சேற்றில் மலர்ந்த செந்தாமரை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 28, 2019
பார்வையிட்டோர்: 5,976 
 

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

அந்த இன் ஸ்பெகடர் ராஜ்ஜிடம் மெதுவாக “ராஜ், நீங்க சொல்றது ரொம்ப உண்மையாகவே இருக்கலாங்க.நான் இல்லேன்னு சொல்லலே.நான் அந்த பெரிய டாகடர் மேலே ஒரு ‘கேஸ்’ போட்டு அது கோர்ட்டுக்குப் போனா ஜட்ஜ் என்னைப் பார்த்து ‘உங்களுக்கு எப்படி குழந்தை பெரிய டாக்டர் பார்க்கும் போது உயிரோடு இருந்திச்சின்னு தெரியும்’ன்னு கேட்டா நான் எப்படிங்க அதுக்கு பதில் சொல்ல முடியும் சொல்லுங்க பார்க்கலாம்.அப்படியே ‘எனக்கு தெரியும்’ ன்னு நான் பதில் சொன்னா அதுக்கு அந்த பெரிய டாக்டர் அவங்க ‘டாக்டர் பஷையிலே’ ஏதாவது காரணங்கள் சொல்லி ‘நான் சொல்லுவது தப்பு’ ன்னு சொல்லி இந்த ‘கே¨ஸை’ தள்ளுபடி பண்ணி விடுவாங்களேங்க.அவங்க பேசற ’டாகடர் பாஷை’ எனக்குத் தெரியாதேங்க.எப்படி போனாலும் இந்த ‘கேஸை’ நம்மால் நிரூபிக்க முடியாதுங்க.நான் அந்தப் பெரிய டாக்டர் மேலே ‘கேஸை’ப் போட முடியாதுங்க.நீங்க மேலே ஆக வேண்டியதை போய் கவனியுங்க” என்று சொல்லி அனுப்பி விட்டார்.ராஜ்ஜுக்கு ரொம்ப ஏமாற்றமாகப் போய் விட்டது.அவன் அழுதுக் கொண்டே இருந்தான்.உடனே அந்த ‘ஏட்’ ராஜ்ஜைப் பார்த்து “இதோ பாருங்க.நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.பெரிய பெரிய பணக்காரங்க ஆஸ்பத்திரியிலே ‘ஆபரேஷன் தவறா பண்ணி விட்டாங்க’,‘சரியான மருந்து குடுக்கலே’,’நிறைய மயக்க மருந்து குடுத் தாங்க’ ‘அப்படி’ ‘இப்படி’ன்னு நிறைய ‘கேஸ்ங்க’ போடறாங்க.ஆனா கோர்ட்டிலே அவங்க போடற ஒரு ‘கேஸ¤ம்’ ஜெயிக்கறதே இல்லீங்க.டாக்டருங்க ஏதாவது அவங்க பாஷையிலே ஏதாச்சும் காரணம் சொல்லி தப்பிச்சு விட்டு விடறாங்க.நம்ம இன்ஸ்பெகடர் ஐயா சொல்றது ரொம்ப கரெக்ட்ங்க.டாக்டர் பாஷை நமக்கு தெரியாதுங்களேங்க.நாம டாக்டருங்க கிட்டேப் பேசி ஜெயிக்க முடியாதுங்களேங்க” என்று இன்ஸ்பெக்டர் சொன்னதையே சொன்னார்.ராஜ்ஜுக்கு இருந்த ஒரு வழியும் இப்போ இல்லை என்று ஆகி விட்டது.அவன் அழுதுக் கொண்டு இருந்தான்.மெல்ல அந்த இன்ஸ்பெகடரும்,அந்த ஏட்டும்,ராஜ்ஜுக்கு ஆறுதல் சொல்லி,மேலே ஆக வேண்டியதை கவனிக்கச் சொன்னார்கள்.

குடிசைக்கு வந்த ராஜ் கோவத்தில் வாசல் கதவை ‘தட’ ‘தட’ என்று வேகமாக தட்டினான். மெல்ல கதவை திறந்தாள் ரத்தினம். கோவமாக குடிசைக்குள்ளே வந்த ராஜ் “ஆஸ்பத்திரிக்கு ரொம்ப லேட்டா வந்த பெரிய டாகடர் வந்த ஒரு பத்தாவது நிமிஷத்துகுள்ளாற வெளியே வந்து ‘அவங்க வயித்திலேயே குழந்தை இறந்து இருக்கு.என்னால் ஒன்னும் பண்ண முடியாது’ ன்னு சொல்லிட்டு மறுபடியும் அவர் ரூமுக்குள்ளாற போயிட்டாரு.நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் ஒரு ‘கம்ல்ப்ளே யின்ட்’ கொடுக்கப் போனேன்.ஆனா அங்கே இருந்த ஏட்டும்,இன்ஸ்பெக்டரும் சுத்த பயந்தாங் கொள் ளி பயலுங்க.அவங்க ரெண்டு பேரும் ‘அந்த பெரிய டாக்டர் மேலே ஒரு ‘கேஸ்’ போட்டு அது கோர்ட்டு க்குப் போனா ‘ஜட்ஜ்’ எங்களைப் பார்த்து ‘உங்களுக்கு எப்படி குழந்தை பெரிய டாக்டர் பார்க்கும் போது உயிரோடு இருந்திச்சின்னு தெரியும்’ ன்னு கேட்டா நாங்க எப்படிங்க அதுக்கு பதில் சொல்ல முடியும் சொல்லுங்க பார்க்கலாம்.அப்படியே ‘எங்களுக்குத் தெரியும்’ன்னு நாங்க பதில் சொன்னா, அதுக்கு அந்த பெரிய டாக்டர் அவங்க டாக்டர் பஷையிலே ஏதாவது காரணங்கள் சொல்லி ‘நாங்க சொல்லுவது தப்பு’ன்னு சொல்லி இந்த ‘கே¨ஸை’ தள்ளுபடி பண்ணி விடுவாங்களேங்க.’டாகடர் பாஷை’ எங்களுக்குத் தெரியாதேங்க.எப்படி போனாலும் இந்த கேஸை நம்மால் நிரூபிக்க முடியாது ங்க.நான் அந்தப் பெரிய டாக்டர் மேலே ‘கேஸை’ப் போட முடியாதுங்க.நீங்க மேலே ஆக வேண்டிய தை போய் கவனியுங்க’ ன்னு சொல்லி என்னை அனுப்பி விட்டார்ம்மா” என்று கத்தினான். ”அப்படியா சமாச்சாரம்.சுத்த பயந்தாங்கொள்ளி பயலுங்க.நம்ம மாதிரி குடிசை ஆளுங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கப் போனா அவங்க அந்தப் புகாரை எடுக்கவே மாட்டாங்க.அதுவே கார்லே ஒருத்தர் போய் புகார் கொடுத்தா ஏழுந்து நின்னு அந்த புகாரை எடுத்துப்பாங்க அந்தத் தடிப் பயலுங்க. மொத்தத்லே இந்த போலீஸ் ஸ்டேஷனே அந்தப் பணக்காரங்களுக்கு தான் ராஜ்.நம்ம மாதிரி ஏழை ஜனங்களுக்கு இல்லேப்பா” என்று சொல்லி “சரி வாப்பா ராஜ்,மணி பன்னண்டு அடிச்சிடுச்சி. படுக்க லாம் வா”என்று சொல்லி ராஜ்ஜுக்கும் ஒரு பாயைப் போட்டாள் ரத்தினம்.அம்மா போட்ட பாயில் படுத்துக் கொண்டு கூரையைப் பார்த்து யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான் ராஜ். செந்தாமரையும் கமலாவும் ‘ஐயோ நம் அம்மாவுக்குப் பொறக்க இருந்த குழந்தையை அந்த ஆஸ்ப த்திரி பெரிய டாக்டர் சாவடிச்சுட்டாரா.டாக்டர் என்பவர் குழந்தையைக் காப்பாத்தத் தானே ஆஸ்பத் திரியிலெ வேலைக்கு வச்சு இருக்காங்க.குழந்தையை சாகடிக்க இல்லையே’ என்று புரியாமல் வருத்த ப்பட்டுக் கொண்டு படுத்துக் கொண்டு இருந்தார்கள்.

