கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2021

145 கதைகள் கிடைத்துள்ளன.

வைக்கோல்

 

 “34 18 59″ “ஆமாம் ஐயா!” “மிஸ்டர் எல்.ஆர். கேட்டன்?” “இல்லை ஐயா! வெளியே போயிருக்கிறார்!” “எப்போது திரும்ப எதிர்பார்க்கப்படுகிறார் என்று தயவு செய்து சொல்ல முடியுமா?” “தெரியாது… நீங்கள் யார் பேசுவது?” “நான் வால்ஸ் (இன்டியா) லிமிடெட்டிலிருந்து சோமசுந்தரம் பேசு கிறேன்… இன்று காலை பத்தரை மணிக்கு – பாம்பே டூ பாராபங்கிக்கான ஒரு கன்ஸைன்மெண்டை எடுத்துக் கொள்வதற்கு இரண்டு லாரிகள் அனுப்புவதாகச் சொல்லியிருந்தார். மணி பத்தே முக்கால் ஆகிவிட்டது. இன்னும் காணோம்…. அது பற்றி


ஐம்பது ரூபாய் அற்றைக்கூலிக்கான துணை நடிகை

 

 அன்றைக்கு நிஷாவுக்கு(அவள் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டபோது சகுந்தலா என்ற அவளின் இயற்பெயரை நிஷா என்று மாற்றியவர் இயக்குனர் குருதேவ்.சகுந்தலா என்ற பெயரை அவளே மறந்து போயிருந்தாள்.அவளின் உறவினரோ, பால்ய தோழிகளோ அவளைத் தெருவில் பார்த்து “ஏய் சகுந்தலா,” என்று எதேச்சையாக அழைக்கும் பட்சத்திலும் அவர் யாரையோ கூப்பிடுகிறார்கள் போலும் என்று தன் போக்கில் நடையை தொடர்ந்தவளாய் இருப்பாள்.சினிமாவுக்குள் நுழைந்துவிட்ட காலந்தொட்டு அவள் நிஷா)பார்வதி வேஷம்.வசனம் ஏதுமில்லை.ஒரு மணி நேரத்தில் சூட்டிங் முடிந்துவிடும்.ஐம்பது ரூபாய் தருவதாக துணை நடிகை ஏஜண்டு


மழை தூறிய ஒரு மாலைப் பொழுது

 

 விழாவிலிருந்து இடைநடுவிலே கிளம்ப வேண்டியதாயிற்று. அப்போதுதான் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி இருந்தன. உடனே கிளம்ப மனம் வரவில்லை . கடுங்கோடையில் எதிர்பாராது வந்த தூறல் மழையில் நனைந்து கொண்டே மேடையில் நிகழ்ந்து கொண்டிருந்த நடன நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தான். ‘ஆனந்த நடனம் ஆடினார்’ பெண் குரலின் இழைவோடு இசை மிதந்து கொண்டிருந்தது. மீசை அரும்பாத பதினைந்து பதினாறு வயது வாலிபனொருவன் ஆடிக்கொண்டிருந்தான் குழைந்து வளைந்து துள்ளிக்குதித்து அபிநயம் பிடித்து ……… துரத்தில் இடி முழங்கிக் கேட்டது. ‘மாஸ்டர்


பாமா படித்துக்கொண்டு இருக்கிறாள்!

 

 கொழும்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலிருந்தவாறே பொழுதைப் போக்க கதைப்புத்தகங்கள் வாசிப்பது என் வழக்கம். வழக்கம்போல அன்றும் அலுமாரியிலிருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து கைகள் பக்கங்களைப் புரட்டியது. அச்செழுத்துக்களுக்கு மத்தியில் அழகான கையெழுத்தில் “பாமா” என்று எழுதியிருந்தது. பாமா – அவள் என் பள்ளித்தோழி. ஏழ வருடங்களுக்கு முன் உடுப்பிட்டியிலுள்ள மகளிர் கல்லூரியொன்றில் இருவரும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தோம். பணக்காரியாக இருந்தாலும் “வாணி! வாணி!” என்று என்மேல் உயிரையே வைத்திருந்தாள். பாமா படிப்போடு மட்டும் நின்று விடவில்லை. நாடகம்,


தெய்வம் பேசாது!

 

 சேகரன் ஒருபடியாகத் தன் மனைவி சுசீலாவை வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டான். ஆனால் அவளுக்கு சுகப்பிரசவமாக வேண்டுமானால் டாக்டர் எழுதிக் கொடுத்திருக்கும் ஊசி மருந்தை வாங்கிக் கொடுத்தே யாகவேண்டும். அதில் மூன்று குப்பிகள் இருக்குமென்றும் அவற்றின் விலை நூற்றிருபத்தைந்து ரூபாவாகும் என்றும் டாக்டர் சுருக்கமாகக் கூறிவிட்டார். ஆனால் பணம்? அவனை நம்பி அத்தனை பெரிய தொகையை யார் கொடுப்பார்கள். மனைவியை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கே அவன் தன் நண்பன் ராசுவிடம் இருந்து ரூபா பத்துப் பெற்றுக் கொண்டான். அவன் கேட்டவுடன் இல்லை


விடிவு

 

