கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 15, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

வாசக் கட்டி

 

 செல்வச் சந்நிதி முருகன், பக்தர்கள் புடை சூழ, பவனி வந்து கொண்டிருந்தார். இறைவனுக்கு முன்னாலும் பின் னாலும் கற்பூரச் சட்டிகளும், காவடிகளும் வந்து கொண் டிருந்தன. வீதி வலம் வந்து கொண்டிருந்த முருகனுக்குப் பின்னால் பாடவல்ல பஜனைக் கோஷ்டியினர் தோத்திரப் பாடல்களைப் பண்ணோடு பாடிய வண்ணம் வந்தனர். தொண்டமனாற்றில் கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கும் சந்நிதி முருகனைத் தரிசிக்க வந்தவர்களும், வேடிக்கை பார்க்க வந்த வேறு சிலரும் மற்றவர்களை இடித்து நெருக்கிக் கொண்டு வடக்கு வீதிக்குச் சென்றார் கள்.


இணை

 

 அவனுள் தவிப்பே மேலோங்கி நின்றது. திரு மணமானதின்பின் வந்த இந்த இரண்டு மாதங்களும் ஏதோ நிறைவின்றிக் கழிந்ததுபோல அவனுக்குப்பட்டது . வார்த்தைகளில் சொல்லமுடியாத, நெஞ்சினுள் கெம்பிக்கெம்பி மேலெழும்புகின்ற, முள்ளாய் உறுத்துகின்ற, மெல்லிய சோகமாய் உள்ளெல்லாம் இழையூடுகின்ற, அவனுக்கும் அவளுக்குமிடையில் உணர்ச்சிகளின் பூரணமான, உன்னதமான ஒன்றிப்பைத் தடை செய்கின்ற அந்த அது’ எதுவாக இருக்குமென அவன் சிந்தித்தான். அவனுக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. அவன் ஐந்து வருடங்களாக அவளைக் காதலித்தே கைப்பிடித்தான். ‘வாழ்ந்தால் அவளுடன்


முட்டாளின் அதிர்ஷ்டம்

 

 “ஏன்டி செல்லம்மா! சோத்துல உப்பு போடாத போடாதன்னு எத்தனை தடவடி சொல்றது உனக்கு, நீ கேக்கவே மாட்டியாடி…” என்று முதல் சோற்றுப் பருக்கையை எடுத்து வாயில் வைத்த உடனே ராமசாமி தன் மனைவி செல்லம்மாவை வசை பாடினான். பச்சை மிளகாயை வறுத்து கொண்டிருந்த செல்லம்மாவோ “ஹ்ம்ம், இருபது வருஷமா உப்பு வியாபாரம் செஞ்சு செஞ்சு இந்த மனுஷனுக்கு எத சாப்டாலும் உப்பு, எத பார்த்தாலும் உப்பு … என்று முணுமுணுத்தாள். “அங்க என்னடி பொலம்பிட்டு இருக்க? கேட்டதுக்கு


குறைந்த லாபம் – ஒரு பக்க கதை

 

 ஒரு துண்டு வியாபாரி மனைவியிடம், இருபது துண்டு இருக்கிறது, நான் சந்தைக்கு போய் விற்பனை செய்து வருகிறேன் என்று சொன்னார். மனைவி என்னங்க! வரும்போது ஒரு சிற்பம் அரிசி வாங்கிட்டு வந்துருங்க. அரிசி இன்னைக்கு சமைக்க மட்டும் தான் இருக்குது. வியாபாரி மகன்!, அப்பா இன்னைக்கு ஸ்கூல் லீவு நானும் உங்கக்கூட வரேன். இருவரும் சந்தைக்கு போனார்கள். ஒருவர் வியாபாரியிடம் துண்டு எவ்வளவு என்று கேட்டார். வியாபாரி ஒரு துண்டு ₹55 ரூபாய் என்று சொன்னார். இதேபோல்


சுப்பையா பிள்ளையின் காதல்கள்

 

 1 வீரபாண்டியன் பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபாயத்திற்காகச் சென்னையை முற்றுகையிட்ட பொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம் விமான நிலயமோ ஏற்படவில்லை. மாம்பலம் என்ற ‘செமன்ட்’ கட்டிட நாகரிகம் அந்தக் காலத்திலெல்லாம் சதுப்பு நிலமான ஏரியாக இருந்தது. தாம்பரம் ஒரு தூரப் பிரதேசம். திருநெல்வேலியிலே, ரெயில்வே ஸ்டேஷன் சோலைக்குள் தோன்றும் ஒற்றைச் சிகப்புக் கட்டிடமாக, ‘ஜங்க்ஷன்’ என்ற கௌரவம் இல்லாமல், வெறும் இடைகழி ஸ்டேஷனாக இருந்தபோது திருவனந்தபுரம் ‘எக்ஸ்பிரஸ்’ மாலை நாலு அல்லது ஐந்து


