிட்டன’ வென அறிந்துவரு மாறு அனுப்பினார். மாணாக்கன் சென்று பார்த்த பொழுது, மருத்துப் பூண்டுகளுக்குத் தலைவ னான சந்திரன், மேற்கு மலையில் மறைந்தான்; எதிர்ப்புறத்தில் வைகறை


பதக்கம் எண் 13

 

 கம்பியூட்டர் தயார் நிலையில் இருக்கிறது. எனக்கு தேவையான வடிவத்தை உருவாக்கிவிட்டேன். அடர்த்தியான புருவம். தெளிவான கண்கள், மடங்கியும் மடங்காத காது, மழுங்கடிக்கப்பட்ட தாடை, நேற்றுதான் திருத்திய தோற்றத்தில் தலைமுடி, வயதை கணிக்கச் செய்யும் மீசை. எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒருமுறை பார்க்க வேண்டும் என்பது கட்டளை. பாதுகாப்பும் அதுதான். பார்த்தாகிவிட்டது. மீண்டும் ஒருமுறை எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்திருந்த செய்திகளை பார்வையிட்டேன். நேரம் குறித்தாகிவிட்டது. மலாக்காவிற்கு செல்வதற்கு தயாராய் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டேன். காரில் இருந்து


பூக்கொத்து

 

 ஜீவாவிற்கு அம்மாவையும், அப்பாவையும் இந்த நாட்டுக்கு எடுத்த பிறகு சாதனை புரிந்தது போல இருக்கிறது. மனதில் நிம்மதி பூக்கத்தான் செய்தது. ஆனால், கிராமத்தைப் போல வருமா?. பழக்கப்படாத கட்டடக்காடாக விரியும், செயற்கையாகப் படைக்கப்பட்ட நகரை நினைத்தால் பயமாக இருக்கிறது. சாலைகளில் பொறுமையில்லாமல் ஓடும் வாகனங்களினால் முதியவர்களே அதிகமாக உதிர்கிறார்கள். அங்கே இயற்கை இவர்களைஅரவணத்துக் கொள்கிறது. இங்கே இல்லை. என்ன தான் பிரச்சனை மனிதர்களிற்கு ?, வடக்கு, கிழக்கில் பொலிஸ் தெரிவையும் ஆள்றதையும் அவர்கள் கையிலேயே கொடுத்து விட்டால்…..அரைவாசி


கற்றல் – ஒரு பக்க கதை

 

 பிரமிளா, அவள் மகன், மகள் உட்படி பேருந்து நிலையத்தில் காத்திருந்த கல்லூரி மாணவர்கள் பலரும் கையில் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு மாணவன் மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அவன் சட்டைப் பையில் ஆண்ட்ராய்டு கைப்பேசி இருந்தது. ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை பிரமிளாவிற்கு. “பாக்கெட்ல செல்போன் வெச்சிக்கிட்டு புத்தகம் படிக்கற உன்னைப் பார்த்தா ரொம்பப் பெருமையா இருக்கு தம்பி…இப்படி டிசிப்ளினா வளர்த்த உன் அப்பா அம்மாவை நினைச்சா ரொம்பப் பெருமையாவும் இருக்கு …” என்றாள் பிரமிளா.


சட்டம்

 

 ஒரு பல்சர்..பைக்.. டெனிம் புது ஷூ.. நல்லா ஸ்டைலா நண்பன் கூட பைக்ல வந்து இறங்குறான்..அந்த பையன்.. அவன் நடையில் ஒரு உத்வேகம் எதையோ ஒன்ன சாதிச்ச வெறி அவன் கண்ணுல மின்னுது.. பின்னுக்கே ஆட்டோல அந்த தங்கச்சி.. பையனின் சித்திகூட வந்து இறங்குது.. ஒரு டொப் டெனிம்..தலைய ஒரு விதமா சீவி ஒருவிதமா கிளிப் அடிச்சிருக்கு.. சேர்ந்து உள்ள போறாங்க.. வழக்கம் போல அந்த பொலிஸ் நிலையமும் ஏதேதோ விசயங்கள், விசாரனைகளுக்காக கொஞ்சம் பரபரப்பா தான்


அவள் முடிவு

 

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “அவள் மஞ்சளையும், குங்குமத்தையும், இழந்தவள்தான். ஆனால் அழகாகத்தான் இருந்தாள். அவள் பெயர் அமிர்தம்தான்! ஆனால் விஷமாகக் கருதப்பட்டாள். அவள் ‘அமிர்தம்’. ஒரு சீமானின் செல்வப் புதல்வி. அந்த சீமான் ஒரு சனாதனி, அவளுக்கு மணமான அண்ண ன் ஒருவன் இருந்தான். அவளுக்குச் ”சிவபெருமானின் திருவருளை” முன்னிட்டுத்தான், சோதிடர்கள் குறிப்பிட்டபடி கன்னியா லக்கினத்தில் கலியாணம் நடந்தது. பாவம்! அவளுடைய கணவன் கலியாணமான ஒரு வருடத்திற்குள்ளாகச்