கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2022

236 கதைகள் கிடைத்துள்ளன.

கிரஷ்க்கும் மேல லவ்வுக்கும் கீழ…

 

 “வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே உன் கண்களும் காதல் பேசும் என் தருணம் மலரும் வாசம் உன் தோள்களில் சாயும் நேரம் உயிர் துளிரும் பேரழகா மெஹபூபா மே தேரி மெஹபூபா மெஹபூபா மே தேரி மெஹபூபா” “சங்கீ” “சங்கீ” அடியேய் சங்கீதா… ஹாங்.. என்னடி அபர் எப்ப வந்த?? என்னது எப்ப வந்தேனா வா?? சங்கீ சங்கீனு உன் பேர இவ்வளவு


கழுத்தறுத்தான்

 

 “அட… எவ்வளவு பெருசா இருக்கு.. ஒரு வான் கோழி அளவுக்கு இறைச்சி வரும் போல இருக்கே..” கழுத்தில் முடி இல்லாமல் கொழு கொழுவென்று ஓடித்திரியும் அந்தக் கழுத்தறுத்தான் சேவலைப் பார்ப்போரில் பெரும்பாலானோர் உதிர்க்கும் வார்த்தைகள்தாம் இவை. ஆனால் அப்படிச் சொல்பவர்கள் மீது கடுமையாக ஆத்திரப்படுவான் அமுதன். காரணம் அவனைப் பொறுத்தவரையில் அந்தக் கழுத்தறுத்தான் சேவல் ஒரு செல்லப் பிராணி. விடியற்காலையில் கதவைத் திறக்கும் பொழுது பெரும்பாலும் அமுதனின் கண்ணில் முதலில் தென்படுவது கழுத்தறுத்தானாகத்தானிருக்கும். அவனைக் கண்டதும் ஓடிவந்து


அழகிய இதயங்கள்

 

 (1969 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செம்பூக்கள் இழைத்த திரைச்சீலை போல கீழ் வானம் செக்கச்சிவந்து விட்டது. கண்பட்ட இடமெல்லாம் பரந்து கிடக்கும் குன்றுகளும், செம்மயமாகிச் சிரிக்கின்றன. காலையிளஞ்சூரியன் மேலநோக்கி மெல்ல மெல்ல உயர்கிறது. அது, பேரீத்தம் பழச்சாற்றில் தோய்த்தெடுத்த வட்ட வடிவமான கோதுமை ரொட்டி போல பேரழகு சிந்துகிறது ஷாம் தேசத்தின் தலைநகரான் திமிஷ்க்கின் மத்தி யிலே, உள்ள நீர்ச்சுனை பாலையின் கனிந்த இதயத்தைப் பிரதிபலித்துக் கிடக்கிறது. இதயத்தின்


அப்பாவுக்குத் தெரியும்

 

 (1987 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குளித்துவிட்டு வந்த சங்கரனுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மேஜை மேல் ஒரு சட்டையும், பேண்ட்டும் துவைத்து இஸ்திரி போட்டு வைக்கப்பட்டிருந்தது. சட்டை வெள்ளைச் சட்டை. அவனோ, லாண்டரியோ எந்தக் காலத்திலும் தராத வெண்மை நிறத்தில் துவைக்கப்பட்டிருந்தது அது, சோப்பும், உழைப்பும் மட்டுமா துவைப்பது? அக்கறையும் கூட வேண்டும். தன் மீது இவ்வளவு அக்கறையாக, தன் ஆடையை இவ்வளவு நேர்த்தியாகத் துவைத்து வைத்திருப்பது யாராய்


கனவுகள்

 

 கல்பனா வெளியில் விளையாடிக் கொண்டு இருந்தாள்,அவளின் அம்மா கேதீஷ்வரி கல்பனாவை சாப்பிட கூப்பிட்டாள்,வாரேன் அம்மா என்று பாதியில் விளையாட்டை விட்டு வர மனம் இல்லாம் எழுந்து வந்தாள் அவள்,என்னடி காலையில் இருந்து கொளுத்தும் வெயிலில் விளையாட்டு என்று அதட்டினாள் பரமேஷ்வரி,நான் வெயிலில் விளையாட வில்லை,அம்முவுடன் பல்லாங்குழி தான் விளையாடினேன் என்றாள் கல்பனா,உனக்கும் அவளுக்கும் வேறு வேலையே இல்லை,சேர்ந்து படிக்க மட்டும் போகாதே,விளையாட மட்டும் ஓடி விடு என்றாள் அம்மா,இன்னைக்கு சனிகிழமை தானே,எந்த நாளும் படிக்க முடியாது,அதனால் தானே


பயங்கரவாதி…

 

