சந்தேகம் தீர்ந்தது!

0
கதையாசிரியர்: , ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 3,713 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

ஜிங்க்டாகோடா ஜமீன்தார் கிருஷ்ண கோபால் ஸர்க்கார் மூத்த பிள்ளையிடம் தம் ஜமீனையும் குடும்ப பாரத்தையும் ஒப்பித்துவிட்டுக் காசிக்குப் போய்விட்டார். ஊரிலுள்ள ஏழைகளும் அநாதைகளும் இச்செய்தியைக் கேட்டு ‘ஓ’ என்று அழுது கண்ணீர் சிந்தினார்கள். “இந்த மாதிரி, தானசீலனையும் தர்மிஷ்டனையும் இந்தக் கலியுகத் தில் காணமுடியாது; ஆஹா!” என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். 

அவருடைய மகன் விபின்விஹாரி இந்தக் காலத்து ஆசாமி.பி.ஏ., படித்தவன். தாடி வைத்திருப்பான்; மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பான்; யாரோடும் அதிக மாகப் பழகமாட்டான் ; நல்ல நடத்தை உள்ளவன்; புகையிலைகூடப் போடமாட்டான்; சீட்டாட்டமும் ஆட மாட்டான். பார்வைக்கு மிகவும் நல்ல மாதிரியாகத்தான் இருப்பான்; ஆனால் அழுத்தம். 

குடிகள் விரைவிலேயே இதை உணர்ந்தார்கள். கிழ ஜமீன்தாரிடமிருந்து ஏதோ சாக்குப் போக்குச் சொல்லித் தப்பலாம்; ஆனால் இவனிடத்தில் எதுவும் பலிக்காது; கொடுக்கிற வரிப்பணத்தில் பைசா கூடத் தள்ளுவான் என்று எதிர்பார்க்கவே வேண்டாம். 

விபின் விஹாரி ஜமீன் காரியத்தைத் தானே ஏற்றுக் கொண்டதும், தன் தந்தை பல பிராம்மணர்களுக்குப் பீரம்மத்ரமாகத் தீர்வையில்லாமல் நிலம் விட்டிருப்பதை யும், இத்தனை பேருக்கு என்று கணக்கிடமுடியாதபடி பல பேருக்கு வரிவஜா செய்திருப்பதையும் கண்டான். கிருஷ்ணகோபால் பாபுவிடம் யாரேனும் வந்து ஏதாவது செய்ய வேண்டுமென்று கெஞ்சிக் கேட்டால் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றாமல் போகமாட்டார். இது அவரிடத்திலுள்ள ஒரு பெரிய குறை. 

வீபின், ‘இப்படியெல்லாம் இனி ஒருபோதும் நடக்க விடமாட்டேன். பாதி ஜமீனுக்குத் தீர்வையில்லாமல் இந்தமாதிரி வீட்டுவீட என்னால் முடியாது!’ என்று தன்னுள்ளே முடிவு செய்து கொண்டான். கீழ்க்கண்டவை’ இரண்டும் அவன் மனசில் இருந்த தீர்மானங்கள். 

முதலாவதாக வேலையின்றி வீட்டில் வெறுமே குந்திக்கொண்டு ஜமீன் வரும்படியை அநுபவித்துக் கொழுப்பவர்கள் பெரும்பாலும் உதவாக்கரைகள் ; ஆகையால் இவர்கள் விஷயத்தில் கொஞ்சங்கூடத் தயா தாக்ஷிண்யம் காட்டக் கூடாது. இப்படிப் பட்டவர் களுக்குத் தானம் செய்தால் நாட்டில் சோம்பேறித் தனத்தை வளர்த்ததாகத்தான் அர்த்தம். 

இரண்டாவதாக:- நம்முடைய தந்தை, பாட்டன் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் எவ்வளவோ வித்தி யாசம் இருக்கிறது. இப்போது வாழ்க்கை நடத்துவதே சிரமமான காரியம்; சில சாமான் கிடைப்பதே குதிரைக். கொம்பாய் இருக்கிறது. விலைவாசியோ ஏறிவீட்டது. அதோடு, இப்போதை வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள்கள் பல வேண்டி யிருக்கின்றன. ஒரு பெரிய மனிதன் தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் முன்னினும் நாலுமடங்கு அதிகமான செலவு ஏற்படுகிறது. நம் தகப்பனார் யோசனையே செய்யாமல் இரண்டு கையாலும் வாரி வாரி இறைத்ததுபோல் செய்தால் ஒன்றும் நடக்காது; அவர் கொடுத்ததை இனிப் பிடுங்கிக்கொண்டு இன்னும் அதிக மாக்கி வீட்டில் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். 

மனசில் இவையே தன் கடமை என்று அவனுக்குப் பட்டது; அப்படியே அவன் செய்யவும் ஆரம்பித்தான். ஒரு திட்டமான கொள்கையைக் கடைப்பிடித்து அதன்படி நடப்பவன் அவன். 

வீட்டைவிட்டு வெளிச் சென்றன வெல்லாம் சிறிது சிறிதாக மீண்டும் வந்து சேரத் தொடங்கின. தன் தந்தை சொற்பமாகத் தானம் செய்திருந்த இடத்திலும் அதை நிறுத்திவிட்டான். தானே தர்மம் நடத்தின போதிலும் அது நிரந்தரமானதாக இராதபடி பார்த்துக் கொண்டான். கிருஷ்ணகோபால் பாபு, காசியிலிருந்தபடியே கடித மூலம் தம் பழைய குடிகளின் முறையீட்டை அறிந்து அவர்கள் இடும் ஓலத்தையும் கேட்டார். சிலர் அவரிடம் நேரில் சென்றுகூட அவர் காலில் விழுந்து அழுதார்கள். அவர் வீபின்விஹாரிக்கு ஒரு கடிதம் எழுதினார். அவன் செய்வது தவறு 

என்று அதில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு வீபின் எழுதிய பதில் இதுதான்: 

“முன்னே தானம் செய்ததற்கு ஏற்றபடி வரவும் இருந்தது. அப்போது ஜமீன்தாரும் குடிகளும் ஒருவருக்கொருவர் உதவியாயிருந்தார்கள். இப் போதோ புதிய புதிய சட்டம் அமுலுக்கு வந்து விட்டதால் நியாயமான தீர்வையைத் தவிர மற்றவீத வரும்படியெல்லாம் நின்றுவிட்டன. அதோடு, இந்தக் காலத்திலோ, வரி வசூலிப்பதைத் தவிர இன்னும் பல கௌரவ வேலைகளையும் ஜமீன்தார் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகையால், இந்த நாளில் நியாயமாகக் கிடைக்கும் வரும்படி விஷயத்தில் சற்றுக் கறாராகக் கண்ணோட்டம் செலுத்தா விட்டால் என்ன பிரயோஜனம் ? இப் போதோ குடிகளும் அதிகமாக ஒன்றும் கொடுத்து வீடப் போவதில்லை; அவர்களுக்கு அதிகமாகக் கொடுக்கவும் என்னால் முடியாது. கொடுக்கல் வாங்கலோடு எங்கள் சம்பந்தம் சரியாகிவிடுகிறது. எல்லாவற்றையும் இப்படியே தானத்துக்கு வீட்டு வீட்டால் நாம் திவரலாக வேண்டியதுதான்; சொத்து அழிவதோடு கௌரவமும் போய்விடும்.” 

