கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2013

501 கதைகள் கிடைத்துள்ளன.

ஊரெல்லாம் கூடி…

 

 ஆற்றில் குளிக்க போவதற்காக, சைக்கிளை எடுத்தான் சிவஞானம். தெருவில் சைக்கிளை இறக்கியவன், தெற்கே பார்த்தால், சைக்கிளில் இசக்கி வருவது தெரிந்தது. இசக்கி இந்த நேரம் வந்ததால், சிவஞானம் புரிந்து கொண்டான். இசக்கியின் சைக்கிள் நெருங்கியது; சைக்கிளின் பின், தென்னை ஓலை இருந்தது. “”யாருடே?” என்றான் சிவஞானம். “”நம்ம காபி கிளப் பாட்டையா…” என்றான். “”பிரமநாயகம் பிள்ளையாலே?” என்றான் சிவஞானம். “”பொறகு என்ன… இங்க, பத்துப் பன்னிரண்டு காபி கிளப் இருக்கிற மாதிரி கேக்கேரு.” “”எப்ப டே?” “”காலேல


தாய் மண்!

 

 அது ஒரு குக்கிராமம். தன் பெட்டியை சுமந்தபடி வந்தான் கணேசன். சூரியன், தன் ஒட்டு மொத்த கோபத்தையும், அவனை நோக்கியே காட்டுவது போல், வெயில் சுட்டெரித்தது. வியர்வைத் துளியில், விலை உயர்ந்த அழகான சட்டை கூட நனைந்து, மழையில் நனைந்த கதாநாயகியை போல், உடலோடு ஒட்டிக் கொண்டிருக்க, வாசனை திரவியத்தையும் மீறி, வியர்வை வாடை மூக்கைத் துளைத்தது. “ச்சே… இதுவே சிட்டி என்றால், எத்தனை வண்டி, ஆட்டோ, பஸ், வாடகைக் கார் என, வசதிகள் இருக்கும். ஆனால்,


காலியான கூடு!

 

 வாசலில், பால்காரனின் சைக்கிள் மணி சப்தம் கேட்க, “விடிந்து விட்டதா?’ என்று, அருகில் இருந்த கடிகாரத்தை பார்க்க, அது ஐந்து என காட்டியது. அருகில், ரேணுவின் படுக்கை காலியாக இருந்தது. “எழுந்து விட்டாள் போலிருக்கிறது. பாவம் ராத்திரியெல்லாம் தூங்காமல், மனவேதனையுடன் புலம்பிக் கொண்டிருந்தாள்…’ சமையல் அறையிலிருந்து வரும் காபி பொடியின் நறுமணம், பில்டரில் டிகாஷன் போடுகிறாள் என்பதைச் சொல்லியது. அவரிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. நாட்கள் எவ்வளவு வேகமாக, இறக்கை கட்டி பறக்கின்றன. இதோ, அவரின் வயது, எழுபதை


மாடுகளும் சில மனிதர்களும்!

 

 மாடு கன்றுகளை மேய்த்துத்தான், மகனை படிக்க வைத்தார் இசக்கி. கொடிமுத்து நன்கு படித்தான். உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே, அவன் ஆசிரியர்கள் அங்கலாய்ப்பர். “யோவ் இசக்கி… நீ வெறும் கை நாட்டு; ஒன் மவன் பெரிய படிப்பாளியா… அவன் தான்யா கிளாஸ்லே பர்ஸ்ட். நீ மட்டும் அவனை மேலே படிக்க வெச்சே… அவன் எங்கேயோ போயிடுவான்யா. அவ்வளவு புரிஞ்சிக்கற சக்தி…’ இசக்கியை, இந்த வார்த்தைகள் தான் உசுப்பி விட்டன என்று சொல்ல வேண்டும். “ஏதோ படித்தால்


மென்மையான நினைவு!

 

 ரயில் நிலையத்தின் பிரத்யேக மனித உறவுக் காட்சிகளை, புன்னகையுடன் பார்த்தவாறு நின்றாள் பாவை. சில அம்சங்கள், தாமாக நல்வாய்ப்பாக அமைந்து விடுவதும் உண்டு. இதோ… இந்த ஓரத்து இருக்கையைப் போல. பொதிகை எக்ஸ்பிரசின் தாலாட்டில் தூங்கி எழுந்து, முதல் விடியல் கீற்றை தரிசிக்க இயலும். நகர்ப்புற வாழ்வின் பரபரப்பில், கடைசியாக எப்போது விடியலைப் பார்த்தோம் என்று நினைத்துப் பார்த்தாள். ஐந்து வருடங்களுக்கு முன்… ஒரு கணம் திக்கென்றுதான் இருந்தது. ரமணனை பிரிந்து, ஐந்து வருடங்கள் ஆகின்றன. அப்படியானால்,