கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2021

265 கதைகள் கிடைத்துள்ளன.

மூவரை வென்றான்

 

 மதுரையிலிருந்து தென்காகி செல்லுகிற மங்கம்மாள் சாலையில் கல்லுப்பட்டி என்ற ஊருக்கும் ஸ்ரீவில்லிபுத்துாருக்கும் இடையில் ஒரு கிராமம் இருக்கிறது. சாலை தெற்கு வடக்காகச் செல்கிறது. சாலையின்மேல் மேற்கு நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு கைகாட்டி மரத்தில் ‘மூவரை வென்றான்-1 மைல் 4 பர்லாங்கு-’ என்று கறுப்புத் தார் பூசிய மரச்சட்டத்தில் வெள்ளை வார்னிஷால் பளிச்சென்று எழுதப்பட்டிருக்கும். நான் அடிக்கடி இந்தச் சாலை வழியே பஸ்ஸில் பிரயாணம் செய்கிறவன். ஏதோ ஒரு கிராமம் மேற்கே ஒன்றரை மைலில் இருப்பதாகவும், அந்தக் கிராமத்தின்


போவது நீதியில்லை

 

 (1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தொழிற்சாலையைக் கவனிக்க ஒரு சுற்று நடந்துவிட்டு அலுவலகத்துக்குள் வந்ததும் வழக்கம் போலவே ஒரு சலிப்புணர்வு தலைகாட்டியது; செய்கின்ற வேலையிலேயே லயிப்பு அற்றுப் போவது போல… என்ன இது? பெருமூச்சொன்றுடன் கதிரையிலமர்ந்து மேசையில் வைக்கப் பட்டிருக்கும் குழந்தைகளின் படத்தில் கண்களைப் பதித்தேன். சலிப்பை அகற்றும் ஒரு முயற்சி, இது. பிள்ளைகளின் மழலைகளும், விளையாட்டுகளும் நினைவில் வந்து மனதை குளிர்வித்தன. கடந்த விடுமுறை முடிந்து திரும்பப்


யேசுநாதர் என்ன சொன்னார்

 

 வருடப் பிறப்புக்கு ஒரு வாரம் தான் இருந்தது. நான் பதுளையில் இருந்து புறப் பட்டேன். வழியில் சில வேலைகளை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் போக வேண் டும் என்பது தான் எனது திட்டம். ஆனால்… சேகுவேரா இயக்கத்தினர் அரசாங் கத்துக்கு எதிராகத் திடீர்த் தாக்குதல்களை மேற்கொண்டதன் விளைவாக நான் மத்திய மாகாணத்தில் மாட்டிக்கொண்டு விட்டேன். போக்கு வரத்து வச திகள் எதுவும் கிடையாது. வானொலியில் நிமிடத்துக்கொரு அறிவித்தல் வெளியாகிக் கொண் டிருந்தது. ஊர்மக்களின் வாய் களில் பிரசவமாகி விசுவரூப


ஆண்களின் படித்துறை

 

 அன்னம்மாள் ஆண்களின் படித்துறையில் அமர்ந்து நீராடிக்கொண்டிருக்கிறாள். படித்துறைக்குக் குளிக்க வரும் ஆண்களின் எண்ணிக்கை அந்நேரங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய வயது முழுவதையும் அவள் தாண்டிவிட்ட பின்னரும் அவளுடல் இன்னும் வரிசை குலையாமல் இருக்கிறது. தொய்வடையாத மு*களும் மடிப்பு விழாத இடுப்பும் கொழுத்த குதிரைபோல் பின்பக்கமும் வாலிபர்கள் முதல் வயசாளிகள்வரை சுண்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அது அவளுக்கு மிக நன்றாகத் தெரியும். ஊருக்குப் புதிதாய் வரும் ஆண்களிலிருந்து பாராமுகமாய்ச் செல்லும் கிறுக்குப் பிடித்த ஆண்கள் வரை அவள் படித்துதான்


பிசிறு

 

 அறக்காய்ச்சும் வெயில். பங்குனி மாதத்தின் பிற்பாதி. சித்திரை பத்தாம் உதயத்துக்குத் தப்பாமல் பெய்யும் மழைக்கான மேகத்திரட்சிகள் ஏதும் வானத்தில் இல்லை . ஏலத்தில் பிடித்த சமுக்காளம் இழந்த சாயம் போல வானம் வெளிறிக்கிடந்தது. அவிழ்த்தடிப்புக் காலம் ஆனதால் மனம்போல மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுகள் வெயில் பொறுக்க முடியாமல் ஆற்றங்கரையோரம் புன்னைமர நிழலில் ஒதுங்க முற்பட் டன. குட்டையாகத் தெவங்கிக்குழம்பிக் கிடந்த ஆற்றின் ஆனையறுகுப் புதர்களின் ஓரம் எருமைகள் உருண்டு புரண்டு வெயிலுக்கு இதமாக சேற்றுப் பூச்சுமானம் செய்துகொண்டிருந்தன.