மென்மை

 

 பிரிகேடியர் சரவணப் பெரு மாளைச் சந்திக்கச் சென்றேன். நாங் பள் இருவருமே பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், அவர் ராணுவத் இல் இருந்தவர். நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவன். ராணுவ உயர்மட்ட அதிகாரி களுக்கு கமிஷண்ட் ஆஃபீஸர்ஸ் என் பது பெயர். இவர்கள் ஓய்வு பெற்ற பின்பும்கூட தங்கள் பெயருக்கு முன்னே, தாங்கள் வசித்த பதவிப் பெயரையும் சூட்டிக்கொள்ளலாம். அதிகாலையில் விடிவதற்கு முன் பாகவே நாங்கள் இருவருமே உலாவப் புறப்பட்டு விடுவோம். அனேக மாக பிரிகேடியர்தான்


காதலுக்குப் பேதமில்லை

 

 இன்று லண்டனில் இலங்கையை விட மோசமான வெயில்.நான் போட்டிருக்கும் சேர்ட்டை வியர்வை நனைத்த விட்டது.பக்கத்த நீச்சல் தடாகத்தில் குழந்தைகள் குதித்து விளையாடும் சப்தம் காதைப் பிளக்கிறது.இதமான மெல்லிய தென்றல் உடலைத் தடவிச் செல்கிறது.மூக்குக்கண்ணாடியைக் கழட்டிக் கைக்குட்டையாற்; துடைத்தவிட்டு போட்டுக் கொள்கிறேன். அக்கம் பக்கமெல்லாம் ஆரவாரம்.அவற்றைக் கடந்து எங்காவது தனியான இடம் தேடிப் போகவேண்டும் போலிருந்ததால் வீட்டை விட்டு வெளியே வந்தேன். என்மனைவி ஒன்றும் சொல்லாமல் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தாள்;;.ஆனால் அவள் என்ன நினைப்பாள் என்று எனக்குத் தெரியும்.’


கல்யாணத்துக்கு கல்யாணம்

 

  கல்யாணத்துக்கு, பலவருஷங்களாய் பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வயசு ஏறிக்கொண்டே சென்றது. வயசு ஏறுவதற்கு மட்டும் ஏணியோ அல்லது சின்னதா ஒரு ஸ்டூல் கூட தேவையில்லை. தானாகவே ஏறிவிடும், விலைவாசி போலவே. அவனோட ஜாதகத்தில், சந்தோஷம் ஒன்னை தவிர எல்லா தோஷமும் இருந்தது.செவ்வாய் தோஷம், புதன் தோஷம் என்று வாரத்தில் ஏழு நாட்களுமே தோஷம்தான் அவனுக்கு. இதெல்லாம்கூட பரவாயில்லை. தோஷங்களை கழிக்க பரிகாரம் செஞ்சிக்கலாம்.ஆனா..உள்ளூர் தோஷம்னு ஒன்னு இருக்கு .அதுதான் எந்த பரிகாரத்துக்கும் குறையாத தோஷம். அந்த ஓட்டலுக்கு


காலம் மறந்த இடம்

 

 அத்தியாயம்:௧ | அத்தியாயம்:௨ | அத்தியாயம்:௩ உதவி பொழுது புலர்ந்த நிலையில் நான் உறங்கியிருக்க வேண்டும். இப்படியே எத்துணை நாட்கள் இருந்தேன் என்றே தெரியவில்லை. அவை மணிக்கணக்காக இருக்கும் என்று தோன்றவில்லை. இறுதியில் என் கண்களை விழித்துப் பார்க்கும் போது பகல் வெளிச்சம் முகத்தில் அறைந்தது. அவள் கூந்தல் என் முகத்தை மறைத்திருந்தது. அவள் மூச்சு இயல்பாய் இருந்தது. கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன். அவள் முகத்தைச் சிறிது திருப்பி இருந்திருக்க வேண்டும் இரவில். இப்போது என்


இனம்

 

 கம்பி கேட்டை ஒரு கையால் திறக்க முயன்றான். மறுகையில் மொப்பெட் வண்டி. இயலாது போக, பின்பு மொபட்டை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு வந்து, கேட்டைத் திறந்தான். உள்ளே, இரண்டாம் நம்பர் பிளாட் அம்மா வாசலில் நிற்பது தெரிந்தது. ‘கஷ்ட காலம். மொபெட்டை உள்ளே நிறுத்தி விட்டு வந்து இந்த கேட்டு சனியனை திரும்ப மூடிவிட்டு போகவேண்டும்’. இல்லாவிட்டால், ”ஆளாளுக்கு கேட்டை திறந்து போட்டுட்டு போனா, எவ மூடிக்கிட்டு இருக்கிறதாம்? உனக்கென்ன! மாடு ஆடு மாடு உள்ள நுழைஞ்சா