கதையாசிரியர் தொகுப்பு: என்.ஸ்ரீதரன்

1 கதை கிடைத்துள்ளன.

எதிர்வீடு

 

 அதிகாலை நேரம் . இருள் நீங்கி வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகப் படர்ந்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை, கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று பார்த்தால் வேதகோஷ்டிகளின் இனிமையான சப்தம் என்னை எழுப்பி விட்டது. என் கணவர் பக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். இடியே விழுந்தாலும் கலையாத கும்பகர்ணன் தூக்கம். நான் அவருக்கு நேர் எதிர் . சிறு ஓசை கேட்டாலும் எழுந்து விடுவேன். வாசல் கதவைத் திறந்து பார்த்தேன். எதிர்வீட்டில் நான்கு சாஸ்திரிகள் வேத பாராயணம் செய்து கொண்டிருந்தார்கள். வாசலில் பெரிய