கதையாசிரியர் தொகுப்பு: கோதண்டபானி நிரஞ்சலாதேவி

37 கதைகள் கிடைத்துள்ளன.

மனசுக்குள் மத்தாப்பு

 

 விடியக் காலை கவிநயா மெதுவாக நரேன் பக்கம் திரும்பி படுத்தாள்,அவன் அவளை அணைத்துக் கொண்டான்,அவன் தலை முடிக்குள் விரலை விட்டு மெதுவாக கோதினாள்அவள்,கண்ணத்தை மெதுவாக வருடிய அவனின் கைகள்,கழுத்தை நோக்கி இறங்கியதும் வேண்டாம் இப்போது என்றாள் அவள்,ஏன் என்றான் அவன்,இல்லை எழும்புவதற்கு நேரம் சரியென்றாள் அவள்,அதற்கு இன்னும் நேரம் இருக்கு என்று அவளை மேலும் இருகமாக அணைத்துக் கொண்டான் அவன்,ஏன் இரவு போதவில்லையா? என்றாள் மெதுவாக அவன் காதுக்குள்,அது எப்படி போதும் எவ்வளவு கொடுத்தாலும் பத்த மாட்டேங்குது


பதவி

 

 நம்பிநாதன் ஆபிஸ் நாற்காலியில் கம்பிரமாக உட்கார்ந்து இருந்தார்,கம்பனி உரிமையாளருக்கான எல்லா தகுதிகளும் அவரிடம் இருக்கு என்று நினைக்க வைக்கும் தோற்றம் அவருடையது,உயரம்,மாநிறம்,உடல் பயிற்சி செய்யாத உடல் எடை,கண்களின் ஊடுருவும் தன்மை,பார்ப்பதற்கு மற்றவர்கள் பயப்படுத்தும் தோற்றம்,எதிரில் நிற்க கூட சிலர் தயங்குவார்கள்,கரடுமுரடான தொண்டையில் பேசும் ஆங்கிலம் கூட கத்துகின்ற மாதிரியே இருக்கும் மற்றவர்களுக்கு,அந்த பயத்தில் நடுங்கி தான் போவார்கள் அனைவரும்,அவருக்கு கீழ் வேலை செய்பவர்கள் அவரை கண்டால் கப்சுப் என்று அடங்கிவிடுவார்கள்,அவர் ஆபிஸில் வந்து உட்கார்ந்தால்,ஒரு சின்ன சத்தம்


கனவுகள்

 

 கல்பனா வெளியில் விளையாடிக் கொண்டு இருந்தாள்,அவளின் அம்மா கேதீஷ்வரி கல்பனாவை சாப்பிட கூப்பிட்டாள்,வாரேன் அம்மா என்று பாதியில் விளையாட்டை விட்டு வர மனம் இல்லாம் எழுந்து வந்தாள் அவள்,என்னடி காலையில் இருந்து கொளுத்தும் வெயிலில் விளையாட்டு என்று அதட்டினாள் பரமேஷ்வரி,நான் வெயிலில் விளையாட வில்லை,அம்முவுடன் பல்லாங்குழி தான் விளையாடினேன் என்றாள் கல்பனா,உனக்கும் அவளுக்கும் வேறு வேலையே இல்லை,சேர்ந்து படிக்க மட்டும் போகாதே,விளையாட மட்டும் ஓடி விடு என்றாள் அம்மா,இன்னைக்கு சனிகிழமை தானே,எந்த நாளும் படிக்க முடியாது,அதனால் தானே


எதிர்காலம்

 

 முரளி கண்ணில் கறுப்பு கண்ணாடி,கையில் வெள்ளை பிரம்பு மூன்று மாதங்களுக்குப் பிறகு யாரின் துணையும் இல்லாமல் முதல் தடவையாக வெளியில் அடியெடுத்து வைக்கும் முரளி மனதில் ஆயிரம் குழப்பங்கள் மெதுவாக வெள்ளை பிரம்பை ஊன்றியப் படி பாதையோரம் நடக்கத் தொடங்கினான் அவன்,பின்னாடி வரும் மிதி வண்டிகாரர்களின் மணியோசை கொஞ்சம் அதிகமாகவே கேட்டது,யார் மீதும் மோதி விடுவோமோ என்ற பயம் மனதில் எழுந்தது,அவசரமாக வரும் மிதிவண்டியில் மறுப்படியும் அடிப் பட்டு விட்டால் என்ன செய்வது அதை நினைக்கும் போது


துரோகம்

 

 ஜகன் மஞ்சரியின் தலையை தடவி விட்டு,நெற்றியில் அழுத்தமாக முத்தத்தை பதித்துவிட்டு வேலைக்கு செல்ல ஆயத்தமானான் என்னங்க கதவை பூட்டி விட்டு போய்விடுங்கள் எனக்கு எழும்புவதற்கு சோம்பேறித்தனமாக இருக்கு என்றாள் மஞ்சரி,சனிகிழமை என்றாலே உனக்கு எழும்புவதற்கு நினைவு வராதே சரி சரி நீ படு நான் கதவை பூட்டி விட்டு சாவியை எடுத்துக் கொண்டு போறேன் உன்னிடம் இன்னொரு சாவி இருக்கு தானே என்றான் ஜகன் ஆமாம் இருக்கு லைட்டை அனைத்துவிட்டுப் போங்கள் என்றாள் மஞ்சரி,அவன் சரியென்று சென்று


