கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 8, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

எனக்குள் எதிரி!

 

 ஜெயந்தன் சிந்தனையில் இருந்தான். விரல்களுக்கிடையில் சிகரெட் புகை காற்று இல்லாததால் ஒற்றை நூலாகி உயர்ந்து கலைந்து கொண்டிருந்தது. தொலைபேசி ஒலிக்க அது அவனது கவனத்தைக் கலைக்கவில்லை தொலைபேசி தொடர்ந்து அழைக்க கிரைண்டரில் வழித்த மாவுக்கையை உயர்த்திப் பிடித்தபடி வந்த அம்மா, இடது கையால் ரிசீவரை எடுத்து, “ஹலோ, சொல்லுங்க… நான் அவன் அம்மாதான் பேசறேன்… அப்படியா? சரி, ரொம்ப சந்தோஷம் ஸண்டே அவனுக்கு சொகரியப்படுமான்னு கேட்டு நானே போன் பண்றேன்.” வைத்துவிட்டு அவனை பார்த்தாள் அம்மா. “ஆர்த்தியோட


குடியே பாவத்தின் வித்து

 

 (1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆசிரியர் குறிப்பு:உயர்ந்த நோக்கங்களை மக்கள் மனத்தில் நன்கு பதியச் செய்வதற்குச் சுலபமாக எழுதப்பட்ட சிறு கதைகளே தக்க கருவிகளாகும். ருசிய நாட்டுத் தத்துவ ஞானியாராகிய டால்ஸ்டாய் என்பார் எழுதிய சிறு கதைகள் இத்தகையவை என்பது உலக அறிஞர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. டால்ஸ்டாய் எழுதிய கதைகளுள் ஆறு கதைகள் இந்நூலில் அமைந்துள்ளன. டால்ஸ்டாயின் உயரிய கருத்துக்களைத் தமிழ் மாணவர்கள் தெளிவாக உணரும் முறையில்


பக்கத்து வீட்டு றேடியோ

 

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என்ன காணும் உம்முடைய கட்டுரைகளை வெகு நாட் களாகப் பத்திரிகைகளில் காணவில்லையே? ஏன் கற்பனை வறண்டு விட்டதா? அல்லது கொழுவிறதற்கு ஆட்கள் எவ ரும் கிடைக்கவில்லையா?” என்றார் பக்கத்து வீட்டுப் பரமலிங்கம். அவர் எப்பொழுதும் என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் போலவும் அன்பு கொண்டவர் போலவும் நடந்து கொள்பவர். எங்கே தன்னைப் பற்றியும் ஏதாவது எழுதி விடுவானோ என்ற பயம் தான்


கடலிலே ஒரு மீன்

 

 “விழா அழிந்த களம்” என்று கலித்தொகை ஆசிரியர்களுள் ஒருவர் கூறியதாக எனக்கு ஞாபகம். அந்த இடமும் அன்று விழா அழிந்த களம் போலவேதான் கிடந்தது. அது ஒரு கோயில். வீதியிலே வாடிய மலர்கள், பெண்களின் கொண்டைகளிலும் அவை போந்து வாடிய மலர்கள்… பெண்களின் முகங்கள் தாமரை மலர்கள்! ஆனால் தாமரை மலர்களும் இடத்தை விட்டு எடுத்துவிட்டால் வாடி வதங்கி விடுவனவே! பலர் – அவர்களைப் பலசாலிகள் என்று சொல்லி விடலாம் போலும் – பகல் முழுவதும் வந்த


தீட்டு பட்டுருச்சி!

 

 “ஆயா…. பையனுக்கு பொஸ்தகம் வாங்கனும், ஐயா கிட்ட கேட்டிருந்தேன்”,தலையை சொரிந்தபடி நின்றிருந்தான் குப்புசாமி. குப்புசாமி அந்த கிராமத்தில் தோட்ட வேலை பார்ப்பவன். இது போக மதிய வேளைகளில் கிராமத்தார்கள் சொல்லும் சிறு சிறு வேலைகளை செய்து கைகாசு வாங்கிக் கொள்வான். கஷ்டபடும் குடும்பம். அவன் ஆயா என அழைத்தது சின்ன தாயி எனும் கிழவியை. கிழவியின் குடும்பம் வசதிபடைத்தது. கிழவி குப்புசாமியை நீசனை பார்ப்பது போல பார்த்தாள். “மாச கடைசி ஆனா ஆளாளுக்கு வந்துடுங்கடா, சண்டால பசங்களா,


மனசே மனசே…

 

