பழங்கால மன்னர் அறப்போர் செய்தனர். போருக்கு முன்னர் விடுக்கும் எச்சரிக்கை இது:
“எம் அம்பு புறப்படுகிறது, எச்சரிக்கை !
பசுவையும், பசுவைப் போன்ற பிராமணரும் பெண்டிரும், பிணியாளரும், பொன் போன்ற புதல்வரைப் பெறாதவரும், விரைந்து அரண் சேர்க!” என்று அறஞ்சாற்றி மறம் போற்றும் முதுகுடுமிப் பெருவழுதி வாழ்க!
அவன் படை யானைகள் மேற் பறக்கும் கொடிகள் விண்ணை மூடுகின்றன, கதிரவன் கண்ணையும் மூடுகின்றன!
கூத்தர்க்குப் பொன் வழங்கிக் கடல் தெய்வத்திற்கு விழாக் கண்ட நெடியோன் யார்? அவன் முதுகுடுமியின் முன்னோன்!
அவன் வெட்டிய பஃறுளி யாற்று மணற் பரப்பைப் பாரும்!
அம்மணலிலும் பற்பலவாய்க் குடுமியின் வாழ்நாட்கள் பெருகுக!
- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புடைய சிறுகதைகள்
வேடன் ஒருவன் குளத்தின் அருகில் வலையை விரித்து இருந்தான். அதில் கொஞ்சம் தானியங்களையும் போட்டிருந்தான்.
பல பறவைகள் அந்த வலையில் சிக்கிக் கொண்டன. பறவைகள் பெரிதாக இருந்ததால், வலையோடு பறந்தன. அவற்றைத் தொடர்ந்து வேடனும் ஓடினான்.
வழியில் கிழவன் ஒருவன் வேடனைப் பார்த்து , ...
மேலும் கதையை படிக்க...
பண்டையத் தமிழகம்.
எருதுகள் பூட்டப் பெற்ற வண்டிகளிலே உமணர் உப்பு ஏற்றிச் செல்கின்றனர்.
உப்புப் பொதிகள் மிகவும் பாரம் உடையவை. சக்கரங்கள் கிறீச்சிடுகின்றன.
மேடுகளில் ஏறும் சக்கரங்கள் பள்ளத்தை நோக்கி உருள்கின்றன. நறுக்குப் பள்ளங்களில் வீழ்ந்து உப்புப் பொதிகளைக் குலுக்கின்றன. இளைய எருதுகள் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.
இளமை ...
மேலும் கதையை படிக்க...
"உச்சி வானத்தில் முழு நிலவு ஊர்கிறது. பாணன் காண்கிறான். விறலிக்கு காட்டுகிறான். விறலியோ களிப்பு மிகுதியால் காட்டு மயில்போல் ஆடுகிறாள். ஆகா என்ன அழகு. நீலக் கடல் நடுவே நெருப்புப் பந்து மிதப்பது போல் காட்சியளிக்கிறதே
பாணனும் ஆனந்தக் கூத்தாடுகிறான். ...
மேலும் கதையை படிக்க...
சேரன் சேரலாதனுக்கும் சோழன் பெருவளத் தானுக்கு மிடையே போர் நிகழ்ந்தது. பெருவளத்தான் எய்த கணை, சேரலாதன் மார்பிற் புகுந்து கிழித்து, முதுகில் ஊடுருவிச் சென்றது.
அம்பு பட்டதற்குத் துடிக்காத சேரலாதன் அது முதுகில் ஊடுருவியதற்குத் துடித்தான்....
மார்பிற் புண்படுதல் வீரர்க்கு அழகு; முதுகிற்புண் பட்டால்...
வெட்கம், ...
மேலும் கதையை படிக்க...
காய்ந்த நெல்லை யறுத்து அடித்து, குற்றிச் சமைத்துக் கவளங் கவளமாய்த் திரட்டி யானைக்கு உணவு அளித்தால் சிறு நிலத்தில் விளைந்த நெல்லும் பல நாள் உணவாகும்!
நூறு காணி நிலமாயினும், யானையை மேய விட்டால், அது தின்பது குறைவாகவும், அதன் கால்கள் அழித்து ...
மேலும் கதையை படிக்க...