கணவன்

 

 அன்று ஞாயிற்றுகிழமை,எழில் கண்விழித்துப் பார்க்கும் போது,மணி எட்டு அருகில் கணவன் மதி இல்லை.பக்கத்து அறையில் மேனகாவும்,மோகனாவும் தூங்கி கொண்டிருந்தார்கள்.எழில் குளியலறை சென்று குளித்து முடித்தாள்.தன் உடையை மாற்றிக்கொண்டு கண்ணாடி முன் நின்றாள்,எப்போதும் புன்னகை தவழும் முகம் அவளுடையது,எதற்கும் அதிகளவு கோபபடமாட்டாள்.தன்னை ஒரு முறை ரசித்துக் கொண்டவள்,குங்குமத்தை எடுத்து வைத்துக்கொண்டு,தலையை துவட்டியப் படி சமையல் அறைப் பக்கம் வந்தாள் அவள் மதி மும்மரமாக சமைத்து கொண்டிருந்தான்,என்ன பன்னுறீங்கள் என்ற கேள்வியுடன் அங்கு கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் எழில். என்ன


கல்வி

 

 சரண்யா கண் விழித்துப் பார்கிறாள்,அருகில் அமர்ந்திருந்தான் கார்த்திக்.வீட்டுக்குப் போவோம் என்றாள் அவள்,சரி போவோம் டாக்டர் வந்து பார்த்தப் பிறகு போகலாம் என்று அவளின் தலையை தடவினான் அவன்,இதையே எத்தனை தடவை தான் சொல்லுவீங்கள் என்று எரிச்சல் பட்டாள் சரண்யா,சரி போகலாம் இப்ப சாப்பிடுறீயா? என்று அவன் கேட்டான்,எனக்கு சாப்பாடு வேண்டாம்,நான் வீட்டுக்குப் போகவேண்டும் என்று அடம் பிடித்தாள் சரண்யா.சரி,சரி இன்னைக்கு மாலையில் போய்விடலாம்,இப்ப சாப்பிடு என்று அவன் சொன்னதும் உண்மையாகவா!என்று கேட்டாள் அவள்.ஆமா நீ அடம் பிடிக்காமல்


வார்த்தைகள்

 

 காலை ஐந்து மணி குமுதினி மெதுவாக எழுந்து உட்கார்ந்துக் கொண்டாள்,தூக்கம் வரவில்லை பக்கத்தில் அவளின் பேரக் குழந்தை ஐஸ்வரியா தூங்கி கொண்டு இருந்தாள்,அவள் தலையை மெதுவாக தடவி விட்டாள் குமுதினி,மாநிறம் அடர்த்தியான முடியை இருக்கமாக பின்னி போட்டிருந்தாள் ஐஸ்வரியா,ஒரு கையை பாட்டி மேல் போட்டு படுத்து கிடந்தாள் அவள்,எவ்வளவு அன்பான குழந்தை காதம்பரிக்கு இப்படி ஒரு மகளா என்று நினைக்கும் போது குமுதினிக்கு ஆச்சிரியமாக தான் இருந்தது,காதம்பரி ரமேஷின் மனைவி,குமுதினி மகாலிங்கத்தின் ஒரே மகன் ரமேஷ்,அவன் படிப்பை


அனுபவம்

 

 கிருபாஷினி புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தாள்,யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது எழுந்துப் போய் கதவை திறந்தாள்,அவளின் மாமியார் அபிராமி நின்று கொண்டு இருந்தாள்,வாங்கள் அத்தை எப்படி இருக்கீங்கள் ஒரு போன் கூட பன்னவில்லை வருவதாக என்றாள் கிருபாஷினி,மகன் வீட்டுக்கு வருவதற்கு எதற்கு தகவல் சொல்லனும்,நினைத்தேன் கிழம்பி வந்துட்டேன் என்றாள் அபிராமி,உங்கள் மகன் வீட்டுக்கு வருவதற்கு தகவல் சொல்ல தேவையில்லை தான்,நான் வீட்டை பூட்டி விட்டு வெளியில் போய் இருந்தால் நீங்கள் வந்து வெளியில் நிற்கனுமே அதனால்


இடைவெளி

 

 காமாட்சி காப்பி போட்டுக் கொண்டு இருந்தாள்,என்னம்மா இவ்வளவு நேரம் காப்பி போடுவதற்கு,எனக்கு வேலைக்கு போவதற்கு லேட் ஆகிறது என்றாள் சுபத்திரா,அவளுக்கு வேலைக்கு போகும் அவசரம்,காமாட்சிக்கு காப்பி போடும் அவசரம்,நீ இப்படி சமைத்து விட்டு பாத்திரங்களை போட்டு வைத்தால் நான் எங்கு வைத்து காப்பி போடுவது என்றாள் பதிலுக்கு,சரி சரி காப்பியை போட்டுத் தா,நான் உடுத்தப் போகிறேன் என்றாள் சுபத்திரா எனக்கு அப்படியே காலை சாப்பாட்டையும் பகல் சாப்பாட்டையும் கட்டி எடுத்து வைத்து விடு என்று கூறி விட்டு