கற்றல் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 13, 2022
பார்வையிட்டோர்: 5,624 
 

பிரமிளா, அவள் மகன், மகள் உட்படி பேருந்து நிலையத்தில் காத்திருந்த கல்லூரி மாணவர்கள் பலரும் கையில் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார்கள்.

ஒரே ஒரு மாணவன் மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அவன் சட்டைப் பையில் ஆண்ட்ராய்டு கைப்பேசி இருந்தது. ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை பிரமிளாவிற்கு.

“பாக்கெட்ல செல்போன் வெச்சிக்கிட்டு புத்தகம் படிக்கற உன்னைப் பார்த்தா ரொம்பப் பெருமையா இருக்கு தம்பி…இப்படி டிசிப்ளினா வளர்த்த உன் அப்பா அம்மாவை நினைச்சா ரொம்பப் பெருமையாவும் இருக்கு …” என்றாள் பிரமிளா.

“சொன்னா நம்பமாட்டீங்க ஆன்ட்டி. என் பேரண்ட்ஸ் செல்பொன் ரெஸ்ட்ரிக்‌ஷன் செய்யச் சொல்லி சொன்னதே இல்லை…” சொல்லிக்கொண்டிருக்கும்போதே பஸ் வந்துவிட, “அப்பா பஸ் வருது…” என்றான் பின்புறம் திரும்பி.

பஸ் ஸ்டாப் பெஞ்சில் உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்த அவருடைய அப்பா புத்தகத்தில் புக் மார்க் வைத்து மூடி பையில் வைத்துக்கொண்டே எழுந்து வந்தபோது…

பிரமிளாவிற்கு உண்மை உரைத்தது. ‘பெற்றவர்களிடமே பிள்ளைகள் கற்கிறார்கள்’ என்று.

– கதிர்ஸ் – ஜனவரி – 16-31-2021

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *