கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 1, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

கையெழுத்து வேட்டை

 

 (1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வாசகர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில்


காதல் போயின் மோதல்

 

 இதோ நிஜ விந்தியா என் முன்னால் அமர்ந்திருக்கிறாள்.இதுவரை எத்தனையோ விந்தியாக்களைச் சந்திக்க நேர்ந்து விட்டது. ஆனால், இவள்தான் என்னுடைய விந்தியா. இன்னமும் அதே அதீத அழகு. கட்டியணைத்து அந்த ஸ்பாஞ்ஜ் கன்னங்களில் முத்தமிடத் துடித்தது மனம். பள்ளியில் துவங்கிய விந்தியா மீதான காதல் கல்லூரியைக் கடக்கிறபோது முடிந்து விட்டது. “ரவி, இது இன்ஃபாச்சுவேஷன். நிஜமான காதல் வாழ்க்கையில் நீ ஸ்திரமா உக்காந்திருக்கும்போது வரும். ஸ்கூல்ல படிக்கும்போது வர பாரதிராஜா காதலெல்லாம் ஜஸ்ட் சினிமாட்டிக். ஆத்தங்கரையைத் தாண்டறதுக்குள்ளே ஆறிப்


மர்ம உருவம்

 

 காரில்தான் வழமையாக  நான் வேலைக்கு போய்  வருவது  வழக்கம்… கடந்த ஒன்றரை வருடமாக ஒரு பிரபலமான தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். வழமையாக அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து நான் வேலைக்கு கிளம்பிவிடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் காரில் போய்க்கொண்டிருந்தேன்… அது ஒரு அமெரிக்கத் தெரு என்பதனால் சந்திச் சமிக்ஞை விளக்குகள் தானாக ஒளிர்ந்து மூடும்… பராமரிப்பாளர்களோ காவலர்களோ யாரும் இருப்பதில்லை. அதிகாலையில் பனிப்பொழிவு கொஞ்சம் இருந்தமையால் நான் வழமைக்கு மாறாக  மெதுவாகப் போய்க்கொண்டிருந்தேன். வழமையாக நான் போய்வரும் பாதை என்பதால் எனக்கு மேடு - பள்ளம் எங்கிருக்கும் என்பதெல்லாம் அத்துப்படி… இருப்பினும் பனிக்கால எச்சரிக்கையாக கொஞ்சம் மெதுவாகவே நான் காரைச் செலுத்தினேன். குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும் நான் பார்த்த அந்தச் சம்பவம் என்னை நிலைகுலைய வைத்தது. இது நடந்து ஒரு வருடம் கடந்து விட்டாலும் இன்னும் என் மனக்கண் முன் அது நிழலாடுகின்றது… இந்த இரண்டரை வருட அமெரிக்க வாழ்வில் நான் பல நிகழ்வுகளைச் சந்தித்திருந்தாலும் என்னை ஒருகணம் உறைய வைத்த வினோத நிகழ்வு அது… ஒருகணம் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை… என் கண்கள் இருட்டத் தொடங்கின. காரின் வேகம் படிப்படியாக குறைந்து அடங்கிப் போகும் நிலைக்கு வந்துவிட்டது… கை கால்கள் பதறத் தொடங்கின… சிறு வயதில் நான் பல கதைகள் கேள்விப் பட்டிருக்கிறேன். எனது அம்மா முதல் அம்மம்மா வரை பலர் பல கதைகள் சொல்லியிருக்கிறார்கள் அம்மம்மா பல முனிக் கதைகள்… பேய்க் கதைகள் சொல்லுவதில் கெட்டிக்காரி… ஒருதடவை தான் ஆஸ்பத்திரிக்கு போய்விட்டு வீடு திரும்பி வரும் பொழுது சாமம் தாண்டி விட்டதாகவும் தனக்கு யாரும் துணையில்லையே என கவலையுடன் நடந்து சென்ற போது தனக்கு முன்னால் ஒரு வயதானவர்  ஊன்று தடியுடன் ஒரு விளக்கு ஒன்றை  கையில் ஏந்தியபடி சென்றாராம்… தான் அவரின் பின்னே நடந்து சென்றபோது வீட்டுக்கு அருகில் வந்ததும் திடீரென அந்த உருவம் மறைந்து விட்டதாகவும் அது கடவுள் செயல் எனவும் ஒருதடவை சொன்னதாக ஞாபகம் இருக்கிறது. தேவகணத்தில் பிறந்தவர்களின் கண்ணுக்கு பேய்கள்… பூதங்கள்… தேவதைகளின் நடமாட்டம் தெரியும் எனவும் கிராமத்தில் பலர் கதைக்கக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு இவை பற்றிய நம்பிக்கை துளிகூட இல்லை. எதையும் நம்பாத நான் இன்றுவரை அந்தச் சம்பவத்தை மறக்க முடியாமல் தவிப்பது எதனால் என்பதுதான் புரியவில்லை…. நான் கிராமத்தில் இருந்தபோது பலதடவை ஆடு மேய்த்திருக்கிறேன்… எனக்கு பிடித்தமான விடையங்களில் அதுவும் ஒன்று. ஆட்டுக் குட்டியை தூக்கித் தோழில் போட்டுக்கொண்டு காடுகாடாகத் திரிந்திருக்கிறேன். நான் நல்ல “கவண்” வைத்திருந்தேன் நரிகளைக் கவண் கொண்டு விரட்டியிருக்கிறேன். குட்டியீன்ற ஆட்டுக்கு கஞ்சி காய்ச்சி பருகக் கொடுத்திருக்கிறேன்… கடும்பு பால் காய்ச்சி உண்டிருக்கிறேன்…ஆட்டுக்குட்டி முதல் தடவையாக கண்விழித்து உலகை பிரமிப்புடன் பார்ப்பதை ரசித்திருக்கிறேன்… வயலும் காடும் எனது தாய்நிலம்… அனேகமாக காட்டில் உள்ள மிருகங்கள் எப்படிப்பட்டவை என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன். கரடியிடம் ஒருதடவை யானையிடம் இன்னொரு தடவை என மாட்டுப்பட்டு ஓடித்தப்பியவன் நான்… கட்டெறும்பு முதல் காட்டெருமை வரை எனக்கு தெரியாத மிருகங்கள் இருப்பது கடினம். கீரியும் பாம்பும் போட்ட சண்டையை கண்ணெதிரே கண்டவன் நான்… இவை எல்லாம் என் ஊரில் நடந்தவை… ஆனால் இந்த நிகழ்வு இப்போது நினைத்தாலும் கண்முன் படமாக விரிகிறது. அதனைப் பேய் என்றும் சொல்ல முடியவில்லை…. பிசாசு…. தேவதை… அப்படி எதுவும் இருப்பதாகவும் நான் நம்பவில்லையே. அப்படியாயின் அது என்னவாக இருக்கும் கிட்டத்தட்ட ஒரு மனிதன் போலவும்… ஆடுபோலவும்… கரடிபோலவும் சிலசமயம் மூன்றும் கலந்த உருவம் போலவும் அது… கண்களில் அவ்வளவு ஒரு பிரகாசம் காரின் வெளிச்சத்துக்கு அது தன் முகத்தைத் திருப்பியபோது நான் அதிர்ந்து போனேன்… அதன் கண்களில் இருந்து எதோ ஒன்று என்னுள் தாக்கியது. ஒரு கணம் என்ன நடக்கிறது என்பதைக்கூட என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு மின்னல் பொழுதுதான்… அடுத்த கணமே அது வீதியைத் தாண்டி மறுகரைக்குச் சென்று மறைந்துவிட்டது. என்னை இயல்பு நிலைக்குத் திருப்பி ஒரு சீருக்குக் கொண்டுவந்த நான்… அன்றையநாள் வேலைக்கு போய்விட்டேன்… அன்றிலிருந்து இன்றுவரை அதே பாதையால் தான் வேலைக்கு போய்வருகிறேன்… மீண்டும் ஒரு முறையாவது நான் அதனைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் அதைத் தினமும் தேடுகிறேன்…. குறிப்பிட்ட அந்த இடம் வந்ததும் என்னையும் அறியாமல் என் கண்கள் அதைத் தேடியலைவதை என்னால் உணர முடிகின்றது… ஒரு வருடமாகியும் பார்க்க முடியாத ஒன்றை மீண்டும் என் வாழ்நாளில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை…. – ஏப்ரல் 2013