அடுத்த நாள் காலை மணி நாலடித்ததும் தேவி மெல்ல முனகினாள்.அங்கு இருந்த நர்ஸ் உடனே தேவிக் கிட்டே வந்து ”உங்களுக்கு மயக்கம் இப்போ தெளிஞ்சி இருக்காங்க.ஏதாச்சும் குடிக்க வேணுங்களாங்க”என்று கேட்டு கொஞ்சம் தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தாள்.’நர்ஸ்’ கொடுத்த தண் ணீரை வாங்கி மெல்ல குடித்தாள் தேவி.பிறகு தன் கண்களை மெல்ல திறந்துப் பார்த்தாள்.அவள் பக்கத்தில் இருந்த தொட்டில் காலியாக இருந்தது.அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருந்தது. ‘பெரிய டாக்டர் நமக்கு மயக்க மருந்துக் கொடுத்து பிரசவம் பார்த்தாரே,நமக்குக் குழந்தை பொறந்திச்சே, ஆனா பக்கத்திலே இருக்கிற தொட்டிலிலே குழந்தை இல்லையே.என்ன ஆகி இருக்கும்’ என்று மிகவும் கவலைப் பட்டாள் தேவி.அவள் பயந்துப் போனாள்.மெல்ல ¨தா¢யத்தை வரவழைத்துக் கொண்டு அங்கு இருந்த நர்ஸை பார்த்து “ஏங்க நர்ஸ்,எனக்கு குழந்தை பொறந்திச்சே. ஆனா இந்தத் தொட்டிலிலே அந்த குழந்தையைக் காணோமேங்க”என்று பயத்தோடு கேட்டாள்.“உங்க மனசை தேத் தறவு பண்ணிக்கீங்க.உங்களுக்கு அந்தக் குழந்தை உங்க வயித்துக்குள்ளேயே செத்துப் போய் இருந் திச்சிங்க.அதனால் தான் பெரிய டாக்டர் உங்களுக்கு நிறைய மயக்க மருந்துக் குடுத்து அந்த செத்து போன குழந்தையை வெளியே எடுத்தாங்க”என்று சொல்லி முடிக்கவில்லை,தேவி “என்னங்க சொல்றீ ங்க நீங்க. குழந்தை என் வயித்திலேயே செத்துப் போய் இருந்திச்சாங்க” என்று கேட்டு விட்டு விக்கி, விக்கி அழுதாள் தேவி.உடனே அந்த நர்ஸ் ”ஆமாம்மா,பெரிய டாக்டர் உங்களுக்கு மயக்க மருந்துக் கொடுத்து ஆபரேஷன் பண்ணி இறந்துப் போன குழந்தையை வெளியே எடுத்து இருக்காங்க.இந்த மாதிரி சமயத்திலெ நீங்க இப்படி விக்கி விக்கி எல்லாம் அழவே கூடாதுங்க.உங்க உடம்பு இப்போ ரொம்ப வீக்கா இருக்குங்க”என்று சொன்னாள்.“சரிங்க, நான் இனிமே அழலேங்க”என்று சொல்லி தன் கண்களைத் துடைத்து கொண்டாள் தேவி.கொஞ்ச நேரம் கழித்து தேவி அந்த நர்ஸை பார்த்து ”ஏங்க எனக்குப் பொறந்த குழந்தை ஆண் குழந்தையா,பெண் குழந்தையாங்க” என்று கேட்டாள். அதற்கு அந்த நர்ஸ் ”உங்களுக்குப் பிறந்தது ஒரு ஆண் குழந்தைங்க” என்று சொன்னதும் உடனே தேவி “அப்படிங்களாங்க.எனக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்திச்சாங்க” என்று சந்தோஷத்தில் கேட்டாள். தேவி அந்த ‘நர்ஸை’ப் பார்த்து “எனக்கு இதுக்கு முன்னே ரெண்டு குழந்தைங்க பொறந்தாங்க நர்ஸ். ரெண்டும் பொட்டைப் பிள்ளேங்க.நானும் என் வீட்டுக்காரரும் இந்தக் குழந்தையாவது ஒரு ஆண் குழந்தையாப் பொறக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டோமும்ங்க.அந்த ஆண்டவன் நாங்க ஆசைப் பட்டது போலவே எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடுத்தாருங்க.ஆனா அந்தக் குழந்தை பொறக்கறதுள்ளாற, அந்த சாமி அந்த குழந்தையை சாவடிச்சு விட்டாரேங்க” என்று சொல்லி தன் மனதுக்குள்ளேயே அழ ஆரம்பித்தாள்.அப்போது அங்கே இருந்த நர்ஸ் “உங்க வீட்டுக்காரர் நேத்து சாயங்காலம் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து ரொம்ப கலாட்டா பண்ணி பெரிய டாக்டர் மேலே நான் ‘கேஸ்’ போடப் போறேன்னு சொல்லிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்ன்னு ‘நைட் டியூட்டி’ நர்ஸ் என் கிட்டே சொன்னா.அவரு அப்படி எங்க பெரிய டாகடர் பேர்லே ‘கேஸ்’எல்லாம் போடக் கூடாது ங்க. எங்க பெரிய டாக்டர் ரொம்ப கைராசியான டாக்டருங்க”என்று சொல்லி விட்டு தேவியை மெல்ல சமாதானப் படுத்தி அவள் அழக் கூடாது என்பதை ஞாபகப் படுத்தினாள்.

அடுத்த நாள் காலை மணி ஆறரடித்ததும் ராஜ் மெல்ல எழுது தன் பல்லைத் தேய்த்து விட்டு அம்மாப் போட்டுக் கொடுத்த ‘டீயை’க் குடித்தான்.பிறகு தன் ஷர்ட்டை போட்டுக் கொண்டு “அம்மா,

“ நான் ஆஸ்பத்திரிக்குப் போய் தேவியைப் பார்த்துட்டு,அப்புறமாஅந்தக் குழந்தை ‘பாடியை’ வாங்கி கிட்டு அடக்கம் பண்ணி விட்டு,அப்புறமா ஆஸ்பத்திரிக்கு வந்து தேவியை என்னோடு அனுப்பினா, அவளை வீட்டுக்கு கூட்டி கிட்டு வாறேன்மா” என்று சொல்லி விட்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பினான் ராஜ்.ஆஸ்பத்திரிக்கு வந்த ராஜ் அங்கு இருந்த டாக்டா¢டம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு தேவியைப் பார்க்கப் போனான்.தேவி தன் புருஷனைப் பார்த்ததும் ”வாங்க,ஏங்க,நீங்க நேத்து சாயங் காலம் ரொம்ப கத்தி,அமக்களம் எல்லாம் பண்ணி, பெரிய டாக்டரை போலீஸ்லே சொல்லி அவங்க பேர்லே ‘கேஸ்’ போடப் போடறேன்னு கலாட்டா பண்ணீங்களா.ஏங்க இப்படி பண்ணிங்க” என்று கோ வமாக கேட்டாள்.“ஆமாம் தேவி,நமக்குப் பொறந்த அந்தக் குழந்தை செத்துப் போச்சுன்னு அந்த டாக்டர் சொன்னதும் எனக்கு ரொம்ப கோவம் வந்திச்சி.நான் கலாட்டா பண்ணது என்னமோ உண் மைத் தான் தேவி.நான் பண்ணது ரொம்ப தப்பு” என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடை த்துக் கொண்டே சொன்னான் ராஜ்.“ஏங்க,எந்த டாக்டராவது குழந்தையை வேணும்ன்னு சாவடிப்பா ங்களாங்க.அவங்க குழந்தையை உயிரோடு வெளியே எடுக்கத் தானே முயற்சி பண்ணுவாங்க அவங்க டாக்டர் படிப்பு படிச்சு விட்டு இந்த டாக்டர் வேலைக்கு வந்து இருக்காங்க.இது ஏங்க உங்களுக்கு புரியலே.நீங்க வீணா ஏங்க கத்தி கலாட்டா எல்லாம் பண்ணீனேங்க.இங்கே இருந்த எல்லா ஆஸ்பத் திரி சிப்பந்திகள் எல்லாரும் ஒரு வாய் வச்சாப் போல உங்களைப் பத்தி மட்டமா பேசினாங்க.எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்திச்சிங்க”என்று சொல்லி ராஜ்ஜை மிகவும் கோவித்துக் கொண்டாள் தேவி. “ஆமாம் தேவி,நான் பண்ணது ரொம்பத் தப்பு தான்.நீயும் என்னை தயவு செஞ்சி மன்னிச்சிடு” என்று சொல்லி அழுதான் ராஜ்.“போவட்டும் விடுங்க.இனிமே இப்படி எல்லாம் ஆஸ்பத்தீரியிலே கத்தி, கலா ட்டா,எல்லாம் செய்யாதீங்க”என்று சொன்னாள் தேவி.சிறிது நேரம் கழித்து “பாருங்க,அந்த கடவுள் நமக்குப் பொறக்க இருந்த இந்தக் குழந்தையை ஒரு ஆண் குழந்தையாக் கொடுத்து,அது இந்த உலகத்திலே பொறக்கறதுக்குள்ளாற,நம்மக் கிட்டே இருந்து பிடுங்கிக் கிட்டாருங்க.அவரு நமக்கு ரெண்டு பொட்டைப் பிள்ளைங்களே மட்டும் கொடுத்தாருங்க.இப்ப கொடுத்த ஆண் குழந்தை யை நமக்கு இல்லேன்னு பண்ணிட்டாருங்க.நம்ம கிட்டே இருந்து பிடுங்கிக் கிட்டாருங்க” என்று சொன் னாள்.“அப்படியா தேவி,நமக்கு ஒரு ஆண் குழந்தை பொறந்திச்சா.ஒரு ஆண் குழந்தை வேணும்ன்னு நாம ரெண்டு பேரும் அந்த கடவுளை தினம் வேண்டிக் கிட்டு வந்தோமே.ஆனா அவர் அந்த ஆண் குழந்தையை நமக்கு குடுத்தா மாதிரி கொடுத்துட்டு,உடனே அந்தக் குழந்தையை நம்ம கிட்டே இருந்து பிடுங்கிக் கிட்டாரே”என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழுதான்.அங்கு இருந்த ‘நர்ஸ்’ ராஜ்ஜைப் பார்த்து “இதோ பாருங்க,இங்கே எல்லாம் நீங்க அழக் கூடாதுங்க” என்று சொன்னதும் ராஜ் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு தன் அழுகையை நிறுத்தினான்.சிறிது நேரம் ஆனதும் “சரி,தேவி நான் இப்பவே பெரிய டாக்டரைப் பாத்து மன்னிப்புக் கேக்கறேன்” என்று சொல்லி விட்டு பெரிய டாக்டரைப் பார்க்கப் போனான் ராஜ்.ராஜ் அங்கு டியூட்டியில் இருந்த டாக்டரைப் பார்த்து “டாக்டர், என் பேர் ராஜ்.நேத்து சாயங்காலம் செத்துப் போய் பொறந்த குழந்தைக்கு அப்பா. எனக்கு நீங்க அந்தக் குழந்தைக்கு ‘டெத் சர்டி·பிகேட்’ தர முடியுங்களாங்க” என்று மெல்ல கேட்டான்.

அந்த டாக்டர் ராஜ்ஜைப் பார்த்து “உங்களை எங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியுங்க.நீங்க தானே நேத்து ராத்திரி எங்க பெரிய டாக்டர் மேலே போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் போறேன் னு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினவரு.என்ன போலீஸ் ஸ்டேஷன் போனீங்களாங்க.என்ன ஆச்சுங்க. அங்கே எங்களைப் பத்தி புகார் கொடுத்தீங்களா.அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உங்க புகாரை எடுத் துக் கிட்டாரா.எப்போ அந்த இன்ஸ்பெக்டர் வந்து எங்க பெரிய டாக்டரை ‘அரெஸ்ட்’ பண்ணப் போறா ருங்க”என்று கிண்டலாகக் கேட்டார்.ராஜ் பதில் ஒன்னும் சொல்லாமல் தன் தலையை தொங்க போட் டுக் கொண்டு இருந்தான்.“இதோ பாருங்க,நாங்க எல்லாம் டாக்டருக்கு படிச்சவங்க.நாங்க மத்தவங்க உயிரைக் காப்பாத்த தாங்க எப்பவும் பாடு படுவோம்.அதுக்குத் தாங்க நாங்க நாலு வருஷம் கஷ்டப் பட்டு இந்த டாக்டர் படிப்பைப் படிச்சி இருக்கோம்.மத்தவங்க உயிரை சாகடிக்க இல்லீங்க.எங்க பெரிய டாக்டர் ரொம்ப கைராசிக்கார டாக்டருங்க.அந்தக் குழந்தை உங்க சம்சாரத்தின் வயித்திலேயே இறந்துப் போய் விட்டு இருந்ததுங்க.அதனால்லே பெரிய டாக்டர் உடனே உங்க பெண்ஜாதிக்கு மயக்க மருத்து குடுத்து செத்துப் போன குழந்தையை வெளியே எடுத்து,உங்க பெண்ஜாதியை காப்ப ¡த்தினா¡ருங்க.இதை நீங்க நல்லா புரிஞ்சு கிட்டா போதுங்க.நாங்க செஞ்சு வர இந்த புனிதமான காரியத்தை இப்படி மட்டமா எடைப் போடாதீங்க” என்று மூச்சு விடாமல் சொன்னார் அங்கு ‘டியூட்டி யில்’ இருந்த டாக்டர்.இந்த சமயம் பார்த்து பெரிய டாக்டர் ஆஸ்பத்திரிக்கு வந்து அவங்க ரூமுக்குள் போனார்.‘டியூட்டில்’ இருந்த டாக்டர் ராஜ்ஜைப் பார்த்து “அவங்க உங்க பேர்லே ரொம்ப கோவமா இருக்காங்க.அதனால்லே நீங்க அவங்க கீட்டே போய் மன்னிப்பு கேளுங்க.அவங்க ‘பர்மிஷன்’ கொடு த்தா தான் நான் உங்க குழந்தைக்கு ‘டெத் சர்டி·பிகேட்’ தர முடிங்க..மார்ச்சுவரி அதிகாரிக்கும் உங்க குழந்தை ‘பாடியை’ வெளியே தர முடியும்.போங்க.உள்ளே போய் பெரிய டாக்டர் கிட்டே மன்னிப்பு கேளுங்க” என்று சொன்னாள்.பயந்துக் கொண்டே ராஜ் மெல்ல பெரிய டாக்டர் ரூமுக்குள் போய் “டாக்டர், என்னை மன்னிச்சுடுங்க.என் குழந்தை செத்துப் போச்சு என்கிற சேதியை நான் கேட்டதும் எனக்கு மூளை குழம்பிடிச்சி.நான் அப்படி உங்களை பத்தி சொன்னது ரொம்ப தப்பு டாக்டர்.நான் இனி மேலே அந்த மாதிரி கத்தி அமக்களம் எல்லாம் பண்ண மாட்டேன் டாக்டர்” என்று தன் கையைக் கூப்பிக் கொண்டு சொன்னான் ராஜ்.”இந்த சினிமா,டீ.வீ.சீரியலல்லே வருவதை எல்லாம் பார்த்து விட்டு டாக்டர்களை இனிமே பயமுறுத்தாதீங்க.உங்க குழந்தையை நாங்க சாகடிப்பதால் எங்களுக்கு என்னங்க லாபம் சொல்லுங்க.நீங்க இதை யோஜனைப் பண்ண வேணாமாங்க.நீங்க கொஞ்சம் வெளி யே போய் இருங்க.நான் என் உதவி டாக்டரை உங்களுக்கு ‘டெத் சர்டி·பிகேட்’ தரச் சொல்றேன். அப்புறமா நீங்க ‘மார்ச்சுவரிக்கு’ப் போய் உங்க குழந்தை பாடியை வாங்கி கிட்டுப் போங்க” என்று கண்டி ப்பான குரலில் சொன்னார் அந்த பெரிய டாக்டர்.ராஜ் அந்த பெரிய டாக்டருக்கு தன் நன்றியை கையைக் கூப்பி தெரிவித்தான். ‘டியூட்டி’ டாக்டர் ராஜ்ஜுக்கு குழந்தை இறந்ததற்கு சான்றிதழ் கொடுத்தார்.பிறகு ராஜ்ஜிடம் ”நீங்க ‘மார்ச்சுவரிக்கு’ப் போய் உங்க இறந்த குழந்தை ‘பாடியை’ வாங்கிக் கிட்டுப் போங்க”என்று சொன்னதும் ராஜ் அந்த ‘டியூட்டி’ டாக்டருக்கு தன் நன்றியைத் தெரிவித்து விட்டு ‘மார்ச்சுவரிக்கு’ப் அங்கு இருந்த அதிகாரிக்கு அவர் கேட்ட எரனூறு ரூபாயைக் கொடுத்து விட்டு,தன் குழந்தையின் ‘பாடியை’ வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

அழுதுக் கொண்டே ராஜ் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போய் அடக்கம் பண்ணி விட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தான்.வந்து தேவியை அவன் குழந்தையை அடக்கம் செய்து விட்டு வந்த தை அழுதுக் கொண்டே சொன்னான்.அதைக் கேட்டு தேவியும் அழுதாள்.கொஞ்ச நேரம் ஆனதும் ராஜ் அங்கு இருந்த டியூட்டி டாக்டரைப் பார்த்து “டாக்டர், நான் என் பெண்ஜாதி தேவியை வூட்டுக்கு இட்டுக் கிட்டு போலாங்களா” என்று கேட்டான்.அதற்கு அந்த டியூட்டி டாக்டர் “இல்லேங்க,அவங்க உடம்பு இப்போ ரொம்ப ‘வீக்கா’ இருக்குங்க.அவங்க உடம்பு ஆபரேஷன் பண்ண உடம்புங்க.இன் னும் ரெண்டு நாள் இங்கே இருக்கட்டும்ங்க.நீங்க ரெண்டு நாள் கழிச்சு வந்து அவங்களே வந்து அழைசுக் கிட்டு போங்க” என்று சொன்னார்.உடனே ராஜ் தன் கண்களைத் துடைத்து கொண்டே ஆஸ்பத்திரியை விட்டு தன் குடிசைக்கு வந்தான் ராஜ்.குடிசைக்கு அந்த ராஜ் ‘பாத் ரூமுக்கு’ப் போய் தன் தலையில் தண்ணியை வாரி வாரிக் கொட்டி இறந்துப் போன குழந்தைக்கு நினைத்து தலை முழுகினான்.பிறகு குடிசைக்கு உள்ளே வந்தான்.“அம்மா செத்துப் போன குழந்தையை நான் அடக் கம் பண்ணி விட்டேம்மா” என்று அழுது கொண்டே சொன்னான் ராஜ்.ரத்தினம்“சரி,ராஜ்.நீ தேவியை வூட்டுக்கு இட்டாரலையா”என்று கேட்டாள்.செந்தாமரையும் கமலாவும் ‘அப்பா அம்மாவை அழைச்சு கிட்டு வராம தனியா வந்து இருக்காரேன்னு’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்கள். ராஜ் நிதானமா “இல்லேம்மா,பெரிய டாக்டர் தேவிக்கு நிறைய மயக்க மருந்து குடுத்து தான் ஆபரே ஷன் செஞ்சுத் தான் செத்துப் போன குழந்தையை வெளியே எடுத்தாங்களாம்.அங்கே இருந்த டாக்டர் ‘இப்போ தேவி ரொம்ப ‘வீக்கா’ இருக்குங்க.இன்னும் ரெண்டு நாள் இங்கே இருக்கட்டும்ங்க.நீங்க ரெண்டு நாள் கழிச்சு வந்து அவங்களே வந்து இட்டுக் கிட்டு போங்க’ ன்னு சொல்லிட்டடாங்கம்மா” என்று சொன்னான்.சிறிது நேரம் கழித்து ராஜ் “அம்மா செத்து போன குழந்தை ஒரு ஆண் குழந் தேம்மா.அந்த குழந்தை இப்போ உயிரோடு இருந்து இருக்கக்கூடாதா,நம்முடைய கடைசி காலத்தி லே அந்த பையன் நமக்கு கஞ்சி ஊத்துவானே ’என்று சொல்லி அழுதான்.இதை கவனித்த ரத்தினம் ”ஏம்ப்பா ராஜ் நீ அழுவறெ,அந்த குழந்தைக்கு ஆயுசு அவ்வளவு தான் அந்த கடவுள் குடுத்து இருக் காரே.நாம என்ன பண்ண முடியும் சொல்லு.அவர் உனக்கு குடுத்து இருக்கும் இந்த ரெண்டு பொண் ணுங்களே வச்சுக் கிட்டு,அவங்களே நீ நல்ல இடத்தில் கல்லாணம் கட்டிக் கொடுத்து சந்தோஷப் படுப்பா.வெறுமே செத்துப் போன அந்தக் குழந்தையையே நினைச்சுக் கிட்டு அழாதே.எழுந்திரி வந்து நாஷ்டா சாப்பிடு” என்று கூப்பிட்டாள்.ராஜ் எழுந்து தன் கைகளை கழுவிக் கொண்டு அம்மா தட்டில் கொண்டு வந்த வைத்த நாஷ்டாவை சாப்பிட ஆரம்பித்தான்.கமலாவும்,செந்தாமரையும், ‘நமக்கு ஒரு தம்பிப் பாப்பா பொறந்தானே.அவன் இப்போ உயிரோடு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.நாம அவனோடு தினமும் விளையாடி வரலாமே.இப்படி பொறக்கும் போதே செத்து போயிட்டானே’ என்று நினைத்து மிகவும் வருத்த பட்டார்கள்.ரெண்டு நாள் போனதும் ராஜ் ஆஸ்பத்திரிக்குப் போய் அவர் கள் சொன்ன பணத்தை கட்டி விட்டு தேவியை அழைத்துக் கொண்டு குடிசைக்கு வந்தான்.தேவி குடிசைக்கு வந்ததும் அவ உடம்பைப் பார்த்த ரத்தினம் “தேவி, நீ இன்னும் ஒரு மாசத்துக்கு சித்தாள் வேலைக்கு எல்லாம் போகவே வேணாம்.உன் உடம்பு முதல்லெ நல்லா ஆவட்டும்.அப்புறமா நீ அந்த சித்தாள் வேலைக்குப் போய் வரலாம்.வூட்டிலே இருந்துக் கிட்டு,நல்லா சாப்பிட்டு உன் உடம்பை தேத்திக்கோ”என்று சொன்னாள்.உடனே தேவியும் “சரி அத்தே.நான் அப்படியே செய்றேன்” என்று சொல்லி விட்டு பாயைப் போட்டுக் கொண்டு படுத்தாள்.

கமலாவுக்கும் செந்தாமரைக்கும் வருஷாந்திர பரி¨க்ஷக்கு லீவு விட்டு இருந்தார்கள்.செந்தா மரை பரி¨க்ஷக்கு வேண்டியதை எல்லாம் ஒன்னு கூட விடாமல் படித்து, மனப் பாடம் பண்ணி, எழுதி,எழுதி பார்த்து வந்தாள்.ஆனால் கலலாவோ எப்போதும் ரேடியோப் பெட்டியிலே பாட்டு கேட் பதும்,மூனாவது குடிசையிலே அவங்க பாக்கிற டீ.வீ. சீரியல்களையும்,தவறாமல் பார்த்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தாள்.தேவி ‘கமலா இப்படி பாடங்களே படிக்காம டயத்தே இப்படி வீண் அடி ச்சுக் கிட்டு இருக்காளே.இவளை எப்படி திருத்துவது.அதே அவ தங்கை செந்தாமரை எப்படி எல்லா பாடங்களையும்,ஒன்னு கூட விடாம படிச்சு,மனப் பாடம் பண்ணி, எழுதியும் பார்த்து வராளே.அந்தக் காலத்திலே நாம படிக்கிற வயசிலே நாமும் இப்படித் தான் எல்லா பாடங்களையும் ஒன்னு கூட விடாம படிச்சு மனப் பாடம் பண்ணி,எழுதிப் பார்த்து வந்தோமே’ என்று நினைக்கும் போது தேவிக்கு பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தது.