புதிய நட்சத்திரம்

 

 “என்னை நல்லாப்பாருங்கோ …. பார்க்கச் சொல்லுறன். கவனமாய்ப் பாருங்கோ …. என்னைப் பார்க்க ஆர் மாதிரியிருக்குது? ஏன் யோசிக்கிறிங்கள்? நீங்க சி. ஐ. டி. 686 என்ற படம் பார்க்கவில்லையோ? பார்த்தனீங்கள். எனக்குத் தெரியும். எனக்கு வயது கொஞ்சங்குறைவு தான் – அதாலை தான் மீசை இன்னும் கறுத்து வளரேல்லை. ஒருக்கால் மீசை வழிச்சனான் …. ஏன் இப்ப சிரிக்கிறீங்கள் …. ஓ ஓ …. எனக்கு உயரங்காணா தெண்டா நினைக்கிறீங்கள்….? எனக்கு இப்ப பதினெட்டு வயது


கோவிந்தசாமி

 

 அற்புதம் வீடு, நூறு பேர் படுத்து உருளலாம் போன்ற பெரிய திண்ணை. அதற்கடுத்து மரவேலைப்பாடுகளுடன் கனமான ஒற்றை தேக்குக் கதவு. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் சாமியறை. அடுத்து உக்கிராண அறை. பிறகு தட்டு முட்டு சாமான்கள் வைக்கிற அறை. வலப்புறம் படுக்கை அறை. படுக்கையறையை அடுத்து சுவரில்லாமல் மேடை போல் மேலேறிய காற்றும் வெளிச்சமுமாய் இருக்கும் சமையலறை. காற்று விறகடுப்பை அணைத்து விடாதபடி இடுப்புயரம் கட்டப்பட்ட ஒற்றைச் சுவர். கீழே தரையில் அடுப்பு.திண்ணைக்கு கம்பிக் கிராதி போட


இலக்கு மாறினால் வெற்றி கிடைக்காது

 

 “குருவே எனக்கு எந்த வேலையும் சரிப்பட்டு வர மாட்டேன்கிறது. எதை ஆரம்பித்தாலும் அது நஷ்டத்தில் முடிகிறது” என்று கவலையோடு சொன்னவனிடம் ஆறுதலாய் பேசத் துவங்கினார் குரு. “ஏன், உன் வேலைகளில் என்ன பிரச்சனை வருது?” என்ற குருவின் கேள்விக்கு வந்தவன் செய்த தொழில்களை பட்டியலிட்டான். “பாருங்க குருவே, இத்தனை தொழில் செய்தும் எதிலும் எனக்கு முன்னேற்றம் கிடைக்கல” வந்தவனின் குறைபாடு குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார். ஒருவனுக்கு கொஞ்சம் நிலம் இருந்தது.அதில் கிணறு


வீடற்றவன்…

 

 சனிக்கிழமை இரவு. நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. ரொரோண்டோ மாநகரின் உள்நகர்ப் பகுதியின் பொழுது போக்குப் பிரதேசமான ரிச்மண்ட் டங்கன் பிரதேசம் இன்னும் பரபரப்பாகக் காணப்பட்டுக் கொண்டிருந்தது. மூலைக்கு மூலை கிளப்புகள். ஆட்டமும் பாட்டமுமாக யுவன்கள் யுவதிகளால் நிறைந்திருந்தது. ‘ஹாட் டாக்’ நடைபாதை வியாபாரிகள் பம்பரமாகச் சுழன்று தமது வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். டாக்ஸிச் சாரதிகள் பிரயாணிகளை ஏற்றுவதும், காத்திருப்பதுமாகவிருந்தார்கள். சிலர் நேரத்துடனேயே வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பலர் புதிதாக டாக்சிகளில் கார்களில் வந்து வந்து


வினோத வார்ப்பு

 

 கண்களிலே ஒளியிருந்தும், கதுப்புக்களிலே வெடித்த கோபத்தின் கனலில் தன்னையும், தான் சார்ந்த உலகத்தையும் தன்னை மீறிய வெறுப்போடு நோக்கியவண்ணம் வீட்டின் முன் கூடத்திற்கு வந்து; விழிகளில் முதல் விழுந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள் புவனேஸ்வரி அம்மாள். நல்ல தாய்க்கு மகளாகவும், புகழ் சிறந்த தந்தையின் செல்வமாகவும் இந்தப் பூமிக்கு ஒரு ஜன்மமாக வந்து, படித்து, பட்டம் பெற்று ஆசிரியையாக பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றி; இளைத்துவிட்ட இந்த நாற்பத்தியொரு வயதில் இந்து மகளிர் கல்லூரியின் அதிபதியாகிவிட்ட ஒரு களை