 அந்த வீடு வரை வழக்கம் போல சாதாரணமா வந்துட்டு அங்க இருந்து மாமி வீடு வரைக்கும் போகும் போது இறுக்கமான முகத்தொட.. ஒரு பயங்கரமான ஆள் போல.. முரட்டு தனமா போறது எழுதபடாத விதியாகவே மாறி..போக போய்கிட்டு இருக்கேன்.. சில வீட்டு கதவுகள் டமார்னு சாத்தப்படும் சத்தமும் சடார்னு திறக்கப்படும் சத்தமும் என் காதுகளில் ஊடுறுக்க.. வாசல்கள்ல விளையாடி கிட்டு இருந்த குட்டி பசங்க..கிடு கிடுனு வீட்டுக்குள்ள கத்திக்கிட்டே ஓடி ஒளிய ..குட்டி பொண்ணுங்களில் கீச்சிடும் அழுகை


தெளிவு

 

 சன்னலோரம் வழமையாக உட்காரும் அமர்வில் அமர்ந்து அன்று வந்திருந்த சஞ்சிகைகளைப் புரட்டினான் வாசன்.’தெறி’ எனும் சஞ்சிகையின் பதினெட்டாம் பாகத்தில் வந்திருந்த ஒருபக்கக் கதையொன்று கண்ணில் பட்டது.கதைகள் வாசிக்கும் மனநிலையில் இல்லையென்றாலும் சின்னக் கதைதானே என்று வாசிக்கப்போக அவன் மனதில் ஏதோ ஊர்வதைப் போலிருந்தது. வெளியே விதம் விதமான பூக்களுடன் செடிகள்.வாசனின் மனைவிக்கு பூச்செடிகள் வளர்ப்பதில் அலாதிப் பிரியம்.வீட்டின் முன்புறமும்,பின் புறமும் இருக்கின்ற நிலப்பரப்பில் பூச்செடிகளுடன்,வீட்டுக்குத் தேவையான மரக்கறிகன்றுகளையும் நட்டிருந்தாள்.ஊரில் வாசனின் அம்மாவும் இப்படித்தான் ..மாதர்சங்கத்தில் சேர்ந்து அங்கு


விற்பனை

 

 அது ஒரு கம்ப்யூட்டர் விற்பனை கடை .கணினி, மடிகணினி, அவை சார்ந்த உபரி பாகங்கள், துணை கருவிகள் போன்றவை விற்பனை செய்யும் கடை. காலை நேரம் . கடையில் இரண்டு சிப்பந்திகள், வாடிக்கையாளர்களின் வருகைக்காக காத்திருந்தனர். மணி பதினொன்று . ஒரு நடுத்தர வயது மனிதர் கடைக்குள் நுழைந்தார் . நேராக முதல் சிப்பந்தியிடம் சென்றார். “ எனக்கு இரண்டு மணிக் கணினிகள் வேண்டுமே ! டெல் கம்புட்டர் காட்டுங்கள் “ “இதோ சார், இதை பாருங்கள்


பிரிவதற்குத்தானே உறவு

 

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஏதோவொரு விரக்தியான மனப்போக்கில், தண்டவாளக் கட்டைகளில் கால்களைப் பதியப் பதிய வைத்து நடந்து கொண்டிருந்தான் கருணாகரன். வானத்தில் கவிந்திருந்த மேகக்கூட்டங்கள் மத்தியில், மேற்குத் திசையில் மாலைச் சூரியன் கருமஞ்சள் நிறத்தில், கவலையால் கலங்கியிருப்பது போல மினுங்கிக் கொண்டிருந்தான். கடற்கரையில் சாய்ந்து வளர்ந்திருந்த ஒற்றைத் தென்னை மரம் மேல் காற்றில் மெதுவாக அசைந்தாடிக் கொண்டிருந்தது. நீலத் திரைகள் மெதுவாக கரையை வருடிக் கொண்டிருந்தன. தண்டவாளக்


வாஷிங்டனில் திருமணம்

 

 (1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 10 | அத்தியாயம் 11 வைதிக கோஷ்டியினர் ராக் க்ரீக் பார்க் கை நோக்கி அணி அணியாகப் படையெடுத்துக் கொண்டிருந்தனர். உண்ட மயக்கத்துடன் நடந்து கொண்டிருந்த கனபாடிகள் ஒருவர், “என்ன இருந்தாலும் நம் தஞ்சாவூர் ஸைடைப் போல் ஆகாது. இந்த வாஷிங்டனில் பெரிய பெரிய கட்டடங்களாகத்தான் கட்டி வைத்திருக்கிறார்கள். என்ன பிரயோசனம்? எந்த வீட்டிலாவது ஒரு திண்ணை உண்டா, சாப்பிட்டதும் படுப்பதற்கு?”