கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 21, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

புல்லிலிருந்து பால்! – ஒரு பக்க கதை

 

 அந்த ஆசாமியிடம் எனக்கென்னவோ சந்தேகம்தான் முதலில் உண்டாயிற்று. ‘சர்வ சாதாரணமாக எங்கே கண்டாலும் மண்டிக்கிடக்கும் புல்லிலிருந்து நல்ல பாலைத் தயாரிக்க முடியும்’ என்று அந்த ஆசாமி சொல்லும்போது, எப்படிச் சந்தேகம் உண்டாகாமல் இருக்கும்? “அப்படி உங்களால் புல்லிலிருந்து பால் தயாரிக்கமுடியுமானால், இப்பொழுதே உணவு இலாகா டைரக்டரைப் பார்த்து ஏன் உங்கள் நூதன வழியைச் சொல்லப்படாது? பால் பஞ்சம் ஏற்பட்டிருக் கும் இந்தச் சமயத்தில் அதனால் எவ்வளவோ நன்மை ஏற்படக்கூடுமே! அதோடு, அந்த நூதன வழியைச் சொல்லிக்கொடுத்தால், உங்களுக்கும்


மறையட்டும் தீயசக்தி மலரட்டும் தீபஒளி

 

 உகாண்டா விமான நிலையத்திற்குள் நுழையும் போது கணேசனுக்கு தலையை வலித்தது போல இருந்தது. நேராகப் போய் பிளாஸ்டிக் கப்பில் டீ வாங்கிக் கொண்டு பயணிகளுக்காக போட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். செல்போன் ஒலிக்க, எடுத்துக் கேட்டான். “கணேசன் அம்மா பேசுகிறேன். நாளை மறுநாள் தீபாவளி எப்போது கிளம்புகிறாய்?” அம்மா தேவிகா கேட்டாள். “அம்மா நான் ஏர்போர்ட்டிற்கு வந்து விட்டேன். இங்கிருந்து துபாய் போய், அங்கிருந்து நாளை காலை மதுரை விமானத்தில் வருகிறேன். நீங்கள் கருங்குளம் பஸ் ஸ்டாண்டில்


மனிதருள் ஒரு தேவன்

 

 (1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பத்திரிகைச் செய்திகளைப் படித்து விட்டுப் பரபரப்புடன் பதினைந்து நாள் ரஜாவில் பஞ்சாபுக்குப் புறப்பட்டுச் சென்ற சுபேதார் மல்ஹோத்ரா, கிளம்பிச் சென்ற பன்னிரண்டாவது நாளே முகாமுக்குத் திரும்ப நேர்ந்த விபரீதத்தை விதி என்று ஏற்றுக்கொண்டு ஆறுதல் பெறுவது எளிதன்று. விடுதிக்குக்கூடச் செல்லாமல் ஹோல்டாலும் கையுமாக நேரே அலுவலகக் கூடாரத்திற்குள் நுழைந்த சுபேதாருக்கு இராணுவ சம்பிரதாயப்படி மரியாதை செலுத்தக்கூடத் தோன்றவில்லை எனக்கு. அப்படியிருந்தது அவரது தோற்றம்!


உதிரத்தில் உதித்த உறவு!

 

 கருவேல மரத்தை வெட்டி, சுள்ளிகளை சேகரித்து கட்டி, சும்மாடை சுருட்டி தலையில் வைத்து, யாரும் தூக்கி வைக்க ஆள் வருகின்றனரா என்று நோட்டமிட்டாள் செல்லாயி. “ஆத்தா, என்ன சுமையை தலையில் ஏத்தணுமா?” குரல் கேட்டு திரும்பியவள், வேலன் நிற்பதை பார்த்தாள். “ஆமாம் பா… நேரமாச்சு, தூக்கி வை. இனி வீட்டுக்கு போயி உலை வைக்கணும்.” அவன் தூக்கி வைக்க, தலையில் வாங்கியவள் நடக் கத் துவங்கினாள். “ஆத்தா, உன் மகன் விடுதலையாகி வந்துட்டான் போலிருக்கு…” ஒரு கணம்


சில நேரங்களில் சில நியதிகள்

 

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “தேவன்…தேவன்…” ‘கேற்’ வாயிலில் அவசரமான அழைப்புக் குரல் கேட்ட போது எட்டிப் பார்த்தேன். இரண்டு இளைஞர்கள் சைக் கிள்களுடன் நின்றிருந்தார்கள். நான் தயங்கி கேற்’ ஐ அண்மித்த போது, “முகமத்…இல்லை…தேவன் நிற்கிறாரோ?” ஒருவன் தடுமாறிக் கேட்டான். “அவருக்குச் சரியான காய்ச்சல் தம்பி; டொக்டரிட் டைப் போய் மருந்து எடுத்துக்கொண்டு வந்து சாப்பிட்டிட்டு இப்பதான் நித்திரையாகினவன்.” நான் அவனை எழுப்ப மனமில்லாமல் கூறியபோது அவர்கள்


