கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 6, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

எது புத்திசாலித்தனம்?

 

 கண்ணாடிக் கற்கள் பதிக்கப்பட்டு, அந்நாட்டுக் குட்டி இளவரசியின் கால்களுக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட செருப்பு அது. அதில் ஒரு செருப்பு மட்டும் தொலைந்ததில் இளவரசிக்கு மிகுந்த வருத்தம். இளவரசியின் அழுகையை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தொலையாத இன்னொரு செருப்பை ராஜா காவலர்களிடம் காட்டி, உடனே தொலைந்த அந்தச் செருப்பைக் கொண்டுவர வேண்டும் என்றும், அதற்கு 1000 பொற்காசுகள் பரிசுத்தொகை அறிக்கப்படும் என்றும் அறிவித்தார். காவலர்களும் அரண்மனை முழுவதும் தேடத்தொடங்கினர். ஆனால் 10 நாள்களாகியும் அந்த ஒற்றைச் செருப்பு கிடைத்தபாடில்லை.


புது பைக் வேண்டும்

 

 உமா பிறந்த வீட்டுக்கு வருகிறாள் என்றாலே எல்லோருக்கும் உதறல் எடுக்கும். இன்று அவள் வருகிறேன் என்று போன் செய்து சொன்னவுடன், அப்பா அம்மா அக்கா தங்கை என்று அனைவரும் என்ன புது பிரச்னையுடன் வருகிறாளோ தெரியலையே என்று மனசுக்குள் குமைந்தார்கள். என்ன பிரச்னையாக இருக்கும் என்று இவர்கள் யோசித்து கொண்டிருக்கும் போதே வந்து விட்டாள். வந்தவுடன் டூ வீலர் வாங்கி தர சொல்லி மாமியார் புடுங்குவதாக புலம்ப ஆரம்பித்தாள். அம்மா, “இன்னொரு பொண்ணு கல்யாணத்திற்கு இருக்கு அதுக்கு


சாபம் நீங்கியது

 

 ‘வள்ளிக்கண்ணுவை காணோம்’ எனும் செய்தியோடுதான் அந்த மலைக்கிராமத்தின அன்றைய பொழுது புலர்ந்தது. மேற்குமலைத் தொடர்ச்சியின் இடையே, மிக அடர்த்தியான காடுகளால் பிணைந்திருக்கும் உயரமான மலைகள் அடங்கிய பகுதி அது. கண்ணுக்கெட்டியவரை தெரியும் அத்தனை மலைகளையும் விட உயரமாய் நின்ற ஒரு மலையில், எப்போதும் மேகங்களால் சூழப்பட்டு, பகல் நேரங்கள் கூட பலசமயம் அரையிருளாகவும் ஈரமாகவும் காட்சியளிக்கும் சிறுகுடி கிராமம். அக்கிராமத்தின் உயரமான பகுதியில்தான் அந்த தொழிற்சாலை கட்டிடம் அமைந்திருந்தது. தொழிற்சாலையை ஒட்டிய விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அபர்ணாவுக்கு


உயிர் உள்ளவரை

 

 மேனகா கடல்கரையில் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்,மாலை நேரம் வானம் சிவந்து இன்னும் பல வர்ணங்களுடன் அழகாக காட்சியளித்தது,பறவைகள் வேகமாக தன் இருப்பிடத்தை நோக்கி பறந்துக் கொண்டிருந்தது,அலைகள் வேகமாக வந்து கரையை மோதிவிட்டு சென்றது,சுண்டல்காரன் அவன் வியாபாரத்தை மும்மரமாக கவனித்துக் கொண்டிருந்தான்,வாரநாள் என்பதால் அன்று சற்று கூட்டம் குறைவாகவே இருந்தது,இதுவெல்லாம் மேனகா பார்வைக்கு பட்டாலும்,ஏனோ எதையும் ரசிக்க தோன்றவில்லை அவளுக்கு,ஏன் இப்படி நடந்தது என்ற கேள்வி மட்டுமே அவள் மனம் முழுவதும் நிறைந்து இருந்தது,பித்து பிடித்தவள் போல் உட்கார்ந்து


கூத்து

 

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘தன்னை மறத்தல்’ என்பது ஒரு பெரிய சங்கதி தான். தன்னை மறந்த நிலையில் ஒருவர் செய்கின்ற செயலும் பெரிய சங்கதி தான். இந்த நியதிக்குச் சரவணமுத்துவே இதோ ‘சாலுங்கரி’யாக இருக்கின்றான். அவனோடு கூட, நாகண்டாப் போடியையும் சேர்த்து கொள்ள வேண்டியதுதான். வயற் காட்டு தெம்மாங்கு காற்றிலே குதி போட்டு மிதந்தது… “வாம்போ தலைகாணி, வாய்க்காலோ பஞ்சு மெத்த ஓ….. நாகங் குடைபிடிக்க நற்பாம்பு


