கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2021

127 கதைகள் கிடைத்துள்ளன.

புவிராஜசிங்கி

 

 தேதி19 – வெள்ளி. சென்னை வாட்ஸ்அப் வீடியோ அழைத்தது. விடாமல் இசைத்த அதன் ஒலி சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவனுடைய தூக்கத்தைக் கலைத்தது. இருட்டில் தடவி மேசை விளக்கைத் தட்டியதும் அறையில் ஒளி பரவியது. கைப்பேசியைப் பார்த்தான். அஞ்சுவிடமிருந்து அழைப்பு. “தூங்கிட்டு இருக்கேனே, படுக்கறதுக்கு முன்னாடிதானே பேசினேன். என்ன அவசரம்?” “இருக்கு. உன் தூக்கத்தை ஒட்டுமொத்தமாகத் தொலைக்கப்போறே.” வலி நிவாரணத்திற்குச் சாப்பிட்ட மாத்திரையின் போதையும் விண்பயணத்தின் களைப்பும் கலந்து கசங்கிக் கிடந்தவனின் மனத்தினுள் மெல்லிய அச்சம் தோன்றி


பூங்காற்று புதிரானது

 

 பொதினி மலையடிவாரத்திலிருந்து தென் திசை நோக்கி நெடுவேள் ஆவியின் கட்டளையையும் மீறி கிளம்பியது அந்த பூங்காற்று. தென்றலாக வலுவெடுத்த அந்த பூங்காற்றின் கணத்தில் ஆயிரமாயிரம் பூக்களின் வாசம். குறிஞ்சி பூக்களின் வாசத்தையும் அள்ளி எடுக்க நினைத்தது ஆனால் அதற்கு இன்னும் பதினான்கு அயனம் காத்திருக்க வேண்டும் என்பதால் ஏமாற்றம் கொண்டு சென்றது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் வளர்ந்திருந்த வானுயர விருட்சங்களை ஊடுருவியும் அது நிற்கவில்லை. மார்கழி பனியில் வெய்யோனும் குளிரின் கதகதப்பில் இருந்து மேற்கே செல்ல முடியாமல்


காத்திருப்பு

 

 ரயில்பூச்சி ஊர்வது போலத்தான் அவள் அங்கும் இங்குமாக ஊரிக்கொண்டே இருப்பாள். அவளுக்குப் பின்னால் அவளைவிடப் பத்து வயது குறைந்த சிறுமியர் கூட்டம் ரயில்பெட்டிகள் போலச் சென்று கொண்டிருக்கும். சிரிப்பும் கூத்துமாகத்தான் அவர்களின் கூட்டம் அலைந்து கொண்டிருக்கும். ‘அவர்கள் எதற்காகச் சிரிக்கிறார்?’ என்பதை நீங்கள் அறிய வேண்டுமென்றால் நீங்களும் அந்தப் பெட்டிகளுள் ஒன்றாக மாறி, அவர்களின் பின்னே செல்ல வேண்டும். அப்படி நீங்கள் மாறாவிட்டால் அந்தக் கூட்டத்தை நீங்கள் லூசுகளின் கூட்டம் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்குப் புரியவில்லை,


யாருமா இவங்க?

 

 “அம்மா யாருமா இவங்க? இப்படி இருக்காங்க!” “ஓய்… சத்தம் போட்டுப் பேசாத.. அவங்க அசிங்கம்… அவங்களப்பத்தி பேசறோம்னு தெரிஞ்சா நம்மல அசிங்க அசிங்கமா திட்டுவாங்க.. அவங்க பக்கம் பார்க்காத?” “அப்ப அவங்க மனுஷங்க இல்லையாமா?”, என்று கேட்ட விக்னேஷின் கேள்விக்கு, பதில் சொல்லத் திணறி, ‘உஷ்’ என்று உதட்டின் மேல் கைவைத்து அடக்கினாள் கோமதி. *** அடுத்த நாள் கடைவீதியில் விக்னேஷுடன் நடந்து கொண்டிருந்தாள் கோமதி. கைப்பைக்குள் ஆஸ்பத்திரியில் கட்ட வேண்டிய ரெண்டு லட்ச ரூபாய் இருந்தது.


துரோகமான நட்பு

 

 மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது, ஆனால் குளிர் மட்டும் குறையாமல் இருந்தது. சென்னை மாநகரத்தை விட்டு ஐந்தாறு கிலோ மீட்டர் தள்ளியிருந்த அந்த நகரம் இந்த இரவு பதினோரு மணி அளவிலும், வாகனங்கள் குறையாமல் சென்று கொண்டிருந்தன. சென்னைக்கும், உள் தமிழ் நாட்டுக்கும் அது முக்கியமான பாதை ஆதலால் இரவு முழுக்க கூட வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கும். வாகனங்கள் சென்ற அளவுக்கு எதிர் வினையாக ஆட்கள் நடமாட்டம் சுத்தமாக குறைந்து ஒரு வித தூக்கத்தில் இருந்தது அந்த


அத மட்டும் ‘கேக்’காதீங்க…!!!

 

  “அலோ….. கோதண்டராமன் இருக்காரா ????” “இல்லியே…கல்யாணராமனும் பட்டாபிராமனும்தான் இருக்காங்க….” “ஸார்…வெளயாடாதீங்க… கல்யாணராமனெல்லாம் வேண்டாம்…. கோதண்டராமன் இருக்காரா …இல்லையா….?? அத மட்டும் சொல்லுங்க…” “ஸார்…கோவிச்சுக்காதீங்க…. என்ன நம்பர் வேணும் உங்களுக்கு…???” “சத்யன் பேக்கரிதானே…..” “ஆமா…இல்லையில்ல. மறுபடியும் தெளிவா சொல்லுங்க….” “சத்யன் பேக்கரியான்னு கேட்டேன்….” “ஸாரி… ஸார்…இது சத்யம் பேக்கரி ஸார்….” “அத முதல்ல சொல்ல வேண்டியதுதானே…!!!!” “ஸார்… நீங்க முதல்ல என்ன கேட்டீங்க… கோதண்டராமன் இருக்காரான்னுதானே…!!” “ஸாரி ஸார்…போன வையுங்க….!!!!” “ஸார்.ஸார்….இருங்க வச்சிடாதிங்க.!! உங்களுக்கு என்ன வேணும்….???”


க்ளப்

 

 ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணியிருக்கும். பணக்காரர்கள், அரசியல் வாதிகள், பெரிய அதிகாரிகள் ஒதுங்கும் ஒரு கடற்கரை க்ளப். சீட்டாட்டம் , உயர் தர சாராயம், டின்னெர், அரட்டை எல்லாம் அங்கு அரங்கேறிக்கொண்டிருக்கும் நேரம் . எங்கும் கோலாகலம், சந்தோஷம், சிரிப்பு, பணத்திமிர், குடிபோதை. ஒரு ஓரத்தில், கிட்டத்தட்ட பத்து பேர் அமர்ந்து உயர் தர விஸ்கியை உள்ளே தள்ளியவாறு கதை அடித்துக் கொண்டிருந்தனர். முதலாளிகள், பண முதலைகள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபதிகள். பேச்சு பண


இவர்களாலும் முடியும்…!

 

 இருபத்தைந்து வயது கயல்விழி எதிரிலிருக்கும் ஆளுயரக் கண்ணாடியில் தன் அழகுப் பார்த்து, முந்தானையைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டுக் கவர்ச்சியாகச் சிரித்தாள். அதே சமயம்….. உடலை முந்தானையால் மூடி… கவலை தோய்ந்த முகத்துடன் சோகமாக ஒரு பெண்ணுருவம் வாசல்படியில் ஏறுவது கண்ணாடியில் தெரிந்தது. ‘வழக்கமாக இந்த வீட்டுப் படியை ஆண்கள்தானே மிதிப்பார்கள், அதிகமாக வருவார்கள்.! இது என்ன வழக்கத்திற்கு மாறாய் பெண். !! யாரிவள்..? எங்கிருந்து வருகிறாள், வேலைக்காரியா..? வீட்டு வேலை தேடி வருகிறாளா..? இடம் தெரியாமல் வருகிறாளா..?


இரவு வெளிச்சம்

 

 இந்தக் கதையை எழுதலாமா விடலாமா எனப் பலமுறை யோசித்திருக்கிறேன். ஏனெனில் இக் கதையின் முடிவையொத்த வேறொரு கதையை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஓவ்வொருவரது வாழ்க்கையிலும் ஒரே மாதிரியான முடிவையொத்த பல கதைகள் நேர்ந்திருக்கலாம். சில கதாரிசியர்கள்கூட ஒரேவிதமான கற்பனைகளைக் கொண்ட வேறு வேறு கதைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்… எனது கதையொன்றை சினிமாப்படமாக்கிய இயக்குனர் ஒருவர், பின்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ‘நான் அவரது வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தது உண்மைதான்… ஆனால் இது அவரது கதையல்ல… எனது


காரியவாதிகள்

 

 ராஜாராமனுக்கு தற்போது வயது அறுபத்தியேழு. அவருக்கு கடவுள்மீது பெரிய நம்பிக்கையெல்லாம் கிடையாது. தான் உண்டு தன் தினசரி வாழ்வியல் முறைகள் உண்டு என்று அமைதியாக வாழ்க்கையை ஓட்ட விரும்புபவர். எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டார். அவருக்கு சாஸ்திரங்கள், சடங்குகள், பூஜைகள் என எதிலும் நம்பிக்கை கிடையாது. பூணூல் போட்டுக்கொள்ள மாட்டார். மறைந்த அம்மா, அப்பாவிற்கு திவசம் பண்ணமாட்டார். அடுத்தவர்களின் கடவுள் நம்பிக்கைகள் தன் வசதியிலும், சுகத்திலும் தலையிடாதவாறு பார்த்துக் கொள்வார். வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம், டிவி நியூஸ்,