கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 8, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆண் சிங்கம்

 

 (1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிங்காரம் பிள்ளை அண்ணாச்சி – ‘வெறும் வீணப்பயல்’ என்று கைலாசபுரம் வாசிகள் ஒவ்வொருவரது மனக்குறளியும் முணமுணக்கும். ஆனால், வெளிப்படையாக, ‘அவுகளைப்போலே உண்டுமா இந்தப் பூலோகத்திலே? அண்ணாச்சி பெரிய சிங்கமில்லே!’ என்று வாய் சொல் உதிர்க்கும். இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை, உள்ளொன்று நினைத்துப் புறமொன்று பேசுவதுதானே பண்பாட்டு உயர்வு என்று மக்களால் மதிக்கப்படுகிறது! மேலும், சிங்காரம் பிள்ளை என்றால் கைலாசபுரத்தினருக்கு உள்ளத்துக்குள் எப்பவுமே


ஒரு பிணத்தின் தரிசனம்

 

 அந்த ஊரின் வழக்க மேளங்கள் நிரையாய் அமர்ந்து திருவாசகம் படிக்கின்றன. அப்போதுதான் உள்ளே நுழைந்த நடராசர், தனது சயிக்கிளடிக்கு விரைந்தோடிச் சயிக்கிளில் தொங்கிக் கொண்டிருந்த கிழிந்த ஓலைப்பாயினுள் துளாவி, இராவணன் பூச்சிகள் நன்றாகப் படித்துக் கிழித்திருந்த திருவாசகப் புத்தகம் ஒன்றினைத் தடவி எடுத்துக்கொண்டு வந்து அந்த வரிசையில் தானும் அமர்ந்து கொண்டு கண்ணாடிக்கூட்டைத் திறந்து, பொருத்தெல்லாம் அழுக்கேறிப் போயிருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்கிறார். பிறகென்ன? ஒரே காட்டுக் கூச்சலும் கழுதைக் கத்தலும் தான்! மருமகள் பூரணமும்


தெரிவு அந்தரத்தில்…

 

 பெனிதுடுமுல்ல ரோட் திரும்புகிற வழியிலே நின்று கொண்டு முன்னுக்குப் பார்க்கிறேன், எந்தநாளும் பார்க்கிற கட்டிடம் தான். இன்றைக்கி அது சென்ற மேரிஸ் முஸ்லிம் மகாவித்தியாலயமாகத் தெரிகிறது. அது ஒரு காலத்தில் அரசாங்கம் பொறுப்பெடுப்பதற்கு முன், ஒருபேர் போன ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை. ஆயிரக்கணக்கான வர்களைப் படிப்பிச்சி நல்ல வழிகளைக் காட்டி உருவாக்கிவிட்டு, எந்தவித பெருமையும் இல்லாமல் கம்பீரமாக நிற்கிறது அது! அந்தக் காலத்தில நகரத்தின் இன்னொரு இடத்தில் இருந்த சென்ற் மேரிஸ் கொலேஜின் கொன்வென்ட்ல படிச்ச பிள்ளதான்


ஆண் மகன்

 

 இரவு மணி பத்து. பத்து முப்பதுக்குக் கடைசி வண்டி. தெற்கே செல்லும் விரைவு வண்டி புறப்படுகிறது. அதற்குப் பிறகு மறுநாள் காலையில்தான் ரயில், தமிழ்ச் செல்வன் எழும்பூர் ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட இடத்தில் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வோர் ஆட்டோவையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். கைக் கடிகாரத்தைப் பார்ப்பதும், வழிமேல் விழிவைத்து அவள் வருகையை நோக்கி தவித்தது அவன் மனம். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும். துணிவுடன் ஒரு செயலில் இறங்குகிறான். ஒரு வாரமாகவே திட்டமிட்டான். சந்திராவும் –


பெண் எப்படி இருப்பாள்?