சின்னவளின் சாமர்த்தியம்

 

 (1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஏய் கணபதி! என்ன செய்யுற? இங்கிட்டு வா! சீக்கிரம் புள்ள! அம்புட்டுப் பேரும் வேலைக்குப் போறாவ” குரல் கேட்டுச் சுதாரித்த கணபதி நெற்றியில் வைத்த நிலாப்பொட்டை நிலையில் தொங்கிய கண்ணாடியில் சரிபார்த்தாள். அவளுக்கு அப்படி என்ன சர்க்கார் உத்தியோகம் என்றால் அதுதான் இல்லை. ஆனால் அவளைப் பொறுத்தவரை அது நேர்மை மாறாத உத்தியோகம். வயலில் களை பிடுங்கல், நாற்று நடல், அறுவடை செய்தல்


இரட்டைக் கிளவி

 

 இடி, மின்னல், மழையென இரவு கழிந்தது.அனிஃப் எழுந்தார். அருகில், மனைவி நன்கு அசதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். கால் தடத்தின் சப்தம்மனைவியின் உறக்கத்தைக் கெடுத்துவிடும்என்பதற்காக கால் தடத்தின் சப்தத்தை குறைத்துக் கொண்டுகுளிக்கச் சென்றார். குளித்து முடித்து… வெளியில் வரும் போது. சுட சுட டீ அவரை வரவேற்றது… உன் தூக்கம் கெட்டு விடக் கூடாதென்பதற்காக தானே! பொறுமையாக நடந்தேன். பிறகு எப்படி ? டீ யென்றுக் கண்ணால் கேட்டார். அவளின் சிரிப்பே… அதிகாலை சூரியனுக்கு வழிவிட்டது போல்… கூடுதல்


ஆரூரா தியாகேசா!

 

 சமீபத்தில் இப்படி ஒரு பெரிய கூட்டத்தை நந்தினி பார்த்ததில்லை. சிலவருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் டிஐஜி ஆக இருந்தபோது பூரம் திருவிழாவில் அடர்த்தியான ஒரு கூட்டத்தைப் பார்த்ததாக நினைவு. கூட்டமிருந்ததே தவிர இவ்வளவு ஆரவாரம் இல்லை. இங்கு வேறு மாதிரியாக இருந்தது. அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருக்க… ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாகத் திரண்டிருந்தார்கள். தெருவில் இருக்கும் வீடுகளை மறைத்து இரண்டு பக்கமும் ஏராளமானவர்கள் நின்றிருந்தார்கள். மொட்டை மாடிகள் எங்கும் மனிதத் தலைகள். தேர் வடத்திற்கு இரண்டு பக்கமும்


அடையாளம்

 

 (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “யூ இண்டியா?” “நோ… நோ…” “ஸ்ரீ லங்கா?” “நோலா ஐ யெம் சிங்கப்பூரியன்.” கோபத்தோடு டாக்ஸிகாரனுக்குப் பதில் சொல்லி விட்டு மவுனமானாள். அவன் உடனே மலாயில் பேசத் தொடங்கி விட்டான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மவுனமாக இருந்தாள். “யூ தத்தாவ் மெலாயு?” “தத்தாவ்லா.” “நீ சிங்கப்பூரியன் என்கிறாயே, மலாய் தெரியாதா?” அவன் கேள்வியில் தொனித்த ஏளனத்தை அவளால் பொறுக்க முடியவில்லை. “ஐ டோன்ட்


சம்ஹாரம்

 

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தலைநகரின் அந்த பிரதான வீதிக்கு தூக்கம் என்பதே கிடையாது! இரவு பகல் என்ற பேதமற்ற வாகனப் போக்குவரத்து…. பிரதான வீதியில் இருந்து கடற்கரைப் பக்கமாகப் பிரிந்து செல்லும் பல ஒழுங்கைகள், தெருக்களிலிருந்தும் இடையிடையே சில வாகனங்கள் பிரதான வீதியுடன் சங்கமித்துக் கொண்டிருந்தன. எங்கிருந்தோ அந்த பிரதான வீதியில் வந்து ஏறிய பெரியவர் ஒருவர் சாலையின் இரு பக்கமும் தனது பார்வையைச் செலுத்தி னார்.