கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 27, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

சிசுபால வதம் (மஹாபாரதம்)

 

 சிசுபால வதம் பாகம் ஒன்று வசுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும் பகவான் ஸ்ரீவிஷ்ணு உலகத்தைக் காத்து ரக்ஷிப்பதற்காக கிருஷ்ணாவதாரம் எடுத்து அருள் பாலித்தார். வசுதேவர், தேவகிக்கு புத்திரராக அவதரித்தார். பெருமை மிகு துவாரகாபுரியை ஆட்சி புரிந்து அருள் பாலித்தார். அப்போது ஒருசமயம் ஸ்ரீ கிருஷ்ணரைத் தரிசிப்பதற்காக மூவுலக சஞ்சாரி நாரத மகரிஷி துவாரகாபுரிக்கு வந்து அருள் செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் சிறப்புமிகு நாரத மகரிஷியை எதிர்


தீபம்

 

 மாமன் வீட்டு முகப்பில் காலொடிந்த ஆடு ஒன்று நின்றிருந்தது. சிம்பு வைத்துக் கட்டப்பட்ட காலுடன் ஜன்னல்கம்பியில் கட்டப்பட்டிருந்த அகத்திக்குழையைக் கடித்துக்கொண்டிருந்தது அசைவைக்கண்டு திரும்பிப்பார்த்து கூழாங்கல்போன்ற கண்களை மூடித்திறந்து ம்ம்பே என்றது. வாசலில் கிடக்கும் கருப்பனைக் காணவில்லை. மாமா காட்டுக்குத்தான் போயிருக்கவேண்டும். அத்தை இருக்கிறாளா என்று தெரியவில்லை. வீடே அமைதியாக இருந்தது முருகேசன் வீட்டுமுற்றத்தில் தயங்கி நின்றான். அவன் பிறந்ததே அந்த வீட்டில்தான். அதன்பின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓடிவந்துவிடுவான். கறிசமைத்தாலோ எள்ளுருண்டையோ வெல்லமாவோ உருட்டினாலோ அத்தையே அவனை வரச்சொல்லித்


நியதி

 

 (2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அப்துல்லாஹ் ஹாஜி என்ன வெயில்! என்ன வெயில்! ழுஹர் தொழுதுவிட்டு வீடு வந்து, மேலே உள்ள விசிறியைச் சுழலவிட்டு சாய்வுநாற்காலியில் சாய்ந்தேன்…. அன்று சாப்பிடப் பசியில்லை … மேசையில் இருந்த தினசரி ஒன்றை எடுத்து வாசித்த என் மனம் செய்தியில் ஓடவில்லை ; மனதில் ஆழப்பதிந்த செய்தியை வட்டமிட்டது. குடும்பம் என்று ஒன்று இருந்தால் அதற்கு குழந்தை ஒன்று தேவை… ஓடி விளையாட


வீம்பும் வீராப்பும்

 

 ஒரு ஊர்ல – ஒரு பண்ணையாரு இருந்தாரு. அவருக்கு நெறயா நெலங்க. நெலத்ல வேல செய்ய, ஒருத்தன வச்சிருக்காரு. அவ சின்னப் பிள்ளயில இருந்து, பண்ணயில வேல செஞ்சுகிட்டு இருக்கா. இருக்கயில – பெரியாளாயிட்டார். பெரியாளாகவும் -, பண்ணயாரு, இவனுக்கு, கல்யாணம் பண்ணணும்ண்டு நெனச்சாரு. நெனச்சு, ‘ஒரு பொண்ணப் பாத்து, கல்யாணஞ் செஞ்சு வச்சுட்டாரு. கல்யாணம் பண்ணி வச்சிட்டு, தவசந் தானியத்தக் குடுத்து, தனிக்குடித்தனம் வச்சுட்டாரு. கல்யாணமாகி, தனிக்குடித்தனம் நடத்துன அண்ணக்கிருந்து, வேலைக்குப் போகாம, வீட்ல ஒக்காந்து


இளம் மாங்கன்று

 

 பள்ளிக்கூட இடைவேளையில் அவசர அவசரமாய் சிறு நீர் கழிக்க அந்த புதருக்குள் நுழைந்தவர்களில் ராசுக்குட்டி, பரமன், கட்டாரி, மூவர் மட்டும் “இற்று போய்” எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலையில் இருந்த “டவுசர்களை” இழுத்து விட்டு அண்ணாகயிற்றால் பிணைத்து கொண்டனர். இருந்தாலும், ராசுக்குட்டியின் மூக்கில் வெள்ளையாய் வழிந்து கொண்டிருந்த சளி வேறு மேல் உதட்டின் விளிம்பில் நின்று எப்பொழுது வேண்டுமானாலும் உதட்டை தாண்டி விழுந்து விடுவேன் என்று பயமுறுத்த, “சர்ரென்று” மூக்கை இழுத்து பிடிக்க முயற்சித்தான், ஆனால்


அனுபவம் புதுமை..!