 போத்திநாயுண்டுக்கு இன்னும் விடியலை; இவருக்கு மட்டுமில்லை, இந்த ஊர் சம்சாரிகளுக்கும் சுத்துப்பட்டி சம்சாரிகளுக்கும்கூட. இந்த அறுபது வருஷங்களில் இப்படி ஒரு திகைப்பைக் கண்டதுமில்லை கேட்டதுமில்லை இவர். இந்த நாடு நம்மை எங்கே அழைத்துக்கொண்டு போகிறது என்று யோசித்தார். சந்தேகமில்லாமல் சுடுகாட்டுக்குத்தான் என்று சொல்லிக்கொண்டார். போத்திநாயுண்டு மற்றப் பேர் மாதரி இல்லை; கொஞ்சம் படிச்சவர். உலகநடப்பு தெரிஞ்சவர்; பத்திரிகைகளுங்கூட படிக்கிறது உண்டு. ஓரனேர் விவசாயியுங்கூட. இவர் இப்பொழுது நினைக்கிறதையெல்லாம் எழுதுகிறது என்றால்.”ஏர் எழுபது” பாடிய கம்பன் வந்தாலுமே முடியாது.


காமரூபிணி

 

 [1] ரப்பர்மரக்காட்டில் ஒரு சாணியுருளை கிடந்தது. இன்னும் ஒருவாரம் கழித்து அதை எடுத்துப்பார்த்தால் தக்கையாக இருக்கும். உலர்ந்த சாணியின் ஓட்டுக்குள் ரப்பர்மரத்தின் வேர்நரம்புச்சுருள்கள் உருண்டு சுருண்டு சொம்மியிருக்கும். அதை மண்ணுடன் இணைப்பது ஒரு சிறிய வேர்ச்சரடுதான். கடைசித்துளிவரை உறிஞ்சப்பட்டக்கூடு.”லே மக்கா, ரப்பர்ணாக்க நீ என்னண்ணுலே நெனைக்கே மயிரே? அவ யச்சியில்லா? முண்டும்முலக்கச்சயும் இட்ட நம்ம ஊரு யச்சியில்லலே. சட்டையும் காதோலையும் இட்ட கிறிஸ்தியானி யச்சியாக்கும் அவ!” என்றார் நாராயணன் அண்ணன். பொதுவாக தெற்குதிருவிதாங்கூர் முழுக்க யட்சிகளும் நீலிகளும்


சீத்தலைச் சாத்தனர்

 

 சேரன் செங்குட்டுவன் கலைவளம் காணுவதற்காகப் போயிருந்தான். அங்கே வாழ்ந்த மலைவாணர்களாகிய வேடர்கள் மான் கொம்பு, கவரிமானின் வால் முதலிய காணிக்கைகளோடு மன்னனை வந்து பார்த்தார்கள். அப்போது அவர்கள் தாம் கண்ட அதிசயம் ஒன்றை அரசனுக்கு எடுத்துச் சொன்னார்கள். “அரசே, ஒரு பெண் தன் கணவனை இழந்து வந்து, இந்த மலையின் மேல் ஏறி, ஒரு வேங்கை மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது வானவர்கள் விமானத்தில் அவள் கணவனேடு வந்து, அவளை அழைத்துக்கொண்டு சென்றதைக் கண்டோம்” என்றார்கள். அதைக்


விவேகத்தினால் கிடைத்த வெற்றி

 

 தலை நகரில் ஒரு பெரிய பந்தய ஓட்டம் நடந்தது. மேடையின் மேல் அரசன் வீற் றிருந்தான். ஒரு வாலிபனும், ஒரு இளம் பெண்ணும் ஆயத்தமாய் நின்று கொண்டிருந்தார்கள். பக்கத்தில் பந்தய உத்தியோகஸ்தர்கள் எக்காளத்துடன் நின்றார்கள். வாலிபன் மெலிந்திருந்தான். அவன் தலை மயிர் சுருண்டு அவனுக்கொரு தனியழகைக் கொடுத்தது. கால்களும் கைகளும் கடைந்து வைத்த சந்தனக் கட்டைகள் போலிருந்தன. முகத்தில் ஜெயம் பெற வேண்டுமென்ற ஒரு உறுதி காணப்பட்டது. பெண்ணின் உடை வெகு அலங்காரமாயிருந்தது. அவளுடைய வதனத்தில் உடனே


நாக்கிழந்தார்

 

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “தர்மப் பிரபுவே! சாப்பிட்டு நாலு நாட்களாகின்றன; கண் பஞ்சடைந்திருக்கிறது, கைகால்கள் துவண்டு போகின்றன. காது அடைத்துக்கொண்டு போகிறது. மயக்கமாக இருக்கிறது. ஒரு கவளம் கிடைத்தால் உயிர் நிற்கும்.” பஞ்சையின் இப்பரிதாபக் குரலைக் கேட்க, அந்தத் தர்மப் பிரபுவுக்கு நேரம் உண்டா? அவருக்கு எவ்வளவோ தொல்லை, எத்தனையோ அவசரமான ஜோலி. இந்தப் பிச்சைக் கிண்ணி, குறுக்கே நின்றால் அவர் தமது காரியத்தைக் கவனிக்காது இவனுக்கு