கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: January 2013

309 கதைகள் கிடைத்துள்ளன.

மெளனமான நேரம்

 

 ‘தம்… தம்… தம்… பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் எந்தன் சொந்தம் ஓலையில் வேறென்ன சேதி தேவனே நான் உந்தன் பாதி’ – சன்னமான குரலில் இந்தப் பாடலைப் பாடிவிட்டு, ‘இப்ப இந்தப் பாட்டைக் கேக்கறப்ப, அவங்க மனநிலை எப்படி இருக்கும் சார்?’ என கிருஷ்ணமூர்த்தி அண்ணாச்சி கேட்டபோது, நாங்கள் ரயிலுக்காக தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். கடந்த இரு தினங்களாகப் பதிலை எதிர்பாராத கேள்விகளாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார் அண்ணாச்சி. என்னிடம் விடை பெறுவதற்குள் மனதுக்


தமிழ்மணியின் கதை

 

 ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு இந்த வருஷம்தான் பொங்கலுக்குச் சொந்த ஊருக்குக் கிளம்புகிறான் அவன். யார் அவன்… அவன் ஊர் எது… வருஷா வருஷம் பொங்கலுக்குக்கூடப் போக முடியாத அளவுக்கு அவனுக்கு அப்படி என்ன வேலை அல்லது அப்படி என்ன பிரச்னை என்பதுபோன்ற உங்கள் கேள்விகளில் இருந்து இந்தக் கதை தொடங்குகிறது… அவன் பெயர் தமிழ்மணி. பணி, உதவி இயக்குநர். உதவி இயக்குநர் என்றால், ஏதோ ஓர் அரசுத் துறையில் பெரிய பதவி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அவன் திரைப்படத்


சஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்

 

 ”கே.ஏ.அப்பாஸ்தான் அதுக்குக் காரணம். இன்னைக்கும் ராஜ்கபூர் படங்கள்லயே ‘மேரா நாம் ஜோக்கர்’… அதானெ நம்மால மறக்க முடியல. அப்பாஸ லேசுப்பட்டவன்னு நெனச்சுராதெ. ‘ஆவாரா’வும் அவன் கததான்!” – சஞ்சீவி மாமா இப்படித்தான் திடீர் எனப் பாதியில் இருந்து பேசத் துவங்குவார். அதற்கு முந்தைய நாளோ, முந்தைய சந்திப்பிலோ எங்களுடைய உரையாடலின் தொடர்ச்சியாக, விட்ட இடத்தில் இருந்து தொடங்கிப் பேசிக்கொண்டே போவார். அவர் பேசப் பேசத்தான் எனக்கு முதல் நாள் என்ன பேசினோம் என்பது மெள்ள மெள்ள நினைவுக்கு


யாதும் ஊராகி… யாவரும் இல்லாது…

 

 சாலையோர மரங்களின் கிளைகளில் பனி இறங்கி அது இயல்பைவிடவும் தாழக்கிடந்தது. நீண்ட தடுப்பு வேலி களின் மீது இலைகள் நீரைச் சொட்டிக் கொண்டு இருந்தன. குளிர் அவ்வளவாகப் பழக்கம் இல்லாது இருப்பினும், நான் குளிரோடு ஒரு போர் நடத்தப் பழகிக்கொண்டு இருந்தேன். குளிரில் முடங்கிப்போய் வீட்டுக்குள் படுத்துக்கிடப்பது என் குழந்தைகளை மன அழுத்தம்கொள்ளவைக்குமோ என்று நான் அஞ்சியதே அதற்குக் காரணம். அவர் கள் மிகப் புதிதான ஒரு தேசத்துக்கு வந்திருக்கிறார்கள். தங்களுடைய இயல்பான மண்ணையும் மக்களையும் விட்டுவிட்டுத்


ஒற்றைச் சிறகு

 

 உலகம் அழிவதற்கான பிரளயம் பெருக்கெடுத்துவிட்டதுபோல் இரவு முழுவதும் பேரிரைச்சலுடன் மழையின் ஊழிக்கூத்து. பெரியவர் குமரேசன் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டு இருந்தார். மாடி அறையின் கூரை மீது மழை விழும் ஓசை, இரவின் அமைதியை அழித்தது. வெறிகொண்ட பேயின் கொடுங்கரங்களால் அறைபடுவதுபோல் சாளரங்கள் சடசடத்தன. தொலைவில் டிரான்ஸ்ஃபார்மர் வெடிக்கும் சத்தம் இடியின் முழக்கமாக எதிரொலித்தது. அடுத்த கணம் மின் விளக்கு அணைந்து அறையில் இருளின் ஆதிக்கம் பரவியது. குமரேசன் எழுந்து அமர்ந்தார். அவருடைய வாழ்வின் கடைசிப் பொழுது


ஜோக்கர்

 