தேவி அவள் அப்பா அம்மாவுக்கு ஒரே ஒரு பெண் குழந்தையாய் இருந்தா அவ பத்தாவது வயசு வரைக்கும்.தேவி அப்பா சரவணனுக்கும் சரஸ்வதிக்கும் தங்களுக்கு இனிமே குழந்தையே பிறக்காது என்று நினைத்து வந்தார்கள்.ஆனால் தேவிக்கு பத்து வயசு ஆகும் போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது.சரவணனும் சரஸ்வதியும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.குழந்தையே பிறக்காது என்று நாம் நினைச்சு வந்தோமே,ஆனா இப்போ நான் தினமும் வேண்டி வரும் அந்தக் கடவுள் நமக்கு ஒரு குழந்தையையும் கொடுத்து அந்தக் குழந்தையை ஒரு ஆண் குழந்தையாகவும் கொடுத்து இருக்காறே’ என்று நினைத்து அந்தக் குழந்தைக்கு ‘முத்து’ என்கிற பேரை வச்சு மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்கள் இருவரும்.தேவிக்கும் இத்தனை வருஷமா தனியே இருந்து வந்த நமக்கு இப்போ நம்மோடு பேசி,விளையாடி வர ஒரு தம்பி பாப்பா பொறந்து இருப்பதை நினைச்சு அந்தக் குழந்தையுடன் ஆசையாக இருந்து வந்தாள்.தேவிக்கு என்றைக்குமே படிப்பு என்றால் மிகவும் பிடிக்கும்.அவள் தினமும் அவள் பாடங்களை எல்லாம் தவறாமல் படித்து வந்து தன் வகுப்பில் எப்போ தும் முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணி வந்தாள்.முத்துவுக்கு ஐஞ்சு வயசு ஆனதும் சரவணனனும் சரஸ்வதியும் அவனை ஒண்ணம் ‘க்லாஸ்’ சேர்த்து படிக்க வைத்தார்கள்.தேவி தினமும் தம்பி முத்து கைகளை ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொண்டு அவனை அவன் பள்ளிக் கூடத்தில் விட்டு விட்டு, அவனைப் பார்த்து ”முத்து, உன் பள்ளிகூடம் முடிஞ்சதும் நீ இந்த புளிய மரத்தடியிலேயே குந்திக் கின்னு இரு. என் பள்ளிகூடம் விட்டதும் நான் உன்னைக் கூட்டி கிட்டு ரெண்டு பேரும் ஒண்ணா வூட்டுக்குப் போலாம்.நான் வந்து உன்னைக் கூட்டிக் கிட்டுப் போற வரைக்கும் நீ யார் கூப்பிடாலும் அவங்களோடு போய் விடாதே.நான் வர வரைக்கும் நீ இந்தப் புளிய மரத்தடியை விட்டு ஒரு அடி கூட இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நகரக் கூடாது.என்ன சொல்றது உனக்குப் புரிதா” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டுப் போவாள்.தம்பி முத்துவும் “சரி அக்கா,நீங்க வந்து என்னே கூட்டிக் கிட்டு போற வரைக்கும் நான் இந்த புளிய மரதடியிலேயே குந்திக்கின்னு இருப்பேன்.நான் யார் கூப்பிட்டலும் அவங்க கூட எல்லாம் போவ மாட்டேன். நீ தைரியமா உன் பள்ளிக் கூடத்துக்குப் போய் வா அக்கா” என்று சொல்லி,அதன் படியே நடந்தும் வந்தான்.சரவணனுக்கும் சரஸ்வதிக்கும் தேவி இவ்வளவு பொறுப்பா தம்பி முத்துவைக் கவனிச்சுக் கிட்டு வறாளே என்று நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டு நிம்மதியாக இருந்து வந்தார்கள்.

தேவி எட்டாவது வகுப்பு படிக்கும் போது அரை ஆண்டு பரிக்ஷயிலே வகுப்பில் முதல் மாண வியாக ‘பாஸ்’ பண்ணீனாள்.சரவணனுக்கும் சரஸ்வதிக்கும் தேவியை நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டார்கள். ஒரு பக்கம் அவர்கள் சந்தோஷப்பட்டாலும் மறு பக்கம் அவர்களுக்கு ‘முத்து சரியாகவே படிக்காம எப்போதும் கிரிக்கெட் ஆடு வருவதில் அதிக நாட்டம் காட்டி வறானே’ என்று நினைத்து மிகவும் கவலை பட்டார்கள்.சரவணன் முத்துவவை பல தரம் தன்னிடம் கூப்பிட்டு ”முத்து, நீ ஒரு ஆம்பளைப் பையன்.எனக்கும் உங்க அம்மாவுக்கும் இனிமே குழந்தைங்க பொறக்காதுன்னு நாங்க நினைச்சு வந்தோம்.ஆனா அந்த முருகக் கடவுள் புண்ணியத்திலே நீ தேவி பொறந்து பத்து வருஷம் கழிச்சு எங்களுக்கு பொறந்தே.நீ பொறந்தப்ப எங்க மூனு பேருக்கும் தாங்க முடியாத சந்தோஷமா இருந்திச்சு.தேவியைப் பாரு.அவ பொட்டைப் பிள்ளை தான்.ஆனா அவ தினமும் அவ பாடங்களே எல்லாம் எப்படி தவறாம படிச்சு வந்து,இந்த அரை ஆண்டு பரி¨க்ஷயிலே அவ ‘க்லாஸிலெ’ முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணி இருக்கா.ஆனா நீயோ உன் பாடங்களை எல்லாம் சரியாகவே படிக்காம எப்பவும் அந்த கிரிக்கெட்டைக் கட்டிக் கிட்டு அழறே.இந்த கிரிக்கெட் ஆட்டம் எல்லாம் பணக்கார பசங்க ஆடற ஆட்டம்டா.நம்ப குடும்பமோ ரொம்ப ஏழை குடும்பம்டா.நீ நல்லா படிச்சு ஒரு நல்ல வே லைக்குப் போய் வந்தா நம்ப கஷ்டம் விடியும்டா.நல்லா படிச்சு வா முத்து.இந்தக் கிரிக்கெட் ஆட்டம் எல்லாம் நமக்கு வேணான்டா.நீ உன் பாடங்களே நல்லா அடிச்சு வாப்பா” என்று சொல்லி வந்தார். ஆனால் முத்துவோ அப்பா சொன்னதைக் கேட்காமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிரிக் கெட்டைத் தான் ஆடி வந்தான்.கிரிக்கெட் விளையாட்டத்தில் அதிக கவனம் செலுத்து வந்ததால் முத்து அவன் பாடங்களை சரியாக படித்து வராமல் படிப்பிலே ரொம்ப சுமாராகப் படித்து வந்தான். சரவணன் தன் மளிகைக் கடைக்கு போய் இருக்கும் போது சரஸ்வதியும் தன் பங்குக்கு முத்துவிடம் அவன் பாடங்களை நன்றாகப் படித்து வரச் சொல்லி வந்தாள்.கிரிக்கெட் கொடுத்த சந்தோஷம் முத்து வுக்கு படிப்பில் வரவில்லை.எட்டாவது வருடப் பரி¨க்ஷயிலே தேவி முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணினாள்.எட்டாவது முதல் மாணவியாக ‘பாஸ்’ பண்ணினதால் அவள் மேலே ஒன்பதவது படிக்க மிகவும் ஆசைப் பட்டாள்.அவள் படித்து வந்த போது எட்டாவது வரைக்கும் தான் அரசாங்க இலவச பள்ளிகள் இருந்து வந்தது.ஒன்பதாவது படிக்க வேண்டும் என்றால் அவள் ஸ்கூல் ‘·பீஸ்’ கட்டி தான் படிக்க வேண்டும் என்கிற நிலை இருந்து வந்தது.