ஈகை

 

 ரேவதி… வேலைக்காரி கெளம்பரா பாரு. என்ன மெனு னு அடுப்பையே பாத்துட்டிருக்கா வெச்சகண்ணு வாங்காம. நேத்து உப்புமா இருக்கு பாரு குடுத்தனுப்பு சீக்கிரம். ஒரே நெஞ்சடைச்சுது. நேத்து சாப்பிடவே முடியல. பாமா விழியோரம் லேசான கண்ணீர். சரி விடு, அவங்க அப்பிடித்தான். இன்னிக்கி நேத்தா பாக்கிற. அந்த உப்புமா காய்கறி தோல் வாசல்ல இருக்க பக்கட்ல கொட்டிடு. அதற்க்காகவே காத்திட்டிருந்தது போல் இரண்டு பசுக்கள் ம்ம்ம்மா என்று கத்தின வழக்கம்போல். வெயிட் பண்ணு தாளிச்சிட்டிருக்கேன். தரேன். பாமா


காணவில்லை

 

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தி வேளை. ஒளி மரணத்தின் பிடிக்குள் மெல்ல மெல்ல இழுக்கப்பட, இருள் தன் சிறகுகளை விரித்துப் பரப்பிக் கொண்டிருந்தது. அன்னமுத்தாச்சி, ஒருகாலை மடக்கி மறுகாலை நீட்டியபடி நிலத்தில் இருந்தவாறு சுட்டெடுத்த பனம்பழத்தை தோல் நீக்கிப் பினைந்து பனங்களி எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். சுமார் எண்பத்தைந்து வயது மதிக்கத்தக்க தளர்வுற்ற சிறிய உருவம், இளமையில் அழகியாக இருந்திருப்பாள் என்று ஊகிக்க வைக்கும் தோற்றம். “சஞ்சீவன்,