 

 அணையப் போகும் விளக்கு ஒருமுறை சுடர்விட்டுப் பிரகாசிப்பதைப் போன்று கீழ்வானில் செம்பிழம்பு தன் முழுப் பலத்தையும் ஒன்றுதிரட்டி வானவெளியை எழிலூட்டிக் கொண்டிருந்தது. அந்த எழிலைத் துரத்தி விட்டு உலகைத் தன் ஆதிக்கத்தின் கெடுபிடிக்குள் கொண்டு வரவேண்டும் என்ற இறுமாப்பில் இருள் மெல்ல மெல்ல விரைந்து கொண்டிருந் தது. பொழுது புலர்வதும் பின் இருள் கவிலும் பிரபஞ்ச அமைப்பின் நித்திய கருமங்களோ? அதைப் பற்றிய கவலை இம்மியும் இல்லை அவனுக்கு! காலையில் எப்போதாவது விழித்துக் கைத்தடியும் தகரக் குவளையும்


ஸெக்ஸ் அப்பீல்

 

 ‘அறவிளக்கு’ பத்திரிகை மிகவும் கௌரவமான குடும்பப் பத்திரிகை என்று பெயர் பெற்று, அந்தக் கண்ணியமான பெயரைக் கடந்த கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் ‘தமிழ்நாட்டு ஆஸ்தீகப் பெருமக்களிடமும் உயர்ந்த குடும்பப் பெண் மக்களிடமும் நிலைத்த விதத்தில் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறது. அதன் ஆசிரியர் உயர்திருவாளர் சிவகாமிநாதன் அவர்கள் ‘கௌரவமான குடும்பப் பத்திரிகை என்பதற்கு ஏதாவது இலக்கணம் வேண்டுமானால் நாங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிற அறவிளக்கு’ மாத இதழைப் பாருங்கள்; கௌரவத்துக்கும் கண்ணியத்துக்கும் எடுத்துக்காட்டாக அதை நாங்கள் நடத்திக் கொண்டு


தேவையானதைக் கொடு!

 

 மாளவ தேச மன்னன் மகாசேனன் ஒரு நாளிரவு மாறு வேடத்தில் நகரில் திரிந்து வந்த போது ஓரிடத்தில் ஒருகல்லில் பட்டு இடறிக் கீழே விழுந்துவிட்டான். தலையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அங்கு அருகிலிருந்த ஒரு குடி சையில் வாழும் ஏழை மனிதன் பார்த்து ஓடி வந்து அவனைத் தூக்கி ஒரு மரத்தடியேகொண்டு சேர்த்தான். அதன்பின் தனக்குத் தெரிந்த பச்சிலை களைப் பறித்து வந்து அவற்றின் சாற்றை மன்னனின் காயங்களில் தடவினான். மன்னனின் காயங்களின் எரிச்சல்


ராட்சஸக் குழந்தை

 

 (1985 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முடி வெட்டிக்கொண்டு அறைக்குத் திரும்பி இருந்தேன். என் தலை இவ்வளவு கேலிக்குரிய பொருளாக இருக்கும் என்று நான் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. தலையில் ஒரு கோழி இறகைச் சொருகிக் கொண்டு போகும் பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல ரகுவும், சோமுவும் என்னையும் என் தலையையும் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தார்கள். “கிருஷ்ணமூர்த்தி, என்ன ஆச்சு உனக்குத் திடீரென்று” என்றான் ரகு. “ஏன்? எனக்கொன்னும் ஆகல்லியே. நான்


பிஞ்சு உலகம்

 

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “எனக்கு பள்ளிக்கூடம் போக விருப்பந்தான். அப்ப ஏன் போகலையாமுன்னு கேட்கிறீங்களா? விருப்பம் மட்டும் இருந்தா பள்ளிக்கூடம் போக முடியுமா? நான் பள்ளிக்கூடம் போயிட்டா அம்பிப் பயலை யாரு பாத்துக்கிறதாம்?… மலைக்குத் தேத்தண்ணி கொண்டு போறது யாராம், கேக்கிறேன்!” “நாலெழுத்துக் கத்துக்கிட்டா தேவலை ஆம்பளபுள்ள நாளைக்குப் பின்ன ஒருத்தன் முன்னுக்கு வெரல நீட்டிக்கிட்டு நின்டா நல்லாவா இருக்கும் எப்ப பார்த்தாலும் அம்மா இப்படியேதான். சொல்லுது


ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 9 | அத்தியாயம் 10 இன்ஸ்பெக்டர் சங்கரன் ஆதிகேசவனின் ஆராய்ச்சி சாலையில் என்ன நடக்கிறது என்று கவனிப்பதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் மேசையின் மீதிருந்த டெலிபோன் மணி ஒலித்தது! டெலிபோனைக் கையில் எடுத்தார் இன்ஸ்பெக்டர். “ஹலோ, போலீஸ் ஸ்டேஷனா?” என்றது ஒரு பெண்ணி னுடைய குரல். “ஆமாம்! நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். “நான் ராயப்பேட்டை