கதைத்தொகுப்பு: மொழிபெயர்ப்பு

196 கதைகள் கிடைத்துள்ளன.

பல்லி ஜென்மம்

 

 (1995 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில் இரண்டு பல்லிகள் வசித்துவந்தன. ஓர் ஆண் பல்லி, ஒரு பெண் பல்லி. கொடுந்துயரமான ஆஸ்பத்திரி வாழ்க்கையை ஒரு தொடர் நாடகம்போல் பார்த்து அலுத்துப்போன அவை, உடல் நலத்திற்கு தீங்கானது என்ற முன்னறிவிப்பை கிழித்தெறிந்து தாம்பத்யம் அனுபவிக்க ஆரம்பித்து கொஞ்ச நாட்கள்தான் ஆகியிருந்தது. அந்தக் கவர்ச்சி முழுதும் தீர்ந்துவிட்டபிறகு தெளிந்த பார்வையுடன் அவை அறை முழுதையும் நோட்டமிட்டன.


எங்கோ ஒரு நகரத்தில்

 

 கரு நிறத் தூசியினால் மூடப்பட்டிருக்கும் பாழடைந்த கட்டடங்களுக்கு மத்தியில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டு குளவிக் கூடு கலைந்தாற் போல மக்கள் பரபரப்புடன் செல்லும் வீதிகள் நிறைந்த நகரம் அது. வெய்யில் கொளுத்தும் பகல் நேரத்திலும் நடு இரவிலும் அந்நகரம் உடலுக்கு ஓர் இருட்டுணர்வை வழங்கிக் கொண்டிருந்தது. நாய்களினால் கடித்துக் குதறப்பட்டிருக்கும் மாட்டுப் பிணங்களிலிருந்து வரும் துர்நாற்றத்தை இயல்பாகவே சகித்துக் கொள்ளும் மக்கள் வாழும் நகரம் அது. மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒரு சில மணி நேரம்


தேன் கூடுகளின் வீடு

 

 இதாலோ கால்வினோ – ஆங்கிலம் வழி மொழியாக்கம்: ஜெகதீஷ் குமார் தொலைதூரத்தில் இருந்து பார்ப்பது சிரமமாக இருக்கிறது. ஏற்கனவே ஒருவர் இங்கு வந்திருந்தாலும் கூட திரும்பிச் செல்லும் வழியை நினைவுபடுத்திக் கொள்ள முடியாது. ஒருகாலத்தில் இங்கு ஒரு பாதை இருந்தது. ஆனால் நான் அதன் மீது முட்புதர்களை வளர்த்து அதன் தடயங்களை அழித்து விட்டேன். நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் என் வீடு அமைந்திருக்கிறது.. புதர்களின் கரையில் மறைந்து, பள்ளத்தாக்கிலிருந்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு அடுக்குக் கட்டிடமாக,


அது ஒரு காலம்

 

 (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு நாள் சில குழந்தைகள் கணவாய் ஒன்றில் தானிய மணி போன்ற ஒரு பொருளைக் கண்டெடுத்தார்கள். அதன் நடுவே ஒரு கீற்று ஓடிக் கிடந்தது. ஆனால் அது கோழிமுட்டை அளவு பெரியதாக இருந்தது. அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த பிரயாணி ஒருவன் அந்தப் பொருளைப் பார்த்தான். ஒரு காசு கொடுத்து குழந்தைகளிடமிருந்து அவன் அதை வாங்கினான். அதை நகரத்துக்கு எடுத்துப்போய், ‘அதிசயப் பொருள்’ என்று சொல்லி


சங்கீதம்

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் அந்தப் போலீஸ் படையின் அதிகாரியின் தனியறையில் உட்கார்ந்திருந்தேன்; அது ஒரு சின்ன அறை; ஒளியும் களையும் அற்ற அறை. அந்த அறையில் ஒரு அகலமான எழுத்து வேலைக்கான மேஜை, கரியதோல் பிடி போட்ட மூன்று நாற்காலிகள், ஒரு சோபா, ஒரு பெரிய அரங்கு பீரோ முதலியன இருந்தன. அந்த அறையிலே தொங்கிக் கொண்டிருந்த அமிதமான புகைப்படங்களின் தொகையால், அந்த அறையின் களையின்மை


திறந்த படகு

 

 (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸ்டீபன் க்ரேன்: (1871-1900) [‘தி ரெட் பாட்ஜ் ஆப் கரேஜ்’ என்ற புத்தகத்தின் மூலம் அமெரிக்க இலக்கியத்தில் நிரந்தரமான ஒரு ஸ்தானம் பெற்றவர் ஸ்டீபன் க்ரேன். அமெரிக்க உள் நாட்டுப் போரைப்பற்றிய இப்புத்தகத்தில் தத்ரூபமாக. யுத்தக்காட்சி களை மயிர்க் கூச்செறியும் வண்ணம் வர்ணித்துள்ள இவர், தனது ஆயுள் காலத்தில் ஒரு சிறு சண்டையைக்கூட நேரில் பார்த்ததில்லை என்ற உண்மை மிகவும் குறிப்பிடத் தக்கது.


ஊரடங்கு

 

 அபிநேஷ் சன்னல்களை கவனமாக ஓரஞ்சாய்த்துத் திறந்து சிறு இடைவெளி வழியே வெளியே நோட்டம்விட்டான். துப்பாக்கி சுமந்து திரிந்த போலீஸ்காரர்களைத் தவிர சாலையில் நடமாட்டம் இல்லை. கறுத்த இரவில் சிதையில் எரியும் நெருப்பு போல் ரோட்டின் மீது, பெரிய ‘சோடியம் வேப்பர்’ லைட் பளபளத்தது. ஒரே ஒரு கணம்தான். சன்னலை மூடிவிட்டான். ஆழ்ந்து சுவாசித்து, மனைவியிடம் சத்தமில்லாத குரலில் சொன்னான் “சுகுணா, நிலைமை ரொம்ப மோசம்; ஊரடங்கு சாட்டி மூணு நாளாகிறது. ஒரு முன்னேற்றமும் இல்லே. எப்பவேன்னாலும் மறுபடி


குடியே பாவத்தின் வித்து

 

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆசிரியர் குறிப்பு:உயர்ந்த நோக்கங்களை மக்கள் மனத்தில் நன்கு பதியச் செய்வதற்குச் சுலபமாக எழுதப்பட்ட சிறு கதைகளே தக்க கருவிகளாகும். ருசிய நாட்டுத் தத்துவ ஞானியாராகிய டால்ஸ்டாய் என்பார் எழுதிய சிறு கதைகள் இத்தகையவை என்பது உலக அறிஞர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. டால்ஸ்டாய் எழுதிய கதைகளுள் ஆறு கதைகள் இந்நூலில் அமைந்துள்ளன. டால்ஸ்டாயின் உயரிய கருத்துக்களைத் தமிழ் மாணவர்கள் தெளிவாக உணரும் முறையில்


சந்திப்பு

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆற்றங்கரையை ஒட்டிய தோப்பின் ஓரத்தில் அமர்ந்து நீரில் தெரியும் தன் பிரதிபிம்பத்தைக் கவனித் துக் கொண்டிருந்தாள் ஒரு குடியானவக் குமரி. அவளைச் சுற்றிலும் பரந்திருந்த மணல் வெளியில் பழுத்து மஞ்ச ளாய்ப் போன இலைகள் சிதறிக்கிடந்தன; பழுப்பிலைகள் எந்தவித அரவமுமின்றி அவளது தலைக்கு மேலாக உதிர்ந்து விழுந்து அவளது தோளிலும் துணியிலும் பதிந்து உட்கார ஆரம்பித்தன. பல இலைகள் அவளது முந்தியில் விழுந்து


அவன் ஒரு அனாதை

 

 (1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவன் அனாதை! அவனுக்கு வீடில்லை . உற்றார் உறவினர் இடையாது. அவனுக்காக உலகில் ஒன்றுமே கிடையாது. கடவுள் தவிர, அவன் அனாதை! அவன் பிறந்தது மதுரை ஜில்லாவிலுள்ள ஓர் குக்கிராமம். அவளது மூன்றாவது வயதில், ஊரில் ‘மகாமாரி’ தோன்றியதன் காரணமாக அவனது தாயை இழந்தான். இரண்டு வருஷங்கள் தனது தந்தையின் போஷணையில் வளர்ந்தாள். அதன் பிறகு, கடுமையான சயரோகம் என்றும் வியாதியால் அவளது