கதையாசிரியர் தொகுப்பு: வ.அ.இராசரத்தினம்

51 கதைகள் கிடைத்துள்ளன.

காவியம் கண்ட மாவிலித் தேவி

 

  ஆசிரியர் குறிப்பு: ஆறு. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது பழமொழி. அழகிய ஈழமணித் திருநாட்டின் மத்திய பாகத்திலிருந்து ஆறுகள் நானாபக்கமும் பாய்கின்றன. இந்த ஆறுகளிற் பெரியதும் பெருமை மிக்கதும் மகாவலி நதிதான். மாவலி என்றதும் கிழக்கு மாகாணமும்- குறிப்பாக அந்நதி சங்கமமாகும் கொட்டியாபுரக் குடாவும், நதியின் சங்கமத்தில் ஆற்றிடை மேடாய் அமைந்த, மூதூர்ப் பகுதியும் ஞாபகத்திற்கு வருதல் இயல்பு. மூதூர்ப் பகுதி மக்களின் வாழ்வும் வளமுமே அந்நதியேதான்! மத்திய மலை நாட்டில் உற்பத்தியாகி கீழ்க்கரையை


பாலை

 

 (1996 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விண்ணாங்குப் பற்றைகளும், காவிளாய்ச் செடிகளும் – சுண்டம் புதர்களும் மண்டிப் பரட்டைக் காடாய்க் கிடந்த அந்தப் பிராந்தியத்திலே, அந்தப் பாலை மரம் மட்டும். மொட்டை வெளியில் தலை நிமிர்ந்து தோன்றும் இராஜகோபுரம் போல் ஆழத்தில் வேரோட விட்ட இறு மாப்பில் சடைத்துக் கிளை பரப்பி நின்றது. வரண்ட கச்சான் காற்றுச் சுழற்றியடித்து சுற்றுப்புறத்தையே சருகாய் உலர்த்திக் கலகலக்க வைத்துச் சுள்ளிகள் உராயத் தித்தோன்றும்


தகர விளக்கு

 

 (1953 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அறையினுள்ளே புழுக்கமாக இருந்தது. நித்திரை வர வில்லை. ஓசைப்படாமல் எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன். வெளியே நிலவு பால்போல் எடுத்துக் கொண்டிருந் தது. ஆயிரம் ஆயிரம் மின்விளக்குகள் தெருவிலே பிரகாசித்துக் கொண்டிருந்தாலும் பூரணமதி ஒளியின் அழகே தனிதான். இந்தத் தண்ணிலவை இரசிக்கத் திராணியில்லாமல், அறைக்குள்ளே அடைந்து கொண்டி ருக்கும் மனிதப் பிராணிகளின்மேல் எனக்கு இரக்கம் பிறந்தது. பட்டினத்து நாகரீகம்


மறைப்பு

 

 (1989 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தென்னை மரத்தோடு சார்த்தி வைக்கப்பட்டு இருந்த படுதாவில் மைக்கல் சித்திரம் வரைந்து கொண்டு இருந் தான். கடந்த ஒரு வார காலமாக அவனுக்குச் சரியான ஊண் இல்லை, உறக்கம் இல்லை. வண்ணங்களைச் சேர்ப் பதும் வரை வதுமாகவே இருந்தான். அவன் இயல்பே அப்படித்தான். சித்திரக்கலையிற் தன்னை மறந்து மூழ்கிவிடும் இயல்பினாற் தன் உயர் கல்வியையே குழப்பிக் கொண்டவன் மைக்கல். ஆனாலும் அவனது கல்லூரி


a+a=2a ஆயின் கதை + கதை = இரு கதைகளல்ல

 

 (1970 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘பொறி காணலவனொடு மீனமுங் குறையாச், செறி மாண் கழிசூழ் புளியந்துருத்தி மட்டக்களப்பு’ எனப் புலவராற் பாடப் பெற்ற மட்டக்களப்பின் அவாசிக் கண்ணதாய கல் முனையிலே பகுதிக் காரியாதிகாரி கந்தோரில் எழுத்தராகக் கடமையாற்றிய சிவஞானம் அவர்கட்கு அதே புலவரால் ‘நிரை கழலரவ நிறைமொழி பெறீஇக் கோணா தோங்கிய கோணமாமலை’ எனப் பாடப் பெற்ற திரிகோணமலையின் குண திசைக் கண்ண தான தம்பலகாமம் பகுதிக் காரியாதிகாரி


குழப்பம்

 

 (1994 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அடுத்த வீட்டுச் சேவலுக்கு எப்போதுமே அவசரம். நேர காலத்தோடு கூவி விட்டது. அதன் கூவலைக் கேட்டு வேதநாயக வாத்தியார் துயில் நீங்கி விட்டார். இனிமேற் படுக்கையிற் கிடக்கவும் முடியாது… படுக்கையிலிருந்து எழுந்து சுவிச்சைத் தட்டி ஒளியேற்றினார். நேற்று வாசிக சாலையிலிருந்து கொண்டுவந்த சரத்சந்திரரின் ‘கமலா வின் கணவன்’ என்ற நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினார். விட்ட இடத்தை மறந்து விடா மல்


மீண்டும் காந்தி பிறப்பார்

 

 (1962 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழமை போற் தேவநாயக வாத்தியார் அதிகாலை யிலேயே விழித்துக் கொண்டாலும் இன்னமும் படுக் ‘கையை விட்டு எழுந்திருக்கவில்லை. புரட்டாசி மாதத்துத் தலை மழை பெய்து தரை நனைந்ததும், நனையாதது மாகத் தன் வீட்டுத் தோட்டத்தை நேற்றுச் சாயந்தரம் முழுமையுமே கொத்திப் புரட்டியதில் உடம்பெல்லாம் அலுப்பாக இருந்தது அவருக்கு. மூப்படைந்து விட்ட வாழைப் பாத்திகளை எல்லாம் அழித்து இம்முறை அந் நிலத்திலே நிலக்கடலை பயிரிட


வேர்கள்

 

 (1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விசுவவங்கத்தார் கொழும்புக்குப் போனார். அவர் கொழும்புக்குப் புதியவரல்ல. எண்பத்தி மூன்றாம் ஆண்டு வரையுள்ள இருபத்தைந்து ஆண்டுகள் கொழும் பிலே வாழ்ந்தவர். பிந்திய காலப்பகுதியில் அவர் ஒரு அரசாங்கத் திணைக்களத்தின் பிரதம கணக்காளர் என்ற உயர் பதவி வகித்தார். ஆனால் எல்லார்க்கும் பெய்த மழையாய்க் கொழும் பிலே தமிழர்களுக்கு அடி விழுந்தபோது அவரது நான்கு புத்திரர்களும் எப்படியோ ஒப்பிண்விசாவில் அகதிகளாக வெளிநாடு சென்று விட்டனர்.


வலை

 

 (1992 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குடாக்குடல் உள்வாங்கி தெடுந்தூரம் ஓடி உப்பங்கழி யாய்ப் பரந்து கிடந்தது அந்த உப்பங்கழியின் சங்கமத் திட்டில், மணல் மேடையில் நான் நின்று கொண்டிருந் தேன். உப்பங்கழியில் வீச்சு வலை வீசி மீன் பிடித்துக்கொண் டி.ருந்தவர்கள் ஒவ்வொருவராகத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். காலை நேரத்து வெய்யில் முதுகுத் தோலை உரித்து விடுவது போலச் சுள்ளென் றடித்துக் கொண்டிருந் தது. சூரிய கிரணங்களைத் தன்னுட் பிரதபலித்துக் குடாக்கடல்


பாசம்

 

 (1953 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆயிரந் தலைகளையும் உயர்த்திக்கொண்டு சீறி வரும் தாகேந்திரனைப் போலக் கடல் பொங்கி குமுறியடித்துக் கொண்டு இருந்தது. அநாதியான கடவுளைப் போல ஓயாது குமுறியடித்துக் கொண்டு இருக்கும் பொங்குமாங் கடலின் இரைச்சலோடு போட்டியிட்டுக் கொண்டு, மரக் கலந் தரும் செல்வப்பொருட்டால் தாம் பிறந்த நிலத்தை விட்டுப் போந்த பரதேசிகள் பலரின் குரலும் சேர்ந்து ஒலித்தது. பொன்னும் மணியும், தூசுந் துகிரும், பூவும் புகையும், சுண்ணமுஞ்