 

 கருப்பையா கருப்பு கிடையாது.நல்ல சிவப்பு நிறம்.அம்மா அகிலாண்டம் மாதிரி.. ! நல்ல உயரம் கூட..! “பொறந்த குழந்தய பக்கத்துல நரஸம்மா படுக்க வைக்கயில எனக்கு நம்ப முடியல. குழந்த செவப்பா என்னொசரம் இருந்தான்..கண்ணுபடும்போலத்தான் இருந்துச்சு…!” அதனால்தானோ என்னவோ அவனுக்கு கருப்பையா என்று நாமகரணம் செய்தாள் போலிருக்கிறது.! கருப்பையா பார்ப்பதற்கு தாயைப்போல இருந்தாலும் குணத்தில் அப்பாவைக் கொண்டிருந்தான்… அகிலாண்டம் பாம்பைக் கண்டால் கையால் பிடிப்பாள்.கணவன் முத்தையாவோ தொடை நடுங்கி..பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே நடுங்குவான்…. கருப்பையாவுக்கு அப்பா அளவுக்கு


திணித்தால் வராது திறமை

 

 குருவிடம் வந்தான் ஒருவன். “”குருவே, எனக்கு இருப்பது ஒரு மகன். அவனை எல்லா கலைகளிலும் கெட்டிக்காரனாக்க விரும்புகிறேன். ஆனால்…” “என்ன ஆனால்?… என்னாச்சு?” “அவன் பள்ளிப் படிப்பைத் தவிர நீச்சல் கற்றுக் கொள்கிறான். பாட்டு கிளாஸ் போகிறான். கராத்தே சேர்த்துவிட்டிருக்கிறேன். சனி, ஞாயிறுகளில் நடனம் படிக்கிறான். அவனுக்கு எல்லாம் தெரிகிறதே தவிர எதிலும் அவனால் முதலில் வர இயலவில்லை. அதற்கு என்ன செய்வது குருவே?” அவனுக்கு ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார் குரு. ஒரு பிரசங்கி இருந்தார்.


இரண்டு இரவு, ஒரு பகல் ! ம்ம்ம்…!

 

 பக்கத்து வீட்டுக்காரன் தன்னுடைய மூன்று வயது, ஐந்து வயது பசங்களைக் அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டில் விட, சென்னைக்கு இன்று காலை 10.00 மணிக்கே பேருந்து ஏறிவிட்டான். ஆள் வர்றதுக்கு எப்படியும் இரண்டு நாட்கள் கண்டிப்பா ஆகும் ! வீட்டுல …அவன் மனைவி மல்லிகா மட்டும் தனி. ஒன்னும் பிரச்சனை இல்லே ! வாழ்க… பள்ளிக்கூட கோடை விடுமுறை !’நினைக்கும்போதே மகேசுக்குள் மனம் துள்ளி, குத்தாட்டம் போட்டது. ‘அதே சமயம் இங்கே…!’ நினைத்த அடுத்த வினாடி……. ஏறிய


தொங்கல் – ஒரு பக்க கதை

 

 “வழக்கு மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது…” என்று சொன்ன மேஜிஸ்ட்ரேட் அடுத்த வழக்குக்கு ஆயத்தமானார். “சவ்வு மாதிரி இந்த இழு இழுக்கிறாங்களே எப்பதான் முடியப் போவுதோ…” அவிழ்ந்த தன் முண்டாசைக் கட்டியவாறு, தனக்குத்தானே புலம்பிக் கொண்டார் பக்கிரிசாமி. “வக்கீல் சமூகம்… வருஷம் நாலு ஆகுது..இப்படியே ஒத்திவைத்துவிட்டுப் போனா எப்போதாம் தீர்ப்பு வரும்?” கவலையோடு கேட்டான் வெங்கடேச பண்ணையார். “சிவில் வழக்கு வருஷக் கணக்கில் இழுக்கும். வேற வழியில்லை பண்ணையார் ஐயா. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன்


இரண்டாவது கல்யாணம்

 

 (1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலைக்கு ஒரு தலையணையை வைத்துக் கொண்டு இரவு பத்தரை மணிக்கெல்லாம் திண்ணையில் ஒரு ஜமக்காளத்தை விரித்துச் சுவாமிநாதன் படுத்துவிட்டான். அவன் பக்கத்தில் அவனுடைய கடைசிப் பெண் காமு படுத்துக் கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் தூங்குமுன் அவள், “தூங்கறச்சே என்னைத் தனியா விட்டுவிட்டுப் போயிடாதே அப்பா” என்று அப்பாவுக்கு உத்தரவிட்டிருந்தாள். சுவாமிநாதன் தன் தலையைத் தூக்கி முழங்கை மேல் வைத்துத் தாங்கிக் கொண்டு