“காலம் தலைகீழாக மாறிப் போய்விட்டது. இந்தக் காலத்துப் பசங்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்கிறார். கள். அந்தக் காலத்துக் கேற்றாப்போல் நடந்தால் இப் போது ஒன்றும் செல்லாது. நான் இங்கே எங்கோ தூரத் தில் உட்கார்ந்துகொண்டு இதில் தலையிட்டேனானால் அவர் கள், ‘அப்படியானால் உன் சொத்தை நீயே கவனித்துக் கொள்; எங்களால் முடியாது’ என்று சொல்லிவிடுவார் கள். நமக்கென்ன வந்தது! ஏதோ இந்தக் கடைசிக் காலத்தை, கிருஷ்ணா ராமா என்று கழித்துவிட்டுப் போனால் நம் பாடு தீர்ந்தது!” என்று எண்ணினார் கிருஷ்ணகோபால் பாபு. 

இவ்விதம் ஜமீன்காரியம் நடந்துகொண் டிருந்தது. அநேகம் வழக்கு, வியாஜ்யம் தொடுத்து எல்லாவற்றையும் ஒருவாறாகத் தன் மனசுக்குப் பிடித்த வீதத்தில் முடித்துக் கொண்டான் விபின். 

அநேகமாக எல்லோரும் பயந்துபோய் அவனுக்கு. அடங்கி ஒடுங்கி நடக்கும் குடிகளாய் வீட்டார்கள். ஆனால் மிர்ஜா பிபீயின் மகன் அசிமத் என்பவனை மட்டும் அசைக்க முடியவில்லை. 

‘பிராம்மணர்களுக்கு மானியம் வீட்டதிலாவது ஏதோ அர்த்தம் இருக்கிறது. இந்தத் துலுக்கப்பயல், தீர்வை வரி ஒன்றும் இல்லாமல் நம் அப்பா சொத்தை அநுபவீக்க வேண்டிய காரணம் என்ன ? ஒரு சாமானியத் துலுக்க- விதவையின் பிள்ளை இவன் / கிராமப் பள்ளிக்கூடத்தில் துட்டு இல்லாமல் ஏதோ இரண்டு எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டுவீட்டான். இதற்கே தலைக் கிறுக்கு. அதிகமாகி யாரையும் மதிக்கமாட்டேன் என்கிறான் என்று வீபின் விஹாரிக்கு அவன்மேல் தான் அதிகக்கோபம். 

பல காலமாக ஜமீனில் வேலை பார்த்துவந்தவர்களிட மிருந்து, ”பெரிய எஜமான் நாளிலிருந்தே இவர்களுக்கு இந்தச் சலுகை உண்டு. 

உண்டு. ஆனாலும் இதற்கு என்ன காரணமோ தெரியாது. ஒருவேளை இவள் அநாதை. யாகையால் தன் துக்கத்தைச் சொல்லி அழுதிருக்கலாம். அதனால் பெரியவர் மனசு இளகி இருக்கும்” என்று தெரிய வந்தது. 

ஆனால் இவர்கள் விஷயத்தில் அவர் பெரிய மனசு பண்ணினது சிறிதும் ஏற்றதாகப்படவில்லை விபினுக்கு. அதோடு இவர்கள் முன்னே தரித்திர நிலையில் இருந்து அவன் பார்த்ததில்லை. இப்போது செல்வச் செருக்குடன் மிகவும் டம்பமாக இருப்பதைப் பார்த்து விபின், ‘நம் தகப்பனார் அதிகக் கோழை மனசுள்ளவர். அவர் கண்ணில் பொடி தூவிவிட்டு இவர்கள் அவர் சொத்தில் ஒரு பங்கை அபகரித்துக்கொண் டிருக்கவேண்டும்’ என்று எண்ணினான். 

அசிமத் எதற்கும் துணிந்த இளங்காளை. “உயிர் போனாலும் போகட்டும். எங்கள் உரிமையை இம்மியளவும் வீட்டுக் கொடுக்கமாட்டேன்” என்றான் அவன். இப்படி இருதரத்தாருக்கும் சச்சரவு மூண்டது. 