 அடுத்த ஷோ தொடங்க இன்னும் பத்து நிமிடங் கள்தான் இருந்தன. ஜோக்கருக்குப் பதற்றம் குறைந்திருக்கவில்லை. இன்னொரு பீடியை எடுத்துக் குடித்தான். புகை கூடவே கொஞ்சம் இருமலையும் சேர்த்துக் கொண்டுவந்தது. இந்த ஊருக்கு வந்து டென்ட் அடித்து பதினாறு நாட்கள் ஆகிவிட்டன. வீட்டுக்கு இன்னும் பைசா அனுப்பவில்லை. முன்பெல்லாம் வீட்டைவிட்டுக் கிளம்பி வந்துவிட்டால் திரும்பிப் போகும் வரை என்ன நடந்தாலும் கவலைப்படத் தேவையிருக்காது. ரெண்டு மாசமோ, மூணு மாசமோ எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இப்போது அஞ்சு ரூபாய்க்கும்


வட்டியும் முதலும்…

 

 ஐநாக்ஸில் ‘ஏக் தீவானா தா’ ஷோ! தியேட்டர் முழுக்க பெண்களும் பையன் களுமாக டீன் டிக்கெட்டுகள். படம் திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் போதுகூட மொபைல் மூலம் மெசேஜ், சாட் என்று பரபரப்பாக இருக் கிறார்கள். இன்டர்வெல்லில் ஆளுக்கொரு பக்கம் ”க்ராஷ் மாமா… நோ சான்ஸ்ரா!” என பேசிக்கொண்டு திரிகிறார்கள். ஷேர் ஆட்டோவில் ஏறினால் திமுதிமுவென இன்னொரு காலேஜ் கூட்டம். அத்தனை பேர் கையிலும் மொபைல்கள். கணிசமாக 3ஜி. இதிலும் பாதிப் பேர் இன்பாக்ஸைத்தான் மேய்ந்துகொண்டு இருந்தார்கள். ”மச்சி…


பிருந்தாவனம்

 

 கடையில் இருந்து எடுத்த கண்ணன் பொம்மையை வெவ்வேறு கோணத்தில் திருப்பித் திருப்பி ரசித்துக்கொண்டு இருந்தாள் அண்ணி. அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. வெள்ளிக் கிழமைகளில் கோயிலுக்கு வரும்போது எல்லாம் பொம்மைக் கடைகளில் நிற்பதும் வேடிக்கை பார்ப்பதும் பழகிவிட்டது. எடுப்பாள். ரசித்துப் பார்ப்பாள். விலை கேட்பாள். பிறகு, ஒரு பெருமூச்சோடும் கசந்துபோன புன்னகையோடும் வைத்துவிடுவாள். ”வாங்கு அண்ணி” என்று நானும் பல முறை தூண்டிப் பார்த்துவிட்டேன். ”ஐயையோ… அதெல்லாம் வேணாம்!” என்று வேகமாகத் தலையாட்டி மறுத்துவிடுவாள். ”பொம்மைக்கெல்லாம் செலவாச்சின்னு


ஒரு பெண்ணைக் கொலை செய்தோம்!

 

 ”எங்க வீட்டுக்கு நீங்கதான் போன் பண்ணீங்களா?” கார்த்திகா என்னைப் பார்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டாள். தேகம் முழுக்கக் கருகியிருந்த சருமப் பொசுங்கல்களுக்கு நடுவில் அவளது கண்கள் மட்டும் வெள்ளையாக அலைபாய்ந்தன. ஜீவா மூலம்தான் கார்த்திகா எங்களிடம் வந்து சேர்ந்தாள். நாங்கள் நவீன இலக்கியம், அரசியல் பேசித் திரிந்து டீமாக மாறியவர்கள். டீம் என்றால் அது ஒன்றும் அவ்வளவு பெரிய டீம் இல்லை. நான், ஜீவா, அக்தர் உசேன், என் பெயர் கொண்ட இன்னொரு செந்தில் என்கிற கவிஞர்


தலைமுறை நிழல்கள்

 

 லண்டனில் பனி பொழிந்து கொண்டு இருந்தது. ராமநாதன் தனது வலது கையைக் கன்னத்தில் வைத்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் படுப்பதற்குப் பட்ட சிரமம் அவர் முகத்தில் தெரிந்தது. ‘மகன் கூப்பிட்டபோது லண்டனுக்கு வந்திருக்கக் கூடாதோ’ என்று நினைத்துக்கொண்டார். லண்டனின் தட்பவெப்பம் அவரைப் பாடாய்ப்படுத்தியது. காற்று அதிகமாக அடித்தால் தொண்டைக் கரகரப் பும்; மழை பெய்தால் தும்மலும்; குளிர் வந்தால் இழுப்பும்; வெயில் வந்தால் தலைவலியும் வந்துவிடு கிறது. மார்கழி மாதம்தான் ராமநாதன் லண்டனுக்கு வந்து இறங்கினார். வந்த