 எத்தினை தரம் நான் உங்களுக்கு ஃபோன் பண்ணிறது? லேற்றாகும் எண்டால் சொல்லுறேல்லையே…? மற்றவையைப் பற்றின யோசினை இருந்தால் தானே?” கொதி எண்ணெயில் கடுகு வெடித்தது போல் பொருமி வெடித்தவள், அதே வேகத்தில் என் கையில் இருந்த கார்த் திறப்பைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டாள். ‘என்ன நடந்தது எண்டு என்டை கஷ்டத்தைக் கேட்டியாடி …..?’ கன்னத்தைப் பொத்தி அறைய வந்த ஆவேசத்துக்கு வடிகால் இல்லாமல் போக, ‘வரட்டும்…’ என மனம் முறுகிக்கொண்டது. ’லேற்றாகுது எண்டு சொல்லியிருந்தால் கிழிச்சிருப்பாள். அவளின்ரை


பகுத்தறிவு மனைவி தொகுத்தறியும் கணவன்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரே கோத்திரத்தில் உதித்தவளையும், தேகத்தில் கொடிய நோயுடையவளையும், பழிமொழியுடைய குடும்பத்தில் பிறந்தவளையும், விரும்பத்தக்க பெருமை யில்லாத பெண்ணையும், பாம்பின் பெயரையும், பறவைகளின் பெயரையும், மலையின் பெயரையும், நட்சத்திரங்களின் பெயரையும் உடைய பெண்ணைத் திருமணம் செய்யலாகாது என்று இந்நாட்டுச் சருகு சாத்திரங்கள் கூறுகின்றன. அத்தகைய சருகு சாத்திரங்களையும், சடங்குச் சிந்தனைகளையும், ஏற்றுக் கொள்ளாத நரிக்குடி நாராயணசாமியோ, பாம்பின் பெயரைக் கொண்ட ‘நாகம்மை’ என்பவளை இராகு


பாவத்தின் தண்டனை

 

 சென்னை மத்திய ரயில் நிலையத்தில் கூட்டம் அலை மோதியது. தமிழ்நாடு எக்ஸ்பிரசில் இருந்து ஒரு ராணுவ வீரர் இறங்கினார். பெட்டி படுக்கையோடு இறங்கி வேறு பிளாட்பாரத்திற்கு சென்றார். ஓராண்டுக்குப்பின் தாய் மண்ணை மிதித்த மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரிந்தது. பார்த்திபன் – ஒரு ஆஸ்துமா நோயாளி. பதினைந்து ஆண்டுகளாக தரைப்படை போர் வீரனாக காஷ்மீர் எல்லையிலும், சிக்கிம் எல்லையிலும் பணியாற்றியவன், கடுமையான குளிராலும், மூச்சுத் திணரலாலும், அவதிப்பட்ட பார்த்திபனை, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கொச்சிக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளான்.


ஆயத்தம்

 

 அன்று ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை. காலையில் எழும்போதே அந்த நினைவுதான். சொல்லப் போனால் நேற்றிரவு உறக்கம் வரும் வரை கூட அந்தச் சிந்தனையாகவே இருந்தது. எப்படி இருக்கப் போகிறதோ? என்ன ஆகுமோ? பதற்றமும் எதிர்பார்ப்பும் நேற்றை விட இன்று அதிகம் இருந்தன. கழிவறைக்கடன்கள் முடித்துக் குளித்துத் தயாரானபோது செய்தித்தாள் வந்திருந்தது. தலைப்புச் செய்திகளைக் கூடப் பார்க்காமல் அதைப் பற்றி என்ன செய்தி வந்திருக்கிறதென்றுதான் முதலில் பார்த்தான். நிருபருக்கும் நேற்று அவனுக்கிருந்த மனநிலைதான் இருந்திருக்கும் போல. எப்படி வேண்டுமானாலும்


மானுடப் பிரவாகம்

 

 “ராசாத்தி மகன் பாண்டி செத்துப் போனான்” என்ற அதிர்ச்சி. தீப்பிடித்த மாதிரி ஊரெல்லாம் சட்டென்று பரவியது. சாமிநாதன் செவியில் அந்தச் செய்தி நெருப்பாகவே இறங்கி மனசைச் சுட்டது. சர்வாங்கமும் குலுங்கிப்போனான். நெஞ்சைக் கவ்விய துக்கம், தொண்டைக்குள் அடைத்துக் கொண்டு நின்றது. “நெசந்தானா? என்று நம்ப முடியாமல் மனது திகைத்துக்கிடந்தது. நேற்றுக்கூட குடுகுடுவென்று ஓடிவந்து விரலைப்பிடித்துக் கொண்டு, “மாமா, மாமா” என்றானே! அந்த ஏழுவயசுக் சிறுவனைப் பார்த்து “என்னடா” என்று அன்பு கனியச் சிரித்தானே…. “தங்கச்சி ஒனக்குப் பகை,