அசிமத்தின் விதவைத் தாய், “அப்பா, ஜமீன் தாரோடு சண்டை போட்டு ஒரு பலனும் இல்லை. இத்தனை நாள் யார் தயவில் வாழ்ந்தோமோ அவரை நம்பித்தான் உயிர் வாழ வேண்டும்; ஜமீன்தார் சொல்வதுபோல் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டியதுதான்” என்று தன் மகனுக்கு அடிக்கடி புத்தி சொன்னாள். 

அசிமத், “அம்மா, உனக்கு இந்த விஷயமெல்லாம் ஒன்றும் தெரியாது” என்றான். 

ஒவ்வொரு வழக்காக அவன் தோற்றுக்கொண்டே வந்தான். ஆனால் தோல்வி ஏற்பட ஏற்பட அவன் பிடிவாதம் அதிமாகிக்கொண்டுதான் வந்தது. தன்னுடைய வாழ்க்கை உரிமையை நிலைநாட்ட அவன் தன் சொத்து முழுவதையுங்கூடப் பணயம் வைக்கத் துணிந்து வீட்டான். 

மிர்ஜா பீபி ஒரு நாள் சாயந்தரம் தங்கள் தோட் டத்துக் காய்கறி வகையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் விபினைக் காண வந்தாள். கிழவி, அன்னையின் அன்பு கனியும் பார்வையுடன் அவனைப் பருகி விடுவதுபோல் நோக்கி, “எங்க அப்பன் அல்லவா நீ ! ஆண்டவன் உன்னை நல்லா வைக்கணும். என் மகன் அசிமை அதோகதி ஆக்காதே! உனக்கு இது தருமமா? அவனை உன் கையில் ஒப்பித்து விடுகிறேன். அருமையாக வளர்க்கிற உன் இளைய தம்பிபோல் அவனை எண்ணிக் கொள்; உன்னுடைய சொத்தோ அளவற்றது; அதில் பிடி அளவு இவன் எடுத்துக் கொண்டானே என்று முகம் சிணுங்காதே,அப்பனே !” என்று மொழிந்தாள். 

வயசானவள் என்று உரிமை கொண்டாடிக்கொண்டு அவள் பேச வந்ததைக் கண்டு விபின் மிகவும் வெறுப்படைந்தான். அவள், “நீயோ பெண் பிள்ளை ; இந்த ஸமாசாரமெல்லாம் உனக்கு ஒன்றும் விளங்காது. ஏதானாலும் சொல்ல வேண்டுமானால் உன் மகனை இங்கே அனுப்பிவை” என்றான். 

தன் வீட்டுப் பிள்ளையிடமிருந்தும் சரி, பிறர் வீட்டுப் பிள்ளையிடமிருந்தும் சரி அவளுக்குக் கிடைத்தது, ”உனக்கு விஷயம் ஒன்றும் தெரியாது” என்ற இந்த ஒரே பதில்தான். ஆண்டவன் பெயரைச் சொல்லிக்கொண்டே கண்ணை அடிக்கடி துடைத்தவண்ணம் அவள் தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள். 

3 

கிரிமினல் கோர்ட்டிலிருந்து ஸிவீல் கோர்ட்டு, அங்கிருந்து ஜில்லா கோர்ட்டு, அதிலிருந்து ஹைகோர்ட்டு வரையில் வியாஜ்யம் நடந்தது. ஓர் ஒன்றரை வருஷ காலம் இப்படிக் கழிந்தது. கடன்பளு மென்னியைப் பிடித்து இறுக்க ஆரம்பித்த சமயத்தில் அப்பீல் கோர்ட்டில் அவன் பக்கம் ஏதோ சிறிது ஜயம் ஏற்பட்டது. 

ஆனால், கரையிலிருந்த புலிவாயிலிருந்து தப்பி ஜலத்திலிருக்கும் முதலை வாயில் சிக்குவதுபோல் ஆகி வீட்டது அவன் நிலைமை. கடன் கொடுத்தவர்கள் சமயம் பார்த்துக் கோர்ட்டில் டிக்ரி வாங்கிக் கொண் டார்கள். அசிமத்துக்கு இருந்த கொஞ்ச நஞ்சம் சொத்தையும் ஏலம் போடும் தினம் நெருங்கிவிட்டது. 

அன்று திங்கட்கிழமை ; சந்தை கூடும் நாள். ஒரு சிற்றாற்றங்கரையில் சந்தை கூடியது. மழைக்கால மாதலால் ஆறு நிறைய ஜலம். படகிலே சிறிது வியாபாரம் நடந்தது; கரையிலே கொஞ்சம் நடந்தது. அந்த ஆடிமாசத்தில் விற்பனைக்கு வந்திருந்தவற்றுள் பலாப் பழமும் மீனுந்தான் விசேஷம். மப்பும் மந்தாரமுமாக இருந்தது. வியாபாரிகள் பலர், மழை வருமோ என்று அஞ்சி மூங்கில் கொம்புகளை மேலே பரப்பி அதன்மேல் கோணி கீணி போட்டு மூடியிருந்தார்கள். 

அசிமத்தும் வியாபாரம் செய்யத்தான் வந்திருந்தான். ஆனால் அவன் கையில் பைசாக்கூட இல்லை. இப்போ தெல்லாம் அவனுக்கு யாரும் கடனாக ஒன்றும் கொடுப்ப தில்லை. அவன் ஒரு கட்டாரியையும் பித்தளைத் தட்டையும் அடகு வைக்க எடுத்து வந்திருந்தான். 

வீபின் சாயந்தரமாகச் சற்றுக் காற்று வாங்கிவிட்டு வர வெளியில் கிளம்பியிருந்தான். அவனுக்குத் துணை யாகத் தடியும் கையுமாய் இரண்டு மூன்று ஆட்கள் வந்திருந்தார்கள். சந்தை இரைச்சல் பலமாகக் கேட்கவே அவன் அதைப் பார்க்கத் திரும்பினான். 

சந்தையில் நுழைந்ததும் வாசலில் இருந்த கலு என்பவனோடு அவன் இதுவரையில் நடத்தின வியாபாரத் தைப்பற்றி வேடிக்கையாக விசாரித்துக்கொண் டிருந்தான். அப்போது அசிமத், கட்டாரியைக் கையில் ஏந்திக் கொண்டு புலிபோல் உறுமி வீபினை நோக்கி வேகமாகப் பாய்ந்தான். சந்தையில் இருந்தவர்கள் அவனைப் பாதி வழியிலேயே மடக்கி உடனே நிராயுதபாணியாக்கிப் போலீஸ் கையில் ஒப்பித்துவிட்டார்கள். மறுபடியும் பழையபடி வியாபாரம் நடக்கத் தொடங்கியது. 

நடந்த விஷயம் விபினுக்குக் கவலையை உண்டு பண்ணியது; அவன் அதோடு திருப்தி அடையவில்லை. வேட்டை தேடிவந்த நம்மையே விலங்கு மடக்கினால் அதன் திமிரையும் கொழுப்பையும் என்னவென்று சொல்வது? 

நமக்கு வரும் ஆத்திரத்தை அடக்க முடியாது அல்லவா? ‘இருக்கட்டும், இருக்கட்டும். இந்தச் சோதாப் பயலுக்கு ஏற்ற தண்டனை விதிக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று குமுறினான் விபின். 

விபின் வீட்டுப் பெண்களெல்லாரும் அன்று நடந்த சமாசாரத்தைக் கேட்டு நடுநடுங்கினார்கள். எல்லோரும், “அடியம்மா ! எப்படிப்பட்ட காவாலிப் பயலடி அவன் !” என்று அசிமை வைதார்கள். அவனுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என்று தெரிந்ததும் ‘அப்பாடா’ என்று பெரு மூச்சு வீட்டார்கள். 

ஆனால் அன்று இரவு அந்த முகம்மதிய விதவையின் வீட்டில் அடுப்பு எரியவில்லை. அவள் மகன் அங்கே இல்லை; செத்த வீடுபோல் அது இருளடைந்து வெறிச்சென்று இருந்தது. ஊரிலே அன்று நடந்த விஷயங்களை மறந்து விட்டு எல்லோரும் சாப்பிட்டார்கள்; படுக்கப்போனார்கள்; நன்றாகத் தூங்கவும் தூங்கினார்கள். ஆனால் ஒரு கிழவியின் கண்ணுக்கு மட்டும் உலகத்தில் எல்லா வற்றையும்விட இந்த விஷயந்தான் பிரமாதமாகத் தோற்றியது; அவளுடைய கவலையில் பங்கெடுத்துக் கொண்டு அதற்கு ஈடு கொடுக்க இந்த உலகத்தில் எவரும் இல்லை. விளக்கு இல்லாத அந்த குடிசை மூலையில் எலும்புந் தோலுமாக அந்த ஒரு கிழ ஆத்மா மட்டும் குன்றிப் பயந்து கிடந்தது. 

இது நடந்து மூன்று தினங்கள் ஆகிவிட்டன. மறு நாள் டெபுடி மாஜிஸ்டிரேட் முன்பு விசாரணை. விபின் சாக்ஷிக்கு அழைக்கப்பட்டான். இது வரையில் எந்த ஜமீன்தாரும் சாக்ஷிக் கூண்டில் நின்றதில்லை; ஆனால் விபீன் அப்படி வந்து நிற்பதற்கு யாதொரு தடையும் சொல்லவில்லை. 

மறு நாள் வழக்கு ஆரம்பிக்கும் சமயம் தலைப்பாகை, கடிகாரச் சங்கிலி எல்லாம் அணிந்துகொண்டு பல்லக்கில் ஏறி ஆடம்பரத்துடன் விபின் கச்சேரிக்கு வந்து சேர்ந்தான். டெபுடி மாஜிஸ்டிரேட் மிகுந்த மரியாதை யுடன் தமக்கருகிலுள்ள ஆசனத்தில் அவனுக்கு இடங் கொடுத்தார். அன்று கச்சேரியில் இடங்கொள்ளவில்லை கூட்டம். இவ்வளவு பெரிய வழக்கு அங்கே நடந்து நெடுநாட்கள் ஆகின்றன. 

வழக்கு வீசாரணை தொடங்க இன்னும் சிறிது நேரந்தான் இருக்கும்; அப்போது ஒரு சேவகன் வந்து காதோடு காதாக வீபினிடம் ஏதோ சொன்னான். விபின் திடுக்கிட்டுப் போய் முக்கிய அலுவல் ஒன்று இருக்கிறது என்று சொல்லி வெளியே வந்தான். 

அங்கே வந்து பார்த்தபோது, சிறிது தூரத்தில் ஓர் ஆலமரத்தடியில் அவன் கிழத்தந்தை நின்றிருந்தார். அவர் காலில் ஒன்றும் போட்டுக் கொள்ளவில்லை. உடம்பில் நாமாவளி எழுதிய அங்கவஸ்திரம்; கையில் துளசி மாலை. அவரது வற்றிய மேனீ சங்கென ஒளிர்ந்தது. அவர் நெற்றியிலிருந்து சாந்தமும் கருணையும் கலந்து சுற்றிலும் பரவி நின்றன. 

விபின், கோட்டும் ஜிப்பாவும் இறுக்கிப் பிடிக்கும் நிஜாரும் உடுத்திருந்ததால் மிகச் சிரமப்பட்டு அவரை நமஸ்கரித்தான். தலைப்பாகை சரிந்து மூக்கண்டை வந்து விட்டது; கடிகாரம் ஜேபியிலிருந்து நழுவி வெளியில் வந்துவிட்டது. இவற்றை அவசரம் அவசரமாகச் சரிப் படுத்திக்கொண்டு, அவரை அருகில் இருந்த வக்கீல் வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டான். 

கிருஷ்ணகோபால் பாபு, “வேண்டாம்; சொல்ல வேண்டியதை இங்கேயே சொல்லிவிடுகிறேன்” என்றார். வேடிக்கை பார்க்க அங்கே கூடியவர்களைத் தூரத்தில் போகும்படி விபினுடைய ஆட்கள் அதட்டினார்கள். 

கிருஷ்ணகோபால் பாபு : அசிமை விடுதலை செய்ய ஏற்பாடு செய்; அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டதைத் திருப்பிக் கொடுத்துவிடு. 

வீபின் ஆச்சரியம் அடைந்து, “இதற்காகவா நீங்கள் காசியிலிருந்து இவ்வளவுதூரம் வந்தீர்கள்? இவர்கள் விஷயத்தில் மட்டும் நீங்கள் இவ்வளவு அக்கறை காட்டு வானேன்?” என்று கேட்டான். 

கிருஷ்ணகோபால் பாபு : அதை அறிந்து உனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை, அப்பனே. 

வீபீன் அதோடு விடவில்லை ; “தகுதியற்ற பல பேரிடமிருந்து இம்மாதிரித் திரும்ப வாங்கிக்கொண் டிருக்கிறேன். அவர்களில் அநேகம் பேர் பீராம்மணர்கள்; அப்படி யிருந்தும் தாங்கள் அந்த வியவகாரங்களில் தலையிடவேயில்லை. இப்போதோ இந்தத் துலுக்கப் பையனுக்காகப் பரிந்துகொண்டு வருகிறீர் ! விஷயம் என்னவோ இவ்வளவு தூரத்திற்கு வந்துவிட்டது. சரி; அசிமை விடுதலை செய்யச் சொல்லி அவன் சொத்தையும் திருப்பிக்கொடுத்து விடுகிறேன்; ஆனாலும் ஊர் வாயை மூடி வீடமுடியுமா? சொல்லும்” என்றான். 

கிருஷ்ணகோபால் பாபு சிறிதுநேரம் சும்மா இருந் தார். பிறகு வீரல்கள் நடுங்கத் துளசி மாலையை உருட்டிக்கொண்டே, குரலில் சற்று நடுக்கம் தோன்ற, ”ஊராருக்கு எல்லாவற்றையும் ஒளிக்காமல் சொல்வதா யிருந்தால் சொல்லிக் கொள்: அசிம் உன் தம்பி; என் பிள்ளை தான்” என்றார். 

வீபின் திடுக்கிட்டுப் போய், “அந்தத் துலுக்கச்சி வயிற்றில் பிறந்த பிள்ளையா?” என்றான். 

கிருஷ்ணகோபால் பாபு: ஆமாண்டாப்பா! 

விபீன் நெடுநேரம் அப்படியே நின்றிருந்தான். பிறகு, “அதெல்லாம் அப்புறம் ஆகட்டும். நீங்கள் வீட்டுக்கு வாருங்கள்” என்றான். 

கிருஷ்ணகோபால் பாபு, “இல்லை ; நான் மறுபடியும் வீடு திரும்ப மாட்டேன். இப்போதே இங்கிருந்து புறப் பட்டுவிட்டேன். உனக்கு எது சரியென்று படுகிறதோ அதைச் செய்” என்று சொல்லி அவனை ஆசீர்வதித்து வீட்டு, கண்ணீரைச் சமாளித்துக்கொள்ளச் சிறிது தடுமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். 

விபினுக்கு என்ன சொல்வது, செய்வது என்று ஒன்றும் தோன்றவில்லை. மௌனமாக நின்றிருந்தான். ஆனால் அவன் மனசில் மட்டும், அந்தக் காலத்து ஆசார அநுஷ்டானம் எல்லாம் இவ்வளவுதான் போல் இருக் கிறது என்று ஓர் எண்ணம் எழுந்தது. படிப்பீலாகட்டும், நடத்தையிலாகட்டும், தன் தந்தையைவீடத் தான் எவ்வளவோ மேல் என்று அவனுக்குப் பட்டது. ‘திட்ட மான ஒரு கொள்கை இராததால் ஏற்பட்ட விபரீதம் இது!’ என்ற முடிவுக்கு வந்தான். 

கச்சேரிக்குத் திரும்பினான். உதடு ஒட்டி உலர்ந்து வெளுத்திருக்க, கண்ணிலிருந்து நெருப்புப் பொறி பறக்க, அசிம் இரண்டு சேவகர்களின் கையில் கைதியாக வெளியில் நிற்பதைக் கண்டான் விபின். அழுக்கடைந்த ஒரு கந்தலைக் கட்டியிருந்தான் அசிம் அவன் விபினின் தம்பீ! 

டெபுடி மாஜிஸ்டிரேட்டுடன் விபினுக்கு நெருங்கிய நட்பு உண்டு. ஏதோ ஒருவிதமாக வழக்கு அதோடு குழப்பி மெழுகப்பட்டது. அசிமும் சில தினங்களுக் குள்ளாகவே பழையபடி ஆகிவிட்டான். ஆனால் இதெல் லாம் எந்தக் காரணத்தால் என்று அவனுக்கும் விளங்க வில்லை; மற்றவர்களும் புரியாமல் விழித்தார்கள். 

வழக்கின்போது கிருஷ்ணகோபால் பாபு வந்திருந்த செய்தி பரவுவதற்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். 

சூஷ்மபுத்தியுள்ள வக்கீல்களோ, சங்கதி என்ன வென்பதை ஊகித்துக் கொண்டார்கள். வக்கீல் ராம் தாரணனைக் கிருஷ்ணகோபால் பாபு தம் செலவில் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வந்திருந்தார். ‘இவர் இப்படிப் பரோபகாரமாய் ஏன் நடந்து கொள்ள வேண்டும்?’ என்று அவனுக்கு அடிக்கடி சந்தேகம் தோன்றுவதுண்டு. ‘துருவித் துருவிப் பார்த்தால், ஸாது ஸாது என்பவர்கள் குட்டு வெளியாகி விடும். என்னதான் ஜபமாலை உருட்டட்டும், உலகத்திலே எல்லோரும் நம்மைப் போலத்தான். ஸாதுக்கள் கபடிகள் ; துஷ்டர்களோ கள்ளங்கவடற்றவர்கள்: இதுதான் இரண்டு பேருக்கும் இடையேயுள்ள வித்தியாசம். எதுவாக இருந்தாலென்ன, கிருஷ்ணகோபால் பாபுவின் தர்மசிந்தனை யெல்லாம் வெறும் புருடா’ என்று அவனுக்கு இன்றுதான் பட்டது. இதுவரையில் விளங்கா திருந்த ஒரு புதிருக்கு இத்தனை நாள் கழித்து விடை கிடைத்துவிட்டது. அதோடு எக்காரணத்தாலோ, அவரிடத்தில் நன்றி செலுத்தவேண்டிய பாரமும் தலையிலிருந்து நீங்கினமாதிரி இருந்தது அவனுக்கு. இப்போதுதான் அவனுக்கு நிம்மதி ஏற்பட்டது.

– காரும் கதிரும் (சிறுகதைகள்), ஆசிரியர்: ரவீந்திரநாத் தாகூர், மொழிபெயர்த்தோர்: த.நா.குமாரசுவாமி, த.நா.சேனாதிபதி, முதற் பதிப்பு: 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *