உயிர் உள்ளவரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 3,543 
 

மேனகா கடல்கரையில் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்,மாலை நேரம் வானம் சிவந்து இன்னும் பல வர்ணங்களுடன் அழகாக காட்சியளித்தது,பறவைகள் வேகமாக தன் இருப்பிடத்தை நோக்கி பறந்துக் கொண்டிருந்தது,அலைகள் வேகமாக வந்து கரையை மோதிவிட்டு சென்றது,சுண்டல்காரன் அவன் வியாபாரத்தை மும்மரமாக கவனித்துக் கொண்டிருந்தான்,வாரநாள் என்பதால் அன்று சற்று கூட்டம் குறைவாகவே இருந்தது,இதுவெல்லாம் மேனகா பார்வைக்கு பட்டாலும்,ஏனோ எதையும் ரசிக்க தோன்றவில்லை அவளுக்கு,ஏன் இப்படி நடந்தது என்ற கேள்வி மட்டுமே அவள் மனம் முழுவதும் நிறைந்து இருந்தது,பித்து பிடித்தவள் போல் உட்கார்ந்து இருந்தாள்,எப்படி ஏமாந்தேன்,ஏன் நல்லவன் என்று நம்பினேன்,எப்படி நம்பிக்கை துரோகம் பன்னினான் என்பதை தவிர அவள் நினைவில் வேறெதுவும் இல்லை தற்போதைக்கு,கண் கலங்கியது,எவவளவு நம்பினேன்,இப்படி நம்பிக்கை துரோகம் பன்னி விட்டானே என்று மனம் கலங்கியது,நம்பிக்கை துரோகம் அவன் பன்னவில்லை,நான் பன்னியிருக்கேன் அதற்கு தண்டனை இது,என்று அவளே நினைத்துக் கொண்டாள்

நான் என் கணவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தேன்,அவன் எனக்கு அதையே செய்து விட்டான்,கணக்கு சரியாகப் போய்விட்டது,இதில் அவனை மட்டும் குற்றம் சொல்வதிலும் அழுவதிலும் எந்த அர்த்தமும் இல்லையென்று அவள் மனதை கொஞ்சம் ஆறுதல் படுத்திக் கொண்டாள்,இந்த மூன்று நான்கு நாட்கள் மேனகாவிற்கு பைத்தியம் பிடிக்காத குறை மட்டும் தான்,அந்தளவிற்கு அவள் ஆடிப் போய் இருந்தாள்,அவளின் போன் ரிங் ஆகியது,எடுத்துப் கதைப்பதற்கு தோன்றவில்லை,அமைதியாக இருந்தாள்,மறுப்படி மறுப்படி ரிங் ஆகியதும் கையில் போனை எடுத்துப் பார்த்தாள்,மகள் தாரா,உடனே போனை எடுத்து ஹலோ என்றாள்,அம்மா ஆபிஸ் முடிந்து இவ்வளவு நேரம் காணவில்லை,எங்கு இருக்கீங்கள்,நானும் சாராவும் வீட்டில் தனியாக இருக்கின்றோம்,அப்பாவையும் இன்னும் காணவில்லை,எத்தனை மணிக்கு வருவீங்கள் என்றாள் அவள்,உடனே மேனகா எழுந்து விட்டாள்,இப்போது வந்து விடுவேன்,கதவை பூட்டிவிட்டு உள்ளே இருங்கள்,வரும் போது தோசை வாங்கிட்டு வந்து விடுறேன்,அது மட்டும் நீயும் தங்கையும் படித்துக் கொண்டு இருங்கள் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டு ஆட்டோ பிடிப்பதற்கு அவசரமாக நடந்தாள் மேனகா

அப்போது மறுப்படியும் போன் ரிங் பன்னியது,தற்போது அவள் கணவன் பரமேஷ்வரன் போனை எடுத்து சொல்லுங்கள் என்றாள் அவள்,இன்னும் நீ வீட்டுக்கு வரவில்லை என்று சாரா எனக்கு போன் பன்னினாள்,தற்போது எங்கு இருக்க,நான் வந்து பிக்கப் பன்னிக்கவா என்றான் அவன்,வேண்டாம் நான் ஆட்டோவில் வந்து விடுவேன்,நீங்கள் தோசை மட்டும் வாங்கிட்டு போய் விடுங்கள் என்றாள் அவள்,அவன் சரியென்று போனை வைத்து விட்டான் மேனகா பெருமூச்சி விட்டாள்,வந்த ஆட்டோவில் ஏறி சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டாள் அவள்,அம்மா நினைவு வந்தது அவளுக்கு,அன்று அம்மா எனது முதல் காதலுக்கு ஒத்துக் கொண்டு இருந்தால்,இன்று எனக்கு இவ்வளவு ஏமாற்றமும்,பிரசினையும் இல்லை,மறுப்படியும் பரமேஷ்வரனின் காதலில் சிக்கியிருக்க மாட்டேன்,எல்லாம் தலைகீழாக போய்விட்டது,பரமேஷ்வரனை கைபிடித்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது,எட்டு வயது தாரா,ஆறு வயது சாரா இரண்டு குழந்தைகள் இருக்கும் போது,மறுப்படியும் முதல் காதலன் அருணை சந்தித்தது எவ்வளவு பிரச்சினையில் கொண்டுப் போய் விட்டிருக்கு என்று நினைக்கும் போது,அம்மா நீங்கள் இறங்கும் இடம் வந்துவிட்டது என்று ஆட்டோகாரன் நினைவு படுத்தினான்,அவள் பணத்தை கொடுத்து விட்டு இறங்கி கொண்டாள்

அவளுக்கு முன்பதாகவே பரமேஷ்வரன் வீட்டுக்கு வந்து விட்டான்,மேனகா வரும் போது கதவு திறந்திருந்தது,அவளை கண்டதும் இரண்டு பிள்ளைகளும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்,ஏன்னம்மா இவ்வளவு நேரம் என்றார்கள்,எனக்கு கொஞ்சம் ஆபிஸ் விடயமாக வெளியில் போகவேண்டியிருந்தது அதனால் லேட் ஆகிவிட்டது,நீங்கள் இரண்டு பேரும் சாப்பிடுங்கள் என்றாள் மேனகா,நீங்களும் வந்தப் பிறகு சாப்பிடுறோம்,நீங்கள் முதல் குளித்து விட்டு வாருங்கள் என்றார்கள் அவர்கள்,மேனகா அவசரமாக தண்ணியை அள்ளி ஊற்றிக் கொண்டு வந்தாள்,அனைவரும் அமைதியாக சாப்பிட்டு முடித்தார்கள்,பரமேஷ்வரன் மேனகாவிடம் ஏன் இரண்டு மூன்று நாட்களாகவே உன்னுடைய முகமே சரியில்லை ஏதாவது பிரச்சினையா என்றான்,அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது,இல்லை அப்படி எதுவும் இல்லை,வேலை மாற்றம் அதனால் என்று சமாளித்தாள்,பழைய ஆபிஸீல் தானே தற்போது வேலை,பிறகு என்ன பழகிய இடம் தானே என்றான் அவன்,ஆமாம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு,பழகிவிடும் என்றாள்,சரி போய் படு என்றான் அவன்,பிள்ளைகளுக்கு நான் பால் கலந்து கொடுக்கிறேன் என்றான் அவன்,பரவாயில்லை நானே கலந்து கொடுத்து தூங்க வைக்கிறேன் என்று அவள் சமையலறை பக்கம் சென்று விட்டாள்

சற்று நேரத்தில் இருவருக்கும் பாலை காய்ச்சி எடுத்து வந்து குடிக்க கொடுத்து விட்டு பிள்ளைகளிடம் அன்று பாடசாலையில் நடந்த விடயங்களை கேட்டு தெரிந்துக் கொண்டாள்,ஹோம்வொர்க் ஏதும் செய்வதற்கு ஹெல்ப் பன்னனுமா என்றாள் மேனகா

இல்லை அம்மா இப்போது செய்வதற்கு எதுவும் இல்லை,நாளைக்கு சனிகிழமை தானே ஆறுதலாக செய்யலாம் நீங்கள் போய் படுங்கள் அம்மா என்றார்கள் பிள்ளைகள்,மேனகா பிள்ளைகளை படுக்க வைத்து விட்டு,அவள் போய் கட்டிலில் சாய்ந்தாள்,பரமேஷ்வரன் டீவி பார்த்துக் கொண்டு இருந்தான்,சற்று நேரத்தில் அயர்ந்து தூங்கிவிட்டாள்,இடையில் திடுக்கிட்டு எழுந்தாள்,ஏதோ கெட்ட கனவு,முகம் எல்லாம் வேர்த்துப் போனது,பக்கத்தில் பரமேஷ்வரன் குரட்டை சத்தத்துடன் தூங்கி கொண்டு இருந்தான்,அந்த சத்தத்தில் மறுப்படியும் தூங்குவதற்கு அவளுக்கு பிடிக்கவில்லை,மெதுவாக எழுந்துப் போய் பக்கத்து அறையில் கிடந்த கட்டிலில் சாய்ந்தாள்

அவளுக்கு இது நாள் மட்டும் நடந்தவைகள் எல்லாம் படமாக ஓடியது,முதல் முதல் காலேஜில் அருணை சந்தித்த நாள் மறக்கமுடியாது,லெக்சர் ஹோலுக்கு எப்படி போவது என்று தடுமாறி நின்றப் போது,அருண் அந்தப் பக்கம் வந்தான்,மேனகா மெதுவாக எக்ஸ்க்யூஸ் ஹோலுக்கு எந்தப் பக்கம் போகனும் என்றாள்,நீங்கள் எந்த பிரிவு என்றான் அவன்,ஆர்ட்ஸ் என்றாள்,நேராக போய் இடது பக்கம் திரும்பி நடந்தால் கடைசியாக வரும் என்றான்,அவள் அவனுக்கு அவசரமாக தேங்ஸ் கூறி விட்டு,நடையும் ஓட்டமாக சென்றாள்,அன்று காலேஜ் முதல் நாள் வேறு,படபடப்பாக இருந்தது,போய் ஒரு இடத்தி்ல் உட்கார்ந்துக் கொண்டாள்,பல மாணவர்கள் இருந்தார்கள்,அவர்களை பார்க்கும் போது இவளுக்கு வேர்த்தது,அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்,பக்கத்தில் இருந்த ஒரு மாணவி தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டாள் அழகேஸ்வரி என்று,மேனகா பதிலுக்கு பெயரை கூறினாள்,சற்று நேரத்தில் அவர்களை வகுப்பிற்கு போகும் படி கூறினார்கள்,எல்லோரும் பிரிந்து அவர்கள் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து நின்று கொண்டார்கள்,அப்போது அந்த அந்த வகுப்பு மாணவர்களை அவர்களின் பேராசிரியர்கள் அழைத்து சென்றார்கள்,அப்போது ஓரளவிற்கு மேனகாவிற்கு பயம் போய்விட்டது,அவளின் வகுப்பு பேராசிரியர் சஜ்ஜனா எல்லோரிடமும் அன்பாக கதைத்தார்கள்,பகல் லன்ஞ் டைம் சாப்பிட போகும் போது மறுப்படியும் அருணை கண்டாள் மேனகா

அவன் இவளை நோக்கி வருவதை கவனித்த மேனகா சற்று நடுங்கி போனாள்,அவன் வந்து ஹாய் எனது பெயர் அருண்,உங்களுக்கு இந்த காலேஜ் பிடித்துருக்கா என்றான்,அவள் தடுமாறி இப்போது தானே வந்து இருக்கேன்,போக போக தான் தெரியும் என்றாள்,உங்கள் பெயர் என்றான் அவன்,மேனகா என்றாள்,நான் ஆர்க்கிடெக்சர் இரண்டாம் ஆண்டு என்றான் அவன்,உங்கள் காலேஜில் ரேகிங் எல்லாம் இல்லையா என்றாள் அவள்,ஏன் உங்களை யாரும் ரேகிங் பன்னனுமா என்றான் அவன்,இல்லை இல்லை அதற்கு பயந்து தான் நான் காலையில் லேட் ஆகி வந்ததும் என்றாள்,முன்பு இருந்தது,அதன் பிறகு ரேகிங் பிரச்சினையால் ஒரு மாணவன் இறந்து விட்டான்,அதன் பிறகு நம் காலேஜில் ரேகிங் பன்னக் கூடாது என்று ஓடர் என்றான் அவன்,அதுவும் ஒரு விதத்தில் நல்லது என்று மனதில் நினைத்துக் கொண்டாள் அவள்,வெளியில் ஏதும் சொல்லவில்லை சரி எனக்கு டைம் ஆகுது என்று அவன் சென்று விட்டான்

அப்படி ஆரம்பித்தது அவர்கள் நட்பு,இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள் எப்போது அது காதலாக மாறியது என்று தெரியவில்லை,நாட்கள் சென்றது மேனகா அருண் காதல் எந்த பிரச்சினையும் இல்லாமல் போனது,மேனகா கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்தவள்,ஓரே அண்ணா அப்பா தனியார் கம்பனி வைத்திருக்கார்,அருண் குடும்பம் கொஞ்சம் வசதி குறைந்தவர்கள்,அப்பா பலசரக்கு கடை வைத்திருக்கார்,ஒரு அக்கா தம்பி என்று சிறிய குடும்பம் அவர்களுடையதும்,மேனகா காதல் அவர்கள் வீட்டில் தெரிந்து அம்மா ராஜேஷ்வரி வீட்டை இரண்டு படுத்தி விட்டாள்,அருணைப் பற்றி எல்லாம் விசாரித்து விட்டதாகவும்,அவர்கள் குடும்பம் அடிமட்டத்து குடும்பம்,அவர்கள் நமக்கு ஒத்து வராது இதை ஒரு நாளும் நாங்கள் ஏத்துக் கொள்ள மாட்டோம்,அதை மீறி கட்டுவதென்றால் எங்களை மறந்து விடு,அதன் பிறகு இந்த வாசல் படி மிதிக்க கூடாது என்று பிடிவாதமாக கூறிவிட்டாள்,மேனகாவிற்கு என்ன செய்வது என்று எதுவும் புரியவில்லை

அருணை தேடி போனாள்,வீட்டில் நடந்தவற்றை கூறி,நாங்கள் உடனே திருமணம் செய்து கொள்வோம் என்றாள் அவள்,அவன் திடுக்கிட்டுப் போனான்,இன்னும் காலேஜ் முடிக்கவில்லை,தற்போது எப்படி முடியும்,எனக்கு ஒரு அக்கா இருக்கார்கள்,அவர்கள் திருமணம் செய்யாமல் நான் எப்படி செய்து கொள்வது,அவர்களுக்கு இன்னும் எந்த வரனும் அமைய மாட்டேங்குது,வந்து பார்க்கும் மாப்பிள்ளைகள் கேட்கும் வரதட்சணையை நமக்கு கொடுக்க முடியாது,அந்தளவிற்கு நாங்கள் வசதியானவர்கள் இல்லை என்றதும்,மேனகா கோபபட்டாள்,பிறகு ஏன் என்னை லவ் பன்னி தொலைத்தீங்கள் என்றாள்,எனக்கு தெரியுமா உங்கள் வீட்டில் இவ்வளவு சீக்கிரத்தில் நம் காதல் தெரிய வரும் என்று,நான் காலேஜ் முடித்து,வேலைக்குப் போனப் பிறகு நம் காதலை உங்கள் வீட்டில் கூறி,திருமணம் செய்து கொள்ளலாம் என்று நான் நினைத்தேன் என்றான் அவன்

அதற்கிடையில் நம் காதல் நம் வீட்டுக்கு தெரிந்து அம்மா மேலும் கீழும் குதிக்கின்றார்கள்,தற்போது நான் என்ன செய்வது என்றாள் மேனகா,நான் படித்து முடித்தப் பிறகு தான்,ஏதாவது பன்னலாம் தற்போது எதுவும் முடியாது என்று அருண் கூறிவிட்டான்,மேனகா எதுவும் கூறவில்லை சென்று விட்டாள்,அதன் பிறகு மேனகாவை வேறொரு காலேஜிக்கு மாற்றி விட்டார்கள் அவள் பெற்றோர்கள்,அப்படியே விடுபட்டு போனது அந்த காதல்,மேனகாவும் காலேஜ் முடித்து வேலைக்கு போக ஆரம்பித்தாள்,வீட்டில் அவள் வேலைக்குப் போவதை அவ்வளவாக விரும்பவில்லை,இவள் பிடிவாதமாக போய் கொண்டிருந்தாள்,அப்போது அங்கு வேலை செய்த பரமேஷ்வரன் அவனின் காதலை இவளிடம் சொன்னான்,இவள் முடியாது என்று மறுத்தாள்,அவனும் விடுவதாக இல்லை,தொடந்து வற்புருத்தியதால் இவளும் அவனை காதலிக்க ஆரம்பித்தாள்,பரமேஷ்வரனின் குடும்பம் வசதியான குடும்பம்,நல்ல வேலை என்றதும் மேனகா வீட்டில் இந்த காதலை ஏற்றுக் கொண்டார்கள்

இருவரும் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்து அவர்கள் தற்போது ஓரளவிற்கு வளர்ந்தும் விட்டார்கள்,ஆபிஸ் விடயமாக வெளியில் போயிருந்த மேனகா மறுப்படியும் அருணை சந்திப்போம் என்று கனவிலும் நினைக்கவில்லை,அவன் வந்து ஹாய் என்றான்,இவளுக்கு முகம் எல்லாம் வேர்த்துப் போய்விட்டது,பதிலுக்கு தட்டுதடுமாறி ஹாய் என்றாள் அவள்,எப்படி இருக்க என்றான் அவன்,நன்றாக இருக்கேன் என்று சொல்வதற்கு ஏனோ மனம் இடம் கொடுக்கவில்லை,இருக்கேன் என்றாள்,பிள்ளைகள் என்று இழுத்தான் அவன்,இரண்டு பெண் குழந்தைகள் இருக்கார்கள் என்றாள் அவள்,உனக்கு என்று வாய் வந்ததை உங்களுக்கு என்றாள்,ஆறு வயதில் ஒரு பையன் மட்டும் என்றான் அவன்,நம்முடைய இரண்டு கம்பனியும் சேர்ந்து தான் இந்த புரஜெக்டை பன்னப் போறார்கள் என்றான் அவன்,அப்படியோ எனக்கு எதுவும் தெரியாது என்றாள் அவள் எனக்கும் இங்கு வந்தப் பிறகு தான் தெரியும்,இங்குள்ளவர்கள் அப்படி தான் கதைத்துக் கொள்கின்றார்கள் என்றான் அவன்,அதன் பிறகு அடிக்கடி இருவரும் வேலை விடயமாக சந்தித்துக் கொண்டார்கள்

அருண் மேனகாவிடம் எந்த தயக்கமும் இல்லாமல் பழகினான்,கணவனைப் பற்றி கேட்பான்,அவன் குடும்பத்தை பற்றியும் இடைக்கிடை சொல்வான்,மேனகா அவனிடம் இருந்து கொஞ்சம் ஒதுங்கி போக நினைத்தாலும் அவளுக்கும் முடியவில்லை,இருவரும் சேர்ந்து சாப்பிடுவார்கள்,தங்கள் பிள்ளைகளின் வால்தனத்தையும் பேசி அரட்டை அடிப்பார்கள்,நாட்கள் செல்ல செல்ல இருவரும் மறுப்படியும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரிந்தது,கணவன் பிள்ளைகள் இருக்கும் போது இது தப்பு என்று மனதை எவ்வளவு கட்டுப் படுத்தினாலும்,அவனை காணும் போது எல்லாம் தன்னை அறியாமல் அவன் பக்கம் ஈர்க்கப் பட்டாள் மேனகா,வேலையை விட்டு விலகி விடுவோமா என்று கூட நினைத்தாள்,கணவனிடம் காரணம் சொல்லனுமே அதனால் அமைதியாக இருந்தாள் அவள்