கொத்தைப் பருத்தி

 

 (1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோனேரி செங்க்கன்னாவின் குடும்பத்தைப்பற்றி விசாரிக் கவா வேண்டும்: பெயரைச் சொன்னாலே சுத்துப்பட்டிகளில் ‘அடேயப்பா அவுகளுக்கென்ன?’ என்று சொல்லும் வாய்கள். பெயருக்கு இப்பவும் குறைச்சல் இல்லைதான். ‘பெயர் இருந்து நாக்கு வழிக்கவா; ஒரு பயலும் பொண்ணு தர மாட்டேங்கானே என் பேரனுக்கு’ என்று நினைத்துத் தவுதாயப் பட்டார் கோனேரி, இருநாறு ஏக்கர் கரிசல். அதுவும் தெய்க்கரிசல் நிலம்; நினைச்சுப் பார்க்கமுடியுமா யாராலும்? அந்த வட்டாரத்திலேயே


அந்திப்பொழுது

 

 (1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக் கொழுத்த உடும்பு தன்னிடமிருந்து தப்பிப் போனது ஐயனுக்கு எல்லை மீறிய கவலையினைக் கொடுத்தது. மிகவும் கொழுத்த, முற்றிய மரவள்ளிக் கிழங்கு போல உடல் திரண்ட நல்ல இரை. காயான் மரத்துக்கு அருகே அந்த உடும்பினைக் கண்டதும் மெதுவாகப் பதுங்கியவாறு கும்முனைச் செடி களின் மேலே தவழ்ந்து சென்றும் அந்த உடும்பினைப் பிடிக்க முடியவில்லை . அது அரவமறிந்து சரசரவென்று செடிகளை மிதத்தி


இதுதான் சான்ஸ்..விடாதே!

 

 “என்னது புள்ளெ சொணங்கிப் போய் இருக்கான்..!. ஒடம்புக்கு சரியில்லையா..? என்று பார்க்க வந்தவர்கள், குடித்த காபிக்காக நலம் விசாரித்தார்கள். “பேத்திக்கு ஒண்ணுமில்லெ..” என்ற சொன்ன மாலதி “பொறந்ததிலே இருந்து அந்தப்பையன் அப்டித் தானே கெடக்கான். என்ன பண்றதுன்னு தெரியலேக்கா…” “உள்ளெ என்னமோ தெரியலெ.. வெளியெ பாக்கும்போது லட்சணக்கட்டியா இருப்பாளே அந்தப் பயலோட ஆத்தா.. அவளுக்கு பொறந்த புள்ளையா இப்டிக் கெடக்கான்…” “இவனோட அப்பன் லட்சணமா இல்லாட்டாலும் நல்ல பொழி எருது மாதிரி இருப்பானே… அந்த உடம்பு கூட


ஒன்றே வேறே

 

 சருகுகள் சரசரத்திருந்த தரையை நிர்மலமற்ற வெண்மையாக்குவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டதுபோலத் தொடர்ந்து பனி கொட்டிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே இப்படிப் பனியில் நனைந்திருந்தால், “புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது, இங்கு சொல்லாத இடம்கூடக் குளிர்கின்றது,” எனச் சந்தோஷமாக அரவிந்தசாமியும் மதுபாலாவும் ஆடிப்பாடியிருக்க முடியுமா? இந்தப் பனிக்குளிரை அனுபவித்திருந்தால் அந்த வரிகளை கவிஞர் வைரமுத்து நினைத்துக்கூடப் பார்த்திருப்பாரா என அவள் நினைத்துக்கொண்டாள். கையுறைகளை ஊடறுத்து நரம்புகளைச் சீண்டிய அந்தக் குளிரில் அவளின் விரல்கள்


திலகவதியார்

 

 (1960ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாடும் குரல் பாட்டு புகழனார் தமக்குரிமைப் பொருவில்குலக் குடியின்கண் மகிழவரு மணம்புணர்ந்த மாதினியார் மணிவயிற்றில் நிகழுமலர்ச் செங்கமல நிரையிதழின் அகவயினில் திகழவரும் திரு அனைய திலகவதியார் பிறந்தார். தம்பியார் உளராக வேண்டும் என வைத்த தயா உம்பர் உலகு அணையஉறு நிலைவிலக்க உயிர்தாங்கி அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதி யார் இருந்தார். காட்சி : 1 [திலகவதியார் வீடு.