நீர்த் தாரை…

 

 இருளின் பிடியிலிருந்து பகல் கொஞ்சம், கொஞ்சமாக நழுவத் தொடங்கியது. தவளைகளின் சப்தங்கள் ஓயத் தொடங்கின. நிசப்தம் விரவிக் காணப்பட்டது. வாகனக் கண்ணாடியில் புகை போல் காணப்பட்டது பனியின் மிச்சம். இரவு முழுவதும் தாழ்ப்பாளில் சிக்கிக் கொண்ட கதவுகளை விடுவித்து ஃபஜ்ர் நேரத் தொழுகைக்கு வெளியேறினார் ஹபீப். தெரு முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது.. இரவு முழுவதும் மாடுகள் கடந்த செய்தியைச் சாணம் சொன்னது. பள்ளிக்குள் சென்று தொழுகையில் ஈடுபட்டார். பள்ளிவாசலுக்கு எதிரில் தேநீர்க்கடை வைத்திருக்கும் கணேசன் கடையைத் திறந்து


காணாது போகுமோ காதல்

 

 பாகம் 6 | பாகம் 7 ஸ்டோரில் அன்று ஏகப்பட்ட விஸிட்டர்கள் தேயிலை வாங்க நின்றனர். தேயிலை தோட்டங்களையும் அது ப்ராஸஸ் ஆகும் விதத்தை யும் பார்க்க நிறைய பேர் தீபக் ஒப்புதலோடு பர்மிஷன் வாங்கி , பாக்ட்ரியைப் பார்த்துவிட்டு தேயிலை வாங்க ஸ்டோருக்கு வருவார்கள். அன்றும் அப்படித்தான் ஒரே கூட்டம். கூட்டத்தை சமாளித்து ஒருவழியாய் சேல்ஸ் கணக்கை சிவகுருவிடம் ஒப்படைத்து “M.D ஏன் இவ்வளவு பேருக்கு பர்மிஷன் தரணும்? நம்மால கண்ட்ரோல் பண்ண முடியலை.” ஆதிரா


மாற்றம் – ஒரு பக்க கதை

 

 மகாத்மா காந்தி சிலை கம்பீரமாக நின்றது. சிலைக்கு எதிரே ஒரு கடை உதயமானது. திறப்பு விழா அன்றுதான் தெரிந்தது அது ஒரு மதுக்கடை என்று. மது அருந்திவிட்டு மகாத்மா காந்தி முன் களித்தனர் மதுப் பிரியர்கள். முகம் சுழித்தனர் ஊரார். கலெக்டருக்கு மனு போட்டார்கள். அரசியல் செல்வாக்கு கலெக்டரின் கைகளைக் கட்டிப் போட்டது. மதுக் கடையை அகற்ற முடியாது என்பதை உணர்ந்தார் கலெக்டர். தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மகாத்மா காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்றினார். ஏதோ


பசிக்கு நிறமில்லை!

 

 தில்லை எனது பால்ய நண்பன், பள்ளித் தோழன். சின்ன வயதுச் சில்மிசங்களுடனும், வளரிளம் பருவத்து வம்பு தும்புகளுடனும் வாழ்ந்துவந்த எங்களிருவரையும் பிரித்து வைத்த பாவம், போர்ச் சூழலுக்கே போய்ச் சேரும்! துப்பாக்கிகள் எங்களூர்க் குச்சொழுங்கைகளில் எப்போது கால் முளைத்து நடக்கக் கண்டேனோ, அப்போதே நாட்டை விட்டு வெளியேறிய துணிச்சல் கட்டை, நான்! ஆனால் தில்லை, அப்படிச் சொல்லிவிட முடியாத ஒரு தீரன்! எட்டுப் பிள்ளை பெறும்வரை, ஓர்மத்துடன் குடியும் குடித்தனமுமாய் ஊரிலேயே வாழ்ந்துவந்த குட்டிக் குசேலனவன்! மூன்று


சந்திப்பு

 

 (1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆற்றங்கரையை ஒட்டிய தோப்பின் ஓரத்தில் அமர்ந்து நீரில் தெரியும் தன் பிரதிபிம்பத்தைக் கவனித் துக் கொண்டிருந்தாள் ஒரு குடியானவக் குமரி. அவளைச் சுற்றிலும் பரந்திருந்த மணல் வெளியில் பழுத்து மஞ்ச ளாய்ப் போன இலைகள் சிதறிக்கிடந்தன; பழுப்பிலைகள் எந்தவித அரவமுமின்றி அவளது தலைக்கு மேலாக உதிர்ந்து விழுந்து அவளது தோளிலும் துணியிலும் பதிந்து உட்கார ஆரம்பித்தன. பல இலைகள் அவளது முந்தியில் விழுந்து