ஒரு நாள் அருண் அவனுடைய வீட்டுக்கு மேனகாவை அழைத்தான்,அவளும் எந்த மறுப்பும் சொல்லாமல்,சாக்லைட் கொஞ்சம் வாங்கி கொண்டு,அவனுடன் சென்றாள்,அங்குப் போனப் பிறகு தான் தெரியும்,அருண் மனைவியும்,மகனும் ஊருக்கு சென்றிருக்கும் விடயம்,ஏன் என்னிடம் முதல் கூறவில்லை,வீட்டில் இப்படி யாரும் இல்லை என்று தெரிந்திருந்தாள்,நான் வந்திருக்க மாட்டேன் என்றாள் அவள்,உன்னிடம் மனம் விட்டு கதைக்கனும் போல் இருந்தது,அதனால் தான் யாரும் இல்லாத நேரம் உன்னை அழைத்துக் கொண்டு வந்தேன் என்றான் அவன்,அவளும் அமைதியாக இருந்தாள்,காப்பி போடுறேன் என்றான் அருண்,எனக்கு வேண்டாம் என்றாள் அவள்,கொஞ்சம் குடி என்றான் சரி நான் போடுறேன் என்றாள் அவள்,இல்லை வேண்டாம் நான் போட்டு தருகிறேன் நீ குடி என்று கூறி விட்டு அவன் காப்பி போட போய்விட்டான்,வீடு சுத்தமாக இருந்தது,தரை வீடு,அளவான அழகான வீடு,இருவரும் காப்பி குடித்து முடித்தார்கள்

சற்று நேரத்தில் மேனகா சோபாவில் சாய்ந்தாள்,கண் திறந்து பார்க்கும் போது புடவையெல்லாம் அலங்கோலமாக இருந்தது,என்ன நடந்தது என்று அவளுக்கு யோசிக்க முடியவில்லை,தலை வலியாக இருந்தது,சற்றென்று எழுந்து புடவையெல்லாம் சரிசெய்து கொண்டு,அருகில் கிடந்த ஹேன்பேக்கை மாட்டியப்படி கதவை திறந்துக் கொண்டு வெளியில் வந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்,கொஞ்ச தூரத்தில் வாகனங்கள் போகும் தெரு தெரிந்தது,ஓட்டமும் நடையுமாக தெருவிற்கு வந்தவள்,ஓர் ஆட்டோவை பிடித்துக் கொண்டு எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்ததாள் என்று அவளுக்கே தெரியாது,பாத்ரூம் போய் குளிர்ந்த தண்ணியை அள்ளி அள்ளி தலைக்கு ஊற்றினாலும் உடல் வேர்த்தது,கண்ணீர் துளிகள் சூடாக இருந்தது அவளுக்கு,தலையை துவட்டவில்லை,டவலை தலையில் சுற்றிக் கொண்டு சோபாவில் வந்து உட்கார்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள்,மணி ஐந்து சற்று நேரத்தில் பிள்ளைகள் வந்து விடுவார்கள்,அதை நினைக்கும் போதும் திக்கென்றது,ஏன் அழுது இருக்கீங்கள் என்று கேட்டால் எதை சொல்வது,அதை நினைக்கும் போது,மேலும் அழுகையாக வந்தது

பிள்ளைகள் வந்தவுடன் கேட்ட முதல் கேள்வியும் அது தான்,ஏன் அம்மா முகம் எல்லாம் சிவந்திருக்கு என்று,வேலை கூட,உடம்பிற்கு முடியவில்லை என்று சமாளித்தாள்,பரமேஷ்வரனும் வந்து விட்டான்,அப்பா அம்மாவிற்கு உடம்பிற்கு முடியவில்லையாம் என்று பிள்ளைகள் அவனிடம் கூறினார்கள்,டாக்டரை போய் பார்ப்போமா என்றான் அவன்,அது எல்லாம் வேண்டாம்,இன்று செவ்வாய்கிழமை குடும்ப டாக்டர் இருக்கவும் மாட்டார்,கொஞ்சம் படுத்து தூங்கினால் சரியாகி விடுவேன் என்று கூறிவிட்டு போய் படுத்துக் கொண்டாள் மேனகா,கையில் போனை எடுக்கவே பயமாக இருந்தது,மெதுவாக எடுத்து பார்த்தாள்,எட்டு மணி,பரமேஷ்வரன் சாப்பிட அழைத்தான் எனக்கு வேண்டாம் என்று பிடிவாதமாக கூறி விட்டு மறுப்படியும் படுத்துக் கொண்டாள்

தூங்க முயற்சி செய்தாள்,அவளுக்கு தூக்கம் வருவதாக இல்லை,இனி அவன் வேலை செய்யும் இடத்தில் வேலை செய்ய முடியாது,நாளை முதல் வேலையாக பழைய ஆபிஸ் போய்,புது புரஜெக்டில் இனி எனக்கு வேலை செய்ய முடியாது என்று கூற வேண்டும்,கட்டாயமாக அதில் தான் வேலை செய்ய வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள் என்றாள்,வேலையை விட்டு விட வேண்டியது தான் என்று தீர்க்கமாக முடிவெடுத்தாள்,இரவு முழுவதும் பல நினைவுகள்,கண்களை மூடினால் யாரோ துரத்துவதுப் போல் இருந்தது,அவளுக்கு எப்போது விடியும் என்று மணியை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள்,சற்று நேரத்தில் அலாரம் அடித்தது,எழுந்து பாத்ரூம் போய் கண்ணாடியை பார்க்கும் போது,முகம் சிவந்து,கண்கள் வீங்கி ஆளே அடையாளம் தெரியாத மாதிரி அவளுக்கு இருந்தது,குளிர்ந்த நீரை எடுத்து நன்றாக முகத்தை கழுவிக் கொண்டு மெதுவாக சமையல் அறைப் பக்கம் வந்தாள்,எதுவும் சமைக்கத் தோன்றவில்லை தயிர்சாதம் பன்னி விடலாம் என்று அதற்கு தேவையானதை எடுத்து வைத்தாள்

பரமேஷ்வரன் எழுந்து வந்தான்,ஏன் முகம் எல்லாம் இப்படி இருக்கு உடம்பிற்கு ஏதும் முடியவில்லையா என்றான் மேனகாவிடம்,ஆமாம் அடிக்கும் வெயிலுக்கு கஷ்டமாக இருக்கு ஜூரம் அடிக்கின்ற மாதிரி இருக்கு என்றாள் அவள்,இன்று ஆபிஸ் போகாதே,லீவு போட்டு விட்டு வீட்டில் இரு என்றான் அவன்,பழைய ஆபிஸ் போய் வரனும் என்றாள் அவள்,ஏன் என்றான் அவன்,புது புரெஜ்க்டில் வேலை செய்ய கஷ்டமாக இருக்கு,பழைய ஆபிஸ்க்கு போய்விடுவது நல்லது என்றாள் அவள்,தற்போது அப்படி விடுவார்களா என்றான் அவன்,போய்கேட்டுத் தான் பார்க்கனும் என்றாள் அவள்,சரி அப்படி போவது என்றால், நான் ஆபிஸ் போகும் போது,உன்னை இறக்கி விடுறேன் என்றான் அவன்,அவள் தலையை மட்டும் ஆட்டிவிட்டு,வேண்டா வெறுப்பாக வேலைகளை முடித்து விட்டு,பிள்ளைகளை எழுப்பினாள் அவர்கள் எழுந்து அவர்கள் வேலைகளை செய்து முடித்தார்கள்

வீட்டில் பிரெட் இருந்தது பட்டரை தடவி பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டு,தயிர் சாதத்தை லன்ஞ் பாக்ஸில் பெக் பன்னி எடுத்து வைத்தவள்,சாதாரண ஒரு புடவையை மாற்றிக் கொண்டாள்,பரமேஷ்வரன் வந்து சாப்பிடும் போது,நீ சாப்பிடவில்லையா என்றான், எனக்கு வேண்டாம் போல் இருக்கு, ஆபிஸ் போய் வந்தப் பிறகு சாப்பிடுறேன் என்றாள் அவள்,அனைவரும் வீட்டை விட்டு புறப்பட்டார்கள்,பிள்ளைகளை பாடசாலை அருகில் இறக்கி விட்டு,மேனகாவை அவள் ஆபிஸ் பக்கத்தில் இறக்கி விட்னான் பரமேஷ்வரன்,போகும் போது ஆட்டோ பிடித்து போய் விடு என்று கூறி விட்டு,அவன் சென்று விட்டான்,அவள் தனது பழைய ஆபிஸ் போனாள்,அவளை கண்டதும் அனைவரும் வந்து நலம் விசாரித்து விட்டுப் போனார்கள்,அவள் உயர் அதிகாரியை பார்த்து பேசிவிட்டு வந்தாள் அவர் முதல் முடியாது அம்மா அந்த புரஜெக்ட் முக்கியமானது,தற்போது நீ வந்து விட்டாள்,மறுப்படியும் வேறு யாரையாவது அனுப்ப வேண்டியிருக்கும்,அது நமக்கு சிரமம் என்றார் அவர்,அப்படி என்றாள் நான் வேலையை விட்டு விடுகிறேன் சார் என்றாள் மேனகா என்னம்மா இப்படி சொல்லுற,எத்தனை வருடமாக இந்த ஆபிஸில் வேலை செய்ற,சரி ஏதாவது பார்த்து செய்வோம்,நாளையில் இருந்து இங்கு வந்து விடு என்றார் அவர்

அவளுக்கு அது நிம்மதியாக இருந்தது,அனைவரிடமும் கூறிவிட்டு வெளியே வந்து ஓர் ஆட்டோ பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மேனகா,அன்று முழுவதும் தலைவலி படுத்தே கிடந்தாள்,அடுத்த நாள் பழைய ஆபிஸில் வேலையை தொடங்கினாள் மேனகா,அப்போது போன் மணி ரிங் ஆகியது எடுத்து பார்க்கும் போது அருண் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டாள் அவள்,உடனே கட் பன்னி விட்டாள்,மறுப்படியும் ரிங் பன்னியது ஆபிஸ் நேரத்தில் அடிக்கடி ரிங் வருவதை மற்றவர்கள் கவனித்தால் அது நல்லது இல்லை என்று நினைத்து,கை நடுக்கத்துடன் போனை எடுத்து ஹலோ என்றாள்,மறுபக்கத்தில் அருணின் குரல் என்னம்மா நமக்கு பயந்துக் கொண்டு,ஆபிஸையே மாற்றிவிட்டால்,அப்படி விட்டு விடுவோமா என்றான் அவன்,அவளுக்கு முகம் எல்லாம் வேர்த்துப் போனது,இப்போது உன் பிடி என் கையில் என்று சிரித்தான் அவன்,உடனே போனை கட் பன்னி விட்டாள்,மறுப்படியும் அவன் ரிங் பன்னினான்,எடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள் அவள்,எடுக்கவில்லை என்றால் அடிக்கடி ரிங் பன்னுவான் மறுப்படியும் எடுத்து ஹலோ என்றாள்,நான் உன்னிடம் விளையாட போன் எடுக்கவில்லை என்றான் கோபமாக

நான் சொல்வதை நீ கேட்டால் உனக்கு நல்லது,இல்லை என்றால் நான் வேறு மாதிரி கொண்டு போவேன் என்றான் அருண்,எனக்கு கொஞ்சம் பணம் தேவை,உன் கணவன் தான் பணக்காரனே,அவனிடம் வாங்கி தருவீயோ,அல்லது நீ தருவீயோ அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை,எனக்கு அவசரமாக பணம் வேண்டும் என்றான் அருண்,எதற்கு நான் பணம் கொடுக்க வேண்டும் என்றாள் அவள்,ஏன் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது நினைவு இல்லையோ என்னுடன் சல்லாபமாக இருந்தது என்றான் அவன்,அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது,என்ன உளறாதீங்கள் என்றாள் அவள்,நான் ஏதும் உளறவில்லை,நீ என்னுடன் இருந்த வீடியோ,என்னிடம் இருக்கே என்றதும் அவளுக்கு தலையே சுற்றியது,தற்போது நம் வீடியோ என் கையில்,பரமேஷ்வரனிடம் காட்டி பணம் வாங்கட்டுமா என்றான் அவன்,இவளுக்கு வாயில் வார்த்தைகளே வரவில்லை,தாரை தாரையாக கண்ணீர் மட்டும் கொட்டியது,என்ன அருண் இது என்றாள் மெதுவாக,என்னிடம் பணம் இல்லையென்று தானே அன்று என்னை தூக்கி வீசிவிட்டுப் போன,அதற்கு பரிகாரம் என்றான் நக்கலாக,இரண்டு பேரும் பணம் தருவதற்கு மறுத்தால்,உன் வீடியோவை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கனும் என்று எனக்கு தெரியும் என்றான் அருண்,அவளுக்கு மூச்சி அடைப்பது போல் இருந்தது,போனை கட் பன்னி விட்டு,நாற்காளியில் தொப்பென்று உட்கார்ந்தாள்,தண்ணீர் போத்தலை எடுத்து முழுவதையும் குடித்து முடித்தப் பிறகும் படபடப்பாக இருந்தது,ஆபிஸ்க்கு அறை நாள் லீவு போட்டு விட்டு வெளியில் வந்து மறுப்படியும் அருணுக்கு ரிங் பன்னினாள்,அவன் எடுக்கவில்லை,ஓர் ஆட்டோவை பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் மேனகா

மறுப்படியும் அருணுக்கு ரிங் பன்னினாள் அவன் எடுத்தான்,ஏன் அருண் என்னை இப்படி ஏமாத்திட்டீங்கள் என்று அழுதாள் அவள்,நான் ஒன்றும் உன்னை ஏமாற்றவில்லை, நீ தான் என்னை தூக்கி எறிந்து விட்டுப் போன,உனக்கும் உன் குடும்பத்திற்கும் பணம் தான் முக்கியம்,அந்த பணத்தை உன்னை வைத்தே சம்பாதித்து காட்டுறேன் என்றான் அவன்,நான் உங்களை ஏமாற்றவில்லை,நீங்கள் தான் என்னை கட்டிக்க யோசித்தீங்கள் என்றாள் அவள் எனக்கு அந்த கதைலெல்லாம் தற்போது வேண்டாம்,முப்பது லட்சம் பணம் எனக்கு வேண்டும் என்றான் அவன்,அதை கேட்டவுடன் அவள் துவண்டுப் போனாள்,இப்படி என்னை நம்ப வைத்து,இப்படி பன்னுறீங்கள் என்றாள் அவள்,உனக்கு எங்கே அறிவு போனது,என்னை நம்பி தானே வந்த என்றான் அவன்,அந்த நம்பிக்கை தான் தற்போது இப்படி தடுமாறி நிற்கின்றேன் என்று அழுதாள் அவள்,இந்த அழுகையெல்லாம் பார்த்து ஏமாறுபவன் நானில்லை,உன் அழுகையை நிறுத்தி விட்டு,பணத்தை ஏற்பாடு பன்னு என்று போனை வைத்து விட்டான் அவன்

மேனகா நிலை குலைந்துப் போனாள்,பகல் சாப்பிடவில்லை,என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை,அழுதழுது தலைவலி வேறு,உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று நினைத்தாள்,பிள்ளைகள் கண் முன் வந்து நின்றார்கள்,கண்களில் நீர் கொட்டியது,அந்த முடிவை சட்டென்று மாற்றிக் கொண்டாள்,கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கின்றாய் என்று அழுது தீர்த்தாள்,போன் சத்தம் கேட்டாலே பயந்து நடுங்கி போனாள் அவள்,ஏதாவது வீடியோ அனுப்பி இருப்பானோ என்ற பயம்,மாலை ஆகிவிட்டது,பிள்ளைகள் சற்று நேரத்தில் வந்து விடுவார்கள்,கட்டிலை விட்டு எழுந்தாள்,படபடப்பாக இருந்தது அவளுக்கு சாப்பிடாத களைப்பு வேறு,அழுகை ஆத்திரத்தோடு பாத்ரூம் போய் தலைக்கு குளிர்ந்த தண்ணியை அள்ளி ஊற்றியப் போதும்,அவளுக்கு வேர்வை அடங்கவில்லை,தன் கண்களில் இருந்து வந்த கண்ணீர் சுட்டது,அவசரமாக வெளியில் வந்து உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்தாள்

பிள்ளைகள் வந்து விட்டார்கள் எப்போது அம்மா வந்தீங்கள் என்று ஓடி வந்து அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்,வழமையாகவே பிள்ளைகள் வந்தப் பிறகு தான் மேனகா வீட்டுக்கு வருவது வழமை,அவர்கள் வந்து சிறிது நேரம் தனியாக இருப்பார்கள்,இன்று அவர்கள் வருவதற்கு முன்னதாக அம்மா வந்திருப்பது அவர்களுக்கு அளவில்லாத ஆனந்தம் இருவரும் உடைகளை மாற்றிக் கொண்டு வந்தார்கள்,இருவருக்கும் பால் காய்சி கொடுத்தாள் மேனகா,தனக்கும் கடமைக்காக ஒரு காப்பியை போட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்தாள்,அதில் சக்கரை போடுவதற்கும் மறந்து போனாள்,கணவன் பரமேஷ்வரன் வந்து தன்னிடமிருந்த சாவியில் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தான்,காப்பி போட்டு இருக்க என்று எடுத்து குடித்தவன் ஏன் சக்கரை போடவும் இல்லை,இப்படி காப்பி போட்டிருக்க என்றான் அவன்,அது எனக்கு போட்டது என்றாள் மேனகா,அதற்காக இப்படியா சக்கரையும் போடாமல் ஊத்தி குடிப்ப என்றான் அவன்,அவள் அமைதியாக இருந்தாள்,

எனக்கு ஒரே தலைவலியாக இருக்கு என்றாள் மேனகா,இரவு சாப்பாடு தோசை செய்யனுமா என்றான் அவன்,தோசை மாவு இருக்கு என்றாள்,இன்று அருண் என்று ஒருத்தன் எனக்கு போன் பன்னினான் என்றதும் இவள் ஆடிப் போனாள்,உன் நண்பன் என்று சொன்னான்,நீ பழைய ஆபிஸ் போனது அவனுக்கு தெரியாதோ,அதனால் தான் எனக்கு போன் பன்னியதாக சொன்னான் என்றதும் மேனகாவிற்கு வேர்த்துப் போனது,ஆமாம் நான் யாரிடமும் சொல்லவில்லை என்றாள் அவள்,சரி நீ போய் படு,நான் ஏதாவது பன்னுறேன் என்றான்,அப்பா எங்களுக்கு நூடில்ஸ் செய்து தாங்கள் என்றார்கள் பிள்ளைகள்,சரி சரி செய்து தருகிறேன்,தற்போது போய் படிக்கனும் என்றான் அவன்,மேனகா அறைக்கு சென்று கட்டிலில் சாய்ந்தாள்,அவளுக்கு தலையே சுற்றியது,தற்போது என்ன நடக்கும் என்றே அவளுக்கு ஒன்றும் புரியவில்லை,ஏன் அருண் பரமேஷ்வரனுக்குப் போன் பன்னினான்,அவன் பரமேஷ்வரன் போன் நம்பர் கேட்க்கும் போது கொடுத்திருக்க கூடாது,அவ்வளவு நம்பிக்கை பாவி இப்படி பழிவாங்குகிறான் என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள் அவள்

அப்போது கணவன் வந்து கதவை தட்டி சாப்பிட அழைத்தான்,எனக்கு சாப்பாடு வேண்டாம் என்றாள் அவள்,விளையாடாமல் வந்து சாப்பிட்டு படு என்று அவன் அதட்டவும்,மெதுவாக எழுந்து வந்தாள் அவள்,ஏன் அம்மா முகம் சிவந்திருக்கு என்றாள் தாரா,வெயில் அதிகமான வேலை,வந்து தலைக்கு குளித்தது,தலைவலி அதுவாக தான் இருக்கும் என்று சமாளித்தாள் அவள்,அதன் பிறகு அமைதியாக சாப்பிட்டு முடித்தார்கள் அனைவரும்,பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு,பிள்ளைகளுடன் சற்று நேரம் உட்கார்ந்து இருந்தாள் மேனகா,இரண்டு பேரும் அம்மா மடியில் தலை வைத்து கொண்டு ஏதோ கதை சொன்னார்கள்,அவளுக்கு எதுவும் காதுக்குள் போகவில்லை,சரி நீங்கள் போய் படுங்கள் நாளைக்கு பாடசாலைக்கு போகனும் என்று அவர்களை அறைக்கு அனுப்பி விட்டு தானும் போய் படுத்து விட்டாள்

அடுத்த நாள் அருண் போன் பன்னினான்,அப்போது தான் அவள் ஆபிஸ் போய் கொண்டு இருந்தாள்,எடுக்கும் போது கை நடுங்கியது அவளுக்கு,பணம் ஏற்பாடு பன்னி விட்டீயா என்றான் அவன்,இன்னும் இல்லை என்றாள் அவள்,பிரச்சினை இல்லை,உன் வீடியோவை உன் கணவனுக்கு அனுப்பி விடுகிறேன்,நேற்று தான் போன் பன்னி அறிமுகம் படுத்திக் கொண்டேன் அவனிடம் என்றதும்,அவசரம் படாதீங்கள்,பணம் ஏற்பாடு பன்னுறேன்,என் வீடியோவை அனுப்பி,என் வாழ்க்கையை வீணாக்கி விடாதீங்கள் என்று கெஞ்சினாள் அவள்,இரண்டு நாள் டைம் தருகிறேன்,அதற்கிடையில் பணம் தரவில்லை என்றால்,அதன் பிறகு என் விளையாட்டு உனக்கு தெரியும் என்று போனை கட் பன்னி விட்டான் அவன்,ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டாள் அவள்,ஆபிஸ் போகாமல் லீவு சொல்லவும் ஒரு மாதிரியாக இருந்தது அவளுக்கு,இந்த ஆபிஸ் வந்து இரண்டு நாள் கூட ஒழுங்காக வேலை செய்யவில்லை,வேலைக்குப் போனாலும் நிம்மதியாக வேலை செய்யவும் முடியாது,கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது,தெருவில் நிற்பதையே அப்போது தான் உணர்ந்தாள்,கண்களை அவசரமாக துடைத்துக் கொண்டாள்

மானமே போகப் போகுது,வேலை போனால் போகட்டும்,உடம்பிற்கு முடியவில்லை இரண்டு நாட்கள் லீவு வேண்டும் என்று போனில் தகவல் அனுப்பி விட்டு,மறுப்படியும் வீட்டுக்கு வந்து விட்டாள்,போன் ரிங் ஆகியது அருண் லைனில்,என்ன சொல்லப் போறான் என்று பதட்டமாக போனை எடுத்தாள்,அவன் பணத்தை ஏற்பாடு பன்னி விடு,இரண்டு நாட்களில் எனக்கு பணம் தேவை என்றான்,அவள் அமைதியாக இருந்தாள்,சத்தத்தையே காணவில்லை,இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு தானே என்று அமைதியாக இருக்காதே எனக்கு இரண்டு நாட்களில் பணம் தரவில்லை என்றாள்,உன் மானம் கப்பல் ஏறும் என்று போனை வைத்து விட்டான் அவன்,நாய் மனுஷன்,வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்,காப்பியில் மயக்க மருந்தை கலந்து குடிக்க கொடுத்து,எப்படியெல்லாம் படம் எடுத்தானோ,வீடியோ எடுத்தானோ தெரியவில்லையே,இதை எப்படி மற்றவர்களிடம் போய் கூறுவது,அவனை நம்பி போனது நான்,நம்பிக்கை துரோகம் பன்னியது அவன்,இப்படி மாட்ட வைத்து எவ்வளவு பணம் கேட்டு மிரட்டுகிறான்,ஒரு நாளும் உறுப்பட மாட்டான் என்று நினைத்தவளுக்கு,சட்டென்று அவன் மனைவியை போய் பார்த்து பேசினால் ஏதாவது முடிவு கிடைக்கும் என்று தோன்றியது

சட்டென்று எழுந்து முகத்தை கழுவிக் கொண்டு,கதவை பூட்டி விட்டு தெருவிற்கு வந்து ஓர் ஆட்டோ பிடித்தாள் மேனகா,எப்படி அவன் வீட்டுக்குப் போவது,அவன் வீட்டில் இருந்தால் என்ன செய்வது,அவன் மனைவி எப்படி நடந்துக் கொள்வாள் என்று ஒரே குழப்பமாக இருந்தத,தற்போது பத்து மணிக்கு மேல் ஆகுது,வீட்டில் யாரும் இல்லை என்றால் என்ன செய்வது,சரி போய் பார்ப்போம் என்று மனதை அமைதி படுத்திக் கொண்டாள் மேனகா,அருண் பையன் ஆகாஷ் பாடசாலைக்கு போய் இருப்பான்,அபித்தா என்ற ஞாபகம் இருக்கு அடிக்கடி அருண் சொன்ன ஞாபகம்,தெருவில் இறங்கி அவன் வீட்டுக்கு நடந்தாள் அந்த வீட்டை பார்க்கும் போது அன்று நடந்த சம்பவம் ஞாபகத்திற்கு வந்து தொண்டை வரண்டுப் போனது,மெதுவாக போய் கதவை தட்ட நினைத்தவள்,ஒரு நிமிடம் தயங்கி நின்றாள்,பேச்சு குரல் ஏதாவது கேட்க்குதா என்று கவனித்தாள்,எந்த சத்தமும் இல்லை தைரியத்தை வரவலைத்துக் கொண்டு கதவை தட்டினாள்,முடியை குட்டையாக வெட்டிய ஒரு பெண் கதவை திறந்தாள்,மேனகாவிற்கு தற்போது தான் மூச்சே வந்தது,அருண் வீடு இது தானே என்றாள் மேனகா,ஆமாம் நீங்கள் என்றாள் அந்தப் பெண்,நான் மேனகா என்றதும்,அவளின் முகம் மாறியது சட்டென்று,அதை கவனித்த மேனகா,நீங்கள் அபித்தா தானே என்றாள்,ஆமாம் அருண் மனைவி என்றாள் அழுத்தமாக

உங்களிடம் கொஞ்சம் கதைக்க முடியுமா என்றாள் மேனகா,வாங்க உள்ளே என்று அழைத்தாள் அபித்தா,இருக்கையை காட்டி உட்காருங்கள் என்றாள் அவள்,மேனகா அமைதியாக உட்கார்ந்தாள்,என்ன பேசுவது என்று எதுவும் புரியவில்லை அவளுக்கு,ஏதோ தைரியத்தில் வந்து விட்டாள்,தற்போது வாய்திறக்க மறுக்கிறது,முகம் வேர்த்துப் போனது அதை கவனித்த அபித்தா எழுந்து குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு அவளும் உட்கார்ந்தாள்,மேனகா மெதுவாக ஆரம்பித்தாள் நான் மேனகா அருணின் முன்னாள் காதலி என்றதும் எனக்கு தெரியும் என்றாள் அபித்தா,அருண் சொன்னார்,பணம் இல்லை என்பதால் அவரை விட்டு விழகி போய்விட்டதாக என்றதும் மேனகாவிற்கு அவமானமாக இருந்தது,நான் பணம் இல்லையென்று விட்டு போகவில்லை,அருணுக்கு பொறுப்புகள் இருந்ததால்,என்னை உடனே திருமணம் செய்ய மறுத்ததால்,எனக்கு வேறு வழியில்லாமல் என்றாள் அவள்,நீங்கள் சாதாரணமாக வேண்டாம் என்று தூக்கி போட்டு விட்டுப் போய் விட்டீங்கள்,அதன் பிறகு எவ்வளவு நாட்கள் அவர் மன உளைச்சலில் இருந்தார் என்று உங்களுக்கு தெரிய வாய்பில்லை

இந்த உலகத்தில் பணம் தான் முக்கியம்,அதை தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை,பணம் சம்பாதிக்க பைத்தியமாக அழைந்தார் அவர்,எந்த தொழில் செய்தாவது நிறைய பணம் சம்பாதித்து விடவேண்டும் என்பது மட்டும் தான் அவர் குறிக்கோளாக இருந்தது,அவர் அக்கா என் அண்ணனை தான் திருமணம் செய்து இருக்கார்கள்,அவர்கள் குடும்பம் நல்லதொரு குடும்பம்,உங்களை காதலித்த குற்றத்திற்காக,அவர் பைத்தியகாரனாக மாறுவதை நான் விரும்பவில்லை,அவர் அக்கா என்னிடம் அருண் வாழ்க்கை இப்படி போய் விட்டதிற்கு நானும் ஓர் காரணம் என்று கூறி கவலைப் படுவார்கள்,மறுப்படியும் நான் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள போராட வேண்டியிருந்தது,அருண் முடியவே முடியாது என்று பிடிவாதமாக இருந்தார்,பிறகு அவரை அடிக்கடி சந்தித்து,எப்படியோ காதலித்து திருமணம் செய்துக் கொண்டேன் என்றாள் அபித்தா

மேனகா நடந்தவற்றை அபித்தாவிடம் கூறினாள்,அவள் ஆடிப் போய் விட்டடாள்,என்ன சொல்லுறீங்கள்,உண்மையாகவா என்றாள் அபித்தா,ஆமாம் நான் அருணை மறுப்படியும் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை,ஆனால் நாங்கள் இருவரும் ஒரே ஆபிஸில் வேலை செய்யவதற்கு சந்தர்ப்பம் அமைந்து விட்டது,அருண் என்னிடம் நல்ல நண்பனை போல் தான் பழகினார்,அதை நம்பி தான்,உங்களையும் ஆகாஷையும் பார்ப்பதற்கு அவருடன் இங்கு வந்தேன்,வந்தப் பிறகு தான்,நீங்கள் ஊருக்கு போய் இருப்பது எனக்கு தெரியும் அப்போதும் நான் அருணை சந்தேகப் படவில்லை,காப்பி போட்டு கொடுத்தார்,அதன் பிறகு கண் விழித்து பார்க்கும் போது,என் புடவையெல்லாம் என்று அழுதாள் மேனகா,அபித்தாவிற்கு தலை சுற்றியது,மறுப்படியும் பணத்தாசையா அருணுக்கு,இல்லை என்றாள் இவளை பலிவாங்க போட்ட திட்டமா,கடவுளே ஏன் இவர் மனம் இப்படி போகுது என்று அவள் கவலைப் பட்டாள்,மேனகா அபித்தாவின் கால்களை பிடித்துக் கொண்டு அழுதாள்,என்னை காப்பாத்துங்கள் என்று,உங்களை விட நான் சின்னவள்,என் காலில் போய் விழுந்துக் கொண்டு,முதல் நீங்கள் எழுந்து உட்காருங்கள்,என்று அவளை இருக்கையில் உட்கார வைத்தாள்

அபித்தா அமைதியாக சிறிது நேரம் இருந்தாள்,நீங்கள் எதுவும் யோசிக்காதீங்கள்,இனி அவர் உங்களிடம் பணம் கேட்டு போன் பன்ன மாட்டார்,அப்படி ஏதாவது படம் வீடியோ இருந்தால்,அதை நான் பார்த்து அழித்து விடுறேன்,அந்தளவிற்கு போய் இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன் என்று பெருமூச்சி விட்டாள் அபித்தா,மேனகா இந்த உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்று கும்பிட்டு வெளியில் வரும் போது,அபித்தா மறுப்படியும் அருணை நீங்கள் ஏதும் காதலிக்கவில்லை தானே என்றாள் அவள்,அந்த கேள்வி சுருக்கென்றது மேனகாவிற்கு,இல்லை என்று கூறிவிட்டு,வேகமாக அங்கு இருந்து வந்து விட்டாள்,என்னை மன்னித்துக் கொள் அபித்தா,உனக்கு துரோகம் பன்ன பார்த்தேனே,உன்னிடம் அதை மட்டும் மறைத்து விட்டேன் என்று மனதில் நினைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள் வீட்டுக்கு,அப்போதும் யாரும் ரிங் பன்னினால் திக் என்றது அவளுக்கு,அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை அருண் போன் பன்னவே இல்லை மேனகாவிற்கு

நான்கு ஐந்து நாட்கள் எப்படியெல்லாம் என் வாழ்க்கை ஆட்டம் கண்டு விட்டது,கடல் கறைக்கு போய் தனியாக உட்கார்ந்து இருந்தது,பிள்ளைகளையும் கணவனையும் கவனிக்க தவறியது,கடவுளே பெரிய ஆபத்தில் இருந்து என்னை காப்பாற்றி விட்டாய் என்று பெருமூச்சி விட்டாள் அவள்,பரமேஷ்வரன் வந்து ஏன் இங்கு படுத்திருக்க என்றப் போது தான் சுய நினைவிற்கே வந்தாள் அவள்,இல்லை அங்கு ஒரே புழுக்கமாக இருந்தது அதனால் இங்கு வந்து படுத்தேன் என்றாள்,அவனும் அவள் அருகில் படுத்துக் கொண்டான் நடந்தது எதையும் உயிர் உள்ளவரை மறக்ககூடது,மறுப்படியும் எந்த தவறும் செய்யாமல் இருப்பதற்கு இது எனக்கொரு நல்ல பாடம் என்று அவளே நினைத்துக் கொண்டு படுத்து விட்டாள் மேனகா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *