கதையாசிரியர்: , ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2024
பார்வையிட்டோர்: 2,181 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  

கௌரி பரம்பரைப் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள்; சீராட்டிப் பாராட்டிச் செல்வமாக வளர்க்கப் பெற்ற அழகான பெண். அவள் கணவன் பரேச் தரித்திர தசையிலிருந்து சிறிது சிறிதாகத் தன் வயிற்றைக் கழுவிக் கொள்ளப் போதுமான நிலைக்கு வந்திருந்தான். அவன் ஏழையாக இருந்தவரையில் பெண் கஷ்டப் படுவாளே என்று பயந்து மாமனாரும் மாமியாரும் அவளை அவன் வீட்டுக்கு அனுப்பவில்லை. சற்று வயசு அதிகம் ஆன பீன்பே அவள் கணவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். 

இதனாலோ என்னவோ ரூபவதியான இள மனைவி தனக்கே உரியவள் என்று எண்ண அவன் மனம் இடங் கொடுக்கவில்லை. அதோடு, சந்தேகம் என்பது அவன் பிறவிக் குணத்தில் அல்லது குற்றத்தில் ஒன்று. 

பரேச் மேற்குப் பீராந்தியத்திலுள்ள ஒரு சிறு பட் டணத்தில் வக்கீலாக இருந்தான். வீட்டில் உற்றார் உற வினர் அப்படி எவரும் இல்லை. தன்னந்தனியாக இருக் கும் தன் மனைவி என்ன செய்கிறாளோ என்ற கவலைதான் எப்போதும் அவனுக்கு. நடுநடுவே ஓரொரு தினம் திடீ ரென்று அகாலத்தில் அவன் கக்சேரியிலிருந்து வீட்டுக்கு. வந்துவிடுவான். முதலில் அவன் இந்த மாதிரித் திடும் பிரவேசமாக வருவதன் அர்த்தம் கௌரிக்கு விளங்க வில்லை.

அடிக்கடி ஒரு காரணமும் இல்லாமல் பரேச் ஒவ் வொரு வேலைக்காரனாகக் ‘கல்தா’ கொடுத்து வந்தான். எந்த ஆள்காரனிடத்திலும் அவனுக்கு அதிக நாள் பிடித்தம் இராது. எல்லோரும் போய் விட்டால் தனக்கு அசௌகரியமா யிருக்குமே என்று கௌரி எந்த ஆளை யாவது நிரந்தரமாக அமர்த்திக்கொள்ள முயன்றால், பரேச் அக்கணமே அவனுக்குச் சீட்டுக் கொடுத்துவிடு வான். உத்தமி கௌரி இதனால் மிகுந்த மனவருத்தம் அடைவாள்; இதைக் கண்டு அவள் கணவன் பின்னும் ஆத்திரமடைந்து ஒவ்வொரு சமயம் வீசித்திரம் வீசித்திர மாக நடந்து கொள்வான். 

கடைசியாக, சந்தேகத்தைத் தனக்குள்ளேயே அடக் கிக்கொண் டிருக்க முடியாமல் வேலைக்காரியை மறைவில் அழைத்துக் கௌரியின் நடத்தையைப்பற்றிப் புலன் வீசாரிக்க ஆரம்பித்தான். கௌரியின் காதில் இது விழுந்தது. மகா மானியும், அடக்கம் ஒடுக்கம் உடைய வளுமான கௌரி இந்த அவமானம் தாளாமல் புண்பட்ட பெண் சிங்கமென உள்ளூறக் குமுறிக்கொண் டிருந்தாள். இப்படி இந்தப் பெரிய சந்தேகம் தம்பதிகள் இருவரை யும் ஒன்று சேரவொட்டாமல் துண்டித்து எறிவதுபோல் இருந்து வந்தது. 

அவளுக்கு யாவும் வெட்டவெளிச்சமாகி விட்டதால் பரேச் அதுமுதல் வெளிப்படையாகவே தினந்தோறும் அவள் மேல் தனக்குள்ள சந்தேகத்தைத் தெரிவித்து, அடிக்கடி அவளோடு சண்டை தொடுத்தான். கௌரி பதில் பேசுவதில்லை ; அவனை லக்ஷ்யம் செய்வதும் இல்லை. சில வேளை கூரிய அம்பால் துளைப்பதுபோல் அவனை ஏற இறங்கப் பார்ப்பாள். இவற்றால் அவன் சந்தேகம் வலுக் கத்தான் வலுத்தது. 

இவ்வாறு கணவன் செய்யும் கொடுமை தாளாமல் புத்திர பாக்கியம் இல்லாத அந்த யுவதி பாரமார்த்திக விஷயங்களில் மனம் செலுத்தினாள். ஹரிகதா சன்மார்க்க சபையின் புதிய பிரசாரகராக விளங்கிய பிரம்மசாரி பரமானந்த ஸ்வாமிகளை அழைத்து அவரிடம் மந்திரோப தேசம் பெற்றுக் கொண்டாள். அவர் பாகவத வியாக்கி யானம் பண்ணுவதைக் கேட்டுவரலானாள். அந்தப் பெண்மணியின் அன்பு முழுவதும் திரண்டு பக்தி வெள்ள மாகப் பொங்கி எழுந்தது; குருவின் பாதாரவிந்தங்களில் தன் பக்தி முழுவதையும் சமர்ப்பணம் செய்தாள். 

பரமானந்தர் மகாசாது என்பதைப் பற்றி எங்கும், எவருக்கும், எள்ளளவும் சந்தேகம் இல்லை. எல்லோரும் அவரைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள். பரேச் மட்டிலும் அவரைப்பற்றி வாய் திறந்து ஒரு வார்த்தை யும் சொல்லாவிட்டாலும் உள்ளுக்குள்ளே அவனை ஒன்று அரித்து வந்தது. 

ஒரு நாள் அநாவசியமாக அவன் வாய் விஷத்தைக் கக்கிவிட்டது. மனைவியிடம் பரமானந்தரைக் குறித்து, “லோலாயி, கபட சந்நியாசி” என்று திட்டிவிட்டு, “நீ பூஜை பண்ணுகிற சாலக்ராமத்தைத் தொட்டு அதன் பேரில் ஆணையாகச் சொல்லடி, அந்தப் போலிச் சந்நியாசி மேல் உனக்கு ஆசை இல்லை என்று !” என்றான். 

அடியுண்ட நாகம்போல் கௌரி சீறி எழுந்தாள். ஏளனமாக ஒரு பார்வை பார்த்தாள், அவனை எரித்து விடுவதுபோல். பிறகு தொண்டை அடைக்க, “ஆமாம்; ஆசைதான். உன்னால் ஆனதைப் பண்ணிக் கொள்” என்றாள். 

பரேசும் அந்த க்ஷணமே பூட்டும் சாவியும் எடுத்து வந்து, அவளை அடைத்து வீட்டைச் சாத்திப் பூட்டிக் கொண்டு கச்சேரிக்குப் போய்விட்டான். 

ரோஷம் தாளாமல் கௌரி எவ்விதமோ கதவைத் திறந்துகொண்டு உடனே வீட்டை விட்டு வெளியே சென்றாள். 

பரமானந்தர் தனிமையான அறையொன்றில் மனித சந்தடி இல்லாத நடுப்பகலில் சாஸ்திர அத்தியயனம் செய்துகொண் டிருந்தார். மேகமில்லா வானினின்று மின்னற்கொடி வீழ்வதுபோல் திடீரெனக் கௌரி அவர் காலடியில் வந்து வீழ்ந்தாள். 

குரு : என்ன இது ! 

சிஷ்யை: ஸ்வாமி! இந்த ஸம்ஸாரத்தில் நான் அவமானப்பட்டது போதும் ! என்னை இதிலிருந்து மீட்டு அழைத்துக் கொள்ளவேண்டும். உங்கள் ஸேவையிலேயே என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் பண்ணி விடுகிறேன். 

பரமானந்தர் அவளைக் கண்டித்துப் புத்திசொல்லி’ வீட்டுக்கு அனுப்பினார். ஆனால், பாவம், அன்று தடைப் பட்ட சாஸ்திர அத்தியயனத்தை மறுபடியும் தொடர்ந்து நடத்த அவரால் முடிந்ததா? 

பரேச் வீட்டுக்கு வந்ததும் கதவு திறந்திருப்பதைக் கண்டான். மனைவியைப் பார்த்து, “இங்கே யார் வந்திருந்தார்கள்?” என்று கேட்டான். 

மனைவி : யாரும் வரவில்லை ; நானே ஸ்வாமிகள் இருப்பிடத்துக்குப் போயிருந்தேன். 

பரேச் கணநேரம் முகம் வெளுத்து நின்றான். மறு கணம் முகத்தில் ரத்தம் தெறிக்க, “ஏன் போயிருந். தாய்?” என்றான். 

கௌரி : என் இஷ்டம். 

அன்று முதல் மனைவியை உள்ளே பூட்டிவீட்டு வெளியே காவல்காக்க ஆரம்பித்தான்; பலவிதமாக அவளைத் துன்புறுத்தினான். ஊர்முழுவதும் இதைப் பற்றிய பேச்சே ! 

இந்த அபாண்டமான, அவமானப்படக்கூடிய விஷயத்தால் பரமானந்தருடைய பகவத்தியானமே கலைந்து விட்டது. ‘இந்த ஊரை வீட்டுப் போய்விடுவதே மேல்’ என்று உறுதி கொண்டார். ஆனாலும் சங்கடத்தில் அகப்பட்டுத் தவிக்கும் கௌரியை விட்டு நீங்க அவரால் முடியவில்லை. இந்தச் சில நாட்களாக இரவு பகல் சந்நியாசி படும் துன்பத்தை அந்தப் பகவானே அறிவான்! 