தேவியின் அப்பா சரவணன் ஒரு சின்ன மளிகைக் கடை தான் வைத்து இருந்தார்.அந்தக் கடையிலே இருந்து தான் அவங்க வீட்டுக்கு வேண்டிய மளிகை சாமான்களை எடுத்து வந்துக் கொண்டு இருந்தாள் சரஸ்வதி.மாசக் கடைசியிலெ அவர் லாப நஷ்ட கணக்குப் பார்த்தால் அவரிடம் அதிக லாபமே தங்காது.குடும்பம் நடத்தி வரவே மிகவும் கஷ்டப் பட்டு வந்தார் சரவணன்.தனக்கு வேறே எந்த தொழிலும் தெரியாததாலும்,அதிகம் படிக்காத மணைவி ஒருத்தி,ஒரு பொண்ணு,ஒரு பிள்ளை இவர்கள் மூனு பேருக்கும் சோறு போட்டு,துணி மணிகள் வாங்கிக் கொடுக்க வேண்டி இருந் ததாலும் சரவணன் வேறு வழி இல்லாமல் பல்லைக் கடித்துக் கொண்டு அந்த மளிகைக் கடையை நடத்தி வந்தார்.அன்று ஞாயித்துக் கிழமை.இரவு மளிகை கடையை சீக்கிரமாக மூடி விட்டு வீட்டுக்கு வந்து சரவணன் வீட்டில் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார்.அம்மாவும் அவர் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள்.தேவி ‘இது தான் நல்ல சமயம்,மெல்ல நம்ம அப்பா, அம்மா கிட்டே ‘தான் மேலே படிக்க படும் ஆசையை சொல்லி,தன்னை ஒன்பதாவது சேர்க்க சொல்லி படிக்கலாம்’ என்று நினைச்சு மெல்ல வந்து அப்பா விடம் “அப்பா,,நான் எட்டாவதிலே என் வகுப்பில் முதல் மாணவியாகப் ‘பாஸ்’ பண்ணி இருக்கேன்னு உங்க ரெண்டு நல்லா தெரியும்.எனக்கு இப்போ ஒன்பதாவது சேர்ந்து படிக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு.என்னை ஒன்பதாவது சேக்க முடியுமாப்பா”என்று தேவி சொல்லி முடிக்கவில்லை சரஸ்வதி உடனே “இதோ பார் தேவி.நீ ஒரு பொட் டை புள்ளே.எட்டாவது வரைக்கும் அரசாங்கம் இலவச படிப்பு தராங்க என்கிறதாலே நானும் உன் அப்பாவும் உன்னை படிக்க வச்சுக் கிட்டு இருந்தோம்.ஒன்பதாவது படிக்க உனக்குப் பள்ளிகூட ‘பீஸ்’ கட்டி ஆகணும்.அப்பா மளிகைக் கடையிலே இருந்து வரும் பணம் நம்ம நாலு பேருக்கும் கைக்கும் வாய்க்குமா இருக்குது.நீ வயசுக்கு வந்துட்டே.உன்னை ஒருத்தனுக்கு கட்டி குடுக்கணும்.அதுக்கு உன் கழுத்துக்கு,காதுகளுக்கு,மூக்குக்குன்னு எல்லாம் ஏதாச்சும் ஒரு நகை வாங்கிப் போட்டாவணும். .அப்புறமா உன் கல்யாண செலவு வேறே இருக்கு.நான் தெரியாத் தான் கேக்கறேன்,நீ மேலே படிச்சு என்ன பண்ணப் போறே.நீ படிச்சா அந்தப் படிப்பு எங்களுக்கு உதவப் போறதே இல்லே.உனக்கு கட்டற ‘·பீஸ்’ பணம் இருந்தா அது முத்து படிப்புக்கு பிரயோஜனப்படும்.நீ மேலே ஒன்னும் படிக்க வேணாம்.எட்டாவது படிச்ச படிப்பே போதும் ஒரு பொட்டைப் புள்ளேக்கு” என்று சொல்லி தேவியின் ஆசையை நெருப்பிலே போட்டு பொசுக்கி விட்டாள் சரஸ்வதி.

‘என்னடா இது, நாம நம்ம அப்பாவைக் கேட்டா இந்த அம்மா ஒரு பெரிய பிரசங்கமே பண்ணி அப்பா மனசே கலைச்சுட்டாங்களே.பொட்டைப் புள்ளேன்னா மேலே படிக்கக் கூடாதா என்ன.ஆம்ப ளை பசங்கத் தான் மேலே படிக்கணுமா.என்னமோ நாளைக்கே என்னை ஒருத்தனுக்கு கட்டி குடுக்க, அது வாங்கணும்,இதை வாங்கணும்ன்னு ஒரு பெரிய ‘லிஸ்ட்டை’ போடறாங்களே இந்த அம்மா. இவங்க இப்படி சொன்னா நம்ம அப்பா எப்படி நம்மை ஒன்பதாவது படிக்க சேப்பார்.அவருக்கு இந்த ஆசை இருந்தாலும்,அம்மா இப்படி சொன்னப்புறம் அவர் நம்மை மேலே படிக்க வைக்க மாட்டாறே. நாம இனிமே மேலே படிக்கவே முடியாதா’ என்று நினைத்து மிகவும் கவலைப் பட்டாள் தேவி.தேவி சொன்னதை நன்றாக யோஜனை பண்ணி பார்த்தார் சரவணன்.சரவணனுக்கு நல்லாப் படிச்சு வரும் தேவியை எப்படியாவது கடனோ,ஒடனோ வாங்கி வந்து ஒரு பத்தாவது வரை படிக்க வச்சா,அவளை ஏதாவது ஒரு கம்பனியிலே வேலைக்கு சேத்து விட்டா,அவ நல்லா சம்பாதிச்சு வருவா.அந்த சம்பளப் பணம் அவ கல்யாணத்துக்கு ரொம்ப உபயோகமா இருக்குமே’ என்று அவர் மனம் ஆசைப்பட்டது. சரவணன் உடனே “ஏன் சரஸ¤, தேவி ரொம்ப ஆசைப் படறாளே.நல்லாப் படிச்சு வரும் அவளை எப் படியாவது கடனோ, ஒடனோ நாம் வாங்கி வந்து ஒரு பத்தாவது வரை படிக்க வச்சோம்னா,அப்புறமா அவளை நாம் ஏதாவது ஒரு கம்பனியிலே வேலைக்கு சேர்த்து விட்டா,அவ நல்லா சம்பாதிச்சு வரு வா.அவ சம்பளத்திலே பாதியை நாம குடும்ப செலவுக்கு எடுத்துக் கிட்டு, மீதி பாதி சம்பளத்தே சேத்து வச்சு வந்தா,அவ கல்யாணத்துக்கு ரொம்ப உபயோகமா இருக்குமே.நீ இதை யோஜனைப் பண்ணியா” என்று கேட்டு சரஸ்வதியின் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.தேவிக்கும் அவள் அப்பா சொன்னதை கேட்டதும் மிகவும் சந்தோஷப் பட்டு அம்மா மட்டும் ‘சரி’ன்னு சொன்னா,நாம பத்தாவது ‘பாஸ்’ பண்ணி விட்டு ஒரு நல்ல கம்பனியிலே வேலைக்கு சேர்ந்து வந்தா அப்பா சொன்ன மாதிரி பாதி சம்பளத்தை நாம் வீட்டு செலவுக்குக் கொடுத்து விட்டு,மீதி பாதி சம்பளத்தை நாம் சேத்து வச்சு வந்தா நம் கல்யாணத்துக்கு உபயோகமா இருக்குமே.இதுக்கு அம்மா ‘சரி’ன்னு சொல்ல மாட்டாங்களா’ என்று ஆவலாக அவளும் அம்மா முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள்.சரவணன் சொல்லி வாயை மூடவிலை.

உடனே சரஸ்வதி “நீங்க சும்மா இருங்க உங்களுக்கு ஒன்னும் தெரியாது.அவ பத்தாவது படிச்சு ‘பாஸ்’ பண்ணினா ‘அப்பா நான் என் வகுப்பிலே முதல் மாணவியா ‘பாஸ்’ பண்ணி இருக் கேன்,நான் பன்னாடாவது படிக்க ரொம்ப ஆசைப் படறேன்ப்பா.என்னை பன்னாடாவது சேருங்கன்னு கேப்பா. நீங்க உடனே ’சரசு,அவ நல்ல மார்க் வாங்கி பத்தாவது பாஸ் பண்ணீ இருக்கா.நாம அவளை பன்னா டவது வரை படிக்க வைக்கலாம்’ன்னு சொல்லுவீங்க. நாம அப்படி அவ கேக்கறான்னு அவளை மேலே படிக்க வச்சுகிட்டு வர முடியாதுங்க.அவளுக்கு பள்ளிக் கூட ‘·பீஸ்’ கட்டற பணத்தை சேர்த்து வச்சு அவ காதுக்கு,மூக்குக்கு கழுத்துக்கு ஏதாச்சும் வாங்கிப் போடுங்க.அவ கல்யாணத்துக்காவது உபயோ கப்படுங்க.நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க.அதையே நீங்க முத்துவை மேலே படிக்க வச்சா, அவன் வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிச்சு வர உதவும்ங்க.அவன் சம்பாதிச்சு சம்பளம் நம்ம குடும்பத்துக்கு ரொம்ப உதவியா இருக்குங்க” என்று சொனாள்.சரஸ்வதி.சரவணனுக்கு என்ன பதில் சொல்றது என்று புரியவில்லை.தேவிக்கு அவ அம்மா சொன்னதை கேட்டதும் தலையில் இடி விழுந் தது போல இருந்தது.’நாம ஆசையா படிக்கலாம்ன்னு ரொம்ப ஆசைப் பட்டோம்.அப்பாவும் அதுக்கு சரின்னு சொல்லிட்டாங்க,ஆனா இந்த அம்மா இப்படி சொல்லி நம்ம ஆசைகளை எல்லாம் நெருப் பிலே போட்டு பொசுக்கி விட்டாங்களே.நம்ம அம்மாவை மீறி அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாங் களே’ என்று நினைத்து தேவி அழுதுக் கொண்டு இருந்தாள்.சரவணன் ‘நான் என்ன பண்ணட்டும் தேவி.உன் அம்மா உன்னை மேலே படிக்க வைக்க வேணாம் என்பதில் இவ்வளவு பிடிவாதமாக இருக்காங்களே.அவளை மீறி நான் ஒன்னும் பண்ண முடியாத நிலையில் இருக்கேனே’ என்று கெஞ்சுவது போல தன் முகத்தை வைத்துக் கொண்டு தேவியை பரிதாபமாகப் பார்த்தார்.தேவி அந்த இடத்தை விட்டு படுக்கை ரூமுக்கு ஓடிப் போய் விக்கி விக்கி அழ அரம்பித்தாள்.அவள் அம்மா ஹாலில் “நீ என்ன அழுது அடம் பிடிச்சாலும் சரி தேவி,நாங்க உன்னை மேலே படிக்க வைக்கப் போவது இல்லே. இது நிச்சியம”என்று கத்துவது தேவியின் காதுகளில் நன்றாகக் கேட்டது.அன்றில் இருந்து தேவி வருத்தப்பட்டுக் கொண்டு வெறுமனே வீட்டிலேயே இருந்து வந்தாள்.ஆனால் அவளு க்கு ‘நாம் மேலே படிக்க வில்லையே’ என்கிற ஏக்கம் மட்டும் இருந்துக் கொண்டே இருந்தது.

தேவி வயசுக்கு வந்து ஐஞ்சு வருஷம் ஆகி விட்டதால்,சரஸ்வதி அவளுக்கு ஒரு கல்யாண த்தை பண்ண வேண்டும் தன் கணவனிடம் என்று அடிக்கடி சொல்லி வந்தாள்.சரவணனும் அதற்கு சம்மதம் சொல்லவே சரஸ்வதி ஒரு நாள் சரவணனிடம் ”எங்க உறவிலே தூரத்து பையன் ஒருத்தன் ஒரு பெரிய ‘பில்டிங்க் கன்ட்ராகடர்’ கீட்டே தச்சனா வேலை செஞ்சு வரான்.பையன் பேரு ராஜ்.அவன் பாக்க ரொம்ப அழகா இருப்பாங்க.அவங்க அப்பா அம்மா ரொம்ப சாதாரணமானவங்க தாங்க.நாம நம்மால் முடிஞ்சதை தேவிக்கு செஞ்சி போட்டு கல்யாணத்தை நல்லபடியா பண்ணி முடிச்சா போது ம்ன்னு சொல்லுவாங்க.அவங்க.ஒன்னும் அதிகமா கேக்க மாட்டாங்க அவங்க.இந்த இடத்தை நாம பேசி முடிக்கலாங்களா” என்று கேட்டாள்.சரஸ்வதி சொன்னது சரவணனுக்கு ‘சரி’ என்று படவில்லை. .உடனே அவர் “சரசுக்கு ,இந்தப் பையன் வேணாம்.இவன் வெறுமனெ ஒரு தச்சனா தான் வேலை செஞ்சி வரான்.வேலை இருந்தா தான் அவனுக்கு சம்பளம் வரும்.மாசா மாசம் நிரந்தர சம்பளம் வர பையன் போல எனக்குத் தோணலே.தேவிக்கு வேறே ஒரு நல்ல பையனாப் பார்த்து நாம கல்யாணம் பண்ணலாமே”என்று கெஞ்சினார் சரவணன்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *