கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2021

158 கதைகள் கிடைத்துள்ளன.

இணைகோடுகள்!

 

 விநாயகா நகைக்கடையில் சத்தியமூர்த்தி நுழையும்போது “வாங்க சார் வாங்க ! ஒங்களைப் பார்த்த பிறகுதான், எனக்கு ஒண்ணாந்தேதியே ஞாபகத்துக்கு வருது சார்‘’ என்று நகைக்கடையில் விற்பனைப் பிரிவில் பணியாற்றும் பையன் வரவேற்றான். “ஆமப்பா சம்பளம் வாங்கியவுடன் நகைச்சீட்டுக்கு பணத்தைக் கட்டணும் இல்லையின்னா, எனக்கு மறந்து விடுதுப்பா. “ என்று காரணத்தை சத்தியமூர்த்தி விளக்கிக் கூறினான். சத்தியமூர்த்தியின் கண்கள் நகைக்கடையில் பணியாற்றும் கீதாவைத் தேடின. அவள் அப்போதுதான் கடையினுள் நுழைந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவன் கண்கள் மலர்ந்தன. கீதாவும்


நம் வீடு..நம் நாடு..நம் பூமி!

 

 திரு.பாலா ஹாலில் அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். இயற்கையான காற்று,… நல்ல தூக்கம். சுமார் பன்னிரண்டு மணியளவில், அவரது மகன் சிவா வீட்டிற்குள் நுழைந்து, நேராக தனது அறைக்கு நடந்து சென்று கதவை மூடினான்… .இந்த வீடு நீண்ட காலமாக லாட்ஜாக மாற்றப்பட்டுள்ளது!! சில நிமிடங்கள் கழித்து, சிவா கழிப்பறைக்குச் செல்ல கதவைத் திறந்து….பாலா தூக்கத்தைக் கெடுத்தான். அவன் தொலைபேசியைச் சுமந்துகொண்டு, கண்களை அதன் திரையில் பூட்டியிருந்ததால் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. “வீட்டிற்குள் இருக்கும்போது கழிவறைகளுக்கு


வட்டம்

 

 தன் உயிருக்குயிரான மனைவியை கொடூரமாக கொன்று விட்டான் ராஜதுரை. மனைவியை சுவற்றில் இடித்து கொல்லும்சமயம், அவன் குடி போதையில் இருந்தான். தன் தவறை உணர்ந்து, மனம் வெறுத்து, தற்கொலை செய்து கொள்ள , ராஜதுரை மாடியிலிருந்து குதித்து விட்டான். ஆனால் இறக்க வில்லை. ராஜதுரைக்கு மூளையில் நல்ல அடி. அவன் தன் சுய நினைவிழந்தான். மீண்டும் கோமாவிலிருந்து மீண்டு வருகையில், அவன் செய்த கொலையைப் பற்றி, ராஜதுரைக்கு எந்த நினைவுமில்லை. அவன் மனைவி பற்றி ஒரு நினைவுமில்லை.


அம்மாவின் பார்வையில்…

 

 என்னங்க! அத்தையை டாக்டர்கிட்டே அழைச்சுகிட்டுப் போயிட்டு வாங்க! அவங்க இரண்டு கண்களிலிருந்தும் தண்ணீ தண்ணீயா வருதாம், உருத்திக்கிட்டே இருக்காம், யாரையும் சரியாக தெரியலைனு சொல்றாங்க! எதுவாக இருந்தாலும் மங்கலாகவும், ஜடப்பொருளாகவும்தான் தெரியுதாம், என்னன்னு டாக்டர்கிட்டே போயி காண்பித்து விட்டு வாங்க, என் தன் கணவன் சேதுராமனை வற்புறுத்திக்கொண்டு இருந்தாள் மனைவி சீதா. இரண்டு கண்களிலும் அறுவை சிகிச்சை செய்தாச்சு, டி வி பார்க்கிறதை குறைக்கனும், இல்லைன்னா கஷ்டம்தான். எனக்கு இருக்கிற வேலையிலே இப்ப முடியாது, ஏன் மதுரைக்கு


சியாமளாவின் எதிர்பார்ப்பு

 

 ராஜேந்திரன் தம்பதிகளுக்கு இப்பொழுது ஒரே கவலை தங்கள் பெண் சியாமளா எப்பொழுது திருமணத்துக்கு சம்மதிப்பாள் என்பதுதான். சில நேரங்களில் இந்த பெண்ணுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோமோ என்கிற கவலையும் வருவதுண்டு. ராஜேந்திரன் தன் மனைவி கமலாவிடம் இதை பற்றி சொல்லி எல்லாம் உன்னால்தான் என்று சத்தம் போடுவார். அதற்கு கமலா இதுக்கு காரணமே நீங்கள் கொடுத்த செல்லம்தான் என்று பதில் கொடுப்பாள். சியாமளா இவர்கள் கவலைப்படுவது போல கல்யாணமே செய்து கொள்ளக் கூடாது என்ற


பொன் மணித்துளிகள்…!!!

 

 கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட விபத்து…!!! பெசன்ட் நகரிலிருக்கும் அஷ்ட லட்சுமி கோவிலுக்கு போவதற்காக பெசன்ட் அவின்யூவில் இளங்கோ பைக்கை ஒடிக்கவும், எதிரில் ராங் சைடில் வந்த ஆட்டோ ஒன்று மோதுவது போல வர, இளங்கோ நிலை தடுமாறி மீடியனில் பைக்கை மோதவும், மங்கை அப்படியே பைக்கின் பின்னாலிருந்து தூக்கி எறியப்பட்டாள்! ஆட்டோவை சிலர் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். இளங்கோ நேராய் அவனை நோக்கி வந்தான். பின்னாலிருந்து “ஸார், ஸார்..உங்க மனைவி…” என்று கத்துவது காதில் விழவேயில்லை. ஆட்டோ


பாவ மன்னிப்பு

 

 வானம் பிளந்து கொண்டதோ என்னமோ …கருக்கொண்ட மேகங்கள் சுமைதங்காது நீர்த்தாரையைத் தெறிக்கவிட்டிருந்தன…..மேகங்களின் கூச்சல் பொறுக்காது மின்னல் சாட்டை கொண்டு வீசிற்று… கடல் அலைகள் பொங்கி வானத்தைத் தொட்டு விடத்துடித்தன ….காற்று ஆவேசம் வந்தது போலச் சுழன்று அடித்தது…..பிரளய காலம் இவ்வாறுதான் இருக்குமோ… வெளி ஆரவாரங்கள் எவையும் அவர் மனதைத் தொடவில்லை ஆனாலும் அவர் மனதிலும் புயல் அடித்துக் கொண்டிருந்தது.அப்புயலில் அகப்பட்ட சிறு இலை போல் அவரது மனம் அமைதியின்றி அலைக்கழிந்து கொண்டிருந்தது.அமுதாவின் உயர்ந்த உள்ளத்தின் முன்னே தான்


ஒரு ஆரம்பம் இப்படி…

 

 குற்றமுள்ள நெஞ்சு… சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, சந்திரன் மேசை மேலிருந்த புது பென்சிலை இயல்பாக எடுத்து பாக்கெட்டில் வைத்தான். நேற்றுதான் வேலைக்கென்று மேசைக்கு ஆறு பென்சில்கள் நிர்வாகம் கொடுத்தது. அதில் ஒன்று… இப்போது சுவாகா ! ‘அப்பாடா!’ – என்று நிமிர்ந்து பார்க்கும்போது சிவா இவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தான். சொரக் ! கை மெய் களவு!! சந்திரனுக்கு உடல் குப்பென்று வியர்த்தது. தர்மசங்கடமாக இருந்தது. ‘எல்லாம் நேரம். தன்னால் வந்த வினை.!’ தலைக் கவிழ்ந்தான்


அவள் பெயர்

 

 ஒரு ஆணின் மொத்த காதலையும் முதல் காதலி பெற்றுக் கொள்கிறாள்.ஆனால் சிலருக்கு அந்த காதல் சக்சஸானது இல்ல,பலர் தன் காதலை காதலிகிட்ட சொல்லாமலே ஒருதலை காதலவே வாழ்ந்திருக்காங்க. அப்படியான ஒரு காதல் பயணம் தான். யாரோ, யாரையோ பெயர் சொல்லி அழைக்கும் போது “அவ தான் நம்மள கூப்பிடுறா அப்படின்னு” நினைச்சு திரும்பி பார்த்த அனுபவம் அவனுக்கு இருக்கு.படிக்கிற புத்தகத்திலயோ, கடையிலேயோ,வேற எங்கேயோ காதலியோட பெயரை பார்த்தா அவனுக்கு மனசுல ஒரு சின்ன சந்தோஷம். இப்படி ஒரு


மனசுக்குள் மடியும் காதல்கள்

 

 சுந்தரேசனுக்கு வயது இருபத்தைந்து. கம்ப்யூட்டர் சயின்ஸில் டிஸ்டிங்ஷனில் மதிப்பெண்கள் பெற்றவன். ஊர் திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பு. அவன் ஒரு நல்ல வேலை கிடைத்து சென்னை வந்ததும், நண்பன் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மார்க்கபந்து மேன்ஷனிலேயே ஒரு தனி அறை எடுத்துத் தங்கினான். தனியறை என்பது மிகப்பெரிய விஷயம். மாதம் பத்தாயிரம் வாடகை. சுந்தரேசன் இயல்பிலேயே மிகவும் தனிமையானவன். தவிர, பெரிய பண்ணையார் வீட்டுப்பிள்ளை என்பதால் இந்தப் பத்தாயிரம் வாடகை அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. மறுநாள் காலையிலேயே வேலைக்கு