கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2021

99 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு றெயில் பயணம்

 

 (1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடகடவென்ற இரைச்சலுடன் புகையிரதம் விரைந்து கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நெரிந்து குமைந்தது. நானிருந்த பெட்டியின் வாசற்புறக் கதவருகில் நின்று வெளியே தெரிந்த காட்சிகளில் கண்களை மேயவிட்டுக் கொண்டிருந்தேன். கரையோரப் பகுதியில், இடைக்கிடை நெடுமூச்சு விட்டவாறே புகையிரதம் சென்றது. எனது கண்கள் கரைப் பகுதிகளைத் துழாவின. ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகளில் மனது தங்காமலும் ஓடாத காட்சிகளில் மனது தங்கியும் கோலம் போட்டது. கரையில் போடப்பட்டிருந்த


இந்த நாள் இனிய நாள்

 

 தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு இன்று.. பிரபல ஜோதிடர் வாய் திறக்கவும், என் மனைவி டிவியை ஆப் செய்யவும் சரியாக இருந்தது. பார்த்துகிட்டு இருக்கேன்’ல..என்றேன் கோபமாக. தினமும் இதை கேட்காவிட்டால் எனக்கு அந்த நாளே ஓடாது. நேரமாச்சு..நான் பதிவு செய்து அனுப்பறேன்..பொறுமையா ஆபீஸ்’ல உக்கார்ந்து கேளுங்க என்றாள் கிண்டலாக. வழியில் பைக் பஞ்சராக, சரி செய்து கொண்டு அலுவலகம் வருவதற்கு காலை பத்து மணியாகி விட்டது. பார்க்கிங் ஏரியாவில் பைக்கை நிறுத்திவிட்டு நான் வேலை செய்யும் பில்டிங்கை


குடிக்குறை துடைத்த நாச்சியார்!

 

 பல்லவ மன்னன் நந்திவர்மன் சிவனடியார் போன்று வேடமிட்டுக் கொண்டான். அவனுடைய தலைமை அமைச்சர் இறையூர் உடையான் சிவனடியாரின் சீடன் போன்று வேடமிட்டுக் கொண்டான். அவர்கள் இருவரும் தெள்ளாற்றுக்கு அருகில் உள்ள ஒரு கல் மண்டபத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். மன்னன் நந்திவர்மன் அமைச்சரை பார்த்து “சீடனே! இன்று நாம் நாட்டு நடப்பை நேரில் கண்டு வருவதற்கு எங்கு சென்று வரலாம் என்பதை பற்றி ஒரு யோசனையைக் கூறுங்கள்“ என்று வழக்கம்போல் மன்னன் நந்திவர்மன் அமைச்சரிடம் கேட்டான். “மன்னா! மன்னிக்க


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியயம்-9 | அத்தியயம்-10 | அத்தியயம்-11 ராமசாமி வீடு விற்று பணத்தை ‘பாங்க்லே’ தன் கணக்கிலே போட்டு விட்டு,’பாங்க்’ மானேஜ ரைப் பார்த்து “சார்,என் பையனுக்கு சிதம்பரத்லே கல்யாணம் ஆகப் போறது.அதனால் நான் சிவபுரியே விட்டுட்டு,சிதம்பரம் போய் அவனோட நிரந்தரமா இருந்துண்டு வரலாம்ன்னு நினைக்கிறேன். அதனால் நீங்கோ தயவு செஞ்சி உங்க ‘பாங்கலே’ என் கணக்கே மூடிட்டு,என் மொத்த பணத்துக்கும் சேத்து ஒரு ‘ட்ராப்டா’ தர முடியுமா”என்று கேட்டார். உடனே ‘பாங்க் மானேஜர்’ தன் உதவி மானேஜரைக்


லஞ்சம்

 

 பூஜை அறையில் உட்கார்ந்திருக்கும்போது வாசலில் நிழலாடியதை உணர்ந்தி திரும்பி பார்த்த ஜெகநாதன் மனைவியை கண்டதும் குரலை காட்டாமல் புருவத்தை உயர்த்தினார். வெளியில் அந்த காண்ட்ராக்டர் பொன்னுசாமி வந்திருக்காரு. உட்கார சொல். குரலில் மென்மையை காட்டி விட்டு மணியடிக்க ஆரம்பித்தார். அதற்குள் மனம் பொன்னுசாமியிடம் போய் விட்டது. மறந்தே விட்டேன் காலையில் பொன்னுசாமியை வர சொன்னது. நான் சொன்ன தொகை கொண்டு வந்திருப்பானா? மனசு கணக்கு போட்டது. பானுவுக்கு காலேஜ் போக ஒரு மாருதி கேட்டாள், இந்த முறை


வடிவேல் வாத்தியார்…

 

 பார்த்திபனுக்கு எரிச்சலாய் வந்தது… முந்தைய நாள் சனிக்கிழமை… படுக்கும்போதே இரண்டு மணி.. காலை சிற்றுண்டி…. மதியம் லஞ்ச்… எல்லாவற்றையும் சத்தியமாய் தியாகம் செய்து… தூக்கம் மட்டுமே பிரதானம் என்று சபதம் செய்து விட்டு… ஒன்றுக்கு இரண்டாய் கம்பளியைப் போர்த்திக்கொண்டு.. டிசம்பர் மாத பாஸ்டன் குளிருக்கு நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு விடாமல் அடித்துக் கொண்டிருந்த மொபைல் போன் சத்தம் எரிச்சலூட்டுமா. .இல்லையா. ?? “யாரு இந்த வேளை கெட்ட வேளைல…??” திட்டிக் கொண்டே போனை எடுத்தான்.. ‘ புகழ்


ஒரு கொரோனா டைரிக்குறிப்பு

 

 கொரோனா முதல் அலை ஆரம்பம். வருடம் 2020 மார்ச் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 11மணி. கொரோனா ஒரு கொடிய நோய், சீனாவில் இருந்து இறக்குமதி ஆன இந்த கொள்ளை நோயில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று சன் டிவியில் பிரெஞ்சு தாடி வைத்த டாக்டர் ஒருவர் விவரித்துக் கொண்டிருக்கும் போது, அபார்ட்மெண்ட் செக்ரேட்டரி தேவசகாயம் போன் செய்தார். “சுரேஷ் சார், வணக்கம், ஈவினிங் அஞ்சு மணிக்கு நம்ம ஜெனரல் பாடி மீட்டிங் இருக்கு,


சாபம்..!

 

 நான் நண்பர் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதுதான் அவர் பையன் பெரிய துணிப்பையில் எதையோ வாங்கி வந்தான். “என்னப்பா அது…?” என்றேன். “கோதுமை சார் .”என்றான். “எங்கே இருந்து வாங்கி வர்றே..? ” “நியாய விலைக் கடையில சார்” சொல்லிச் சென்றான். அடுத்த வினாடி எனக்குள்ளும் வாங்க வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது. கட்டாயம் வாங்கியே ஆகவேண்டும் ! வீட்டில்…. நான், மனைவி, இரண்டு மகன்கள். ராத்திரி வேளையில் யாரும் சோறு சாப்பிடுவதில்லை. “கோதுமை நியாய விலைக் கடையில்


குற்றபரம்பரை

 

 இந்த காதலர்களும், கல்லூரியில் பட்டம் வாங்கினார்களோ இல்லையோ, காதலில் தேர்ந்துவிட்டனர். ஆனால் இரு குடும்பத்திற்கும் எந்த பொருத்தமும் இல்ல, நெறைய வேறுபாடுகள் கிராமம் நகரம், சாதி, ஜாதகம், பொருளாதாரமென ராக்கெட் விட்டாலும் எட்டாது, பொருந்தாது. ஆனால் வேறு யாருக்கும், எந்த காதலர்களுக்கும் இல்லாத ஒரு பொருத்தம் ஒன்று இவர்களுக்குள் இருந்தது. அதுதான் பெயர் பொருத்தம். இருவரின் பெயரும் சத்யாதான். இருப்பினும் இருவரும் தயங்கி தயங்கியே மூன்று வருடம் ஆகிவிட்டது. ஆனால் “இனி முடியாது சொல்லியே ஆகா வேண்டுமென”


மனு சாஸ்திரம்

 

 (இதற்கு முந்தைய ‘கிளியோபாட்ரா’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). மதுரை மருதன் இளநாகனார் பாடிய இன்னும் ஒரு பாடலில் பெண்ணின் கற்பு தெய்வத் தன்மை உடையது என்றும், அவள் பெறும் மகனால் குடி முழுதும் ஒளி பெறுகிறது (அகம் 184) என்றும் போற்றுகிறார். “கடவுட் கற்பொடு குடி விளக்காகிய புதல்வர் பயந்த புகழ்மிகு சிறப்பின்” என்பன அந்த வரிகள். இது மனுவின் கருத்தை எதிரொலிப்பதாக உள்ளது. இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகிய ராஜேந்திர பிரசாத் நிகழ்த்திய