கடைசியாக ஒருநாள், அடைபட்டுக் கிடக்கும்போதே. கௌரிக்கு ஒரு கடிதம் கிடைத்தது: 

அதில், “குழந்தாய் ! தீர யோசனை செய்து பார்த்தேன். இதற்குமுன் பல உத்தமஸ்திரீகள் கிருஷ்ண பக்தியினால் ஸம்ஸாரத்தைத் துறந்திருக்கிறார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட அவமானத்தால் பகவானுடைய சரண கமலங்களைத் தியானிப்பதில் தடை ஏற்பட்டு மனம் சஞ்சலப்படும் பக்ஷத்தில் எனக்குத் தெரிவி. பகவானுடைய அருளால் பக்தையாகிய உன்னை உத்தாரம் செய்து மகாப் பிரபுவின் பாதார விந்தங்களில் சேர்ப்பிக்க முயல்வேன்.. பங்குனி 26-ஆம்தேதி, புதன் கிழமையன்று மத்தியான்னம் 3-மணிக்கு நீ இஷ்டப்பட்டால் உங்கள் வீட்டுக் குளத்தங் கரையண்டை என்னைக் காணலாம்” என்று எழுதியிருந்தது. 

கௌரி கடிதத்தைத் தன் கொண்டையில் செருகிக் கொண்டாள். பங்குனி 26-ஆம் தேதி மத்தியான்னம் ஸ்நானம் செய்யுமுன் தலைமயிரை அவிழ்க்கும்போது பார்த்தால், கடிதத்தைக் காணவில்லை ! அது எப்போதோ படுக்கையில் நழுவி விழுந்திருக்க வேண்டும், தன் கணவன் கையில் அகப்பட்டிருக்கவேண்டும் என்று சட்டென அவளுக்குச் சந்தேகம் மூண்டது. கணவன் அதைப்படித்து வீட்டுப் பொறாமையால் குமுறுவான் என்று எண்ணிக் கௌரி மனசுக்குள்ளேயே ஒருவித ஆனந்தம் அநுபவித் தாள். ஆனாலும் அந்தப் புனிதமான கடிதம் இந்த மகா மூர்க்கன் கைபட்டு அசுத்தமாகிவீடும் என்ற நினைப்பு வந்ததோ இல்லையோ அவளால் சகிக்க முடியவில்லை. வேகமாய் அவன் அறைக்கு ஓடினாள். 

கணவன் தரையில் விழுந்து கிடந்தான். அவனுக்கு மூச்சு வாங்கிக்கொண் டிருந்தது. வாயிலிருந்து நுரை தள்ளியது. விழிகள் எங்கோ செருகிக்கொண்டு போய் வீட்டன. வலது கைப்பிடியிலிருந்த கடிதத்தைப் பிய்த்து இழுத்துக்கொண்டு அவசரம் அவசரமாக டாக்டரை அழைத்தாள். 

டாக்டர் வந்து, “அபோப்ளெக்ஸி” என்றார். அதற்குள் உயிரும் போய்விட்டது. 

அன்று வெளியூரில் முக்கியமான வழக்கு ஒன்று இருந்தது. இதை எப்படியோ அறிந்து சந்நியாசி கௌரியைக் காணத் தயாராக இருந்தார். ஐயோ ! எப்படி இருந்தவர் எப்படி ஆனார்! 

விதவையான கௌரி ஜன்னல் வழியாக ஸ்வாமி களைப் பார்த்தாள். திருடனைப்போல் திரு திருவென்று விழித்துக்கொண்டு அவர் குளத்தங்கரையில் நின்றிருந்தார். அவளுக்கு இடி விழுந்ததுபோல் ஆகிவிட்டது. கண்ணைத் தாழ்த்திக் கொண்டாள். இருளிடைத் தோன்றும் மின் னொளியில் சுற்றி இருப்பவை புலனாவது போல் அவள் மனத்திலும், ‘நம் குரு எப்பேர்ப்பட்ட உன்னத நிலையி லிருந்து வீழ்ந்துவிட்டார்!’ என்று அப்போது ஓர் எண்ணம் உதயமாகி எல்லாவற்றையும் தெளிவாக்கி விட்டது. 

குரு, “கௌரி” என்று கூப்பிட்டார். 

கௌரி, “இதோ வருகிறேன், ஸ்வாமி!” என்றாள். பரேச் இறந்த செய்தியைக் கேட்டு அவன் நண்பர்கள் மேலே நடக்கவேண்டிய கிரியைகளைச் செய்யவந்தபோது கணவனின் அருகில் கௌரியும் மரித்திருப்பதைக் கண்டார்கள். 

அவள் வீஷம் தின்று இறந்து விட்டாள். இந்தக் காலத்தில் இம்மாதிரி ஸககமனம் செய்வது ஆச்சரியம் அல்லவா? இப்படிப்பட்ட ஸதியின் மகிமையைக் கேட்டு எல்லோரும் வியந்தார்கள்.

– காரும் கதிரும் (சிறுகதைகள்), ஆசிரியர்: ரவீந்திரநாத் தாகூர், மொழிபெயர்த்தோர்: த.நா.குமாரசுவாமி, த.நா.சேனாதிபதி, முதற் பதிப்பு: 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *