Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2021

128 கதைகள் கிடைத்துள்ளன.

தேள்

 

 சுந்தாப்பாட்டி கோபித்துக் கொண்டாள்; “ராத்திரி இவ்வளவு நாழி கழிச்சு வந்தால் சேணியத் தெருவழியா வராதேடா ராஜா. மேலத் தெருவழியா வா” என்றாள். “ஏன் பாட்டி?” என்றேன். “ஏன்னு கேட்டால், என்னன்னு சொல்றது. ராத்திரி, அஸ்தமிச்சப்புறம் அந்தப் பக்கமா, தனியா வரப்படாது!” என்றாள் சுந்தாப்பாட்டி. “நான் தனியா வரல்லையே, பாட்டி! அவாத்துச் சர்மாவும் கூட வந்தான்.” “அவன் ஒரு சமத்து! நீ ஒரு சமத்து” என்றாள் பாட்டி. பிறகு சொன்னாள்: “யார்கூட வந்தால்தான் என்ன? பயந்துகொண்டு விட்டால் அப்புறம்


புவனம்

 

 மத்தியானம் மணி மூணை நெருங்கிக்கொண்டிருந்தது. நண்பன் வீட்டை இவன் விசாரித்துக் கண்டுபிடித்துப் போய்க் கதவைச் சொட்டும்போது வந்து திறந்தது எதிர்பாராத, அந்தப் பெண்பிள்ளை. வீடு மாறிவிட்டதோ என்று திகைத்தபோது, “வாங்க” என்று மலர்ச்சியுடன் விரியத் திறந்தாள் கதவை. அவளுக்குப் பின்புறம் கண்களால் துழாவினான். தையல் மெஷினிலிருந்து அவள் எழுந்து வந்திருக்கவேண்டும். “நீங்க வருவீகண்ணு இந்நேரவரைக்கும் காத்துக்கிட்டிருந்தாக; அவசரமா ஒரு இடத்துக்குப் போயிருக்காக. வந்திருவாக இப்பொ ; உக்காருங்க.” தயங்கி, மேலும் வீட்டினுள் பார்த்தபோது நண்பனும் அவன் மனைவியும்


மீனாட்சி நிமிர்ந்து பார்க்கிறாள்

 

 வசந்தா, மீனாட்சியை அடித்தபோது, அடியோசையும் அடித்தவளின் உறுமலுந்தான் கேட்டதே தவிர, அடிபட்டவள் அலட்டிக்கொள்ளவே இல்லை. மீனாட்சி, இரு முழங்கால்களையும் செங்குத்தாக வைத்துக்கொண்டு அவற்றிற்குள் நெருப்புக்கோழி மாதிரி தலையைப் புதைத்துக் கொண்டு இருந்ததால், வசந்தாவிற்கு அவளை அடிப்பது எளிதாக இருந்தது. உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் தந்தை சாமிநாதன் எச்சிற் கையோடு ஏய் நிறுத்து. நிறுத்து என்று கத்திக்கொண்டே துள்ளியோடி வந்தார். மகளைக் கோபமாகப் பற்றி வேகமாக இழுத்தார். “பல்லை ஒடச்சிடுவேன்… கழுதை… அவள் னா ஒங்க எல்லாருக்குமே


உச்சவழு

 

 ஆனைமலை என்று பெயர் இருந்தாலும் அது சமநிலத்தில்தான் இருந்தது. அதிகாலையில் அந்த ஊரில் கார் நின்றபோது அவன் வினோதமான ஒரு பறவைக்குரலை முதலில் கேட்டு, அது என்ன என்ற உணர்வுடன் விழித்துக் கொண்டு, அதை நின்றுகொண்டிருந்த காருக்கு வெளியே ஒரு பால்காரரின் சைக்கிளின் ஊதல் ஒலியென அறிந்தான். உட்கார்ந்து தூங்கியதனால் தோள்கள் இறுகி வலியெடுத்தன. கால்களை இதமாக நீட்டி சோம்பல் முறித்தபின் கொட்டாவிவிட்டபடி இறங்கி கதவைச்சாத்திய ஒலிகேட்டு டிரைவர் திரும்பி ”டீ குடிக்கிறிங்களா சார்?” என்றார். ”இது


உயிர் காத்த கோவூர்கிழார்

 

 திருக்கோவலூர் என்று ஒர் ஊர் திருவண்ணுமலேக்குப் போகிற வழியில் இருக்கிறது. பழைய காலத்தில் அது ஒரு சிறிய காட்டுக்குத் தலைநகராக இருந்தது. காரி என்ற வள்ளல் அந்த நாட்டுக்குத் தலைவனாக விளங்கினான். அந்த நாட்டுக்கு மலையமான் காடு என்று பெயர். மலையமான் என்பது, அதை ஆளும் தலைவனுக்குப் பெயர். காரியை மலையமான் திருமுடிக்காரி என்று சொல்வார்கள். அவனுக்கு உள்ளது சிறிய காடுதான்; ஆனாலும் சேர சோழ பாண்டிய நாட்டுப் பொருளெல்லாம் அவனைத் தேடி வரும். எப்படி என்று


கிருஷ்ண லீலா

 

 குழலோசையைக் கேட்டுக் குதூகலம் கொண்டு, குதித்தோடி வந்த கோமதியைத் தழுவிக்கொண்டு, அருகே வந்து நின்ற அழகு மீனாவின் முகத்தைத் துடைத்து முத்த மிட்டுக் கமலத்தின் கண்களின் அழகைப் புகழ்ந்துரைத்து, அம்புஜம் வரக் காணோமே என்று ஆயாசப்பட்டுக் கோமளத்துக்கு நேற்று இருந்த கோபம் இன்று இல்லை என்று கூறி மகிழ்ந்து, சுந்தரியின் முதுகைத் தடவிக் கொடுத்தான். கோகிலத்தின் கழுத்தை நெறித்து விடுவது போல அணைத்துக்கொண்டான். அருகே வர அஞ்சி சற்றுத் தொலைவிலே நின்ற மரகதத்தைப் போய் இழுத்து வந்து


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 “நாலு வீதிக்கும் பேர் வச்சிட்டாப் போதுமா? அங்கெல்லாம் தேர் சுத்தி வரவேணாமா? டர்னிங்ல தேரைத் திருப்பி விடணுமே; அதுக்கெல்லாம் என்ன ஐடியா வச்சிருக்கீங்க?” என்று விழா வேந்தன் முத்து கேட்க, “ஜப்பான்ல புல்லட் ரயில்களையே ரிமோட் கண்ட்ரோல்ல ஓட்றாங்க. தேரைத் திருப்பி விடறதுதானா பிரமாதம்!” என்றார் புள்ளி சுப்புடு. “தேரோட்டத்தை நம் ஊர்ல எப்படி நடத்தறாங்களோ அந்த மாதிரியேதான் இங்கேயும் நடத்தணும். தெரு முனையில் திருப்பறது கூட நம் ஊர் வழக்கப்படிதான் செய்யணும்.


கற்பனைக் காரிகை

 

 தன் முயற்சியில் சற்றும் மனம் ததளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே! இந்த பயங்கர நடுராத்திரியில் நீ இப்படிப் பாடுபடு வதைப் பார்த்தால் நீ இந்த உலகிலேயே காண முடியாத ஏதோ ஒரு பொருளைக் கற்பனை செய்து கொண்டு அதற்காக அலைந்து திரிகிறாயோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதுபோல சுற்றிய பானுசிம்மன்


கோந்து ஸார்

 

 கோவிந்தசாமி என்ற அவர் பெயர் சிறுகச் சிறுகத் தேய்ந்து, கோய்ந்து, கோந்து என்று மறுவிவிட்டது. பெயர்தான் கோந்தே தவிர, இந்த கோந்து எவருடனும் ஒட்டமாட்டார். அதனால் அவரைக் காக்காய்பிடிப்பது கடினம். இந்தத் தகுதிதான் அவருடைய தொழிலுக்குச் சௌகரியமாக இருந்தது. பாடகிகளோ, நாட்டியமணிகளோ கலை விமர்சகரான அவரைத் தம் இல்லங்களுக்கு விருந்துக்கு அழைத்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, ஜரிகை வேஷ்டி, மனைவிக்கு பட்டுப்புடவை என்று தாம்பாளத்தில் வைத்துக் கொடுப்பது என்றெல்லாம் பலவாறாக முயன்றும், அவர்களால் எந்தப் பட்டமும்


ஓடிய காலங்கள்

 

 காலை மணி பத்துக்கு மேல் இருக்கலாம், நரசிம்மன் பென்ஷன் வாங்க கிளம்பி விட்டார். பாக்கியம் வரும்போது ஏதாவது வாங்கி வரணுமா? உள்ளிருந்து அவரை வழி அனுப்ப வந்த மருமகளிடம் கேட்டார். வேணாம், வேணாம், நீங்க வந்தப்புறம் பாத்துக்கலாம், இப்ப வெயிலு அதிகமா இருக்கே, கொஞ்சம் தாழ்ந்தொன்ன போக கூடாதா? வேணாம், வேணாம், மூணு மணிக்குள்ள ட்ரசரி ஆபிசுக்குள்ள இருக்கணும், இல்லையின்னா நாளைக்கு வர சொல்லிடுவான்.இப்பவே நடக்க ஆரம்பிச்சா ஒரு மணி நேரத்துல போய் சேர்ந்திடுவேன், வயசாச்சில்ல, சொல்லியவாறே